Jump to content

நிம்மதியா இருக்க என்ன செய்யணும்


Recommended Posts

  • Replies 100
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிரித்து வாழ வேண்டும் | தென்கச்சி சுவாமிநாதன் காமெடி பேச்சு

 

 

திருவாசகத்தில் ஒரு வாசகம் -29 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துன்பத்திலிருந்து விடுதலை தென்கச்சி சுவாமிநாதன் அசத்தல் காமெடி

 

திருவாசகத்தில் ஒரு வாசகம் -30 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான முடிவுகளை எடுப்பது எப்படி?

ஆழ்மனதை தொடர்பு கொள்வதற்கான பயிற்சி.

மனக்குழப்பங்களை நீக்குவதற்கான வழிமுறை.

சாமானிய மக்களுக்கு பயன்பெற பகிரவும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கால படிப்பு

திருவாசகத்தில் ஒரு வாசகம் -30

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலம் குறித்த பயத்தை வெல்ல சில வழிகளும்

 

திட்டமிடல்

திருவாசகத்தில் ஒரு வாசகம் -31

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புணர்வோடு வாழ்வது எப்படி?

🕯️துன்பங்களிலிருந்து விடுபட வழிமுறை.

🕯️விழிப்புணர்வோடு வாழ்வதற்கான யுக்திகள்.

🕯️சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்

 

 

தன் பலம் அறிந்து போராடு

திருவாசகத்தில் ஒரு வாசகம் -32 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நம்பிக்கையின் சக்தி

➡இது வரை வெளிப்படுத்தப்படாத அறிவியல் இரகசியங்கள்.

➡நம்பிக்கையை வளர்ப்பதற்கான சூட்சுமங்கள்.

➡நம்பிக்கையின் சக்தி மூலம் நிகழ்ந்த அற்புதங்கள்.

➡சாமானிய மக்களும் பயன் பெற பகிரவும்.

 

 

திருவாசகத்தில் ஒரு வாசகம் -33

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு ஆசை பட வேண்டும்?

திருவாசகத்தில் ஒரு வாசகம் -35

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் நிதானம் ரொம்ப அவசியம் : மனிதன் பட்டம்பூச்சியாக மாறுவது மாதிரி கனவு காண்பது போல் பட்டாம்பூச்சியும் மனிதனாக மாறுவது மாதிரி கனவு காணுமா?

 

திருவாசகத்தில் ஒரு வாசகம் -36

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னேற்றத்தை தடுக்கும் முடிவுகள்

 

கணவன் மனைவி - இயற்கையின் அதிசயம்

திருவாசகத்தில் ஒரு வாசகம் -37

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13227756_1753349358214747_7308549121224945909_o.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=9267fe&_nc_ohc=97qCKH-KYeIAX_NjFOV&_nc_ht=scontent.fmel3-1.fna&oh=dc3eee7ad113945e3341489dc4fad19e&oe=5FDBC91A

நம்மால் எப்போது டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும் தெரியுமா?

அடுத்தவர்கள் குறிக்கீடு இல்லாமல் எப்போது நாம் நம் மனதுக்கு பிடித்தமாதிரி வாழ்கிறோமோ அப்போது தான் டென்ஷன் இல்லாமல் இயல்பாக இருக்க முடியும்.
.

மாணவர்களுக்கு டென்ஷன் ஏன்?

மதிப்பெண்களை முன்னிறுத்தும் கல்விமுறை, ஏன் பிள்ளைகளை படிக்க அனுப்புகிறோம் என்று அறியாத பெற்றோர்கள் இருக்கும்வரை, ஏன் பாடம் கற்பிக்கிறோம் என்று அறியாத ஆசிரியர்கள் இருக்கும்வரை, ஏன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்கிறோம் என்று அறியாத மாணவர்கள் இருக்கும்வரை இந்த டென்ஷன், மன அழுத்தம் என்பது ஒரு தொடர்கதையே...

# முதலில் தனக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவருவதற்கும்,

# அறிவு மற்றும் திறமையை வளர்த்துக்கொள்வதற்க்கும்,

# கேள்வி ஞானத்தை வளர்த்துக்கொள்வதற்க்கும்,

# நன்நெறிகளை வளர்த்துக் கொள்வதற்க்கும்,

# சுயமாக சிந்திக்க கற்றுக்கொள்வதற்க்கும் தான்

கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டன என்பதை மாணவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

"எட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது" என்பதுபோல மதிப்பெண்களை மட்டும் வைத்துக்கொண்டு நம்மால் எதுவும் செய்ய இயலாது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
.

மாணவப் பருவத்தை கடந்த பின்னும் டென்ஷன் ஏன்?

தனக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அதில் சிறந்து விளங்குவதில் எந்த தடையும் இருக்காது. அதை விட்டுவிட்டு எந்த துறையில் அதிக வருமானம் வரும் என்று தேடும் போது தான் சிக்கலே ஏற்படுகிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கும் துறையில் பணியாற்றும்போது அவர்களால் முழு ஈடுபாட்டை செலுத்த முடியாமல் போய்விடும். நமக்கு பிடிக்காத வேலையே வருமானத்திற்காக தேர்ந்தெடுக்கும்போது அதை சரிவர செய்ய முடியாமல் போகிறது. பிறகென்ன டென்ஷன் தான்.

எனவே நமக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்தால் நமது முழுகவனத்தையும் ஈடுபாடையும் செலுத்தமுடியும். இவ்வாறு தேர்ந்தெடுக்கும் நபர்களே அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
.

பொதுவாக டென்ஷன் ஏன்?

ஆடம்பர வாழ்கை மோகம்:

ஆடம்பர வாழ்கையை தேர்ந்தெடுக்கும் போது நமது தூக்கத்தை இழந்து, நிம்மதியை இழந்து, பசியை கூட உணராமல் உடல்நலத்தையும் கெடுத்துக்கொண்டு வாழவேண்டிய ஒரு சூழல் ஏற்படும்.

எழிமையான வாழ்கையை தேர்ந்தெடுத்தால் இந்த டென்ஷன் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
.

சுயமாக முடிவுகளை எடுத்தல் Self Decision Making

சுயமாக சிந்திக்கக் தெரிந்தால் நாம் நம் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து நமக்கு பிடித்த வாழ்கையை தேர்ந்தெடுத்து அமைதியான நிம்மதியான வாழ்கையை வாழமுடியும்.

அப்படி சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் மட்டுமே அடுத்தவர்களிடம் தங்கள் முடிவை ஒப்படைத்து விடுவார்கள். அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்கலாம் தப்பில்லை ஆனால் முடிவை நல்லது கெட்டது பார்த்து, பிடித்து பிடிக்காதது பார்த்து நாம் தான் எடுக்க வேண்டும். அடுத்தவர்களது முடிவை ஏற்றுக்கொண்டுவிட்டு சதாகாலமும் அடுத்தவர்களை குறைகூறுவதால் எந்த பலனும் இல்லை.
.

பொதுநலமாக சிந்திக்கும் வழக்கம்

பொதுவாக சுயநலமாக சிந்திப்பவர்களுக்கு மட்டுமே இத்தகைய டென்ஷன் ஏற்படுகிறது.

எனவே பொதுநலமாக சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அதுநாள் வரையில் நீங்கள் சம்பாதித்தவற்றை கூட உங்களைப்போன்று சுயநலமாக சிந்திப்பவர்களிடம் இழக்க நேரிடும்.
.

ஏமாற்றம் Disappointment

நமது வாழ்கையில் ஏற்படும் ஏமாற்றங்களும் இந்த டென்ஷன்க்கு காரணமாக அமைகிறது. எப்போது ஏமாற்றம் ஏற்படுகிறது? எங்கே எதிர்பார்ப்புகள் அதிகமாகிறதோ அவை நிறைவேறாதபட்சத்தில் ஏமாற்றங்கள் ஏற்படுகிறது.

அதற்குத்தான் "கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - கீதாச்சாரம் கூறுகிறது.

எந்த இடத்தில் எதிர்பார்ப்பு இல்லையோ அந்த இடத்தில் ஏமாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
.

எனவே எப்போதும் சுயமாக சிந்தித்து உங்களுக்கு பிடித்த எழிமையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

https://www.facebook.com/நல்லதே-நினைப்போம்-நல்லதே-நடக்கட்டும்-1639711246245226/photos/சிந்தனைசெய்-மனமேநன்றி-தே-சௌந்தர்ராஜன்அவன்-சொன்னான்-இவன்-சொன்னான்-என்று-எதையும்-ந/1753349358214747

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13220500_1752990358250647_8099372112161159977_o.jpg?_nc_cat=104&ccb=2&_nc_sid=9267fe&_nc_ohc=iTOwjxUhtOQAX8v14F-&_nc_ht=scontent.fmel3-1.fna&oh=ed45da74b8694a47a5bbc4570399f338&oe=5FDE5200

அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் சித்து...
.

1991-92ம் வருடங்களில், ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவது வழக்கம். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின்போது அப்படி எனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, அன்னை தெரசாவைக் கட்டாயம் சந்திக்கவேண்டும்.. அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தேயாகவேண்டும்” என்று எனக்குள் ஓர் உந்துதல் ஏற்பட்டு, அவ்வாறே அவரது ஆசிரமத்துக்குச் சென்றேன். “Sisters of Charity” என்ற அந்த அலுவலகம் மிகச்சிறியதாய் இருந்தது. அங்கே இருந்த கன்னியாஸ்திரிகளிடம் ‘Where is Mother?’ என்று கேட்டேன். அதற்கு அங்கே இருந்த ஒரு கன்னியாஸ்திரி, ‘Mother is at the ‘Home for the dying’ என்றார். எனக்கு ‘Home for the dying’ என்று அவர் கூறியதன் பொருள் விளங்கவில்லை. அவர்கள் என்னை அந்த அலுவலகத்தின் பின்புறம் இருந்த ஒரு கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அந்தக் கட்டிடத்தினுள் தங்களது வாழ்வின் கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கும், மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

நான் உள்ளே நுழைந்தபோது அந்த கட்டிடத்தினுள்ளிருந்து ஒரு சகிக்க இயலாத நாற்றம் வந்துகொண்டிருந்தது. அழுகிக்கொண்டிருக்கும் மாமிசத்திலிருந்து வருவதுபோன்றதான அந்த நாற்றத்தின் நெடி குமட்டலை வரவைத்தது. அதைச் சகித்துக்கொண்டு அந்த சிறிய சந்தின் வழியாக நான் நடந்து சென்று ஒரு அறையை அடைந்தேன்.

அங்கேதான் முதன்முதலாக அன்னைத் தெரசாவைக் கண்டேன். தன் மரணப்படுக்கையிலிருந்த நீண்ட தலைமுடியைக் கொண்ட ஒரு மனிதன் அங்கே படுக்கவைக்கப்பட்டிருந்தான். அவனது உடலில் ஆடை எதுவும் காணப்படவில்லை. ஒரு துணி மட்டும் அவனது இடுப்பின் கீழே போர்த்தப்பட்டிருந்தது. அவன் உடல்முழுவதும் அழுகி, புண்களில் இருந்து சீழ் வடிந்துகொண்டிருந்தது. அன்னை, மிகுந்த அன்புடன் அந்தப் புண்களில் வழிந்துகொண்டிருந்த சீழை ஒரு துணியினால் துடைத்துக்கொண்டிருந்தார். அவன் மிகுந்த வேதனையில் துடித்துக்கொண்டிருந்தான். அவன் உடலிலிருந்து வந்த நாற்றம் என் குடலைப்புரட்டியது.

ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. அந்தக் கட்டிடத்தினுள் இருந்து நான் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தேன்… NavjotSingh Sidhu .. International Cricketer அங்கிருந்த சாக்கடையில் பெரும் குமட்டலுடன் வாந்தியெடுத்தான்.

பத்து நிமிடங்கள் கழித்து அன்னை தெரசா என்னிடம் வந்தார். புன்னகையுடன், ‘Yes My Son’ என்றார். ‘Mother I wanted to meet you’ என்றேன். ‘Come my son! Follow me!’ என்றவர் நடக்கத் துவங்கினார். அலுவலகம் வந்தோம். நான் மனம் நிறைய அகங்காரத்துடன் என் பாக்கெட்டிலிருந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்தேன். அங்கிருந்த மேஜையின் மேல் வைத்தேன். அவரை வணங்கி, ‘Mother.. You are an Instrument of God... I have come here to assist you. I would be really obliged if you accept this’ என்றேன். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறு, ‘Son.. I don’t need your money. I need your time. Can you spend time with these people? Can you give me some days where you can nurse them?’ என்றார். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

‘இவ்வுலகில் இப்படி உள்ளம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்களா? நான் கொடுக்கும் பணத்தை மறுத்து, என்னை வந்து இந்த நோயாளிகளுடன் நேரம் செலவிடச் சொல்கிறாரே?’ என்று உறைந்துபோனேன்.

அந்த நாற்றத்தினுள் இரண்டு நிமிடங்கள் என்னால் நிற்கக் கூட இயலவில்லை. நான் எங்கிருந்து அவர்களுக்கு சேவை செய்வது? That was a life changing story for me.

‘பணம் கொடுத்து யாருக்கும் உதவி செய்துவிடலாம்’ என்ற என் எண்ணம் அன்று சுக்குநூறாகிப்போனது. ’பணத்தை விட அன்பும், நாம் பிறர்க்கு செய்யும் சேவையும் மிக மிக உயர்ந்தவை’ என்று அன்னை தெரசா அன்று எனக்கு உணர்த்தினார்.

- நவ்ஜோத்சிங் சித்து.

 

https://www.facebook.com/நல்லதே-நினைப்போம்-நல்லதே-நடக்கட்டும்-1639711246245226/photos/சிந்தனைசெய்-மனமேநன்றி-தே-சௌந்தர்ராஜன்அவன்-சொன்னான்-இவன்-சொன்னான்-என்று-எதையும்-ந/1752990358250647

 

திருவாசகத்தில் ஒரு வாசகம் -38 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்!
13235276_1749324051950611_1512791942079451453_o.jpg?_nc_cat=106&ccb=2&_nc_sid=9267fe&_nc_ohc=UEo1PbDvyeUAX_DmgKV&_nc_ht=scontent.fmel3-1.fna&oh=3fbc73d7c4ac4fe274c4eb0343cfc40b&oe=5FDFA827

ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் "ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்."

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.

அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்றமுடியாது.

3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86,400 ரூபாய் வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்பட மாட்டாது.
.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே?

முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள் தானே?
.

உண்மையில் இது ஆட்டமில்லை - நிதர்சனமான உண்மை

ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக் கணக்கின் பெயர் - காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின்
அதியுன்னத பரிசாக 86,400 வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான். ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம்கணக்கில் 86,400 நொடிகள் வழங்கப்படுகிறது.

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை
முடக்க முடியும். அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உண்மையில் 86,400 வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக் கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.

எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக இருங்கள் - சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

 

https://www.facebook.com/நல்லதே-நினைப்போம்-நல்லதே-நடக்கட்டும்-1639711246245226/photos/சிந்தனைசெய்-மனமேநன்றி-தே-சௌந்தர்ராஜன்அவன்-சொன்னான்-இவன்-சொன்னான்-என்று-எதையும்-ந/1749324051950611

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13217080_1752318084984541_7344986103479830643_o.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=9267fe&_nc_ohc=bsMLml2Th1EAX8UOJeP&_nc_ht=scontent.fmel3-1.fna&oh=950f02fd2971d198c5f8c2ca85f03091&oe=5FE0BAD1

பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது!
.

ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது !

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன !

மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன !

ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன !

சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன !

தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன !

ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன !

இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் உன்னால் வாழ முடியாதோ?

அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்துபோய் வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ்கின்றாய் !
அதை ஏன் அழுதுகொண்டு வாழ்கின்றாய் !

வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை.
.

சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் !

இது உன் வாழ்க்கை... அதை ஆனந்தமாக வாழ். . .

https://www.facebook.com/நல்லதே-நினைப்போம்-நல்லதே-நடக்கட்டும்-1639711246245226/photos/சிந்தனைசெய்-மனமேநன்றி-தே-சௌந்தர்ராஜன்அவன்-சொன்னான்-இவன்-சொன்னான்-என்று-எதையும்-ந/1752318084984541

திருவாசகத்தில் ஒரு வாசகம் -39

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் மனைவி

 

திருவாசகத்தில் ஒரு வாசகம்-40

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்கள் ஏன் வாலை ஆட்டுகின்றன ? 

 

திருவாசகத்தில் ஒரு வாசகம் 42

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய் முகங்களை கண்டறியுங்கள் வெற்றி நிச்சயம்

திருவாசகத்தில் ஒரு வாசகம் - 43

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நம்மை இயக்கும் இயக்குனர்

அன்னையின் கருவில் கலையாமல்

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்மனப் பதிவுகளை மாற்றுவது எப்படி? (Reprogramming your Subconscious Mind)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.