Jump to content

விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா?

Recommended Posts

Just now, nedukkalapoovan said:

குறித்த செய்திக் குறிப்பை.. மீள கண்டறிந்து மீளாய்வு செய்து கருத்தெழுத நேரமின்மை காரணமாக ஏற்பட்ட கருத்துத் தவறு. அது திருப்படுதல் தவறன்று. திருத்தப்படுதல்.. கருத்தியல் பண்பாகும். கருத்தியல் பண்பற்றவர்களுக்கு அவல்.. வடை.. வாய்ப்பனாகவே தெரியும். 

எல்லாக்கருத்தும் அப்படித்தானே இருக்குது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

குறித்த செய்திக் குறிப்பை.. மீள கண்டறிந்து மீளாய்வு செய்து கருத்தெழுத நேரமின்மை காரணமாக ஏற்பட்ட கருத்துத் தவறு. அது திருப்படுதல் தவறன்று. திருத்தப்படுதல்.. கருத்தியல் பண்பாகும். கருத்தியல் பண்பற்றவர்களுக்கு அவல்.. வடை.. வாய்ப்பனாகவே தெரியும். 

அது மனிதனின் உயர்ந்த பண்பு, தவற்றை திருந்திய பின்னும் எள்ளி நகையாடுவது அழகல்ல ஒரு மனிதனுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

குறித்த செய்திக் குறிப்பை.. மீள கண்டறிந்து மீளாய்வு செய்து கருத்தெழுத நேரமின்மை காரணமாக ஏற்பட்ட கருத்துத் தவறு. அது திருப்படுதல் தவறன்று. திருத்தப்படுதல்.. கருத்தியல் பண்பாகும். கருத்தியல் பண்பற்றவர்களுக்கு அவல்.. வடை.. வாய்ப்பனாகவே தெரியும். 

எனக்கும் குழப்பம் இருந்தது. குருபரனைப் பற்றித் தெரியும். ஆனால் மணிவண்ணனைப் பற்றி அதிகம் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

எல்லாக்கருத்தும் அப்படித்தானே இருக்குது..

உங்களின் உளறலைத் தானே சொல்கிறீர்கள். டக்கி.. காவடி இன்னும் கனகாலத்துக்கு எடுபடாது. 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

உங்களின் உளறலைத் தானே சொல்கிறீர்கள். டக்கி.. காவடி இன்னும் கனகாலத்துக்கு எடுபடாது. 

ஆனால் பதில் சொல்லமாடீர்கள். உளறல், பணம், சோம்பு எண்டு அதற்ககு பின்னல் கோழைகள் மாதிரி ஒளித்துக்கொள்ள வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Robinson cruso said:

ஆனால் பதில் சொல்லமாடீர்கள். உளறல், பணம், சோம்பு எண்டு அதற்ககு பின்னல் கோழைகள் மாதிரி ஒளித்துக்கொள்ள வேண்டாம்.

பதிலா.. கேள்விக்கே இடமில்லை. இதில் பதில். நீங்கள் டக்கிக்கு என்ன தான் சோப்பு போட்டு வெளிர்க்க வைக்க முயன்றாலும்.. தாடியரின் அடாவடி அபகரிப்பு அரசியல் எமக்கு எந்த விடிவையும் தராது என்பதை அநேக மக்கள் உணர்ந்தே உள்ளனர். என்ன வறுமைக் கோட்டின் கீழ் ஒரு சில பகுதி மக்களை வைச்சிருந்து அவர்களை வாக்குப் போட பாவிப்பதை மட்டும் செய்யலாம். அதுதான் வீணை காட்டும் அபகரிப்பு அபிவிருத்தி. 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

பதிலா.. கேள்விக்கே இடமில்லை. இதில் பதில். நீங்கள் டக்கிக்கு என்ன தான் சோப்பு போட்டு வெளிர்க்க வைக்க முயன்றாலும்.. தாடியரின் அடாவடி அபகரிப்பு அரசியல் எமக்கு எந்த விடிவையும் தராது என்பதை அநேக மக்கள் உணர்ந்தே உள்ளனர். என்ன வறுமைக் கோட்டின் கீழ் ஒரு சில பகுதி மக்களை வைச்சிருந்து அவர்களை வாக்குப் போட பாவிப்பதை மட்டும் செய்யலாம். அதுதான் வீணை காட்டும் அபிவிருத்தி. 

டாக்குக்கு சோப்பு போடடதுமில்லை. போடப்போவதுமில்லை. இருந்தாலும் மக்கள் ஆதரவு அதிகரிப்பதை நீங்கள் உணர வேண்டும். அவர் சேவை செய்யவில்லை எண்டு சொல்லுவம்.

தமிழ் தேசியம் பேசி அங்கு போகின்றவர்கள் ரோட்டில் நின்று அவலப்படும் மக்களுக்கு, பட்டினியால் வாடும் மக்களுக்கு, வீடற்ற மக்களுக்கு என்ன செய்யபோகிறார்கள் எண்டு கேட்டு சொல்லுங்கள். வேறு ஒன்றும் தேவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கட்சி எடுத்த முடிவை மத்தியகுழுவில் கேள்வி கேட்டார் என குறிப்பிட்டு, மணிவண்ணனை கட்சியின் பொறுப்புக்களில் இருந்து நீக்கியதாக அறிவிப்பு.

இது கவுண்டமணியை செந்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் தேவாங்கு என்று சொன்னதுக்கு இப்போ வந்து அடிக்கிற நகைச்சுவை மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எனக்கும் குழப்பம் இருந்தது. குருபரனைப் பற்றித் தெரியும். ஆனால் மணிவண்ணனைப் பற்றி அதிகம் தெரியாது.

நல்ல காலம் குருபரன் தப்பிட்டார் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

குறித்த செய்திக் குறிப்பை.. மீள கண்டறிந்து மீளாய்வு செய்து கருத்தெழுத நேரமின்மை காரணமாக ஏற்பட்ட கருத்துத் தவறு. அது திருப்படுதல் தவறன்று. திருத்தப்படுதல்.. கருத்தியல் பண்பாகும். கருத்தியல் பண்பற்றவர்களுக்கு அவல்.. வடை.. வாய்ப்பனாகவே தெரியும். 

உங்கள் நாகரீகத்துக்கு நன்றி. இனிமேலாவது தயவு செய்து நின்று நிதானிச்சு என்ன எழுதுகிறோம் என்று யோசிச்சு பொறுமையா சுருக்கமாக எழுதுங்கோ அண்ணாச்சி. அது உங்களுக்கும் வாசிக்கிற ஆக்களுக்கும் நல்லது.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் குறித்த முடிவை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளோம்; கஜேந்திரகுமார்

August 15, 2020

gajen-300x151.png

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை நீக்கும் முடிவை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளோம். இன்று அவருக்கு பதிவு தபாலில் அனுப்பி வைப்போம். அதை படித்து விட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்” என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு கூடி ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. விசேடமாக மணிவண்ணன் தொடர்பாக பேசி சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளை நாங்கள் நேற்று இரவு எழுத்துமூலமாக மணிவண்ணனிற்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டது. அந்த அறிவித்தல் பதிவு தபாலில் இன்று அனுப்பி வைக்கப்படும். அதை படித்து விட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்” என்றார்.

http://thinakkural.lk/article/62615

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முதல்வன் said:

உங்கள் நாகரீகத்துக்கு நன்றி. இனிமேலாவது தயவு செய்து நின்று நிதானிச்சு என்ன எழுதுகிறோம் என்று யோசிச்சு பொறுமையா சுருக்கமாக எழுதுங்கோ அண்ணாச்சி. அது உங்களுக்கும் வாசிக்கிற ஆக்களுக்கும் நல்லது.😀

உங்கள் அறிவுரைக்கு ரெம்ப நன்றி. அதெப்படி நாங்க அண்ணாச்சி.. தம்பியாச்சி..??! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

பதவியேற்க முன்னமே பட்டம் கொடுத்தாயிற்று 🤣

இப்படித்தான் கருணாவைப்பற்றித் தேசியத்தலைவருக்கு நிறைய முறைப்பாடுகள் சென்றன் ஆனால் அதை அவர் நம்பவில்லை இறுதிவரை அவன் என்னால் வளர்க்கப்பட்டவன் ஆகவே பிழைவிடமாட்டான் என்னை ஒருக்கால் அவன் சந்திச்சபின்பு  பாருங்கோவன் எனக்கூறியவர். 

சமூகம்பற்றிய  அக்கறை இருக்கவேண்டும் ஆனால் மணிவண்ணன் நீதிமன்றில் ஆயராகும் வழக்குகள் எல்லாமே யாழ் குடாநாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் காடையர்கூட்டத்தினதாகும். இந்தக்காடையர்கள்தான் சுதுமலையில் நடைபெறவிருந்த கூட்டத்தைக் கலைச்சவையள் சும்ம இல்லை வாள் கத்திகொண்டு. அடுதநாள் கஜனையும் கஜேந்திரனையும் மணிவண்ணன் சந்திச்சவர் ஆனால் இதுபற்றி அவர் வாய்திறக்கவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்தது அது எனது கைகளை மீறிப்போய்விட்டது எதிர்காலத்தில் இப்படி நடக்காது என எதுவும் கூறவில்லை.

மணிவண்ணனை கட்சியிலிருந்து முழுவதுமாக அகற்றவில்லை  அவரது பதவிகளைத் திரும்பப்பெறப்பட்டிருக்கு இல்லையேல் சுமந்திரனைப்போல் அவரும் செய்தித் தொடர்பாளராக கண்டதையும் கூறி குழப்புவார் சுதுமலைக் கூட்டத்தைக் குழப்பிப்போட்டு ஒண்டும் தெரியாதவராக நின்றவர் நாளை எதுவும் செய்யமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணி நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன..? சில்லறை காரணத்தை கூறிய தமிழ்தேசிய மக்கள் முன்னணி..

Mani-TNPF-Vakeesam-01-1024x976.jpg

மணிவண்ணன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு கட்சியின் மத்திய குழு சில சில்லறை காரணங்களை முன் வைத்திருக்கின்றது.

குறிப்பாக கடந்த முறை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தமை.

நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது சிறு சிறு குழுக்களை அமைத்து செயற்பட்டமை.

புலம்பெயர் தேசத்தில் கட்சிக்கு எதிராக செயற்படுபவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நபர்களுடன் தொடர்புகளை பேணியமை.

ஆகிய குற்றங்கள் மணிவண்ணன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/19915

Link to comment
Share on other sites

4 hours ago, Elugnajiru said:

இப்படித்தான் கருணாவைப்பற்றித் தேசியத்தலைவருக்கு நிறைய முறைப்பாடுகள் சென்றன் ஆனால் அதை அவர் நம்பவில்லை இறுதிவரை அவன் என்னால் வளர்க்கப்பட்டவன் ஆகவே பிழைவிடமாட்டான் என்னை ஒருக்கால் அவன் சந்திச்சபின்பு  பாருங்கோவன் எனக்கூறியவர். 

என்ன துணிச்சல் இருந்தால் இப்படி தேசியத்தலைவரின் தலைமைத்துவ முடிவுகளிலே குற்றம் காண்பீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் எப்போதாவது வரவேண்டும்தானே

இப்படித்தான் தேசியத்தலைவரது வீரச்சவை அறிவிப்பதில் நீண்டகாலம் இழுத்தடிச்சனீங்கள். இன்னமும் நிறையவே இருக்கு காலம் கருதி எழுதாமல் இருக்கிறேன்.

நீங்கள்  நக்கலாக எழுதாமல் உணர்வாக எழுதினால் என்னால் சொல்லக்குடியது என்னவெனில் "சுடுங்கோ என்னை"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் தொடர்பான விவகாரத்தின் உண்மை நிலையை கட்சியும் மணிவண்ணனும் தெளிவு படுத்த வேண்டும்.கட்சியின் கொள்கைக்கு எதிராக பொதுவெளியில் மணிவண்ணனின் செயற்பாடோ பேச்சுக்கள் இருக்கவில்லை.பிரிவது ,பிரிப்பது சுலபம் சேர்ப்பது கடினம் .இதை இரண்டு தரப்பும் உணரவேண்டும்.கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் வருமிடத்து அனைவரும் கலந்து பேசி பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துடன் இணைந்து(மனக்கசப்புகள் இருப்பினும்)செயற்படவேண்டும். ஆதரவளித்த மக்களை வெறுப்பேற்றும் முயற்சிகளை செய்ய வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.வெண்ணை திரண்டு வரும்போது தாளியை உடைக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Elugnajiru said:

இப்படித்தான் கருணாவைப்பற்றித் தேசியத்தலைவருக்கு நிறைய முறைப்பாடுகள் சென்றன் ஆனால் அதை அவர் நம்பவில்லை இறுதிவரை அவன் என்னால் வளர்க்கப்பட்டவன் ஆகவே பிழைவிடமாட்டான் என்னை ஒருக்கால் அவன் சந்திச்சபின்பு  பாருங்கோவன் எனக்கூறியவர். 

சமூகம்பற்றிய  அக்கறை இருக்கவேண்டும் ஆனால் மணிவண்ணன் நீதிமன்றில் ஆயராகும் வழக்குகள் எல்லாமே யாழ் குடாநாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் காடையர்கூட்டத்தினதாகும். இந்தக்காடையர்கள்தான் சுதுமலையில் நடைபெறவிருந்த கூட்டத்தைக் கலைச்சவையள் சும்ம இல்லை வாள் கத்திகொண்டு. அடுதநாள் கஜனையும் கஜேந்திரனையும் மணிவண்ணன் சந்திச்சவர் ஆனால் இதுபற்றி அவர் வாய்திறக்கவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்தது அது எனது கைகளை மீறிப்போய்விட்டது எதிர்காலத்தில் இப்படி நடக்காது என எதுவும் கூறவில்லை.

மணிவண்ணனை கட்சியிலிருந்து முழுவதுமாக அகற்றவில்லை  அவரது பதவிகளைத் திரும்பப்பெறப்பட்டிருக்கு இல்லையேல் சுமந்திரனைப்போல் அவரும் செய்தித் தொடர்பாளராக கண்டதையும் கூறி குழப்புவார் சுதுமலைக் கூட்டத்தைக் குழப்பிப்போட்டு ஒண்டும் தெரியாதவராக நின்றவர் நாளை எதுவும் செய்யமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

நான் சொல்லேல்ல தீவிர தமிழ் தேசியம் கதைப்பவர்கள் தலைவரை துரோகி என்று சொல்லும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை என்று அது தான் நடந்து கொண்டு இருக்குது.

எனக்கு உண்மையிலேயே மணிவண்ணனை பற்றி தெரியாது ...ஒத்துக் கொள்கிறேன் ....என்னுடைய கேள்வி எல்லாம் ஒன்றே ஒன்று தான்  அவரில் பிழை இருந்தால், ஏன் அவருக்கு தேர்தலில் சீட்டு கொடுத்தனீங்கள்?
 
Link to comment
Share on other sites

தேசியத்திற்கு  எதிராக செயற்படுகிறார்  என்று அவரை போட்டுத்தள்ளும் காலம் போய் அவரை நீக்கியுள்ளோம் என்று கூறும் காலம் வந்தது ஒரு முன்னேற்றம் தான். தமிழ் தேசியததிற்காக  போராடுபவர்களுக்கு காலம் அளித்த நிர்ப்பந்தம்.  இவ்வாறாக நிர்பந்தங்களால் மட்டும் எமது செயல்முறைகளை மாற்றுவதோடு நின்றுவிடாது நாமாவே எமது தவறுகளை உணர்ந்து எம்மை மாற்றிக்கொண்டு தமிழ் தேசியத்ததை மிளிரவைக்க எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.