Jump to content

மணத்தக்காளி /மணித் தக்காளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மணத்தக்காளி /மணித் தக்காளி 

 

மணித்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.இதன் தாவரவியல் பெயர் சொலனம் நைக்ரம். இது ஓராண்டுத் தாவரம் ஆகும். இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக இது உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

 இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகியன மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது. காகமாசீ ,உலகமாதா,விடைக்கந்தம்,வாயசம் போன்றன ஆகும்.

.உடற்றேற்றி,,( உடல் தேற்றி ) சிறுநீர் பெருக்கி, ,வியர்வைப்பெருக்கி,, கோழையகற்றி செய்கைகள் உள.இதை உட்கொள்வதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பல நோய்களுக்கு உகந்தது என்பது மரபாக அறியப்படுவது.

 வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமடைய இது ஒரு சிறப்பான மருந்தாகும், கீரையாக சமைத்தும் அல்லது அரைத்து சாறு எடுத்து பருகலாம்.

மணத்தக்காளியினது காய்,கனி,இலை,வேர் இவற்றை ஊறுகாய், வற்றல் குடிநீர் செய்து உட்கொள்ள நீண்ட வாழ்நாள் மற்றும் நோயற்ற உடலுடனும் வாழலாம்.

மணத்தக்காளிக்காய் வாந்தியைப் போக்கும்,.வாயிலைப்பை நீக்கும், .வற்றல் அரோசகத்தை நீக்கும்.காகமாசிதைலம், இருமல் இளைப்பை நீக்கும்.

படித்து  அறிந்தவை

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்

சிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்

 

தேவையான பொருட்கள்

மணத்தக்காளி கீரை- 1 கப்

 

மணத்தக்காளி விதை- 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்-6
தக்காளி - 1
பூண்டு- 1

தேங்காய் பால் - 1 கப்
 
மணத்தக்காளி கீரை


செய்முறை :

மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம், மிளகு தூள், மஞ்சள் தூள், இடித்து வைத்த பூண்டு போட்டு வதக்கவும்.

பின்னர் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
 
அனைத்து லேசாக வதக்கினால் போதும்.

வதங்கியதும் தேங்காய்பால் சேர்த்து கொதி வந்ததும் விதை, கீரையை சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு போதுமான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக சாப்பிடலாம்.
 

சூடான சத்தான மணத்தக்காளி கீரை சூப் ரெடி.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி உடையார் பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 7 months later...

மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டி தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. வரப்புகளிலும் ஏரி மற்றும் குளங்களின் கரைகளிலும் தானாக வளரக்கூடிய ஒருவகை செடி இனத்தைச் சார்ந்தது. தற்போது, அதல் மருததுவ குணங்கள் அதிகம் இருப்பதால், விவசாயில் பயிரிடுகிறார்கள். மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் கட்டுப்படுத்தும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.