Jump to content

வீரமுனை படுகொலை நினைவு நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீரமுனை படுகொலை நினைவு நாள்

August 12, 2020

dfg-32-800x600.jpg

வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக இன்று (12) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம்  வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து இன்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்  மற்றும் உள்ளுராட்சி தவிசாளர்கள் உறுப்பினர்கள்  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த யுத்த சூழ்நிலையில் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு,மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மர்மக் குழுவினரால் 400க்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ்வஞ்சலி செலுத்திய நிகழ்வினை சம்மாந்துறை  காவல்துறையினா்  பிரசன்னமாகி  பாதுகாப்பினை வழங்கி  இருந்ததை அவதானிக்க முடிந்தது #வீரமுனை  #படுகொலை #நினைவுநாள் #அஞ்சலி
 

https://globaltamilnews.net/2020/148598/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.