Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மாவை – சுமந்திரன் யாழ். நகரில் திடீர்ச் சந்திப்பு; மருத்துவர்களின் ஏற்பாட்டில் 3 மணி நேரம் சமரசப் பேச்சு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மாவை – சுமந்திரன் யாழ். நகரில் திடீர்ச் சந்திப்பு; மருத்துவர்களின் ஏற்பாட்டில் 3 மணி நேரம் சமரசப் பேச்சு

August 14, 2020

mavai-suma.png

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மருத்துவர்கள் குழு ஒன்று இறங்கியிருக்கின்றது.

இதன் பலனாக இருவரும் நேற்றிரவு யாழ். நகரில் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். நகரிலுள்ள மருத்துவர் ஒருவருடைய விடுதியில் இருவரும் சந்தித்து நேற்றிரவு 10 மணிக்கு மேலாகப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலத்தில் உருவாகியிருந்த முரண்பாடுகள் தொடர்பில் இருவரும் விரிவாக முறையில் இதன்போது பேசியதாகவும், சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நாளை சனிக்கிழமை திருமலையில் கூடவிருக்கும் நிலையில் இந்த சமரச முயற்சி இடம்பெற்றிருக்கின்றது

http://thinakkural.lk/article/62234

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திடீர் பல்ட்டி எதற்காக..? தமிழரசு கட்சி மறுசீரமைக்கப்படவேண்டும் என்ற கோஷம் உட்கட்சி மோதலின் வெளிப்பாடா..?

WHY_1080.jpg

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழரசு கட்சியின் தலைவர் தோல்வியடைந்த நிலையில் கட்சியில் மறுசீரமைப்பு வேண்டும் எனவும், கட்சி தலமை மாற்றப்படவேண்டும் எனவும் தீவிரமாக பேசியதுடன் செயற்பட்டுவந்த கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்மாறான கருத்துக்களை கூறிவருகின்றனர்.

குறிப்பாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தேர்தலில் தோற்றதற்காக மாவை சேனாதிராஜா கட்சி தலமை பொறுப்பிலிருந்து விலகும் அவசியமில்லை என கூறியுள்ளார்.

அதேபோல் மாவை சேனாதிராஜா மனக்கிலேசமடைந்திருந்தால் அதற்காக தாம் மன்னிப்புகோருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாறுமன்ற உறுப்பினராக எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சி மறுசீரமைக்கப்படவேண்டும். என பகிரங்கமாக கூறி வந்தனர். அதே கருத்தை பொது நிலைப்பாட்டிலுள்ள சிலரும் கூறினர்.

அவ்வாறான தேவை உண்மையில் இருந்தால் ஏன் அத்தகைய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை. எனவும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அந்தர் பல்ட்டி அடித்து மன்னிப்பு கேட்பதும், இப்போது தலமை மாற்றம் தேவையில்லை என கூறுவதும் எதற்காக ? என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்திருப்பதுடன், புதிய கூட்டணி ஒன்றுக்கான அடித்தளமிடப்படுவதாக அரசல் புரசலாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் அதன் விளைவா இந்த மாற்றம்? எனவும் கேள்விகள் எழுந்திருக்கின்றது.

https://jaffnazone.com/news/19880

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதென்ன வைத்தியர்களின் ஏட்பாட்டில்? யாருக்கும் சுகம் இல்லையோ? தலைகளை சுத்தமாக்கினால் மற்றவையெல்லாம் குணமாகும். மத்தபடி ஒரு வேலையும் நடக்காது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் இப்போது அரசியல் இலாபமும் தங்கள் சுயநலமும் தான் முக்கியம் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் செய்தியாளர் மாகாநாடுகளில் சும்மா படம் காட்டாமல், மக்கள் ஆணைக்கு அமைவாக அனைவரையும் அரவணைத்தது போக வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

சுமந்திரன் செய்தியாளர் மாகாநாடுகளில் சும்மா படம் காட்டாமல், மக்கள் ஆணைக்கு அமைவாக அனைவரையும் அரவணைத்தது போக வேண்டும்.

மக்கள் ஆணை எங்கு அவருக்கு கிடைத்தது ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாவையுடன் முரண்பாடில்லை ஒன்றாகவே கலந்துரையாடலில் பங்கேற்றோம்: சுமந்திரன்

(ஆர்.ராம்)

மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும் எனக்கும் இடையில் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லை. நாம் இருவரும் ஒன்றாகவே இருந்து கலந்துரையாடலிலும் பங்கேற்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழில் நேற்று முன்தினம் இரவு குடாநாட்டின் முக்கிய வைத்தியர்களைக் கொண்ட குழுவொன்று ஏற்பாடு செய்த கலந்துரையாடலொன்று வைத்தியர் ஒருவரின் விடுதியில் நடைபெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி:- தங்களையும், கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவையும் சமரசப்படுத்தவற்காக ஏற்பாடொன்றை வைத்தியர்கள் குழுவொன்று மேற்கொண்டிருந்ததா?

பதில்:- எனக்கும், மாவை.சேனாதிராஜாவுக்கும் முரண்பாடே இல்லை. அப்படியிருக்கின்றபோது எதற்காக சமரசம் பேசப்பட வேண்டும். 

கேள்வி:- அப்படியென்றால் நீங்களும், மாவை.சேனாதிராஜாவும் பங்கேற்ற கலந்துரையாடலொன்று நடைபெறவில்லையா?

பதில்:- நடைபெற்றது.

கேள்வி:- அதில் எவ்விதமான விடயங்களை பேசினீர்கள் என்று கூறமுடியுமா?

பதில்:- குடாநாட்டின் சில வைத்தியர்கள் எமது கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாட விரும்பியிருந்தனர். அவர்கள் என்னையும், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜாவையும் அழைத்திருந்தனர். நாம் இருவரும் சென்றிருந்தோம். ஒன்றாகவே அந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தோம்.

வைத்தியர்கள் பல்விதமான கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கான தெளிவு படுத்தல்களை நானும், சேனாதிராஜாவும் வழங்கியிருந்தோம். அத்துடன் அவர்களின் சில யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. அவற்றையும் நாம் செவிமடுத்திருந்தோம் என்றார். 
 
https://www.virakesari.lk/article/88086

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாவை விட்ட தவறு தகுதியில்லாதவருக்கு பதவி கொடுத்தது.  சுமந்திரன் தலைவருக்கே  தெரியாமல் முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்திவிட்டு,வரப்போகும் நடவடிக்கையை தடுப்பதற்காக தலைவர் பதவியையும் தட்டிப்பறித்து, இவரை வெளியில் விட முயன்று பகிரங்கமாக கருத்து வெளியிட்டு, மாவையரை பழி வாங்கியிருக்கிறார். மாவையரால் அம்பாறைக்கு கொடுக்கப்பட்ட ஆசனத்தை திரும்பப் பெற முடியுமா? அல்லது சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?  சுமந்திரன் தன்னிச்சையாக  கட்சியோடு ஆலோசிக்காமல் பேசுவார், அது கட்சியின் கருத்தல்ல தனது சொந்தக்கருத்து என்றும் சொல்லமாட்டார், பிரச்சனை என்றவுடன் கட்சியின் பின்னால் ஒளிந்து கொள்வார். கட்சியும் அவரை போத்து மூடி அறிக்கை விடும். அவர் கொடுத்த பேட்டியை வழமைபோல் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என எண்ணியோ, திட்டமிட்டோ விளாசிவிட்டார். தேர்தல் காலமென்பதால் மாவையர் கண்டித்திருக்கிறார், அவரை அன்றே வெளியேற்றியிருந்திருந்தால் கட்சியும், மாவையும் தப்பியிருக்கலாம், சுமந்திரன் முந்திக்கொண்டார். சுமந்திரன் என்பவர் தந்திரசாலி, அது அவரோடு கூடப்பிறந்தது. இது எந்தப்பாடசாலையிலும் படிப்பதில்லை, எந்தப் பயிற்சி அறையிலும் எடுப்பதில்லை. மாவையரை வைத்து தனக்கு வேண்டாதவர்களை 
வெளியேற்றினார், மாவைக்கு தானே கெடு வைத்துவிட்டார். மாவை என்ன செய்யப்போகிறார்? சுமந்திரனை மன்னிப்பாரோ இல்லையோ, அவருடன் இணங்கி போவதுபோல் நடித்தே ஆகவேண்டும். வேறு வழி மாவைக்கு இல்லை. குருவை மிஞ்சிய சிஷ்யன் சுமந்திரன். விக்கினேஸ்வரன் + சுமந்திரன், மாவையர் +சுமந்திரன். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2020 at 16:06, satan said:

சாத்தான், நான் விக்கியரின் தகைமைகளை முன்னர் எழுதிவிடடேன். மாவயரின் தகைமைகள் என்னவென்று ஒருக்கா எழுத முடியுமா? 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.