Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் அதிக இடங்கள்.

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் அதிக இடங்கள்.

இன்று உயர்தர பெறுபேறுகள் வெளிவந்தன. அத்துடன் பல்கலைக்கழக அனுமதி விபரங்களும் வெளியிடப்பட்டன. பிரித்தானியாவில், பல்கலைக்கழக அனுமதி, பெறுபேறு முன்கணிப்பு ஊகம் மூலமே வழக்கப்பட்டு, பெறுபேறு நாளில், பெறுபேருக்கு அமைய இறுதி உறுதி செய்யப்படும்.

இலங்கையினை போல பெறுபேறு நாள் வரை காத்திருந்து, ஒரு வருடம் வீணாக்காமல், பரீட்சை முடிந்த மூன்றாவது மாதத்தில் பல்கலைக்கழகம்.

இம்முறை வெளிநாட்டு மாணவர்கள் இல்லாத படியால், பலருக்கு, குறிப்பாக கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட், இம்பீரியல் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்துள்ளது. பல தமிழ் மாணவர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

சிலருக்கு கவலை தான். காரணம், இந்த பெறுபேறுகள், இரண்டாம் தவணை மாதிரி பரீட்சை பெறுபேறுகள், பாடசாலையின் சிபாரிசுகள் பொறுத்தே வந்துள்ளன.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியா படிக்கிற பிள்ளைகளுக்கு அல்லது பாடசாலை மட்ட பரீட்சைகளில் விடையை தேடித் தெரிந்து கொண்டு பரீட்சை எழுதி வெற்றி கொண்ட மாணவர்களுக்கு இதில் சாதகம் உண்டு.

கடைசி பரீட்சையில் பார்ப்பம் என்றிட்டு இருந்தவை பாடு பிரச்சனை தான். மேலும்.. பல முன்னணிப் பாடசாலைகள் இறுதிப் பரீட்சை நோக்கி மாணவர்களை தயார் செய்வதால்.. இடைநிலை பரீட்சைகளில் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. அவர்களிடம் இம்முறை பெறுபேற்று வீழ்ச்சி உள்ளதால்.. ராங் பிரச்சனை வரும் என்றதால்.. கோபத்தை வெளியிட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

பாடசாலையின் சிபாரிசுகள் பொறுத்தே வந்துள்ளன.

இல்லை, மிகவும் தாக்கமாக உள்ளது. 

40% மாணவர்கள் இறக்கப்பட்ட பெறுபேறு என்பது பாதித்துள்ளது எனபது, மிகவும் unfair ஆனா தாக்கமாகும்.   

தனிப்பட்ட உதாரணங்கள், ஒரே பாடசாலையில் 

பாடசாலை  கொடுத்தது -B, பெறுபேறு - A*
பாடசாலை  கொடுத்தது -C , பெறுபேறு - U 

மற்றும், பாடசாலை எனது இடத்தில் உள்ளது (deprived to most affluent areas) என்பதும் பெறுபேறு ஏற்றப்படத்திலும், இறக்கப்படத்திலும் பொதுவாக பங்கு வகித்து உள்ளது. இது Guardian பத்திரிகையில் வெளிப்படையாகவே வந்துள்ளது. 

கார்டியன் இல் வந்த ஆய்வின், கடைசி பந்நதியை மட்டும் இணைக்கிறேன்,பொருளாதார அடி மட்டத்தில் இருப்பர்வர்கள் பற்றிய  Ofqual இன் பொதுவான பார்வையை அறிவதற்கு.  

Michelle Meadows of Ofqual said that the final grades received by students showed “simply no evidence of systematic bias” in this year’s results. “It’s important to remember that what the research literature shows on A-level predictions for university entrance is that there is a tendency to be more generous for students of lower socioeconomic status,” she said.

https://www.theguardian.com/education/2020/aug/13/england-a-level-downgrades-hit-pupils-from-disadvantaged-areas-hardest

Edited by Kadancha
amend
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kadancha said:

இல்லை, மிகவும் தாக்கமாக உள்ளது. 

40% மாணவர்கள் இறக்கப்பட்ட பெறுபேறு என்பது பாதித்துள்ளது எனபது, மிகவும் unfair ஆனா தாக்கமாகும்.   

தனிப்பட்ட உதாரணங்கள், ஒரே பாடசாலையில் 

பாடசாலை  கொடுத்தது -B, பெறுபேறு - A*
பாடசாலை  கொடுத்தது -C , பெறுபேறு - U 

மற்றும், பாடசாலை எனது இடத்தில் உள்ளது (deprived to most affluent areas) என்பதும் பெறுபேறு ஏற்றப்படத்திலும், இறக்கப்படத்திலும் பொதுவாக பங்கு வகித்து உள்ளது. இது Guardian பத்திரிகையில் வெளிப்படையாகவே வந்துள்ளது. 

ஒரு பாடசலையின் அதிபருடன் பேசினேன்.

பல பாடசாலைகள் நேர்மையின்றி, தமது பாடசாலை மாணவர்கள் தரத்தினை அதிகமாக உயர்த்தி அனுப்பி வைத்துள்ளாராம்.

ஆகவே, அந்த பாடசாலையின் பெறுபேறு வரலாறு, மாணவர் வாழும் சூழல் உட்பட பல விடயங்கள் மென்பொருளினால் கருத்துக்கு எடுக்கப்பட்டுள்ளதாம்.

சில பாடசாலைகளில் மாணவரின் போனவருட மாதிரிகள் கூட கேட்கப்பட்டதாம்.

உதாரணமாக போன வருடங்களில் 60% பி, கணிதத்தில் எடுக்கும் ஒரு பாடசாலை, இந்த வருடம் 60% ஏ* என்று கொடுத்திருந்தால், நிச்சயம் குறையும்.

அதுபோல க்ராமர் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் நல்ல பெறுபேறுகள் பெறுவார்கள். காரணம் அந்த பாடசாலையின் முன்னைய பெறுபேற்று வரலாறு.

அரசுக்கும் வேறு வழி இல்லை. கொரோனா மேலே பழி போடுவதை தவிர.

தமிழ் நாட்டு போஸ்டர் ஒன்று பார்த்தேன். ஹை... நான் 10வது பாஸ்.  நீயாவது பாஸ் பண்ணுவதாவது என்ற ஆசிரியர் கேலிக்கு மத்தியிலும், பாஸ் ஆக்கிய, கொரோனாவுக்கும், முதல்வர் ஐயாவுக்கும், நன்றி, நன்றி. 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

https://www.msn.com/en-gb/news/uknews/equalities-body-warns-it-may-step-in-after-a-level-downgrades-in-england/ar-BB17VL7G?li=BBoPRmx&ocid=mailsignout

Equalities body warns it may step in after A-level downgrades in England

Richard Adams and Heather Stewart
 
Britain’s equalities watchdog has warned it will intervene in the controversy over the handling of A-level results in England after students from disadvantaged backgrounds were worst hit while private school pupils benefited the most.

The release of A-level results on Thursday revealed that the largest share of rises in A* and A grades in England had gone to independent schools, with two privately educated pupils receiving an extra A* for every one at a state secondary.

Nearly 40% of teachers’ recommended grades – 280,000 in total – were downgraded, it was confirmed. Deprived pupils were more likely to have seen those grades lowered by Ofqual’s algorithm, and the gap in results between pupils on free school meals and better-off pupils widened compared with 2019.

While grades improved overall, claims of bias triggered an outcry from headteachers and students, some of whom reported dropping from a predicted A to an E or from a C to a U.

At Wales high school, Rotherham, where 84% of students saw their teacher-assessed grades lowered, 18-year-old Anna Hogarth said: “In years to come we’re always going to be the year that didn’t count. The pandemic year.”

Gavin Williamson, the education secretary, acknowledged the danger that an “exceptionally high-performing child in a low-performing school” would not get their expected grades. But Boris Johnson later insisted the results were “robust” and “dependable”.

More than 200,000 sixth formers in England received their results on Thursday, decided for the first time this year by a statistical model developed by Ofqual, the exams regulator, to replace exams cancelled during lockdown.

In a rare intervention, Rebecca Hilsenrath, chief executive of the Equality and Human Rights Commission (EHRC), said Ofqual must “remove bias” and allow students to appeal directly if they feel their A-level grades have been unfairly reduced.

The EHRC has told Ofqual it must mitigate against any “potential negative affect” of its process on ethnic minorities and disabled children, as well as those from deprived backgrounds.

“Ofqual should be clear about the impact of the algorithm used in the standardisation model and the steps taken to remove bias and take into account equality,” Hilsenrath said.

“To better understand any disparities for different protected groups, Ofqual must publish a full breakdown of the differences between teacher assessed grades and the final grade. Students who have been downgraded must be able to appeal directly if they believe their grades are unfair. We will continue to discuss this with Ofqual and consider all our powers so that ethnic minority and disabled children, for example, are treated fairly in this process.”

Scotland was forced into a reversal this week after a quarter of exam results were downgraded from teachers’ recommendations. All 124,000 changed results were reinstated, it was announced on Tuesday.

Labour’s leader, Keir Starmer, said on Thursday that “something has obviously gone horribly wrong with this year’s [English] exam results” and a Scotland-style U-turn should not be ruled out.

“Nearly 40% of young people have had their grades marked down and that’s thousands of young people whose opportunities could have been dashed. Parents, teachers and young people are rightly upset, frustrated and angry about this injustice,” he said.

“The system has fundamentally failed them. The government needs to urgently rethink. We need to guarantee the right to individual appeals, the fee for appeals waived and nothing to be ruled out, including the U-turn that was forced on the Scottish government”.

Williamson suggested that exam boards responsible for administering the A-levels should encourage schools to appeal against their results if they feared disadvantaged candidates were affected.

Johnson insisted he had confidence in Williamson, prompting Labour’s deputy leader, Angela Rayner, to respond on Twitter: “Nobody else does.” Speaking during a trip to Belfast, the prime minister added: “Let’s be in no doubt about it: the exam results that we’ve got today are robust, they’re good, they’re dependable for employers.”

But many headteachers and education experts have joined the chorus of complaints about the way A-levels had been decided, with some pointing to flaws in Ofqual’s system that favoured private schools in particular.

Analysis by the FFT Education Datalab showed that the quirk in Ofqual’s method – which relied heavily on teacher assessments for grading very small classes with up to five pupils – resulted in higher grades for less popular subjects such as German or music, and for schools that had much smaller average course entries.

About one in 10 A-level entries from independent schools were in subjects in which the schools entered just five or fewer students. In contrast, state academies – the largest school type – had just one entry in 20 within small classes. Sixth form and further education colleges had A-level course sizes more than three times as big as the average private school.

Ofqual’s data showed that 49% of entries by students at private schools in England received an A grade or above, compared with 20% awarded to students at state academies or comprehensive schools.

Natalie Perera, executive director of the Education Policy Institute, said: “There are early signs that the results process may have had a disproportionately negative impact on the most disadvantaged students. It is crucial that we establish whether this is the case as new data emerges.”

Sammy Wright, a member of the government’s Social Mobility Commission and the vice-principal of Southmoor Academy in Sunderland, said: “The Social Mobility Commission believes the process of calculating grades for these students has led to significant unfairness. We therefore call on Ofqual to allow every school to submit whole-school appeals using their own evidence where they see fit, and not only in exceptional circumstances.

“We recognise that allocating grades this year has been a uniquely difficult task. But we see that there are many inequalities in the process.”

A string of headteachers were also joining the protest, including the headteacher of Sir William Borlase’s grammar school, a leading state school in Buckinghamshire, who said she was “bitterly disappointed that the system has let many of our students down”.

“We will challenge this decision to ensure students from our school and students from schools across the area and country receive the results they deserve,” Kay Mountfield, the school’s head, said.

But the day did include many high points for pupils, especially those who gained from Ofqual’s allocation of more A* and As, with girls overtaking boys in gaining the top grades in England.

Brampton Manor Academy, a state school in east London with a highly selective sixth form, was celebrating its pupils securing 47 confirmed places at Oxford and Cambridge, up from 39 last year.

Ian Bauckham, an Ofsted board member, said results were up “across the board”, including for disadvantaged candidates. “Any statistical model, however well intentioned it is and however good the overall outcomes are, is going to produce anomalies,” he said.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Catholic schools, private schools இதன் மூலம் அதிகளவு இடங்களை எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.. இல்லையா?  

அத்துடன், சிறுபாண்மை இனத்தை சார்ந்தவர்களை கூட இந்த முறை பாதித்திருக்கூடிய சாத்தியங்களும் இருக்கலாம் என நினைக்கிறேன்.. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

Catholic schools, private schools இதன் மூலம் அதிகளவு இடங்களை எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.. இல்லையா?  

அத்துடன், சிறுபாண்மை இனத்தை சார்ந்தவர்களை கூட இந்த முறை பாதித்திருக்கூடிய சாத்தியங்களும் இருக்கலாம் என நினைக்கிறேன்.. 

இனரீதியாக இல்லை. ஆனால், பின்தங்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக , தெற்கு லண்டனில் கறுப்பர்கள் கூடுதலாக வாழும் பிரிக்ஸ்ட்ன், கிழக்கு லண்டனில் பங்களாதேஸ் காரர்கள் வாழும் வைட்சேப்பல் போன்ற இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில பிரச்னை என்னவென்றால், வருடந்தோறும், சராசரிக்கும் குறைவாவாக பெறுபேறு எடுக்கும் பாடசாலைகள் உள்ள பகுதிகள் எல்லாம், இம்முறை குய்யோ, முறையோ... என்று அலம்பறை பண்ணுவது.

ஆகிலும் அரிக்கண்டம் கொடுத்தால், அரசு... சரி டிசம்பரில் சோதனை வைக்கிறோம் எடுங்கோ எண்டால், எல்லோரும் பம்முவினம். அரசு என்னவும் செய்யலாம். பல்கலைக்கழகங்களை கூட ஜனவரியில் ஆரம்பியுங்கள் என்றும் சொல்ல முடியும்.
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கிலாந்து கல்விமுறைகள் பற்றி அதிகம் தெரியாது..ஆனால் பின்தங்கிய பாடசாலைகளுக்குள் கறுப்பின மக்களும்,  பங்களாதேச மக்களும் அதிகமாக உள்ள இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றால் பின்தங்கிய வெள்ளையர்கள் வாழும் பகுதிகளில் பெறுபேறுகள் எப்படி?

17 minutes ago, Nathamuni said:

இதில பிரச்னை என்னவென்றால், வருடந்தோறும், சராசரிக்கும் குறைவாவாக பெறுபேறு எடுக்கும் பாடசாலைகள் உள்ள பகுதிகள் எல்லாம், இம்முறை குய்யோ, முறையோ... என்று அலம்பறை பண்ணுவது

யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு என்பதால் பாடசாலைகள் என்ன செய்ய முடியும்.. அத்துடன், அங்கே படிக்கும் சில திறமையான மாணவர்கள் கூட பாதிக்கப்பட்டிருக்கலாம்..

பாதிக்கப்பட்ட மாணவர்கள்  பரீட்சை முடிவுகளை மீள் பரிசோதனை செய்ய வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு இங்கிலாந்து கல்விமுறைகள் பற்றி அதிகம் தெரியாது..ஆனால் பின்தங்கிய பாடசாலைகளுக்குள் கறுப்பின மக்களும்,  பங்களாதேச மக்களும் அதிகமாக உள்ள இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றால் பின்தங்கிய வெள்ளையர்கள் வாழும் பகுதிகளில் பெறுபேறுகள் எப்படி?

யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு என்பதால் பாடசாலைகள் என்ன செய்ய முடியும்.. அத்துடன், அங்கே படிக்கும் சில திறமையான மாணவர்கள் கூட பாதிக்கப்பட்டிருக்கலாம்..

பாதிக்கப்பட்ட மாணவர்கள்  பரீட்சை முடிவுகளை மீள் பரிசோதனை செய்ய வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன்

மீள்பரிசோதனை செய்வதா? சோதனை பேப்பர் இருந்தால் தானே.

பிரச்னை, ஜனவரி, பிப்ரவரியில் சும்மா வகுப்பில் நடக்கும்  மாதிரி டெஸ்ட், அதுவும் இல்லாவிடில், ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு பிள்ளையள் எப்படி பதில் சொன்னவையல் எண்டு நினைவிலே வருவதுக்களை எழுதி அனுப்ப சொன்னா.... அவையள் அனுப்பினது பள்ளிக்கூடம் ஏதோ.... 90, 100 மார்க்குகளுக்கு குறைய எடுத்ததே இல்லை எண்டு சத்தியம் பண்ணாத குறை.

என்னவென்றால், இங்கே பெறுபேறினை வைத்தே, பள்ளிகளின் தரம் அறியப்படுவதாலும், வாத்திமாருக்கு போனஸ், பள்ளிக்கு மேலதிக வசதி கொடுக்கப்படுவதால், வாத்திமார் அந்த மாதிரி தங்கள் பாடசாலையை உயர்த்த முயன்று இருக்கின்றனர்.

ஆகவே அரசும், முன்னைய ஆண்டு பாடசாலை பெறுபேறு வரலாறு, மாணவர் வாழும் பகுதி பெறுபேறு வரலாறு என்று பூந்து விளையாடி உள்ளது.

ஆகவே இம்முறை பெறுபேறு தனியே மாணவர் தகைமையில் இல்லை. ஆனால் பல வேறு காரணிகளில் தங்கி உள்ளது. இதில் பிரச்னை என்னவென்றால், வெளி பரீட்ச்சார்த்தி குறித்த எந்த விபரமும் அரசிடம் இல்லாததால், அவர்களுக்கு இன்னும் பெறுபேறு இல்லை. அவர்களும், இலங்கை போன்ற வெளி நாடுகளில் லண்டன் ஏ/எல் எடுக்க முனைந்தவர்கள் ஒரு வருடத்தினை இழக்கக்கூடும்.  

சிலவேளை, அரசு டிசம்பர் மாதம் கூட ஒரு சோதனை வைக்கலாம்.    

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழும் பகுதி, பாடசாலை முன்னைய பெறுபேறுகள் என்பவற்றை கொண்டு, பரீட்சை பெறுபேறுகள்  கணிக்கப்பட்டும், appealம் செய்யமுடியாவிட்டால்  உண்மையிலேயே unfair 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு நல்ல யூனி இம்முறை கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பெரும் குழப்பத்தில் முடியப்போகுது கிரமரும் பிரைவெட்டும்  புகுந்து விளையாடி உள்ளது .

வெள்ளைகள்  இந்த கொவிட்  நேரம் பொழுது  போகாமல் இருக்குதுகள் ஒரு வழிபண்ணாமல் விடாதுகள் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

A-levels and GCSEs: Free exam appeals for schools in England

https://www.bbc.co.uk/news/uk-53787938

ஏதோ பரீட்சை வைச்சால் வெட்டி விழுத்தி இருப்பம் என்று கண்ணீர் வடிப்பவர்களுக்காக... அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்திருக்குது..

சும்மா கப் இயர் எடுத்து வீணே காலத்தை கழிக்காமல்.. அடுத்த முறை தேர்வு எழுதலாம்.. அல்லது இடைக்கால தேர்வை நடத்தலாம்..  அப்ப தான் ஓவரா ரியாக்ட் பண்ணுற கொஞ்சப் பேரை கட்டுப்படுத்த முடியும்.

வெள்ளை என்டாப் போல.. திங்கள் முதல் புதன் வரை லண்டனில் சாப்பாட்டுக்கடைக்கு குடும்பத்தோடு போகும் லண்டன் வாசிகள்.. அடுத்த 4 தினங்களும் கடைகளை காய வைச்சு விடுகிறார்கள்.

அதிலும் நம்மவர்கள்... பிள்ளை குட்டிகளையும் இழுத்துக்கிட்டு.. சாப்பிட்டது போக மிச்சத்தை கட்டிக்கிட்டு வேற கிளம்புதுகளாம். ஐயோ.. கொரானாவும் அதுவுமா சனத்தினர அலப்பறை தாங்க முடியல்ல. 

36 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பலருக்கு நல்ல யூனி இம்முறை கிடைத்துள்ளது.

எங்க போனாலும்.. அதே லோனில.. தான் படிக்கனும். ஏதோ உங்கட சொந்தச் செலவில படிக்கிற கணக்கா...  எனி கொரானாவும் அதுவுமா வீட்டில் இருந்துதான் படிக்க வேண்டி வரும் போல கிடக்குது. இதில....................

Edited by nedukkalapoovan
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பலருக்கு நல்ல யூனி இம்முறை கிடைத்துள்ளது.

அப்படி இல்லை. தெற்கு லண்டனில் மிகவும் பிரபலமான கிரமர் ஸ்கூலில் 18 பேருக்கு மெடிசின் படிக்க offer இருந்தும் 4 பேருக்குத்தான் கிடைத்துள்ளதாம். Chemistry A* எடுக்கவேண்டும் சில பல்கலைக்கழகங்கள் நிபந்தனை விதித்தபோது ரிசல்ற் A ஆக வந்ததால் offer ஐ withdraw செய்துவிட்டார்களாம்.

அதுபோல Oxbridge க்கும் பலர் போகக்கூடி இருந்தும் போகமுடியவில்லை என்று எனது நண்பனின் மகன் சொன்னார் (அவர் Cambridge இல் Natural Science படிக்கவுள்ளார்)

இன்று, நாளை என்று ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

A-levels and GCSEs: Free exam appeals for schools in England

https://www.bbc.co.uk/news/uk-53787938

ஏதோ பரீட்சை வைச்சால் வெட்டி விழுத்தி இருப்பம் என்று கண்ணீர் வடிப்பவர்களுக்காக... அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்திருக்குது..

சும்மா கப் இயர் எடுத்து வீணே காலத்தை கழிக்காமல்.. அடுத்த முறை தேர்வு எழுதலாம்.. அல்லது இடைக்கால தேர்வை நடத்தலாம்..  அப்ப தான் ஓவரா ரியாக்ட் பண்ணுற கொஞ்சப் பேரை கட்டுப்படுத்த முடியும்.

வெள்ளை என்டாப் போல.. திங்கள் முதல் புதன் வரை லண்டனில் சாப்பாட்டுக்கடைக்கு குடும்பத்தோடு போகும் லண்டன் வாசிகள்.. அடுத்த 4 தினங்களும் கடைகளை காய வைச்சு விடுகிறார்கள்.

அதிலும் நம்மவர்கள்... பிள்ளை குட்டிகளையும் இழுத்துக்கிட்டு.. சாப்பிட்டது போக மிச்சத்தை கட்டிக்கிட்டு வேற கிளம்புதுகளாம். ஐயோ.. கொரானாவும் அதுவுமா சனத்தினர அலப்பறை தாங்க முடியல்ல. 

எங்க போனாலும்.. அதே லோனில.. தான் படிக்கனும். ஏதோ உங்கட சொந்தச் செலவில படிக்கிற கணக்கா...  எனி கொரானாவும் அதுவுமா வீட்டில் இருந்துதான் படிக்க வேண்டி வரும் போல கிடக்குது. இதில....................

என் பிள்ளைகள் எப்பவோ யூனி போயாச்சு. 😎

எதோ நீங்கள் மட்டும் உங்கட காசில படிச்சமாதிரி😀

Masters Degree எங்கட காசிலதான் செய்தது 😀

5 minutes ago, கிருபன் said:

அப்படி இல்லை. தெற்கு லண்டனில் மிகவும் பிரபலமான கிரமர் ஸ்கூலில் 18 பேருக்கு மெடிசின் படிக்க offer இருந்தும் 4 பேருக்குத்தான் கிடைத்துள்ளதாம். Chemistry A* எடுக்கவேண்டும் சில பல்கலைக்கழகங்கள் நிபந்தனை விதித்தபோது ரிசல்ற் A ஆக வந்ததால் offer ஐ withdraw செய்துவிட்டார்களாம்.

அதுபோல Oxbridge க்கும் பலர் போகக்கூடி இருந்தும் போகமுடியவில்லை என்று எனது நண்பனின் மகன் சொன்னார் (அவர் Cambridge இல் Natural Science படிக்கவுள்ளார்)

இன்று, நாளை என்று ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. 

உந்த விபரம் எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிய நான்குபேர் கேம்பிரிட்ஜ் இல் மெடிசினுக்கு இடம் கிடைத்ததாகக் கூறியுள்ளனர். உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் பிள்ளைகள் எப்பவோ யூனி போயாச்சு. 😎

எதோ நீங்கள் மட்டும் உங்கட காசில படிச்சமாதிரி😀

Masters Degree எங்கட காசிலதான் செய்தது 😀

நான் என் காசிலும் யுனி போட்ட பிச்சையிலும் படிச்சேன். நிச்சயமா கடனில அடுத்தவன் கஸ்டப்பட்டு உழைச்சுக் கட்டின.. வரில படிக்கல்ல. 

இன்னொரு மாஸ்டர் செய்யச் சொல்லுங்கள். அரசாங்கம் லோன் கொடுக்குதாம். ஐயோ ஐயோ..🤣

அண்மையில் ஒரு சீவி பார்த்தேன். உங்கினை பிறந்து வளர்ந்த.. தமிழ் பிள்ளைதான்.. 2 மாஸ்டர் டிகிரி.. 1 பச்சளர். இன்னும் வேலைக்கு அப்பிளை பண்ணிக்கிட்டு இருக்கு தாம். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் நீங்கள் உங்கட காசிலே படிச்சனீங்கள் என்று இந்த யாழ் களத்திலே பலமுறை முழங்கிவிட்டீங்கள்.

உங்கட வயசு பெடியங்கள் எல்லாம் வளலாயிலையும் கட்டுவனிலையும் சண்டை பிடிச்சு கொண்டிருக்க சும்மா ரியூசனிலே வந்து ஜவானும் சலீமும் பிடிச்சுகொண்டு போகேக்க நாலைஞ்சு பங்கரை கட்டுடையுலையும் நவக்கிரியிலையும் வெட்டிப்போட்டு, காயப்பட்டு வந்த பெடியளை பராமரிச்சுப்போட்டு வந்து, படிச்சு தமிழீழத்துக்கு கிழிக்கப்போறேன் எண்டு லண்டனுக்கு ஓடியாந்து, சண்டை முடியும் மட்டும் அங்காலை எட்டிக்கூடப்பார்க்காத உங்களைப்போன்ற பெடியளின் குற்ற உணர்ச்சியிலை டக்கிளசையும் கருணாவையும் திட்டி நீங்கள் உங்கள் குற்ற உணர்ச்சியை தீர்த்துக்கொள்வதைப்போல மற்றவர்களை நினைக்காதீங்க. 

படிச்சும் தாழ்வுமனப்பான்மையில் இருக்கிறவன் தான், நான் அசேலம் அடிக்கேலை, வரிக்காசிலை படிக்கேலை எண்டு கதையளக்கிறது.

இப்படி கன பேரைத்தாண்டி வந்து தான் இஞ்சை வந்து குப்பை கொட்டுறோம்.

உங்களுக்கு சிலது கிடைச்சிருக்கு என்றால் மற்றவனை நையாண்டி பண்ணாமல் இருக்க கூட கற்றுத்தராத படிப்பை படிச்சென்ன விட்டெண்ண 😝

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

நானே சொல்லி இருக்கிறன் என் காசில..யுனி போட்ட பிச்சையில் படிச்சேன் என்று. இதில நீங்கள் பெருமையை கண்டால்.. சிறுமையைக் கண்டால்.. அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும். 

எந்த மாணவனும் சொந்தமா உழைச்சும் படிக்கலாம். அப்படி படிக்கிற பலரையும்.. பார்த்திருக்கிறேன். உங்களால் முடியாதது மற்றவர்களாலும் முடியாது என்று கணக்குப் போடக் கூடாது.

அதேநேரம் படிப்பிற்கான.. பிரித்தானியாவின் இலகு கடன் வசதிகளைப் பயன்படுத்தி கடனெடுத்துவிட்டு அரசை ஏய்ப்பவர்களும் உளர். 

மேலும்.. இதில் எங்கும் அசைலம் பற்றிக் கதைக்கவில்லை. எனது நண்பர் அசைலம் அடிச்சவர். ஆனால்.. தானே உழைச்சு தான் படிச்சவர்.. பகுதி நேரப்படிப்பாக. கடைசி ஆண்டை மட்டும் முழு நேரமாகப் படிச்சு முடிச்சவர். அப்படியானவர்களையும் எம் இனம் இனங்காட்டித்தான் இருக்குது. 

டக்கிளஸால் முடியாட்டி முடியாது என்று போகனுமே தவிர.. ஊரை அடிச்சு உலையில போடுற வேலையைப் பார்க்கக் கூடாது. 

Iraqi refugee inspired by NHS treatment to study medicine at Cambridge.

The 18-year-old from Cardiff achieved an A* in biology, an A* in chemistry, an A* in economics and an A* in maths.

https://www.bbc.co.uk/news/uk-wales-53778785

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்படி இல்லை. தெற்கு லண்டனில் மிகவும் பிரபலமான கிரமர் ஸ்கூலில் 18 பேருக்கு மெடிசின் படிக்க offer இருந்தும் 4 பேருக்குத்தான் கிடைத்துள்ளதாம். Chemistry A* எடுக்கவேண்டும் சில பல்கலைக்கழகங்கள் நிபந்தனை விதித்தபோது ரிசல்ற் A ஆக வந்ததால் offer ஐ withdraw செய்துவிட்டார்களாம்.

அதுபோல Oxbridge க்கும் பலர் போகக்கூடி இருந்தும் போகமுடியவில்லை என்று எனது நண்பனின் மகன் சொன்னார் (அவர் Cambridge இல் Natural Science படிக்கவுள்ளார்)

இன்று, நாளை என்று ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. 

An Oxford college has said it will honour all places it offered to UK students, irrespective of their A-level results.

However, the overall results, across England, Northern Ireland and Wales, show record highs for A* and A grades.

https://www.bbc.co.uk/news/uk-england-oxfordshire-53780498

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பெரும் குழப்பத்தில் முடியப்போகுது கிரமரும் பிரைவெட்டும்  புகுந்து விளையாடி உள்ளது .

வெள்ளைகள்  இந்த கொவிட்  நேரம் பொழுது  போகாமல் இருக்குதுகள் ஒரு வழிபண்ணாமல் விடாதுகள் .

பின்தங்கிய இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், சரியான தீர்வு இல்லாவிடில், சமத்துவத்துவத்துக்கு பொறுப்பான ஆணைக்குழு, பிரச்சனைக்குள் தலையினை போடுவதா என்று சிந்திக்குதாம்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், பெறுபேறுகளை கவனியாது, யார், யாருக்கு ஊக பெறுபேறுகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட இடங்களை அப்படியே கொடுக்க தீர்மானித்துள்ளதாக கூறி உள்ளது.

நல்ல பெறுபேறுகள் எடுத்தவர்கள், அப்ப எங்க நிலை என்று சொல்கிறார்களாம். 

பெரும் குழம்பம் தான். நான் சொன்னது போலவே நவம்பர் மாதம் திடீர் பரீட்சை வைத்தால் என்ன என்று யோசிக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்று, நாளை என்று ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. 

எனது அயலவர் ஒரு பாடசாலை அதிபர். பரீடசை ரத்தாகும் அறிவிப்பு வந்த போதே சொன்னேன். இது பெரிய குழப்பத்தில் முடியப்போகுது என்று.

அரசாங்கம் ரத்து செய்யாமல், ஒத்தி வைக்க அறிவித்து இருந்தால், பெடியள் படித்துக் கொண்டாவது இருந்திருப்பார்கள்.

வழக்கு, கோர்ட் என்று இழுபட, கடைசியில் டிசம்பரில் தீடீர் சோதனை வைப்பார்கள்.

ஓ/எல் பரவாயில்லை. ஏ/எல் சோதனை இருப்பதால், அங்கே பிடித்து கொள்ளலாம். ஆனால், ஏ/எல் பல்கலைக்கழக அனுமதி காரணமாக சிக்கல் உள்ளதாக போகின்றது. 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அப்படி இல்லை. தெற்கு லண்டனில் மிகவும் பிரபலமான கிரமர் ஸ்கூலில் 18 பேருக்கு மெடிசின் படிக்க offer இருந்தும் 4 பேருக்குத்தான் கிடைத்துள்ளதாம். Chemistry A* எடுக்கவேண்டும் சில பல்கலைக்கழகங்கள் நிபந்தனை விதித்தபோது ரிசல்ற் A ஆக வந்ததால் offer ஐ withdraw செய்துவிட்டார்களாம்.

அதுபோல Oxbridge க்கும் பலர் போகக்கூடி இருந்தும் போகமுடியவில்லை என்று எனது நண்பனின் மகன் சொன்னார் (அவர் Cambridge இல் Natural Science படிக்கவுள்ளார்)

இன்று, நாளை என்று ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. 

எனது நண்பர்களின் பிள்ளைகளுக்கும் 3A* வந்துள்ளன. 70% எதிரிபார்த்தமாதிரியே பெறுபேறுகள் வந்துள்ளனவாம். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பன் ஒரு தனியார் கல்லூரி அதிபர் அங்கு. அவன் கூறிய தகவல்.

(1). Statistically, 65% of Examination Rusults are made correctly based on the Centre Assesed Grades (CAG) provided by the schools and colleges to the examination board.

(2). 35% grades are down graded significantly say 2 grades. 

(3). these 35% of students have lost their university places where they *intend to go*, if they have achieved their grades

(4).Note that no examinations happened in summer 2020 across whole UK. Examination board wrote an algorithm with parameters such as input from school teachers, previous examination result held by the examination board, school performances in the past few years.

(5). In conclusion, these 35% students future is in big question. Department for Education (DfE) is working hard to rectify the chaotic situation by allowing students to appeal against their poor grades and conducting examination in the month of October. Whatever happens, even if the students improve their grades, they can only enter into Universities in 2021. In other words, they will lose one year education due to this fiasco.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

A-levels and GCSEs: Free exam appeals for schools in England

https://www.bbc.co.uk/news/uk-53787938

ஏதோ பரீட்சை வைச்சால் வெட்டி விழுத்தி இருப்பம் என்று கண்ணீர் வடிப்பவர்களுக்காக... அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்திருக்குது..

சும்மா கப் இயர் எடுத்து வீணே காலத்தை கழிக்காமல்.. அடுத்த முறை தேர்வு எழுதலாம்.. அல்லது இடைக்கால தேர்வை நடத்தலாம்..  அப்ப தான் ஓவரா ரியாக்ட் பண்ணுற கொஞ்சப் பேரை கட்டுப்படுத்த முடியும்.

வெள்ளை என்டாப் போல.. திங்கள் முதல் புதன் வரை லண்டனில் சாப்பாட்டுக்கடைக்கு குடும்பத்தோடு போகும் லண்டன் வாசிகள்.. அடுத்த 4 தினங்களும் கடைகளை காய வைச்சு விடுகிறார்கள்.

அதிலும் நம்மவர்கள்... பிள்ளை குட்டிகளையும் இழுத்துக்கிட்டு.. சாப்பிட்டது போக மிச்சத்தை கட்டிக்கிட்டு வேற கிளம்புதுகளாம். ஐயோ.. கொரானாவும் அதுவுமா சனத்தினர அலப்பறை தாங்க முடியல்ல. 

எங்க போனாலும்.. அதே லோனில.. தான் படிக்கனும். ஏதோ உங்கட சொந்தச் செலவில படிக்கிற கணக்கா...  எனி கொரானாவும் அதுவுமா வீட்டில் இருந்துதான் படிக்க வேண்டி வரும் போல கிடக்குது. இதில....................

அரசு கொடுக்குது காசு அந்த மக்கள் தாங்கள் விரும்பினதை ஆசைக்கு அல்லது காசை மிச்சம் பிடிக்கவோ சாப்பிடுகிறார்கள்...எல்லா இன  மக்களும் தான் சாப்பிடினம்...ஏன் தமிழன் சாப்பிட்டால் மட்டும் இந்த கொலைவெறி உங்களுக்கு?
நீங்களும் போய் சாப்பிடுங்கோ அல்லது சாப்பிட்டு கொண்டு தான் இப்படி எழுதுகிறீர்களோ யாருக்கு தெரியும் 😧

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐய்யோ அக்கா அவை லண்டனிலே இருக்கும் தமிழ் மேல்தட்டு வர்க்கம். படிப்பு விசாவிலே வந்து சொந்தக்காசிலே படிச்சு, குடும்பத்திலே ஒருத்தரையும் போராட்டத்துக்கு அனுப்பமல், இப்போ போராடின ஆட்கள் இல்லை என்ற நினைப்பில் போராட்டத்தில் நாங்கள் ஆற்றிய பங்களிப்பு என்று 3 பக்கத்துக்கு கதை எழுதி, மற்றவைக்கு தேசியம் பற்றி வகுப்பெடுக்கும் வர்க்கம்.

நீங்க வேற அரசாங்கம் தாற 50 வீத கழிவுக்காக திங்கட்கிழமை போய் சாப்பிடுற ஆட்கள் இல்லை. முழுக்காசும் கொடுத்து வெள்ளிக்கிழமை சாப்பிடுற ஆட்கள். அவை உங்க சாப்பிடுற தமிழரை குறை சொல்லிக்கொண்டு தேசியம் பேசுறது தான் விந்தை. (அப்படி சாப்பிடுற தமிழரில் போராட்டத்துக்காக உயிரைக்கொடுத்த குடும்பமும் இருக்கும்) 

😀😀😀

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.