Jump to content

தேசிய பட்டியல்; சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காணும் தருணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பட்டியல்; சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காணும் தருணம்

August 10, 2020

10.png

 

லங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. மக்கள் தமது தீர்ப்பை வழங்கி தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து உள்ளார்கள். இப்போது தலைவர்கள் தமது தீர்ப்பின் மூலம் தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ளும் சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பம் எத்தனை சந்தர்ப்பவாத தலைவர்களை அம்பலப்படுத்தியுள்ளது என்பதே இந்தவார அவதானமாக உள்ளது.

முதலாவது தேசிய பட்டியல் உறுப்பினர்களை வெளியிட்டு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாங்கள்தான் ஆட்சியாளர்கள். அதற்கான தலைமை தங்களிடம் இருக்கிறது என்பதை நிரூபித்து உள்ளார்கள். ஆகஸ்ட் 6 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்ததும் ஆகஸ்ட் 7 பெரமுன கட்சி தமது பட்டியலை தமது கட்சி கடித தலைப்பில் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி உரிய முறையில் நடந்து கொண்டது. அவர்களின் தெரிவுகளின் பின்னர் பெரிய வசைபாடல்கள் எதுவும் இடம்பெற்றதாக தெரியவில்லை. மாறாக அவர்களின் எதிர் கட்சியினரே பாராட்டி பேசி இருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. பெரமுன கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற மன நிலையில் பார்த்தவர்களை வாயை அடைக்கும் வகையிலான பட்டியல் அது. அலி சப்ரி, முஸம்மில், மர்ஜான் எனும் மூன்று முஸ்லிம் பெயர்களை இடம்பெறச் செய்துள்ளார்கள். கூடவே ஒரு தமிழரின் பெயரும். இதில் உள்ள சந்தர்ப்பவாதம் என்ன என்பதை பிரிதொரு நாளில் பார்க்கலாம்.

ஆனால் ஒரு ஏமாற்றத்தை இப்போதைக்கு பார்க்கலாம். அதுதான் தமது பங்காளி கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை அவர்கள் கைவிட்டமை. நுவரெலியா மாவட்டத்தில் குறைந்தது மூன்று இ.தொ.கா உறுப்பினர்கள் தெரிவாக கூடிய நிலையில் இருந்தும் அதனை சாதுரியமாக தட்டிப் பறித்தது தமது உறுப்பினர்கள் மூவரைப் பெற்றுக் கொண்டதுடன் தேசிய பட்டியலில் இருவரது பெயர்களை இடம்பெறச் செய்தும் அவர்களுக்கு ஒரு ஆசனத்தை பெற்றுக் கொடுக்காமை. பதுளை, கண்டி மாவட்டங்களில் இ.தொ.கா வேட்பாளர்களின் வாக்குளைப் பெற்றுக் கொண்டு இருப்பதுடன் மதியுகராஜா போன்ற ஆளுமை ஒருவரின் அவசியத்தை பாராளுமன்றில் உணர்ந்து இ.தொ.கா அதனைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாது விட்டமை இ.தொ.கா வின் ஏதாவது சந்தர்ப்பவாதமா? என்பது மறுபக்கம்.

இப்போது சந்தர்ப்பவாத தலைமையாக முதல் அடையாளத்தை வெளிப்படுத்தி இருப்பவர் ஐக்கிய மக்கள் சக்தி யின் தலைவர் சஜித் பிரேமதாச. ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கத்துக்கு பக்கபலமாக இருந்த சிறு கட்சிகளான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக்க ஹெல உறுமய ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தேசிய பட்டியல் உறுப்புரிமை தருவதாக முன்னதாக உறுதி அளித்துவிட்டு இப்போது அந்த வாக்குறுதியில் இருந்து அந்தர்பல்டி அடித்துள்ளார். ரணில் இடம் இருந்து சஜித் தலைமை ஏற்றால் எல்லாம் சரியாகிவிடும் என எதிர்பார்த்த சிறுபான்மை கட்சிகளுக்கு சஜித் தான் யார் என்பதை தெளிவாக காட்டி உள்ளார். ஒரு பட்டியலைத் தயாரித்து ஒத்திகைப் பார்த்துவிட்டு இப்போது சமாளித்துக் கொண்டு பேச்சுவார்த்தை என இழுக்கும் சஜித் இனி எப்போதும் இழுவைதான்.

சஜித்தை ஒரு புறம் வைத்துவிட்டு சிறுபான்மை கட்சி தலைவர்களான ஹக்கீம், ரிஷாத், மனோ, திகா, இராதாவின் நிலை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களைப் போன்றே பரிதாபகரமானது. சஜித் ஒரு பட்டியலை அனுப்பி அது ஊடகங்களில் செய்தியானதன் பின்னரே தூக்கத்தில் இருந்து எழும்பி உள்ளார்கள். ஏனெனில் அவர்கள் ஐவரும் தேர்தலில் தெரிவாகி விட்டார்கள். அதிலும் குறிப்பாக தேசிய பட்டியல் உறுப்புரிமையையும் பெற்றே தீருவோம் என வாய்கூசாமல் பேசி மக்களிடம் வாக்குகளை வாங்கி பெற்றுக் கொண்டுவிட்டு நிம்மதியாக தூங்கும் மனது அவர்களுக்கு தாராளமாக இருக்கிறது.

சஜித்தின் தொலைபேசி சின்னத்துக்கு இந்த மூன்று கட்சிகளும் வழங்கிய பங்களிப்பு என்று பார்த்தால் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது தமிழ் முற்போக்கு கூட்டணி யின் பங்கு அதிகம். அது ஆசனங்களின் எண்ணிக்கையினால் மட்டும் எழும் நிலை அல்ல. மாறாக வாக்குகளினாலும். காரணம் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் ‘மரம்’ சின்னத்திலும், மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல (அம்பாறை) யில் ‘மயில்’ சின்னத்திலும் போட்டியிட்டதுடன் கூட்டாக இணைந்து ‘தராசு’ சின்னத்தில் கூட்டிணைந்து போட்டியிட்டு புத்தளம் மாவட்டத்தில் தமது ஆசனங்களை உறுதி செய்து கொண்டுள்ளனர். இந்த மூன்று ஆசனங்களுக்குமான தேசிய பட்டியல் பங்களிப்பு “தொலைபேசிக்கு” இல்லை. இப்படித்தான் முஸ்லிம் காங்கிரஸ் ( 4+1) 5 ஆசனங்களையும் மக்கள் காங்கிரஸ் ( 2+2) 4 ஆசனங்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளன.

அதே நேரம் தமிழ் முற்போக்கு கூட்டணி தொலைபேசி சின்னத்தின் ஊடாக மாத்திரமே போட்டியிட்டு நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு ஆகிய நான்கு மாவட்டங்களில் 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு இருப்பதுடன் தங்கள் ஆசனங்களைப் பெறாத இரத்தினபுரி, கம்பஹ, கேகாலை மாவட்டங்களில் சுமார் 36500, 25000, 22000 என எண்பதினாயிரம் மேலதிக வாக்குகளையும் தொலைபேசிக்கு பெற்றுக் கொடுத்து உள்ளனர். எனவே ஒன்று அல்ல இரண்டு தேசிய பட்டியல் உறுப்பிரிமைப் பெறும் வல்லமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு உண்டு. ஆனால் அதனை கேட்டுப் பெறுவதில் கூட்டணி தலைமைகளுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை. இப்போது எழுந்திருக்கும் இழுபறி நிலை கூட முஸ்லிம் காங்கிரஸ் தாமதமாகவேனும் முன்வந்து பேசி இருப்பதால்தான் எழுந்துள்ளது என அவதானிக்க முடிகிறது.

மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேசிய பட்டியலுக்கு பெயர் குறிப்பிடப்பட்ட திலகராஜ், லோரன்ஸ், குருசாமி ஆகிய மூவரில் திலகராஜ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். அவருக்குத் தேசிய பட்டியல் தருவதாக கூறியே தலைமைகள் போட்டியிடும் வாய்ப்பை வழங்கவில்லை. 52 நாள் ஆட்சி காலத்தில் அங்கும் இங்கும் பாய்ந்து புகழ்பெற்ற வடிவேல் சுரேஷ்க்கு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பாய்வதற்கு தயாராக மகிந்தவை சந்தித்து வந்த இராதாகிருஷ்ணன், அரவிந்தகுமார் ஆகியோருக்கு அங்கீகாரம் கொடுத்த மலையக மக்கள் அவ்வாறு பாய்ச்சல் எல்லாம் காட்டாது தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றி மக்கள் மனதையும் மாவட்டத்தில் முதலிடம் என்ற விருதையும் வென்ற திலகராஜை தெரிவு செய்யாமல் இருக்க வாய்ப்பில்லை.

கூடவே நுவரெலியாவில் நாங்கள் மூவரும் வென்றுவிட்டால் திலகராஜ்க்கு தேசிய பட்டியல, ஊடாக பெற்றுக் கொடுப்போம் என மேடைக்கு மேடை முழங்கிய திகா – ராதா – உதயா இன்று கள்ளமௌனம் காப்பது சந்தர்ப்பவாத்த்தின் உச்சம். திலகரின் செயற்பாடுகளில் ஏதேனும் பலவீனம் இருக்கலாம் ஆனால் அவர் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் தெளிவாக ஊடகங்களில் பேசி வருகிறார்.

ஆனால், ஏற்கனவே ஊடகங்களில் திலகராஜுக்கு தேசிய பட்டியல் உறுதியாக வழங்கப்படும் என கூறிவந்த மனோ கணேசன் தேர்தல் முடிந்த பின்னரான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்தகைய உறுதியை வெளிப்படுத்துவதாக தெரியவில்லை. இப்போவது மூவரது பெயரையும் கூறுவது, கூடிப்பேசி தீர்மானிப்போம் என்பதெல்லாம் சந்தர்ப்பவாதம் அன்றி வேறில்லை.

மறுபக்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தெரிவை அதன் பங்காளி கட்சியான ‘டெலோ’ விமர்சித்து இருப்பது வழமையாக அந்த தலைமைகள் காட்டும் சந்தர்பவாதம். “நான் அடிக்கிற மாதிரி நடிக்கிறேன். நீ வலிக்கிறமாதிரி நடி” என்கிற உடன்பாடு அது. அத்தகைய உடன்பாடு ஒன்றுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைகளும் வந்து இருக்கும் சந்தர்ப்பம் தெளிவாகிறது. இனி சந்தர்ப்பம் பற்றி வாதம் செய்யலாம்.

 

http://thinakkural.lk/article/61440

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.