Jump to content

நிம்மதியா இருக்க என்ன செய்யணும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிம்மதியா இருக்க என்ன செய்யணும்

 

Link to post
Share on other sites
  • Replies 97
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

அமைதியாக யாரோடும் பேசாமல் இருக்க வேண்டும்..அதுவே ஒரு வித அமைதி தானே.

😂😁யாழுக்கு வரவும்

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியாக யாரோடும் பேசாமல் இருக்க வேண்டும்..அதுவே ஒரு வித அமைதி தானே.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பக்கம் வராமலிருந்தாலே போதும். நிம்மதி Guaranteed.😂😂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

யாழ் பக்கம் வராமலிருந்தாலே போதும். நிம்மதி Guaranteed.😂😂

இப்பவே சொன்னா எப்படி ? 

 

3 hours ago, யாயினி said:

அமைதியாக யாரோடும் பேசாமல் இருக்க வேண்டும்..அதுவே ஒரு வித அமைதி தானே.

உலகம் மொத்தமாக ஊமையாக்கிடும் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

யாழ் பக்கம் வராமலிருந்தாலே போதும். நிம்மதி Guaranteed.😂😂

அது பாவம் சிவனே என்று தன்ட பாட்டுக்கு இருப்பதை ஏன் சோலி பண்ணுவான்..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நிம்மதி....? நிம்மதி எங்கே....?சிரிப்பு கதை|| தென்கச்சி.கோ.சுவாமிநாதன் -||

99 - Club 😂

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பதவி மீதுள்ள ஆசையை வைத்து வேட்டையாடும் குள்ளநரி

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சண்டைகளை தவிர்க்க || இன்று ஒரு தகவல்

இரண்டாவது கதை முதலே தெரியாம போச்சே 😂😂

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, உடையார் said:

இரண்டாவது கதை முதலே தெரியாம போச்சே 😂😂

இரண்டாவது கதை ரொம்ப பிடித்திருக்கு உடையார்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

 

23 hours ago, ஈழப்பிரியன் said:

இரண்டாவது கதை ரொம்ப பிடித்திருக்கு உடையார்.

எனக்கும் தான்  😁

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் வடக்கு வாசல் சிரிப்பு கதை

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மன நிம்மதிக்கான வழி என்ன?👍🙏

✨சவால்களை சந்திப்பதற்க்கான மனப்பான்மை
✨பற்றற்ற பற்றோடு வாழ்வது எப்படி?
✨வாழ்க்கையை பார்க்க வேண்டிய கண்ணோட்டம்
✨சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி? (Techniques)

➡ மனதைக் கையாளும் உத்திகள்

➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்.

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஈர்ப்பு விதி வேலை செய்யாமல் போகக் காரணம் என்ன?(நானும் பிரபஞ்சமும்)

🍁 நமக்குத் தேவையானதை ஈர்ப்பதற்கான வழிமுறை

🍁 நமக்கும் பிரபஞ்சத்திற்க்கும் உள்ள தொடர்பு

🍁 சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்.

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தியானமும் விஞ்ஞானமும் (பிரபஞ்ச இரகசியங்கள்) - Dr.Vignesh Shankar

➡ தியானத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

➡தியானத்தின் மகிமையை விஞ்ஞான ரீதியாக உணர்தல்

➡ ESPசக்திகள் பெறுவதற்கான பயிற்சி

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மனதில் இருக்கும் காயத்தை நீக்குவது எப்படி?

🌸 கருணை உணர்வின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி.

🌸 வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கான வழிமுறை.

🌸 சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்.

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

➡வார்த்தைகளின் சக்தியை உணர்த்தும் 8 நிமிடக் காணொளி.

➡ இதுவரை வெளிப்படுத்தப்படாத அறிவியல் மற்றும் பிரபஞ்ச ரகசியம்.

➡வார்த்தைகளின் மூலம் நம் வாழ்கையை மாற்றியமைக்க கூடிய சூட்சுமங்கள்.

➡சாமானிய மக்களும் பயன் பெற அதிகம் பகிரவும்.

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜோ பைடன் - விளாடிமிர் புதின் உரையாடல்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா பட மூலாதாரம், GETTY IMAGES அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான முதல் தொலைபேசி அழைப்பிலேயே ஜோ பைடன் எதிர் தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக புதினிடம் எச்சரிக்கை விடுத்த பைடன், அந்த நாட்டில் நிலவி வரும் எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னிக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள பைடனுக்கு புதின் வாழ்த்துகள் தெரிவித்தாக ரஷ்ய தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருநாட்டு அதிபர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர். ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டிப்பான உறவை கொண்டிருக்கவில்லை என்று விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். அதேபோன்று, பராக் ஒபாமா தலைமையிலான நிர்வாகத்தில் துணை அதிபராக பைடன் செயல்பட்டபோதும், ரஷ்யா உடனான உறவு பலவீனமாக இருந்ததாகவும், இதனால் ரஷ்யாவுடன் கிரிமியா இணைக்கப்பட்டது, கிழக்கு உக்ரைன் ஆக்கிரமிக்கப்பட்டது மற்றும் சிரியாவில் கால்பதித்தது உள்ளிட்ட சம்பவங்களில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்ததாகவும் விமர்சனம் இருந்து வந்தது. இருநாட்டு தலைவர்கள் பேசியது என்ன? பட மூலாதாரம், REUTERS   படக்குறிப்பு, கோப்புப்படம் "எங்களுக்கு அல்லது எங்கள் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக செயல்படும் என்பதை அதிபர் பைடன் தெளிவுபடுத்தினார்" என்று அமெரிக்க அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ரஷ்யா மீது உலக நாடுகள் தொடர்ந்து முன்வைத்து வரும் இணையவழி தாக்குதல் குறித்தும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினருக்கு எதிரான செயல்பாடு குறித்தும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது குறித்தும் பேசப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பைடன் எழுப்பியதாக வெள்ளை மாளிகையால் குறிப்பிடப்பட்ட எந்த ஒரு விடயமும் குறிப்பிடப்படவில்லை.  "ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதன் மூலம் இரு நாடுகளின் நலன்களையும் உறுதிசெய்வது குறித்தும், உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இருநாடுகளுக்கும் உள்ள சிறப்பு பொறுப்பு குறித்தும் பேசினர்" என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பட மூலாதாரம், GETTY IMAGES   படக்குறிப்பு, கோப்புப்படம் "ஒட்டுமொத்தமாக, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களுக்கிடையேயான உரையாடல் வெளிப்படையாக இருந்தது" என்று கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், இந்த உரையாடலின்போது அமெரிக்க - ரஷ்ய அணு ஆயுத போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒபாமா கால ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தத்தை புதுப்பிக்க இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.  அடுத்த மாதம் நிறைவுற உள்ள இந்த ஒப்பந்ததில் கையெழுத்திடுவதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   https://www.bbc.com/tamil/global-55821275
    • தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021 தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொழில் உறவுகள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த 2020 – நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தினூடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளம் 1,000 ரூபா பெற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதனை செயற்படுத்தும் வகையில் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை. பெருந்தோட்ட முதலாளிமார் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள், நாளாந்த சம்பளத்தை 920 ரூபா வரை மாத்திரம் அதிகரிப்பதற்கே இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்த விடயங்களை கருத்திற் கொண்டு, வரவு செலவு திட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான வகையில் சம்பள கட்டுப்பாட்டு சபை மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2019 – 2021 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, 50 ரூபா நிலையான கொடுப்பனவு உள்ளிட்ட 750 ரூபா நாளாந்த சம்பளமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது #தோட்டத்தொழிலாளர் #சம்பள_உயர்வு #அமைச்சரவை   https://globaltamilnews.net/2021/156090/      
    • போரில் சில தவறுகள் நிகழ்கின்றமை வழமை - இப்படிக் கூறுகின்றது அரசு.! போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது. தவறுகள் இடம்பெறவில்லை என எம்மால் கூற முடியாது. எனவே, அது குறித்து ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதில் அரசு  உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.என்று அமைச்சரவைப் பேச்சாளாரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் முற்று முழுதாக தேசத்துரோக செயல் என்பதே எமது நிலைப்பாடாகும். ஆணைக்குழுக்களை உருவாக்கி உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலமாக தீர்வுகளை எட்ட முயற்சித்த காலகட்டத்திலேயே 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது எனவும் அவர் கூறினார். மங்கள சமரவீர, இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கு எதிரான நெருக்கடியை 2015 இல் ஜெனிவாவில் உருவாக்கினார். எனினும். இறுதி ஜெனிவாக் கூட்டத்தில் திலக் மாரப்பன, 2015 தீர்மானத்தில் இலங்கை அரசமைப்புக்கு முரணான பல சரத்துக்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் அதிகாரம் எமக்கே உள்ளது. சுயாதீன நாடு என்ற அடிப்படையில் அரசு தீர்மானம் எடுக்கும் – என்றார். https://thamilkural.net/newskural/leadnews/117171/
    • வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி - பகுதி 21 யானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா? விலங்குகளின் தவறுகள் காரணமா? சிந்தித்து பார்ப்பவர்களுக்கு மனிதன் தான் இந்த முரண்பாடுகளுக்கு காரணம் என்பது புரியும். திட்டமிடப்படாத காடழிப்பினால் விலங்குகள் வாழுகின்ற, உணவு தேடி உலாவி திரிகின்ற காடுகள் யாவும் மனிதனால் அழிக்கப்பட்டு விட்டன. பின் அவை எங்கு தான் செல்வது? பொறுப்பானவர்கள் தான் மிக விரைவில் தீர்வு காண வேண்டும். ஆதியிலும் காடு சார்ந்த இடங்களில் மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் நிலமைகள் இருந்தன. இப்பொழுது போல பெரிய இழப்புக்கள் இல்லை, இயற்கை சமநிலை இருந்தது. காட்டு பிரதேசங்களில் வாழும் மக்களிடையே இந்த சந்திப்புகள் பற்றிய கதைகள் பல உண்டு. ஒரு பெரிய வேட்டைக்காரன் இளைஞர்களின் வேட்டை பற்றிய அறிவை அறிய எண்ணினான். அவர்களைப் பார்த்து “ஒருவன் வேட்டைக்குப் போன போது பன்றி ஒன்றின் உறுமல் சத்தம் கேட்டு பதுங்கி பதுங்கி அதனை சுடுவதற்கு சென்றான். ஒளித்திருந்து பன்றியை குறி பார்த்த போது, ஒரு கொழுத்த தனியன் பன்றி, மேலே ஒரு மரக்கிளையை பார்த்து உறுமுவதைக் கண்டான். நன்கு அவதானித்த பொழுது மரக்கிளையில் சிறுத்தை ஒன்று பன்றியைப் பார்த்து சீறியபடி இருப்பதைக் கண்டான். எதனை வேட்டைக்காரன் சுடுவான்?” என்று கேட்டான். சிலர் “பன்றியை விட சிறுத்தை ஆபத்தானது. அதனால் அதைத் தான் சுடுவான்.” என்றனர். மற்றவர்கள் “தனியன் பன்றி மிகவும் ஆபத்தானது. ஆட்களை மூர்க்கமாக தாக்கி குற்றுயிரும் குறையுயிருமாக்கி விடும், அதனால் பன்றியைத் தான் முதலில் சுடுவான்.” என்றனர். வேட்டைக்காரன் சிரித்து “அவன் புத்திசாலியாக இருந்தால் சிறுத்தையைத் தான் முதலில் சுடுவான். சூடு பட்டதும் பன்றியை பார்த்து கோபத்துடன் பாய தயாராக இருந்த சிறுத்தை கடைசி முயற்சியாக பன்றி மேல் ஆக்குரோசமாகப் பாய்ந்து அதை கவ்விபடி உயிரை விடும். அதனால் பன்றியும் இறந்து விடும்.”என்றார். முருகேசர் முறைப்படி தனது உறவினர்கள் நண்பர்களான சிலருடன் வந்து ஆறுமுகத்தாரிடமும் விசாலாட்சியிடமும் நாட்சோறு கொடுப்பதற்கு ஏற்ற நாளை கூறி, “நீங்கள் மாப்பிள்ளையுடன் காலையில் வந்து விடுங்கள். நாங்கள் எல்லா ஒழுங்குகளையும் செய்து வைத்திருப்போம்” என்று சொல்லி விடை பெற்று சென்றார். தியாகர் வயலில் பெண்கள் எல்லோரும் கூடி நெல் அவித்தல், மா இடித்தல், பலகாரம் சுடுதல் என்று இரண்டு மூன்று நாட்கள் தடல்புடலாக இருந்தது. கணபதி, மீனாட்சியை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் மனைவிகளும் சந்தோசமாக வந்து வேலைகள் செய்தனர். அவர்களது புருசன்மார் சிலர் முறுக்கி கொண்டனர். அதற்கு பெண்கள் எல்லோரும் ஒரே குரலில் “ஊரில் இருந்து நாங்கள் வன்னிக்கு வந்த முதல் நாளிலிருந்து விசாலாட்சி அக்கா எங்களுக்கு செய்த உதவிகளை நீங்கள் மறக்கலாம், நாங்கள் மறக்க முடியாது. அவர்களுக்கு பதிலுக்கு உதவி செய்ய இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது.” என்று கூறிவிட்டு வந்து விட்டனர். நாட்சோறு குடுப்பித்து, பெண்ணையும் கையோடு அழைத்து வருவதற்காக ஏழு வண்டில்களில் கிராம மக்கள் புறப்பட்டனர். விசாலாட்சியின் தம்பிகள் இருவரும் வரவில்லை, அவர்களின் மனைவிகள் வந்தனர். கணபதியின் நண்பர்களும் முத்தர்கணபதியும் வண்டில்களை ஓட்டி செல்ல தயாராக இருந்தனர். ஆண்கள் யாவரும் வெள்ளை வேட்டி கட்டி தோளில் சால்வை போட்டிருந்தார்கள். சால்வை ஆண்களுக்கு ஒரு வித கம்பீரத்தைக் கொடுத்தது. கை, கால், முகம் கழுவும் போது துடைப்பதற்கு சால்வையை பயன்படுத்தினார்கள். வெய்யிலில் செல்லும் போது தலைப்பாகை கட்ட சால்வை உதவியது, இரவில் குளிரும் போது சால்வையை போர்வையாக போர்த்தினா ர்கள். குளித்து விட்டு வேட்டி கட்டி வந்த கணபதிக்கு, ஆறுமுகத்தார் தலைப்பாகை கட்டி விட, விசாலாட்சி திருநீறு பூசி, சந்தன பொட்டு வைத்து, அழகு பார்த்து நெற்றியில் முத்தமிட்டாள். “என்ரை ராசா, ஐயாவுடன் போய் மருமகளை கூட்டிக் கொண்டு வா. நான் இங்கு இருந்து வரும் விருந்தாளிகளுக்கு சாப்பாடு செய்து காத்திருப்பன். சந்தோசமாய் போய் வா அப்பன்” என்று கூறி விசாலாட்சி வழி அனுப்பி வைத்தாள். விசாலாட்சி என்று பெரிய பரந்தனில் காலடி வைத்தாளோ, அன்றிலிருந்து அவள் வெளி இடங்களுக்கு போவதில்லை என்பதை அறிந்த ஆறுமுகத்தாரும் கணபதியும் அவரை வரும்படி வற்புறுத்தாது விடை பெற்று சென்றனர். அவர்கள் சென்று வண்டிலில் ஏறியதும் உறவினர்களும் ஏறினர். ஏழு வண்டில்களும் அணி வகுத்து, எருதுகளின் கழுத்தில் இஸ்லாமிய வியாபாரிகளிடம் வாங்கி கட்டிய சலங்கைகள் ஒலிக்க வரிசையாக பளையை நோக்கி சென்றன. வண்டில்கள் ஓட ஓட கணபதியின் மனதில் நினைவுகளும் ஓடின. மீனாட்சி வேண்டி கேட்டுக் கொண்ட இரண்டு விடயங்களும் அவனது மனதில் காட்சியாய் விரிந்தன. தாயாரைப் போல அவளும் மச்சம் சாப்பிடுவதில்லை, அதனால் அவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. கந்தையனைக் கூட்டி வந்து தங்களுடன் வைத்திருப்பது அவனுக்கும் விருப்பம் தான். தன்னிடம் அவள் வினயமாக கேட்ட விதம் அவனுக்கு சிரிப்பை உண்டாக்கியது. எதையும் துணிச்சலாக கதைக்கும் மீனாட்சி தம்பிக்காக தயங்கி தயங்கி கதைத்தாள். தகப்பனும் தாயும் ஒன்றாக இருந்த சந்தர்ப்பத்தில் கணபதி “மீனாட்சி கந்தையனையும் எங்களுடன் கூட்டி வந்து வைத்திருப்பம்.” என்று கேட்டவள். நானும் சம்மதித்து விட்டேன் என்றான். அதற்கு ஆறுமுகத்தார் “கட்டாயம் கூட்டிக் கொண்டு வா. நாங்கள் குடிக்கும் கஞ்சியையோ கூழையோ அவனும் எங்களோடை சேர்ந்து குடிக்கட்டுமே.” என்றார். விசாலாட்சி புன்முறுவலுடன் “நாங்கள் தியாகர்வயலுக்கு வந்த போது மூன்று பேர் மட்டும் தான். மீனாட்சியும் பேரம்பலமும் பிறந்த பின்னர் ஐந்து பேர் ஆனோம். மருமகள் மீனாட்சியும் கந்தையனும் வந்துவிட்டால் ஏழு பேராய் ஆகிவிடும். வீடும் கலகலப்பாய் மாறிவிடும், கட்டாயம் கூட்டிக் கொண்டு வா” என்றாள். தகப்பனும் தாயும் கந்தையனை கூட்டி வருமாறு சொல்லியது நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்த கணபதிக்கு, மாமன்மாரை நினைத்து சிறிது கவலையும் ஏற்பட்டது. அவர்கள் தாயாரிடம் வந்து வாக்குவாதப்பட்டதை அறிந்து தாயாரிடம் “என்னம்மா? அவைக்கு ஏன் இவ்வளவு கோபம்.” என்று கேட்டான். அகற்கு அம்மா “கணபதி, நீ கவலைப்படாதை. அவர்களின் அறிவு அவ்வளவு தான். எத்தனை நாட்களுக்கு தான் கோபிப்பார்கள். கலியாணம் முடிய எல்லாம் சரி வரும்” என்று கூறியிருந்தாள். பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த கணபதி வண்டில்கள் நிற்பதை கண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். வண்டில்கள் எல்லாம் முருகேசர் வீட்டு வாசலில் நின்றன. முருகேசரும் உறவினர்களும் “வாருங்கோ, வாருங்கோ” என்று வரவேற்றபடி விரைந்து வந்தனர். எல்லோரும் நேரே கிணற்றடிக்கு சென்று கை கால் கழுவி விட்டு வீட்டுக்குள் சென்றனர். வீட்டுக்கு முன்னால் ஒரு சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பனை ஓலை பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. எல்லோரும் சென்று அமர்ந்தார்கள். முருகேசரின் உறவுக்கார பெண்கள் எல்லோருக்கும் பால் தேனீர் கொடுத்தனர். சரியான நேரம் வர கணபதியை அழைத்து நிறைகுடத்தின் முன் இருத்தி விட்டு, மீனாட்சியை கூட்டி வரும்படி முத்தர் சொல்ல, பெண்கள் மீனாட்சியை அழைத்து வந்தனர். வரும் போது மீனாட்சி தனது பெரிய கணகளால் நிமிர்ந்து ஒருமுறை கணபதியை பார்த்தாள், ஒரு கணம் புன்னகை தோன்றி மறைந்தது. மீனாட்சி பதுமை போல நடந்து வந்து தலை குனிந்தபடி கணபதியின் அருகில் இருந்தாள். சேலை கட்டி வந்த மீனாட்சியை கணபதியும் பார்த்தான், பார்த்தவன் மீனாட்சியின் வடிவைக் கண்டு திகைத்துப் போனான். முத்தர் நிறைகுடத்தின் மேலிருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து கொடுக்க, கணபதி ஒரு பரவச நிலையில் மீனாட்சியின் கழுத்தில் கட்டினான். பெண்கள் தலை வாழை இலையில் உணவைப் படைத்தனர். கணபதி முதலில் சாப்பிட, அதே இலையில் மீனாட்சி சாப்பிட்டாள். பின்னர் வந்தவர்களுக்கு எல்லாம் பந்தியில் சாப்பாடு வழங்கப்பட்டது. நாட்சோறு கொடுத்தல் சந்தோசமாக நடந்து முடிந்தது. முத்தர் எல்லோரையும் புறப்படும்படி கூற எல்லோரும் வெளிக்கிட்டனர். கணபதி முதலில் மீனாட்சியை கையை பிடித்து வண்டிலில் ஏற்றினான். பின்னர் கந்தையனை கூப்பிட்டு ஏற்றி விட்டு தானும் ஏறினான். முருகேசரும் உறவினர்களுமாக மூன்று வண்டில்களில் வந்தனர். பத்து வண்டில்களும் பெரிய பரந்தனை நோக்கி விரைந்தன. பிரயாணத்தின் போது கணபதி கந்தையனிடம் ஊர்களின் பெயர்களைக் கூறினான். மீனாட்சியும் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும். ஆனையிறவு பாலம் வந்த போது முன்பு எருதுகள் அதன் மேல் ஏற பயந்த கதையை சொன்னான். பெரிய பரந்தன் காட்டை கடக்கும் போது, அந்த காட்டில் தான் சிறுத்தைகள் உலாவுவதாக சொன்னான். அப்போது அவனுக்கு ஆறுமுகத்தார் தன்னை பத்து வயதில் கூட்டி வந்தது நினைவிற்கு வந்தது. இன்று தான் பன்னிரண்டு வயதில் கந்தையனை கூட்டி செல்கிறான். ஐயா தன்னை வளர்த்தது போல தானும் கந்தையனை வளர்க்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான். மாப்பிள்ளை பொம்பிளையை விசாலாட்சி உறவினர்களுடன் சேர்ந்து வரவேற்றார். கணபதி மீனாட்சியியுடன் தகப்பன், தாய் இருவரது கால்களிலும் விழுந்து வணங்கினான். கணபதியின் நண்பர்கள் காட்டுத்தடிகளால் கொட்டகை போட்டு, படங்கினால் கூரை போட்டிருந்தார்கள். விருந்தினர்கள் யாவரும் பாய்களில் இருந்தனர். சிறிது நேரம் ஓய்வின் பின்னர் பந்தியில் எல்லோரையும் இருத்தி சாப்பாடு வழங்கப்பட்டது. கணபதியின் மாமன்மார் தயங்கி தயங்கி வந்து இரண்டாம் பந்தியில் இருந்து சாப்பிட்டு விட்டு விசாலாட்சியிடம் ஒன்றும் கதைக்காமல் சென்றுவிட்டனர். மூடல் பெட்டிகளில் பலகாரங்கள் வைத்து மூடப்பட்டிருந்தது. எல்லோருக்கும் வெற்றிலை பாக்கு வழங்கப்பட்டது. சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் முருகேசரும் உறவினர்களும் விடை பெற்றனர். விசாலாட்சி பலகாரப்பெட்டியை கொண்டு வந்து கொடுத்தார். வெளிக்கிட முன்பு முருகேசர் கந்தையனைக் கூப்பிட்டு “கந்தையா, அத்தான் அக்கா சொல்லுறதை கேட்டு நடக்க வேணும். பெரியாட்களிட்டை மரியாதையாக நடக்க வேணும்.” என்று கூறினார். பந்தியில் மற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட போது, கட்டாடியார், சீவல்தொழிலாளி, சிகையலங்கரிப்பவர், யாவருக்கும் அதே பந்தியில் ஒரு பக்கத்தில் இருத்தி உணவு பரிமாறப்பட்டது. பெண்கள் யாவரும் மீனாட்சியை சூழ்ந்து கொண்டனர். மீனாட்சியும் அவர்களுடன் நீண்ட நாட்கள் பழகியவள் போன்று சந்தோசமாக கதைத்தாள். கறுப்பாக இருந்தாலும் மிக அழகாக இருந்த அவளை, அவளின் அழகுக்காக மட்டுமில்லை, அவளின் எல்லோருடனும் அன்பாக பேசிப்பழகும் நல்ல குணத்திற்காகவும் தான் கணபதி விரும்பியிருக்கிறான் என்பதை எல்லோரும் உணர்ந்தனர். முத்தரின் மனைவி, மாமன்மாரின் மனைவிகள், பொன்னாத்தை முதலியவர்களைப் பற்றி கணபதி கூறியிருந்ததால் அவர்களை விசாரித்து அறிந்தபின் முறை சொல்லியே அவர்களுடன் கதைத்தாள். பெண்கள் யாவருக்கும் மீனாட்சியை நன்கு பிடித்து விட்டது. வந்து இரண்டு மூன்று நாட்களுக்குள் மீனாட்சி, விசாலாட்சியிடமிருந்து சமையல் பொறுப்பை ஏற்று கொண்டு விட்டாள். முடிந்த அளவு மற்ற வேலைகளையும் தானே செய்தாள். விசாலாட்சிக்கு வேலைகள் எதுவும் செய்யாமல் இருக்க முடியவில்லை. மீனாட்சி அவளிடம் “மாமி, நான் வந்துவிட்டேன், நீங்கள் இவ்வளவு நாளும் வேலை செய்தது போதும்.  இனி நீங்கள் ஆறுதலாக இருங்கள்.” என்று சொல்லி விட்டாள். கோவில்கள், விசேசங்களின் போது ஊரவர்கள் வீடுகளுக்கு போய் உதவி செய்தல் தவிர வேறு எங்கும் போகாத, விசாலாட்சி இப்போது மாலை நேரங்களில் எல்லோர் வீடுகளுக்கும் போய் வந்தாள். “மீனாட்சி என்னை ஒரு வேலையும் செய்ய விடுறாள் இல்லை.” என்று முக மலர்ச்சியுடன் அவர்களிடம் சொல்லும் போதே மருமகளிடம் அவளுக்கு உள்ள அன்பை யாவரும் புரிந்து கொண்டனர்.      கந்தையனை படிப்பை நிறுத்தி அழைத்து வந்தது கணபதிக்கு கவலையாக இருந்தது. தங்கை மீனாட்சியும் பள்ளிக்கூடம் போகமலிருக்கிறாள். முத்தர் கணபதி எழுத, வாசிக்க, கணக்குகள் பார்க்க சொல்லி கொடுக்கிறான் தான். பெரிய பரந்தனிலும் செருக்கனிலும் சில பிள்ளைகள் பள்ளிக்கூடம் போறதில்லை. குஞ்சுப்பரந்தன் பிள்ளைகள் அனைவரும் ஊரில் தங்கி சங்கத்தானை பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எல்லா பிள்ளைகளுக்கும் அந்த வசதி இல்லை. முத்தர்கணபதியுடனும் நண்பர்களுடனும் கணபதி இதைப்பற்றி கதைத்திருந்தான். ஒருநாள் பறங்கியர் வந்த போது கணபதி “செஞ்சோர், எங்கள் ஊர் பிள்ளைகள் படிக்க என்ன செய்யலாம்?” என்று கேட்டான். பறங்கியர் “எல்லா ஊருக்கும் ஒரு பள்ளிக்கூடம் வேணும், உங்கடை மூன்று ஊரிலும் கொஞ்ச பிள்ளைகள் படிக்கிறேல்லை போலை இருக்குது. நீ இதைப்பற்றி ஒரு கடிதம் எழுதி ‘கவர்மென்ட் ஏஜன்ற்’ (Government Agent) இடம் நேரே கொடு. நீ தமிழ்பாஷையிலை எழுது, அவருக்கு விளங்கப்படுத்த ஆட்கள் இருப்பார்கள், அவர்கள் வாசித்து காட்டுவார்கள். இப்ப இருக்கிற ‘கவர்மென்ட் ஏஜென்ற் ‘நல்லவர்” என்று கணபதியிடம் சொன்னார். கடிதம் எழுதும் முறையையும் பறங்கியர் சொல்லிக் கொடுத்தார். தோழர்களுடன் கணபதி கதைத்த போது பறங்கியர் சொன்னது போல ‘கவர்மென்ட் ஏஜென்ற்’ இற்கு கடிதம் எழுதி மூன்று கிராம மக்களிடமும் கையெழுத்து வாங்கும் பொறுப்பை முத்தர்கணபதியும் சில தோழர்களும் ஏற்றனர். அவர்கள் சொன்னதைப் போல முத்தர்கணபதியும் தோழர்களும் கடிதம் எழுதி, ஊரவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு வந்து கணபதியிடம் கொடுத்தனர். அதில் கையெழுத்துக்களை விட கைவிரல் அடையாளங்களே கூடுதலாக இருப்பதைக் கண்ட கணபதி கவலையடைந்தான். முத்தரிடமும் ஆறுமுகத்தாரிடமும் சொல்லிவிட்டு, கணபதி தோழர்களுடன் ‘கவர்மென்ட் ஏஜென்ற்’ இடம் சென்று நேரில் அந்த விண்ணப்பத்தை கொடுத்தான். மொழி பெயர்ப்பவர் வாசித்து சொல்ல கேட்ட ‘கவர்மென்ட் ஏஜென்ற்’ கையெழுத்துகளுக்கு பதிலாக கை அடையாளங்கள் கூடுதலாக இருப்பதைக் கண்டு அவர்களின் மேல் கருணை கொண்டார். “கணபதி, நீ போ, எங்கடை அதிகாரி  வந்து உங்கடை ஊரை சுற்றிப் பார்த்து, உங்களோடை கதைப்பார். அவர் திருப்திப்பட்டால் உங்களுக்கு பள்ளிக்கூடம் வரும்.” என்று கூறினார். ஊர் திரும்பிய கணபதியும் தோழர்களும் அதிகாரி எப்போது வருவார் என்று காத்திருந்தார்கள். தொடரும்.. மகாலிங்கம் பத்மநாபன் - ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன். https://vanakkamlondon.com/stories/2021/01/99913/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.