Jump to content

28 புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம் – Live Updates


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

minstry-720x450.jpg

28 புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம் – Live Updates

28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது இடம்பெற்றுவருகின்றது.

இராஜாங்க அமைச்சர்கள்

  1. சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  2. பியங்கர ஜெயரத்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  3. துமிந்த திசாநாயக்க – சூரிய சக்தி காற்று நீர்மின் உத்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  4. தயாசிறி ஜயசேகர – கைத்தறி துணிகள் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  5. லசந்த அழகியவண்ண – கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  6. சுதர்ஷினி பெர்னான்டோபிள்ளை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  7. நிமல் லங்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  8. ஜயந்த சமரவீர – கிடங்கு வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக விநியோக வசதிகள் மற்றும் கப்பல் தொழில் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  9. கனக ஹேரத் – கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல், தேயிலை தொழிற்சாலை அபிவிருத்தி மற்றும் மேப்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  10. விதுர விக்கிரமநாயக்க – தேசிய பாரம்பரிய, கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  11. ஜனகா வக்கும்பர – சிறுபெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் அதன் சார்ந்த கைத்தொழில் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  12. விஜித்த வேறுகொட – அறநெறிப பாடசாலைகள், பிக்குமார்கள் வி, பிரிவேனாக்கள் மற்றும்; பௌத்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  13. மொஹான் டி சில்வா – உர உற்பத்தி மற்றும் விநியோகங்கள், இரசாயனப் பசளைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டு ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  14. லோகன் ரத்வத்த – இரத்தினக்கல் மற்றும் தங்கஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  15. திலும் அமுனுகம வாகனங்களை ஒழுங்குபடுத்தல், பஸ் வண்டி போக்குவரத்துச் சேவைகள மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  16. விமலவீர திஸ்நாயக்க – வனவிலங்கு பாதுகாப்பு யானைகள் வெளி மற்றும் அகழியை நிர்மாணித்தல், பாதுகாப்பு திட்டங்கள், வன வள மேம்பாடு
  17. தாரக பாலசூரிய – பிராந்திய உறவுகள் நடவடிக்கை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
  18. இந்திக்க அனிருத்த – கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  19. இந்திக்க அனிருத்த – கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் மற்றும் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  20. காஞ்சனா விஜயசேகர மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  21. சனத் நிஷாந்த – கிராமிய நீர் வலையமைப்பு திட்டங்களின் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  22. சிறிபால கம்லத் – மகாவலி வலையங்களை அண்டியுள்ள கால்வாய்கள் மற்றும் குடியேற்றங்கள், பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  23. சரத் வீரசேகர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  24. அநுராத ஜயரத்ன – கிராமிய வயல் நிலங்கள், அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள், நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  25. சதாசிவம் வியாழேந்திரன் – தபால் சேவைகள் வெகுசனஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
  26. தேனுக விதானகமகே – கிராமிய, பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேப்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
     
    சிசிர ஜெயகொடி – சுதேச மருத்துவத்தை ஊக்குவித்தல், கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு அமைச்சராக இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
     
    பியல் நிஷாந்த டி சில்வா – மகளிர், சிறுவர் அபிவிருத்தி முன் பாடசாலை ஆரம்ப, அறநெறி பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
     
    பிரசன்ன ரணவீர – கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
     
    டி.பி. ஹேரத் – கால்நடை வழங்கல் பண்ணை மேம்பாடு மற்றும் பால் தொடர்பான தொழில் ராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
     
    சசீந்திர ராஜபக்ஷ – நெல், மரக்கறிகள், விதி உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தமிழ் அமைச்சர்கள் மட்டுமா? பிரதி அமைச்சர் இருக்கோ? அங்கயனுக்கு எந்த அமைச்சு?

கடிதம் போடுற அமைச்சு,மீன்பிடிக்கிற அமைச்சுக்களில் பெரிதாக அபிவிருத்தி செய்யலாமோ?

Link to comment
Share on other sites

15 minutes ago, putthan said:

இரண்டு தமிழ் அமைச்சர்கள் மட்டுமா? பிரதி அமைச்சர் இருக்கோ? அங்கயனுக்கு எந்த அமைச்சு?

கடிதம் போடுற அமைச்சு,மீன்பிடிக்கிற அமைச்சுக்களில் பெரிதாக அபிவிருத்தி செய்யலாமோ?

பிரதி அமைச்சர்கள் இல்லை. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், ராஜாங்க அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அங்கஜனுக்கு அமைச்சு இல்லை. டக்லஸுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள நல்ல அமைச்சு பதவிதான்.இதன்மூலம் மற்றைய அமைச்சர்களுடன் தொடர்பை ஏட்படுத்தி மற்றைய வேலைத்திட்ட்ங்களுக்கு உதவி செய்யலாம்.

வியாழேந்திரனுக்கும் ராஜாங்க அமைச்சு பதவி கிடைத்ததால் மூலம் அவரது அமைச்சுடன் கூடிய மற்றைய வேலைத்திட்ட்ங்களையும் செய்யலாம். தொண்டாவின் புதல்வன் ஜீவனுக்கும் ராஜாங்க அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

இம்முறை ராஜாங்க அமைச்சர்களுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. அதாஉல்லாவுக்கு ஒன்றுமில்லை. தேசிய பட்டியல் உறுப்பினர் அலி சபரிக்கு நீத்து அமைச்சு கிடைத்துள்ளது. பிள்ளையானுக்கு ஏதும் ஒன்று கிடைக்க சந்தர்ப்பம் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவட்ட அபிவிருத்தி சபை யை உருவாக்கப்போகின்றார்கள் ....மாகாணசபைகள் கலைக்கப்பட போகின்றது.....மாகாணசபைக்கு எதிரானவரை அந்த அமைச்சுக்கு  பொறுப்பாக்கியுள்ளனர்..

இந்து,இஸ்லாம் அமைச்சுக்கள் இல்லை,மொழிநல்லினக்க அமைச்சு இல்லை....அதிகாரத்திற்கு கொழும்பை நம்பியிருக்க வேண்டும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இரண்டு தமிழ் அமைச்சர்கள் மட்டுமா? பிரதி அமைச்சர் இருக்கோ? அங்கயனுக்கு எந்த அமைச்சு?

கடிதம் போடுற அமைச்சு,மீன்பிடிக்கிற அமைச்சுக்களில் பெரிதாக அபிவிருத்தி செய்யலாமோ?

அங்கயனுக்கு யாழ் மாவட்ட இணைப்பு செயலாளர் பதவி கொடுத்துள்ளார்கள் 
 

Link to comment
Share on other sites

பெளத்த சாசன அமைச்சு மீண்டும் பிரதமரிடம் கொடுக்கப்பட்டு இருக்கு. அத்துடன் புதிதாக "பௌத்த பல்கலைக்கழகங்கள், பிரிவெனாக்கல் - பௌத்த மறை கல்வி" என்கிற ஒரு இராஜாங்க அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளது. அதே வேளை  இந்து விவகார, முஸ்லிம் விவகார அமைச்சுக்கள் நீக்கப்பட்டுவிட்டன. தமிழ் மொழியை அரசகரும மொழியாக சரியாக பயன்படுத்தி வருகின்றதா என்பதை கவனித்துக் கொண்டு இருந்த அரசகரும மொழிகள் அமைச்சும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. மாகாணசபையையும் அதிகாரபரவலாக்கத்தையும் கடுமையாக எதிர்த்துக் கொண்டு இருந்த ஆனந்த வீரசேகரவுக்கு மாகாணசபை அமைச்சு. பாதுகாப்பு அமைச்சின் கீழ் பல அமைச்சுகள் கொண்டுவரப்பட்டு சிவில் நிர்வாகம் இராணுவயமயப்படுத்தப்படுகின்றது.

கோத்தா + மகிந்த அரசு எந்த திசையில் செல்கின்றது என்பதை முதல் நாளில் இருந்தே புரியக் கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிழலி said:

பெளத்த சாசன அமைச்சு மீண்டும் பிரதமரிடம் கொடுக்கப்பட்டு இருக்கு. அத்துடன் புதிதாக "பௌத்த பல்கலைக்கழகங்கள், பிரிவெனாக்கல் - பௌத்த மறை கல்வி" என்கிற ஒரு இராஜாங்க அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளது. அதே வேளை  இந்து விவகார, முஸ்லிம் விவகார அமைச்சுக்கள் நீக்கப்பட்டுவிட்டன. தமிழ் மொழியை அரசகரும மொழியாக சரியாக பயன்படுத்தி வருகின்றதா என்பதை கவனித்துக் கொண்டு இருந்த அரசகரும மொழிகள் அமைச்சும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. மாகாணசபையையும் அதிகாரபரவலாக்கத்தையும் கடுமையாக எதிர்த்துக் கொண்டு இருந்த ஆனந்த வீரசேகரவுக்கு மாகாணசபை அமைச்சு. பாதுகாப்பு அமைச்சின் கீழ் பல அமைச்சுகள் கொண்டுவரப்பட்டு சிவில் நிர்வாகம் இராணுவயமயப்படுத்தப்படுகின்றது.

கோத்தா + மகிந்த அரசு எந்த திசையில் செல்கின்றது என்பதை முதல் நாளில் இருந்தே புரியக் கூடியதாக உள்ளது.

ஆனால், நாம் இதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், எமக்கு தேவையானதெல்லாம் ஒரு ராஜாங்க அமைச்சர் பொறுப்போ, ஆளுநர் பதவியோ மட்டும் தான். சிங்களத்தின் அரசவையில் வேறு என்ன அமைச்சகங்கள் இருக்கின்றன, எவை அகற்றப்பட்டிருக்கின்றன, இதன்மூலம் எமது இனத்திற்கு வரக்கூடிய சவால்கள் என்ன என்று பார்க்கும் நிலையில் நாங்கள் இல்லை.  ஆனால், எமது ஆதரவுடந்தான் சிங்களம் தனது அராஜகத்தை தொடரப்போகிறது. நாமும் தவறாது ஒவ்வொரு அராஜகத்திற்கும் கையுயர்த்திவிட்டு வருவோம். ஆனால், எமக்குக் கிடைக்கும் ஒரு சில லட்சங்களையோ, கோடிகளையோ கொண்டு எமது பகுதிகளை அபிவிருத்தி செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்படி, அமைச்சர்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விபரம் வருமாறு,

  • கோட்டாபய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சர்
  • மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டு வசதி அமைச்சர்
  • நிமல் ஸ்ரீபாலடி சில்வா – தொழில் அமைச்சர்
  • ஜீ.எல்.பீரிஸ் – கல்வி அமைச்சர்
  • பவித்ரா வன்னியாராச்சி – சுகாதார அமைச்சர்
  • தினேஷ் குணவர்தன – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
  • டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் துறை அமைச்சர்
  • காமினி லொக்குகே – போக்குவரத்து அமைச்சர்
  • பந்துல குணவர்தன – வர்த்தகத்துறை அமைச்சர்
  • R.M.C.B. ரத்னாயக்க – வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்
  • ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
  • ஹெகலிய ரம்புக்வல – வெகுசன ஊடக அமைச்சர்
  • சமல் ராஜபக்ஷ – நீர்ப்பாசனத்துறை அமைச்சர்
  • ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள் அமைச்சர்
  • விமல் வீரவன்ச – கைத்தொழில்துறை அமைச்சர்
  • மஹிந்த அமரவீர – சுற்றாடல்துறை அமைச்சர்
  • எஸ்.எம்.சந்திரசேன – காணி விடயம் தொடர்பான அமைச்சர்
  • மஹிந்தானந்த அளுத்கமகே – கமத்தொழில் அமைச்சர்
  • வாசுதேவ நாணயக்கார – நீர்வழங்கல் துறை அமைச்சர்
  • டலஸ் அழகப்பெரும – மின் சக்தித்துறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்
  • உதய கம்மன்பில – வலுசக்தி துறை அமைச்சர்
  • ரமேஷ் பதிரன – பெருந்தோட்டத்துறை அமைச்சர்
  • பிரசன்ன ரணதுங்க – சுற்றுலாத்துறை அமைச்சர்
  • ரோஹித அபேகுணவர்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர்
  • நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்
  • அலி சப்ரி – நீதித்துறை அமைச்சர்

இதேவேளை, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்கள்,

1. உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் – சமல் ராஜபக்ஷ

2. வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை இராஜாங்க அமைச்சர் – பிரியங்கர ஜயரத்ன

3. சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் – துமிந்த திசாநாயக்க

4. பத்திக் கைத்தறி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் – தயாசிறி ஜயசேகர

5. சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள், சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – லசந்த அழகியவன்ன

6. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் – சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே

7. தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் துறைசார் கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வகைப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் – அருந்திக்க பெர்னாண்டோ

8. கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் – நிமல் லன்சா

9. கொள்கலன் முனையங்கள், துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி, துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் – ஜயந்த சமரவீர

10. காணி முகாமைத்துவ விவகாரம், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – ரொஷான் ரணசிங்க

11. கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல், தேயிலைத் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் – கனக ஹேரத்

12. தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் – விதுர விக்ரமநாயக்க

13. கரும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு, பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கான இராஜாங்க அமைச்சர் – ஜானுக்க வகும்பர

14. அறநெறி பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவெனா மற்றும் பௌத்த பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சர் – விஜித பேருகொட

15. சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – ஷெஹான் சேமசிங்க

16. உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை இராஜாங்க அமைச்சர் – மொஹான் டி சில்வா

17. தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – லொஹான் ரத்வத்த

18. வாகன ஒழுங்குபடுத்தல், பேருந்து போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – திலும் அமுனுகம

19. வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானைவேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் – விமலவீர திசாநாயக்க

20. பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் – தாரக்க பாலசூரிய

21. கிராமிய வீடமைப்பு, பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் – இந்திக்க அனுருத்த

22. அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் – கஞ்சன விஜேசேகர

23. கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – சனத் நிஷாந்த

24. மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்பட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் – சிறிபால கம்லத்

25. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் – சரத் வீரசேகர

26. கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த் தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – அனுராத ஜயரத்ன

27. தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – சதாசிவம் வியாழேந்திரன்

28. கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் – தேனுக விதானகமகே

29. சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் – சிசிர ஜயகொடி

30. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலை கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் – பியல் நிஷாந்த டி சில்வா

31. பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் – பிரசன்ன ரணவீர

32. விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – டி. பி.சானக்க

33. கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார் தொழில் இராஜாங்க அமைச்சர் – டி.பி. ஹேரத்

34. நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் – ஷஷீந்திர ராஜபக்ஷ

35. நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் – நாலக்க கொடஹேவா

36. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் – ஜீவன் தொண்டமான்

37. நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் – அஜித் நிவாட் கப்ரால்

38. திறன் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் – சீதா அரம்பேபொல

39. ஒளடத உற்பத்திகள் வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் – சன்ன ஜயசுமன

http://athavannews.com/new-cabinet-state-ministers/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி மாமாவுக்கு உள்ளதும் போச்சா.. ஏதோ பெரிசா எதிர்பார்த்தாராமில்ல.

அங்கஜன் அங்கிளுக்கு அதே ஒருங்கிணைப்பு பதவி தான். இதுக்கு இவ்வளவு செலவழிக்கனுமா அங்கிள். பேசாம தேசிய பட்டியலில் போயிருக்கலாம். படம் காட்டல் என்றால்.. அப்போ.. சொல்லி வேலையில்ல. உங்களை விட அந்தக் காலத்தில துரையப்பா பறுவாயில்லை என்று சொன்னாலும் சொல்லும் சனம்.

பிள்ளையான் மாமா.. எஜமானர்கள் காலை வாரிப்போட்டினமே.

கருணா கும்மான்.. எப்படி ஆப்பு. இப்ப ஆப்பிழுத்த குரங்காகிட்டேளே கும்மான். 

வியாழேந்திரன் அங்கிள்.. ஒன்னுமே இல்லாத உங்களுக்கு இராஜாங்க அமைச்சு.. ரெம்பப் பெருசுதான்

ஜீவன் தொண்டமான் அம்பி... கொப்பருக்கு கொடுத்த அந்த கொஞ்ச மரியாதையும் தொலைச்சு போட்டியளே. வெறும் இராஜாங்க அமைச்சு தான்.

 உந்த அமைச்சுக்களை வைச்சு.. பழைய கார் ஒன்று வாங்கி நீங்கள் எல்லாருமா உங்கட காராஜ்சில போட்டு திருத்தி ஓடலாமே தவிர.. உங்களை நம்பி வாக்குப் போட்டவை பாடு.. மீண்டும் கொட்டாவி தான்.

மேலும் உலக பொருண்மியமே கொரோனாவால ஆட்டம் கண்டிருக்கும் நிலையில் சொறீலங்கா பொருளாதாரம் அதளபாதாளத்துக்குப் போகும். உலகப் பொருண்மிய தாக்கம்.. சீனாவையும் ஆட்டிப்படைக்கும். முந்தி போல.. சும்மா கடனை அள்ளிக் கொடுக்கான் சீனன். ஹிந்தியனிட்டையும் போட்டிக்கு கொடுக்க காசில்லை.  இந்த இலச்சனத்தில் அபிவிருத்தி அரசியலுக்கு வாக்குப் போட்டிச்சினமாம். அங்கின கிடைக்கிற கொஞ்சக் கடனும் சிங்களவன் பொக்கட்டுக்கப் போடத்தான் சரி.

ஆனால்.. தமிழர்கள் மகிந்த கும்பலுக்கு வாக்குப் போட்டிங்களோ இல்லையோ..

2009 சிங்களவனின்.. உலகக் கூட்டணியிலான ஆயுத யுத்தத்தை எதிர்கொண்டீர்கள். அவன் செய்த இனப்படுகொலைகளை மறப்போம்.. மன்னிப்போம் என்று சொல்லி...

இப்ப 2020 இல்.. அதே சிங்களவனிடம் இருந்து அதிகார யுத்தம் வரப் போகிறது.

நிச்சயம் இலங்கைத் தீவில் தமிழர்களின் இருப்பை அழிக்க அவன் நினைச்சதை செய்வான். எந்தக் கொம்பனாலும் அதனை தடுக்க முடியாது. காரணம்.. தமிழர்களுக்கு சிங்களவனை தண்டிக்கிற உண்மையான நோக்கமும் இல்லை.. தங்களுக்கான அரசியல் அதிகார விடுதலையிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இதன் விளைவு.. சிங்களச் சொறீலங்காவுக்குள் நிரந்தர அடிமைகள். 

இதனை கடந்து போகனுன்னா.. தேசிய தலைவர் சொன்னது போல்.. புலம்பெயர் தமிழினமும்.. உலகத்தமிழனும்.. ஒன்று சேர்ந்து உலகத்தாரின் மனச்சாட்சியை உலுப்பாமல்.. எதையும் சாதிக்க முடியாது. அபிவிருத்தியும் இல்லை அரசியலும் இல்லை நிலமும் இல்லை..என்ற நிலை தான் தமிழர்களுக்கு.

மிக விரைவில் இந்தக் காட்சிகளை காண்பீர்கள். அதற்கான அமைச்சுக்களை மகிந்த கும்பல் ஏலவே உருவாக்கி விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

28 புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள்

1.1/2 அனா நாட்டுக்கு 1.3/4 போஸ்ரிங் விளங்கிடும் .. 👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.