Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5890 பேருக்கு கொரோனா தொற்று!


Recommended Posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5890 பேருக்கு கொரோனா தொற்று!

 

Coronavirus-Pandemic-Tamilnadu.jpg

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 120 பேர் உயிரிழந்தனர்.

இதில் தமிழகத்தில் மட்டும் 5,870 பேருக்கும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்தம் எண்ணிக்கை 3 இலட்சத்து 43 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த வாரங்களில் ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு பதிவான நிலையில் இன்று ஆயிரத்து 185 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர்களில் 120 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த இறப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளை இன்று மட்டும் 5,667 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் இதுவரை மொத்தம் 2 இலட்சத்து 83 ஆயிரத்து 937 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது.

  by : Jeyachandran Vithushan

https://athavannews.com/தமிழகத்தில்-இன்று-ஒரே-நா-4/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • காந்தி தாத்தாவுக்கு சிலை கட்டினது. நேரு மாமாவின்ரை வாழ்கை வரலாறு புத்தகம் படிக்க தந்தது. 😎
  • 2 ம் லெப்டினன் ஜீவன் (குதிரை வீரன்) 35ம் ஆண்டு வீரவணக்கம். 25/10/1985 இல் நெடுமாறன் ஐயாவை தாயகத்தில் இருந்து தமிழ்நாடு செல்வதற்காக அனுப்பிவிட்டு வன்னிக்கு திரும்புகையில் இராணுவத்தினரின் வழிமறித்து தாக்குதல் சம்பவத்தில் சபா, லோரன்ஸ் ஆகியோரும் வீர சாவடைந்தனர்.   தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  • பெருந்தோட்டப் பெண்களின் மாதவிடாய் கால சுகாதாரப் பிரச்சினைகள் Daya Dharshini    இலங்கையில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள் கிறார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்கள் இருக்கின் றார்கள். பெண்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சமூக, பொருளா தாரம், அரசியல், கலாசாரம் மற்றும் சுகாதாரம் தொடர் பாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகளோ ஏராளம். காலையில் எழுந்து தமது குடும்பத் தேவைகளை செய்து முடித்து தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் முடித்து விட்டு தேயிலை மலைக்கு வேலைக்கு சென்று மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து அன்றாட வருமானத் துக் காக தனது உடல் வலிகளையும் பொருட்படுத்தாது அனைத்து சவால்களையும் வெற்றிக்கொள்வது என்பது ஒரு சாதனையே. இந்நிலையில், தமது உடல் நிலை தொடர்பாகவும் தமது மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளையும் சமாளிப் பது என்பது மிகவும் கஷ்டமான நிலைமை. மலையகப் பெண்கள் மாதாந்தம் அவர்கள் எதிர்நோக்கும் மாதவிடாய் பிரச்சினைகள் தொடர்பாக யாரும் பேசு வதும் இல்லை. கண்டுகொள்வதும் இல்லை. இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று எண்ணத் தோன்றும். இதனால் அவர்கள் சொல்லமுடியாத அளவுக்கு துன்பங்களை எதிர்நோக்குகின்றனர் என்பது சாதாரணமாக நோக்கு பவர்களுக்கு தெரியாத விடயம். இதற்கு பின்னால் சொல்ல முடியாத வலிகளும் பிரச்சினைகளும் உள்ளன.     பொதுவாக எல்லா பெண்களுக்கும் மாதவிடாய் கால அந்த ஐந்து நாட்கள் என்பது வலிகள் நிறைந்த நாட்க ளாகவே இருக்கும். தினமும் தேயிலைத் தோட்டங்களில் எட்டு மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்யும் பெண்கள் மலசலக்கூட வசதி இன்றியும் தமது சுகா தாரத்தை சரியான முறையில் பேணமுடியாமலும் இருக்கின்றனர். மாதவிடாய் நாட்களும் அதனோடு சேர்ந்த அந்த நாட் களும் பெண்களின் உடலில் ஏற்படும் வலிகள் தாங்க முடியாதவை. தங்களால் எந்த வேலைகளிலும் திருப் தியாக ஈடுபட முடியாமல்  மனரீதியாகவும் சிலர் பாதிக் கப்படுவர். சாதாரணமாக ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நாட்கள் என் பது நான்கு அல்லது ஐந்து நாட்களாகும். இது ஏழு நாட் களும் நீடிக்கலாம். மாதவிடாய் காலத்தின்போது அடி வயிற்று வலி, உடல்வலி, தலைச்சுற்று, குமட்டல், முது குவலி, கால்வலி என பல வலிகள் பொதுவாக ஏற்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் வேலைக்கு போக முடியா மல் இருக்கலாம். இதனால் அன்றைய நாள் விடுமுறை பெறவும் வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மாதச் சம்பளத்தில் குறிப்பிட்டத் தொகை வெட்டுப்படும். இது மாத வருமானத்தில் தாக்கத்தை செலுத்துவதால் சில பெண்கள் வலியையும் பொருட்படுத்தாமல் வேலைக்குச் சென்று அங்கு சோர்ந்து போய் காணப்படுவர். மலையில் வேலை பார்க்கும் ஆண் கங்காணிமாரிடம் இதை கூறவும் முடியாது. இதனால் அவர்களின் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாக வேண்டியேற்படும். இவ்வாறான ஓய் வற்ற வேலையும் மனச்சோர்வும் உள ரீதியான தாக் கத்தை அவர்களுக்கு பெரிதும் எற்படுத்தும். தேயிலை மலையில் நிம்மதியாக அமர்ந்து சாப்பிடு வதற்கு ஓர் சுத்தமான இடமும் இல்லை. சுத்தமான குடிநீர் வசதியும் இல்லை. கழிப்பறை வசதிகள் கூட கிடையாது. இவர்களால் கைகளை சுத்தமாக சவர்க்காரம் கொண்டு கழுவுவதற்கு கூட எந்தவொரு வசதியும் கிடையாது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் அவர்கள் மாதவிடாய் காலத்தில் தமது துவாய்களை (PAD) மாற்ற வேண்டி ஏற்படும். அவர்களால் இதனை எவ்வாறு செய்ய முடியும்?. காலையில் தேயிலை மலைக்கு வேலைக்கு போனால் மாலையே வீட்டுக்கு திரும்புவார்கள். ஒரு சில தோட்டங்களில் பகல் சாப்பாட்டுக்காக வீடு களுக்கு வரும் நடைமுறை இருக்கின்றது. அநேகமான இடங்களில் இவ்வாறான  நடைமுறைகள் இல்லை. அவ்வாறு வீட்டுக்கு வரக்கிடைக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளவர்கள் வீட்டுக்கு வந்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வார்கள். ஆனால், இந்த சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் என்ன செய்வது?. எல்லோரும் துவாய்களை தான் பாவிக்கின்றார்கள் என்று கூற முடியாது அதனை வாங்குவதற்கான வசதிகளும் அவர்களுக்கு கிடையாது. மேலும் இந்த துவாய்களை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்று தெரியாதவர்களும் கூட அநேகமானவர்கள் உள்ளனர். துவாய்களுக்கு மாறாக அவர்கள் தம்மிடம் உள்ள துணிகளை உபயோகிக் கின்றார்கள். துணிகளை பாவிக்கும் நேரத்தில் அதை எந்த நேரமும் மாற்றிக்கொள்ள முடியாது. இதற்காக பிரத்தியேக நேரம் தேவைப்படும். இந்த நேரம் கிடைக்காமல் உள்ளவர்கள் முழுநேரமும் அந்த துணியுடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் சுகாதாரம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகின்றார்கள். மேலும், பறிக்கும் கொழுந்தை தலையில் சுமந்து கொ ண்டு வரும்போது அதன் பாரம் தலையையும் முதுகை யுமே தாக்கும். சுமைதூக்கியாக இருக்க வேண்டிய இவர்கள் மாதவிடாய் காலத்தில் அவர்களது உடல் ஒத் துழையாமை இருக்கின்ற சந்தர்ப்பங்களில் இவர்கள் பாவிக்கும் அந்த துணி பாதுகாப்பாக இருக்கும் என்று கூறமுடியாது. சில சமயங்களில் நழுவி கீழே விழவேண்டியும் ஏற்படும். இந்த சுகாதாரமற்ற முறையினால் இனப்பெருக்க உறுப்பு களில் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இது இவ்வாறிருக்க, உரிய துவாய்களை மாதவிடாய் கால த்தில் பெண்கள் பயன்படுத்தாமை காரணமாக பாரிய சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுப்பதாகவும் இக் காலத்தில் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான துவாய் களை வாங்க முடியாத பெண்களுக்கு அவற்றினை இல வசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டி யிட்ட சஜித் பிரேமதாச தனது ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியிருந்தார். மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி இந்த துவாய்களை வாங்கமுடியாத நிலையில் உள்ள பெண் தோட்டத் தொழிலாளர்களை பொறுத்தவரையில் இல வசமாக கிடைப்பதென்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதனால் பயமின்றியும் தன் நம்பிக்கை யுடனும் வேலைக்கு செல்லலாம். இதுவரை துவாய்களை பயன்படுத்தாதவர்களும் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டி ருக்கும். அதேவேளை அவர்களின் ஆரோக்கியமும் மேம்படும். இலங்கை மக்கள் தொகையில் பெண்களின் தொகை 53 சதவீதமாகும். இவர்களில் 30சதவீதமானவர்களே மாதவிடாய் காலத்தில் துவாய்களை பயன்படுத் துகின்றனர். 70சதவீதமானோர் பயன்படுத்துவதில்லை. இவர்கள் தம்மிடம் உள்ள துணிகளையே பயன்படுத்துகின்றனர். துவாய்களுக்கான வரி அறவீடு காரணமாக ஒரு பெண் மாதத்துக்கு 520ரூபா அளவில் செலவு செய்ய நேரிடும். இலங்கையில் மிகவும் வறியவர்களான நூற்றுக்கு 20சதவீதமானோரின் மாத வருமானம் சாதாரணமாக 14,843 வரையிலேயே இருக்கின்றது. இவர்களுக்கு துவாய்களை வாங்க தமது வருமானத்தில் 3.5 வீதத்தை மாதந்தோறும் செலவிட வேண்டும். இலங்கையில் மாதவிடாய் துவாய்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகின்றது. இது 2018 செப்டெம்பர் வரை இறக்குமதி செய்யப்பட்ட மாதவிடாய் பொருட்களுக்கான வரி 100வீதத்துக்கும் அதிகமானதாக இருந்தது. வரி விதிப்பு 2019ஆம் ஆண்டில் 63வீதமாக குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 2020 நிலைவரப்படி 52வீதமாக இருந்தாலும் அது இன்னும் அதிகமாகவே உள்ளது. வரிவிதிப்பு குறைக்கப் பட்டபோதிலும், இலங்கையில் பெருந்தோட்டப் பெண் களை பொறுத்தவரை அவர்களின் மாதவருமானத்தில் மாதவிடாய் துவாய்க்கான ஒதுக்கீடு கட்டுப் படியாவதில்லை. இந்நிலைமை அப்பெண்களின் அனைத்து செயற்பாடு களிலும் தாக்கம் செலுத்துகிறது. மேலும், இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பம் மாதவிடாய் காலங்களில் துணியை பாவிப்பது நேரடி பாதிப்புக்கு வழிவகுப்பதாகவும் அதேவேளை, இலங்கை கர்ப்பப்பை வாய் புற்றுநோயில் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் துவாய்களை இலங்கையிலுள்ள அனைத்து பெண்களுக்கும் பாரபட்சமின்றி கிடைக்க அரசாங்கம், துவாய்களின் வரிவிதிப்பு விகிதங்களை குறைத்தும் இறக் குமதி வரிகளை அகற்றுவதிலுமே சாத்தியப்படும். மாதவிடாய் கால சுகாதார தயாரிப்புகளை மிகவும் மலிவு விலையில் தயாரிப்பது மற்றும் பெண்களின் உடல் நலத்துக்கு மட்டுமல்லாமல் தொழிற்துறையில் பெண் களின் பங்களிப்பு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் கூடும். மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் தோட்டத் தொழிலாளர்களின் மாதவிடாய் கால பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு முறையான கழிப்பறை வசதிகளையும் மாதவிடாய் கால சுகாதார வழிமுறைகளையும் பின்பற்ற முறையான வழி முறைகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். இது மலையகத்தை பிரதிநிதித்துப்படுத்தும் பெண் வேட்பாளர்களின் கடமை மட்டுமல்ல சகலரினதுமாகும். தோட்டத் தொழிலாளர்களின் உடல் உழைப்பை உறிஞ்சும் தோட்டக் கம்பனிகள் பெண் தொழிலாளர் களின் சுகாதாரம் தொடர்பாகவும் கவனமெடுத்து மாதவிடாய் காலத்தில் இவர்களின் ஓய்வைப் பற்றியும் முறையான சுகாதார வழிமுறைகள் பற்றியும் சிந்திக்க அவர்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மலையகப் பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பதுவும் ஒரு வறுமையே. – சௌந்தரராஜன் கோகுலவாணி https://thinakkural.lk/article/83292
  • மக்களுக்கு சேவையாற்றவே இருபதுக்கு ஆதரவளித்தேன்   மக்களுக்கு சேவையாற்றுவதனை நோக்காக கொண்டே 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். பொதுஜன முன்னணி அரசாங்கம் எதிர்வரும் 10,15 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இவ்வாறு இருக்கும் போது எதிர்க் கட்சியில் இருந்துக் கொண்டு மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுக்க முடியாது. எதிர்க் கட்சியில் இருந்துக்கொண்டு வெறுமனே கொள்ளை அரசில் பேசிக்கொண்டிருக்க முடியாது. கடந்த தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளேன். அவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற வேண்டிய தேவையும், அவசியமும் உள்ளது. இதனை எதிர்க் கட்சியில் இருந்து நிறைவேற்ற முடியாது. ஆகவே மக்களுக்கு சேவையாற்றுவதனை முதன்மை நோக்காக கொண்டு இருபதுக்கு ஆதரவளித்தேன் என்றார். http://tamil.adaderana.lk/news.php?nid=135670
  • மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டது – முதலமைச்சர்          by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/06/EPS.jpg மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மருத்துவ வசதிகளோடு, மனித வளம் மற்றும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயற்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளைப்போல தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன என்றும் மருத்துவம் ஒரு கலை, வணிகம் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். வளர்ந்த நாடுகளை காட்டிலும், கொரோனா வைரஸ் தொற்றை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தியது இந்தியாதான் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். http://athavannews.com/மருத்துவ-துறையில்-2030ஆம்-ஆண/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.