Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

முன்னாள் அமைச்சர் ரிஷாத்திடம் 7 மணி நேரம் சி.ஐ.டி. விசாரணை!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அமைச்சர் ரிஷாத்திடம் 7 மணி நேரம் சி.ஐ.டி. விசாரணை!

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் இன்று சுமார் 7 மணி நேரம் சிறப்பு விசாரணைகள் நடாத்தப்பட்டன.   சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு 3 ஆம் இலக்க விசாரணை அறையில் முற்பகல் 9.30 மணியளவில் ஆஜரான முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனிடம்  மாலை 4.30 மணி வரை விசாரணை நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக  பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

 உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி இடம்பெறும் பிரிதொரு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஏற்கனவே இரு தடவைகள் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுக்களால் விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று 3 ஆவது தடவையாகவும்  இவ்வாறு  விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரப்பட்டிருந்தார். 

தேர்தல் காலத்தில் அழைக்கப்பட்டிருந்த போதும், அது தொடர்பில் கோட்டை நீதிவானுக்கு தெளிவுபடுத்தி, அந்த திகதி இன்றைய தினத்துக்கு மாற்றிக்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படியே இன்று கொழும்பு - கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் ரிஷாத் பதியுதீன் ஆஜரானார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சினமன் கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் குண்டினை வெடிக்கச் செய்த தற்கொலைதாரியான இன்சாப் அஹமட் எனும்  பயங்கரவாதி தொடர்பில்  சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதன்போது அந்த குண்டுதாரிக்கு  சொந்தமான வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள செப்புத் தொழிற்சாலை தொடர்பில் தனியான விசாரணைகளும் இடம்பெறுகின்றன.

இவ்வாறான நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், கைத்தொழில் அபிவிருத்தி சபையூடாக "கொலொஸஸ்" நிறுவனத்திற்கு (குண்டுதாரியின் செப்புத் தொழிற்சாலை) செப்பு விநியோகித்த போது இடம்பெற்றதாக கூறப்படும்  மோசடிகள் தொடர்பில் தனியாக விசாரணைகளை சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவின் இலக்கம் மூன்று விசாரணை அறை பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகேவின் கீழான குழு முன்னெடுத்துள்ளது.

 அது தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றில் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.  அதில் முதலில் சி.ஐ.டி. தலைமையகத்துக்கும் பின்னர் வவுனியாவில் உள்ள சி.ஐ.டி. கிளையிலும் ரிஷாத் பதியுதீனிடம் விசாரணைகள் நடாத்தப்பட்ட நிலையிலேயே மீளவும் இன்று சி.ஐ.டி. தலைமையகத்தில் வைத்து விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன. 

 

https://www.virakesari.lk/article/87944

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் கைது செய்யவில்லை என்றால்....எதுவோ இருக்கு..

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஷாப்பிங் பாக் உடன் போனவன் இப்போது Range ரோவேரில் உலா வருகிறான் என்றால் எப்படி? எல்லாம் மோசடியும் , ISIS இல் இருந்து பெற்ற பணமும்தான். தமிழ் மக்களை இவ்வளவு களமும் பயமுறுத்திக்கொண்டு திரிந்தவன்தான் இந்த ரிசார்ட். இம்முறை சரியாக மாட்டுவான் எண்டு எதிர்பார்க்கலாம். யுத்த காலத்தில் ஜிஹாதில் இணைந்து தமிழர்களுக்கு எதிராக எல்லா அநியாயத்தையும் செய்தவன். அவன் செய்த கொள்ளைகள், அநியாயங்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். தேவாலயத்தில் கொல்லப்படட மக்களின் ரத்தத்திட்கு விலை கொடுத்தே தீரவேண்டும். அரசன் அன்று அறுப்பான் , தெய்வம் நின்று அறுக்கும்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஆத்தோரம் தேக்குமரம்  
  • நல்லவேளை மட்டக்களப்பில்  அபிவிருத்திக்கு போட்ட வாக்குகள் மூலம் 199 பேருக்கு வேலையாவது கிடைக்குது, அம்பாறையில் கலையரசன் வயிறு புடைக்க கத்துவது மட்டும் நடக்குது, ஏற்கனவே 20 க்கு வாக்களிக்கும் போது ஒரு டீலிங்குடன் தான் வாக்களித்திருப்பினம் முஸ்லீம் அரசியல்வாதிகள் அதை வைத்து இருப்பதையும் பிடுங்குவினம், கூத்தமைப்பு அப்புக்காத்துமார் அவரை நீக்குங்கோ இவரை நீக்குங்கோ அப்புறம் சேர்ந்து அரசியல் பண்ணலாம் என்று அரிவரி பையன் போல காமெடி பண்ணிக்கொண்டு இருக்கினம்   
  • குறவன் குறத்தி Srijith Sri2 years ago உலகில் முதலில் தோன்றிய மனிதன் 'லமுரியா கண்டத்தில்' தான் இருந்து உருவானார்கள் அக்கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் தமிழர்களே ஆவர் . இதை ஏற்க ஒரு சிலர் மறுக்கிறார்கள் (ஆபிரிக்கா கண்டத்தில் இருந்து தான் தோன்றினான் என்று வரலாற்றை மாற்றி அமைத்தார்கள் உலக அரசியலில் ஏமாற்றினான் ) அதே போல தமிழர்களின் மூத்த தொல்குடி மக்களான குறிஞ்சி நில குறவரின் வரலாறும் மாற்றியமைக்கபட்டுள்ளது இந்தியாவில் ... ஆதலால் முற்காலத்தை நோக்கி பார்த்தால் குறவர்களில் - மலைகளின் அரசர்களாக நம்பிராஜன் வேடர் , குறுநில மன்னர்களாகவும் , சங்க இலக்கியங்களில் புலவர்களாகவும் , சமநிலங்களிலும் மன்னராகவும் , படை தளபதிகளாகவும் வாழ்ந்து வந்தனர் .... ஆனால் முன் தமிழகம்(தமிழ்நாடு கேரளம் ஆந்திரா கர்நாடகா) மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான் பூர்வகுடி குறிஞ்சி நில மக்கள்(குறவர் வேடர் வேடுவர் சித்தனார் ) தோன்றினார்கள் ஆனால் முன் ஆரியர்களும் (பார்ப்பான்)மற்றும் பின் ஆங்கிலேயர்களின் படையெடுப்புக்கு பிறகு தமிழர்களின் அடையாளத்தையும் வரலாற்றையும் அழிக்க பல சதிகள் புனைந்தார்கள் ... இவர்கள் தான் கலப்பினம் இல்லா தமிழ் இன நாகர் மக்கள் .. இங்கு நரிகாரன் குருவிகாரன் , வாகிரி (நரிகுறவன் ) என்பது வேறு ... இவர்களுக்கு நம் பெயரை திணித்தது நம் அடையாளங்களை அழிக்க நினைக்கும் வந்தேரிகளின் சதிசெயல் நம் பெயரை அவர்கள் பின்னால் திரித்தது ... இந்த நரிகாரனுக்கும் (வட மாநிலத்தவனுக்கும்) நம் தமிழ்குடி மூத்த குறவர் வேடர் வேடுவர் சித்தனார் இன மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ... ஆனால் இவர்கள் வாகிரி குருவிகாரன் இன மக்கள் இவர்களுக்கும் தமிழ் தொல் பழங்குடி குறவர் இன மக்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... இவர்கள் ஒரு 150 ஆண்டுக்கு முன்னர்தான் வந்தார்கள் ... ஆனால் தமிழ் தொல்குடி குறவர் சங்க இலக்கியங்களில் இடம் பெறுபவர்கள் .... ஒரு இனத்தின் பெயர் இரு சமூகத்திற்க்கு அழைப்பதால், ஒரு இனத்தின் அடையாளம் அழிக்கப்படுகிறது, குறவர் பண்டை கால தமிழ் சமூகம், தனிஅடையாளம், தனி கலாச்சாரம், தனி தன்மை கொண்டவர்கள், குறவர் என்பவர் குறிஞ்சி நிலத்தின் மூத்த குடி, குறவர் என்ற பெயர் குறவருக்கு மட்டுமே உரிமையானது, ஆனால் இவர்கள் வாகிரி குருவிகாரன் இன மக்கள் இவர்களுக்கும் தமிழ் தொல் பழங்குடி குறவர் இன மக்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... இவர்கள் ஒரு 150 ஆண்டுக்கு முன்னர்தான் வந்தார்கள் ... ஆனால் தமிழ் தொல்குடி குறவர் சங்க இலக்கியங்களில் இடம் பெறுபவர்கள் ....   இங்கு நரிகாரன் குருவிகாரன் , வாகிரி (நரிகுறவன் ) என்பது வேறு ... இவர்களுக்கு நம் பெயரை திணித்தது நம் அடையாளங்களை அழிக்க நினைக்கும் வந்தேரிகளின் சதிசெயல் நம் பெயரை அவர்கள் பின்னால் திரித்தது ... இந்த நரிகாரனுக்கும் (வட மாநிலத்தவனுக்கும்) நம் தமிழ்குடி மூத்த குறவர் வேடர் வேடுவர் சித்தனார் இன மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ...  
  • சென்னை பட்டணம் பார்க்கப்போறய THE GANDHIGRAM RURAL INSTITUTE ( DEEMED UNIVERSITY ) GANDHIGRAM NATIONAL INTEGRATION YOUTH CAMP கலந்துகொண்டு  கருத்துரை வழங்கியதற்காக மக்கள் பாடகன் டாக்டர் மதுரை சந்திரன் அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு அற்புதமான விழிப்புணர்வு பாடலுடன் கேட்டு மகிழுங்கள் நன்றி அன்புடன் மக்கள் பாடகன் மதுரை சந்திரன்    
  • வாழைச்சேனையில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்   ????????????????????????????????????  25 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முக்கிய தேவை ஏதும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வோருக்கு  எதிராக இராணுவத்தினரும், பொலிஸாரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்து வருகின்றனர்.   வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பதினொரு பேருக்கான கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் நேற்றுன் காலை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.   வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சகல பிரதான வீதிகளும் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் நடமாட்டங்களும், அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்களும் காணப்படுகின்றது.   வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் காணப்படும் வியாபார நிலையங்கள், தனியார் அலுவலகம் உட்பட்டவை அனைத்தும் மூடப்பட்டு காணப்படுவதுடன், மீன் விற்பனை நிலையங்கள் முற்றாக மூடப்பட்டு காணப்படுகின்றது. அத்தோடு அத்தியாவசியமற்ற வியாபார நிலையங்களை பொலிஸார் மூடுமாறு பணிப்புரை விடுத்து வருகின்றனர்.   அத்தோடு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இருந்து எவரும் வெளி இடங்களுக்கு செல்ல முடியாத வகையிலும், வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் உள்ளே வர முடியாத வகையிலும் இராணுவம் மற்றும் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   https://www.ilakku.org/வாழைச்சேனையில்-ஊரடங்கு/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.