Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் அரசாங்கத்தில் இணைவாரா??


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் அரசாங்கத்தில் இணைவாரா??

 
August 14, 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே குறித்த தகவலை அனுப்பியுள்ளார்.

tna.jpg

இருப்பினும், அரசாங்கம் அதற்கு இன்னும் சாதகமான பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் கட்சிக் குள்ளான உள் பிரிவு காரணமாக பாதி பேர் விரக்தி யடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/62268

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் கட்சி மாறுவார் என்பது அவர் தேர்தலில் நிக்கும் போதே தெரிந்தது தானே 😂....அவரிடம் காசை வாங்கிக் கொண்டு சீட்டை கொடுக்கும் போதே கூட்டமைப்பு யோசித்து  இருக்க வேண்டும்...மங்களாவையே நிக்க வைத்து இருக்கலாம் ...அவர்களுக்கு திறமையானவர்கள் உள்ளுக்குள் வருவதில் விருப்பமில்லை தங்களுக்கு போட்டியாய் வந்து விடுவார்களோ என்ற பயம் .

எப்ப மாவை ,சம்,சும்,துரை கட்சியை விட்டுப் போகினமோ அப்ப கட்சி  ஓரளவுக்கு உருப்படும் ...அது வரை விமோசனம் இல்லை 
 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்த கொரனாவுக்கு எதிர்ப்பாற்றல் வளர்த்தல் என்று நீங்கள் சொல்வது  நோய்க்கான எதிர்ப்புச் சக்தியா? கொரனாவைரசுக்கு herd immunity எனும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் காட்டவில்லை. எட்டுப் பேருக்கு  தொற்று வந்தால், அதில் ஒருவருக்குத் தான் நோயில் இருந்து காக்கும் வலிமை கொண்ட பிறபொருளெதிரிகள் (antibodies)  உருவாகும் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கண்டறிந்தார்கள். தடுப்பூசி வேறாகச் செயல்படுவதால் அது பாதுகாப்பை வழங்கும்! ஆனால், கொரனா பரவ அனுமதித்தால் எதிர்ப்பாற்றல் பரவும் என்பது மிகவும் தவறான தகவல், மக்கள் இதை நம்பினால் தொற்றுகளும் மரணங்களும் அதிகரிக்கும்!  அவதானமாக எதையும் செய்வதே இப்போதைக்கு ஒரே வழி.
  • நானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும் மகளின் திருமணம் 2019 நவம்பரில் பதிவுத்திருமணம் நடைபெற்றது 2020 செப்ரெம்பரில் திருமணவிழா என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது மார்ச்சில் கொரோனா வந்திட்டுது என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வருவதால் ஆனி ஆடியில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தது . திருமண விழாக்கள் செய்யலாம் ஆனால் 150 விருந்தினருடன் என்ற கட்டுப்பாட்டுத் தளர்வில் எல்லாமே சடுதியாக நடந்தேறியது இரண்டு வாரங்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்து மிகவும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக 80 விருந்தாளிகளை அழைக்க இரு வீட்டாரும் முடிவு செய்து அழைப்பும் விடுத்தாயிற்று . ஆவணி நடுவிற்குப்பின்னர் நல்ல நாள் இருக்கு எண்டு அய்யரும் சம்மதம் தந்திட்டார் இருந்தாலும் இது கத்தோலிக்க முறைப்படியான திருமணம் . தேவாலயத்தில் குருவை மூன்று நாலு முறை பாத்து கதைத்து இரு வாரங்களில் அவரும் அந்தத் தேதிக்கு ஓகே பண்ணீட்டார்   கத்தொலிக்க திருமணத்தில் அய்யருக்கு என்ன வேலை என்று கேட்கக்கூடாது எங்கள் சனம் எங்கை போனாலும் இந்தச் சாத்திர சம்பிரதாயத்தைக் கைவிடாயினம் பாருங்கோ மாப்பிளைக்கும் பெண்ணிற்கும் திருமண நாளுக்கு முதல் நாள் வரை வேலை திடீரென்று லீவு கிடைக்கவில்லை .இது திருமணத்திற்கு முதல் நாட்கள் ஆரம்பமாகும் கூத்துக்களைக் கட்டுப்படுத்த உதவியது. மகிழ்ச்சி. எழுத்து நடந்தபோது ஏற்பட்ட சில குளறுபடிகளை மனதில் வைத்து இந்தமுறை எல்லாம் சரியாக நடக்கவேண்டும் என்பதே முன்நின்றது . கொரோனா குறைவதால் அதைப்பற்றிப் பெரிதாக்க கணக்கில் எடுக்கவில்லை இருந்தாலும் இந்த இரண்டாவது அலை என்ற ஒரு மனப்பீதி ஒரு மூலையில் இருந்தது. மண்டபம் ஓகே சாப்பாடும் ஓகே இங்கே கேட்டரிங் செய்பவர்கள் தமிழர்கள் அதிகமாக இருந்தாலும் ஒருவரே பிரபல்யம் , எழுத்துக்கும் அவரிடம் சாப்பாடு எடுத்தபடியால் பிரச்னை இருக்கவில்லை.   திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்கும்போது கொரோனா இரண்டாவது முறை தலையை நீட்ட ஆரம்பித்துவிட்டது பழைய கட்டுப்பாடுகள் திரும்பி வரலாம் குடும்பக் கொண்டாட்டங்கள் தடை ..அது-- இது-- எனப் பலரும் பலவிதமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள் . ஆனாலும் இங்கே அரசாங்க அறிவிப்புக்களை மட்டுமே கவனத்தில் எடுத்து நாட்களும் நகர்ந்தன. கொரோனாவை காரணமாக்கி திருமணம் தடைப்படுவதை யாரும் விரும்பவில்லை அது சகுனப்பிழையாம் எண்ட கதைகளும் வந்து சென்றன .   நடப்பது எல்லாம் நல்லதே என்ற பாணியில் அதை அப்படியே விட்டுவிடாமல் முதல் நாள் ஒரு முடிவு எடுக்கப்பட்டது தேவாலயத்தினுள் சகலரும் முகமூடி அணிய வேண்டும் இருக்கையைத்தவிர... யாரும் இருந்த இடத்தைவிட்டு தெரிந்தவர்களைக் கண்டவுடன் இடமாற்றம் செய்யக்கூடாது... ஒரே குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் ஒரே இருக்கையில் அருகருகே இருக்க வேண்டும்... மற்றவர்கள் ஒரு இருக்கையில் இடைவெளிவிட்டு இருவரோ மூவரோ மட்டுமே இருக்கவேண்டும்..... தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்ட புகைப்படப்பிடிப்பாளரும் காணொளிப்பதிவாளரும் மட்டுமே தங்களுக்கேற்றவாறு இடம்மாறலாம்..... யாரும் மணமக்களை நெருங்கிப் புகைப்படம் மற்றும் காணொளி பிடிக்க முடியாது.... தாலி கட்டி தேவாலய சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் முகமூடியுடன் விரைவாக ஆனாலும் அமைதியாக இடைவெளிவிட்டு விருந்தினர்கள் வெளியேற வேண்டும்............ வெளியே கத்தோலிக்க முறைப்படி புறா வேறை பறக்கவிடவும் ஏற்பாடு செய்யப்பட்டது.... அப்போது கூட யாரும் நெருங்கி நிற்காமல் இருக்க வேண்டும் விரைவாக அதை முடிக்க வேண்டும்.........   இப்படி சுகாதார சேவைகள் நிறுவனம் அறிவித்த ஒழுங்குமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வைக்கவேண்டும் அது தான் அந்தத்திட்டம் வரும் விருந்தினர்களிடம் நேரடியாகக் கூறுவது ஒரு அசௌகரியமான நிலையை ஏற்படுத்தும் என்று யோசித்ததால் அது முடியவில்லை . ங்கள் மக்கள் அதற்கு எத்தனை வியாக்கியானம் வைப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும் . அதைவிட எங்கள் மக்கள் கட்டுப்பாடுகளை மதிப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பலநேரங்களில் அவர்கள் இருக்கும் நிலைமையை மறந்துவிடுவார்கள் அடிக்கடி அவர்களுக்கு நினைவூட்டல் செய்யவேண்டும் அல்லது ஒரு பயத்தை உருவாக்கவேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஒரு பொறி தட்டியது . பந்தடியில் அறிமுகமான ஒருவன் அந்த நகரத்திலேயே காவல்த்துறையில் அதிகாரியாக வேலை செய்கின்றான் . அவனிடம் ஏதாவது உதவி கேட்கலாம் என யோசித்தபோது குடும்ப விழாக்களில் அதிகாரிகளாக இருந்தாலும் உத்தியோகத்தைப் பாவிக்கமாட்டார்கள். அப்படிச் செய்வதும் பிழையானது அவருடைய வேலைக்கு ஆபத்து... என்ன செய்யலாம்   இரண்டாவது மகளிடம் இதைக்கூற அவர் சொன்னார் இது தானா பிரச்சனை அதற்கு நான் பொறுப்பு நீங்கள் மற்ற அலுவல்களைப்பாருங்கள் என்றாள்   திருமண நாள் தேவாலயத்திற்குச் சென்றபோது எல்லோருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது . மணப்பெண்ணைத் தந்தை ஆலயத்திற்குள் கைப்பிடித்து அழைத்து வர எல்லோரும் திரும்பி அந்த அழகை ரசிப்பது வழமை தானே ஆனால் இங்கோ எல்லோரும் ஆளுக்கொரு கைத்தொலைபேசியுடன் கைகளை நீட்டி அவர்கள் நடந்துவரும் பாதையை மறிக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள்.   அப்போது எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை ஒரு பத்து வெள்ளை இனப்பெண்கள் அத்தனைபேரும் சாரணர்கள் அணிவது போன்ற ஒரே சீருடையில் இருந்தார்கள் எல்லோரும் உங்கள் உங்கள் இருக்கையில் அமருங்கள் இது சாதாரணமான திருமண விழா அல்ல இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம் எல்லோரும் விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள் என்ற கோஷங்கள் எழுதிய பதாதைகள் அவர்கள் கைகளில் உயர்ந்து தெரிந்தது விருந்தினர்கள் அனைவரும் அப்போதுதான் வழமைக்குத் திரும்பினார்கள்   தனது உதைபந்தாட்டக்குழுவில் விளையாடும் பிள்ளைகளை அழைத்து வந்து ஒரே சீருடை அணிவித்து அவர்களை சுகாதார சேவைகளுக்கான கண்காணிப்பாளர்கள் என மகள் அறிவித்துவிட்டார் அவர்களும் தேவாலயத்திலிருந்து மண்டபம் வரை எங்களைக் கவனித்துக் காத்து நின்றார்கள் கண்ணியமான முறையில் சில இடங்களில் தளர்வுடனும் சில இடங்களில் மிக்க கண்டிப்பாகவும் அன்புடனும் அவர்கள் நடந்துகொண்டதும் மிக ஆச்சரியமாக இருந்தது அந்த பத்து தேவதைகளுக்கும் நன்றிகள் திருமணவிழா இனிதாக நிறைவேறியது அப்படியும் இரு வாரங்கள் கடக்கும்வரை ஒரு திரிலாகத்தான் இருந்தது .   யாவும் கற்பனையல்ல😄
  • வாறெண்டால் இப்படி வரவும்🤣
  • கோரோனோ வீரியம் அவ்வளவுதானா..? சுத்தமா அந்த வைரசுக்கு ப்யுஸ் போய்விட்டதா தோழர்..😢
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.