Jump to content

முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ள முன்னணி எம்.பிக்கள்.!

1597290943_br%20copy.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் 15 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9 மணியளவில் இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசியப் பட்டியலில் தெரிவான செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவருமே முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இந்த உறுதிப்பிரமாண நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளா்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

http://aruvi.com/article/tam/2020/08/13/15515/

Link to comment
Share on other sites

என்ன உறுதிப்பிரமணமென்று தெரிவித்தால் நல்லது. இதே உறுதிப்பிரமணத்தை பாராளுமன்றில் எடுப்பார்களா அல்லது வேறொரு உறுதிப்பிரமணத்தை எடுப்பார்களா என்பதையும் மக்களுக்கு தெரிவித்தால் நல்லது. வடக்கில் தமிழ் தேசியமும் தெடகில் சிங்கள தேசியமாக இல்லாவிடடாள் சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Robinson cruso said:

என்ன உறுதிப்பிரமணமென்று தெரிவித்தால் நல்லது. இதே உறுதிப்பிரமணத்தை பாராளுமன்றில் எடுப்பார்களா அல்லது வேறொரு உறுதிப்பிரமணத்தை எடுப்பார்களா என்பதையும் மக்களுக்கு தெரிவித்தால் நல்லது. வடக்கில் தமிழ் தேசியமும் தெடகில் சிங்கள தேசியமாக இல்லாவிடடாள் சரிதான்.

 நீதியரசர் முன்னால செய்யுற சனாதிபதி சத்தியப் பிரமானத்தை ருவான்வெலிசயவிலும்...

சனாதிபதி காரியலாயத்தில் செய்யுற அமைச்சர் துணை அமைச்ச சத்தியப் பிரமானங்களை.. தலதாமாளிகையிலும் செய்யலாம்.. 

அதெல்லாம் தங்களின் கண்ணுக்கு சிங்கள பெளத்த பெருந்தேசியமாகத் தெரியவில்லை..

தமிழன் தன் உறவுகளைப் பலிகொடுத்த இடத்தில் அவர்களின் நினைவாக அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்தால் மட்டும் ஏன் கொதிக்கிறது..

ரொபின்சன் குரோசோவின் கருத்துக்கள் எல்லாமே பக்கச் சார்ப்பாகவே உள்ளன. ஒன்றில்.. ஈபிடிபி  ஒட்டுக்குழுவுக்கு அல்லது ஒட்டுக்குழுக்களுக்கு ஆதரவாக.. இல்ல.. சொறீலங்கா சிங்கள பெளத்த பயங்கரவாத  அரசுக்கு சார்ப்பாக. 

ஏன் நீங்கள் ஒட்டுக்குழுப் பார்வை மட்டும் தான் பார்ப்பீர்களோ..?!

இது வசைபாடல் அல்ல.. ஏன் உங்களிடம்.. தமிழ் மக்களின் உணர்வு சார்ந்து ஒரு பார்வை வருகுதில்லை என்பதான ஆதங்கம் மட்டுமே.

70 வருசமா தமிழனை அடிக்கிறவனை அடக்கிறவனை நல்லவனாக் காண்கிறீங்க.. ஆனால்.. சொந்த இனத்தவனின் வலியை மதிப்பவனை.. மிதிக்க நினைக்கிறீங்க ஏன்..?! 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

முடியுமென்றால் நான் எழுதின கருத்துக்கு பதில் எழுதுங்கள். பதில் தெரியாவிடடாள் அவன் அப்படி செய்தான், இவன் அப்படி செய்தான் எண்டு அளப்ப வேண்டாம். ஈபிடிபி , ஒட்டுக்குழு , அது இது எண்டு எழுதி அதுக்கு பின்னாலே ஒளியும் கோழைகளாக இருக்கக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மண்ணில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் சீ.வி.விக்னேஷ்வரன்..!

IMG-8555_1080.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தேசிய அரசியலில் தனது பயணத்தை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மண்ணிலிருந்து இன்று ஆரம்பித்திருக்கின்றார்.

IMG-8572_1080.jpg

இன்று காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறிய மண்ணுக்கு சென்ற சீ.வி.விக்னேஸ்வரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பெருமளவு ஆதரவாளர்கள் குழுவினர்,படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலிகளை செலுத்தியதுடன், சீ.வி.விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவுசுடர் முன்பாக சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார் .

https://jaffnazone.com/news/19871

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

சனாதிபதி காரியலாயத்தில் செய்யுற அமைச்சர் துணை அமைச்ச சத்தியப் பிரமானங்களை.. தலதாமாளிகையிலும் செய்யலாம்.. 

அதெல்லாம் தங்களின் கண்ணுக்கு சிங்கள பெளத்த பெருந்தேசியமாகத் தெரியவில்லை..

முள்ளிவாய்க்காலில் எம்.பிக்கள் பதவியேற்கலாமா?: பதவியேற்பு விதிகள் என்ன சொல்கின்றன?
 
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பதவியேற்கவுள்ளார் என அவரது கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், எதிர்வரும் சனிக்கிழமை முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் பதவிப்பிரமாணம் செய்யலாமா? அரசியலமைப்பு என்ன சொல்கிறது? என்பதையும் குறிப்பிட்டு விடுகிறோம்.

அரசியலமைப்பின் 63வது உறுப்புரையில்,நாடாளுமன்றத்தின் முன்னர் கீழ்க்காணும் சத்தியத்தை செய்து கையொப்பமிடும் வரை நாடாளுமன்றத்தில் அமர்தலோ வாக்களித்தலோ ஆகாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, நாடாளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்த பின்னரே அவர் அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முடியும்.

இதேவேளை, நாடாளுமன்ற நிலையியல் கட்டளையில்-

நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள், முதல்நாள் அவர்களிற்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் இருந்த பின்னர், முதலில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும். அடுத்தது, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் முன்பாக சபாநாயகர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார், பின்னர் சபாநாயகரின் முன்பாக அனைத்து உறுப்பினர்களும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

1 minute ago, முதல்வன் said:

அதாவது பாராளுமன்றத்தில் சிங்கள ஸ்ரீ லங்காவின் அரசியலைப்புக்கு ஏட்ப சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும். அது வரைக்கும்  அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக முடியாது.

அப்படி என்றால் இப்போது நடக்கும் கூத்துக்கள் எல்லாம் உஷார் மடயர்களை சந்தோசப்படுத்துவதட்காக, அப்பாவிகளை ஏமாத்துவதட்காக  இருக்கலாம். அதாவது இதனால் எந்த பிரயோசனமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை தலதா மாளிகைக்கு பதிலடி என்றும் எடுக்கலாம்.

இவங்கள் எங்கே சத்தியப்பிரமாணம் என்ன சத்தியப்பிரமாணம் எல்லாம் முக்கியம் இல்லை குருசோ அண்ணே, நாளைக்கு மக்களுக்காக என்ன செய்கிறார்கள் எண்டது தான் முக்கியம். 

Link to comment
Share on other sites

சிங்களவன் தலதா மாளிகையில்  படம்  காட்டேக்க, நாங்களும் படம் கட்டுகிறதில்லை என்ன பிழை?

Link to comment
Share on other sites

Just now, zuma said:

சிங்களவன் தலதா மாளிகையில்  படம்  காட்டேக்க, நாங்களும் படம் கட்டுகிறதில்லை என்ன பிழை?

பாரு பாரு நல்ல பாரு பாயா ஸ்கோப்பு படத்தை பாரு. அவனுகள் படம் காட்டுறாங்கள் , இந்த ஏமாளிகள் பார்த்து ரசிக்கிறார்கள். ஈழத்துக்கு இன்னும் கொஞ்ச தூரம்தான் இருக்கு. வாருங்கள் மக்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன விசயம் தான் குருசோ. நீங்களும் அவர்களும் தேசியத்தை நேசிக்கிறவர்கள். நீங்கள் உண்மையான தேசியம் போலி தேசியம் என்று இரண்டாய் உடைக்கிறீங்கள்.

போலி தேசியவாதிகள் என்று அவர்கள் மீது வெறுப்பை வளர்க்கிறீங்கள். போலி தேசியவாதிகள் உங்களை ஏமாத்திப்போடுவாங்கள் என்று அவர்கள் மீது அக்கறையாக பேசுகிறீகள் என்று வைச்சால், நாகரீகமாகவும் அவர்களுக்கு விளங்கக்கூடியவாறும் தான் கருத்தை வைக்கவேண்டும். 

அவர்களும் உங்கட கருத்தியலில் இருக்கும் உண்மைதன்மையை உணர நேரம் கொடுக்கவேண்டும். போலி தேசியவாதிகள் என்று நீங்கள் சொல்லுபவர்கள் ஏதாவது நல்லது செய்தால் பாராட்டவேணும். அவர்கள் வழியில் சென்று அவர்கள் பிழை விடும்போது சுட்டிக்காட்ட வேண்டும். 

அவர்களும் விமர்சனம் வைப்பவனை எல்லாம் ஒட்டுக்குழு என்றும், துரோகி என்று  சிங்கள அரசின் கைக்கூலி என்றும் வசைபாடுதலை தவிர்க்கவேண்டும். உணமையான எதிரியை கண்டறிய எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

வெறுமனே வெறுப்பை விதைப்பதால் ஒற்றுமை வளராது. தேசியத்தை நேசிக்கும் கருத்தாளர் இடையே ஒற்றுமை இல்லை என்றால் தேசியத்துக்கு என்னாகும் என்று இரு தரப்புமே நினைதாலே முதல் வெற்றி.

எங்களில் தொடங்குவமே ஒற்றுமைக்கும் நெறிப்படுத்தலுக்கும் காத்திரமான விமர்சனத்துக்குமான முதல் படியை.

ஏதோ என்னால முடிஞ்சதை விளங்கப்படுத்தி இருக்கிறேன் இனி உங்கட இஷ்டம்.

இதை ஒரு திரியாக திறந்து மனப்பூர்வமாகவும் நாகரிகமாகவும் வெற்றி தோல்வி இல்லாமலும் குழு வாதம் இல்லாமலும் விவாதிச்சாலே இங்கே வாசிக்கும் வாசகர்களைக்கூட எம்மால் ஒருங்கிணைக்க முடியும்.

எங்கட எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி பேதமின்றி செய்யுற நல்லதுக்களை பதிவு செய்யவும் கெட்டதுகளை விமர்சிக்கவும் ஒரு நியாயமான திரி அல்லது குழு அமைப்போம்.

அவர்களும் பார்க்கட்டும், அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் ஆட்கள் இருப்பினம் தானே.

என்ன நான் சொல்லுறது.

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலில் மாண்ட போராளிகளும் மக்களும் ஒற்றையாட்சிக்காகவா போராடி மடிந்தார்கள்? 

இலங்கை ஒற்றையாட்சியை காப்பாற்றுவேன் என்று பிரிவினைக்கு ஆதரவு இல்லை என்று முள்ளிவாய்க்காலில் எடுக்கும் சத்தியபிரமாணம் மூலம் மீண்டும் அவர்களை மோசமாக அவமதிக்க போகின்றார்களா? 

காத்திரமாக செயலாற்றாது வெற்று உணர்ச்சி அரசியலைத்தான் இவர்கள் தொடரப் போகின்றனரா?

Link to comment
Share on other sites

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மண்ணில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் சீ.வி.விக்னேஷ்வரன்..!

IMG-8555_1080.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தேசிய அரசியலில் தனது பயணத்தை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த மண்ணிலிருந்து இன்று ஆரம்பித்திருக்கின்றார்.

இன்று காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறிய மண்ணுக்கு சென்ற சீ.வி.விக்னேஸ்வரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பெருமளவு ஆதரவாளர்கள் குழுவினர்,படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலிகளை செலுத்தியதுடன், சீ.வி.விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவுசுடர் முன்பாக சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார் .

https://jaffnazone.com/news/19871

தமிழ் தேசியத்தை காக்க ஸ்ரீலங்கா பொலிசாரின் குடை பிடிப்பு தேவைப்படுகிறது விக்கினேஸ்வரனுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

முள்ளிவாய்க்காலில் மாண்ட போராளிகளும் மக்களும் ஒற்றையாட்சிக்காகவா போராடி மடிந்தார்கள்? 

இலங்கை ஒற்றையாட்சியை காப்பாற்றுவேன் என்று பிரிவினைக்கு ஆதரவு இல்லை என்று முள்ளிவாய்க்காலில் எடுக்கும் சத்தியபிரமாணம் மூலம் மீண்டும் அவர்களை மோசமாக அவமதிக்க போகின்றார்களா? 

காத்திரமாக செயலாற்றாது வெற்று உணர்ச்சி அரசியலைத்தான் இவர்கள் தொடரப் போகின்றனரா?

இதெல்லாம் பாராளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தால் நடந்திருக்கும்.
முள்ளிவாய்க்காலில் செய்ததால் நடக்க வாய்ப்பில்லை 
என்ற கோட்ப்பாட்டு விதி மட்டும் எனக்கு புரியவில்லை 

Link to comment
Share on other sites

பொங்கு தமிழை  விக்கி அவர்கள்  முன்னின்று செய்த போது  ஏன் யாரும் மேலே பொங்கியது போல் பொங்கவில்லை?

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலில் நடை பெற்றது just ஒரு சம்பிரதாய நிகழ்வே. பதவி பிரமாணம் அல்ல. 

Link to comment
Share on other sites

9 minutes ago, Maruthankerny said:

இதெல்லாம் பாராளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தால் நடந்திருக்கும்.
முள்ளிவாய்க்காலில் செய்ததால் நடக்க வாய்ப்பில்லை 
என்ற கோட்ப்பாட்டு விதி மட்டும் எனக்கு புரியவில்லை 

இலங்கைப் பாராளுமன்றம் ஒற்றையாட்சியை வலியுறுத்தும் ஒரு அமைப்பு. அதில் ஒற்றையாட்சியை உறுதியாகப் பேணுவேன் என்று சத்தியப்பிரமாணம் எடுப்பதில் எந்த முரணும் இல்லை. ஆனால் அந்த பாராளுமன்றத்தினை நிராகரித்து ஒற்றையாட்சியை மறுத்து தனி நாடு கோரி போராடியதற்காக மக்களும் போராளிகளும் கொத்து கொத்தாக பலியிடப்பட்ட ஒரு நிலத்தில் நின்று கொண்டு "நான் ஒற்றையாட்சியை உறுதியாக பேணுவேன்' என்று சத்தியம் செய்வது எந்த விதத்தில் அந்த  மண்ணில் மாண்டவர்களுக்கு செய்யும் மரியாதையாக அமையும் என்று சொல்லுங்கள்?

இங்கு தேவை ஏட்டிக்கு போட்டியான அரசியலும் மக்களை உணர்ச்சி கொந்தளிப்பில் வைத்து செய்யும் அரசியலும் அல்ல. 

14 minutes ago, nunavilan said:

பொங்கு தமிழை  விக்கி அவர்கள்  முன்னின்று செய்த போது  ஏன் யாரும் மேலே பொங்கியது போல் பொங்கவில்லை?

பொங்கு தமிழ் பிரகடனமும், ஒற்றையாட்சியை பேணுவேன், தனி நாடு கேட்க மாட்டேன் என்பதும் ஒன்றா? ஆகக் குறைந்தது பொங்கு தமிழ் பிரகடனத்தில் என்ன என்ன சொல்லப்பட்டு இருக்கு என்றாவது நினைவிருக்கா?

Link to comment
Share on other sites

இது  ஒரு வகையான சீண்டும் நடவடிக்கையாகவே கோத்தா வினால் பார்க்கப்படும் 
சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் செல்பவர்கள்  திருப்பி அனுப்பபடுவார்கள்
 இனிமேல் எந்த ஒரு நினைவு தின வைபவங்களுக்கு அனுமதி கிடைக்காது 
இன்று நடைபெற இருந்த செஞ்சோலை படுகொலை நினைவு தினத்தினையே
தடுத்து நிறுத்தியுள்ளனர் போலீசார் 

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

பொங்கு தமிழ் பிரகடனமும், ஒற்றையாட்சியை பேணுவேன், தனி நாடு கேட்க மாட்டேன் என்பதும் ஒன்றா? ஆகக் குறைந்தது பொங்கு தமிழ் பிரகடனத்தில் என்ன என்ன சொல்லப்பட்டு இருக்கு என்றாவது நினைவிருக்கா?

முதலாவது தனிநாடு  முடியாது. அது சட்டமாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் என்ன சொல்லி மாவீரர்களை வணங்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன தெரியாமல் இருக்கிறோமா??

பிரபாகரன் காலத்தில் செய்யப்பட்ட  சொல்லப்பட்ட அனைத்ட்கையும் இப்போ செய்ய இனவத அரசு விடுமா? இதற்குள் மக்களுக்கு நோகும் என்பது எந்த வித தில் நியாயம்??

Link to comment
Share on other sites

4 minutes ago, nunavilan said:

சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன தெரியாமல் இருக்கிறோமா??

இந்த மூன்றையுமே பாராளுமன்ற உறுப்பினராக ஒருவர் சத்தியப்பிரமாணம் எடுக்கும் போது நிராகரிக்கின்றார். ஏனெனில் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் எடுக்கும் ஒருவர் இவற்றை நிராகரிக்கின்றேன் என்று வலியுறுத்தும் வாசகங்களை கொண்ட சத்தியத்தை தான் எடுக்க வேண்டும். அது தான் இலங்கைச் சட்டம்.

Link to comment
Share on other sites

இதை போய்  முள்ளிவாய்க்காலில் எப்படி சத்தியபிரமாணம், அல்லது சத்தியம் எடுக்க் முடியும். துல்பன் சொன்னது போல் முதல் முதல் பாரளுமன்றம் போகுமுன் சம்பிரதாயபூர்வமாக மாவீரர்களை வணங்கி செல்வது பிழையா என்பது எனது ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Robinson cruso said:

முடியுமென்றால் நான் எழுதின கருத்துக்கு பதில் எழுதுங்கள். பதில் தெரியாவிடடாள் அவன் அப்படி செய்தான், இவன் அப்படி செய்தான் எண்டு அளப்ப வேண்டாம். ஈபிடிபி , ஒட்டுக்குழு , அது இது எண்டு எழுதி அதுக்கு பின்னாலே ஒளியும் கோழைகளாக இருக்கக்கூடாது.

உங்களிடம் வினவப்பட்ட வினா அப்படியே பதில் இன்றி இருக்குது. அதை விட்டிட்டு.. மீண்டும் மீண்டும்.. சிங்கள பெளத்த பேரினாவாதத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும்.. அபிவிருத்தி என்ற போலி பிம்பத்துனூடு வக்காளத்துக்கு வாக்குவதை மட்டுமே செய்கிறீர்கள்.

இது சிங்கள பாராளுமன்றத்துக்கான சத்தியப்பிரமானம்.. கிடையாது. இது அவர்கள் கொண்ட கொள்கை மீதான உறுதிமொழி என்று எடுத்துக் கொள்ளலாம்.

சிங்கள பெளத்த பேரினாவதத்தை எதிர்கொள்ள தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி.. மீண்டும் ஒன்றிணைய வேண்டிய காலமிது. அபிவிருத்தி அதுஇதென்று போலி வாதங்களை முன் வைத்து சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு வலுப்படுத்தலுக்கு உதவி நிற்பதை தவிர்க்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறுதி மொழி எடுத்துக் கொள்பவர்கள் இலங்கையில் சட்டத்தரணிகளாக உள்ளவர்கள் தான். எனவே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

இதை போய்  முள்ளிவாய்க்காலில் எப்படி சத்தியபிரமாணம், அல்லது சத்தியம் எடுக்க் முடியும். துல்பன் சொன்னது போல் முதல் முதல் பாரளுமன்றம் போகுமுன் சம்பிரதாயபூர்வமாக மாவீரர்களை வணங்கி செல்வது பிழையா என்பது எனது ஆதங்கம்.

பிழை அல்ல. வணங்கிச் செல்வது மனதுக்கு மகிழ்வானதுதான். ஆனால் சிங்களத்திற்கு பிழையான சமிஞ்ஞையைக் கொடுக்கவோ தமிழர்களுக்கு அதீத எதிர்பார்ப்பைக் கொடுக்கவோ கூடாது என்பதுதான் நலன் விரும்பிகளின் ஆதங்கம் 🤥

11 hours ago, Robinson cruso said:

பாரு பாரு நல்ல பாரு பாயா ஸ்கோப்பு படத்தை பாரு. அவனுகள் படம் காட்டுறாங்கள் , இந்த ஏமாளிகள் பார்த்து ரசிக்கிறார்கள். ஈழத்துக்கு இன்னும் கொஞ்ச தூரம்தான் இருக்கு. வாருங்கள் மக்களே. 

குறுசோ,

உங்கள் வயது  48-52 என்பதற்குள் வருமா 😜

Link to comment
Share on other sites

Quote

பிழை அல்ல. வணங்கிச் செல்வது மனதுக்கு மகிழ்வானதுதான். ஆனால் சிங்களத்திற்கு பிழையான சமிஞ்ஞையைக் கொடுக்கவோ தமிழர்களுக்கு அதீத எதிர்பார்ப்பைக் கொடுக்கவோ கூடாது என்பதுதான் நலன் விரும்பிகளின் ஆதங்கம் 🤥

11 வருடங்களாக முள்ளிவாய்க்கால் பக்கமே ( ஒரு முறை போனவர் ஆனால் முள்ளிவாய்க்கால் முன்றலுக்கு போகவில்லை.) போகாதவர் தமிழ் மக்களுக்கு கொடுக்கும் சமிக்ஞை என்ன? அவர் அரசுக்கு கொடுக்கும் சமிக்ஞை என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.