Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சுமந்திரன்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.! - சுமந்திரன்

sumow.jpg

நான் கள்ள வாக்கினால்தான் வென்றேன் என நாளை முதல் யாராவது சொன்னால் கடும் நடவடிக்கை எடுப்பேன் .

யாராவது துணிவிருந்தால் ஊடகங்கள் முன் அதை சொல்லட்டும். அதன் பின்னர் என்ன நடக்கிறதென பார்ப்போம் என எச்சரித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனி நான் கள்ளவாக்கால்தான் வென்றேன் என சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளேன். நாளை முதல் யாராவது துணிவிருந்தால் இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக சொல்லட்டும்.

அவர்கள் அதற்குரிய விளைவை சந்திப்பார்கள்.  நான் கள்ளவாக்கினால் வென்றேன் என்பவர்கள் தாராளமாக வழக்கு தாக்கல் செய்யலாம். நான் அரச உத்தியோகத்தர்களின் நேர்மையை சந்தேகிக்கவில்லை.

எனக்கு எதிராக யாரும் வழக்கு தாக்கல் செய்தால், நான் எனது வாக்கை மீள எண்ண சம்மதம் தர தயாராக இருக்கிறேன். எனது வெற்றி நேர்மையானது. அதனால் மீள வாக்கு எண்ணுவதில் எனக்கு பிரச்சனையில்லை என்றார்.

https://vanakkamlondon.com/world/2020/08/80517/

Link to post
Share on other sites
 • Replies 123
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

1) முன்னிரவில் போயிருந்தால் மோசடியில் ஈடுபட்டு இருக்கேலாது. 2) இல்லை ...உண்மை  3) சிறிதரன் கூறியது இந்த தேர்தல் நடப்பதற்கு முன்னர்... இருவருமே தண்டிக்க பட வேண்டும். 4)  அந்த பெண் சிவனே என்று தான

ஊரில் பழுத்த அங்கிள் ஒருவரிடம் உதைப்பற்றி கேட்டேன்  ,ஆள் JPO,SPO என்று  தேர்தல் விடயங்களை கரைத்து குடித்த பேர்வழி , அவரது கூற்றுப்படி அதிகாரிகளும் முகவர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில் விருப்பு வாக்கில

இங்கு சுமந்திரனால்; தேர்தலில் வாக்கு எண்ணும்போது ஏற்படுத்தப்பட்ட மோசடி தொடர்பாகப் பொதுவெளியில் கருத்துரைக்கும் மற்றும் உரையாடும் மக்களையும் ஊடகங்களையும்  அச்சுறுத்தி ஒரு சனநாயகப் படுகொலையை மேற்கொண்டுள

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கள்ளவாக்கு சுமந்திரனுக்கு சுத்துமாத்து சுமந்திரனுக்கு உண்மையை சொன்னால் கோபம் வரத்தான் செய்யும். அதுக்காக.. மக்கள் உண்மையை பேசாமல் இருக்க முடியாது தானே.

இதென்ன ஸ்கூலா.. ரீச்சர் ரீச்சர்.. அவர் என்னை கள்ளவாக்கு.. என்று கூப்பிடுறார் ரீச்சர் என்று சொல்லி அழ.

நீங்க கள்ளவாக்கால்.. பின்கதவால் வரவில்லை என்றால்.. அதற்கான குற்றச்சாட்டுக்களில் இருந்து உங்களை விடுவிக்கும் வகையில்.... குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு அவை போலி என்று ஒரு வெளிப்படையான விசாரணையின் மூலம் நிரூபியுங்கள். அதைவிட்டிட்டு..??! இப்படியான அச்சுறுத்தல் தானா கறையபடியாத சட்டாம்பி சனநாய் அகம். 

Edited by nedukkalapoovan
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால் மறுவாக்கு எண்ணிக்கைக்கு கேட்டிருப்பார்கள், இல்லாவிட்ட்தால் நீதிமன்றம் சென்றிருப்பார்கள். இவர்களுக்கு தெரியும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு போனால் அவுட் என்று.

எனவே சுமந்திரன் எடுத்து நல்ல தீர்மானம். இவர்களை கோட்டுப்படிக்கு ஏத்தினாலதான் குறைந்தது பொய் சொல்லுவதையாவது நிறுத்துவார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

இவர்களை கோட்டுப்படிக்கு ஏத்தினாலதான் குறைந்தது பொய் சொல்லுவதையாவது நிறுத்துவார்கள்.

ஆமாம் உண்மை முக்காலும் உண்மை. அதுவும் அனுராதபுரக் கோட்டுக்கு ஏத்தினால் வாழ்க்கையிலேயே பொய்சொல்ல மாட்டார்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உடனடி மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை விட வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. அந்த இடத்தில்  அதை செய்யாதது ஏன் என்று புரியவில்லை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

உடனடி மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை விட வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. அந்த இடத்தில்  அதை செய்யாதது ஏன் என்று புரியவில்லை. 

அதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அது உண்மையாக இருக்குமாக இருந்திருந்தால் நிச்சயமாக மீள் வாக்கெண்ணிக்கைக்கு கேட்டிருப்பார்கள். இதிலிருந்தே உண்மை வெளிப்படுகின்றது. இவர்களது நோக்கமெல்லாம் ஒருவரை அவமானப்படுத்த வேண்டுமேயொழிய வேறொன்றுமில்லை. அது அதிக நாட்களுக்கு செல்லாது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஏன் தன்னை மட்;டும் கள்ள வாக்கு என்டு சொல்கிறார்கள் என்டு யோசிக்க வேணும்.

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

முதலில் ஏன் தன்னை மட்;டும் கள்ள வாக்கு என்டு சொல்கிறார்கள் என்டு யோசிக்க வேணும்.

யாரும் யாரையும் எப்படியும் சொல்லலாம். அவர்களிடம் உள்ள ஆதங்கத்தால் , தங்கள் அப்படி தோற்றுவிட்டொமே என்பதால் அப்படி சொல்லலாம். அரசியல் காரணங்களுக்காக சொல்லலாம். ஆனால் அதை நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லாவிடடாள் யார் பொய்யர் எண்டு தெரியவரும். சில வேளைகளில் கோட்டுப்படியும் ஏறவேண்டி வரும். அப்போது  தெரியும் யார் உசார் மடையர்கள் எண்டு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கணவர்களை இழந்த குடும்பத்தலைவிகளுக்கு புனர்வாழ்வுக்கு என்று கனடாவில் வாங்கிய உதவி காசை கணக்கு கேட்டால் கணக்கு காட்ட வேணும் மாறாக கணக்கு கேட்ட அவரது கட்சியை சேர்ந்த மகளிர் சங்கத்தலைவி மீது 100 கோடி மான நஷ்ட்ட வழக்கு தாக்கல் செய்த சுமத்திரன் எடுத்தது கெல்லாம் வழக்கு போடுவார் என்பது தெரியாதா ?

கள்ள வாக்கின் மூலம் வென்றவர் அதை நிரூபிக்க வேண்டிய கடமை அவருக்குத்தான் இருக்கு அதைவிட்டு வழக்கு தாக்கல் செய்வன்  என்று சொல்வது அதுக்கு வக்காலத்து வேண்டுவதும் கேவலம் என்பதை உணரமுடியாத  மனித இனம் பூமியில் வாழ்வது வெட்கக்கேடான விடயம் .

கள்ளவாக்கு சுமத்திரன் மீது  நாளை கேட்கப்படும் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரியாது விட்டால் தன்னை மான நஷ்ட்ட படுத்தி விட்டார் எதிராளி என்று வழக்கு போட்டாலும் போடுவார் இந்த கள்ள வோட்டு சுமத்திரன் .

15 minutes ago, Robinson cruso said:

சில வேளைகளில் கோட்டுப்படியும் ஏறவேண்டி வரும். அப்போது  தெரியும் யார் உசார் மடையர்கள் எண்டு.

உங்கடை வெருட்டல்கள் இனி எடுபடாது .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

கணவர்களை இழந்த குடும்பத்தலைவிகளுக்கு புனர்வாழ்வுக்கு என்று கனடாவில் வாங்கிய உதவி காசை கணக்கு கேட்டால் கணக்கு காட்ட வேணும் மாறாக கணக்கு கேட்ட அவரது கட்சியை சேர்ந்த மகளிர் சங்கத்தலைவி மீது 100 கோடி மான நஷ்ட்ட வழக்கு தாக்கல் செய்த சுமத்திரன் எடுத்தது கெல்லாம் வழக்கு போடுவார் என்பது தெரியாதா ?

கள்ள வாக்கின் மூலம் வென்றவர் அதை நிரூபிக்க வேண்டிய கடமை அவருக்குத்தான் இருக்கு அதைவிட்டு வழக்கு தாக்கல் செய்வன்  என்று சொல்வது அதுக்கு வக்காலத்து வேண்டுவதும் கேவலம் என்பதை உணரமுடியாத  மனித இனம் பூமியில் வாழ்வது வெட்கக்கேடான விடயம் .

கள்ளவாக்கு சுமத்திரன் மீது  நாளை கேட்கப்படும் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரியாது விட்டால் தன்னை மான நஷ்ட்ட படுத்தி விட்டார் எதிராளி என்று வழக்கு போட்டாலும் போடுவார் இந்த கள்ள வோட்டு சுமத்திரன் .

உங்கடை வெருட்டல்கள் இனி எடுபடாது .

அப்போ கோட்டு, நீதிபதி, சடடதரணி எல்லாம் அழகு பார்க்கவா வைத்திருக்கிறார்கள்? நீங்கள் பொய் சொல்லுவீர்கள், மற்றவர்களை அவமானப்படுத்துவீர்கள் அதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.

நீங்கள் உங்களை நிரபராதி என்று நிரூபிக்கவும் மாடடீர்கள், மத்தவனை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டாமென்றும்  கூறுவீர்கள். எங்கே படித்தீர்கள் இந்த சடடமெல்லாம்? எல்லாரயும் ஏமாத்தலாம் எண்டு நினைக்க வேண்டாம்.

உங்களால், அல்லது நீங்கள் வக்காலத்து வாங்குபவர்களால் முதலில் நிரபராதி என்று நிரூபிக்க முயட்சியுங்கள். சும்மா பொய் சொல்லி ஏமாத்தலாமெண்டு நினைக்காதீர்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஊரில் பழுத்த அங்கிள் ஒருவரிடம் உதைப்பற்றி கேட்டேன்  ,ஆள் JPO,SPO என்று  தேர்தல் விடயங்களை கரைத்து குடித்த பேர்வழி , அவரது கூற்றுப்படி அதிகாரிகளும் முகவர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில் விருப்பு வாக்கில் செமையாக ஜில் மார்ட் காட்டலாமாம், அதாவது கட்சிக்கு மட்டும் ,மற்றும் ஒரு விருப்பு இலக்க  புள்ளடி ,மற்றும் இரு விருப்பு இலக்கங்களை மட்டும் புள்ளடியிட்டிருக்கும் வாக்குசீட்டுகளை அபேஸ் பண்ணினால் மெதுவாக சுத்துமாத்தின் இலக்கத்தில் புள்ளடியை இட்டுவிட்டு என்ன வேண்டியதுதான், அதற்க்கு பிறகு எத்தனை முறை மீள எண்ணினாலும் அது அவரது விருப்பு வாக்குத்தான், அந்த தைரியத்தில் தான் சுத்துமாத்திரன் சுழண்டடிக்கிறார்       

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கள்ளன் எண்டு கத்துவோம்,  அதை தடுக்க சுமந்திரன் யார்? இலங்கை சனநாயக குடியரசில் அதற்கு கூட உரிமையில்லையா?. நாங்களெல்லாம் சுயமமாக சிந்திக்க தெரியாத வீசில்லடிச்ச்சான் குஞ்சுகள்.   

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

எனது கருத்துக்கு மறுப்பு கருத்து இடுவது உங்கள் உரிமை அதை யாரும் மறுக்க முடியாது .கணக்கு கேட்டால் கணக்கு காட்டுவதில் என்ன சிக்கல் ?

உங்கள் கைகள்  சுத்தம் என்றால் நென்சில்  தில்  இருந்தால் மறுவாக்கு  பதிவுக்கு கோரிக்கைக் விட்டு இருக்கணும் அதைவிட்டு ஆகாசத்தில் போன காக்க கள்ளவோட்டு சுமத்திரனின் வெள்ளைச்சட்டை மீது ஆய் போனாலும் வழக்கு போடுவம்  என்று கோரஸ் பாடக்கூடாது .

பாதிக்கப்படடவந்தான் சடடத்தை நாடுவான் உண்மையாக இருந்தால். இல்லாவிடடாள் இப்படியான பேய்காட்ட்டால்  கதைகள்தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, zuma said:

நாங்கள் கள்ளன் எண்டு கத்துவோம்,  அதை தடுக்க சுமந்திரன் யார்? இலங்கை சனநாயக குடியரசில் அதற்கு கூட உரிமையில்லையா?. நாங்களெல்லாம் சுயமமாக சிந்திக்க தெரியாத வீசில்லடிச்ச்சான் குஞ்சுகள்.   

கள்ளன் வேட்டியை அவுட்டு போட்டு போடா கள்ளா  என்று சொன்னால் சுமத்திரன் கைகள்  சுத்தமெண்டால் பொத்திக்கொண்டு அமைதியாய் போவதுதானே ?

உண்மை என்னவென்றால் இப்படி கஷ்ட்பட்டு கள்ளவோட்டு மூலம் வென்றும் பலனில்லை காரணம் மகிந்த அரசு எடுத்த மூன்றில் இரண்டு அங்கு சம்மியின் அலறல் காது  குடுத்து கேட்க முடியலை முதலில் புதிய அரசுக்கு ஆதரவு கொடுப்பம் என்றார்  கொழும்பு அமைதியாகவே இருந்தது வந்த பங்களா பறி போக போவுது என்றவுடன் இன்று சர்வதேசம் எங்களுடன் இருக்கு ஏதோ  வெருட்டெல்லாம் இன்று காலையில் அவங்கள்  சிரிச்சு போட்டு மற்ற வேலையை பார்க்க போய்  விடுவார்கள் அதே கதைதான் சும்முக்கும் அந்த கடுப்பில் தனக்குத்தான் சட்டம் தெரிந்தது போல் வழக்குகள் அராஜகமாக  போட்டு கொண்டு இருக்கிறார் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

கள்ளவாக்கு சுமந்திரனுக்கு சுத்துமாத்து சுமந்திரனுக்கு உண்மையை சொன்னால் கோபம் வரத்தான் செய்யும். அதுக்காக.. மக்கள் உண்மையை பேசாமல் இருக்க முடியாது தானே.

இதென்ன ஸ்கூலா.. ரீச்சர் ரீச்சர்.. அவர் என்னை கள்ளவாக்கு.. என்று கூப்பிடுறார் ரீச்சர் என்று சொல்லி அழ.

நீங்க கள்ளவாக்கால்.. பின்கதவால் வரவில்லை என்றால்.. அதற்கான குற்றச்சாட்டுக்களில் இருந்து உங்களை விடுவிக்கும் வகையில்.... குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு அவை போலி என்று ஒரு வெளிப்படையான விசாரணையின் மூலம் நிரூபியுங்கள். அதைவிட்டிட்டு..??! இப்படியான அச்சுறுத்தல் தானா கறையபடியாத சட்டாம்பி சனநாய் அகம். 

அந்த மனிதன் களவாகப் போடப்பட்ட வாக்குகளால்தான் வென்றார் என்பவர்கள் ஏன் நீதிமன்றை நாடக்கூடாது.🤔

அதனைச் செய்யாமல் கூக்குரலிடுபவர்கள் எல்லோருமே ஊரில் மதகுகளின் மேலிருந்தும் வாசகர்சாலைச் சுவர்களின் மேலிருந்தும் போவோர் வருவோருக்கு கூக்க்குரலிட்டு (கூவடித்தல்)  நையாண்டி செய்யும் வெற்றுப்பயல்களின் செயல்களிற்கு ஈடானவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து ☹️

3 hours ago, tulpen said:

உடனடி மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை விட வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. அந்த இடத்தில்  அதை செய்யாதது ஏன் என்று புரியவில்லை. 

வீதி வீதியாக அழுது புலம்புவதற்குத்தான் எமது தலைமைகள் என்போர் தகுதியானவர்கள் 😏

2 hours ago, சுவைப்பிரியன் said:

முதலில் ஏன் தன்னை மட்;டும் கள்ள வாக்கு என்டு சொல்கிறார்கள் என்டு யோசிக்க வேணும்.

இதில் என்ன யோசிக்க வேண்டியுள்ளது. நாங்களேல்லோரும் நாகரீகமடைந்த இனத்தின் உறுப்பினர்கள் அல்லவா 😀 சொல்வதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும். 

அதனால் அந்த மனிதன் யோசிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறார் போலும் 😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

12 minutes ago, Kapithan said:

அந்த மனிதன் களவாகப் போடப்பட்ட வாக்குகளால்தான் வென்றார் என்பவர்கள் ஏன் நீதிமன்றை நாடக்கூடாது.🤔

உண்மையிலேயே இது நையாண்டி இல்லையா?

நீதி அரசை கையாளும் பாராளமன்ற தேர்தலிலேயே மோசடி 
இதைப்போய் நீதிமன்றில் கேட்க சொல்கிறீர்களே 
வடிவேலு மாதிரி தெரியவில்லையா?

வழக்குப்போட்டு நீதிமன்று போனவுடன் 
ஓ ஓகே நீதிக்கு வந்திருக்கிறீர்களா உள்ள வாங்கோ 
என்று கூப்பிட்டு நீதிவழங்கும் நாடகவா இலங்கை இருக்கு? 

சுமந்திரனை கொண்டுவந்ததே சிங்களவன். 

தமிழ்ப்படங்களில் 
பாலியல் துன்புறுத்தலுக்கு வில்லனின் மகனால் பாதிக்க படடவரை 
மகனின் தந்தையான பெரிய வில்லனிடம் போக சொலவதுபோல் இருக்கு 

யாராவது புத்தி இருக்கிறவன் போவானா? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஊரில் பழுத்த அங்கிள் ஒருவரிடம் உதைப்பற்றி கேட்டேன்  ,ஆள் JPO,SPO என்று  தேர்தல் விடயங்களை கரைத்து குடித்த பேர்வழி , அவரது கூற்றுப்படி அதிகாரிகளும் முகவர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில் விருப்பு வாக்கில் செமையாக ஜில் மார்ட் காட்டலாமாம், அதாவது கட்சிக்கு மட்டும் ,மற்றும் ஒரு விருப்பு இலக்க  புள்ளடி ,மற்றும் இரு விருப்பு இலக்கங்களை மட்டும் புள்ளடியிட்டிருக்கும் வாக்குசீட்டுகளை அபேஸ் பண்ணினால் மெதுவாக சுத்துமாத்தின் இலக்கத்தில் புள்ளடியை இட்டுவிட்டு என்ன வேண்டியதுதான், அதற்க்கு பிறகு எத்தனை முறை மீள எண்ணினாலும் அது அவரது விருப்பு வாக்குத்தான், அந்த தைரியத்தில் தான் சுத்துமாத்திரன் சுழண்டடிக்கிறார்       

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால் வாக்கு எண்ணும்போது ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதிகளும் பிரசன்னமாயிருப்பர் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எல்லோரும் குறட்டை விட்டுக்கொண்டா இருந்தார்கள் என்றொரு கேள்வி எழுமல்லவா ? அதற்கான பதில் என்ன 😀

(அதிகாரிகளும் இதற்கு உடந்தை என்று கூறுகிறீர்கள் என்பதை மனதிலிறுத்துங்கள் ☹️)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன டவுட்டு 
ஐயாவை வெள்ளை வாக்கு சுமந்திரன் என்று அழைக்கலாமா?
அதில் குடிமன்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களின் எதிர்ப்பை பார்த்து ஒருவர் கூறியிருக்கிறார், நீங்கள் தோற்றுவிடுவீர்கள் என்று, அப்போது ஐயா சொல்லியிருக்கிறார் உறுதியாக வெல்வேன் என்று!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

உண்மையிலேயே இது நையாண்டி இல்லையா?

நீதி அரசை கையாளும் பாராளமன்ற தேர்தலிலேயே மோசடி 
இதைப்போய் நீதிமன்றில் கேட்க சொல்கிறீர்களே 
வடிவேலு மாதிரி தெரியவில்லையா?

வழக்குப்போட்டு நீதிமன்று போனவுடன் 
ஓ ஓகே நீதிக்கு வந்திருக்கிறீர்களா உள்ள வாங்கோ 
என்று கூப்பிட்டு நீதிவழங்கும் நாடகவா இலங்கை இருக்கு? 

சுமந்திரனை கொண்டுவந்ததே சிங்களவன். 

தமிழ்ப்படங்களில் 
பாலியல் துன்புறுத்தலுக்கு வில்லனின் மகனால் பாதிக்க படடவரை 
மகனின் தந்தையான பெரிய வில்லனிடம் போக சொலவதுபோல் இருக்கு 

யாராவது புத்தி இருக்கிறவன் போவானா? 

ஆக,

நாங்கள் புழுதி வாரித் தூற்றிக்கொண்டே இருப்போம். உருப்படியாக எதனையும் செய்யமாட்டோம். 

😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எனது கருத்துக்கு மறுப்பு கருத்து இடுவது உங்கள் உரிமை அதை யாரும் மறுக்க முடியாது .கணக்கு கேட்டால் கணக்கு காட்டுவதில் என்ன சிக்கல் ?

உங்கள் கைகள்  சுத்தம் என்றால் நென்சில்  தில்  இருந்தால் மறுவாக்கு  பதிவுக்கு கோரிக்கைக் விட்டு இருக்கணும் அதைவிட்டு ஆகாசத்தில் போன காக்க கள்ளவோட்டு சுமத்திரனின் வெள்ளைச்சட்டை மீது ஆய் போனாலும் வழக்கு போடுவம்  என்று கோரஸ் பாடக்கூடாது .

சுமந்திரன் கையாடல் செய்துவிட்டார் என்கிறீர்கள். வாக்கு மோசடி செய்துவிட்டார் என்கிறீர்கள்.

குற்றம் சாட்டுபவர்தான் அதை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் என்பது நீதிமன்ற நடைமுறை. 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில்தான் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். 

உங்கள் கூற்றுப்படி சுமந்திரன் ஒரு பயங்கரவாதி 

😂😂

1 hour ago, பெருமாள் said:

கள்ளன் வேட்டியை அவுட்டு போட்டு போடா கள்ளா  என்று சொன்னால் சுமத்திரன் கைகள்  சுத்தமெண்டால் பொத்திக்கொண்டு அமைதியாய் போவதுதானே ?

உண்மை என்னவென்றால் இப்படி கஷ்ட்பட்டு கள்ளவோட்டு மூலம் வென்றும் பலனில்லை காரணம் மகிந்த அரசு எடுத்த மூன்றில் இரண்டு அங்கு சம்மியின் அலறல் காது  குடுத்து கேட்க முடியலை முதலில் புதிய அரசுக்கு ஆதரவு கொடுப்பம் என்றார்  கொழும்பு அமைதியாகவே இருந்தது வந்த பங்களா பறி போக போவுது என்றவுடன் இன்று சர்வதேசம் எங்களுடன் இருக்கு ஏதோ  வெருட்டெல்லாம் இன்று காலையில் அவங்கள்  சிரிச்சு போட்டு மற்ற வேலையை பார்க்க போய்  விடுவார்கள் அதே கதைதான் சும்முக்கும் அந்த கடுப்பில் தனக்குத்தான் சட்டம் தெரிந்தது போல் வழக்குகள் அராஜகமாக  போட்டு கொண்டு இருக்கிறார் .

நான் உங்களைக் கள்ளன் வேட்டியை அவிழ்த்துப்போட்டுப் போடா என்று கத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள் 😀

அமைதியாகப் போவீர்கள் என்றால் நீங்கள் கூருவது சரி 🤔

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சுமந்திரன் கையாடல் செய்துவிட்டார் என்கிறீர்கள். வாக்கு மோசடி செய்துவிட்டார் என்கிறீர்கள்.

குற்றம் சாட்டுபவர்தான் அதை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் என்பது நீதிமன்ற நடைமுறை. 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில்தான் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். 

உங்கள் கூற்றுப்படி சுமந்திரன் ஒரு பயங்கரவாதி 

😂😂

இங்கு குற்றம் சாட்டுபவர் ஒரு அபலைப்பெண்மணி .தட்டிப்பறிக்கும் அண்டாம்காக்கை கூட கருணை இருக்கும் இங்கு கள்ளவாக்கு சுமத்திரனுக்கு அது கூட கிடையாது .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

இங்கு குற்றம் சாட்டுபவர் ஒரு அபலைப்பெண்மணி .தட்டிப்பறிக்கும் அண்டாம்காக்கை கூட கருணை இருக்கும் இங்கு கள்ளவாக்கு சுமத்திரனுக்கு அது கூட கிடையாது .

அபலைப் பெண் என்பதா அல்லது மோசடி என்பதா விவாதத்திற்கான புள்ளி 🤔

மோசடி நடைபெற்றிருக்கிறது என்று அவர் கருதினால் உடனடியாகவே அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுதான் ச்ரியான அணுகுமுறை. அவரின் மகளும் சட்டத்துறையிலிருப்பவர். நாங்கள் அறிவுரை கூறவேண்டிய இடத்தில் அவர்கள் இருப்பதாக நான் நம்பவில்லை. 🙂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

நான் உங்களைக் கள்ளன் வேட்டியை அவிழ்த்துப்போட்டுப் போடா என்று கத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள் 😀

அமைதியாகப் போவீர்கள் என்றால் நீங்கள் கூருவது சரி 🤔

நான் ஒரு அபலைப்பெண்ணின் வாக்குகளை களவெடுக்கவில்லையே ?

அப்படி யாராவது  சொன்னால் என் கைகள் சுத்தம் என்று அவ்விடத்திலே மறுபடியும் எண்ணி நிரூபித்து இருப்பன் .

எல்லாவற்றிக்கும் மேல் மிகவும் முக்கியமானது கொண்ட கொள்கையும்  சொன்ன வார்த்தையும் மாற்ற கூடாது அப்படி ஒரு கொள்கை இழப்போ அல்லது வாக்கு தவறினாலோ அதனால் பலபேர் பாதிக்கப்படுமானால் இறப்புத்தான் முடிவு .

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா; சென்னையில் 1,036 பேர் பாதிப்பு: 4,929 பேர் குணமடைந்தனர் தமிழகத்தில் கரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்   சென்னை தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (அக். 18) வெளியிட்டுள்ள விவரங்கள்: "தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 2,319 பேர். பெண்கள் 1,595 பேர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 121 பேர். பெண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 247 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 32 பேர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 25 ஆயிரத்து 67 பேர். 13-60 வயதுடையவர்கள் 5 லட்சத்து 76 ஆயிரத்து 333 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 86 ஆயிரம் பேர். இன்று 90 ஆயிரத்து 286 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 89 லட்சத்து 46 ஆயிரத்து 566 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 88 ஆயிரத்து 643 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 86 லட்சத்து 96 ஆயிரத்து 455 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று தனியார் மருத்துவமனைகளில் 29 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 27 பேர் என 56 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய் அல்லாதவர்கள் ஒருவர். இணை நோய் உள்ளவர்கள் 55 பேர். இன்று மட்டும் 4,929 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 39 ஆயிரத்து 121 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 126 என, 192 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. சென்னை நிலவரம் இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,036 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளது. இன்று, 1,359 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,520 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 12 ஆயிரத்து 583 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்". இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. https://www.hindutamil.in/news/tamilnadu/592376-3-914-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today-3.html
  • பொதுச் சுகாதார அவசர சட்டம் தனிநபர் வரைவு; பாராளுமன்றில் நேற்று சமர்ப்பித்தார் சுமந்திரன் Bharati October 21, 2020பொதுச் சுகாதார அவசர சட்டம் தனிநபர் வரைவு; பாராளுமன்றில் நேற்று சமர்ப்பித்தார் சுமந்திரன்2020-10-21T06:48:54+05:30 FacebookTwitterMore பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்ட வரைவில் பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கும் பொதுச் சுகாதார அவசர சபை அமைப்பதற்குமான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. பொதுச் சுகாதார அவசரகால நிலையின் இருப்பு அல்லது உடனடித் தன்மையைக் கருத்தில் கொண்டு, பொதுச் சுகாதார நலன்களுக்காக அதைச் செய்வது மிகவும் பயனுள்ளது. கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில் நாட்டில் எதிர்காலத்தில் அதை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை சட்டபூர்வமாக வழங்குவது பயனுள்ளது என்று அதில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஒரு பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டால், பொதுச் சுகாதார அவசர நிலைப் பேரவை என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பை உருவாக்க முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுகாதார, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல அமைச்சுக்களைப் பொறுப்பானதாக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொதுச் சுகாதார அவசரகால சட்டத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்துபூர்வ ஆலோசனையின் பேரில் அமைச்சரால் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஏற்பாடுகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/81604
  • தொடல் கலைப் பண்பாட்டு மையம் அடவு கலைக் குழு தில்லி தமிழ் சங்கம் - புது தில்லியில் நிகழ்த்திய பறையாட்டம் 01 நன்றி: திரு. அலங்காநல்லூர் வேலு ஆசான் அவர்கள்.    
  • நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா; மினுவாங்கொடை தொற்றாளர்கள் 2,342 ஆக அதிகரிப்பு Bharati October 21, 2020நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா; மினுவாங்கொடை தொற்றாளர்கள் 2,342 ஆக அதிகரிப்பு2020-10-21T06:48:14+05:30 FacebookTwitterMore நாட்டில் நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய 120 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள எண்ணிக்கை 2,342 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,805 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 2,335 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதுமுள்ள 21 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 3,457 பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்துமுள்ளனர். அதேநேரம் வைரஸ் தொற்று சந் தேகத்தின் பேரில் 297 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத் தக்கது. https://thinakkural.lk/article/81613 களுபோவில வைத்தியாசாலை ஊழியருக்கு கொரோனா-மினுவாங்கொடை பரவலுடன் தொடர்பில்லாதவர் Rajeevan Arasaratnam October 21, 2020களுபோவில வைத்தியாசாலை ஊழியருக்கு கொரோனா-மினுவாங்கொடை பரவலுடன் தொடர்பில்லாதவர்2020-10-21T10:21:08+05:30 FacebookTwitterMore கொழும்பு களுபோவில வைத்தியாசாலையின் பணியாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பணியாளர் 15ம் திகதி பணியிலிருந்தவேளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையி;ன் போது அவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் தெகிவளையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளி கொஸ்கம கொவிட்19 கிசிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கும் மினுவாங்கொட பரவலிற்கும் தொடர்பில்லை என வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 16 ஊழியர்களுடன் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/81674
  • தன்னம்பிக்கை தம்பதிகளின் India's 1st வல்லாரை Mojito | Transgender Food Shop | Tamil Food Review  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.