Jump to content

துணைவேந்தர் பதவிக்காக 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு

Recommended Posts

துணைவேந்தர் பதவிக்காக 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு

-என்.ராஜ்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும், 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான, பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம், இன்று (12) நடைபெற்றது.

இதன்போது, விஞ்ஞான பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும் கணிதப் புள்ளி விவரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா முதலாமிடத்திலும் உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் இரண்டாமிடத்திலும் வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி மூன்றாமிடத்திலும் பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவால் முன்மொழியப்பட்டுள்ளனர்.

இத்தடன், முன்னாள் துணைவேந்தரும் கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நான்காவது இடத்திலும், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஐந்தாவது இடத்திலும் முன்மொழியப்பட்டுள்ளனர்.

புள்ளிவிவரவியல் துறைப் பேராசிரியர் செ. இளங்குமரன்,   மதிப்பீட்டுக் குழுவால்  நிராகரிக்கப்பட்டுள்ளார். 

முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் திறமைப் பட்டியல், பல்கலைக்கழகப் பேரவையின் பரிந்துரையுடன், தகுதி வாய்ந்த அதிகாரியினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, நாளைய தினம் (13) அனுப்பி வைக்கப்படும்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தணவநதர-பதவககக-5-பர-பரவகக-மனமழவ/71-254258

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில், 

1) சற்குரு

2) மிகுந்தன் ⁉️

3) வேல்நம்பி

4) விக்கி

5) ரவிராஜ்

6) இளங்குமரன் 🛑🚫☢️⚠️🆘💀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கு மூவரின் பெயர்கள் தேர்வானது

University-of-Jaffna-1457319150.jpeg?189db0&189db0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டுள்ளது.

உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் முறையே இரண்டாவது, மூன்றாவதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஆகிய இருவரும் முறையே நான்காவது, ஐந்தாவது இடங்களையும் பெற்றுள்ளனர்.

https://newuthayan.com/யாழ்-பல்கலைக்கழக-துணைவே-2/

11 hours ago, Kapithan said:

எனது பார்வையில், 

1) சற்குரு

2) மிகுந்தன் ⁉️

3) வேல்நம்பி

4) விக்கி

5) ரவிராஜ்

6) இளங்குமரன் 🛑🚫☢️⚠️🆘💀

சற்குருவிற்கு நல்ல ஆளுமையிருக்கு  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

எனது பார்வையில், 

வேல்நம்பி 

நான் அறிந்த வரைக்கும் வேல்நம்பி சேர் ஒருவர் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பெற்றவர்களில் மிகச் சிறந்த ஆளுமை. வறுமையான மாணவர்களுக்கு உதவுவதில் சிறந்த முன்னோடி. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நான் படித்த காலத்தில் எனக்குத் தெரிந்த பலருக்கு, போராட்ட காலத்தில் பண உதவி முதல், உளவியல் ரீதியான எல்லா ஆலோசனைகளையும் வழங்குவதில் முன்னின்றவர். நான் அவரிடம் படிக்கவில்லை. ஆனால் கேள்விப்பட்டவரையில் மிகச் சிறந்த ஆசான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, theeya said:

ஒன்றைக் கவனத்திற் கொள்ள வேண்டும். இங்கே ஆளுமை மட்டும் போதுமானதல்ல. தூரநோக்கும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து பல்கலையை உலகத் தரத்திற்கு(🤥) கொண்டுவரும் ஆர்வமும்,  புதிய சிந்தனைகளை கொண்டவராகவும், மாற்றத்தை விரும்புபவராகவும் இருக்கவேண்டியது கட்டாயம். 

இல்லையேல் முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளையின் காலத்தைப்போன்றே யாழ் பல்கலைக் கழகத்தின் தரம் மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்துகொண்டே இருக்கும் . 🙂

2 hours ago, உடையார் said:

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கு மூவரின் பெயர்கள் தேர்வானது

University-of-Jaffna-1457319150.jpeg?189db0&189db0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டுள்ளது.

உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் முறையே இரண்டாவது, மூன்றாவதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஆகிய இருவரும் முறையே நான்காவது, ஐந்தாவது இடங்களையும் பெற்றுள்ளனர்.

https://newuthayan.com/யாழ்-பல்கலைக்கழக-துணைவே-2/

சற்குருவிற்கு நல்ல ஆளுமையிருக்கு  👍

எனக்கு இளங்குமரி😬 மன்னிக்கவும், இளங்குமரனைத்தான் பிடிக்கும் 😬😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உங்கள் கருத்துடன் 100% உடன்படுகிறேன்( ஆனால் இளங்குமரன் வேண்டவே வேண்டாம்)..

ஒரு பல்கலைகழகத்தின் துனைவேந்தர் என்பது அந்த பல்கலைகழகத்தை மேன்மேலும் தரம் உயர்த்தவும், காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை உள்வாங்கி செயல்களை செயற்படுத்தக்கூடிய ஆளுமைமிக்கவராக இருக்கவேண்டும்.. 

நல்லவர் என்பதும் மட்டும் துனைவேந்தர் பதவிக்கு சரியான தகமைகள் இல்லை.. வேல்நம்பி சேரிடம் படித்திருக்கிறேன்.. அப்பொழுதும் போலவே இப்பொழுதும் இருப்பாராயின்... சரியான தெரிவா என்ற சந்தேகம் எழுகிறது..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.