Jump to content

பிள்ளையான் அமைச்சராகிறார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் அமைச்சராகிறார்?

August 11, 2020

pillaiyan.pngதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), கண்டியில் நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, அமைச்சர் பதவியை ஏற்குமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அவருக்கு எந்த பதவி வழங்கப்படும், அது அமைச்சரவை அந்தஸ்துடையதா? அல்லது அமைச்சரவை அந்தஸ்து அல்லாத பதவியாக என்பது குறித்து தெளிவில்லை எனவும் கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தின், அதி கூடிய 54,198 என்ற விருப்பு வாக்குகளைப் பெற்று, பிள்ளையான் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இவ்வாறு சிறையில் இருந்தபடியே பாரிய வெற்றியை தனதாக்கியுள்ள பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறீலங்கா பொதுஜன பெரமுனவால், பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்த்தேசிய கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில், பிள்ளையான் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர் விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2020/148538/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25daf3c26376cf31e3a9ed46aeb9be3f.jpg

வீதி அபிவிருத்தி ,  மீள் குடி அமர்வு ..  நல்லா "பவர்" உள்ளதா கேளுப்பா .. அங்கால நல்லிணக்கம் என்டு முஸ்லிம்களோடு முட்டி மோத விட போறாங்கள்..👍

Link to comment
Share on other sites

கிழக்கு மாகாண தமிழர்களை முஸ்லிம்களிடமிருந்து பாது காக்க ஒரு நல்ல தெரிவு. மக்களின் வலக்கையில் ஓரளவு முன்னேற்றத்தையாவது எதிர்பார்க்கலாம். கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது மக்களுக்கு செய்த சேவையை மக்கள் மறக்கவில்லை.

Link to comment
Share on other sites

உண்மை. அதேகாரணத்தினால்தான் பிள்ளையானின் வெற்றி இலகுவாகியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 ம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்ளார்; பிரசாந்தன் அறிவிப்பு

August 11, 2020

கனகராசா சரவணன்

ஏதிர்வரும் 20 ம்திகதி 2020 புதிய நாடாளுமன்ற அமர்வில் தடுப்பு காவலில் சிறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வார் அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.

prasanthan.png

 

தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் மட்டக்களபு வாவிக்கரையில் அமைந்துள்ள தலைமைக் காரியாயத்தில் இன்று செவ்வாய்க்கிழம (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

நடந்து முடிந்த தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய செய்தியை வெளிப்படுத்தியுள்ளது கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இருந்த மக்கள் 2015 நல்லாட்சி தொடக்கம் மிக தோனையான பாதிப்பை ஏற்பட்டு அபிவிருத்தியிலும் தனித்துவத்திலும் பின்னடைவை எதிர் நோக்கியுள்ளனர். ஆகவே இந்த முறை மக்கள் வழங்கியிருக்கும் செய்தியானது கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தியும் தனித்துவமும் பாதுகாக்கப்படவேண்டும் என அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சிரமேற்று சி. சந்திரகாந்தன் தலைமையில் முன்னெடுத்துச் செல்லும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அதிகமான வாக்குகளை வழங்கி 4 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்துள்ளனர்.

 

எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சி கொள்கை சாந்தவர்களாக இருந்தாலும் அரசியல் என்பது மக்களுக்காகவே தவிர தாங்கள் சார்ந்த கட்சிக்காகவே அரசியல் இருப்புக்காகவே அல்ல என்பதனை வெளிப்படையக புரிந்து கொண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் ஒரே கூரையின் கீழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்காக ஒரே கூரையின் கீழ் பயணிக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுகின்றது.

 

அதே போன்று தமிழர்களின் வசமிருந்த கிழக்கு மாகாணசபை தமிழ் மக்களிடம் வரவேண்டும் என கிழக்கு மாகாண மக்கள் உறுதியாக இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக போட்டியிடவில்லை அந்த மாவட்ட தமிழ் மக்களை நடுக்கடலில் விட என்றும் தயாராகவில்லை.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணத்தில்; அம்பாறை திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களில் போட்டியிடும். தமிழர்கள் ஆண்ட சபையை பிள்ளையான் மீண்டும் தமிழர்கள் ஆள்வதற்காக தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயாராக இருக்கின்றது.

 

தடுப்பு காவலில் இருக்கின்ற படியினால் பாராளுமன்ற என்ற சிறப்புரிமையின் கீழ் எதிர்வரும் 20 ம் திகதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற அமர்வுக்கு அவர் செல்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது அந்த நாடாளுமன்றம் சென்ற பிற்பாடே ஏனைய நடைமுறைகள் முன்னெடுக்கப்படும்

பிணைக்கு அப்பால் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது பிணையில் விடுதலை செய்யமுடியாது சட்டம் பல போரளிகள் இன்று வரைக்கும் சிறையில் இருக்கின்றனர். ஆனால் முதலமைச்சராக இருந்தவருக்கு பயங்கரவாத தடைச்சட்டம் போடப்பட்டது என்பது மிகவும் வேடிக்குரிய விடயம்.

 

எது எப்படியாக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் அவர் வெளிவருவதற்கான அனைத்து விடயற்களும் சட்டப்படி முடிவடைந்துள்ளது அதற்காக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றோம். மிகவிரைவில் சட்டத்திற்கு முன் அவர் நிரபராதியாக வெளியில் வருவார். ஏன அவர் தெரிவித்தார்.

 

http://thinakkural.lk/article/61663

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர்.. ஜோசப் பரராஜசிங்கம் உட்பட பல அப்பாவி தமிழ் மக்களைக் கொலை செய்த.. பிள்ளையானும் சகபாடிகளும்.. தண்டிக்கப்படுவது மிக அவசியம். சிங்கள அரசு தனது தேவைக்காக இவர்களை பாவிக்க விடுதலை செய்தாலும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மூலம்.. இந்த அமைப்பை தடை செய்வதோடு பிள்ளையான் உள்ளிட்ட இந்தக் கும்பலை சேர்ந்த படுகொலையாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். 

சும்மா முஸ்லீம்களை வைச்சு பயம் காட்டி.. சொந்த மக்களுக்கு எதிரான இவர்கள் தங்களின் கொடும் அரச ஒட்டுக்குழு பயங்கரவாத செயலை மூடிமறைக்கவோ.. மன்னிக்கவோ.. மறக்கவோ செய்யக் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி,அமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி, அமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி .... என்ற கூப்பாடு மகிந்த காதில் விழுந்துவிட்டது போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொடுமையை ஆரிட்ட போய் சொல்லி அழ....

Bild

 

Bild

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

இந்த கொடுமையை ஆரிட்ட போய் சொல்லி அழ....

Bild

 

Bild

இலங்கை அரசியலில் 6 வயது 8 வயது சிறுமிகளை கடத்தி கப்பம் கேட்டு கொலை செய்பவர்கள் அமைச்சராகுவது ஒன்றும் ஆச்சரியமான விசயமில்லை. ஆனால் மண்டேலாவின் படத்தையும் இந்த கொடுங்கோலைனின் படத்தையும் ஒன்றாக இணைத்தது அருவருப்பின் உச்சம். மண்டேலா என்னத்துக்கு சிறைக்கு போனார் பிள்ளையான்  என்னத்துக்கு சிறைக்கு போனான் என்பது கூடவா தெரியாது ?

 

Quote

 

பிள்ளையானின் கொலைப்பட்டியலை வெளியிட்ட யோகேஸ்வரன்!

 

தமிழ்மக்கள் விடுதலைபுலிகளின் கட்சியின் ஊதுகுழலாக கொக்கரிக்கும் மகளிர் அணி தலைவிக்கு பிள்ளையானால் செய்த கொலை கொள்ளை பாலியல் வன்புணர்வுகள் தெரியுமா என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்..

வெருகலில் விடுதலைப்புலிகள் தமது TMVP மகளிர் உறுப்பினர்களை வன்புணர்வுக்குட்படுத்தி கொலைசெய்தார்கள் என அந்த கட்சி மகளிர் அணி தலைவி செல்வி என்பவர் கூறிய கருத்துக்கு பதில் கூறும்போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் தற்போது மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களுடைய கொலை சந்தேகநபராகவே பிள்ளையான் சிறையில் உள்ளார் இவர் அரசியல் கைதி இல்லை இது செல்வி அக்காவுக்கு நன்கு தெரியும்.

கடந்த 2004,ல் புலிகள் இயக்கத்தை பிரித்தவர்கள் கருணாவும் பிள்ளையானும்தான் அவர்கள் புலிகளுடன் இருந்து புலிகளால் பிரபல்யம் அடைந்து பிரதேசவாதம் பேசி புலிகளை இராணுவத்துடன் சேர்ந்து காட்டிக்கொடுத்தமையால்தான் பிளவு ஏற்பட்டது.

வன்னிப்புலிகள் கிழக்கு புலிகள் என பேதம் பேசியவர்கள் யார்? கருணாவும் பிள்ளையானும்தானே வெருகல் சண்டையில் இறந்த அத்தனை பேரையும் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர்பட்டியலில் சேர்க்கப்பட்ட வரலாறு செல்விக்கு தெரியாது.

அதுவும் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 22, தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் பிரபாகரன் நடத்திய சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி வெருகலில் உயிர்நீத்த அத்தனை போராளிகளையும் மாவீரர் பட்டியலில் இணைக்கப்பட்டது இந்த செய்தி 2004 ல் ஊடகங்களில் வெளியானது போரில் இறந்தவர்கள் அனைவரையும் நாம் மதிக்கின்றோம்.

இந்த செல்வி கூறுவது போல் எவரும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

கடந்த காலங்களில் பிள்ளையானின் தலைமையில் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை பல மனிதநேய அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன. இது செல்வி அக்காவுக்கு தெரியாவிட்டால் தருகிறேன் பாருங்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான் விலக்கப்பட்ட பின்னர் , கிழக்கு மாகாண முதலமைச்சராக விளங்கிய பிள்ளையான் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

மனிதவுரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்களின் அடிப்படையில் பிள்ளையானின் கொலைப்பட்டியல் இதோ:

அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர். 07/02/2005 அன்று கொலை செய்யப்பட்டார்.

E.கௌசல்யன், மட்டக்களப்பு – அம்பாறை அரசியல் துறை பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள். 07/02/2005 அன்று கொலை செய்யப்பட்டார்.

தர்மரட்ணம் சிவராம், சிரேஷ்ட ஊடகவியலாளர். 28/04/2005 அன்று கொலை செய்யப்பட்டார்.

ஐயாத்துரை நடேசன், சிரேஷ்ட ஊடகவியலாளர். 31/05/2004 அன்று கொலை செய்யப்பட்டார்.

வன்னியசிங்கம் விக்னேஸ்வரன், திருகோணமலை மாவட்ட தமிழர் அமைப்பின் உறுப்பினர். 07/04/2006 அன்று கொலை செய்யப்பட்டார்.

சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத், உபவேந்தர் கிழக்கு பல்கலைக் கழகம். 15/12/2006 அன்று கடத்தப்பட்டு பொலன்னறுவை மாவட்டம், செவனப்பிட்டி, தீவுச்சேனை என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார்.

ஜோசப் பரராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். 25/12/2005 அன்று மட்/புனித மரியன்னை இணைப்பேராலயத்தினுள் வைத்து கொலை செய்யப்பட்டார்.

வர்ஷா ஜூட் என்னும் 6 வயது சிறுமி, 11/03/2009 அன்று திருகோணமலையில் கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

சதீஷ்குமார் தினூஷிகா என்னும் 8 வயது சிறுமி, 28/04/2009 அன்று மட்டக்களப்பு, பூம்புகார் என்னும் இடத்தில் வைத்து கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைப்பட்டியல் தொடர்பில் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ள நிலையில் , சில தரப்புகள் பிள்ளையானை கிழக்கின் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக மாற்ற வேண்டும் என்னும் முனைப்பில் செயலாற்றி வருகின்றமை வேடிக்கையானது எனவும் மேலும் கூறினார்.

https://www.ibctamil.com/srilanka/80/140986

 

குறிப்பு: இந்த இணைப்பு தொடர்பாக வடக்கு அரசியல் வேறு கிழக்கு அரசியல் வேறு என்று 6 வயது 8 வயது சிறுமிகளை கொன்றதை நியாயப்படுத்த வருவார்கள், ஆனால் இது  மனித உரிமை ஆணைக்குழு விசாரணையை மேற்கோள் காட்டி முன்னாள் மட்டக்களப்பு மாவடட பாராளுமன்ற உறுப்பினரால் வெளியிட்டப்பட்டது. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.