Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

என்ன நடக்கிறது தமிழ் அரசியலில்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கேடு.  இதில் இப்போது மணிவண்ணனை நீக்கும் முன்னணியும் இணைந்துவிட்டது. 

 

 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kuna kaviyalahan said:

அரசியல் கேடு 

அருமையான அலசல் .. 👌நன்றி தோழர்..👍

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி குணா கவியழகன்😀

உங்கள் அரசியல் ஆய்வுகளையும், இலக்கிய எழுத்துக்களையும் தவறாமல் வாசிப்பதுண்டு.

 

 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றியும்.  என் மீதான நம்பிக்கையில் என் ஆய்வுகளை பகிர்வதற்காக என் அன்பும். 

https://www.youtube.com/c/kunakaviyalahan

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உங்களைப் போல ஆய்வாளரையே தேடிக் கொண்டிருக்கிறோம்.
எல்லோரும் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுகின்றனர்.
அந்த இடை வெளியில் எதிரி புகுந்து சன்னதமாடுறான்.
எதிர் காலத்தை மிக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி குணா கவியழகன்😀

உங்கள் அரசியல் ஆய்வுகளையும், இலக்கிய எழுத்துக்களையும் தவறாமல் வாசிப்பதுண்டு.

 

 

மிக்க மகிழ்ச்சி 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

இங்கு காண்பதில் மிகவும் மகிழ்ச்சி நண்பரே ......!

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குணா கவியழகன்.
உங்கள் கருத்துக்களையும் வாசிக்க காத்திருக்கின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kuna kaviyalahan said:

அரசியல் கேடு.  இதில் இப்போது மணிவண்ணனை நீக்கும் முன்னணியும் இணைந்துவிட்டது. 

 

அருமையான பதிவு நண்பரே! 

கூட்டுதலைமையின் அவசியத்தை இனியாவது எமது தலைவர்கள் (அரசியல்) உணர்வார்களா??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் , உங்கள் அரசியல் கேடு காணொளியை காண்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் பதிவுகளை தொடர்ந்து எதிர்பாரக்கின்றேன். 

தமிழ்த்தரப்பு சிங்கள தரப்பை சாடவில்லை, தங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் சாடுவது சேறடிப்பதும் . கட்சியை சைப்பற்றுவது, சொத்துக் குவிப்பது. வியாபார அரசியல் என்ற அடிப்படையான உங்கள் பார்வை எவ்வளவு ஆபத்தான அரசியல் சூழல் என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது.  சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை என்ற பெரும் பிரச்சனை எங்கே போனது என்னவானது ? காணாமல் போகடிக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர்களுக்கான உரிமை மீட்பு முயற்சி என முன் நிறுத்தவேண்டிய எதையும் கட்சிகளோ தலமைகளோ இல்லை வேட்பாளர்களோ முன் நிறுத்தவில்லை. தேர்தலின் வெற்றி தோல்விக்கு அப்பால் பேரினவாதம் மீண்டும் வெற்றிபெற்றிருக்கின்றது. தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அரசியல் தோல்வி. இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடிகின்றது. 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு உருவானதன் நோக்கமே வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கட்சிகளையும் முன்னாள் போராளிக்குழுக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரத்தான். அது சாத்தியமாகி அதிகமாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தமிழர்களின் சார்பாக அனுப்பியது வரலாறு. ஆனால் கூட்டமைப்பு உடைந்து, புலி நீக்கம் செய்யப்பட்டு இப்போது தமிழரசுக் கட்சியும், ரெலோவும் 2009 க்குப் பின்னர் இணைந்த புளட்டும்தான் உள்ளது.  ஆகவே கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழர் அரசியல் தலைமையாக இருக்கவேண்டுமா?

கூட்டமைப்பில் ஆளுமை உள்ளவர்கள் என்று பார்த்தால் சம்பந்தன் (87 வயதில் கூட்டமைப்பை இன்னும் உடையாமல் காப்பாற்றத்தான் இருக்கின்றார்), சுமந்திரன் மட்டுமே உள்ளார்கள். 

சிறிதரன் சிங்களவர்களோடு அல்லது சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளோடு பேசக்கூடிய ஆளுமையற்றவர். சுமந்திரன் தேசியத்தை உதட்டில் மட்டும் பேசுபவர். மாவை கட்டுக்கோப்பாக கட்சியை வைத்திருக்கமுடியாத தலைவர் என்பதை நிரூபித்துள்ளதால், கூட்டமைப்பைக் காப்பாற்றுவதை  விட்டுவிட்டு கட்சியை சுமந்திரனிடம், சிறிதரனிடமும் விட்டுவிட்டால், அது விரைவில் காணாமல் போகும். 

எனவே இப்போதுள்ள தேவை, கூட்டமைப்பை அரசியல் அரங்கில் இருந்து அகற்றி வளர்ந்துவரும் தேசியத்தின் மீது நம்பிக்கையுள்ள, ஆளுமையுள்ள இளைய தலைமுறை அரசியல் செயற்பாட்டார்களை வளர்ப்பதுதான்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kuna kaviyalahan said:

இதில் இப்போது மணிவண்ணனை நீக்கும் முன்னணியும் இணைந்துவிட்டது. 

மிகவும் சரியான கருது.இந்த தோல்விக்கான காரணம் இந்தத் தலைமையே.குறைந்த பட்சம் மக்கள் நலன் கருதி கஜேந்திரனும் விக்னேஸ்வரனும் இணைந்திருக்கலாம்.

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை-  WHO கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து சில நிமிடங்களில் பரிசோதனை செய்யும் ஒரு முறை ஏழை மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு விரிவாக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில், இந்த பரிசோதனைக்கு ஐந்து டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 380 ரூபாய்) மட்டுமே ஆகும். போதுமான மருத்துவ உள்கட்டமைப்புகள் அற்ற ஏழை மற்றும் குறைந்த வருமானம் உடைய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த பரிசோதனை கருவியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த ஆறு மாதங்களில் 12 கோடி பேருக்கு இந்த அதிவேக கொரோனா பரிசோதனையைச் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது http://www.ilakku.org/குறைந்த-விலையில்-கொரோனா/
  • ஜப்பானின் சிறீலங்காவிற்கான உயர் ஸ்தானிகர் மட்டக்களப்பு பயணம்   ஜப்பான் நாட்டின் சிறீலங்காவிற்கான உயர் ஸ்தானிகர் அகிரா சுகியாமா(  H.E. Akira Sugiyama) இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாராஜா சரவணபவன் உயர் ஸ்தானிகரை வரவேற்றதோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார நிலமைகள் தொடர்பிலும், மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக மாநகர சபையினால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் அவற்றை முன்னெடுப்பதற்கான நிதி அனுசரணைகள் இல்லாமை தொடர்பிலும் மாநகர முதல்வரால் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் நிர்மானத்துறை சார்ந்து மட்டக்களப்பு நகரிலிருந்து பெரியகளம் தீவுக்கான பாலம் அமைப்பதற்கும், இலங்கைத் தமிழர்களின் வரலாறுகளையும், தொல்லியல் உண்மைகளையும் எதிர்காலச் சந்ததியினருக்கு கற்பிக்கும் வகையில் ஓர் முப்பரிமான கலையரங்கம் ஒன்றினை அமைப்பதற்குமான திட்ட முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன் மாநகர தீயணைப்பு சேவையினை விஸ்தரித்து வினைத்திறனான முறையில் மேற்கொள்வதற்கும், கழிவகற்றல் வசதிகளுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்து வழங்குவதற்கும் ஜப்பான் நாட்டின் உதவியினை எதிர்பார்ப்பதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபையுடனான தமது உறவினை புத்தாக்கம் செய்துகொள்வதற்குரிய நல்ல வாய்ப்பாக இதனை கருதுவதோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்திக்கும், உட்கட்டுமானம் உள்ளிட்ட நிர்மானத்துறை சார் பணிகளுக்கும் ஜப்பான் தயாராக உள்ளதாகவும் எதிர்காலத்தில் இத்திட்டங்களை மேற்கொள்ள சகல நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் இதன்போது ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் தெரிவித்தார். மேற்படி கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா மற்றும் ஜப்பான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்த சந்திப்பில், உயிர்த ஞாயிறு குண்டு தாக்குதல் இடம்பெற்ற சீயோன் தேவாலயத்தில் குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை அவர் தெரிவித்தார் . மேலும் இந்த குண்டு தாக்குதல் போன்ற சம்பவங்கள் இன்மேல்  நடக்காமல் தடுக்க அரசாங்கத்துடன் தொடர்ந்து செயற்படுவதாக  தெரிவித்து்ளளார்   http://www.ilakku.org/ஜப்பானின்-இலங்கைக்கான-உய/
  • சீமான் உண்மை முகம் தேடித்தேடி வஞ்சிக்கும் போலீஸ் வீட்டிற்கே சென்ற சீமான்  
  • ஈகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ஈகன் நெருப்புதமிழனுக்கு களஞ்சியம் வாழ்த்து   ஈகனுக்கு இளம்புயலின் வாழ்த்து செய்தி  
  • தமிழீழ விடுதலைப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும்.   பிரபல பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் 25.09.2020 அன்று சுகயீனம் காரணமாக காலமானார். அவர் தமிழீழ விடுதலைப் பாடல்கள் சிலவற்றை பாடியிருந்தார். அவர் பாடிய பாடல்களையும், பாடிய சந்தர்ப்பங்களையும் ஓவியர் புகழேந்தி அவர்கள் நினைவு கூர்ந்து எழுதிய நினைவுப் பதிவு ஒன்றை எமது இலக்கு இணையத்திற்காக பிரத்தியேகமாக அனுப்பியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பாடல் ஒலிப்பேழை  தயாரிப்பு பொறுப்பை என்னிடம் விடுவதாக தமிழீழத் தேசியத் தொலைகாட்சி பொறுப்பாளர் போராளி சேரலாதன் சொன்னபோது, “சேரா, நான் பாடல் எழுதுகின்றவனும் இல்லை, இசையமைக்கின்றவனும் இல்லை, பாடுகின்றவனும் இல்லை.  எப்படி அதை நான் செய்யமுடியும்” என்றேன்.  “அதனால் தான் அண்ணா, உங்களிடம் அப்பொறுப்பைக் கொடுக்கின்றோம்” என்றார். முதல் ஒலிப்பேழை – கடற்புலிகளுக்காக செய்தோம்.  கவிஞர் காசி ஆனந்தன் மூன்று பாடல்கள எழுதினார்.  புலவர் புலமைப்பித்தன் அவர்களை சந்தித்து, பல ஆண்டுகாலம் இயக்கத்துடன் விடுபட்டிருந்த தொடர்பை புதுப்பித்தேன்.  அவர் மூன்று பாடல்களை எழுதினார்.  (1. இது கடற்புலிப்படை, 2. மனித சுனாமி தான்.. 3. நாம் நீரிலும் வெடிக்கும் எரிமலைகள்).  கவிஞர் புதுவை இரத்தினதுரை, கு. வீரா., போன்றவர்களின் பாடல்களும் இருந்தன. பாடல்கள் அனைத்திற்கும் அற்புதமான எழுச்சி மிகுந்த இசையை இசையமைப்பாளர் தேவேந்திரன் அமைத்திருந்தார்.  பாடல்களை, S.P பாலசுப்பிரமணியம், S.M. சுரேந்தர், திப்பு, கார்த்திக், T.L. மகாராசன், மனோ, சுஜாதா, கல்பனா, மாணிக்கவிநாயகம், சத்தியன், ஹரீஸ் ராகவேந்திரா போன்ற தமிழ்த்திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களை பாடவைத்தேன். “இத்தொகுப்பில் S.P பாலசுப்பிரமணியம் அவர்களை எப்படியாவது பாடவைத்து விடுங்கள் அண்ணா” என்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி பொறுப்பாளரும் போராளியுமான சேரலாதன் என்னிடம் கேட்டபிறகு, புலவர் புலமைப்பித்தன் அவர்களிடம் செய்தியைக் கூறினேன். அவர் S.P.B அவர்களுடன் எனக்கு தொடர்பைத் ஏற்படுத்தித் தந்தார். அப்போது (2006-2007) S.P.B ஜெயா தொலைக்காட்சியில் குழந்தைகளுக்காக ஒரு நிகழ்ச்சியை (என்னோடு பாட்டுப் பாடுங்கள்) நடத்திக்கொண்டிருந்தார். நானும் அந்நிகழ்வை தொடர்ந்து பார்ப்பதுண்டு. ஒரு இசைப் பேராசிரியர் வகுப்பு எடுப்பது போல் இருக்கும். “அந் நிகழ்வை பதிவு செய்து தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார். இசையைக் கற்றுக்கொள்பவர்களையும் இசையில் ஆர்வமுள்ளவர்களையும் பார்க்கச் சொல்வதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று பலரையும் பார்க்கச் சொல்லியிருக்கிறார். தலைவருக்கு மிகவும் பிடித்த நிகழ்வு” என்று சேரலாதன் என்னிடம் கூறியதோடு   எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களை சந்திக்கும் போது இதைக் கூறுங்கள் அண்ணா என்றார். முதல் ஒலிப்பேழைக்காக பாடல் பதிவுக்கு வந்தபோது சந்தித்தேன். அதுதான் முதல் சந்திப்பு. 21.06.2007 அன்று சாலிகிராமத்தில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. முதல் சந்திப்பு போல் இல்லாமல் பல நாட்கள் பழகியதுபோல் மிக இயல்பாக இருந்தது. சந்தித்த உடனே தலைவர் குறிபிட்டதாக சேரலாதன் கூறிய செய்தியைக் கூறினேன். மிகவும் மகிழ்ந்தார். “அவர் பார்த்து கருத்துக் கூறியது எனக்குப் பெருமை” என்றும் நெகிழ்ந்தார். இதை தலைவருக்கும் பகிர்ந்தேன். S.P. பாலசுப்பிரமணியம் ஒலிப்பதிவுக் கூடத்தில் என்னோடும் இசையமைப்பாளர் தேவேந்திரன் அவர்களோடும்  சில நிமிடங்கள் பொதுவான உரையாடலுக்குப் பிறகு தான் பாடவேண்டிய பாடல் வரிகளைக் கேட்டுப் பெற்று தான் கொண்டுவந்திருந்த ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதினார். மிகவும் வியந்து அதுகுறித்து அவரிடம் கேட்டேன் “திரைப்படப் பாடலாக இருந்தாலும் அல்லது தனி தொகுப்புப் பாடலாக இருந்தாலும் தன்னுடைய இந்த பதிவேட்டில் பாடல் வரிகள், எந்தத் தேதியில், யாருடைய இசையமைப்பில், எந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை எழுதி வைப்பது எனது வழக்கம்” என்று கூறினார். அதன் பிறகு பாடலின் இசைக்கோர்வையை தன்னுடைய Tape Recorder இல் பதிவு செய்து தரக்கூறி பாடலை அதனோடு இணைத்து ஒருமுறைக்குப் பலமுறைப் பாடிபார்த்தபிறகு பாடல் பதிவுக்குத் தயாரானார். அன்று அவர் பாடியப் பாடல் கவிஞர் கு.வீரா எழுதிய “உலக மனிதம் தலைகள் நிமிரும் விடுதலைப் போரின் வீரத்திலே” என்றபாடல். அந்தப் பாடலை அவர் எழுதிக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு வரிகளையும் உள்வாங்கி “உணர்வோடும் உண்மையோடும் கவித்துவத்தோடும் எழுதியிருக்கிறார்” என்று வீராவைப் பாராட்டினார். இசையைக் கேட்டபிறகு  தேவேந்திரனையும் பாராட்டினார். “எங்கள் மண்ணில் நாங்கள் வாழ எவரும் தடுத்தல் சரிதானா சொந்த மண்ணில் வாழும் உரிமை எமக்கு என்ன கிடையாதா குண்டை போட்டார் கூச்சல் போட்டோம் எவரும் அதனைக் கேட்கவில்லை குண்டை போட்டார் குண்டே போட்டோம் கூடா தென்றால்  ஞாயமில்லை” என்று சரணத்தில் வருகின்ற வரிகள் S.P. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வரிகள். மிகவும் அற்புதமாக அப்பாடலை பாடினார். பாடி முடித்ததும் நானும் தேவேந்திரனும் அவரைப் பாராட்டினோம். ‘எங்களின் கடல்’ தொகுப்பில் இறுதிப் பாடலாக அதை வைத்தோம். இரண்டாவதாக இம்ரான் பாண்டியன் படையணிக்காக ‘ஈட்டிமுனைகள்’ என்றத் தலைப்பில் ஒரு பாடல் ஒலிப்பேழையை தயாரித்தோம். அனுராதபுர விமானப்படைத் தளம் தாக்குதல் ‘எல்லாளன் நடவடிக்கை’ குறித்த ஒலிப்பேழை தொகுப்பையும் மூன்றாவது முறையாக தயாரிக்கும் பொறுப்பு என்னிடமே வழங்கப்பட்டது.  அத்தொகுப்பிற்கும் இசையமைபாளர் தேவேந்திரன் தான். “இத்தொகுப்பில், S.P பாலசுப்பிரமணியம் அவர்களை எப்படியாவது இரண்டு பாடல்களையாவது பாடவைத்து விடுங்கள் அண்ணா” என்று தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வந்தார் சேரலாதன். “அள்ளித்தின்ற ஆனா எழுதிய – அன்னை மண்ணைக் கடக்கிறோம். அன்னியச் சேனை கோட்டை இருக்கும் அனுராதபுரத்திற்கு நடக்கிறோம்” என்ற யோ. புரட்சியின் பாடலையும், “வானத்திலேறியே வந்து வந்து குண்டு போட்டவன் கோட்டையிலே – துட்ட காமினிமுன்னர் எல்லாளனை வீழ்த்திய கோட்டையின் வாசலிலே” என்ற புதுவை இரத்தினதுரையின் பாடலையும் S.P பாலசுப்பிரமணியம் மிக அற்புதமான உணர்ச்சிகளோடும், சங்கதிகளோடும் அவருக்கே உரிய தனித்துவத்தோடும் பாடியிருந்தார். இதே காலகட்டத்தில் எல்லாளன் திரைப்படப் படப்பிடிப்பு தமிழீழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அத்திரைபடத்திற்கான அண்ணன் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய “தாயக மண்ணே! தாயக மண்ணே!! விடைகொடு தாயே! விடை கொடு தலைவனின் தேசப் புயல்களுக்காக வழிவிடு தாயே! வழிவிடு” என்ற பாடலை எனக்கு அனுப்பிய சேரலாதன், உடனடியாக தேவேந்திரன் அவர்களை இசை அமைக்கச் செய்து, S.P பாலசுப்பிரமணியம் அவர்களை பாடவைத்து அனுப்பி வையுங்கள் அண்ணா” என்றார், சேரலாதன். அண்ணன் கவிஞர் புதுவை இரத்தினதுரை, பாடல் காட்சிப்படுத்தலுக்கு ஏற்ற வகையில் இசைக்கோர்வை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் பிற விடயங்கள் குறித்தும் நீண்ட நேரம் என்னிடம் கைபேசியில் உரையாடினார். அன்பைப் பொழிந்தார். நெகிழ்ந்தார். அதன் பிறகு அவரோடு தொடர்பே இல்லை. அப்பாடல் தொகுப்பிற்கு இடையில் இப்பாடலையும் இசையமைத்து, S.P.B அவர்களைக் கொண்டு பாடச்செய்து உடனடியாக அனுப்பினேன்.  மிகவும் அற்புதமாக அப்பாடலை S.P.B பாடியிருப்பார்.  புதுவையின் வரிகளுக்கு ஏற்ற இசையை தேவேந்திரன் கோர்த்திருந்தார்.  காட்சிப்படிமங்களாக விரியும் அந்த இசைக்கான வரிகளுக்கு S.P.B  தன் குரலால் உயிர் கொடுத்திருந்தார். அந்தப் பாடலில் இருந்த உயிர்த்துடிப்பு மிக்க காட்சிப் படிமங்கள் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை. காற்றும் தமிழும் உள்ளவரை அவரும் வாழ்வார். -ஓவியர் புகழேந்தி-   http://www.ilakku.org/s-p-balasubrahmanyam-songs-of-the-tamil-eelam-liberation-struggle-oviar-pugazhenthi/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.