Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

போர்க்கால இலக்கியம் – ஈழப்போருக்கு முன்பும் பின்னரும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்


 

போர்க்கால இலக்கியம் – ஈழப்போருக்கு முன்பும் பின்னரும்

August 16, 2020

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த 15 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பித்த உரை

 • முருகபூபதி

போர்க்கால இலக்கியம்பற்றி பேசுவதற்கும் நாம் மற்றும் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடும் காலத்திலும் தயாராகியிருக்கின்றோம்.

இனி கொரோனா கால இலக்கியம் என்பதும் பேசுபொருளாகிவிடும். சமகால போராட்டத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி தேவைப்பட்டிருந்தமை போன்று, ஈழவிடுதலைப்போரில் எமது மக்களின் பாதுகாப்பிற்கு பதுங்கு குழிகள்தான் தேவைப்பட்டன. அப்படியிருந்தும் பதுங்கு குழிகளை நோக்கியும் எறிகணை வீச்சுக்கள் நிகழ்ந்தன. குண்டுகள் பொழியப்பட்டன.

 

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%
 

அவ்வாறு 1937 ஏப்ரல் 26 இல், நாஜி விமானப் படை, குவர்னிக்கா நகர் மீது குண்டு வீசித் தாக்கியது. இதுவே உலக வரலாற்றிலேயே முதலாவது சர்வாதிகாரக் குண்டு வீச்சு என்பதை அடையாளப்படுத்தும் ஓவியர் பிக்காசோ வரைந்த குவார்னிக்கா ஓவியத்தில் போரின் கொடுமை சித்திரிக்கப்பட்டவாறு, உலகெங்கும் நிகழ்ந்திருக்கும்  நீடித்திருக்கும் போரின் கொடுமைகளை  மக்கள் சுமந்த வலிகளை போர்க்காலத்திலும் போர்கள் முடிவுற்ற பின்னரும் இலக்கியங்கள் வரைந்துள்ளன.

 

2003 ஆம் ஆண்டு, ஐக்கியநாடுகள் பாதுகாப்புச் சபையிலும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயக்கத்தின் வெளிப்பாட்டை  குறிப்பிட்ட குவார்னிக்கா ஓவியத்தையும் தற்காலிகமாக மறைக்க முயன்ற செய்தியையும் நாம் கடந்து வந்துள்ளோம்.

ஒரு ஓவியத்திற்கே இந்தக்கதி என்றால், இலக்கியத்திற்கும் அந்தத் துர்ப்பாக்கியம் நேராது என்பது என்ன நிச்சயம்..? அதனால் போர்க்கால இலக்கியம் பற்றி தொடர்ந்தும் பேசப்படுகிறது. 

 

போர்க்காலத்தை எமது கீழைத்தேய காவிய மரபிலிருந்தும் தமிழ் மரபிலிருந்தும், மேற்கத்தைய உலக வரலற்றிலிருந்தும் அவதானித்திருக்கின்றோம்.

மகாபாரதமும், இராமாயணமும் போரைச் சித்திரித்தவை. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாற்றிலும் போர்க்காலம் தவிர்க்கமுடியாதது. 

இலங்கையில் எள்ளாலன்  துட்டைகைமுனு தொடக்கம், போர்த்துக்கீசிய – ஒல்லாந்தர் – பிரிட்டிஷார் காலம் வரையில் நீடித்த போர்க்காலத்தை வரலாற்று ஏடுகள் மட்டுமல்ல, சிங்களத் திரைப்படங்களும் சித்திரித்துள்ளன.

 

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் சந்தேசிய – மற்றும் வீரபுரன் அப்பு முதலான திரைப்படங்கள் உதாரணம். 

அலெக்ஸாண்டர் – நெப்போலியன் காலமும் போர்க்காலம்தான். மனிதகுலம் தோன்றியது முதல் போரும் இணைந்திருக்கிறது.

கண்ணகி காவியத்திலும் மதுரை மீதான தீவைப்பும் ஒருவகை போர்க் குணம்தான்.

ஈழத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் போர்க்கால இலக்கியம் முக்கிய பேசுபொருளாகியது.

கதைக்குள் கதைசொல்தல் என்பார்களே – அவ்வாறு இக்கட்டுரைக்குள் ஒரு கதை சொல்கின்றேன். 

 

1971 – 1972 காலப்பகுதி இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒரு இளைஞர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அதேசமயம் மற்றும் ஒரு பாடசாலை ஆசிரியரும் அங்கே தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

மீசை அரும்பும் பருவத்திலிருந்த அந்தத் தமிழ்இளைஞன், அந்த ஆசிரியரைப் பார்த்து, “அய்யா… உங்களைப் பார்த்தால் அப்பாவியாக தோற்றமளிக்கிறீர்கள். எதற்காக உங்களை இங்கே தடுத்துவைத்து விசாரிக்கிறார்கள்…?” 

எனக்கேட்கிறான்.

அதற்கு அவர், “நான் புங்குடுதீவில் ஒரு பாடசாலையின் ஆசிரியர். அங்கிருக்கும் கண்ணகி அம்மன் கோயில் கிணற்றில் தாழ்த்தப்பட்ட அடிநிலை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மேல்சாதிக்காரர் மறுக்கிறார்கள். அதனைக் கண்டித்து, அந்தக் கோயில் முற்றத்தில் நான் உண்ணாவிரத அகிம்சைப்போராட்டம் நடத்தினேன்.

அந்தச் சாதிமான்கள் பொலிஸை ஏவிவிட்டு, என்னை அடித்து இழுத்துவந்து இங்கே விசாரிக்கிறார்கள்எனச்சொல்கிறார்.

உடனே அந்த இளைஞர், “சேர்… உங்களுக்கு என்ன விசரா… பைத்தியமா… உதுக்குப்போய் அகிம்சை  உணவு மறுப்பு சத்தியாக்கிரகம் என்று ஏதோவெல்லாம் செய்து உங்களை வருத்தி மினக்கெட்டுள்ளீர்கள். நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும் தெரியுமா….? அந்த மேல்சாதிக்காரன்களின் வீடுகளிலிருக்கும் கிணறுகளில் எல்லாம் கிருமிநாசினி, பொலிடோல் ஊற்றியிருக்கவேண்டும். அவ்வாறு அவர்களுக்கு எதிராக போராடாமல் செத்துப்போன காந்தீயத்தை உவங்களுக்கு போதிக்கப்போனீர்களா..?”   எனக்கேட்டான்.

உடனே அந்த ஆசிரியர், “தம்பி… நீர் யார்… உமது பெயர் என்ன.? எதற்காக உம்மை இங்கே தடுத்துவைத்துள்ளார்கள்..?“ எனக்கேட்கிறார். 

நான் யாழ்ப்பாணம் மேயர் அல்ஃபிரட் துரையப்பாவின் காருக்கு குண்டு பொறுத்தினேன். இன்ஸ்பெக்டர் சந்திரசேகராவின் பொலிஸ் வாகனத்திற்கு கைக்குண்டு எறிந்தேன் ..” என்று அந்த இளைஞர் சொன்னார்.

அந்த இளைஞரின் பெயர் உரும்பராய் சிவகுமாரன்.

அந்த ஆசிரியரின் பெயர் மு. தளையசிங்கம்.

பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் தளையசிங்கம் தனது தம்பி பொன்னம்பலத்திடம், “எதிர்கால இளைஞர்கள் இனிமேல் அகிம்சைப்பாதையை தெரிவு செய்யமாட்டார்கள். அவர்களுக்கு ஆயுதம்தான் போராயுதமாக இருக்கும்” எனச்சொல்கிறார். 

தளையசிங்கம் ஏற்கனவே பொலிஸ் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தமையால், உட்காயங்களின் பாதிப்பில் 1973 ஆம் ஆண்டு இறந்தார்.

உரும்பராய் சிவகுமாரன் அடுத்த 1974 ஆம் ஆண்டு சயனைற் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

ஆனால், மு.தளையசிங்கம் இந்தச்சம்பவங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு தனி வீடு இலங்கையில் 1958 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் பின்னணியை சித்திரிக்கும் நாவலாக அமைந்தது. அது நகரும் காலம்: 1950 – 1960.

அவரது முதல் நாவல், தனி வீடு 1962 இல் எழுதப்பட்டு 1984 இல் அவர் இறந்து 22 வருடங்களுக்குப் பிறகு தான் வெளிவந்தது.

ஈழத்தமிழருக்கு தனிநாடுதான் அர்த்தமுள்ள தீர்வாக அமையும் என்ற செய்தியைக் கூறும் படைப்பாகவும், இன ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு முதலான மார்க்ஸீய – கம்யூனிஸ சுலோகங்களை விமர்சிக்கும் நாவலாகவும் அமைந்தது.

ஈழத்தின் இடதுசாரி முற்போக்கு இலக்கிய விமர்சகர்கள் பலரின் எதிர்வினைகளுக்கு ஆளாகிய மு. தளையசிங்கம், பொலிஸ் நிலையத்தில் அடக்குமுறைக்கு ஆளாகியிருந்தபோது சந்தித்த முதல் ஈழ தற்கொலைப் போராளி பற்றியும் சொல்லிவிட்டுத்தான் மறைந்துள்ளார்.

அவர் இறப்பதற்கு முன்னர், இலங்கையில் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகும் அறிகுறியை, தான் சிவகுமாரன் என்ற இளைஞரிடம் கண்டுகொண்டதாக சொல்லியிருக்கிறார்.

இதேவேளை, இலங்கையின் வடபுலத்தில் அடிநிலை மக்களின் ஆலயப்பிரவேசப் போராட்டம், தேநீர்க்கடை பிரவேசப்போராட்டம் என்பன, ஈழத்தின் மூத்த எழுத்தாளர்கள் கே. டானியல், செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன், டொமினிக் ஜீவா, தெணியான் முதலானோரின் பாதிக்கப்பட்ட அடிநிலை மக்களின் போர்க்குணம் பற்றிய படைப்புகள் தமிழ் ஈழப்போருக்கு முன்னரே வெளியாகிவிட்டன.

டானியலின் பஞ்சமர், போராளிகள் காத்திருக்கின்றனர், அடிமைகள், செ. கணேசலிங்கனின் நீண்டபயணம், சடங்கு, மண்ணும் மக்களும், தெணியானின் குடிமைகள் முதலான நாவல்கள் முக்கியமானவை. 

காலங்கள் உருண்டோடின. அகிம்சையில் ஆரம்பித்த போராட்டம், ஆயுதப் போராட்டமாக பல்லாயிரம் மக்களை பலிகொடுத்துவிட்டு, தற்போது கடந்த இரண்டு வருடகாலமாக , போரின்போது சரணடைந்து காணாமல் போனவர்களை மீட்டுத்தாருங்கள் என்ற கோசத்துடன் தாய்மாரின் கவனஈர்ப்பு போராட்டமாக மாறி, மீண்டும் அகிம்சைப்போராட்டங்களின் பாதைக்கு திரும்பியிருக்கிறது.

இந்தப்பின்னணியில் போருக்கு முந்திய – பிந்திய போர்க்கால இலக்கியம் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம்.

எனது இந்த உரையில் நான் பிரதானமாக எடுத்துக்கொண்டது, ஈழத்தில் போருக்கு முந்திய போர்க்கால இலக்கியம் என்ற தலைப்புத்தான்.

ஈழத்தில் (இலங்கையின் மறுபெயர் ஈழம்) தமிழ் இளைஞர்கள் மாத்திரம் ஆயுதம் ஏந்திப்போராடவில்லை. அவர்களது விடுதலைப்போராட்ட வரலாறு இலக்கியமானது போன்று, தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி என்ற சிங்கள இளைஞர்களினால் தொடங்கப்பட்ட ஜே.வி.பி என்ற அமைப்பு 1971 ஆம் ஆண்டில் நடத்திய போராட்டம் குறித்தும் சிங்களத்தில் இலக்கியங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இவை பற்றிய பொதுவான புரிதல் தமிழர் தரப்பில் இன்னமும் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

கிருஷாந்தி குமாரசுவாமி  என்ற 19 வயதுள்ள யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி கைதடி இராணுவ காவலரணில் தடுக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டது போன்று 1971 ஆம் ஆண்டில் தென்னிலங்கையில் புனிதத்தலம் எனக்கருதப்படும் கதிர்காமத்தில் பிரேமாவதி மனம்பேரி என்ற இளம் யுவதியும் இராணுவத்தினரால் மானபங்கப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்.

செல்வி கிருஷாந்தி பற்றிய உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம் என்ற சிறுகதையை நாம் இந்த 2020 ஆம் ஆண்டில் வாசிக்கின்றோம்.

இச்சிறுகதையை எழுதியிருப்பவர்: இன்றைய அரங்கில் பங்கேற்றிருக்கும் எழுத்தாளர் ஜே.கே. ஜெயக்குமாரன்.

இதுவும் ஈழத்திற்கான இறுதிப்போருக்கு முந்திய கதைதான். எழுதப்பட்டது பிற்காலத்தில். 

ஈழத்தவரின் ஈழப் போராட்ட வரலாற்றுடன் தொடர்புபட்ட முக்கியமானதொரு நாவல்  லங்காராணி.  கடந்த ஆண்டு இலங்கையில் மறைந்துவிட்ட அருளர் 1978 இல் எழுதி சென்னையில் வெளியிடப்பட்ட நாவல். இதன் இரண்டாவது பதிப்பு பத்து ஆண்டுகளின் பின்னர் 1988 இல் அவர் சார்ந்திருந்த ஈரோஸ் இயக்கத்தினால் வெளியிடப்பட்டது. 

இலங்கையில் 1977 ஓகஸ்டில் நடந்த இனக்கலவரத்தின் போது கொழும்பிலிருந்த தமிழர்களை அகதிகளாக ஏற்றி, வடபுலத்திற்குக் கொண்டு வந்த கப்பலின் பெயர்தான்  லங்காராணி. அந்த கடற்பயணத்தின் பின்னணியில் தென்னிலங்கையிலிருந்து புறபபட்ட தமிழ் அகதிகளின் உணர்வலைளை வெளிப்படுத்தி, எரியத்தொடங்கிய ஈழத்தவரின் உயிர்பாதுகாப்பிற்கான பிரச்சினையின் முகங்களையும் விடுதலைப் போராட்டத்தின் தேவையையும் இந்த நாவல் சித்திரித்தது. 

1981 இலும் ஒரு கலவரம் வெடித்தது. இதில் தென்னிலங்கையிலும் மலையகத்திலும் பலர் கொல்லப்பட்டதுடன், தமிழர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டன.

மலையத்திலிருந்து அகதிகளாக வெளியேறிய இந்திய வம்சாவளி மக்கள், வவுனியா – முல்லைத்தீவு உட்பட்ட வன்னிப் பிரதேசங்களில் தஞ்சமடைந்தனர். அந்த வன்னி பெருநிலப்பரப்பில் முள்ளிவாய்க்காலில்தான் இறுதிக்கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது. 

1983 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் மற்றும் ஒரு இனக்கலவரம் கொழும்பில் ஆரம்பித்தது. அந்தக் கலவரம் வெலிக்கடை சிறை படுகொலையிலும் இரண்டறக்கலந்திருந்தது. அந்தச்சிறையிலிருந்து உயிர்தப்பிய போராளிகள் மீண்டும் அரசியல் பிரவேசம் செய்து ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து, வடக்கு – கிழக்கு முதலமைச்சரானது முதல் இன்றைய அரசின் அமைச்சராகியிருக்கும் செய்திகளையும் நாம் கடக்கின்றோம். 

போர்க்கால இலக்கியத்தில் இச்செய்திகளும் பேசுபொருளாகும் ! 

1983 இற்குப்பின்னர், ஈழவிடுதலைப் போராட்டம் பல்வேறு இயக்கங்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டதன் பின்னணியில் புதியதோர் உலகம் என்ற நாவல் கோவிந்தன்என்ற போராளியால் எழுதப்பட்டு சென்னையில் வெளியானது. 

1977 – 1981 காலப்பகுதியில் தென்னிலங்கை மற்றும் மலையகத்திலிருந்து மன்னார் – வன்னிப்பகுதிக்கு அகதிகளாகச்சென்று குடியேறிய மக்களின் தேவைகளை கவனித்த உமாமகேஸ்வரனின் புளட் என்ற இயக்கத்திலிருந்து வெளியேறிய கோவிந்தன், அவ்வியக்கத்தின் உள்முரண்பாடுகளை அதில் சித்திரித்திருந்தார். சகோதரப் படுகொலைகளின் தொடக்கப்புள்ளியை இந்த நாவல் காண்பித்தது. 

அந்த கோவிந்தனும் பின்னர் கொல்லப்பட்டார். 

முறிந்த பனை என்ற மற்றொரு நூலும் ஈழப்போராட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டது. அது நாவல் அல்ல. எனினும் அதனை எழுதியவர்களில் ஒருவரான மருத்துவ விரிவுரையாளர் ராஜினி திரணகம அவர்கள் யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இலங்கையின் போர்க்காலத்தில் இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரான பொலிஸ், கடற்படை, விமானப்படை, அதிரடிக் கொமான்டோ படையினரால் கொல்லப்பட்டவர்கள் பற்றியும், அதே சமயம் இனந்தெரியாதவர்கள் என்ற நாமத்திற்குரியவர்களினாலும் கொல்லப்பட்டவர்கள் பற்றியும் படைப்பு இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. இந்த இனந்தெரியாதவர்கள் யார் என்பதை என்போன்ற போர்க்காலச்செய்திகளை எழுதியவர்கள் கூர்ந்து அவதானித்தால் யார் அவர்கள்…? என்பதை துல்லியமாக அடையாளம் கண்டுவிடுவார்கள்.

எனினும் அவர்கள் தங்கள் தற்காப்பிற்காக பாவிக்கும் புனிதமான சொல்தான் இனந்தெரியாதவர்கள்..! 

சோசலிசத் தமிழீழத்தை நோக்கி 

அரசியலும் இராணுவமும்    ஒன்றிணைந்து போராடுவோம்  சோசலிசத் தத்துவமும் கெரில்லா யுத்தமும்  தமிழ்த் தேசியமும் சமுதாயக் கொந்தளிப்பும் 

முதலான பல வரலாற்று நூல்களும்

மரணத்துள் வாழ்வோம்  மரணம்   

ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை  

இரண்டாவது சூரிய உதயம் –  யமன்  கானல் வரி  எலும்புக்கூடுகளின் ஊர்வலம்  நீ இப்பொழுது இறங்கும் ஆறு   மீண்டும் கடலுக்கு    ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்  சூரியனோடு பேசுதல்  

நமக்கென்றொரு புல்வெளி   ஒரு அகதியின் பாடல்   இரத்த புஷ்பங்கள்   பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்   வியாசனின் உலைக்களம்  இனி ஒரு வைகறை  இந்த மண்ணும் எங்கள் நாட்களும் 

உட்பட ஏராளமான கவிதைத் தொகுப்புகளும் இறுதி ஈழப்போருக்கு முன்னரே வெளியாகிவிட்டன.

கவிஞர்கள் சேரன், செழியன், ... ஜெயபாலன் , காசி ஆனந்தன் , புதுவை இரத்தினதுரை , கி.பி. அரவிந்தன் , மு.புஷ்பராஜன், , .ஆதவன், எம்..நுஃமான், ஹம்சத்வனி, கவியரசன், சு.வில்வரத்தினம், .யேசுராசா, சிவரமணி, செல்வி உட்பட பலர் ஈழப்போரியல் வரலாற்றை கவிதைகளாக வடித்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். 

கவிஞர் செல்வியும் காணாமல்போனார். கவிஞர் சிவரமணி தற்கொலை செய்துகொண்டார். !

வலிசுமந்தவர்கள், பரதேசிகளாய் உலகெங்கும் அலைந்துழல்பவர்கள் படைப்புகளில் ஈழக்கனவு முன்பும் இருந்தது. தற்பொழுதும் இருக்கிறது.

புனைவு இலக்கியமான சிறுகதைகள் – நாவல்களிலும் எதிரொலித்தது. 

வாசல் ஒவ்வொன்றும் என்ற பெயரில் புதுவை இரத்தினதுரை  கருணாகரன் இணைந்து வெளியிட்ட சிறுகதைத் தொகுதி  போர்க்காலத்தில் வெளிச்சம் இதழின் ஆசிரியர் கருணாகரன் தொகுத்து வெளியிட்ட வெளிச்சம் சிறுகதைகள்  சிறுகதைகள் கொண்ட தொகுதி மற்றும் அம்மாளைக் கும்பிடுறானுகள் என்ற   உண்மைக் கதைகள் சிலவற்றைக் கொண்ட தொகுதி, தாமரைச் செல்வியின் அழுவதற்கு நேரமில்லை   பச்சை வயல் கனவு   வீதியெல்லாம் தோரணங்கள்  ஷோபாசக்தியின் தேசத் துரோகி, கொரில்லா, மலைமகள் எழுதிய புதிய கதைகள் என்ற தொகுதி, செங்கைஆழியானின் யாழ்ப்பாணத்து இராத்திரிகள்,  அக்கினிக் குஞ்சு ( குறுநாவல் ) இரவு நேரப் பயணிகள், ( ராத்திரிய நொனசாய் என்ற தலைப்பில் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது ) கொழும்பு லொட்ஜ், தீம்தரிகிட தித்தோம், மரணங்கள் மலிந்த பூமி, வானும் கனல் சொரியும் என்பன குறிப்பிடத்தகுந்தன.

பிரான்ஸில் வதியும் ஷோபாசக்தி எழுதி 2004 ஆம் ஆண்டு வெளியான ம் என்ற நாவலும் யாழ்ப்பாணம் கந்தன் கருணை இல்லத்தில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள் பற்றி சித்திரித்த படைப்புத்தான். 

முப்பது வருடங்களாகக் கொடிய யுத்தம். ஒரு இலட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள். அய்ம்பதினாயிரம் அங்கவீனர்கள். இருபதினாயிரம் விதவைகள். பத்தாயிரம்பேருக்கு பயித்தியம். பூசா, மகசீன், களுத்துறை, பாரிய இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள், இயக்கங்கள், மாவீரர்கள், தமிழீழ ஒறுப்புச்சட்டம், தமிழீழச்சிறை, துரோகிகள், பேச்சுவார்த்தைகள், மனுட ஒன்றுகூடல்கள், பொங்கு தமிழ், தமிழ்க்கதைகளும் பெருங்கதைகளும் சொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. எல்லாக்கதைகளையும் கேட்டுக்கேட்டு, ‘ ம் ‘ சொல்லிக்கொண்டேயிருக்கும் எம் சனங்களுக்கு…. “ என்று ஷோபாசக்தி தனது ‘ ம் ‘ நாவலை மக்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.

ஈழப்போர்க்காலக் கதைகளின் குறியீடாக இந்த சமர்ப்பணம் அமைந்துள்ளது. 

கனடாவில் வதியும் தேவகாந்தன், ஈழப்போராட்ட வரலாற்றை முழுமையாக படைக்க முயன்றவர். அவர் எழுதிய பெரிய நாவல் கனவுச்சிறை . 

இனி வானம் வெளிச்சிடும், ஊழிக்காலம்  முதலான படைப்புகளை எழுதிய தமயந்தி என்ற இயற்பெயர்கொண்ட தமிழ்க்கவி , சந்திரகலா என்ற இயற்பெயர்கொண்ட வெற்றிச்செல்வி எழுதிய போராளியின் காதலி, வெண்ணிலா, தமிழ்நதியின்பார்த்தீனியம் என்று பல நாவல்களை சொல்லிக்கொண்டே போகலாம். 

போராளிகள்  இனத்தை, மக்களை,  மொழியை,  போர்க்களத்தில் ஏந்திய ஆயுதங்களை எவ்வாறு நேசித்தார்களோ அதேயளவு நேசிப்பு காதலிலும் அவர்களுக்கு  இருந்திருக்கிறது என்பதையும் இந்த புனைவுகள் சித்திரித்துள்ளன. 

தமிழ்நதியின் பார்த்தீனியம் 1987 இல் கொழும்பில் கைச்சாத்தான இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் இந்திய அமைதிப்படையின் பிரவேசம் முதல் அது வெளியேறிய காலப்பகுதிவரையில் சித்திரித்த நாவல். 

அமைதிப்படை என்ற பெயரில் வந்தவர்கள் விடுதலைப்புலிகளை தேடி அழிக்கும் வேட்டையில் ஈடுபட்டபோது, ஒரு வீட்டின் சுவரில் தொங்கிய மகாத்மா காந்தியின் படமும் சுடுபட்டு சிதறி விடுகிறது.

தமிழக எழுத்தாளர் வாசந்தியும் நிற்க நிழல்வேண்டும் என்ற பெயரில் ஒரு புதினம் ஈழப்போராட்டம் குறித்து எழுதியிருக்கிறார். அத்துடன் ராஜம் கிருஷ்ணனும் நீடித்த ஈழப்போரினால் அகதிகளாகி இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தஞ்சமடைந்த ஈழ அகதிகள் பற்றி மாணிக்க கங்கை என்ற நாவலை எழுதியுள்ளார்.

செங்கை  ஆழியானின் கதைகள்  ஜனரஞ்சகமாக அமைந்திருந்தமையினால் அதில் இசங்கள் தேடுவோரும் நவீனத்துவத்திற்கு பல பெயர்களை   சூட்டியிருப்போரும், இவரை அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அவர் தனக்கென பெரிய வாசகர் கூட்டத்தை   வைத்திருந்தார். அவருடைய கையெழுத்தும் அழகானது. விரைந்து  எழுதும்  ஆற்றல் அவருக்கு கைவந்த  கலை.   யாழ். நூலகம்  எரிக்கப்பட்ட வேளையிலும் அதன்  பின்னர்  அங்கு  நடந்த  அநியாயங்களையும் ஒரே இரவில் கண்விழித்து இவர்  புனைபெயரில்  நூல்கள் எழுதியிருக்கிறார்மூத்த இலக்கியவாதி  வரதரின் வேண்டுகோளை ஏற்று அவர் அந்தப்பணியை செய்தார். இவருடைய  அண்ணன்  புதுமைலோலன் என்ற    எழுத்தாளர்  தமிழரசுக்கட்சி கொழும்பு  காலிமுகத்திடலில் 1961 இல் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது  பொலிசாரின் குண்டாந்தடி   பிரயோகத்திற்கு  இலக்காகி கைமுறிந்து  சிகிச்சை பெற்றவர். பின்னாளில்  அவருடைய  ஒரு  மகன் இயக்கப் போராளியாக களத்தில் மரணமுற்றார். சாத்வீகத்தையும்  ஆயுதப் போராட்டத்தையும்  இணைத்து    தீம்  தரி கிட  தித்தோம்   என்ற  நாவலையும் செங்கை ஆழியான்  எழுதியுள்ளார்.

ஈழப்போராட்டத்தில்    புலிகள்,   பிரபாகரன்  தலைமையில் நடத்திய ஒரு   முக்கியமான  கெரில்லாத்தாக்குதல் கொக்குவில்  பிரம்படி  என்ற  இடத்தில் நடந்தது. 

அதில்  பல  இந்தியப்படையினர்  கொல்லப்பட்டனர்.   இந்தத்  தாக்குதல்    பற்றி  புலிகளிடம்  மாற்றுக்கருத்துக்கொண்டிருந்த புஷ்பராசாவும்  ஈழப்போராட்டத்தில்   எனது    சாட்சியம்   என்ற   தமது    நூலில்  குறிப்பிட்டுள்ளார்.   இச்சம்பவத்தின்   பின்னணியில்  செங்கை   ஆழியான்  ஒரு வித்தியாசமான    சிறுகதை  எழுதியிருந்தார்.   அச்சம்பவத்தில்  கொல்லப்பட்ட  இந்தியத்தளபதியின்  மகள்  ஒருத்தி  தனது  தந்தை   கொல்லப்பட்ட  இடத்தை   தேடிவந்து  பார்ப்பது  பற்றிய  சிறுகதை.

அத்துடன்  இரவுப்பயணிகள்  என்ற   தலைப்பில்  மல்லிகையில்  சில போர்க்காலச் சிறுகதைகளையும்  கிளாலிப்பாதை  ஊடாக  மக்கள் அனுபவித்த   சொல்லொனா   துயர்  பற்றிய  கதைகளும்  எழுதியவர் செங்கை ஆழியான்.

விடியலைத் தேடி என்ற அவருடைய மற்றும் ஒரு நாவல், நம்பி நம்பி ஏமாற்றமடைந்த தமிழ்மக்களின் ஏக்கப்பெருமூச்சுகளை சித்திரித்தது.

தமிழ் ஈழத்திற்காக ஆயுதம் ஏந்திய போராளிகளினாலும் அவர்களை முறியடிக்க இலங்கை பேரினவாத அரசுகளும் இந்திய அரசும் தொடர்ச்சியாக மேற்கொண்ட பாரிய நடவடிக்கைகளினால் தோன்றிய போர்க்கால இலக்கியம் பற்றி பேசும்போது, ஆயுதம் ஏந்தாத தமிழ்த் தலைவர்கள் சிலர் இன்று திருவாய் மலர்ந்தருளி சொல்லும் வார்த்தைகளையும் கவனத்தில் கொள்வோமாக…

அவர்கள் சொல்கிறார்கள்: “முன்னர் மூத்த தலைமுறையினரின் அகிம்சைப்போர் நடந்தது. பின்னர் இளம் தலைமுறையினரின் ஆயுதப்போர் நடந்தது. இரண்டும் தோல்வியில் முடிந்தது. அதனால், நாம் இப்போது இராஜதந்திரப்போரில் இறங்கியிருக்கின்றோம்.”

இந்த இராஜதந்திரப்போர் குறித்து இன்று பேசுவோர், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் “ஐ.நா. சபையின் அனுசரணையுடன் போர்க் குற்றவாளிகளை மின்சாரக்கதிரைகளில் அமரவைப்போம்” என்று சூளுரைத்தார்கள்.

ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் யாரைப்போர்க்குற்றவாளிகள் எனச்சொன்னார்களோ, அவர்களை காலம் இன்று அரசியல் அரியாசனத்தில் ஏற்றிவைத்துள்ளது. 

இந்தக் காணோளி அரங்கு நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையிலும் யாழ்ப்பாணம் புதைகுழிகளிலிருந்து மனித எச்சங்கள் வெளிக்கிளம்பிக்கொண்டிருக்கின்றன..! 

இந்தக்காலம் குறித்தும் பிந்திய போர்க்கால இலக்கியம் பேசும் என நம்புவோமாக. 

இங்கு எனது உரையின் முடிவற்ற முடிவிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை பற்றி மீண்டும் ஏன் சொல்கின்றேன் என்றால்  இந்த உரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட, 

 2003 ஆம் ஆண்டு, ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையிலும்கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயக்கத்தின் வெளிப்பாட்டை  குறிப்பிட்ட குவார்னிக்கா ஓவியத்தையும் தற்காலிகமாக மறைக்க முயன்ற செய்தியையும் நாம் கடந்துவந்துள்ளோம்.” என்ற வரிகளை நினைவுபடுத்துவதற்காகத்தான் ! 

இறுதியாக அடல்ஃப் ஹிட்லர் சொன்ன வாசகத்துடன் எனது உரையை நிறைவுசெய்கின்றேன்:

அவர் அந்த இரண்டாம் உலகப்போர் முற்றுப்பெறுவதற்கு முன்னர், 

போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை. தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது“ எனச்சொல்லியிருந்தார்.

எமது படைப்பாளிகள் போருக்கு முந்திய காலத்தையும் பிந்திய காலத்தையும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் அவைபற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.! 

—-0—

 

http://thinakkural.lk/article/62726

Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இருபதாம் திருத்தச் சட்டமும் இருள் சூழ்ந்த அரசியல் யதார்த்தமும் -பி.மாணிக்கவாசகம்    22 Views ஜனாதிபதி கோத்தாபாயவின் திட்டப்படி இருபதாவது திருத்தச் சட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. ராஜபக்ஷக்களைப் பொறுத்தமட்டில் இது அவர்களுடைய மூன்றாவது அரசியல் சாதனை என்றே கூற வேண்டும். ராஜபக்ஷக்களுக்கு இது சாதனையாக இருந்த போதிலும், இலங்கை என்ற ஜனநாயக நாட்டிற்கு இந்த வரலாற்றுத் தினமானது ஒரு கரி நாளாகவே அமைந்துள்ளது. அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயா ராஜபக்ஷ வெற்றிபெற்று பதவியேற்ற தினமும், பொதுத் தேர்தலில் ராஜபக்ஷக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று நாடாளுமன்றம் பதவியேற்ற தினமும்கூட வரலாற்று கரிநாட்களாகவே கருதப்பட வேண்டியவை. ஏனெனில், பல்லின மற்றும் பல்சமயம் சார்ந்த மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், பல்லின பல்சமயத் தன்மை பேணப்பட வேண்டியது அவசியம். இந்தப் பல்லினத்தன்மை தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இதன் மோசமான அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளில் இருந்து விடுபட முடியாமல் நாடு திணறிக் கொண்டிருக்கின்றது. இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு பல்லினத் தன்மையும் பல்சமய நிலைமையும் பேணப்படுவதற்குப் பதிலாக தனிச்சிங்கள, தனிபௌத்த அரசியல் கடும் போக்கைக் கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு பெற்றிருக்கின்றார்கள். செல்வாக்கு பெற்றிருப்பது மட்டுமல்லாமல், கட்டுக்கடங்காத வகையில் அவர்கள் தமது அதிகாரங்களைச் சட்ட ரீதியாக வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கும் சர்வாதிகாரம் மேலோங்குவதற்குமே வழி வகுத்துள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோத்தாபாய ராஜபக்ஷ தனது இராணுவ போக்கிலான ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளுக்கு அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் தடையாக அமைந்திருந்தது. அந்தச் சட்டம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கைகளைக் கட்டிப்போட்டிருந்தது. நிறைவேற்றதிகாரம் என்ற நிர்வாக வலுவைப் பயன்படுத்தித்தான் விரும்பியவாறு ஜனாதிபதி செயற்படுவதற்கு அது தடை போட்டிருந்தது. இந்தத் தடையை அடித்து நொறுக்கி, தான் விரும்பியவாறு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயற்படவும், ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சியை மன்னாராட்சிக்கு நிகராகக் கொண்டு நடத்தவும் பத்தொன்பதாவது திருத்தச்சட்டத்தை இல்லாமற் செய்ய வேண்டிய தேவை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்தத் தேவையை அவர் இருபதாவது திருத்தச் சட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். இருபதாவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வருவதற்கான அரசியல் தேவை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கேள்வி எழுப்பி இருந்தார். நிறைவேற்றதிகாரத்தை வலுப்படுத்தவதிலும் பார்க்க கொரோனா வைரஸை செயல் வல்லமையுடன் கட்டுப்படுத்தவதற்கு உரிய சட்ட ஏற்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்? என்ற தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். அரசாங்கத்தின் முன்னால் அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றைப் புறமொதுக்கிவிட்டு ஜனாதிபதியின் கைகளில் அதிகாரங்களைக் கொண்டு குவிப்பதற்கான திருத்தச் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி அவர் கண்டனம் வெளியிட்டிருந்தார். அதேபோன்று சிறுபான்மை இன அரசியல் தலைவர்களும் பெரும்பான்மை இன தலைவர்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டிருந்த பொதுஅமைப்புக்களைச் சேர்நதவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பௌத்த பீடங்கள் மற்றும் சில பௌத்த குருமார்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் இந்த எதிர்ப்புக்கள் எதனையும் ராஜபக்ஷக்கள் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள் தமது போக்கில் இருபதாவது திருத்தச் சட்டத்தை வெற்றிரகமாக நிறைவேற்றி உள்ளார்கள். இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பௌத்த பிக்குகளும், அரச தரப்பின் தீவிர அரசியல் போக்குடையவர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்களும் இறுதித் தருணத்தில் தங்களுடைய எதிர்ப்பைக் கைவிட்டு அரச தரப்பிற்குத் தாளம் போட்டு அந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகக் கை உயர்த்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது. அதேபோன்று ராஜபக்ஷக்களின் இனவாத அரசியல் கொள்கைகளினாலும், ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் கட்சித்தாவி, இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த கேவலமான அரசியல் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகிய இருவரும் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஆனால் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் அரசுக்கு ஆதரவளித்திருந்தனர். இதில் நான்கு பேர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். இருவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாவர். இது தவிர ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த டயானா கமகே மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினராகிய அரவிந்தகுமார் ஆகியோரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பில் கலந்து கொண்டனர். சிறுபான்மை இன மக்களின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ராஜபக்ஷக்கள் இருபதாவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக அந்த சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையே பகடைக்காய்களாகப் பயன்படுத்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது. இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால், இருபதாவது திருத்தச் சட்டமானது, பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களர்களினால் மட்டும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய நாட்டின் மூவின மக்களுடைய பிரதிநிதிகளினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியாகப் பதவியேற்றால் தனது செயற்பாடுகளுக்கு அரசியலமைப்பு எந்தவிதத்திலும் தடையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பு என்பது ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்று கோத்தாபாய ராஜபக்ஷ தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருந்த போது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை எவரும் கட்டுப்படுத்தக் கூடாது. எந்தச் சட்டமும் நிறைவேற்றதிகாரத்துக்குத் தடைவிதிக்கக் கூடாது. நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியானவர் தான் விரும்பியவாறு செயற்படுவராக இருக்க வேண்டும் என்ற தனது அரசியல் அபிலாஷையை கோத்தாபாய ராஜபக்ஷ இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொண்டுவிட்டார். சிங்கள பௌத்த தேசியக் கொள்கையையும் குடும்ப அரசியல் நலன்களை முதன்மைப்படுத்திய போக்கையும் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ இனிமேல் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படுவதற்குரிய சட்ட ரீதியான அரசியல் சூழல் உருவாக்கப்பட்டு விட்டது. ஜனநாயக வழிமுறையிலான சர்வாதிகார ஆட்சிக்கே இது வழிவகுத்திருக்கின்றது. இது நாட்டின் இயல்பு நிலைமைக்கும், பல்லின மக்களின் அமைதியான எதிர்கால வாழ்க்கைக்கும் சுபிட்சத்திற்கும் பாதகமாகவே அமையும். அதேவேளை இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது. சிங்கள பௌத்த மதத்திற்கு மாத்திரமே இங்கு இடமுண்டு என்ற பேரினவாத ஆட்சி முறைமை இனிமேல் தங்குதடையின்றி கொண்டு செலுத்தப்படும் என்பதிலும் சந்தேகமில்லை. இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுமானால், நாட்டில் சர்வாதிகார ஆட்சியே நிலைபெறும். சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வுக்கு வழி இல்லாமற் போகும் என்பது தமிழ்த்தேசிய பற்றுடையவர்களின்  கவலை. இந்த அரசியல் ரீதியான கவலையே இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான இருள் சூழ்ந்த யதார்த்த அரசியல் நிலைமையாகும். https://www.ilakku.org/இருபதாம்-திருத்தச்-சட்டம/
  • அதுதான் சொன்னேன்.... இலங்கையை இப்ப யாரு வைச்சிருக்கிறது எண்டு, டெல்லி வாலாக்கள்  மண்டையைதட்டிக் கொள்வர். 🤔 🤦‍♂️
  • மேலதிக தரவு வீட்டு விலங்கு  / கீரைவகை நடு நீக்கின் குடும்ப உறவு முதல் நீக்கின் நாடு  
  • குதிரைகளின் குறும்புகள் குசும்புகள் குழப்படிகள் ......!   🐴
  • India's first 'saviour sibling' cures brother of fatal illness 11 hours ago   Sahdev Solanki  Kavya Solanki is India's first "saviour sibling" The story of India's first "saviour sibling" has made national headlines. It has also raised questions about the ethics of using technology to create a child only to save or cure a sibling in a country with poor regulatory systems. The BBC's Geeta Pandey in Delhi reports. Kavya Solanki was born in October 2018 and in March, when she was 18 months old, her bone marrow was extracted and transplanted into Abhijit, her seven-year-old brother. Abhijit suffered from thalassaemia major, a disorder where his haemoglobin count was dangerously low and he required frequent blood transfusions.  "Every 20-22 days, he needed 350ml to 400ml blood. By the age of six, he'd had 80 transfusions," his father Sahdevsinh Solanki told me on the phone from their home in Ahmedabad, the largest city in the western state of Gujarat.  "Abhijit was born after my first daughter. We were a happy family. He was 10 months old when we learnt that he was thalassaemic. We were devastated. He was weak, his immune system was compromised and he often became ill. "And when I found out that there was no cure for his illness, my grief doubled," Mr Solanki said.  To understand better what ailed his son, he began reading all the literature he could find on the disease, researching possible cures and sought advice from medical experts. When he heard about bone marrow transplant as being a permanent cure, he began exploring it. But the family's bone marrow, including Abhijit's older sister's, wasn't a match. In 2017, he came across an article on "saviour siblings" - a baby created for the purpose of donating organs, cells or bone marrow to an older sibling. Sahdevsinh Solanki Abhijit suffered from thalassaemia major His curiosity aroused, he approached Dr Manish Banker, one of India's best-known fertility specialists, and persuaded him to prepare a thalassaemia-free foetus for Abhijit's treatment. Mr Solanki says they opted for a saviour sibling because they ran out of choice. One hospital told him that they had found a bone marrow tissue match in the US. But the cost was prohibitive - between 5m rupees ($68,000; £52,000) and 10m rupees - and since it was an unrelated donor, he was told the success rate would be 20-30%. The technology used for Kavya's birth is called pre-implantation genetic diagnosis - it allows a disease-causing gene to be eliminated from the embryo and has been used in India for a few years now, but it's the first time it's been used to create a saviour sibling. Dr Banker says it took him more than six months to create the embryo, screen it and match it with Abhijit's. Once they had the perfect match, the foetus was planted in the mother's womb. "After Kavya's birth, we had to wait another 16 to 18 months so that her weight could increase to 10-12kg. The bone marrow transplant was done in March. Then we waited for a few months to see whether the recipient had accepted the transplant before announcing it," he told me. "It's been seven months since the transplant and Abhijit has not needed another transfusion," Mr Solanki told me. "We had his blood sample tested recently, his haemoglobin count is over 11 now. The doctors say he's cured." Dr Deepa Trivedi, who carried out the transplant, told BBC Gujarati's Arjun Parmar that after the procedure, Kavya's haemoglobin levels had dipped and there was localised pain for a few days from where the bone marrow was taken, but she's now fully healed.  "Both Kavya and Abhijit are now completely healthy," she said. Mr Solanki says Kavya's arrival has transformed their life. "We love her even more than our other children. She's not just our child, she's also our family's saviour. We'll be grateful to her forever." Sahdev Solanki  Mr Solanki says he loves Kavya "even more than his other two children" Adam Nash - born in the US 20 years ago to be a donor for his six-year-old sister who suffered from Fanconi anaemia, a rare and fatal genetic disease - is considered the world's first saviour sibling. At the time, many questioned whether the baby boy was really wanted or merely "created as a medical commodity" to save his sister? Many also wondered if it would lead to eugenics or "designer babies"?The debate was renewed in 2010 when Britain reported its first saviour sibling.  Kavya's birth has raised similar questions in India about babies becoming "commodities" and whether it's ethical to "purchase a perfect offspring". "There's the long-standing ethical issue, as [German philosopher Immanuel] Kant said, that you should not use another person exclusively for your own benefit," says Prof John Evans, who teaches sociology at University of California and is an expert on the ethics of human gene editing. Having a saviour sibling raises several questions, he says, and "the devil is in the detail". "We have to look at the parents' motivation. Did you have this child only for this reason to create a perfect genetic match for your [sick] child? If you did, then you're putting at risk a child without their consent." Then, he says, there's the issue of what the saviour sibling is going to be used for? "One end of the spectrum is using cells taken from the umbilical cord of a baby, the other end is to take an organ. Taking bone marrow falls somewhere in the middle - it's not zero risk but it's not as damaging as removing an organ which would cause permanent damage to the donor," Prof Evans told me. But the most important ethical question, he says, is where does it stop? "It's a very slippery slope and it's very hard to put barriers on it. It's one thing to create a saviour sibling for bone marrow, but how do you stop there? How do you not go on to modifying genes in existing humans?" Britain, he points out, has a rigorous regulatory system that is used to grant permission for genetic biotechnology "that stops them from leaping too far forward down the slope". "But Indian regulatory systems are not that strong and this is like opening the Pandora's box," says journalist and writer Namita Bhandare. Getty Images India has more than 40 million people living with thalassaemia "I don't want to judge the Solanki family," she says. "In a similar situation, as a parent I may have done the same.  "But what we need is a regulatory framework. At the very least, there's the need for a public debate, and not just with medical professionals but also child rights activists. This child has been conceived without any debate. How can something so important fly under the radar?" Ms Bhandare asks. Mr Solanki, a Gujarat government officer, says it's "not proper" for outsiders to judge his family.  "We are the ones living this reality. You have to look at people's intentions behind an act. Put yourself in my situation before you judge me," he tells me. "All parents want healthy children and there's nothing unethical about it to want to improve the health of your child. People have children for all sorts of reasons - to take on the family business or to continue the family name or even to provide company to an only child. Why scrutinise my motives?" Dr Banker says if we are able to create babies who are disease free by using technology, why shouldn't we? "The fundamental questions we need to look at in India are regulation and registries. But we can't deny use of technology because potentially someone would misuse it." Screening has been used since the 1970s to identify babies at risk of Down's Syndrome and Dr Banker says gene-elimination is very similar to that - the "next step" - and the idea is to eliminate these disorders in the next generation. He says what they have done for the Solankis involved "a one-time procedure with minimum risks" and the result, he says, justifies the means. "Before this treatment, Abhijit's life expectancy was 25-30 years, now he's completely cured so he will have the normal life expectancy."   https://www.bbc.com/news/world-asia-india-54658007
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.