Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நவீன அடிமைகளை எப்படி உருவாக்குகிறார்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அண்ணர் ,
கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிகின்றார் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தேசிய வாதம் - நல்லதொரு விடயத்தை தொட்டுள்ளீர்கள்👍. இதுவரை இந்த கோணத்தில் யோசித்தில்லை, வித்தியாசமான கோணத்தில் யோசித்து விளங்கப்படுத்தியுள்ளீர்கள். 

சுய பொருளாதாரத்தால் தான் எம் மக்களை பாதுகாக்க முடியும், தலைவரின் சிந்தனைகளில் இதுவும் ஒன்று.

தற்போதைய அரசியல் வாதிகள் இதனை ஊக்குவிக்க வேண்டும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுய சார்பு பொருளாதாரம் என்பது நீண்ட காலமாக பேசுபொருளாக இருக்கும் விடயம் தான். கார்ல் மாக்ஸ், லெனின் முதற்கொண்டு பல சோசலிஸ்டுக்கள் இதை வலியுறுத்தி வந்துள்ளனர். யூகோஸ்லாவியாவை ஸ்தாபித்த மார்சல் டிட்டோ இதை  ஒருங்கிணைந்த யூகோஸ்லாவியாவில் அமுல்ப்படுத்தினார். 

ஸ்ரீலங்காவில் சுயசார்பு பொருளாதாரத்தை இலங்கையில்   தீவிரமாக நடைமுறைபடுத்திய அரசு 1970 ல் பதவிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி  இடதுசாரிகளின் கூட்டரசாங்கம் ஆகும். அது மிக சிறந்த பலனை கொடுக்க தொடங்கிய போதிலும், இறக்குமதி தடையால் குறுகிய காலத்தில்  உணவு பொருட்களுக்கு ஏற்பட்ட  தட்டுப்பாடு, வர்த்தகர்களின் பதுக்கல், கள்ள சந்தை நடவடிக்கைகள், அரசியல்வாதிகளின் பொதுத்துறை ஊழல், மக்களின் பொறுமையின்மை ஆகியவற்றால் தொடரமுடியாமல் போனது. அதிலும் சுதந்திரக்கட்சி அரசு இதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தியதால் உள்நாட்டில் பாரிய உணவு பஞ்சத்தை 1973  - 74 காலப்பகுதியில் ஏற்படுத்தியது. 

 உணவு பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை பாரிய அரசியல் பிரச்சாரமாக  முன்வைத்து பிரச்சாரம் செய்து 1977 ல் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமைலிலான    ஐ. தே. க அரசாங்கம் தாராளமய கொள்கையை அமுல்படுத்த சுயசார்பு பொருளாதார  திட்டங்கள்  இலங்கையில் நலிவுற்றன. 

சுய சார்பு பொருளாதாரத்தின் சாத்தியம் என்பது பற்றி ஆராய்ந்தால்  ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள  அயல் நாடுகள் தமக்குள் கூட்டிணைவுடன் அதை முன்னெடுக்கும் போது  அதன் சாத்தியப்பாடு அதிகரிக்கிறது. சிறந்த பலனை கொடுக்கிறது. இவ்வுலகில் பிறந்த மனிதன் அடுத்த மனிதனில்  தங்கிவாழ்வது என்பது இந்த உலகில் இயல்பானது.  மாற்ற முடியாத‍து. இந்த இயல்பை புறக்கணித்து ஒரு குறிப்பட்ட நாடு அல்லது தேசிய இனம் தனக்கு தேவையான பொருட்களை தானே நூறுவீதம்  உற்பத்தி செய்வது நடைமுறை சாத்தியமற்றது.  

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொருளாதார சமமின்மையை (Economic unbalance) ஏற்படுத்துவதன் மூலம் நாங்கள் இலகுவாக எங்கள் தேசியத்தை தக்கவைக்க முடியும். 

எந்த விதத்திலையும் பொருளாதார அபிவிருத்தியை அடையவிடாமல் தடுப்பதில் தான் அரசாங்கம் முனைப்புகளை எடுக்கும்.

வீதி, கடற்தொழில், சிறு கைத்தொழில், விவசாயம், தகவல் தொழினுட்பம் போன்றவிடயங்களில் பாரிய அபிவிருத்தி அடைவதன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியும்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மன்னார் நானாட்டானில் மற்றொரு தொகுதி தொல்லியல் எச்சங்கள் மீட்பு.!   மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளங்கோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள புறண்டிவெளிக் கிராமத்தில் உள்ள புறண்டி வெளி குளக்கட்டுக்கு அருகாமையில் உள்ள மேட்டு நிலப்பகுதி விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு பணியில் ஈடுபட்ட போது புரதான பொருட்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.சிறீஸ்கந்தகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவுப்பணியில் ஈடுபட்ட விவசாயிகள் 2 கத்தி வடிவிலான வெட்டும் உபகரணத்தையும், உயிர்ச் சுவடி கவாட்டி கடல் வாழ் உயிரினம் சிற்பி வடிவிலானது மற்றும் உலோகத்துண்டுகள், மட்பாண்ட எச்சங்கள் என்பன காணப்பட்டுள்ளதையடுத்து பிரதானமாகக் காணப்பட்ட நான்கு பொருட்களையும் மீட்டு குறித்த தினத்தில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் எம். சிறிஸ்கந்தகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த பொருட்கள் தொடர்பாக மன்னார் தொல்பொருள் தினைக்களத்திற்கு பிரதேசச் செயலாளரினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த திணைக்களத்தினர் திங்கட்கிழமை மாலை நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் குறித்த பொருட்களை பார்வையிட்டுள்ளதுடன் அதை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மற்றும் குறித்த பொருட்கள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார். இதே வேளை நானாட்டான் பிரதேச பகுதியில் கடந்த மாதம் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நாணயங்கள் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2020/10/21/18222
  • படித்தத்தைப் பகிர்தல் - மழை தந்த புலவர்  
  • யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் – விசாரணைகள் ஆரம்பம்! October 21, 2020   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தனி நபர் ஆயத்தின் விசாரணைகள் நாளை 21 ஆம் திகதி, புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த 8 ஆம் திகதி கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகறாறு முற்றி மோதலாகியிருந்தது. அன்று மாலை வளாகத்தினுள் இடம்பெற்ற மோதலின் போது சமரசம் செய்ய முற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள், துணைவேந்தர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர். எனினும், உடனடியாகவே மாணவர்கள் மத்தியில் பேசிய துணைவேந்தர், தான் உட்பட அனைவரையும் விசாரணை செய்யும் வகையில் சம்பவம் குறித்து விசாரிப்பதற்குச் சுயாதீன விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அன்றிரவு கலைந்து சென்றிருந்தனர். மறுநாள், 9 ஆம் திகதி கூடிய பல்கலைக்கழகப் பேரவை, வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் மா. நடராஜசுந்தரத்தை விசாரணையாளராகக் கொண்டு தனிநபர் விசாரணை ஆயம் ஒன்றினை நியமித்திருந்தது. இதனிடையே, பல்கலைக்கழகத்துக்கும், அதன் துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட – மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் அனைவரையும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை சம்பந்தப்பட்டவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து கலைப்பீட விரிவுரையாளர்கள் அனைவரும் விரிவுரைகளைப் புறக்கணிக்கப் போவதாக கலைப்பீடச் சபை ஏகமனதாக முடிவு செய்து அறிவித்தது. இதனை அடுத்து, மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் என நிர்வாகத்தினால் இனங்காணப்பட்ட 21 மாணவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் கடந்த 12 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் கலைப்பீட விரிவுரைகள் வழமைக்குத் திரும்பின. விசாரணைக்கென நியமிக்கப்பட்ட பேராசிரியர் மா. நடராஜசுந்தரம் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு உட்பட்டிருந்ததனால், விசாரணையில் தாமதம் ஏற்பட்டிருந்தது. எனினும் இன்று  முதல் விசாரணைகள் முழு வீச்சில் இடம்பெறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதற் கட்டமாக சம்பவ தினத்தன்று, தாக்குதலுக்கு உள்ளாகிய விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட அதிகாரிகளும் இன்று சாட்சியமளிக்கவுள்ளனர்.     https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழக-கலைப்ப/
  • நீ என்பது எதுவரை எதுவரை நான் என்பது எதுவரை எதுவரை நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்  வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை  சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை  காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்  நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது கண்களிலே உன் கண்களிலே  பொய் காதல் நாடகம் ஏனடி அன்பினிலே மெய் அன்பினிலே  ஓர் ஊமை காதலன் நானடி  நீயா பேசியது.... நீயா பேசியது.... நீயா பேசியது.... நீயா பேசியது.... நீ என்பது எதுவரை எதுவரை நான் என்பது எதுவரை? எதுவரை நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்  வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை  சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை  காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்  ஏதோ நான் இருந்தேன்  என்னுள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்  காற்றை மொழி பெயர்த்தேன்  அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய் இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே ? உருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருகினேன்  நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது வேரில் நான் அழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை  வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை  உனக்கென்றே உயிர் கொண்டேன்  அதில் ஏதும் மாற்றம் இல்லை  பிரிவென்றால் உறவு உண்டு  அதனாலே வாட்டம் இல்லை  மறைப்பதால் நீ மறைப்பதால்  என் காதல் மாய்ந்து போகுமா நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது கண்களிலே உன் கண்களிலே  பொய் காதல் நாடகம் ஏனடி அன்பினிலே மெய் அன்பினிலே  ஓர் ஊமை காதலன் நானடி  நீயா பேசியது.... நீயா பேசியது....    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.