Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நன்று ரெண்டு: எத்தியோப்பியா கொண்டாடும் தமிழர்; நாட்டுக்கே வழிகாட்டும் கம்பூர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நன்று ரெண்டு: எத்தியோப்பியா கொண்டாடும் தமிழர்; நாட்டுக்கே வழிகாட்டும் கம்பூர்

கண்ணன் அம்பலம்

ஓர் அற்புதமான 'பயோபிக்' சினிமா போல விரியும் டாக்டர் கண்ணன் அம்பலத்தின் அனுபவங்கள் மற்றும் கம்பூர் ஊராட்சியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள்...

டாக்டர் கண்ணன் அம்பலம் எத்தியோப்பிய நாட்டிலிருக்கும் வொல்லேகா பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத்துறைப் பேராசிரியர். 48 பாலங்கள், 28 இடங்களில் நல்ல குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இவரை அந்நாட்டின் ஊடகங்கள் கொண்டாடி மகிழ்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் எத்தியோப்பியாவின் பென்னி குயிக் இவர்!

"மதுரை அலங்காநல்லூர் பக்கத்துல பொந்துகம்பட்டிதான் என்னோட கிராமம். கஷ்டப்பட்ட விவசாயக்குடும்பம். குடும்பமா களை எடுக்குறது நாத்து நடறதுன்னு இளம்பிராயம் பச்சைய வாசனையோடு கழிந்தது. படிக்க வைக்க முடியாத அளவுக்கு வறுமையான சூழல்ல பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளில விடுதியில தங்கிப் படிச்சேன். ப்ளஸ் டூல முதல் மாணவனா வந்தேன். வயல் வேலைக்குப் போன என்னை என் பள்ளித் தலைமை ஆசிரியர் வீட்டுல பேசி மேலே படிக்கச் சொன்னார். மதுரை தியாகராசர் கல்லூரியில பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி சேர்ந்தேன்...

...எத்தியோப்பியப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருக்கான அறிவிப்பைப் பத்திரிகை விளம்பரத்தில் பார்த்தேன். உடனே அப்ளைசெய்தேன். வீட்டில் 'ஆப்பிரிக்கா வெல்லாம் போகணுமா?' எனக் கேட்டார்கள். அங்கிருந்த ஒரு பேராசிரியருக்குக் கடிதம் எழுதிக்கேட்டேன். "தயவு செய்து இங்கிட்டுலாம் வந்திடாதே... கஷ்டப்படுவே!" என்று பயமுறுத்தியிருந்தார். என் வயதின் வேகம் எனக்கு எத்தியோப்பியா போயே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது!

டாக்டர் கண்ணன் அம்பலம் உருவாக்கிய பாலம்
 
டாக்டர் கண்ணன் அம்பலம் உருவாக்கிய பாலம்

நான் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்த புதிதில் வொல்லேகா பல்கலைக்கழகத்தின் பிரசிடெண்ட் (அந்த ஊர் துணை வேந்தர்) எங்களிடம் பேசினார். 'பல்கலைக் கழகம் ஆரம்பித்து ரெண்டு வருஷம்தான் ஆகிறது. இது ஒரு குழந்தைபோல... அதை வளர்த்தெடுப்பது உங்கள் கையில்தான் இருக்கு' என அவர் சொன்னது நெகிழ வைத்துவிட்டது. கல்வியறிவுல பின்தங்கிய அந்தப் பகுதி மக்கள் பல வருஷமா அரசாங்கத்துக்கிட்ட போராடித்தான் அந்தப் பல்கலைக்கழகத்தைக் கொண்டு வந்திருக்காங்க. இதெல்லாம் சேர்ந்து இனி நாம இங்கேதான் இருக்கணும்னு முடிவெடித்தேன்!"

நாட்டுக்கே வழிகாட்டும் கம்பூர் ஊராட்சி!

"எல்லா கிராமங்களிலும் இருக்கிற பிரச்னைகள்தான் சார்... ஆனா, ஆளாளுக்கு பிரச்னை, பிரச்னைன்னு பேசினா எல்லாம் சரியாகிடுமா? நாமளே தீர்வை நோக்கிப் போகணும்னு முடிவு செஞ்சோம். எல்லாத்துக்கும் அடிப்படை, ஊராட்சி நிர்வாகம்தான். நாடாளுமன்றத்துக்கு என்ன அதிகாரமோ அதே அளவுக்கு ஊராட்சிக்கும் அதிகாரமிருக்குன்னு சொல்வாங்க. உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் மக்களும் பக்கபலமா இருந்தாங்க. ஒரு கட்டத்துல எங்க கிராமத்துப் பேரைச் சொன்னா அதிகாரிகள் இயல்பாவே அவங்க வேலையைச் சரியா செஞ்சிடுற நிலை வந்திருச்சு...'' உற்சாகமாக நம்மை வரவேற்றபடி பேசுகிறார் செல்வராஜ். சென்னையில் கூட்டுறவுத்துறையில் பணி கிடைத்தும் சேராமல், இளைஞர் அமைப்பை ஒருங்கிணைத்து வழிநடத்துகிறார் இவர்.

வெற்று அரட்டைகள், வீண் விவாதங்கள் என சமூக ஊடகங்கள் நிரம்பிவழியும் காலமிது. அதே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தித் தங்கள் ஊராட்சியை முன்னுதாரண ஊராட்சியாக மாற்றிச் சாதித்திருக்கிறார்கள் கம்பூர் ஊராட்சி இளைஞர்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இயங்கும் ராஜீவ்காந்தி அறக்கட்டளை, முன்மாதிரி மக்கள் வாழும் ஊராட்சியாக இதை அங்கீகரித்துப் பாராட்டியுள்ளது.

கம்பூர்
 
கம்பூர்


ஊரில் அத்தனை குடும்பங்களையும் உள்ளடக்கி வாட்ஸப் குழுக்கள் இயங்குகின்றன. அதில் அரசு அறிவிப்புகள், திட்டங்கள், வேலை வாய்ப்புகள், கல்வி சார்ந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். மக்கள் தங்கள் பிரச்னைகளையும் அதில் பேசுகிறார்கள். பிரச்னைகளை சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்று உடனடியாகத் தீர்வையும் காண்கிறார்கள்.

மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில், கொட்டாம்பட்டியை ஒட்டியிருக்கிறது கம்பூர் ஊராட்சி. சுமார் பத்தாயிரம் பேர் வசிக்கும் இந்த ஊராட்சியில் ஒன்பது கிராமங்கள் அடக்கம். வேளாண்மைதான் முதன்மைத் தொழில். சிலர் குவாரி வேலை, கூலி வேலைகளுக்குச் செல்கிறார்கள். சில குடும்பங்கள் வெளிநாடுகளில் வேலைசெய்யும் பிள்ளைகளை நம்பி வாழ்கின்றன. பெரும்பாலானோர் முதல் தலைமுறையாக இப்போதுதான் பட்டப்படிப்பை எட்டிப் பிடித்திருக்கிறார்கள்.

 

https://www.vikatan.com/news/general-news/dual-feel-good-stories-doctor-kannan-ambalam-and-the-changes-in-kambur-village

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ..💐

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • I've been thinkin' 'bout you Thinking 'bout when the sunset is to bless another day Did I dream about you? Cause your the first thing that comes to my mind when I'm awake Boy you had me from the beginning Can't deny we fell in love like shooting stars We were young, we were reckless Champagne toast on us for breakfast We were Gods, we were restless And we both knew that we were blessed with... Good love Boy you got me caught in this good love I really believe that with you, we could, take off, to the, end of, the world Really really found that good love Boy you got me caught in this good love I really believe that with you, I feel, we could, take off, to the, end of, the world, cause we found (Good love, good, good) Oh my god, boy got me feeling like a star In the coupe with the top down bumping Good Love, oh my god  They don't really want it with these bars Show off, double up I'm aligned with the eye Heart signs in the air, make ’em dance to this It's the queen in the house, I'm advanced for this For your lighthouse, Imma buy some land for this Lay sand, plant trees, got a plan for this, ya heard Boy you had me from the beginning yeah Can’t deny we fell in love like shooting stars We were young, we were gifted Can't hold us down, we stay uplifted We were Gods, they can't mess with And we both knew that we were blessed with... Good love Boy you got me caught in this good love I really believed that with you, we could, take off, to the, end of, the world Really really found that good love Boy you got me caught in this good love I really believe that with you, I feel, we could, take off, to the, end of,the world , cause we found (Good love, good, good) Boy you got me caught in this good love, good love, good love With you, I feel, we could take off... good love, good love, good love with you, I feel, we could take off.... Fell in love with you (repeat) Can we last forever...  
  • ஒற்றுமையற்ற தமிழ் தேசியம் | கைதாகிறாரா பாரிசாலன்  
  • மருத்துவப் படிப்பு: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % ஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை...   சென்னை தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். உள்பட மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பிறப்பித்தார். கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சுமார் ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், உள்ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசின் அரசாணை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், மசோதாவுக்கு தமிழக ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.  இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 303 மாணவ, மாணவிகள் மருத்துவம் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச் 21: நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். ஏப்ரல் 14: உள் ஒதுக்கீடு குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது. ஜூன் 8: நீதிபதி கலையரசன் தனது அறிக்கையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேரில் அளித்தார். ஜூன் 15: ஜூலை 14: நீதிபதி கலையரசன் அளித்த பரிந்துரைகள் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டங்களில் ஆலோசனை நடத்தப்பட்டது. செப்டம்பர் 15: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அக்டோபர் 5: உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநருடன் முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் சந்தித்தனர். அக்டோபர் 20 உள் ஒதுக்கீடு கோரி ஆளுநருடன் அமைச்சா்கள் அடங்கிய குழு சந்தித்தது. அக்டோபர் 21: உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அக்டோபர் 22 - அவகாசம் தேவை என மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநா் பதில் கடிதம்அனுப்பினார். அக்டோபர் 29: சட்டத்தின் மூலமாக அல்லாமல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியீடு. அக்டோபர் 30 உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.  https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/30141557/Tamil-Nadu-Governor-Banwarilal-Purohit-on-Friday-granted.vpf  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.