Jump to content

கிழக்கு மாகாணத்தில் த.ம.வி.புலிகள் கட்சி ஓரணியில் போட்டியிடதயார்! -கட்சிசெயலாளர் பிரசாந்தன்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காரைதீவு சகா-

கிழக்கு மாகாணம் தமிழருக்குரியது. எதிர்வரும் மாகாணசபைத்தேர்தலில் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் நாம் போட்டியிடுவோம். எனினும் அனைத்ததமிழ் தரப்புகளும் ஓரணியில் போட்டியிடுவதன்மூலம் ஆட்சியைத்தீர்மானிக்கின்ற சக்தியாக நாம் விளங்கமுடியும். அதற்கான சகல தரப்புகளையும் ஓரணியில் சேர அழைக்கின்றோம்.

இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் அம்பாறை மாவட்ட பேராளர்கள் முன்னிலையில் பேசுகையில் அழைப்புவிடுத்தார்.

அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் புத்திஜீவிகள் கலந்துகொண்ட மாவட்டமட்டக்கூட்டம் நேற்றுமுன்தினம் சொறிக்கல்முனையில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தலைமையில் அவரது வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

கட்சியின் முக்கியஸ்தர்களான எஸ்.யோகவேல் த.ஈஸ்வரராஜா தலைவர் சோ.புஸ்பராசா ஆகியோரும் உரையாற்றினர்.

அங்கு பிரசாந்தன் மேலும் பேசுகையில்:
நாம் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை பெற்றிருக்கமுடியும்.ஆனால் இங்கு வாக்குகளைச் சிதறடித்து ஆசனத்தை இல்லாமலாக்கவிரும்பாத காரணத்தினால்தான் நாம் போட்டியிடவில்லை.

சிறைக்குள்ளிருந்து சாதனை வாக்குகளைப்பெற்ற எமது தலைவர் கிழக்குமக்களின் விடிவெள்ளி அண்ணன் பிள்ளையான் நாளைமறுதினம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கிறார். அமைசசராகுவார்.வெகுவிரைவில் அவர் வெளிவருகிறார்.

அவர் பாராளுமன்றம் சென்றுவந்தபிறகு கிழக்கை மீண்டும் தமிழன் ஆளுவதற்கான சகல அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவிருக்கிறோம்.
நடந்துமுடிந்த தேர்தல் அபிவிருத்தியை மையப்படுத்திய செய்தியை சொல்லியிருக்கிறது. மட்டக்களப்பில் 4தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுத்தந்துள்ளனர் தமிழ்மக்கள். எனவே அவர்களுக்கான சேவையை அபிவிருத்தியை நாங்களனைவரும் இணைந்து சேர்ந்து மேற்கொள்ளவேண்டும் என்பதே எனது ஆசை.கட்சியின் விருப்பமும் அதுதான்.

அம்பாறை மாவட்டத்தை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம். இணைந்து செயற்படுவோம். என்றார்.

தலைவர் சோ.புஸ்பராசா அங்குரையாற்றுகையில்:
சிறைக்குள்ளிருந்துகொண்டு கிழக்கில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று அமைச்சராகும் அண்ணன் சிவ.சந்திரகாந்தனை பாராட்டுகிறேன். அம்பாறை மாவட்டம் சார்பில் வாழ்த்துகிறேன். அவர் செய்த சேவைக்கு மக்கள் வழங்கிய அங்கீகாரம் அது. அதனை வெளியிலிருந்து செயற்படுத்திய செயலாளர் தம்பி பிரசாந்தனும் பாராட்டுக்குரியவர். இதெல்லாம் வரலாற்றுச் சாதனைகள். என்றார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, colomban said:

அவர் பாராளுமன்றம் சென்றுவந்தபிறகு கிழக்கை மீண்டும் தமிழன் ஆளுவதற்கான சகல அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவிருக்கிறோம்.

நல்ல விடயம் .....இதுவும் ஒருவித தேசிய பற்றுத்தான்

Link to comment
Share on other sites

3 hours ago, putthan said:

நல்ல விடயம் .....இதுவும் ஒருவித தேசிய பற்றுத்தான்

என்ன இருந்தாலும் பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது தமிழர்கள் ஓரளவு நிம்மதியுடனும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள். விசேடமாக வறுமைக்கோட்டுக்கு கீழே , நடுத்தர வகுப்பினர் ஆதரித்தார்கள். இனி இவர்கள் போலி தமிழ் தேசியவாதிங்களுக்கு சிம்ம செப்பமானமாகத்தான் இருக்கப்போகிறார்கள். ஒரு பக்கம் வியாழேந்திரன், மற்ற பக்கம் பிள்ளையான். தொடருங்கள் உங்கள் மக்கள் சேவையை. போராட்ட காலத்தில் தவறுகள் நடந்திருந்தாலும் அவற்றின் பக்கம் போகாமல் மக்கள் சேவையை தொடர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Robinson cruso said:

எஜமானர்கள் விடுவார்களா?

Link to comment
Share on other sites

ஓரணியில் போட்டியிடுவது நல்லதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Iraivan said:

ஓரணியில் போட்டியிடுவது நல்லதே.

அப்புகாத்துமார் வருவினமோ ....இந்த தடவை கற்ற பாடத்தினால் திருந்தினால் நல்லம்

Link to comment
Share on other sites

54 minutes ago, putthan said:

அப்புகாத்துமார் வருவினமோ ....இந்த தடவை கற்ற பாடத்தினால் திருந்தினால் நல்லம்

கொஞ்சம் பிரச்சனைதான். கிழக்கு மக்களைக் கைவிடாமலிருக்க வேண்டும். தமிழ்த்தேசியம் குற்றச் சாட்டுகளுக்காக நிலைகுலையாமல் வளர்ந்து செல்லல் வேண்டும். இப்படி இணையும் தருணங்களில் கருணாவிற்கு ஆதரவு கொடுக்கும் பேரினவாதம் விலகும். 

Link to comment
Share on other sites

50 minutes ago, putthan said:

அப்புகாத்துமார் வருவினமோ ....இந்த தடவை கற்ற பாடத்தினால் திருந்தினால் நல்லம்

திருந்த வேண்டும். இல்லாவிட்ட்தால் அடுத்த ஐந்து வருடத்தில் காணாமல் போய் விடுவார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.