Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சூழலை நேசிக்கும் யாப்பாண இளையவர்களின் பணி...


Recommended Posts

 

 

பண்ணைக் கடற்கரையை நேசிப்போம்

யாழ்ப்பாணம் கடல் எரிகளால் சூழப்பட்ட அழகான ஒரு சிறு நகரம். இது இயற்கை எமக்கு அளித்த வரம். பண்ணை கடற்கரையும் அதனை சூழவுள்ள பகுதிகளும் மிக அழகானவை. அநேகமான மக்கள் இப்போதெல்லாம் மாலை வேளைகளிலும், காலை வேளைகளிலும் உடற்பயிற்சிக்காக நடந்து செல்கிறார்கள். இதைவிட பொழுதுபோக்குக்காகவும் அமைதியை நாடியும் இக் கடற்கரையை இளையவர்களும், முதியவர்களும் பயன்படுத்துகிறார்கள். இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய செயற்பாடுகள்,

இந்த பண்ணை வீதியை நடை ப்பயிற்சிக்காக பயன்படுத்துபவர்களில் நானும் ஒருவன். சூரியோதத்தையோ அல்லது சூரிய அஸ்தமனத்தையோ ரசித்தபடி நடந்து செல்லும் பொழுது நம்மையே அறியாமல் நாம் இயற்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் ஒரு குறை உண்டு. இந்த பிரதேசம் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பதில்லை பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் போடப்படுகின்றன. பல இடங்களில் கடலில் போடப்படும் பிளாஸ்டிக், கழிவுகள் நீர் ஏரியில் மிதந்து வந்து ஒதுங்கிய படி இருக்கும். இதைவிட, அதிக வேகத்தில் வாகனங்களை சாரதிகள் செலுத்துவதால் விபத்து நடந்துவிடுமோ என்ற அச்ச உணர்வு இருந்தபடியே இருக்கும். மேலும் மாலை வேளைகளில் இங்கு கூடுபவர்கள் வாகனங்களை நடைபாதைக்கு குறுக்கே நிறுத்துவதால் நடந்துவரும் முதியவர்கள் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இதைத்தவிர இந்த இடமும் இயற்கைச் சூழலும் மனதிற்கு இதமாகவே உள்ளன.

2 நாட்களுக்கு முன்பு முகநூலில் இரு விடயங்கள் கண்ணில் பட்டன. முதல் விடயம் நடுத்தர வயதில் உள்ள ஒருவர் கடற்கரையோரத்தில் நிழல் மரங்களை நடுவதற்காக ஆயத்தம் செய்யும் ஒரு படம். இரண்டாவது விடயம் கடற்கரையை சுத்தம் செய்வதற்காகவும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்காகவும் ஒன்று சேரும்படி கூறும் இளைஞர்கள் அணியின் வேண்டுகோள் ஒன்று. இந்த இரு விடயங்களும் மனதிற்கு, மகிழ்ச்சியை தந்தன. இன்று, ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை ஆறு மணிக்கு கழிவகற்றும் செயற்பாடு நடப்பதாக அத்தகவல் கூறியது. வழக்கமாக மாலையில் மட்டுமே பண்ணைக்கு செல்லும் நான் இன்று காலை சென்றேன். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை சுகாதார முறைப்படி சேகரித்துக் கொண்டிருந்தார். மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் சிலருடன் உதை யாடிவிட்டு பெரும்பொழுது முகநூலில் பார்த்த ஒருவர் வேறொருவருடன் சேர்ந்து சில மரக்கன்றுகளை வைத்துக்கொண்டு நடுவதற்காக ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்.
என்னுடன் இன்னும் ஒருவரும் சேர்ந்துவிட்டார் நாங்கள் நால்வரும் பண்ணை கடற்கரை பற்றியும் தற்போதைய இளைஞர்களின் செயற்பாடுகள் குறித்தும் செயற்றிறன் குறைந்த மாகாணசபை, மாநகர சபை குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்., எந்த எதிர்பார்ப்பும் இல்லாது மரங்களை நடும் அந்த மனிதர்களின் செயற்பாடுகளை மனதார பாராட்டினோம்., அவர்களை பார்க்கும்போது சிறுவயதில் மில்க்வைற் கனகராஜா யாழ் மாவட்டம் முழுவதும் பனை மரங்களை நட்ட ஞாபகங்கள் மனதில் ஓடின. அவர்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுவதற்கு புகைப்படம் ஒன்று எடுக்க கேட்டபோது மறுத்துவிட்டார். ‘தயவுசெய்து பொது வெளியில் எங்கள் பெயர் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தக் செய்கை மூலம் நான் புகழப்படுவதையோ விமர்சிக்க படுவதையோ விரும்பவில்லை. தயவுசெய்து மன்னித்து விடுங்கள்” என்றார்கள்.

உங்கள் கையால் நாங்கள் கொண்டு வந்த இந்த மரங்களில் ஒன்றை நட்டு விடுவீர்களா? என்று கேட்டார் நானும் என்னுடன் இணைந்து நண்பனும் உடனடியாகவே “ஆம்” என்றோம். எங்களுக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் .மரத்தை நட்டு உயிர் தண்ணீரும் விட்டு அந்த சூழலியல் நண்பர்களோடு மனம் விட்டு உரையாடிவிட்டு வந்தேன் .

உண்மையிலேயே யாழ்ப்பாணம் இன்னும் உயித்துடிப்புடனேயே இருக்கிறது. சூழலை நேசிக்கும் இளைஞர்களும் முதியவர்களும் இருக்கிறார்கள். ஏமாற்றத்தை தரும் போலித் தேசிய அரசியல்வாதிகளிலும் பார்க்க தேசத்தை , சூழலை , நேசிக்கும் மனிதர்களே இன்று நாட்டுக்குத் தேவை. அவர்களே சிறந்தவர்கள்

 

 

 

https://www.facebook.com/pg/sirakukal.info/about/?ref=page_internal

 

 

 • Like 3
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  • அரபு நாடுகளின் கடைகளில் இருந்து அகற்றப்படும் பிரான்ஸ் நாட்டுப் பொருட்கள்; தீவிரமடையும் புறக்கணிப்பு   பரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம் - பிரெஞ்சு நாட்டுப் பொருட்கள் ஒரு சில இஸ்லாமிய நாடுகளின் அங்காடிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன. அராப் நாட்டவர்கள் பிரெஞ்சுப் பொருட்களை தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிரான்சில் இஸ்லாமிய இறைத்தூதர் கேலிச்சித்திரம் தொடர்பான விடயம் தொடர்ந்து சூடுபிடித்த வண்ணமே உள்ளது. அதிபர் Emmnuel Macron கேலிச் சித்திரங்களை வரைவதை நிறுத்த வேண்டியதில்லை என அறிவித்ததை அடுத்து இஸ்லாமிய நாடுகளில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டார் நாட்டில் நடைபெற இருந்த பிரெஞ்சுக்கலாச்சார விழா பின் போடப்பட்டுள்ளது. கட்டாரில் அல்மீரா, சூக் அல் பலாடி ஆகிய பல்பொருள் அங்காடிகள் பிரெஞ்சுப் பொருட்கள் விற்பனை செய்வதை நிறுத்தி உள்ளன. குவைத் நாட்டின் அங்காடிகளில் இருந்து பிரெஞ்சு உணவுப் பொருட்கள் நீக்கப்பட்டு வருவது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன. குவைத்திலுள்ள 60 வர்த்தக நிலையங்களில் பிரெஞ்சுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள 450 பிரயாண முகவர்கள் பிரான்ஸ் நாட்டுக்கான விமானப் பயண முன்பதிவுகளை நிறுத்தியுள்ளனர். ஜோர்டான் நாட்டின் எதிர்க்கட்சி, பிரெஞ்சுப் பொருட்களை தவிர்க்குமாறு தமது நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரான்சில் இருந்து அதிகமான உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் வளைகுடா நாடுகள் தமது இறக்குமதிகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டால் பிரான்ஸ் நாட்டுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பொருளாதார நட்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_813.html  
  • பெடியன்களாக இருக்கும் போது பொடி விசுகொத்து சாப்பிட்ட அனுபவம் உண்டா ..? ரெல் மீ .👍  
  • படம்: ரங்கராட்டினம் (1971) இசை : V.குமார் வரிகள் :  கண்ணதாசன்  பாடியோர் : A.M  ராஜா &  L.R ஈஸ்வரி  முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ அத்தானிடம் என் கோபம் செல்லுமோ அன்றாடும் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ (முத்தாரமே) ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதையின் நெஞ்சம் என் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம் பெண்ணல்லவா மனம் போராடுது நான் சொல்லியும் என் தடுமாறுது (அத்தானிடம்) தேக்கி வைத்த அணை தாண்டி போகுமோ ஆசை வெள்ளம் கடல் காத்திருக்குமோ பொங்கும் அல்லவா கண்ணீர் வெள்ளம் ஓய்வில்லாதபடி ஓடுகின்ற நதி கடலில் சேரும் காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னை சேரும் உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் ..
  • இதில் மூன்று விதம். மாற்று கருத்துக்களை கேட்பது, சகித்து கொள்வது, ஏற்றுக் கொள்வது. புலிகள், இதில் கேட்பதை முழுழுமையாகவும், சகிப்பது, ஏற்றுக்கொள்வதை பகுதியாகவம் செய்தார்கள் என்பதே நான் விளங்கி கொண்டது. ஆனால் புளொட் இல் மாற்று கருத்து என்பதற்கு இடம் இருந்ததாக நான் அறியவில்லை. வெளிப்படையான புளொட் உதாரணங்கள் இருந்தால் சொல்லுங்கள்.         
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.