Jump to content

அன்புள்ள கமலா அக்காவிற்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அன்புள்ள கமலா அக்காவிற்கு,
 
உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது. நீங்க பச்சைத் தமிழச்சியா இல்லையா என்று கூட எனக்குத் கொஞ்சமும் தெரியாது. 
 
ஆனாலும் உங்கட பெயர் தமிழ் பெயரைப் போல இருப்பதால், நீங்க தமிழ் என்று நினைத்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 
 
ஏனென்றா அக்கா, நாங்க சின்னனில் இந்திரா காந்தி கூட தமிழ் என்று யோசிச்சாக்கள் தானே.  
 
நேற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் Joe Bidenன் துணை ஜனாதிபதி வேட்பாளராக நீங்கள் அறிவிக்கப்பட்டதும், ஏனோ எங்களுக்கு எங்கிருந்தோ வந்த ஒரு புளூகம் புகுந்து கொண்டதுக்கு உங்கட கமலா என்ற அழகிய தமிழ் பெயர் தான் காரணம்.
 
இன்னும் கொஞ்ச நாட்களில், கமலா ஒரு சிங்களப் பெயர், நீங்கள் சிங்களம் என்று ஞானசார தேரர் எங்களோட சண்டைக்கு வருவார். 
 
கதிர்காம கந்தனை சிங்களவனாக மாற்றியது போல, கன்னியாவையும் இராவணனையும் தங்கட என்று தம்பட்டம் அடிக்கும் பெளத்த சிங்கள பேரினவாதம், கமலாக்காவையும் வெள்ளை வானில் தூக்கி தங்கட ஆள் என்று கொண்டாடத் தான் போகுது.
 
உங்கட அம்மாவும் தமிழ், உங்கட பெயரும் தமிழ், நாங்களும் தமிழ் என்றபடியால் மட்டுமே நீங்க எங்கள கவனிப்பியலோ தெரியாதக்கா. 
 
ஆனால், உலகமே வியக்கும் வண்ணம் கட்டுக்கோப்பான ஒரு ஆயுதப் போராட்டத்தை நடாத்தி, ஒரு இருபது வருடங்களிற்கு முன்னம் வெற்றியின் விளிம்பில், நின்ற எங்களின் இன்றையை கையறு நிலையை கவனிப்பார் யாருமில்லை அக்கா. 
 
பேசித் தீர்க்கலாம் வாங்கோடா என்று ஊரூராக கூட்டிப் போன நோர்வேக்காரனின் சிலமனையும் காணோம், அவங்களோடு கூட்டுக் களவாணிகளாக சேர்ந்த உங்கட அமேரிக்காவும், யப்பானும், ஐரோப்பிய ஒன்றியமும் நாங்கள் யுத்தத்தில் தோற்றதோடு எங்களை வைவிட்டு விட்டது உங்களிற்கு தெரிஞ்சிருக்கும். 
 
கமாலாக்கா, உங்களுக்கு எங்கட உண்மையான பிரச்சினை என்னென்று தெரியுமோ தெரியாது, தெரிய முயற்சிக்க போறியலோவும் தெரியாது. 
 
உதுக்க ஆகப் பெரிய பகிடி என்னென்றால், எங்கட பிரச்சினை என்னென்று எங்களுக்கே சரியா தெரியாமல் போய்ட்டு, உண்மையை சொல்லப் போனால் தெரியாமல் ஆக்கிட்டாங்கள்.
 
எங்களுக்கே எங்கட பிரச்சினை என்னென்று தெரியாமல் இருக்கேக்க, உங்களுக்கு எங்கட உண்மையான பிரச்சினையை என்னென்று எங்களால உங்களுக்கு விளங்கப்படுத்த போறம்? 
 
எங்கட ஊர் பெடியளிற்கே எங்களால எங்கட பிரச்சினையை சரியா விளங்கப்படுத்த ஏலாமல் இருக்கிற சீத்துவத்தில, வொஷிங்டனில் இருக்கிற உங்களுக்கு எப்படி அக்கா விளங்க வைக்கிறது?
 
ஒருத்தனை கேட்டால் எங்களுக்கு தனி நாடு கிடைச்சால் எல்லாம் சரியாகிடும் என்றுறான். இன்னொருத்தனோ இல்லையடாப்பா தனித் தேசம் தான் வேணும் என்றுறான். 
 
சரியடாப்பா, தனி நாட்டுக்கும் தனித் தேசத்துக்கும் என்னடாப்பா வித்தியாசம் என்று கேட்கப் போனால், இருத்தி வைச்சு மண்டை காயப் பண்ணுறாங்கள். 
 
ஆள விடுங்கோடாப்பா என்று அவங்கட இருந்து கழற, “இஞ்ச வாரும் ஐசே, நாங்க சமஷ்டி எடுத்து தாறம்” என்று ஒராள் சீனியில்லாத தேத்தண்ணி வாங்கித் தந்தார். 
 
சீனி இல்லையே என்று கேட்டால் எங்க என்னை மொக்கன் என்று யோசித்து விடுவாரோ என்ற பயத்தில், தேத்தண்ணியாவது வாங்கித் தந்தாரே என்று யோசித்து விட்டு, சீனியில்லாத கச்சல் தேத்தண்ணியை கைக்க  கைக்க குடிச்சுக் கொண்டிருக்க, வெளில Big Matchக்கு அடிக்கும் பப்பரே சத்தமும் பைலா பாட்டும் கேட்குது.
 
அரைவாசி குடிச்ச தேத்தண்ணியை அப்படியே வச்சிட்டு, தேத்தண்ணிக் கடையால வெளியே ஓடிவர, “வாங்கோண்ணா... வாங்கோண்ணா.. வேலை வேணுமாண்ணா வேணுமாண்ணா” என்று இளம் பெடியள்  ஆடிக்கொண்டே கூப்பிடுறாங்கள். 
 
“ஆளுக்கொரு வேலை, ஆனையிறவில் ஒரு resort, அத்தியடியில் ஒரு car park, அலுவல் முடிஞ்சுது.. எலகிரி அண்ணே” என்று ஆண்டாண்டு கால எங்கட பிரச்சினையை தீர்க்க அவங்கள் டக் டிக் டோஸ் என்று planஐ சொல்லுறாங்கள்.
 
வாற நவம்பரில் உங்கட ஆள் வென்று, தை மாதம் நீங்க பதவியேற்றாப் பேந்து, எங்கட ஆக்களை உங்க அனுப்பி, உங்களைச் சந்தித்து, உங்களுக்கு ஒரு பொன்னாடை போர்த்தலாம் என்றால், இந்த நாலு கோஷ்டியில் எந்தக் கோஷ்டியை அனுப்புவது என்று யோசிச்சா நமக்கே மண்டை வெடிக்குது, கமலாக்கா.
 
தப்பித் தவறி, இந்தியாக்கோ சைனாக்கோ போற வழியில், கட்டுநாயக்காவில் நீங்க தங்குற, அஞ்சு நிமிஷத்தில, எங்கட ஆக்களில் ஆரை சந்திப்பியல் என்றதை முடிவெடுக்க, உங்கட ஆனானப்பட்ட இராஜாங்க திணைக்களமே திணறப் போகுதென்றால் பாருங்கோவன் எங்கட திறத்தை. 
 
கமலாக்கா, இதுக்கு மேலயும் எழுதி உங்களுக்கு அலுப்புத் தர விரும்பேல்ல.. கடைசிய ஒன்றை சொல்லிட்டு போறன்.. நீங்க பதவியேற்கும் போது, ஒரு வார்த்தை.. ஒரே வார்த்தை தமிழில் சொல்லிட்டியல் என்றா காணும்.. நாங்க அதை வச்சே.. நீங்க வருவியல்.. ஏதாவது செய்வியல் என்று நம்பி நம்பியே அடுத்த அஞ்சு வரியத்தை ஓட்டிடுவம்..
 
ஏனென்றா அக்கா, எங்களுக்கு மிஞ்சியிருப்பது எங்களுக்கு எப்பவாவது ஒருநாள் விடிவு கிடைக்கும் என்ற ஏதோவொரு முரட்டுத் தனமான நம்பிக்கை மட்டுமே.
 
அந்த நம்பிக்கையை எந்த கொப்பனோ, சுப்பனோ, கோத்தாவோ ஏன் அவன்ட ஆத்தாவோ வந்தாலும் எங்களிடம் இருந்து பறிக்கேலாது, கமலாக்கா...ஏலுமென்றா பண்ணிப் பார்க்க சொல்லுங்கோக்கா..
 

நன்றி வணக்கமக்கா. 

 

வட்ஸ் அப் நண்பர் வட்டத்தில் சுட்டது

 
 
Link to comment
Share on other sites

 

இது மெல்பேர்ண் ணில் இருக்கும் என் நண்பன் ஜூட் பிரகாஷ் இனால் எழுதப்பட்ட பதிவு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிலை இப்பவே கமலா புகழ் பாடத்தொடங்கீட்டினம்.:grin:

ஆனால் ஜேர்மனியிலை அவ்ரொ அமெரிக்கன் எண்டுதான் சொல்லீனம்.

இவவும் புருசனை விட்டுட்டுத்தான் இருக்கிறா...😜

Link to comment
Share on other sites

உண்மை... அர்த்தமுள்ள எதிர்பார்ப்புகள்... பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.