Jump to content

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்: கொரோனாவில் இருந்து மீண்டாரா? மருத்துவமனை அறிக்கை என்ன?

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் சேர்க்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், கோவிட் பத்தொன்பது வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது தற்போதைய மருத்துவ நிலைமை, நிலையாக உள்ளது. மருத்துவ அளவீடுகளை, பல்நோக்கு மருத்துவ குழு அவரை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிபி
 

இன்று காலை எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றில் இருந்து மீண்டதாக அவரது மகன் பெயரில் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவின.

இருப்பினும், எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை முடிவுகள் "நெகட்டிவ்" என சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களை அவரது மகன் எஸ்.பி. சரண் மறுத்து காணொளியை வெளியிட்டார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் இன்று நண்பகலில் வெளியான தகவலைத் தொடர்ந்து, பலரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த விவகாரத்தில் எஸ்.பி. சரண், மக்கள்தொடர்பு அதிகாரி நிகில் முருகன் பெயரில் பகிரப்பட்ட குறுஞ்செய்தியில் "எனது தந்தைக்காக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை நலமுடன் இருக்கிறார். அவரது கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் ஆக வந்துள்ளது. மேற்கொண்டு தகவல்களை உங்களுக்கு தொடர்ந்து பகிர்கிறேன்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல் அடிப்படையில் பல ஊடகங்கள் செய்திகலை ஒளிபரப்பின. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்து வந்தனர்.

திடீர் காணொளியில் விளக்கம்

இந்த நிலையில், எஸ்.பி. சரண் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

"எனது தந்தையின் உடல் நிலை தொடர்பாக மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகே வழக்கமாக நான் தகவல்களை பகிர்வேன். ஆனால், துரதிருஷ்டவசமாக இன்று காலை ஒரு தகவலை பகிரும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். எனது தந்தையின் உடல்நிலை தொடர்பான தகவல்கள் அனைத்தும் முதலாவதாக எனக்கே வந்து சேரும். பிறகு நான்தான் அதை ஊடகங்களிடம் பகிர்வேன். இன்று துரதிருஷ்டவசமாக எனது தந்தையின் கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளதாக ஒரு வதந்தி உலவுகிறது. அவருக்கு கொரோனா பாசிட்டிவா நெகட்டிவா என்பதை விட, அவரது உடல்நிலை, அப்படியேதான் உள்ளது. மருத்துவ ரீதியாக அவர் வென்டிலேட்டர் உதவியுடனும், எக்மோ கருவி உதவியுடனும் அவரது உடல்நிலை அதிர்ஷ்டவசமாக நிலையாக இருக்கிறது. அந்த நிலைப்புத்தன்மை, அவரது நுரையீரல் தொற்று முழுமையாக குணமடைய உதவும் என நம்புகிறோம். எனவே, உலாவரும் வதந்திகளை நம்பாமல் தவிருங்கள். இன்று மாலை மருத்துவர்களுடனும், மருத்துவ குழுவினருடனும் பேசிய பிறகு அப்போதைய சமீபத்திய தகவல் அடங்கிய காணொளியை பகிர்கிறேன்" என்று எஸ்.பி. சரண் கூறியுள்ளார்.

இந்த நிலையில், காலையில் காணொளி வாயிலாக விளக்கம் அளித்த எஸ்.பி. சரணும், மாலையில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையிலும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் என்னவாயின என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நீங்கியதா அல்லது தொடர்கிறதா என்பதும் தெளிவுபடுத்தப்படாததால் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் ரசிகர்கள் தொடர்ந்து அந்த தகவலை எதிர்பார்த்து காத்திருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

18 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு கடந்த 18 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தி தேசிய மற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையுடன் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

தினமும் மருத்துவமனை நிர்வாகம் அவர் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் எஸ்.பி. சரணும் அவ்வபோது காணொளி வெளியிட்டு வருகிறார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய திரைப்பிரபலங்களும் அவரது ரசிகர்களும் கூட்டு பிரார்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், எஸ்.பி.பியின் கொரோனா முடிவுகள் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியானதால் அவரது ரசிகர்கள் மிகவும் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்.https://www.bbc.com/tamil/arts-and-culture-53885932

Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

SP Charan : அப்பா எண்னுடன் பேசினார் - சுயநினைவுக்கு திரும்பினார் SP Balasubramanyam Health Update

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்பிபி 90 சதவீத மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார்; சிகிச்சை பலனளித்து வருகிறது: சரண் தகவல்

எஸ்பிபி 90 சதவீத மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார். சிகிச்சை பலனளித்து வருகிறது என்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பி.க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்.பி.பி.க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.யின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 25) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

"மருத்துவர்களிடம் பேசினேன். எல்லாம் சகஜமான நிலையில் இருக்கிறது. நேற்று நான் சொன்னதைப் போல அப்பாவுக்கு சிகிச்சை பலனளித்து வருகிறது. 90 சதவீத மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார். என் அப்பாவுக்காக நீங்கள் காட்டியிருக்கும் அன்பும், அக்கறையும், செய்த பிரார்த்தனைகளுக்கும் எங்கள் குடும்பம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அப்பா மீண்டு வர தீவிர சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கும் அதன் மருத்துவர்களுக்கும் நன்றி.

அனைவருக்கும் மீண்டும் நன்றி. தொடர்ந்து பிரார்த்திப்போம். அப்பாவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்ப்போம் என நம்புகிறேன்.

ஒரு விஷயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பலர் என்னை இந்தப் பகிர்வுகளை தமிழில் சொல்லச் சொல்லிக் கேட்கிறார்கள். அப்பாவுக்கு தேசம் முழுவதும் பல ரசிகர்கள் இருப்பதால்தான் ஆங்கிலத்தில் நான் பகிர்கிறேன். அப்பா பாடியிருக்கும் ஒவ்வொரு மொழியிலும் ஒரு பகிர்வு என்பது எனக்கு அதிக நேரத்தை எடுக்கும்.

நான் மருத்துவர்களுடன் பேசி வருகிறேன், பிரார்த்தனைக் கூட்டங்கள் நடக்கின்றன. நடுவில் ரசிகர்களுக்கும் செய்தி சொல்கிறேன். மொழி புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு விளக்குங்கள். அப்படிச் செய்யும்போது இந்தச் செய்தியும் பரவும். நேர்மறை எண்ணங்களும் பரவும்."

இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/571669-spb-charan-video-about-spb-health-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

He's responding! | SPB Health Updates today (25.08.20) SPB Charan | S. P. Balasubrahmanyam

 

மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் - எஸ்.பி.பி. சரண்

மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் - எஸ்.பி.பி. சரண்

கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

 பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90% மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம் என அதில் கூறியுள்ளார்.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/25183129/1822629/Spb-charan-says-about-Spb-health.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பி-க்கு பிசியோதெரபி சிகிச்சை - எஸ்.பி.பி. சரண்

எஸ்.பி.பி-க்கு பிசியோதெரபி சிகிச்சை - எஸ்.பி.பி. சரண்

பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை மூலமாகவும், அவரது மகனுமான எஸ்.பி.பி. சரண் வீடியோ மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள். 

 நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் நுரையிரலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாடலுக்கு கால் அசைத்தார். எழுதவும் பாடவும் முயற்சி செய்தார் என்று கூறினார்.
 

எஸ் பி பாலசுப்ரமணியம்

 

இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்பிபி விரைவில் குணமடைவார் என்று கூறியுள்ளார்.  

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/08/27175157/1823124/Physiotherapy-treatment-for-Spb.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு 29 நாட்களாக சிகிச்சை - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்

கொரோனாவுக்கு 29 நாட்களாக சிகிச்சை - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்

கொரோனாவுக்கு 29 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதிவு: செப்டம்பர் 04,  2020 04:15 AM
சென்னை,

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த 5-ந்தேதி சென்னை சூளைமேடு எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 29 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையில் உள்ளது. அவர் விழிப்புடன் இருக்கிறார். சொல்வதை புரிந்து கொள்கிறார். மருத்துவ முறையிலான முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.”

இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது தந்தையின் உடல்நிலை 4-வது நாளாக சீரான நிலையில் உள்ளது. இந்த வாரம் இறுதியில் நல்ல செய்தி வரும் என்று நம்புகிறோம். கடவுள் ஆசீர்வாதத்தோடும், அனைவரின் பிரார்த்தனையோடும் வருகிற திங்கட்கிழமை சில நல்ல தகவல் வரும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி” என்று பேசியுள்ளார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/04041156/29-days-treatment-for-corona--SB-Balasubramaniam-health.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sp.jpg

வைத்தியசாலையில் கேக் வெட்டி திருமணநாளை கொண்டாடினார் எஸ்.பி.பி.

இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்த  நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தனது திருமணநாளை மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்த நிகழ்வு வைத்தியசாலையிலுள்ள நிர்வாகத்தினருக்கு  பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரிக்கு இன்று  திருமண நாளாகும். இதனை முன்னிட்டு ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரத்யேகமாக கேக் வாங்கி வரப்பட்டு, ஐ.சி.யூ.வில் வைக்கப்பட்டது.  பின்னர் வைத்தியர்களின் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாவித்திரி ஆகிய இருவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைக்  பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 5ஆம் திகதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்த மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. ‘2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன்’ என்று கூறி அவர் ஒரு காணொலியையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

மேலும், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுடன் எம்.ஜி.எம்.மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு ‘பிசியோதெரபி’ அளிக்கப்பட்டுவரும் நிலையில், நுரையீரல் செயல்பாடு இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான சிகிக்சைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு நாட்களுக்கு முன் எஸ்.பி.பி.மகன் சரண் வெளியிட்ட காணொளியில், அப்பாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கடவுள் அருளாலும், உங்கள் அனைவரது பிரார்த்தனையாலும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நல்ல செய்தி வரும் என நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஐ-சி-யூ-வில்-கேக்-வெட்டி-தி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 நிமிடம் வரை எழுந்து அமர்கிறார்... எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண் தகவல்

20 நிமிடம் வரை எழுந்து அமர்கிறார்... எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண் தகவல்

 

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மகன் எஸ்பிபி சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று (செப்டம்பர் 14) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

கடைசியாக 10 ஆம் தேதி உங்களிடம் பேசியிருந்தேன். இன்று தேதி 14. இந்த நான்கு நாட்களில் அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நுரையீரல் செயல்பாடு முன்னேறியுள்ளது. குணமாகி வருவது எக்ஸ்ரேவில் நன்றாகத் தெரிகிறது.

பிசியோதெரபியும் நடந்து வருகிறது. அப்பா அதில் சுறுசுறுப்புடன் பங்கேற்று வருகிறார். மருத்துவர்கள் அப்பாவை உட்கார வைத்தார்கள். அப்பாவால் தொடர்ந்து 15-20 நிமிடங்களுக்கு உட்கார முடிகிறது. வாய் வழியாகச் சாப்பிட வைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

அனைத்து அறிகுறிகளும் நன்றாக உள்ளன. அப்பா சீராக இருக்கிறார். முன்னேற்றம் தொடர்கிறது. இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/09/14185222/1877345/Spb-charan-says-about-Spb-health.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் இந்த பிரைவேட் ஆஸ்பத்திரிகள் குறித்து சுஜாதா சொல்லுவார். உள்ள போனால் கோவணத்துடன் தான் வெளியே வரமுடியும் என்று. 

அப்போலோவில்  ஜெயலலிதா சாப்பாட்டு பில்லே கோடிக்கணக்கில். ஒரு முதல்வருக்கு, ஆளும் கட்சியின் இறந்த தலைமையிடமே பிடுங்கினால்.... பாலா ஐயாவுக்கு இரண்டு, மூண்டு கோடி மருத்துவச் செலவுக்கென்றே புடுங்குவார்கள்.

அதே காரணத்தினால், வருத்தம் மாறினாலும், இல்லை, இன்னும் கொஞ்சம் மாறவேண்டும் என்று வைத்திருப்பார்கள்.

நோய் காரணமாக போய் படுப்பவர்களுக்கு, பில்லை நினைத்தே, புது வருத்தம் எல்லாம் வருமாம்.

 

Link to comment
Share on other sites

"எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார்" - எஸ்.பி. சரண் தகவல்

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அவருடைய மகன் எஸ்பிபி சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்த வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று (செப்டம்பர் 19) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

எனது அப்பா எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார்.

அவர் நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார்.

மருத்துவர்கள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எழுந்து உட்காருகிறார்.

அவருக்கு தொடர்ந்து மருத்துவக்குழு தீவிர சிசிச்சை அளித்து வருகிறது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/09/19194828/1898603/Sp-Balasubramaniam-Recovered-steadly-says-SP-Saran.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்பிபி கவலைக்கிடம்: மருத்துவமனையில் நடப்பது என்ன?

spacer.png

 

கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை நேற்று மாலை முதல் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்தது. இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் லேசான கொரோனா அறிகுறிகளுடன் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது உடல்நிலை குறித்து அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், நான் நலமாக இருக்கிறேன் லேசான அறிகுறிகள் தான் இருக்கிறது. விரைவில் வீடு திரும்புவேன் என்று தெரிவித்தார்.

ஆனால் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் என உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைய வேண்டுமென திரையுலகம் உட்பட ஒட்டுமொத்த தேசமே பிரார்த்தனையில் ஈடுபட்டது.

அதன்பின் அவர் உடல்நிலை தேறி வருவதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்தார். நுரையீரல் செயல்பாட்டில் மட்டும் முன்னேற்றம் இல்லை. விரைவில், நுரையீரல் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் இருக்கும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி எஸ்பிபி சரண், அப்பா மருத்துவமனையை விட்டு விரைவில் வீடு திரும்ப ஆர்வமாக இருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 ஆவது நாளான நேற்று மாலை, அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு எஸ்பிபி கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

 

இதையடுத்து 6.30 அளவில் எஸ்பிபி ஹெல்த் அப்டேட் குறித்து அறிக்கை வெளியிட்ட எம்ஜிஎம் மருத்துவமனை, அவர் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார். அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ வல்லுநர்கள் குழு அவரை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்று தெரிவித்தது.

இந்த தகவல் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எஸ்பிபி மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகத் திரைப் பிரபலங்கள் உட்பட பலரும் ட்விட்டரில் தெரிவித்து வந்தனர்.

எஸ்பிபியின் உடல் நலன் பற்றி தகவல் அறிந்த அவரது நெருங்கிய நண்பர் நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு 8 மணிக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கிருந்த எஸ்பிபி மகன் சரண், உறவினர்கள் மற்றும் மருத்துவர்களிடம் எஸ்பிபியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். 20 நிமிடம் மருத்துவமனையிலிருந்த அவர் பின்னர் அங்கிருந்து கிளம்பினார். அவரிடம் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்கள் எஸ்பிபி உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கமல், எஸ்பிபி உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினர் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர். அவர் நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது என கவலை தோய்ந்த முகத்துடன் கூறிவிட்டுப் புறப்பட்டார்.

மேலும் நேற்று இரவு எஸ்பிபி உடல்நிலை குறித்து மீண்டும் எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என்று தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி, மருத்துவமனையின் தரப்பிலிருந்து செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடும் என்றும் தகவல் வெளியான நிலையில் நேற்று இரவு முழுவதும், எஸ்பிபி ஹெல்த் அப்டேட்காக பத்திரிக்கையாளர்கள் பலர் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்தனர்.

அதோடு #SPBalasubrahmanyam என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் பலரும் எஸ்பிபி குணமடைந்து வர வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். அவரது உடல்நிலை அறிந்து உறவினர்கள் எல்லாம் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 

https://minnambalam.com/public/2020/09/25/14/spb-health-condition

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலமையை பார்த்தால் இன்னும் சில மணி நேரங்களில் இசையுலகமே கேட்க விரும்பாத ஒரு செய்தியை மருத்துவமனை அறிக்கையாக வெளியிட போகிறதென்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

எஸ்பிபி சற்றுமுன் மரணம்!

 

 

IMG_20200925_132215.jpg?189db0&189db0

தென்னிந்திய திரைத்துறையின் பிரபல பாடகரும் நடிகருமான “பாடுநிலா” எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று (25) சற்றுமுன் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் காலமானார்.

ஆகஸ்ட் 5ம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய எஸ்.பி.பி ஒரு மாத காலத்துக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.

அண்மைய நாட்களில் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று திடீரென மோசமான கட்டத்தை அடைந்த பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

நெல்லூரில் 1946ம் ஆண்டு சிறிபதி பண்டிதாரியுல பாலசுப்பிரமணியம் ஆக பிறந்த இவர் 1967ம் ஆண்டு தெலுங்கில் “எமியே விந்தா மோகம்” என்ற பாடல் மூலமும் தமிழில் “ஆயிரம் நிலவே வா” பாடல் மூலமும் பாடகராக அறிமுகமாகி 16 மாெழிகளில் நாற்பதாயிரம் பாடல்களை பாடியுள்ளார்.

1969ம் ஆண்டு தெலுங்கில் “பெல்லந்தே நூரெல்ல பந்த” என்ற திரைப்படத்திலும், 1971ம் ஆண்டு தமிழில் “மொஹமட் பின் துக்லக்” திரைப்படத்திலும் சிறுவேட நடிகராக அறிமுகமான எஸ்.பி.பி, நாயகனாகவும், துணை நடிகராகவும் 50கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல உயரிய விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.

இறுதியாக “என்னோட பாஷா” என்ற பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/எஸ்பிபி-சற்றுமுன்-மரணம்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.