Jump to content

சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கொள்கை அடிப்படையில் எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம்; – விக்னேஸ்வரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கொள்கை அடிப்படையில் எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம்; – விக்னேஸ்வரன்

August 12, 2020

எமது இனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கொள்கை அடிப்படையில் எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியமாகவுள்ளன என தமிழ்மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒத்துழைப்பு வழங்க நானும் தமிழ்மக்கள் தேசிய கூட்டணியும் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

cv.w-300x182.png

இணைந்த வடக்குகிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஸ்டி தீர்வு தரபபடவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றேல் இறுதிதீர்வு தொடர்பாக சர்வதேசமேற்பார்வையின் கீழ் சர்வஜனவாக்கெடுப்பும் அதனடிப்படையில் செயற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இனப்படுகொலைதொடர்பில் சர்வதேசரீதியிலான சுயாதீன விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்படும் எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்க தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாராகவுள்ளது என தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் இது பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது பற்றிகுறிப்பிடவில்லை என தெரிவித்துள்ள அவர் அந்த கட்சி இந்த விடயங்களில் தனது நிலைப்பாடு என்னவென்பதை அறியத்தரவேண்டும் என கோரியுள்ளார்.

http://thinakkural.lk/article/61984

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியரும், கஜேந்திரகுமாரும் இதனை ஒரே நாளில் ஒரே தொனியில் ஒரே வசனங்களைவைத்தே கூறுகிறார்கள். சுமந்திரனை சிங்களத்துக்கு நேந்துவிட்டுட்டு ( சிறியரையும் சம்பந்தனையும் இலவச இணைப்பாகக் கொடுக்கலாம்) பார்கிற அலுவலைப் பார்க்கவும்.
ஆகவே இருவரும் சேர்ந்து வெளிப்படையாகவே பொதுமக்கள் மத்தியிலும் சர்வதேசத்தின் இராஜதந்திரிகள் மத்தியிலும் நிலைமையை அனைவருக்கும் எடுத்துக்கூறி தந்தை செல்வாபோல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு நிகரான ஒரு தீர்மானத்தை உலகின் காதுகளுக்கும் எதிரியின் காதுகளுக்கும் அறியும்படி அறைகூவல்வேண்டும். 

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

மீண்டும் மே 14, 1976 க்கு போய் வட்டுக்கோட்டைக்கு போகும் வழி தேடப்போகிறீர்கள் - துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு கூட கிடைக்காது. வேறு வழி தெரிந்தால் பாருங்கள்.

Link to comment
Share on other sites

30 minutes ago, கற்பகதரு said:

மீண்டும் மே 14, 1976 க்கு போய் வட்டுக்கோட்டைக்கு போகும் வழி தேடப்போகிறீர்கள் - துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு கூட கிடைக்காது. வேறு வழி தெரிந்தால் பாருங்கள்.

மீண்டும்  மே 14, 1976 க்கு time travel  போய்  நடந்த எல்லாதையும் மாற்றலாமா?  ஆனால் இப்ப நடக்கிறத பார்த்ததால் மீண்டும் அதே தவறுகளை செய்து அதே இடத்தில் வந்து நிற்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடப்பட்ட தவறுகள் திருத்தப்பட வேண்டுமென்றால், ஆரம்பத்திலிருந்து தேடினாலே சரியாக இனங் காணமுடியும். மேலோட்டமாக தேடி சரி செய்துவிட்டோம் என்றால், எங்கே தவறு என்பதை கண்டுபிடிக்குமட்டும் திருத்தங்களும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். அது திருத்த முடியாத அளவுக்கு இடிக்கும் வரைக்கும் போய்விடும். பழுது பார்க்காதவர்கள் வீடு இடிந்து விழுவது திண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

மீண்டும் மே 14, 1976 க்கு போய் வட்டுக்கோட்டைக்கு போகும் வழி தேடப்போகிறீர்கள் - துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு கூட கிடைக்காது. வேறு வழி தெரிந்தால் பாருங்கள்.

மீண்டும் காலபயணமா  கொடுமை,மே 14 1976 வட்டுக்கோட்டை தீர்மானம் கொட்டை பாக்கு போரில் கொல்லப்பட்டோர் காணாமற்போனோர் சிறையிருப்போர் அவர்களை தேடி அலைவோர்    மக்களை வாழ விடமாட்டார்களா

Link to comment
Share on other sites

இன்னுமோர் எழுபது ஆண்டுகளா? ஐயா இன்னும் கொஞ்ச காலத்தில் போய் சேர்ந்திடுவார். நம்மட பாடுதான் பெரும்பாடாக இருக்கப்போகுது. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்திலா???????????? தமிழனின் சாபக்கேடு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.