Jump to content

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் அதிக இடங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

சிலருக்கு predicted grade A* இருந்து அது algorithm ஆல் A ஆக மாறியதால் முதல் தெரிவான பல்கலைக்கழகங்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக further maths இல் A* எடுக்கக்கூடிய கெட்டித்தனமான மாணவர்கள் சிலருக்கு Oxbridge இடங்கள் algorithm ஆல் A ஆக்கப்பட்டதால் கிடைக்கவில்லை.

இதே நேரத்தில் பிரான்ஸில் இருந்து வருபவர்களை quarantine க்கு போகச் சொல்லி அது முக்கியமான செய்தியாக உள்ளதால், மாணவர்களின் பிரச்சினை புதைக்கப்பட்டுவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

அண்மையில் ஒரு சீவி பார்த்தேன். உங்கினை பிறந்து வளர்ந்த.. தமிழ் பிள்ளைதான்.. 2 மாஸ்டர் டிகிரி.. 1 பச்சளர். இன்னும் வேலைக்கு அப்பிளை பண்ணிக்கிட்டு இருக்கு தாம். 

 

16 hours ago, முதல்வன் said:

உங்களுக்கு சிலது கிடைச்சிருக்கு என்றால் மற்றவனை நையாண்டி பண்ணாமல் இருக்க கூட கற்றுத்தராத படிப்பை படிச்சென்ன விட்டெண்ண

சிலருக்கு, கடினமாக படித்து, உழைத்தும், பயன் வந்து சேர்வதில்லை.

ஆனால், இவர் சொன்ன அந்த பிள்ளையின் நிலையில் பலர் இருக்கிறார்கள். அதற்கான கட்டமைப்பு  காரணம் (structural reasons)  , அவருக்கு தெரியுமோ தெரியாது.

உ.ம். இருக்கும் எல்லா வேலைகளையும், வேலை வேண்டிய எல்லோருக்குக்கும் பங்கு போட்டாலும், வேலை இல்லா திண்டாட்டம் இருக்கும்.

இது, அதாவது படித்த இளம்பருவத்தினர், job market இற்குள் காலடி எடுத்து வைக்க முடியாமல் இருப்பது எம்மவரை மட்டுமல்ல, வெள்ளை இனத்தவரையும் மிக கடுமையாக தாக்குகிறது.  

வேலை எவ்வளவு இலகுவாக எடுக்க கூடிய தன்மையை, கடந்த 4 தசாப்தங்களில், 1980-1990, 1991 - 2000, 2001 - 2008, 2008 - இன்றுவரை என்று பிரித்து பார்க்கலாம்.

இதில் 2001 இல், 900 மில்லியன் தொழில் வேண்டுவோர் சீனாவில் இருந்து வேலை சந்தையில் இணைந்ததும், 2008 இல் பல ஆரம்ப வேலைகள் இல்லாமல் அல்லது குறைந்த செலவு உள்ள நாடுகளுக்கு மாற்றப்பட்டதும், வேலைக்கு முதலில் காலடி எடுத்து வைப்போரை மிகவும் பாதிக்கிறது.

குறிப்பிட்டவருக்கு, அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் நிலையில் இருக்கிறார் என்பதுடன், அவரின்  எதிர்பார்ப்பும் மற்றும் பல காரணிகள் வேலை எடுப்பதனை தாமதிக்கலாம்.  

அனால் ஒன்று. 2008 க்கு முதல், முதல் வேலை ஐடப்பதையும், இப்பொது முதல் வேலை எடுப்பதையும் ஒப்பிட முடியாது.

இந்த காரணங்களே , brexit, trump வருகை, பேரினவாத வலது சாரிகள் எழுச்சிக்கு  ஓர்  காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

அண்மையில் ஒரு சீவி பார்த்தேன். உங்கினை பிறந்து வளர்ந்த.. தமிழ் பிள்ளைதான்.. 2 மாஸ்டர் டிகிரி.. 1 பச்சளர். இன்னும் வேலைக்கு அப்பிளை பண்ணிக்கிட்டு இருக்கு தாம். 

இப்படி கண பேர் இருக்கினம். சரியான வழிகாட்டுதல் இல்லை.

பெரும் வேலை தரக்கூடிய IT sector அறிவே இல்லாமல், ஒன்று மருத்துவம், இல்லாவிடில் வங்கியில் இன்வெஸ்ட்மென்ட் பக்கம், actuarial என்று செம்மறி ஆட்டுக்கூடம் கூட்டம் போல போய் கொண்டிருக்கிறார்கள்.

வங்கி... கரணம் தப்பினால் மரணம் கதைதான். Hire & Fire அதிகம் உள்ளது. எல்லோருக்கும்   சரி வராது என்பது புரியவில்லை.

கணக்கியல் பெரிதாக உதவாமல் கை விடுகிறது. காரணம் சம்பளம் £30k தாண்டுவதே பெரிய வேலை.

பெரு, மத்திம நிறுவனங்கள் கணக்கியல் பகுதியை, தென் ஆப்பிரிக்கா, சிம்பாப்வே, இந்தியா, போட்ஸ்வானா, இலங்கை, பாக்கிஸ்தான், பிலிப்பீன்ஸ் என்று ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு outsource பண்ணுகின்றன.

மனவியல் நிபுணர்கள் கருத்துப்படி, ஒரு பச்சலர் டிகிரி வைத்திருப்பவர், வேலைக்கு முயன்று, கிடைக்காவிடில்... மாஸ்டர், phd என்று போய்.... பிறகும் வேலை எடுக்க முடியாத over qualified நிலைக்கு வந்துவிடுவார்.

பயம் தான் காரணம் என்கிறார். உண்மையில், மேலதிக கல்வி ஒரு வேலை தரும் நிறுவனத்தின் செலவில் முடிக்கவேண்டுமே அன்றி தாய், தந்தை அல்லது கடன் பணத்தில் அல்ல. கல்வி முடிந்ததும், பதவி உயர்வும், பணமும், வரும்.

ஆகவே அவர் சொல்லவருவது.... பச்சலர் டிகிரி வைத்திருப்பவரை, தாய், தந்தை சோரவிடாது வேலை ஒன்றுக்கு போக வைக்க வேண்டுமாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:
18 hours ago, nedukkalapoovan said:

அண்மையில் ஒரு சீவி பார்த்தேன். உங்கினை பிறந்து வளர்ந்த.. தமிழ் பிள்ளைதான்.. 2 மாஸ்டர் டிகிரி.. 1 பச்சளர். இன்னும் வேலைக்கு அப்பிளை பண்ணிக்கிட்டு இருக்கு தாம். 

மனவியல் நிபுணர்கள் கருத்துப்படி, ஒரு பச்சலர் டிகிரி வைத்திருப்பவர், வேலைக்கு முயன்று, கிடைக்காவிடில்... மாஸ்டர், phd என்று போய்.... பிறகும் வேலை எடுக்க முடியாத over qualified நிலைக்கு வந்துவிடுவார்.

அமெரிக்காவில் நல்ல பல்கலையில் படிக்க வருடம் 50 ஆயிரம் டாலர்கள் தேவை.(குறைந்தது) 4 வருடங்கள் முடிந்து வெளியே வந்து 6 மாதத்தில் வட்டியுடன் பில் வரும்.

இங்கே வேலை எடுத்தால் என்ன விட்டால் என்ன.
ஆனால் படித்துக் கொண்டிருந்தால் பில் வராது.
இதுக்காகவே வேலை எடுக்காதவர்கள் மீண்டும் மீண்டும் படிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் நல்ல பல்கலையில் படிக்க வருடம் 50 ஆயிரம் டாலர்கள் தேவை.(குறைந்தது) 4 வருடங்கள் முடிந்து வெளியே வந்து 6 மாதத்தில் வட்டியுடன் பில் வரும்.

இங்கே வேலை எடுத்தால் என்ன விட்டால் என்ன.
ஆனால் படித்துக் கொண்டிருந்தால் பில் வராது.
இதுக்காகவே வேலை எடுக்காதவர்கள் மீண்டும் மீண்டும் படிப்பார்கள்.

கடைசில, பல டிக்ரீயோட... கடனும் தான் மிஞ்சும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

கடைசில, பல டிக்ரீயோட... கடனும் தான் மிஞ்சும்.

இங்கு பெரிய அநிஞாயம் 
வீடு வாங்க குறைந்த வட்டி
படிப்புக்கு டபுள்.

இதற்குள் கிறடிற் லைன் கூடாது என்றால் கூடிக் கொண்டே போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இங்கு பெரிய அநிஞாயம் 
வீடு வாங்க குறைந்த வட்டி
படிப்புக்கு டபுள்.

இதற்குள் கிறடிற் லைன் கூடாது என்றால் கூடிக் கொண்டே போகும்.

இங்க 1998க்கு முன்னம், அரசு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி நன்கொடை கொடுத்தது.

நடந்தது என்னவென்றால், ஊர், உலகத்து தண்ணி கோஸ்டிகள், கஞ்சா கோஸ்டிகள் எல்லாம் டிகிரி படிக்கிறம் எண்டு புத்தக பை நிறைய பியர் கானோடையும், கஞ்சா பொதிகளோட போய், பிறகென்ன அமர்க்களமான படிப்பும், யாவாரமும் தான்.

கறுவள்கள், ஊத்தை வெள்ளயல்... புத்தக பையோட, அமர்க்கலாமா வரும் காட்சி காண கொடுத்து வைக்கவேண்டும் எண்டுவார் அண்ணர். :grin:

படிப்பு தரமும் குறைஞ்சு, வெளிநாட்டு மாணவர் வரத்தும் குறைய தான், அரசு முழித்து கொண்டது.

பிறகு தான், இது சரி வராது எண்டு, கடன் வாங்கி படியுங்கோ எண்டு சொல்ல, இந்த கோஸ்டிகள் குறைஞ்சு போட்டினம்.

இப்ப 2016க்கு பிறகு, ஏ/எல் சோதனையை இன்னும் இறுக்கி, உண்மையில படிக்கக்கூடிய ஆக்கள் தான் கடனை வாங்கி படிக்கலாம். மத்த ஆக்கள், வெள்ளனவே போய், வேற வேலை தேடி செய்யுங்கோ என்று நிலைமைக்கு கொண்டு வந்திட்டினம். உது நல்ல வேலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kadancha said:

 

சிலருக்கு, கடினமாக படித்து, உழைத்தும், பயன் வந்து சேர்வதில்லை.

ஆனால், இவர் சொன்ன அந்த பிள்ளையின் நிலையில் பலர் இருக்கிறார்கள். அதற்கான கட்டமைப்பு  காரணம் (structural reasons)  , அவருக்கு தெரியுமோ தெரியாது.

உ.ம். இருக்கும் எல்லா வேலைகளையும், வேலை வேண்டிய எல்லோருக்குக்கும் பங்கு போட்டாலும், வேலை இல்லா திண்டாட்டம் இருக்கும்.

இது, அதாவது படித்த இளம்பருவத்தினர், job market இற்குள் காலடி எடுத்து வைக்க முடியாமல் இருப்பது எம்மவரை மட்டுமல்ல, வெள்ளை இனத்தவரையும் மிக கடுமையாக தாக்குகிறது.  

வேலை எவ்வளவு இலகுவாக எடுக்க கூடிய தன்மையை, கடந்த 4 தசாப்தங்களில், 1980-1990, 1991 - 2000, 2001 - 2008, 2008 - இன்றுவரை என்று பிரித்து பார்க்கலாம்.

இதில் 2001 இல், 900 மில்லியன் தொழில் வேண்டுவோர் சீனாவில் இருந்து வேலை சந்தையில் இணைந்ததும், 2008 இல் பல ஆரம்ப வேலைகள் இல்லாமல் அல்லது குறைந்த செலவு உள்ள நாடுகளுக்கு மாற்றப்பட்டதும், வேலைக்கு முதலில் காலடி எடுத்து வைப்போரை மிகவும் பாதிக்கிறது.

குறிப்பிட்டவருக்கு, அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் நிலையில் இருக்கிறார் என்பதுடன், அவரின்  எதிர்பார்ப்பும் மற்றும் பல காரணிகள் வேலை எடுப்பதனை தாமதிக்கலாம்.  

அனால் ஒன்று. 2008 க்கு முதல், முதல் வேலை ஐடப்பதையும், இப்பொது முதல் வேலை எடுப்பதையும் ஒப்பிட முடியாது.

இந்த காரணங்களே , brexit, trump வருகை, பேரினவாத வலது சாரிகள் எழுச்சிக்கு  ஓர்  காரணம்.

மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

UK secondary education இல் Catholic schools என்பதன் முக்கியத்துவமும், பங்கும் மிக, மிக குறைவு, இல்லை என்றே சொல்லலாம்.

இதை புரிந்து கொள்வதற்கு, UK  secondary education system இல் உள்ள பாடசாலை நிரை முறைகளை தெரிவது அவசியம்.

UK இல் இரு சமாந்திரமான பாடசாலை தொகைதிகள் உண்டு. தனியார் (Independent schools), மற்றும் அரசு பாடசாலைகள்.


தானியரிழும் நிரை முறைகள்: Public Schools (Eton, Rugby, Harrow School  போன்றவை),  Tier 1, Tier 2, Tier 3 Independent schools.

இதில் Public Schools மிக கூடிய பணம் அரவு செய்பவை, ஏனெனில் பொதுவாக Public Schools, full boarding schools ஆகவே இருக்கும் (boarding ஐ தவிர்கக முடியாது பாடசாலைக்கு  அருகில் வசித்தாலும்). ஆனாலும், கால மாற்றங்கள், boarding ஐ மாற்றி வருகிறது.     

இப்பொது Tier 1 இல் இருக்கும் அநேகமான Independent schools, 6ம் நூற்றாண்டில் இருந்து 18ம் நூற்றண்டு கால பகுதியில் Public Schools ஆக இருந்தவை.     

அரசு பாடசாலைகளை, Grammar Schools, Selective Secondaries,  Academies, Comprehensive Schools.

Comprehensive Schools அந்தந்த பகுதியில் உள்ளவர்களுக்கு, மேலதிக இடம் இருந்த்த்தால் வேறு பகுதியில் இருந்தும் எடுப்பார்கள். ஆனால், selection  இல்லை.

இதில் Academies என்பவை சமீபத்தில் வந்தவை. அரசு பாடசாலையாயினும், அவற்றிற்கு பெருமளவில் சுதந்திரம் உண்டு. இவை பெருமளவில், failing Comprehensive Schools ஐ தரம் உயர்த்துவதற்கு Academies ஆக மாற்றப்படுகின்றது 

Grammar Schools உம் 6ம் நூற்றாண்டிலேயே முளை விட தொடங்கியது, Latin ஐ கற்ப்பிபதற்காக. அதன் பெயரிலேயே, Grammar School இன் நோக்கம், அதாவது இலக்கணத்துடன் மொழியை கற்ப்பிபதற்காக ஆரம்பிக்கப்பட்டது.  

1960-70 மாரு சீரமைப்பில், சில Grammar Schools Independent schools ஆக வந்தது. சில Comprehensive Schools ஆகியது. குறிப்பிட்ட தக்க அளவு, அரசு பாடசாலைகள் ஆகினாலும், Grammar School எனும் பெயரையும், selective system ஐயும்,  சுதந்திரத்தையும்  வைத்து இருக்கிறன.

ஆயினும், Grammar Schools அவற்றின் பெயரை,  selective system ஐயும் மாற்றாமல், தற்போது Academy ஆக மாறி வருகிறன, பெருமளவு சுதந்திரத்தை கருத்தில் எடுத்து.  
       
Selective Secondary Schools என்பவை, Selective Comprehensive Schools.

England and Wales இல் 90% மாணவர்கள் Comprehensive Schools இலேயே கற்கிறார்கள்.

இப்பொது, Ofqual இன் பெறுபேரை தீர்மானிக்கும் algorithm, சிறிய குழு மாணாக்கரின் பிரேரிக்கப்பட்ட பெறுபேறை புள்ளிவிபர  சராசரி மாற்றங்கள் இல்லாமலும் அல்லது அந்த மாற்றங்களின் பரம்பல் புறக்கணிக்க தக்க அளவிலும், அதே நேரத்தில் குழுவின் அளவு பெரிதாகும் போது  மிகப் பெரிதான புள்ளிவிபர அடிப்படையிலான சராசரி மாற்றங்களின் பரம்பல் மிகப் பெரிதாகவும், ஒழுங்கு இல்லாமலும்  இருக்கிறது.  

இது Telegraph இல் வந்த ஓர் யதார்த்தமான விளக்கம் 


"whilst all other media calls it a shambles, particularly when the algorithm has now been reviewed, and that it favours small group sizes where it takes the teachers marks, so typically private schools and disfavours large groups where it marks down. Obviously to maintain the overall envelope someone else has to pickup the slack for the given grades to the private schools which have not been adjusted. The is going to come back and haunt Boris Johnson’s government, and we have more to come."

இதனால்  தான், Independent schools, Grammar Schools மற்றும் Selective Secondary Schools இல் பிரேரிக்கப்பட்ட பெறுபேறில் மாற்றங்கள், இந்த பாடசாலைகளிலும்,  ஏறுவரிசையில் Independent schools இல் மிக குறைவாகவும், selective secondaries இல் மிக கூடாவாகவும் இருக்கிறது.

ஏனெனில், இந்த பாடசாலைகளை ஒப்பிடும் பொது, Independent schools இல் மிக சிறிய குழு, Grammar Schools இல் அதை விட பெரிது, Selective Secondary schools இல் மிகப் பெரிய குழு மாணாக்கர் .

மற்றது, இந்த பாடசாலைகள் பொதுவாக, கடந்த சமீப காலத்தில்  ஒழுங்காந பெறுபேறு முன்னேற்றத்தை (consistently improving historical performance) கொண்டிருப்பவை.

எனவே தான், Independent schools, Grammar Schools மற்றும் Selective Secondary Schools இல் பிரேரிக்கப்பட்ட பெறுபேறுகளின் மாற்றங்கள் ஏனைய பாடசாலைகளை விட மிக குறைவாக இருக்கிறது. அதிலும்,  Independent schools மிகுறைவரான மாற்றங்கள்,  Grammar Schools பெறுபேறு மாற்றம்  Independent schools பெறுபேறு மாற்றத்தை விட பெரிது,  Selective Secondary Schools இல் பெறுபேறு மாற்றம் மிக பெரிது.

இதில் இன்னொமொரு தனிப்பட்ட பிரச்னையான, உண்மையான தராதரத்திலும் கூடுதலாக  பிரேரிக்கப்பட்ட பெறுபேறுகள்.  

உண்மையான தராதரத்திலும் கூடுதலாக  பிரேரிக்கப்பட்ட பெறுபேறுகள் Independent schools, Grammar Schools மற்றும் Selective Secondary Schools நடைபெற்று இருந்தாலும், முன்பிருக்கும் ஆய்வின் படி மிகப் பெரிதான மாற்றம் (பெறுபேறு ஏற்றமோ அல்லது இறக்கமோ) இருக்காது.

ஆனல், இவை தவிர்ந்த  (அதாவது  Independent schools, Grammar Schools மற்றும் Selective Secondary Schools) பாடசாலைகள், மாணாக்கர் குழு பெரிது, கடந்த சமீப காலத்தில்  ஒழுங்கற்ற  பெறுபேறு முன்னேற்றத்தை (consistently erratic historical performance) கொண்டிருந்தாலும் (பொதுவான நிலை அதுவே), உண்மையான தராதரத்திலும் கூடுதலாக  பிரேரிக்கப்பட்ட பெறுபேறுகள் இருக்குமாயின் (இது Comprehensive Schools மற்றும் Academy ஆக மாறிய Comprehensive Schools வெளிப்படையாக அவதானிக்க கூடிய அளவு நடைபெற்று இருக்கிறது) , பெறுபேறு மாற்றம், அதுவும் இறக்கம் மிகவும் disproportionate ஆக, உண்மையான தராதரம் இருக்கும் மாணாக்கரையும்  தாக்கும். 
            
இந்த முறை, அதாவது  எந்த பாடசாலை, பாடசாலையும் மாணாக்கரின் வதிவிடம் (status)   போன்ற பல பிற்போக்கான தகைமையை தீர்மானிக்கும் தராதர சுட்டிகளாக  விளங்கியதை, பல தசாப்தங்களில் போராட்டத்தின் வழியாக சீரமைக்கப்பட்ட தகுதியை இத்தகைய பாகுபாடுகள் இன்றி தீர்மானிக்கும் வழிமுறை அடிப்படையை துவம்சம் செய்து விட்டது.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, ஆக குறைந்தது, மறைமுகமான பாகுபாடு (discrimination) என்ற சட்டப் பிரச்னை ஒரு புறம். சட்ட நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

அரசியல் பிரச்சனையாக, அதாவது Tories are sneaking cronyism through back door, மற்றும் Boris இன் இரண்டாம் தடவை பிரதமர் கனவையும், ஏன் Tories as a political party என்ற அடிப்படையை மாற்றக் கூடிய பிரச்சனையாக உருவெடுக்கலாம்.

 

BBC News Summary

https://www.bbc.co.uk/news/education-53799860

A-level grades 'drop below three-year average', new analysis suggests

A-level grades awarded in sixth form colleges this year fell below the average of the last three years in England, new analysis suggests.

The Sixth Form Colleges Association said its research is evidence that students in larger institutions have been failed by this year's system.

Almost 40% of A-level grades awarded on Thursday in England were lower than teachers' predictions.

The government has defended the approach it used to determine grades.

........

 

https://www.tes.com/news/gcses-2020-call-delay-results-over-flawed-algorithm#:~:text="The GCSE results should be,of their performance in 2019."

GCSEs 2020: Call to delay results over flawed algorithm

Tory peer and former education secretary Lord Baker calls on Williamson to act after ‘hundreds of thousands of unfair' A-level grades

William Stewart

Yesterday at 3:49pm
Share this
 

 

GCSE results 2020 Lord Baker

A former Conservative education secretary is calling on his current counterpart to delay the publication of GCSE results next week because Ofqual's model has produced "barely explicable" A-level downgrades.

Lord Baker's call to Gavin Williamson comes as confusion over this year's controversial A-level results deepens following Ofqual's abrupt withdrawal of its appeal process last night.

The Department for Education is reported to have been left "blindsided" by Ofqual's change of heart on the process which ministers had already endorsed.


Confusion: A-level 'chaos' deepens as Ofqual suspends appeal rules

A levels: ‘Farcical’ Ofqual has ‘sown confusion’

Trouble ahead: Ofqual’s algorithm issues ‘more severe’ at GCSE level


Lord Baker, who was education secretary between 1986-89 and oversaw the introduction of GCSEs said: "I urge the education secretary to instruct Ofqual not to release the GCSEs results this Thursday as their algorithm is flawed.

"The A-level results have produced hundreds of thousands of unfair and barely explicable downgrades.

"They have helped smaller private schools but hit the brighter students in a poorly performing state school. It is not surprising that various parties are considering legal actions.

"The Royal Statistical Society has claimed that Ofqual has breached its 'obligation to serve the public good' and its model failed to 'achieve Quality and Trustworthiness'.

"Last week A-levels were allowed to increase by 2 per cent, but for GCSEs this week schools have only been allowed a 1 per cent increase. This will result in millions of aggrieved students and many more millions of aggrieved parents and grandparents. If you are in a hole stop digging.

"The GCSE results should be postponed for two weeks. The government can then decide either to accept the predicted grades or invite heads to resubmit new predictions which should not exceed 3 per cent of their performance in 2019."

Labour's shadow education secretary Kate Green said: "The Tories' results fiasco is turning from tragedy to farce, and the chaos and incompetence is completely unacceptable when so many students and families have been devastated by it.

"A credible appeals system should have been the government's first priority but three days later there is absolutely no clarity on how young people can challenge their unfair grades.

"Parents and young people needed action in a matter of days but the government are now rapidly running out of time. The prime minister must get a grip and sort this out."

More than 250 A-level students gathered in Westminster today for a protest against the recent downgrading of thousands of results.

Many held signs reading "trust our teachers" as the students gathered in Parliament Square, chanting "fuck Gavin Williamson" and "fuck Eton".

Ted Mellow, 18, from Wood Green, north London, one of the organisers of today's demonstration, said: "Everywhere you look, people are either angry or confused and, quite frankly, that's the government’s fault.

"We're not fighting so that everyone gets A*s and As because we know that's unrealistic, we're fighting so that people get the grades they deserve."

Dozens of students sat down on the floor at the front door of the Department of Education as hundreds filled the street.

The protesters were chanting "vote them out", with many demonstrators holding signs referencing the next election.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர்களின் ஊகமே பெறுபேறு ஆகின்றது. போன வார பெறுபேறுகள் ரத்தாகின்றன.

விடுமுறையில் இருந்து பிரதமர் போரிஸ் திரும்பி இதுகுறித்து அறிவிப்பை வெளியிடுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2020 at 15:39, Kadancha said:

 

 

விரிவாக விளங்கப்படுத்தியமைக்கு நன்றிகள். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.