Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கின்னஸ் சாதனை!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கின்னஸ் சாதனை!

Screenshot_20200810-202008-1.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கவி ரதன் எனும் பதினொரு வயதுச் சிறுமி, இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் (றூபிக்ஸ் கியூப்) தனித்தனி நிறங்களை ஒரு கையினால் ஒழுங்குபடுத்தி கின்னஸ் உலகசாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இந்தச் சிறுமி கடந்த ஆகஸ்ட் 1ஆம் திகதி கனடாவின் மிஸிஸாகா நகரில் கின்னஸ் சாதனை நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில், 55 நிமிடங்களில் 30 தடவைகள் 3×3 றூபிக்கின் கனசதுரத்தை ஒழுங்கு படுத்தி, 25 தடவைகள் என்றிருந்த முன்னைய சாதனையை முறியடித்து புதிய உலகசாதனை படைத்துள்ளார்.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த நேரத்தை முறையாகப் பயன்படுத்தி இவர் இந்த சாதனையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பிறப்பின் போது ஏற்பட்ட காயம் ஒன்றினால் வலக்கரம் இயங்க முடியாத நிலையிலும், தனது இடக்கரத்தின் உதவியுடன் இந்த சாதனையை மேற்கொண்டு இவர் பலருக்கும் முன்னுதாரணமாக ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/யாழ்ப்பாணத்தைச்-சேர்ந்த/

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பராட்டும் வாழ்த்தும். வளர்க வளம் பெறுக.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பதினொரு வயதில்... கின்னஸ் சாதனை படைத்த சிறுமிக்கு வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சங்கவி ரதனுக்கு  ,
பாரட்டுகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..👍..💐

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மனங் கனிந்த வாழ்த்துக்கள் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.....!   🌹

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சங்கவி!!! 💐🎉

இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!  Rubik’s cube ஒழுங்காக்க நிறைய ஞாபகசக்தி வேண்டும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சங்கவி ரதனுக்கு  ,
பாரட்டுகளும், வாழ்த்துக்களும்👏

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • "இவை வெளிப்படடையானவை." வெளிப்படை என்ன என்பதில் என்ன இருக்கிறது  அதை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டார்களா? என்பதில்தான் தமிழர்களின் வாழ்வு இருக்கிறது  என்ற மாதிரிதான் ஊருக்குள் பேசிக்கிறாங்கோ 
  • இந்த தகவல்களை ஏன் இராணுவம்/அரசு  தர வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? இன்னும் தெரியாதா யார் இந்தக் கணக்கெல்லாம் எடுப்பதென்று? பல தடவை எழுதியாகி விட்டது, விளங்காமை என்பது உங்கள் ஆயுதம் என்பதை அறிவேன்! நியூயோர்க்கில் இரகசியமாக புதைக்கவில்லை! நகரின் மயானம் நிரம்பியதால், குப்பையைப் புதைக்க ஏற்கனவே பயன்படும் தீவில் புதைத்தனர். அதை ஆளில்லா விமானத்தில் இருந்து மீடியாக்கள் வீடியோ எடுத்ததால் ஏதோ இரகசியம் என்று நீங்க நினைத்து விட்டியள் போல (உங்கள் விளங்காமை தெரிந்ததால் அதொன்றும் ஆச்சரியமாக இல்லை!🤣) அடிப்படையில்: உங்களை விட புத்திசாலிகளான  யாழ் வாசகர்களை குறைத்து மதிப்பிடாமல் சரியான தகவல்களை பகிருங்கள்! இல்லையேல்  புத்தகம் எழுதி பீஸ் ஐம்பது பைசாவுக்கு விற்பது தான் சரி!😇
  • வாழ்த்திய அனைவருக்கும் பிந்திய நன்றிகள்  மன்னிக்கவேண்டும் திரியை காணவில்லை  இப்போதான் கண்ணில் படுகிறது 
  • நான் பெருமாளிசத்தைப் பின்பற்றாததால் நான் எழுதியது போய்ப்பார்க்காமலே எனக்கு மீளழைக்க கூடியதாக இருக்கும்!  ஆனால், எப்படித் தான் இப்படி அடிக்கடி முட்டாள் தனமாக எழுதி, நையாண்டி வாங்கினாலும் அப்படியே Stone wall Jackson மாதிரி நிக்கிறீங்க என்பது அதிசயம் தான்! ☺️ பாஞ்ச், Forbes என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு பட்டியலைப் போட்டு மொக்கேனப் பட்ட அனுபவம் கூட உறைக்கவில்லையோ? அடுத்த தடவை எங்கிருந்து எடுத்தீர்கள்  என்று மூலம் எழுதும் போது "சி.ஐ.ஏ" இடமிருந்து என்று எழுதினால் யாழ் வாசகர்கள் போய் உறுதி செய்வதையாவது தடுக்கலாம்! பூச்சுத்தும் போது கூட நாசூக்காக சுத்த இயலா விட்டால் சுத்தவே கூடாது! மேலே நாதத்தைப் பாருங்கள் எவ்வளவு நாசூக்காக சுத்துகிறார்?
  • Sri Lanka borrowed billions of dollars from China for infrastructure when Rajapaksa’s brother Mahinda was the country’s leader from 2005 to 2015. Unable to service a $1.4bn loan to build a deep seaport, the country was forced to lease the port to a Chinese firm for 99 years in 2017. வடலி வளர்த்தவன் கள்ளு  குடிப்பான் என்பது வடலி வளர்த்து கள்ளு குடித்த தமிழருக்கு  ஞாபகத்தில் இருந்தால் இப்போதே ஆங்காங்கே வடலிகளிகளை  வளர்க்க வேண்டும் அது ஒன்றுதான் கள்ளுத்தரும். ஹிந்தியாவே ஏன் அமெரிக்காவே இனி சீனாவை எதிர்க்க ஒன்றும் இல்லை  சீனாவின் நகர்வுகள் அடுத்த 25 வருடம் நோக்கியது ஹிந்தியா அமெரிக்க நகர்வுகள்  ரவுடிசம் சார்ந்தது இனி இந்த பருப்பு எங்கு வேக போவதில்லை. சீனாவின் வளர்ச்சி உலக ஜனாநாயகத்துக்கு எதிராக அமையலாம்  ஆனால் இதுவரையில் அமெரிக்க ரவுடிசம் செய்த மனித படுகொலைகள்தான்  ஏராளம் அதை திருத்தி அமெரிக்கா இந்த உலகை தலைமை தங்கவேண்டும் என்ற  எதிர்பார்ப்பு எனக்கு மட்டும் அல்ல இன்னும் பலருக்கும் இருக்கலாம் ஆனால் அமேரிக்கா  மீண்டும் மீண்டும் பழைய பாணியில் தொடருவதுதான் சீனாவின் வெற்றி. சுடலை ஞானம் பெற்று இப்போது சில அரபு நாடுகளை இஸ்ரேல்லுடன் சேர்த்து ஒரு புதிய   பாதையை உருவாக்குகிறார்கள் ஆனாலும் இஸ்லாமியர்களின் அடி மனதில் இருக்கும் வலிகள்  நீங்க இன்னும் ஒரு நூற்றாண்டு தேவை ..... தவிர பலஸ்தீனத்துக்கு எதிரான மனித கொடூரம்  இப்போதும் இஸ்ரேலால் தொடரப்படுகிறது  ..இது நல்லுறவை பேணும் அரபு நாடுகளுக்கு மேலும்  சங்கடத்தை உண்டுபண்ணும் தவிர ஒரு நல்லுறவை ஒருபோதும் உருவாக்காது.  இங்கு கருத்து பகிர்பவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டியது தற்போதைய தொழிநுட்ப துறைக்கு  சீனாவை விலத்தி யாராலும் முன்னேற முடியாது என்ற அடிப்படைதான். நீங்கள் கையில் வைத்திருக்கும்  ஒவ்வரு நவீன தொழில்நுட்ப பொருட்களும்  ரேர் மாடேறியல்  Rare Material (அரிதான பொருள்) மூலம் உருவாகுபவை இது துரதிர்ஷ்ட வசமாக சீனாவிடம் மட்டுமே உண்டு. இதனால் அமெரிக்க சிலிகான் வலேக்கு Silicon Valley எக்காலத்திலும் சீனாவை  பகைக்க முடியாது. இது போதுமானது சந்திரனில் இருப்பதாக கூறுகிறார்கள் அங்கு மைனிங் செய்து  பூமிக்கு கொண்டுவருவத்துக்கு இன்னமும் 25 வருடங்கள் கூட ஆகலாம்.  ஆகவே போம்பே கொழும்பில் பொங்கினாலும்  சீனாவிடம் பம்மி கொண்டுதான் வாழவேண்டும் 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.