Jump to content

செஞ்சோலை வளாகப் படுகொலை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலை வளாகப் படுகொலை

Sencholai-Memorial.jpg

செஞ்சோலை வளாகப் படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.

14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் சிறிலங்கா வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு வீச்ச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவச் செல்வங்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

14.08.07-Chenchoala-Memorial-1.jpg

செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்…

தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர். கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது.

“பத்து நாளும் என்னால விட்டிட்டு இருக்க ஏலாதுண்டு முதலில் மாட்டேன் என்டுதான் சொன்னன். ஆனால், நல்ல விஷயம் எண்டு எல்லாரும் சொன்னதால தான் விட்டனான். கடைசியில இப்படியாப்போச்சு” என தலையில் அடித்து கதறிய தாயாரொருவர் தன் மகளைத் தூக்கி வா வீட்ட போவோம் என கேட்டதும் அனைவரும் கதறியழுதனர்.

செஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.

செஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள். இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹகிலிய ரம்புக்வெல,” கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்” என தமது அரசும் இனவெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார்.

Sencholai-Attack-14.08-5.jpg

ஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் `யுனிசெப்’பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது. எனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த ஜனாதிபதி இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு பழிக்குப் பழிவாங்கிவிடுவார்களென்ற அச்சத்தில் தெற்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அங்கே வல்லிபுனத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்பதனை அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள். பத்துநாள் பயிற்சிப்பட்டறை உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார்?

ஏன் அங்கு கூடியிருந்தார்கள்?

காலை 7 மணிக்கு அவர்கள் என்ன செய்தார்கள்?

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வல்லிபுனம் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாகவுள்ள பகுதி. குடாநாட்டிலிருந்து 1995 இல் இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றவர்களுக்கு இதை நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். அங்கு தான் `செஞ்சோலை’ வளாகமும் உள்ளது. செஞ்சோலை என்றதும் தாயகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும்.

இந்த வளாகத்திலுள்ள அருகில் பல நலன்புரி நிலையங்கள், வேறு பல சிறுவர் இல்லங்கள் என பலவுள்ளன. மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த ஒரு பகுதியே வல்லிபுனம்.

இந்த செஞ்சோலை வளாகத்தில் தற்போது செஞ்சோலை சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்தவர்களில்லை. இந்த வருடம் ஜனவரியில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு சிறுமியர்கள் சென்றுவிட்டனர்.

Sencholai-Attack-14.08-3.jpg

ஆனால், வள்ளிபுனம் – செஞ்சோலை வளாகம் தொடர்ந்தும் செஞ்சோலை வளாகமாகவே உள்ளது. இங்கு வதிவிட பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்படுவது வழமையானதொன்று. காரணம் ஏற்கனவே சிறுமியர் இல்லமாக இது செயற்பட்டமையால் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இவ்வளாகம் இருப்பதே. அத்துடன், இந்த வளாகம் ஐ.நா. அமைப்புகளூடாக பயிற்சிப் பட்டறைக்கான இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் இங்க பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றுவந்தன. அதேபோன்றதொரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இலங்கை அரசின் விமானப் படை கோரத்தாண்டவமாடி தமிழரை துன்பத்தில் வாடவிட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் இச்செஞ்சோலை வளாகத்தில் க.பொ.த. உயர்தர மாணவிகளுக்கான 10 நாள் வதிவிட பயிற்சி நெறி நடைபெற்றுவந்தது.

இந்தப் பயிற்சி நெறியின் 3 ஆம் நாளின் போதே இப்பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் குழு வேலை போன்றவற்றில் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதனை நோக்கமாகக் கொண்டே இப்பயிற்சிப் பட்டறை நடைபெற்று வந்தது. இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 க.பொ.த. உயர்தர மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. செய்தி கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளே அதிகளவில் கொல்லப்பட்டனர். “காலை 7 மணியளவில் மாணவிகள் ஒன்றுகூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போதைய யுத்த சூழ்நிலை குறித்து அறிய வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போதே விமானங்கள் வட்டமிட்டு 16 குண்டுகளை அடுத்தடுத்து வீசின. செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே நேரடியாக தாக்குதலுக்கு இலக்காகினர். இதில் அதிகளவானோர் கொல்லப்பட்டதுடன் பலருக்கு பின்புறத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டன.

வேறு வேலைகளிலிருந்த மாணவிகள் அருகேயிருந்த காட்டுப் பகுதிகளுக்குள் ஓடிவிட்டனர்” என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் இடைக்கால அறிக்கை கூறுகின்றது. தீயிலிருந்தும் மின்னிலிருந்தும் எவ்வாறு தப்புவது, அதேபோல இரசாயன பதார்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாயிருப்பது, விமான தாக்குதல்களிலிருந்து எவ்வாறு தப்புவது, நாடகங்கள், இசை, நகைச்சுவை மூலமான தனிநபர் வெளிப்பாடுகள் போன்ற பயிற்சிகள் ஆசிரியர்களாலும் துறைசார் நிபுணர்களாலும் கற்பிக்கப்பட்டதாக அவ்அறிக்கை தெரிவிக்கின்றது.

Sencholai-Attack-14.08-4.jpg

இதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் கூறுகையில்; “இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர். சிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது.

Sencholai-Attack-14.08-2.jpg

ஏனெனில் அந்த வலியை பதிவுசெய்யும் ஆற்றல் இந்த வார்த்தைகளுக்கு இல்லை. இரு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் போரில் பேரினவாத அரச படைகள் பாவித்த மிகப் பயங்கரமான விமானங்கள் பல. அவை விடுதலைப் புலிகளை தாக்கியதை விட பொதுமக்களையே பலிகொண்டன. இன்று தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறி புலத்திலுள்ளவர்களானாலும் சரி வட, கிழக்குக்கு வெளியே இருக்கும் வளர்ந்தவர்களானாலும் சரி விமானத் தாக்குதல்களில் அனுபவப்பட்டவர்களாக இருப்பார்கள். அன்று ஹெலி, சீ.பிளேன், சியாமாச் செட்டி, அன்ரனோவ், சகடை ( பட்டப்பெயர்), புக்காரா என தொடங்கி தமிழரின் உயிர்குடித்த விமானங்கள் தாயகத்தின் வானில் தலைகாட்ட முடியாத நிலையில் `மிக்’ என்றும் `கிபிர்’ என்றும் `சுப்பசொனிக்’ என்றும் அப்பாவி தமிழரின் உயிர்குடிக்க அனுப்பப்படுகின்றன. இலங்கை விமானப் படைகள் தமிழர் தாயகத்தின் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஏராளம். இதில் பள்ளி மாணவர்கள், பச்சிளம் குழந்தைகளை வகைதொகையின்றி பலியெடுத்த வரலாறு மிகக் கொடியது. நாகர்கோவில் மத்திய பாடசாலை சிறார்களின் படுகொலை அன்று 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான பேச்சுக்களுடன் நாகர் கோவில் மத்திய பாடசாலை பூஞ்சோலையாக காணப்பட்டது. பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

பகல் 12.50 மணி…

ஆக்கிரமிப்பு படைகளின் `புக்காரா’ விமானங்கள் குண்டுகளை மாறி மாறி கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத பிஞ்சுகள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்த கொலை வெறிபிடித்தவர்களின் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது 40 அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர். இது பாடசாலை மாணவர்கள் படையினரால் கூண்டோடு அழிக்கப்பட்ட மற்றுமொரு சம்பவம். இதைவிட மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் ,வயோதிபர்களென எதுவித வேறுபாடுகளுமின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம். `குமுதினி’ படகில் ( நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்குமிடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள படகு) பயணித்த பலரை 1984 ஆம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது.

Sencholai-Attack-14.08-9.jpg

இதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் இழந்த உயிர்கள், உடைமைகள் ஏராளம். ஆனால் தமது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான,வொப்பான விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன. இதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளதை பதிலாக முன்வைக்கலாம். ” இனவெறி – இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது”. இலங்கையில் நடைபெறும் அராஜகங்களுக்கு இந்த பழமொழியும் நன்றாக பொருந்தும் – “பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பதே அது.

Chengchoalai-Massacre-PTK.jpg

14.08.07-Chenchoala-Memorial-5.jpg

காலம் இங்கு பேசும் கதை யாவும் இங்கு கூறும் இன வெறியன் வானரக்கன் செயலால் சோலையில் உங்கள் உதிரம் கண்ட காற்றும் இங்கு சோக கீதம் இசைக்கும் பாசம் வைத்த உறவுகள் தவிக்கின்றோம் பாரினில் உங்கள் நினைவுடன் ஏக்கத்துடன் வாழ்கிறோம் உங்களை காணும் அன் நாள் வரை உறங்காது எம் விழிகள் …

யார் மரணமும் யாரையுமே நோகவில்லை முடிவில் முள்ளிவாய்க்காலை விழுங்கி சுடுகாடாய், கனத்தது உலக தமிழரின் கல்மனசு..!

ஏனைய மாணவச் செல்வங்களுக்கும், பொதுமக்கள் அனைவருக்கும் எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம்.

Sencholaiyil-Uthirntha-Malarkal.jpg

தமிழர் தாயகம் இழந்த எமது உறவுகள் அனைவரையும் எங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல இல்லத்திலும் நினைவில் நிறுத்தி வணக்கம் செய்வோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

https://thesakkatru.com/senchcholai-bombing-14-august-2006/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

student.jpg

தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவுள்ள செஞ்சோலை படுகொலை தினத்தின் 14ஆம் ஆண்டு நினைவு

மனது மறக்காதா துயர சம்பவமான செஞ்சோலை படுகொலை சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்த போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன.

யுத்தத்தின்போது எத்துனையோ தாக்குதல்கள் தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டிருந்தன. அவற்றுள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை உருக்கும் நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன.

கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில்இ முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படையின் நான்கு அதிவேக யுத்தவிமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்தது.

அத்துடன், 129இற்கும் அதிகமான மாணவிகள் அவயவங்களை இழக்கச் செய்தது. இந்த கொடூரமான சம்பவம் இடம்பெற்ற நாள் தற்போதும் நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன.

அன்றைய தினம் கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி ஆங்காங்கே காணப்பட்டன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர். பூவாக மலரவிருந்த இளம் மொட்டுக்கள் சருகாகின.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர்இ சொல்லொனாத் துயரத்துடன் செஞ்சோலை வளாகத்தை சூழ்ந்திருந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளைகளும் உள்ளனரா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்டவர்கள் தமது பிள்ளைகள்தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் எழுத்திலடங்காதவை.

இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 14 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தாக்குதல்களுக்கு சர்வதேசங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று காலங்கள் கழிகிறதே ஒழிய நீதி கிடைக்கவில்லையென்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆண்டுகள் 14ஆன போதிலும் அன்றைய கொடூர தாக்குதல்களும் கோரமான உயிரிழப்புகளும் எம் மனக்கண் முன்னே தற்போதும் ஆறாத சுவடுகளாய் பதிந்துள்ளன.

எனினும் அன்று பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்த சிறுமிகள் அவர்களின் நிலைமை தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

http://athavannews.com/தமிழர்கள்-மனதில்-ஆறாத-ரண/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14 ம் ஆண்டு நினைவு சுமந்த செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்…!

செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.
 
முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 14.08.2006 அன்று சிங்கள அரசுகளின் வான்படையின் குண்டு வீச்ச்சுத்தாக்குதலில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் 14 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் .!
 
செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்………!
 
14_08_06_mullaitivu_09.jpgதமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.
 
முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
14_08_06_chencholai.jpgகாயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர். கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது.
 
“பத்து நாளும் என்னால விட்டிட்டு இருக்க ஏலாதுண்டு முதலில் மாட்டேன் என்டுதான் சொன்னன். ஆனால், நல்ல விஷயம் எண்டு எல்லாரும் சொன்னதால தான் விட்டனான். கடைசியில இப்படியாப்போச்சு” என தலையில் அடித்து கதறிய தாயாரொருவர் தன் மகளைத் தூக்கி வா வீட்ட போவோம் என கேட்டதும் அனைவரும் கதறியழுதனர்.
செஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.
14_08_06_mullaitivu_07.jpg
செஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள். இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹகிலிய ரம்புக்வெல,” கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்” என தமது அரசும் இனவெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார்.
ஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் `யுனிசெப்’பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது. எனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த ஜனாதிபதி இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார்.
 
இதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு பழிக்குப் பழிவாங்கிவிடுவார்களென்ற அச்சத்தில் தெற்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அங்கே வல்லிபுனத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்பதனை அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள். பத்துநாள் பயிற்சிப்பட்டறை உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார்?
14_08_06_mullaitivu_06.jpg
ஏன் அங்கு கூடியிருந்தார்கள்?
 
காலை 7 மணிக்கு அவர்கள் என்ன செய்தார்கள்?
 
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வல்லிபுனம் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாகவுள்ள பகுதி. குடாநாட்டிலிருந்து 1995 இல் இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றவர்களுக்கு இதை நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். அங்கு தான் `செஞ்சோலை’ வளாகமும் உள்ளது. செஞ்சோலை என்றதும் தாயகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும்.
 
14_08_06_purpose_01.jpg14_08_06_timetable_02.jpg
இந்த வளாகத்திலுள்ள அருகில் பல நலன்புரி நிலையங்கள், வேறு பல சிறுவர் இல்லங்கள் என பலவுள்ளன. மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த ஒரு பகுதியே வல்லிபுனம்.
 
இந்த செஞ்சோலை வளாகத்தில் தற்போது செஞ்சோலை சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்தவர்களில்லை. இந்த வருடம் ஜனவரியில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு சிறுமியர்கள் சென்றுவிட்டனர்.
 
14_08_2006_chencholai_2.jpgஆனால், வள்ளிபுனம் – செஞ்சோலை வளாகம் தொடர்ந்தும் செஞ்சோலை வளாகமாகவே உள்ளது. இங்கு வதிவிட பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்படுவது வழமையானதொன்று. காரணம் ஏற்கனவே சிறுமியர் இல்லமாக இது செயற்பட்டமையால் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இவ்வளாகம் இருப்பதே. அத்துடன், இந்த வளாகம் ஐ.நா. அமைப்புகளூடாக பயிற்சிப் பட்டறைக்கான இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் இங்க பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றுவந்தன. அதேபோன்றதொரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இலங்கை அரசின் விமானப் படை கோரத்தாண்டவமாடி தமிழரை துன்பத்தில் வாடவிட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் இச்செஞ்சோலை வளாகத்தில் க.பொ.த. உயர்தர மாணவிகளுக்கான 10 நாள் வதிவிட பயிற்சி நெறி நடைபெற்றுவந்தது.
 
14_08_2006_sench_tro.jpg
இந்தப் பயிற்சி நெறியின் 3 ஆம் நாளின் போதே இப்பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் குழு வேலை போன்றவற்றில் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதனை நோக்கமாகக் கொண்டே இப்பயிற்சிப் பட்டறை நடைபெற்று வந்தது. இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 க.பொ.த. உயர்தர மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. செய்தி கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளே அதிகளவில் கொல்லப்பட்டனர். “காலை 7 மணியளவில் மாணவிகள் ஒன்றுகூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போதைய யுத்த சூழ்நிலை குறித்து அறிய வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
 
இதன்போதே விமானங்கள் வட்டமிட்டு 16 குண்டுகளை அடுத்தடுத்து வீசின. செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே நேரடியாக தாக்குதலுக்கு இலக்காகினர். இதில் அதிகளவானோர் கொல்லப்பட்டதுடன் பலருக்கு பின்புறத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டன.
 
வேறு வேலைகளிலிருந்த மாணவிகள் அருகேயிருந்த காட்டுப் பகுதிகளுக்குள் ஓடிவிட்டனர்” என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் இடைக்கால அறிக்கை கூறுகின்றது. தீயிலிருந்தும் மின்னிலிருந்தும் எவ்வாறு தப்புவது, அதேபோல இரசாயன பதார்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாயிருப்பது, விமான தாக்குதல்களிலிருந்து எவ்வாறு தப்புவது, நாடகங்கள், இசை, நகைச்சுவை மூலமான தனிநபர் வெளிப்பாடுகள் போன்ற பயிற்சிகள் ஆசிரியர்களாலும் துறைசார் நிபுணர்களாலும் கற்பிக்கப்பட்டதாக அவ்அறிக்கை தெரிவிக்கின்றது.
 
இதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் கூறுகையில்; “இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர். சிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது.
Senchloai_7.jpg
ஏனெனில் அந்த வலியை பதிவுசெய்யும் ஆற்றல் இந்த வார்த்தைகளுக்கு இல்லை. இரு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் போரில் பேரினவாத அரச படைகள் பாவித்த மிகப் பயங்கரமான விமானங்கள் பல. அவை விடுதலைப் புலிகளை தாக்கியதை விட பொதுமக்களையே பலிகொண்டன. இன்று தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறி புலத்திலுள்ளவர்களானாலும் சரி வட, கிழக்குக்கு வெளியே இருக்கும் வளர்ந்தவர்களானாலும் சரி விமானத் தாக்குதல்களில் அனுபவப்பட்டவர்களாக இருப்பார்கள். அன்று ஹெலி, சீ.பிளேன், சியாமாச் செட்டி, அன்ரனோவ், சகடை ( பட்டப்பெயர்), புக்காரா என தொடங்கி தமிழரின் உயிர்குடித்த விமானங்கள் தாயகத்தின் வானில் தலைகாட்ட முடியாத நிலையில் `மிக்’ என்றும் `கிபிர்’ என்றும் `சுப்பசொனிக்’ என்றும் அப்பாவி தமிழரின் உயிர்குடிக்க அனுப்பப்படுகின்றன. இலங்கை விமானப் படைகள் தமிழர் தாயகத்தின் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஏராளம். இதில் பள்ளி மாணவர்கள், பச்சிளம் குழந்தைகளை வகைதொகையின்றி பலியெடுத்த வரலாறு மிகக் கொடியது. நாகர்கோவில் மத்திய பாடசாலை சிறார்களின் படுகொலை அன்று 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான பேச்சுக்களுடன் நாகர் கோவில் மத்திய பாடசாலை பூஞ்சோலையாக காணப்பட்டது. பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
 
பகல் 12.50 மணி…
 
ஆக்கிரமிப்பு படைகளின் `புக்காரா’ விமானங்கள் குண்டுகளை மாறி மாறி கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத பிஞ்சுகள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்த கொலை வெறிபிடித்தவர்களின் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது 40 அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர். இது பாடசாலை மாணவர்கள் படையினரால் கூண்டோடு அழிக்கப்பட்ட மற்றுமொரு சம்பவம். இதைவிட மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் ,வயோதிபர்களென எதுவித வேறுபாடுகளுமின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம். `குமுதினி’ படகில் ( நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்குமிடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள படகு) பயணித்த பலரை 1984 ஆம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது.
 
இதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் இழந்த உயிர்கள், உடைமைகள் ஏராளம். ஆனால் தமது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான,வொப்பான விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன. இதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளதை பதிலாக முன்வைக்கலாம். ” இனவெறி – இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது”. இலங்கையில் நடைபெறும் அராஜகங்களுக்கு இந்த பழமொழியும் நன்றாக பொருந்தும் – “பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பதே அது.
 
தமிழர் தாயகம் இழந்த எமது உறவுகள் அனைவரையும் எங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல இல்லத்திலும் நினைவில் நிறுத்தி வணக்கம் செய்வோம்.
 
vallipunam_1.jpgvallipunam_2.jpgvallipunam_3.jpgvallipunam_4.jpgvallipunam_5.jpgvallipunam_6.jpgvallipunam_7.jpgvallipunam_8.jpg
vallipunam_9.jpg
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலையில் உயிரிழந்த ஒவ்வொரு மாணவியின் பெயரிலும் வகுப்பறை: முல்லைத்தீவில் நெகிழ வைத்த தனியார் கல்வி நிலையம்!
 
received_248362279464853-696x521.jpeg

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படையின் போர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளடங்களாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டும் 150 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த இப்படுகொலை நிகழ்வினுடைய 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று தமிழர் தாயகப் பகுதி எங்கும் இடம்பெற்று வருகின்ற நிலையில் முல்லைத்தீவு நகர் பகுதியில் இயங்கி வருகின்ற பிரதான தனியார் கல்வி நிலையம் ஆகிய நெய்தல் கல்வி நிலையத்தின் வகுப்பறைகளுக்கு செஞ்சோலையில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக பெயர்ப்பலகைகள் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டதோடு, குறித்த மாணவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் பெயர் பலகைகள் பொறிக்கப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தனர். 

received_300319907698121.jpegreceived_380090549645552.jpegreceived_823933691477479.jpegreceived_987258305034645.jpegreceived_1493268760879137.jpegreceived_3243016002443362.jpegreceived_3730676026951937.jpegreceived_595681121148484.jpeg
 
https://www.pagetamil.com/140209/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலைபடுகொலை_14ஆகஸ்ட்_2006

117781645_163907341971604_90831034749311முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்பிரிவில் உள்ள அவள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஓகஸ்ட் 10ஆம் நாள்முதல் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கன அனர்த்த முகாமைத்துவ முதலுதவிப் பயிற்சிநெறியில் வன்னிப்பிரதேச கிளிநொச்சி, முல்லைத்தீவு கல்வி வலயங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான உயர்தர வகுப்பு மாணவிகள் பங்குபற்றியிருந்தனர். மாணவர்கள் பயிற்சி நெறியில் பங்குபற்றிக்கொண்டிருந்த வேளை இலங்கை வான்படைக்குச் சொந்தமான நான்கு கிபிர் விமானங்கள் செஞ்சோலை வளாகத்தில் 2006 ஒகஸ்ட் 14 அன்று காலை 7.30 மணியளவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கண்மூடித்தனமான மேற்கொண்டன. இக்குண்டுத்தாக்குதலில் 52 மாணவிகள் மற்றும் இரு பணியாளாக்ள் உட்பட 54பேர் உயிரிழந்தனர். 130 மாணவிகள் படுகாயமடைந்ததுடன் பல மாணவிகள் சிறு காயங்களுக்குமுள்ளாகினர். படுகாயமடைந்தவாக்ளில் மூன்று மாணவியர்களுக்கு கால்கள் துண்டிகக்ப்பட்டதுடன் மாணவி ஒருவர் கண் ஒன்றை இழந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் மேலும் காயப்படட் மூன்று மாணவிகள் முல்லைத்தீவு வைத்தியசாலையினால் கண்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைகக்ப்பட்டனர். சிறீலங்கா பயங்கரவாத விசாரணைத் திணைக்களம் உடனடியாக காயப்படட் மூன்று மாணவிகளையும் கைதுக்குள்ளாக்கினர். இறுதியாக மூன்று மாணவிகளும் விடுவிக்கப்பட்டு வன்னியிலுள்ள தமது வீட்டுக்குச்செல்ல விடுவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களுள் காயமடைந்த ஒரு மாணவி வவுனியாவில் இறந்துவிட்டார். மற்றைய இரு மாணவிகளும் உடனடியாக கண்டி வைத்தியசாலைக்கு திரும்ப எடுத்துச் செல்லப்பட்டனர். சில மாதங்களின்பின் இரு மாணவிகளும் எங்கே தங்குகின்றார்கள் என்பதே மர்மமாக மாறியது அவர்களது பெற்றோர்கள் மட்டும் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் அவர்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்கபப்டுகின்றனர்.ஏறத்தாழஇரு வருடங்களாக எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி இந்த இரு மாணவிகளது தடுத்துவைத்தலானது அவர்களது பெற்றோருக்கு விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது.

117833141_163907371971601_81187196004228
117544162_163907401971598_69495620282841
117399363_163907455304926_74497096786170
117392685_163907481971590_20800623291233
117337393_163907518638253_35009450279884
117444729_163907551971583_34174565141866
117718533_163907585304913_40285312679702
117435715_163907308638274_27433887405497
117781645_163907341971604_90831034749311

http://www.kuriyeedu.com/wp-content/uploads/2020/08/Sensoolai-Vadu.mp4?_=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலைகளை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்ந்திராது | தீபச்செல்வன்

sencholai-ninaivu.jpg

ஓகஸ்ட் 14 செஞ்சோலை மாணவர் இனப்படுகொலை  தினம் அனுஷ்டிக்கப்பட்டமையை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரமாகின்றது.

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவர் படுகொலை மறக்க முடியாத வடுவாகியுள்ளது. ஓகஸ்ட் 14. 2006 ஆம் ஆண்டு செஞ்சோலை படுகொலையை சிங்கள அரசு நிகழ்த்தியது. உண்மையில் செஞ்சோலைப் படுகொலைகளை உலகம் தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகள் நிகழ்ந்திராது. செஞ்சோலைப்படுகொலை என்பது பாரிய இனப்படுகொலைக்கான சிங்கள அரசின் உத்திகையாகும்.

அந்த நாளே ஒரு இருண்ட யுகத்தின் நினைவுகள் போலத்தான் இருக்கின்றன. 2006 ஓகஸ்ட் 11ஆம் திகதி சிங்கள அரசு வடக்கிற்கான பாதையை மூடி வடக்கை தனியொரு நாடாக துண்டித்து வலிந்த போரைத் தொடங்கியது. யாழ்ப்பாண மக்கள் பசியிலும் இருட்டிலும் துடித்த நாட்கள். சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம். ஏற்கனவே அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதாக சொல்லிக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் விமானததாக்குதல்களை சிங்கள அரசின் விமானப்படைகள் மேற்கொண்டு வந்தன.

போர் நிறுத்த உப்பந்தம் அமுலில் இருந்தபோதும், விமானத்தாக்குதல்கள் பாடசாலைகளை அண்டியும் வீடுகள்மீதும் நடந்தன. எல்லாம் புலிகளின் முகாம்கள் என்றே அரசால் கூறப்பட்டது. இதனை வெறுமே பதிவு செய்து கொண்டிருந்தது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு. தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் சர்வதேசத்தினாலும், போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினாலும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

இதனால் ஒன்றல்ல இரண்டல்ல, 53 மாணவிகளை கொன்று கிண்ணஸ் சாதனை பதிக்கும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டு வெற்றி பெற்றது. உலகிலேயே ஒரே தடைவையில் அதிக பெண்கள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக மாணவிகள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக சிறுவர்கள் கொல்லப்பட்ட மனித விரோதச் செயல் செஞ்சோலைப்படுகொலையாகும்.

 கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு, வலக் கல்வி அலுவலம் ஊடாக உரிய அனுமதி பெறப்பட்டு, தலைமைத்து அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி நடாத்தப்பட்டது. இப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்மீதுதான் சிங்கள அரசின் இன அழிப்பு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தினர். இதில் சுமார் 50 மாணவிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். அத்துடன் சில மாணவிகள் வவுனியா வைத்தியசாலைக்கும் கண்டி வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள்.

கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தி, அவரிடம் பொய்யான வாக்குமூலங்களை பெற்றது சிங்கள அரச ஊடகம். இறுதியில் அந்த மாணவியையும் அங்கு வைத்து கொன்றது. இந்த தாக்குதல் குறித்து அப்போதைய ஜனாதிபதி, தமிழ் இனப்படுகொலை மகிந்த ராஜபக்சே அன்றே வெளிநாட்டில் இருந்து என்ன கூறினார் தெரியுமா? செஞ்சோலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த மகிந்த ராஜபக்ச, அவர்கள் புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள், அத் தாக்குதல் எனக்கு நூறு வீத திருப்தியை தருகின்றது. நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம்.. என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிநை்த போது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள்.

இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக அந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்றேன். அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தேன். பாடசாலை அதிபர்களிலிருந்து ஆசிரியர்களிலிருந்து காயப்பட்ட மாணவர்கள்வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதிருந்தனர். காலில் பெரும் காயத்தை அடைந்த மாணவி ஒருவர் பேசமுடியால் அழுத காட்சி இப்போதும் பெருவலி தருகின்றது. அவரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்.

அப் படுகொலை குறித்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்த மூன்று மாணவிகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். 53 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்க கூடியவர்கள். இன்றிருந்தால், வைத்தியர்களாக, பொறியர்களாக, ஆசிரியர்களாக, தலைவர்களாக நம் சமூகத்திற்கு தொண்டாற்றியிருப்பார்கள். இந்த சமூகத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களை அழிப்பதும் இல்லாமல் செய்வதும்தான் சிங்கள அரசின் வேலை என்பதைதான் இப்படுகொலையும் உணர்த்துகின்றது.

கல்வி உரிமைக்காகபோராடினோம். வேலை வாய்ப்புக்காக போராடினோம். ஆனால் சிங்கள அரசோ எமது மாணவர்களை பள்ளிக்கூடங்களில் வைத்தே படுகொலை செய்தது. சந்திரிக்கா அரசு நாகர் கோவில் பாடசாலையில் விமானத்தாக்குதல் நடத்தியதில் 39 மாணவச் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். மகிந்த அரசு சமாதான ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு 53 மாணவிகளைப் படுகொலை செய்தது. இது குறித்து சர்வதேச சமூகம் எந்த கண்டனங்களையும் விடுக்கவில்லை. அப்படியிருந்தால் கொத்துக் கொத்தாக மாணவர்களையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யும் துணிவு சிங்கள அரசுக்கு வருமல்லவா?

செஞ்சோலைத்தாக்குதலில் காயமடைந்த மாணவி ஒருவர் இப்போது, ஆசிரியராக கடமையாற்றுகிறார். ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் புனிதர்களாக அவதாரம் எடுக்க சிங்கள இராணுவத்தினர் முயற்சித்தனர். பாடசாலை வாசல்களில் அவர்கள் பாதுகாப்பு என்ற பெயரில் ஆக்கிரமித்தனர். அவர்களை தாண்டி, அவர்களின் விசாரணைகளைத் தாண்டி வருவதற்கு அந்த ஆசிரியர் கடுமையாக தயங்கினர். அஞ்சினார். பத்து ஆண்டுகள் கடந்து, பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் அந்த தாக்குதலின் வடு இன்னும் நீங்கவில்லை.

இன்று செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் உலகத்தில் அதாவது இணைய ஊடகத்தில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் வலுவாக இடம்பெற்றுள்ளது. இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் இதில் பெரும் அக்கறை கொண்டு ஈடுபடுகின்றனர். என்றாவது ஒருநாள் சிங்கள அரசு இதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். அன்றுதான் இப்படுகொலையின் வடுக்கள் மறையக்கூடும்.

https://vanakkamlondon.com/news/2020/08/80640/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மூன்று மாதங்கள் கோமா நிலையில் கிடந்தது உயிர்தப்பிய ஒரு பெண்ணை சந்தித்தேன். இப்போது திருமணம் செய்து குடும்ப பெண் அவர்.

குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக மேற்கண்ட பெண் வழங்கிய தகவல்கள் அதிர்ச்சியை அழித்தன. சிறீ லங்கா அரசுக்கு நிகராக வன்னி பெருநிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தவர்களின் மீதும் குற்றம் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

செஞ்சோலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மூன்று மாதங்கள் கோமா நிலையில் கிடந்தது உயிர்தப்பிய ஒரு பெண்ணை சந்தித்தேன். இப்போது திருமணம் செய்து குடும்ப பெண் அவர்.

குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக மேற்கண்ட பெண் வழங்கிய தகவல்கள் அதிர்ச்சியை அழித்தன. சிறீ லங்கா அரசுக்கு நிகராக வன்னி பெருநிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தவர்களின் மீதும் குற்றம் உள்ளது. 

இதை பற்றி நானும் முதலில் எழுதினான்...இரு பக்கமும் பிழையை வைத்து கொண்டு ஒரு பக்கத்திற்கு எதிராய் சர்வதேசத்திடம் நீதி கேட்டால் எப்படி கிடைக்கும்?

Link to comment
Share on other sites

4 hours ago, ரதி said:

இதை பற்றி நானும் முதலில் எழுதினான்...இரு பக்கமும் பிழையை வைத்து கொண்டு ஒரு பக்கத்திற்கு எதிராய் சர்வதேசத்திடம் நீதி கேட்டால் எப்படி கிடைக்கும்?

நீதியான விசாரணையை தானே கேட்கிறோம். எங்கள் பக்கத்துக்கு சார்பாக விசாரணை முடிவுகளை தரும்படி யாராவது கேட்டார்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குண்டு வெடிப்பில் பலியான குழந்தைகள் பொதுமக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறீலங்கா வான் படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளின் நினைவு நாள் இன்று

senchsolai இலக்கு இணையம் | Tamil News | ilakku

https://www.ilakku.org/

காவல்துறையினர், இராணுவத்தினரின் இடையூறுக்கு மத்தியில் செஞ்சோலை சிறுவர் இல்ல படுகொலை நினைவேந்தல்

unnamed 4 1 காவல்துறையினர், இராணுவத்தினரின் இடையூறுக்கு மத்தியில் செஞ்சோலை சிறுவர் இல்ல படுகொலை நினைவேந்தல்

கடந்த 14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில், சிறீலங்கா வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு வீச்ச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 54 சிறுமிகள் மற்றும் 7 பணியாளர்களின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வீட்டின் முன் இன்று காலை இடம்பெற்றது.

அதே நேரம் இன்றுகாலை செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வள்ளிபுனம் இடைக்கட்டு வீதி முழுவதும் இராணுவம், காவல்துறையினர், புலனாய்வாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், வழமையாக நினைவேந்தல் இடம்பெறும் பகுதிக்கு படுகொலை செய்யப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பெற்றோர் சிலர் இராணுவம், காவல்துறையினரால்  விசாரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்த விடாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/tamil-community-remembers-sencholai-massacre-in-midst-of-security-forces-threats/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குண்டு வெடிப்பில் பலியான குழந்தைகள் பொதுமக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலையில் படுகொலை – முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அஞ்சிலி

received 352703209651580 செஞ்சோலையில் படுகொலை - முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அஞ்சிலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தை இலக்கு வைத்து சிறீலங்கா விமானப்படை கிபிர் விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில்  மாணவிகள் 54 பேரும் சிறுவர் இல்ல பணியாளர்கள் 7 பேரும் உள்ளடங்கலாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டதன் 15 ம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூரப்பட்டது.

received 926830367901339 செஞ்சோலையில் படுகொலை - முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அஞ்சிலி

வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில் விமான தாக்குதல் நடாத்தப்பட்ட சிறுவர் இல்ல வளாகத்தில் அனுஸ்ரிக்கப்படுவதோடு தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழமை. இருப்பினும் இம்முறை குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை  அனுஸ்ரிக்க காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும்  புலனாய்வாளர்கள் தடை விதித்துள்ளனர்.

received 533489654538823 செஞ்சோலையில் படுகொலை - முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அஞ்சிலி

இந்நிலையில்,  முல்லைத்தீவு மகா வித்தியாலய முன்றலுக்கு வருகை தந்த தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் நினைவாக சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.

  VideoCapture 20210814 101156 செஞ்சோலையில் படுகொலை - முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அஞ்சிலி

அதே போல், ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன்   செஞ்சோலைப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவு கூரப்பட்டது.

vlcsnap 2021 08 14 11h52m05s904 செஞ்சோலையில் படுகொலை - முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அஞ்சிலி

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகனேசன் அவர்கள் தனது இல்லத்தில் உயிரிழந்த உறவுகள் நினைவாக சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி  மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

WhatsApp Image 2021 08 14 at 9.39.02 PM செஞ்சோலையில் படுகொலை - முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அஞ்சிலி

அத்துடன் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் செஞ்சோலை படுகொலை நிகழ்வு நடைபெற்றது.

https://www.ilakku.org/15th-year-remembrance-of-chencholai-massacre-carried-out-by-sri-lanka-air-force/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.