Jump to content

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, colomban said:

ஒருவேளை இப்படியுமிருக்கலாம். நாங்கள் சிங்கள மக்கள் மத்தியில் சிறுவயதில் இருந்து வாழ்வதனால் யாரும் சிங்கள மொழியை திணிக்காமலே இயல்பாகவே கற்றுக்கொண்டோம். இதானால் அடையாளாத்தை இழக்கின்றேம் அல்லது எங்களை ஆதிக்கம் செய்கின்றார்கள் என்ற எண்ணம் எங்களுக்கு வரவில்லை. இதேபோல் எங்களை சுற்றி வாழும் சிங்களவர்களும் நன்கு தமிழ் பேசக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

உப்பிடித்தான் ராசா! பலபேர் நினைத்து ஒன்றுக்குள் ஒன்றாய் வாழ்ந்தார்கள். இனப்பிரச்சனை என்று ஒன்று வந்துது பாருங்கோ! எல்லாத்தயும் விட்டிட்டு உயிரை கையில பிடிச்சுக்கொண்டு ஓடி வந்தவையள். புலி வந்த பிறகு அடங்கிச்சினை. இப்ப புலி உருவானது சரியானதே என்கிற கருத்து வலுப்பெற்றிடும் எண்டு போட்டு வேறு விதத்தில செய்யினம். அதெல்லாம் உங்களுக்கு புரியுதோ என்னவோ? உண்மையப்பு நடந்ததெல்லாம். 

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

வணக்கம் எப்போதும் தமிழன்,  நானும் ஓரிரு கேள்விகளை கேட்டு எனது சந்தேகங்களிற்கு விடைதேடுவதுண்டு. ஆகையால் தேவையற்ற கருத்துகளை தவிர்த்து ஆரோக்கியமான கருத்துரையாடலாக இருந்தால் மிகவும் நன்று என நினைக்கிறேன்..
நன்றி.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சுவைப்பிரியன் said:

இந்த திரியை ஊரில உள்ளவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.

சிங்களம் மொழியை தாங்கள் படித்துவிடுவோமோ என்று வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் எவ்வளவு அக்கறை கொள்கிறார்கள் என்று நினைப்பார்கள்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சிங்களம் மொழியை தாங்கள் படித்துவிடுவோமோ என்று வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் எவ்வளவு அக்கறை கொள்கிறார்கள் என்று நினைப்பார்கள்😂

தமிழர்கள் சிங்கள மொழிக்கும்,சிங்கள மக்களுக்கும் எதிரானவர்கள் இல்லை.
இதை உங்களுக்கு விளங்க வைக்க நான் ஆரிட்டை போறது? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் எப்போதும் தமிழன்,  நானும் ஓரிரு கேள்விகளை கேட்டு எனது சந்தேகங்களிற்கு விடைதேடுவதுண்டு. ஆகையால் தேவையற்ற கருத்துகளை தவிர்த்து ஆரோக்கியமான கருத்துரையாடலாக இருந்தால் மிகவும் நன்று என நினைக்கிறேன்..
நன்றி.
 
பிரபா நான் கருத்து எழுதியது உங்களுக்கு அல்ல. இங்கு ஒருவர் விளங்கினாலும் விளங்காமல் இருக்கு எண்டு எழுதுவார். அவருக்கானதே. ஆரோக்கியமாக கருத்தாடும்போது பதில் எப்போதும் நியாயமாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதை உங்களுக்கு விளங்க வைக்க நான் ஆரிட்டை போறது? 😜

விளங்காதவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். இது மல்லுக்கு நிற்கிற சனம். அது பிறவிக்குணம் பாருங்கோ. தப்பை தட்டிக்கொடுத்து வளர்த்து விட்டுக்கிடக்கு. இவர்களுக்கு விளங்க வைக்க வேண்டுமென்றால், இவர்களை விட நாம் கீழிறங்க வேண்டும், பிறகு பாக்கிறவை இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுவினம். அவர்களை அவர்கள் போக்கிலேயே விடுங்கள், தங்களைத் தாங்களே தட்டிக்கொள்ளட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

உப்பிடித்தான் ராசா! பலபேர் நினைத்து ஒன்றுக்குள் ஒன்றாய் வாழ்ந்தார்கள். இனப்பிரச்சனை என்று ஒன்று வந்துது பாருங்கோ! எல்லாத்தயும் விட்டிட்டு உயிரை கையில பிடிச்சுக்கொண்டு ஓடி வந்தவையள். புலி வந்த பிறகு அடங்கிச்சினை. இப்ப புலி உருவானது சரியானதே என்கிற கருத்து வலுப்பெற்றிடும் எண்டு போட்டு வேறு விதத்தில செய்யினம். அதெல்லாம் உங்களுக்கு புரியுதோ என்னவோ? உண்மையப்பு நடந்ததெல்லாம். 

நானே அடிவாங்கி தான் திருத்தப்பட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Eppothum Thamizhan said:

ஆரோக்கியமாக கருத்தாடும்போது பதில் எப்போதும் நியாயமாகவே இருக்கும்.

 நன்றி எப்பொழுதும் தமிழன், நீங்கள் எனக்கு எழுதவில்லை எனத்தெரியும், ஆனாலும் இங்கே விளங்கியும் விளங்காதது போல, தூங்குவது போல, இப்படி பலரை பார்ப்போம், அப்படியானவர்களை நதி ஒன்று கடலை தேடி ஓடும் போது, தான் போகும் பாதையில் பாறைகள் இருந்தால், அதனைச்சுற்றி ஓடி தனது இலக்கான கடலை அடைவது போல..அவர்களுடன் தேவையற்ற விவாதங்களை, தேவையற்ற கருத்துக்களை அதிகளவில் ஊக்குவிக்காமல் தவிர்த்து எங்களது இலக்குகளை நோக்கி செயற்ப்பட்டால் நல்லது என நினைப்பதுண்டு. அவ்வளவுதான். தவறாக ஏதும் கூறவில்லை என நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த நதியின் பயணம் பற்றிக் கேட்டிருக்கிறேன். சிந்திக்கவேண்டிய, அனைவரிடத்திலும் இருக்கவேண்டிய பண்பு. பகிர்ந்தமைக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த களத்தில் பெரும்பாலும் தங்கள் நேரத்தை செலுத்தி வாதிடுபவர்கள், தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும், ஒரு நல்ல தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் தமிழ்மக்கள்பால் அக்கறை கொண்டவர்களாகவே நான் காண்கிறேன். 

எனக்கு ஒரு கொள்கை உண்டு அதை எதிர்ப்பவன்  எல்லாம் துரோகி என்பது பாசிசவாத சிந்தனை. 

ஒருவர் தன் பக்க நியாயத்தை வைக்கட்டும் அடுத்தவர் அவர் பக்க நியாயத்தை வைக்கட்டும். வாசிக்கும் மக்கள் தெளிவடையட்டும். நீங்கள் கருத்து வைப்பது வாசிக்கும் வாசகர்களுக்கு மட்டும் என்று நினைவில் வைத்தாலே பாதி முரண்பாடு களையப்படும்.

நன்றி பிரபா.உங்கள் தேவையானதும் ஆக்கபூர்வமான கருத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎-‎08‎-‎2020 at 10:40, குமாரசாமி said:

புலம்பெயர்ந்த தமிழர்கள்  இலங்கை விடயத்தில் எப்படியிருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? அல்லது என்ன செய்ய வேண்டும் ?

பேசாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன் ...இங்குள்ள பல பேரது கருத்தை வாசிக்கும் போது அங்குள்ள எம் மக்கள் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் படிக்க கூடாது,முன்னேற கூடாது  என்று சொல்வது போல உள்ளது.
தற்போது அங்குள்ள சிங்களவர்களே தமிழர்களுடன் தமிழில் கதைக்கிறார்கள்...நான் போன வருடம் போயிருந்த போது ஜசி எடுக்க போயிருந்த போது என்னோடு சிங்களத்தில் கதைக்க, தெரியாது என்னும் போது தமிழில் கதைத்தார்கள் ...சிலர் விரும்பி கதைத்தார்கள் ...சிலர் வேண்டா ,வெறுப்பாய் கதைத்தார்கள் ....ஆனால் கதைக்க தொடங்குகிறார்கள் ...அதுவே மாற்றம் அல்லவா!
சிங்களவர் தமிழர் பகுதியிலும்,தமிழர்கள் சிங்கள பகுதியிலும் வேலைக்கு போகுறார்கள்...அங்குள்ள பாமர மக்களோடு எந்த மொழியில் உரையாற்றுவார்கள் ஆங்கிலத்திலா?...எதற்கெடுத்தாலும் தமிழ் ,தமிழ் என்று காத்திக் கொண்டு ...இப்படி கத்துபவர்கள் வீட்டில தங்கட பிள்ளைகளோடு ஆங்கிலத்திலோ அல்லது ஐரோப்பிய மொழிகள் தான் கதைப்பினம்😧
அரசு தமிழரை மட்டும் சிங்களம் படி என்று வற்புறுத்தவில்லை ....சிங்களவரையும் தமிழ் படி என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
உண்மையிலேயே அந்த மக்கள் முன்னேற வேண்டும் என்றால் அந்த மக்களை நன்றாக படிப்பித்து எல்லாத் துறைகளிலும் இறக்கி விடுங்கோ ...அவர்கள் முதலில் முன்னேறினால் தான் "தமிழன்" ஒரு இனமாய் தலை நிமிர்ந்து நிற்கலாம் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அது சரி மொழியை படிச்சால் தமிழர்ரை பிரச்சனை முடிஞ்சுது.
இன்னும் கொஞ்ச காலத்தாலை ஈழத்தமிழருக்கு பிரச்சனையே இல்லையெண்டு கொடி தூக்கிற ஆக்கள் உங்களைப்போல ஆக்களாய்த்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அது சரி மொழியை படிச்சால் தமிழர்ரை பிரச்சனை முடிஞ்சுது.
இன்னும் கொஞ்ச காலத்தாலை ஈழத்தமிழருக்கு பிரச்சனையே இல்லையெண்டு கொடி தூக்கிற ஆக்கள் உங்களைப்போல ஆக்களாய்த்தான் இருக்கும்.

இப்ப யாழ்ப்பானத்தில் வியாபாரிகள் சிங்கள மொழி பேச தொடங்கிவிட்டார்கள் சிங்கள மொழி படிக்க நான் கூட வெறு இடத்திற்கு வேலை  மாற்றம் செய்ய இருக்கிறன் மொழியை படித்தால் பல பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம் .

ஒரு பொலிஸ் பிடிச்சாலும் அவருடன் பேசக்கூட முடியவில்லை  

நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தேன் எந்த மாற்றமும் இல்லை கிராமங்கள் அப்படியே காடுகளாகவும் குடிசைகளாகவும் கையில் காசு இருக்கும் மக்கள் வசதியான வாழ்க்கை மற்றவர்கள் வாழ்க்கை ஓட்டம் 

எங்கு இராணுவ பிரசன்னம் நிறைந்து காணப்படுகிறது  ஆனால் கெடுபிடிகள் இல்லை 

On 21/8/2020 at 16:43, சுவைப்பிரியன் said:

இந்த திரியை ஊரில உள்ளவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.

இது சாதரணம் தானே அப்படி பெரிசா எடுக்க மட்டம் நம்புங்கள் 

Link to comment
Share on other sites

இலங்கையில் இருமொழி தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது அரச அலுவலர்கள் வேலை கிடைத்த பிறகாவது தமிழர்கள் சிங்கள மொழியும் சிங்களவர்கள் தமிழ் மொழியும் (ஓ/எல் ) சித்தியடைந்திருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/8/2020 at 14:47, colomban said:

கிருபன்,

இந்த வரைவிலக்கணம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. என்னை ஒருவித மன உழைச்சலுக்கு இட்டுச் சென்றது. என்னை நான் இந்த வரையரைக்குள் வைத்துப்பார்த்தேன். நான் இதற்கு பொருத்தமானவனல்ல.

தமிழ் தேசியம் என்றால் என்ன? சத்தியமாக இதன் வரவிலக்கணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. நான் ஒரு இந்திய வம்சாவளி தமிழன். நாங்கள் 5 அல்லது 6  தலைமுறையாக கொழும்பில் வாழ்கின்றோம். நான் படித்தது தமிழ் மொழியில் எனக்கு அதில் ப‌‌ற்றுண்டு.

மேலும் வரைவிலக்கணத்தின் படி, "தெரிந்த மொழிகொண்டு கடைமையற்றுவது" இக்கூற்றின் படி வீட்டில் நாங்கள் தமிழ் கதைக்கின்றேம் ஆனால் ஒரு அரசாங்க அமைச்சுக்கோ அல்லது எதெனும் அரச அலுவல் நிமித்தமாக செல்லும்போது நான் அங்கு தமிழ் மொழியைவிட சிங்கள மொழியயை சரளமாக பாவிக்கின்றேன். எனக்கு என்னுடய வேலையை இலகுவாக செய்து கொண்டு வரமுடிகின்றது. இத‌ற்கு காரணம் நான் சிங்களத்தில் உள்ள அன்பினால் அல்ல. அவர்களுடன் இலகுவாக தொடர்பாட முடிகின்றது. எனக்கு வேண்டியதை இலகுவா அவர்களுடைய மொழியில் கூறி செய்யக்கூடியதாக இருக்குன்றது.

இங்கு நான் சிங்களம் பேசுவதனால் தமிழ் அடையாளத்தை இழக்கின்றேனா?

மேலும் வேலைவாய்ப்புக்களில், நான் இலகையில் வேலைசெய்த நாட்களில் எனக்கு எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை. உண்மையில் எனக்கு 3 மொழிகளும் சரளமாக தெரியும் என்பதால் எனக்கு அது சாதகமாகவே அமைந்தது.   சிங்களவர்களின் மொழி மதம் என்னை ஆதிக்கம் செலுத்தவில்லையே.

இரண்டு நாட்களுக்கு முன்பு திண்ணையில் நாதமுனி குறிப்பிட்டார். நீர் ஒன்றில் தமிழ் தேசியம் அல்லது சிங்கள தேசியம் என, எனக்கு உண்மையில் ஒரே குழப்பமாக போய்விட்டது.

எனக்கு இருக்கும் கேள்விகள் இதுதான்?

1. தமிழ் தேசியம் என்றால் என்ன? இதற்கு ஒரு சரியான வரைவிலக்கணம் உள்ளதா? 
2. எப்படி என்னைப் போன்றவர்கள் தமிழ் தேசியவாதியாக மாறாலம்? 
3. எப்படி நான் தமிழ் தேசிய பண்புகளை வள‌ர்த்து கொள்ளலாம்?  

எனக்கு இதை குறித்து யாரவது தெளிவாக விளக்குவீர்களா?  

நன்றி ரதி 
எனக்கு இது தான் எனக்கிருக்கும் கேள்வியும் கூட‌
 
கொழும்பான்,

நீங்கள் கேட்ட கேள்விகளும் இங்கே எழுந்த சில வாதங்களும் தமிழ் தேசியம் என்பது ஏதோ அருவருக்க தக்க கொள்கை அல்லது வட கிழக்குக்கு வெளியே வாழும் தமிழரை விலக்கி அமைவது என்பதாக தொனிப் பட்டதால் இதை எழுதுகிறேன்.

தமிழ் தேசியம் என்றால் என்ன

தேசியம் என்பதற்கு பின்வரும் காரணிகள் இன்றி அமையாதன:

1. தனித்துவமான மொழி, வரலாறு, கலை கலாசாரம், பண்பாட்டியல்

2. பாரம்பரிய வாழிடம்

3. தம்மை தாமே தேசியமாக உணர்தல் (subjective)

4. வெளியார் நம்மை தேசியமாக அங்கீகரித்தல் (objective).

இங்கே தமிழ் தேசியம் என்பது ஒன்றுதான், அது உலகெங்கும் உள்ள தமிழர் யாவருக்கும் பொருந்தும். எமது பாரம்பரிய வாழிடம்கள் தமிழ் நாடும், இலங்கையின் வட கிழக்கும்.

அதாவது தமிழ்நாடு, இலங்கையின் வடகிழக்கு பாரம்பரிய வாழிடத்தில் பெரும்பான்மையாகவும், வரலாற்று தொடர்சியாகவும், இந்த வாழிடத்துக்கு வெளியேயும் வாழும் தனித்துவ மொழி, வரலாறு, கலை கலாச்சார, பண்பாட்டியலை கொண்ட ஒரு தேசிய இனம் நாம்.

இலங்கையின் வட கிழக்கில் நாம் எம்மை ஒர் தேசிய இனமாக உணர்ந்து எமது வாழிடத்தில் சுய நிர்ணயமாக எமது அரசியலை தீர்மானிக்கும் உரிமையை கோருகிறோம் என்பதற்கு வட்டு கோட்டை தீர்மானமும் அதன் பின் வந்த போராட்டமும் தேர்தல்களுமே சாட்சி. மேலும் சாட்சி தேவைபடின் ஒர் சர்வஜன வாக்கெடுப்பை இந்த பகுதியில் நடத்தி பார்க்கலாம்.

எம்மை இவ்வாறு அங்கீகரிக்க கோரி நாம் ஏனையோரை கோருவதே 77இல் இருந்து எமது போராட்டம் (objective recognition). 
 
தமிழ் தேசிய இனமாக எமக்கு தமிழக்கதிலும், இலங்கையின் வட கிழக்கிலும் சுயநிர்ணய உரிமை உள்ளது. இந்தியா இதை அங்கீகரித்து, தமிழகம் தனது சுயநிர்ணயத்தை இந்திய கூட்டாட்ட்சியில் ஒன்று சேர்த்து மாநில சுயாட்சியில் பங்காளியாக, இந்திய யூனியனில் ஒரு அங்கமாக இருக்கிறது.

இலங்கையிலும் எமது சுய நிர்ணயத்தை அங்கீகரித்து, ஒரு கூட்டாட்சி அடிபடையில் (புலிகள் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய கூட்டாட்சி என்றார்கள்) எம்மை அரசில் (கவனிக்க - அரசில், அரசாங்கத்தில் அல்ல) பங்குதாரர் ஆகவேண்டும் என்பதே தமிழ் தேசிய அரசியல்( வட கிழக்கில் அரசாங்கம் எம்மாலே நடத்தபடும், ஆனால் இலங்கை அரசில் நாமும் பங்குதாரர்கள்) .

இப்போ தமிழ் தேசிய அரசியல் என்றால் என்ன என்பது விளங்கியாயிற்று.

நீங்கள் எப்படி தமிழ் தேசியவாதியாக ஆகலாம்?

இப்படி ஆக வேண்டும் என கட்டாயம் ஏதுமில்லை. ஒவ்வொரு தனி தமிழ் மனிதனும் தமிழ் தேசியத்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இல்லை. பாரம்பரிய வாழிடத்தில் வாழும் பெரும்பாலனோர் ஏற்றால் போதுமானது. ஆனா தமிழ் தேசியம் வாழிடத்துக்கு உள்ளே வெளியே வாழும் எல்லோருக்குமானது. மேற்சொன்ன தமிழ் தேசியதுக்கான வரைவிலக்கணத்தை நீங்கள் ஏற்றால் நீங்களும் ஒரு தமிழ் தேசியவாதியே. மனோ கணேசன் செய்யும் அரசியல் தமிழ் தேசிய அரசியல் அல்ல. ஆனால் அவர் இந்த கொள்கையை ஏற்கிறார். எனவே அவர் ஒரு தமிழ் தேசியவாதி. புலம் பெயர் வேறு நாட்டின் கடவுசீட்டு கொண்டுள்ள தமிழரும், சீமானும், பேரா ராமசாமியும் இப்படியே.

எப்படி பண்புகளை வளர்துகொள்ளலாம்

நீங்கள் தமிழ் தேசியவாதியாக இருக்கவே வேண்டிய அவசியம் இல்லை, எனும் போது இந்த பண்புகளை நீங்கள் வளர்க வேண்டிய அவசியமும் இல்லை. உளப்பூர்வமாக நீங்களும் மனோவை போல் தமிழ் தேசியத்யில் நம்பிக்கை கொண்டிருந்தால் போதுமானது. இலாவிடிலும் நீங்கள் தமிழர்தான். 100% சகல தமிழர்களும் தமிழ் தேசியவாதிகளாக இருக்க வேண்டியதில்லை.

ஆனால் எமக்கென ஒரு பாரம்பரிய வாழிடம், அங்கே எமது அரசாங்கம் இருக்கும் போது, வாழிடத்துக்கு வெளியே எம்மை “பற தெமிலோ” என்று விரட்டி அடிக்கும் போது உரிமையோடு ஓடிப் போவதற்கு ஒரு இடம் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

உண்மையிலேயே அந்த மக்கள் முன்னேற வேண்டும் என்றால் அந்த மக்களை நன்றாக படிப்பித்து எல்லாத் துறைகளிலும் இறக்கி விடுங்கோ ...அவர்கள் முதலில் முன்னேறினால் தான் "தமிழன்" ஒரு இனமாய் தலை நிமிர்ந்து நிற்கலாம் 
 
இது தான் சரியான வழி. வேறு துறைகளைப் பற்றி தெரிந்தோர் எழுதலாம். மிருகவைத்தியத் துறையில் , 2001 இல் அரசவெற்றிடங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார்கள். ஆனால் நேர்முகத்தேர்வில் சிங்களவர் தமிழில் சரளமாகவும் தமிழர் சிங்களத்திலும் உரையாடினால் மட்டுமே பதவி. 2012 இல் ஊருக்குப் போனேன். சிங்களப் பெண் வைத்தியர்கள் சரளமாக தமிழ் பேசியபடி கிளிநொச்சியில் வேலை செய்கிறார்கள். 

தனியார் துறையினர் இன்னும் முன்னேற்றம், உரிய கல்வித் தகுதியோடு இந்த இரு மொழிகளோடும் ஆங்கிலமும் தெரிந்திருந்தால் தேடித் தேடி வேலை கொடுக்கிறார்கள். முப்பது வருடம் முந்தி வெளிநாடு வந்த ஆட்களோ இன்னும் சிங்கள சிறி எதிர்ப்புப் போராட்டத்திலேயே தங்கி விட்டனர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

இந்த நதியின் பயணம் பற்றிக் கேட்டிருக்கிறேன். சிந்திக்கவேண்டிய, அனைவரிடத்திலும் இருக்கவேண்டிய பண்பு. பகிர்ந்தமைக்கு நன்றி!

நானும் இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.  அவை இயற்கையால் உருவாக்கப்பட்ட கற்கள் பாறைகள் என்றால் சுற்றிப்போகும். வேண்டுமென்றே அணைகளை கட்டினால் உடைத்துத்தான்  வெளியேறவேண்டும். கடலை அடைவதற்கு!

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

தமிழ் தேசிய இனமாக எமக்கு தமிழக்கதிலும், இலங்கையின் வட கிழக்கிலும் சுயநிர்ணய உரிமை உள்ளது. இந்தியா இதை அங்கீகரித்து, தமிழகம் தனது சுயநிர்ணயத்தை இந்திய கூட்டாட்ட்சியில் ஒன்று சேர்த்து மாநில சுயாட்சியில் பங்காளியாக, இந்திய யூனியனில் ஒரு அங்கமாக இருக்கிறது.

கோஷான்,  இது உண்மையல்ல. தமிழ்நாட்டில் எழுந்த திராவிடநாடு கோரிக்கையை இந்திய மத்திய அரசு பிரிவினைவாத தடைச்சட்டம் போட்டு முடிவுக்கு கொண்டு வந்தது. இந்தியா தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கையை சட்டம் போட்டு தடை செய்தது.

தமிழ்நாட்டில் இந்திக் கலாச்சாரம் திணிக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்து இந்தியாவின் தெற்கு பகுதியை திராவிடர்களுக்கு என்று தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுக விடுத்தது. திராவிட நாடு தனிப்பட்ட மாநிலமாக இருக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. திராவிட நாடு என்பது தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடாக மற்றும் கேரளாவின் பகுதிகளை உள்ளடக்கிய திராவிடர்களின் நாடு என்பதாகும்.[99] மதராஸ் மாகாணத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு 1950 ஆம் ஆண்டு இறுதி வரை இருந்த ஈடுபாடு மற்றும் 1962 ஆம் ஆண்டில் இந்தியப் பகுதிகளில் சீனாவின் நுழைவு ஆகிய காரணங்கள் உடனடியாக திராவிட நாடு கோரும் கோரிக்கைக்கு இடையூறாக அமைந்தது. இந்திய அரசியலமைப்பில் 1963 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பதினாறாவது சட்டத் திருத்தம் பிரிவினை வாதக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்தது. இதன் காரணமாக திராவிடனுக்கு தனிப்பட்ட நாடு கோரிக்கையை திமுக முழுமையாக நிறுத்திவிட்டு இந்திய அரசியலமைப்பில் செயல்திறன் மிக்க சுயாட்சி கட்சியாக மாறுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தியது.[100]

ஆதாரம்: https://ta.m.wikipedia.org/wiki/தமிழக_வரலாறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

8 hours ago, ரதி said:

நான் போன வருடம் போயிருந்த போது ஜசி எடுக்க போயிருந்த போது என்னோடு சிங்களத்தில் கதைக்க, தெரியாது என்னும் போது தமிழில் கதைத்தார்கள் ...சிலர் விரும்பி கதைத்தார்கள் ...சிலர் வேண்டா ,வெறுப்பாய் கதைத்தார்கள் ....ஆனால் கதைக்க தொடங்குகிறார்கள் ...அதுவே மாற்றம் அல்லவா!

3 hours ago, Justin said:

2012 இல் ஊருக்குப் போனேன். சிங்களப் பெண் வைத்தியர்கள் சரளமாக தமிழ் பேசியபடி கிளிநொச்சியில் வேலை செய்கிறார்கள். 

நான் இலங்கை சென்ற போது எனது குழு சிங்களம் தெரியாமல் கஷ்டபட தமிழ் தெரிந்த சிங்களவர்கள் உதவி செய்ததை இங்கே சொன்ன போது நான் அதிர்ஷ்டம் கொண்டவன் அதனால் சிங்களவர்கள் தமிழ் கதைத்தார்கள். அனேகமாக சிங்களவர்கள் தமிழ் கதைக்கவே மாட்டார்கள் என்ற மாதிரி சொன்னார்கள். ரதி, ஜஸ்ரின் சொன்னவற்றை பார்க்கும் போது வெளிநாடுகில் வாழ்கின்ற தமிழர்களின் விருப்பங்களை மீறி அங்கே நல்ல மாற்றம் நடைபெறுகிறது.

3 hours ago, Justin said:

முப்பது வருடம் முந்தி வெளிநாடு வந்த ஆட்களோ இன்னும் சிங்கள சிறி எதிர்ப்புப் போராட்டத்திலேயே தங்கி விட்டனர்! 

உண்மை. இறுக்கவே கட்டிபிடித்து கொண்டிருக்கின்றனர்.

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப யாழ்ப்பானத்தில் வியாபாரிகள் சிங்கள மொழி பேச தொடங்கிவிட்டார்கள் சிங்கள மொழி படிக்க நான் கூட வெறு இடத்திற்கு வேலை  மாற்றம் செய்ய இருக்கிறன் மொழியை படித்தால் பல பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம்

👍வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அப்படி தானே அந்த நாட்டு மொழியை படித்து முன்னேறுகிறார்கள் பிரச்சினைகளை பேசி தீர்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கற்பகதரு said:

கற்பகதரு
இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இலங்கை தமிழனுக்கு பல ஆண்டுகள் சென்ற பின்பும் குடியுரிமை இல்லாமல் அகதியாக மிகவும் மோசமான நிலையில் தமிழகத்தில் வாழுகின்ற போது தமிழ் தேசிய இனமாக எமக்கு தமிழக்கதிலும் இலங்கையின் வட கிழக்கிலும் சுயநிர்ணய உரிமை உள்ளது.இந்தியா இதை அங்கீகரித்து இருந்தால் கூட அதனால் என்ன பயன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப யாழ்ப்பானத்தில் வியாபாரிகள் சிங்கள மொழி பேச தொடங்கிவிட்டார்கள்

அதிகமான வியாபாரிகள் சிங்களவரும், கொழும்பில் இருந்து வந்தவர்களுமே. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தமிழர், வியாபாரிகள் ஏன் சிங்களத்தில் கதைக்கிறார்கள்? சிங்களத்தை திணிக்கிறார்களா? ஒருகாலத்தில் கொம்பிலிருந்து விரட்டப்பட்டோம் இப்ப நாடுமுழுவதும் தன்னோடது என்று எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்திருந்து எங்களை விரட்டுறான். ஒரு உறவு பதித்திருந்தார்; எங்களுக்கு சிங்களம் தெரியும், அவர்களுக்கு தமிழ் தெரியும், எங்களுக்குள் பாரபட்ஷம் இல்லை, இது போதும் என்பது போல் இருந்தது. அவர்கருத்து தமிழ் உணர்வு இல்லை. எங்கள் உரிமைகள் பறிபோகிறது தெரியவில்லை. சாதாரண சிங்கள மக்களுக்கு எப்படி புரியும்? அவர்களுக்கு பொய்யான கதைகளையே பரப்புகிறார்கள். தமிழர், சிங்களவர்களாக மாறுவதற்கு பொருளாதாரத்தோடு தமிழ் பற்றிய உணர்வு இல்லாமை, சுற்றி வர என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமையும் காரணம். பொதுவாக பெரும்பாலானோர்; சிங்களம் படித்தால் பிரச்சனை முடிந்து விட்டது என்கிற முடிவிக்கே வந்து விட்டார்கள். இது ரொம்ப ஆபத்தானது. ஏன் ஒரு பொது மொழி ஆங்கிலத்தை ஊக்குவிக்கக்கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கற்பகதரு said:

கோஷான்,  இது உண்மையல்ல. தமிழ்நாட்டில் எழுந்த திராவிடநாடு கோரிக்கையை இந்திய மத்திய அரசு பிரிவினைவாத தடைச்சட்டம் போட்டு முடிவுக்கு கொண்டு வந்தது. இந்தியா தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கையை சட்டம் போட்டு தடை செய்தது.

தமிழ்நாட்டில் இந்திக் கலாச்சாரம் திணிக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்து இந்தியாவின் தெற்கு பகுதியை திராவிடர்களுக்கு என்று தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுக விடுத்தது. திராவிட நாடு தனிப்பட்ட மாநிலமாக இருக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. திராவிட நாடு என்பது தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடாக மற்றும் கேரளாவின் பகுதிகளை உள்ளடக்கிய திராவிடர்களின் நாடு என்பதாகும்.[99] மதராஸ் மாகாணத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு 1950 ஆம் ஆண்டு இறுதி வரை இருந்த ஈடுபாடு மற்றும் 1962 ஆம் ஆண்டில் இந்தியப் பகுதிகளில் சீனாவின் நுழைவு ஆகிய காரணங்கள் உடனடியாக திராவிட நாடு கோரும் கோரிக்கைக்கு இடையூறாக அமைந்தது. இந்திய அரசியலமைப்பில் 1963 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பதினாறாவது சட்டத் திருத்தம் பிரிவினை வாதக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்தது. இதன் காரணமாக திராவிடனுக்கு தனிப்பட்ட நாடு கோரிக்கையை திமுக முழுமையாக நிறுத்திவிட்டு இந்திய அரசியலமைப்பில் செயல்திறன் மிக்க சுயாட்சி கட்சியாக மாறுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தியது.[100]

ஆதாரம்: https://ta.m.wikipedia.org/wiki/தமிழக_வரலாறு

கற்பகதரு,

இரெண்டு விடயங்களை அவதானியுங்கள்.

1. பிரிந்து போகும் உரிமையுள்ள வெளியக சுய உரிமை. பிரிந்து போகும் உரிமையற்ற உள்ளக சுய உரிமை என சுய உரிமை இருவகைபடும். கொசோவோ கோரி, இறுதியில் அடைந்தது முதலாம் வகை. வேறுபட்ட நிலைகளில் அவுஸ்ரேலியா, இந்திய, அமெரிக்க மாகாணங்கள், ஏன் அந்தமான் நிக்கோபர் தீவு, அமேசன் காட்டு பழங்குடிகள் அனுபவிப்பது உள்ளக சுய உரிமை. இந்த பழங்குடிகள் வாழும் இடத்தில் பிரேசில் அல்லது இந்திய சட்டம் செல்லாது. அங்கே ஒரு 12 வயது குழந்தை பாலியல் உறவில் ஈடுபடுவது வழக்கமாயின் - அதுவே, அவர்களின் உள்ளக சட்டத்தின் அடிப்படையில் ஏற்று கொள்ளப்படும். அவர்களது காணி, பொலீஸ் சகல அதிகாரமும் அவர்கள் வசமே இருக்கும். ஆனால் பிரிந்து போக முடியாது.

2. இந்தியவை பொறுத்தவரை -நாடு உருவாகும் போதும் அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதும் போதும் இந்தியாவை ஒரு யூனியன் “கூட்டு” என்பதாகவே கட்டமைக்கிறார். State list, தனியே மாநிலங்கள் மட்டும் உரிமை உள்ள விடயங்கள் (காணி - சில விடயங்கள் தவிர, பொலிஸ்) central list - கூட்டு அரசு மட்டும் உரிமை செலுத்தும் விடயங்கள் (பாதுகாப்பு, அயலக துறை, ரயில்வே) மற்றும் concurrent list இரு அரசுகளுக்கும் உரிமை உள்ள விடயங்கள் ( கல்வி, சுகாதாரம், துறைமுகம்) என அதிகாரங்களையும் அரசியலமைப்பு தெளிவாக வகை செய்கிறது. ஆனால் பிரிந்து போகும் உரிமை பற்றி முதலாம் அரசியலமைப்பு மெளனமாக இருந்தது. சுதந்திரத்துக்கு பின் மாநிலங்களிலும் மத்தியிலும் காங்கிரசே ஆட்சியில் இருந்ததாலும், இந்தி/மலையாள லாபியின் கபட நகர்வுகளாலும் யூனியன் என்ற பதம் தவிர்க்கப்பட்டு - மைய அரசு அல்லது மத்திய அரசு என்ற பதம் உள்ளே வருகிறது. கூடவே ஸ்டேட் லிஸ்டில் இருந்த கல்வி கொன்கொரெண்ட் லிஸ்டுக்கு போகிறது. இந்த காலத்திலே திராவிட நாடு கொள்கை எழுந்து, பின் பிரிவினையை முடக்கும் சட்டம் வந்து - திராவிட நாட்டு கொள்கையை அண்ணா மாநில சுயாட்சி (பாதுகாப்பு, அயலக உறவு தவிர மிகுதி எல்லாம் மாநிலத்துக்கே) கொள்கையாக மாற்றினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அப்படி தானே அந்த நாட்டு மொழியை படித்து முன்னேறுகிறார்கள் பிரச்சினைகளை பேசி தீர்க்கிறார்கள்.

அங்கு அரசியல் மொழி எல்லோருக்கும் பொதுவானது. குடிபெயர்ந்தோர் அந்நாட்டு மொழியை கற்றுத்தான் ஆகவேண்டும்.

4 hours ago, Justin said:

2012 இல் ஊருக்குப் போனேன். சிங்களப் பெண் வைத்தியர்கள் சரளமாக தமிழ் பேசியபடி கிளிநொச்சியில் வேலை செய்கிறார்கள். 

தமிழர் பிரதேசங்களில் உள்ள வேலை வாய்ப்பை, சிங்களவரைக் கொண்டு நிரப்புவதற்கு இது ஒரு தந்திரம், பயிற்சி அளிக்கிறார்கள். எம்மவர் வேலை வாய்ப்பு இன்றி அவதிப்படும்போது, ஏன் சிங்களவர் தமிழ் பேசிக்கொண்டு இங்கு வரவேண்டும்? சரி தமிழருக்கு சிங்கள மாநிலங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறதா? சிங்களவர் தமிழ் கதைக்கிறார்கள், என்று புளுகித் தள்ளும் நாம் அதன் பின்னால் இருக்கிற தந்திரோபாயத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஏமாந்து விடுகிறோம், அல்லது சேர்ந்து ஆதரித்தால் நமக்கு பிரச்னை இல்லாமல் நம் முதலீடுகளை செய்யலாம் என்கிற எதிர்பார்ப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

கற்பகதரு,

இரெண்டு விடயங்களை அவதானியுங்கள்.

1. பிரிந்து போகும் உரிமையுள்ள வெளியக சுய உரிமை. பிரிந்து போகும் உரிமையற்ற உள்ளக சுய உரிமை என சுய உரிமை இருவகைபடும். கொசோவோ கோரி, இறுதியில் அடைந்தது முதலாம் வகை. வேறுபட்ட நிலைகளில் அவுஸ்ரேலியா, இந்திய, அமெரிக்க மாகாணங்கள், ஏன் அந்தமான் நிக்கோபர் தீவு, அமேசன் காட்டு பழங்குடிகள் அனுபவிப்பது உள்ளக சுய உரிமை. இந்த பழங்குடிகள் வாழும் இடத்தில் பிரேசில் அல்லது இந்திய சட்டம் செல்லாது. அங்கே ஒரு 12 வயது குழந்தை பாலியல் உறவில் ஈடுபடுவது வழக்கமாயின் - அதுவே, அவர்களின் உள்ளக சட்டத்தின் அடிப்படையில் ஏற்று கொள்ளப்படும். அவர்களது காணி, பொலீஸ் சகல அதிகாரமும் அவர்கள் வசமே இருக்கும். ஆனால் பிரிந்து போக முடியாது.

2. இந்தியவை பொறுத்தவரை -நாடு உருவாகும் போதும் அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதும் போதும் இந்தியாவை ஒரு யூனியன் “கூட்டு” என்பதாகவே கட்டமைக்கிறார். State list, தனியே மாநிலங்கள் மட்டும் உரிமை உள்ள விடயங்கள் (காணி - சில விடயங்கள் தவிர, பொலிஸ்) central list - கூட்டு அரசு மட்டும் உரிமை செலுத்தும் விடயங்கள் (பாதுகாப்பு, அயலக துறை, ரயில்வே) மற்றும் concurrent list இரு அரசுகளுக்கும் உரிமை உள்ள விடயங்கள் ( கல்வி, சுகாதாரம், துறைமுகம்) என அதிகாரங்களையும் அரசியலமைப்பு தெளிவாக வகை செய்கிறது. ஆனால் பிரிந்து போகும் உரிமை பற்றி முதலாம் அரசியலமைப்பு மெளனமாக இருந்தது. சுதந்திரத்துக்கு பின் மாநிலங்களிலும் மத்தியிலும் காங்கிரசே ஆட்சியில் இருந்ததாலும், இந்தி/மலையாள லாபியின் கபட நகர்வுகளாலும் யூனியன் என்ற பதம் தவிர்க்கப்பட்டு - மைய அரசு அல்லது மத்திய அரசு என்ற பதம் உள்ளே வருகிறது. கூடவே ஸ்டேட் லிஸ்டில் இருந்த கல்வி கொன்கொரெண்ட் லிஸ்டுக்கு போகிறது. இந்த காலத்திலே திராவிட நாடு கொள்கை எழுந்து, பின் பிரிவினையை முடக்கும் சட்டம் வந்து - திராவிட நாட்டு கொள்கையை அண்ணா மாநில சுயாட்சி (பாதுகாப்பு, அயலக உறவு தவிர மிகுதி எல்லாம் மாநிலத்துக்கே) கொள்கையாக மாற்றினார்.

இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு. அங்கே உள்ளக சுயநிர்ணய உரிமை மொழிவாரி மாநில பிரிவில், மாநில அரசுகளை இனத்தின் பெயரால் (தமிழ் நாடு, கன்னடா, தெலுங்கானா, மணிப்பூர், வங்காளம்)  என அனுமதிப்பதில், மாநில “அரசு” என் அங்கீகரிப்பதில் தெளிவாகிறது. 

உதாரணமாக தனி நாடாக இருந்த சிக்கிம் ஒரு உடன்படிக்கை மூலம் இந்திய மாநிலமானது. இங்கே சிக்கிம் தன் பூரண சுய நிர்ணய உரிமையை விட்டு கொடுத்து, இந்தியாவின் அங்கமாகி, ஒரு மாநிலமாகி உள்ளக சுயநிர்ணயத்துடன் இந்தியாவில் இணைந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் நான் முன்னர் வேலை செய்த இடத்தில் இரு சிங்களப்பெண்கள் வேலை செய்தார்கள் அவர்கள் திரும்ப திரும்ப ஒரே கேள்வியைக்கேட்பார்கள் இலங்கையனான உனக்கு ஏன் சிங்களம் தெரியாது? சிறிது காலம் நான் சிங்கப்பூரில்லிருந்தபோது என்னுடன் இருந்த பல சிங்களவர்கள் தமிழிலேயே உரையாடுவார்கள், நான் அவர்களிடம் சிங்களம் கற்க முற்பட்டபோது அவர்கள் சொல்வார்கள் சிங்களம் கற்பதனால் எந்த இலாபமும் இல்லை என்று சிங்களவர்களிலும் இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள், அனால் வட இந்தியர்கள் மிகவும் மோசம் எடுத்தவுடன் இந்தியில் பேச ஆரம்பித்து வுடுவார்கள் அதில் குறிப்பாக ஒருவர் எனக்கு இந்தி தெரியாது எனக்குத்தமிழ்த்தான் தெரியும் என்றதற்கு தமிழ் மொழி தெரிந்து என்ன இலாபம் என்று திருப்பிக்கேட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.