Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

S.P.B. பாடல்கள் மட்டும்


Recommended Posts

  • Replies 98
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அது யார் அழுகையோ ,  இசை த‌ட்டின் பெய‌ர் ( கார்த்திகை27 ) ஸ்பி ஜ‌யா பாடிய‌ தாய‌க‌ பாட‌ல் , இந்தப்‌ பாட‌ல் 2000ம் ஆண்டு வெளி வ‌ந்த‌து 🙏    

S P பாலசுப்ரமணியம் |அவர்களால் பாடப்பட்ட |தமிழீழம் பாடல்.. S P பாலசுப்ரமணியம் அவர்கள் விவைவாக பூரண குணமடைந்து வரவேண்டும் என்று வேண்டுகின்றோம்.❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்

டிங் டாங் டாங் டிங் டாங்
டிங் டாங் டாங் டிங் டாங்

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங் டாங்
கண்ணில் மின்னல் டிங் டாங்
ஆடல் பாடல் டிங் டாங்
அள்ளும் துள்ளும் டிங் டாங்
(இரண்டும்..)

காதலில்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை
வானமில்லா பூமிதன்னை யாரும் பார்த்ததில்லை
தேகமெங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை
நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை
உந்தன் கை வந்து தொட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அன்பு முத்தங்கள் இட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்
(இரண்டும்..)

காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்
தோளில் நீயும் சாயும்போதும் வானை மண்ணில் பார்த்தேன்
நீயும் நானும் சேறும்போது கோடையும் மார்கழி
வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி
எங்கு தொட்டாலும் இன்ப நாதம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
சொர்க்கம் தங்கும் டிங் டாங்
உந்தன் சேவை எந்தன் தேவை
(இரண்டும்..)
 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்


நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்


கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
இந்தப் பாடலை ரசிக்கும் உங்களுக்கு வேண்டுமானால் இதில் வரும் இசையும் வரிகளும் பாடல்களும் பிடிக்கலாம் ஆனால் இந்தப் பாடலில் நன்றாக கேட்பவர்களுக்கு இதில் ஒரு உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது அவர்களுக்கு மட்டுமே தெரியும் ஆம் இதில் ஒரு உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது நான் உணருகிறேன் இந்தப் பாடலும் ஓடும் பொழுது அதை video இருந்தாலும் சரி audio இருந்தாலும் சரி அந்த பாடலை கேட்கும் போது இதில் உள்ள ஓர் உயிரோட்டம் இருக்கும் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் இதை நன்றாக கேட்டு ரசிக்கும் சில உள்ளங்களுக்கும் தெரியும் இதில் உள்ளே உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்று என்றும் அன்புடன் லிங்கம்.
 

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானேபண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
கதை என்ன கூறு பூவும் நானும் வேறு

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்....

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்......

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
 சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
 அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
 நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
 அவள் வான்மேகம் காணாத பால்நிலா
 இந்த பூலோகம் பாராத தேன்நிலா
 என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
 சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
 அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
 நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ


 தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
 பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
 தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை
 முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
 வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
 அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
 புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்

 என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
 சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
 அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
 நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
 அவள் வான்மேகம் காணாத பால்நிலா
 இந்த பூலோகம் பாராத தேன்நிலா

 ஆ..ஆ...ஆ...ஆ
 கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
 முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
 ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
 நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
 அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
 உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
 இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

 என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
 சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
 அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
 நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
 அவள் வான்மேகம் காணாத பால்நிலா
 இந்த பூலோகம் பாராத தேன்நிலா
 என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
 சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
 அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
 நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ… அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே ஏ ...
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்பத்தேனும் ஊறும்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
(இசை)
மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன் மயில் ஆடுது வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்
ஸகரிம கபமத பநிதஸ நிரிநி
ஸ்வரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
(இசை)
மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னி
ஆற்றில் பொன்போல் அலையாட
காலைப் பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
காலைப் பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்
ஸகரிம கபமத பநிதஸ நிரிநி
வானவில் ஓவியம்….
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னைப் பாடுவேன்
மனதில் இன்பத்தேனும் ஊறும்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட..

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

பாலாடை போலாடும் பாப்பா எப்பொதும் நான் சொன்னா கேப்பா
ராஜாவை பாக்காமல் ரோஜா ஏமாந்து போனாளே லேசா
நான் நாளை வச்சு தேதி வச்சு ஊரு விட்டு ஊரு வந்து
நீயின்றி போவேனோ சம்போ
நான் மூணு மெத்தை வீடு கட்டி மாடி மேல ஒன்ன வெச்சு
பாக்காமல் போவேனோ சம்போ
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

அன்பான உன் பேச்சு ராகம் நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல் இதிலென்ன இனிமேலும் ஊடல்
அந்த தேவதைக்கு நானும் சொந்தம் தேவனுக்கு நீயும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை
நானொன்று நீயொன்றுதாம்மா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் பாடலும் SP பாலசுப்ரமணியமும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பாடல் ஒலிப்பேழை
தயாரிப்பு பொறுப்பை என்னிடம் விடுவதாக தமிழீழத் தேசியத் தொலைகாட்சி பொறுப்பாளர் போராளி சேரலாதன் சொன்னபோது, “சேரா, நான் பாடல் எழுதுகின்றவனும் இல்லை, இசையமைக்கின்றவனும் இல்லை, பாடுகின்றவனும் இல்லை. எப்படி அதை நான் செய்யமுடியும்” என்றேன். “அதனால் தான் அண்ணா, உங்களிடம் அப்பொறுப்பைக் கொடுக்கின்றோம்” என்றார்.

முதல் ஒலிப்பேழை – கடற்புலிகளுக்காக செய்தோம். கவிஞர் காசி ஆனந்தன் மூன்று பாடல்கள எழுதினார். புலவர் புலமைப்பித்தன் அவர்களை சந்தித்து, பல ஆண்டுகாலம் இயக்கத்துடன் அறுபட்டிருந்த தொடர்பை புதுப்பித்தேன். அவர் மூன்று பாடல்களை எழுதினார். (1. இது கடற்புலிப்படை, 2. மனித சுனாமி தான்.. 3. நாம் நீரிலும் வெடிக்கும் எரிமலைகள்). கவிஞர் புதுவை இரத்தினதுரை, கு. வீரா., போன்றவர்களின் பாடல்களும் இருந்தன.

பாடல்கள் அனைத்திற்கும் அற்புதமான எழுச்சி மிகுந்த இசையை அமைத்திருந்தார் இசையமைப்பாளர் தேவேந்திரன். பாடல்களை, SP பாலசுப்ரமணியம், S.M. சுரேந்தர், திப்பு, கார்த்திக், T.L. மகாராசன், மனோ, சுஜாதா, கல்பனா, மாணிக்க விநாயகம், சத்தியன், ஹரீஸ் ராகவேந்திரா போன்ற தமிழ்த்திரையுலகின் புகழ்பெற்ற பாடகர்களை பாடவைத்தேன்.

“இத்தொகுப்பில் S.P பாலசுப்ரமணியம் அவர்களை எப்படியாவது பாடவைத்து விடுங்கள் அண்ணா” என்பது சேரலாதனின் வேண்டுகோள்.

அதேபோல் அதற்கான முயற்சி எடுத்து கு. வீராவின் பாடலான ‘உலக மனிதம் தலைகள் நிமிரும் விடுதலைப் போரின் வீரத்திலே’ என்ற பாடலை பாடவைத்தேன். அத்தொகுப்பு கடற்புலிகளின் வீரத்தையும், தியாகத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. "எங்களின் கடல்" என்றத் தலைப்பில் வெளிவந்த அத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றதாக சேரலாதன் கூறினார்.

(விரைவில் வரவிருக்கும் நூலில் சேரலாதன் குறித்த கட்டுரையில்...)

Image may contain: 2 people, people standing
 
ஓவியர் புகழேந்தி அவர்களின் முகநூல் பதிவில் இருந்து..
 
SPB யின் இந்த ஒலிப்பேழைக்கான பாடலை கீழே இணைப்பில் கேட்கலாம்..
 
  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

வெள்ளிச் சலங்கைகள கொண்ட  கலைமகள் 
வந்து ஆடும் காலம் இது.....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பொத்தி வச்ச மல்லிகை மெட்டு  அண்ணாவும் தங்கையும் பாடியது

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

மூச்சு விடாமல் பாடியதாக சொல்லப்படும்  "மண்ணில் இந்தக் காதல் இன்றி "

  • Like 1
Link to post
Share on other sites
  • 2 weeks later...

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விவசாயிகள் போராட்டம் இன்று 7-வது நாள்: மத்திய அரசுடன் நாளை அடுத்த சுற்று பேச்சு   புதுடெல்லி,  மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு 3 வேளாண் சட்டங்களை கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது. இந்த சட்டங்களால் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் முறை ஒழிக்கப்பட்டு விடும்; நாட்டின் முதுகெலும்பான விவசாயமானது, பெரு நிறுவனங்கள் மயமாக மாறி விடும் என்று விவசாயிகள் பயப்படுகின்றனர்.  ஆனால் இந்த சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மையைத்தான் செய்யும், புதிய வாய்ப்புகளையும், உரிமைகளையும் தரும், தொழில்நுட்பங்களை கொண்டு வரும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும், இந்த 3 சட்டங்களையும் திரும்பப்பெற்றாக வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக அமைந்துள்ளது. இதை வலியுறுத்தி அவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என வட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர்ந்து 6-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து மூத்த மந்திரிகள் அமித் ஷா (உள்துறை), ராஜ்நாத் சிங் (ராணுவம்) நரேந்திரசிங் தோமர் (விவசாயம்), பியுஷ் கோயல் (ரெயில்வே, வர்த்தகம், தொழில்), பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் நேற்று காலை நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து டெல்லி விஞ்ஞான பவனில் பிற்பகலில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. உடனே அந்த வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி பிற்பகலில் 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்து நேரடி பேச்சு வார்த்தை நடத்தியது. இதில், விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியுஷ்கோயல், வர்த்தக ராஜாங்க மந்திரியும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த எம்.பி.யுமான சோம் பர்காஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 35 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள், பேச்சுவார்த்தையின்போது 3 விவசாய சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஒருமனதாக வலியுறுத்தி கூறினர். 3 விவசாய சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கு 5 உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறுகையில், “நாங்கள் ஒரு சிறு குழுவை அமைக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் அவர்களோ, அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர். அவர்கள் போராட்டத்தை முடிக்க வேண்டும், பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என விரும்புகிறோம். ஆனால் இது விவசாயிகளை பொறுத்தது” என குறிப்பிட்டார். 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், இதுகுறித்து விவசாய அமைப்புகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் 3-ந் தேதி (நாளை) அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். எனவே நாளை அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையின் போது, புதிய வேளாண் சட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பிரச்சினைகளை கண்டறிந்து, அதுகுறித்து அரசின் பரிசீலனைக்கு  இன்று தெரிவிக்கும்படி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த பிரச்சினைகள் தொடர்பாக நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/02064517/No-Headway-In-Talks-With-Farmers-Next-Meeting-On-Thursday.vpf
    • இலங்கையை கடக்கவுள்ள புயல் – பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை    12 Views தென் கிழக்கு வங்காள விரிகுடாவில்  உருவாகியுள்ள ஆழமான தாழமுக்கமானது ஒரு சூறாவளியாக மாறி பெரும்பாலும் இலங்கையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் மழை மற்றும் காற்று  அளவில் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்காள விரிகுடாவில்  உருவான தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இத் தொகுதியானது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சூறாவளி பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை இன்று (புதன்கிழமை) மாலையில் அல்லது இரவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்சூடும் என்பதோடு, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் சூடும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்” என்று தெரிவித்துள்ளது. மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.   https://www.ilakku.org/இலங்கையை-கடக்கவுள்ள-புயல/
    • கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை    18 Views கிழக்கு மாகாணத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 257ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பிரதேசத்தில் 32பேரும் அட்டாளைச்சேனையில் 06பேரும் ஆலையடிவேப்பு பகுதியில் ஒருவரும் வாழைச்சேனை பகுதியில் 04பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்  கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடனும் பேலிகொட மீன்சந்தையுடனும் தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகொண்டவர்களே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 138பேர்கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 92பேரும் அம்பாறை சுகாதார பிரிவில் 11பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 16பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்ட 109பேர் இதுவரையில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பான தகவல்களை பொதுச்சுகாதார பிரிவினருக்கு வழங்குமாறும் கொழும்பு உட்பட பிற இடங்களில் இருந்து வருகைதருவோர் தொடர்பிலும் பொதுமக்கள் விழிப்பாக இருந்து சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு தகவல்களை வழங்கவேண்டும்” என்றார்.   https://www.ilakku.org/கிழக்கில்-அதிகரிக்கும்-க/
    • மஹர சிறைச்சாலை மோதல்- பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு    18 Views மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் நேற்று உயிரிழந்தனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்து ராகமை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரே இவ்வாறு உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 107 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   https://www.ilakku.org/மஹர-சிறைச்சாலை-மோதல்களில/
    • இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகள் நீக்கம்- ஃபேஸ்புக் விளக்கம்  4 Views தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பயனர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.  ஃபேஸ்புக் மீதான பயனர்களின் குற்றச்சாட்டு மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகள் இயக்க தலைவரான பிரபாகரனின் புகைப்படத்துடன் இடப்பட்ட பதிவுகள், அவரை நினைவுகூரும் வகையில் எழுதப்பட்ட பதிவுகள் உள்ளிட்டவற்றையும், இலங்கை உள்நாட்டுப் போர் சார்ந்த சில பதிவுகளையும் ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து நீக்கி வருவதுடன், அவற்றை பதிவிட்டவர்கள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்த நிறுவனம் எடுத்து வருவதாக சில ஆண்டுகளாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டதை அடுத்து, பலரும் பிரபாகரன் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகளை பகிர்ந்தபோது இதே அணுகுமுறையை ஃபேஸ்புக் நிறுவனம் கையாண்டதாக கூறப்படுகிறது. உதாரணமாக, கனடாவை சேர்ந்த நீதன் சண் என்பவர், “சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஈழத்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு மரியாதை செலுத்தும் எனது இடுகையை பேஸ்புக் நீக்கியுள்ளது. மேலும், நான் அடுத்த 30 நாட்களுக்கு ஃபேஸ்புக்கில் நேரலை அல்லது விளம்பரம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. தங்களது நிறுவனத்தின் விதிமுறைகளை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கையை ஃபேஸ்புக் எடுத்துள்ளது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மற்ற விவகாரங்களில் ஃபேஸ்புக்கின் நிலைப்பாடு குறித்து தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ள அவர், இதுபோன்ற தணிக்கைகள் தனது கருத்துரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று தூண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, Jæs J Wiki என்ற பெயரில் செயல்படும் ஃபேஸ்புக் பயனர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரபாகரனின் பிறந்த தினத்தன்று அவரது புகைப்படத்தை பகிர்பவர்கள் மீது ஃபேஸ்புக் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. யாராவது பிரபாகரனின் புகைப்படத்தையோ அல்லது அவரது சகாக்களின் புகைப்படத்தையோ பகிர்ந்தால் அதை கண்டு கலக்கமடையும் ஃபேஸ்புக், அவர்களின் கணக்குகளை தற்காலிகமாக தடை செய்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார். பிரபாகரனுடன் அரசியல்/ கருத்தியல் சார்ந்து வேறுபாடுகள் இருந்தாலும், இதுபோன்று பதிவுகளை ஃபேஸ்புக் தணிக்கை செய்வதும், பயனர்கள் எதை பகிர வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதும் பாசிசத்தின் தீவிர சமிக்ஞை என்று அவர் மேலும் தனது பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார். இதே போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அதிருப்தியை சமீபத்திலும், கடந்த காலங்களிலும் பலரும் ஃபேஸ்புக்கில் வெளிப்படுத்தி வருவதை காண முடிகிறது. இந்நிலையில், சர்ச்சையாகி வரும் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி தமிழுக்கு  ஃபேஸ்புக் நிறுவனம் பதில் வழங்கியுள்ளது. பிரபாகரன் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தடுப்பது ஏன்? விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்  பிரபாகரன் சார்ந்த உள்ளடக்கங்களை பதிவிட்டதற்காக தனிப்பட்ட நபர்களின் ஃபேஸ்புக் பதிவுகள், கணக்குகள் மட்டுமின்றி சில ஃபேஸ்புக் பக்கங்களும் இதே போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக பிபிசி தமிழ் நேரடியாக முன்வைத்த கேள்விகளுக்கு பொதுப்படையான பதிலை வழங்கிய ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர், “மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும், முக்கியமான கலாசார, சமூக மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் ஃபேஸ்புக்கிற்கு வருவதை நாங்கள் மதிக்கிறோம். எனினும், வெளிப்படையாக வன்முறையான திட்டத்தை அறிவித்த அல்லது வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள், தலைவர்கள் அல்லது தனிநபர்களை பாராட்டும் அல்லது ஆதரிக்கும் பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கும்” என்று தெரிவித்துள்ளார். வெறுப்பையோ அல்லது வன்முறையையோ பரப்பும் வகையில் தங்கள் தளம் பயன்படுத்தப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. எனினும், ஒரு குறிப்பிட்ட இயக்கம் அல்லது தனிப்பட்ட நபர் வன்முறைக்கு வித்திட்டார் என்பதை எதனடிப்படையில் ஃபேஸ்புக் முடிவு செய்கிறது என்ற கேள்விக்கு, “வெறுப்பை தூண்டும் அமைப்புகளை பட்டியலிடுவதற்கு நாங்கள் ஒரு விரிவான செயல்முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி, இந்த செயல்முறையைச் செம்மைப்படுத்த உலகெங்கிலும் உள்ள பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்” என்று ஃபேஸ்புக் பதிலளித்துள்ளது. உதாரணமாக, இனம், மத சார்பு, தேசியம், பாலினம், பாலியல் நாட்டம், கடுமையான நோய் அல்லது இயலாமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுத்த அல்லது நேரடியாக வன்முறையில் ஈடுபட்ட அமைப்புகள் மற்றும் அவற்றின் தலைவர்களை வெறுப்புணர்வை தூண்டும் அல்லது ஆபத்தான இயக்கங்கள்/ தலைவர்களாக வகைப்படுத்துவதாக ஃபேஸ்புக் மேலும் விளக்கம் அளித்துள்ளது. “ஆபத்தான அமைப்புகளை தடைசெய்யும்போது, அவற்றின் இருப்பை அகற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும், எங்கள் கண்டறிதல் முறைகளிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” வெறுப்புணர்வை தூண்டும் திட்டமிடப்பட்ட செயலுக்கு எதிரான ஃபேஸ்புக்கின் கொள்கையை மீறியதற்காக நீக்கப்படும் பெரும்பாலான உள்ளடக்கங்களுக்கு தாங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் உள்ளடக்க மதிப்பாய்வே காரணம் என்றும், ஆனால் சில சந்தர்ப்பங்களில், ஒரு குழுவை சேர்ந்த பலரை ஒரே நேரத்தில் நீக்குவதற்கான பணியிலும் ஃபேஸ்புக் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஃபேஸ்புக் பயனர்களின் பதிவுகள், ஃபேஸ்புக்கின் ஆபத்தான அமைப்புகள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருவதால் அவற்றை நீக்கியது சரியே என ஃபேஸ்புக் உறுதியாகக் கூறுகிறது. எனினும், ஃபேஸ்புக்கில் பயனர்கள் பகிர்வதற்கு அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்கள், தலைவர்கள் மற்றும் விவகாரங்களின் ஒட்டுமொத்த பட்டியலை அளிக்க பிபிசி விடுத்த வேண்டுகோளுக்கு அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை. நன்றி – பிபிசி தமிழ்   https://www.ilakku.org/இலங்கை-உள்நாட்டுப்-போர்/  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.