Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கிழக்கு மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போதல் அல்ல – நிலாந்தன்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போதல் அல்ல – நிலாந்தன்

August 23, 2020

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%
 
“மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை நடக்கப் போவது தேர்தல் அல்ல யாழ் மேலாதிக்கத்திற்கும் கிழக்கின் எழுச்சிக்குமான பலப்பரீட்சை”

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியவர் எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம். கிழக்கில் பிள்ளையானின் ஆலோசகர் அல்லது பிள்ளையானுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் ஒருவர். பிரான்சுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தாய் நிலத்தின் அரசியலில் அதிகமாக ஈடுபடும் ஒருவர்.

தேர்தலுக்கு முதல் நாள் மேற்படி குறிப்பை முகநூலில் எழுதினார். இங்கு அவர் யாழ் மேலாதிக்கம் என்று கருதுவது எதனை?கூட்டமைப்பையா? அல்லது மாற்று அணியையா? அல்லது  ஒட்டுமொத்த தமிழ் தேசியவாதத்தையா?

கூட்டமைப்பை அவர் யாழ் மேலாதிக்க வாதத்தின் பிரதிநிதியாக பார்ப்பதாக இருந்தால் கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் கிழக்கை சேர்ந்த சம்பந்தரே என்பதனை ஏன் கவனத்தில் எடுக்கவில்லை? பொதுவாக ஈழத் தமிழ்த் தலைமைத்துவம் எனப்படுவது யாழ் மையமானது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் இதுதொடர்பாக குற்றச்சாட்டுக்கள் இருந்தன. எனினும் கடந்த 11 ஆண்டுகளாக ஒரு நூதனமான புறநடையாக சம்பந்தர் தலைவராக இருந்து வருகிறார். அது ஆயுதப் போராட்டத்தின் விளைவுதான். இவ்வாறு ஒரு கிழக்குத் தலைவரே தமிழ் பிரதிநிதித்துவத்தின் தலைவராக இருக்கும் ஒரு பின்னணியில் யாழ் மேலாதிக்கம் என்று பிள்ளையானின் ஆலோசகர் கருதுவது எதனை?

அல்லது மாற்று அணியை அவர் அவ்வாறு கூறுகிறாரா? இல்லையே அவர்கள்  யாழ்ப்பாணத்தில் தான் பலமாக இருக்கிறார்கள். வன்னியில்கூட அவர்கள் கடந்த தேர்தலில் ஆசனம் எதையும் வெல்லவில்லை. இப்படிப் பார்த்தால் கிழக்கில் பலமற்ற மாற்று அணி யாழ் மேலாதிக்க வாதத்தை கிழக்கின் மீது திணிப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

அப்படியும் இல்லை என்றால் ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தையும் யாழ் மேலாதிக்க சிந்தனையாக அவர் கருத்துகிறாரா?

இக்கேள்விகளுக்கான பதிலை அவர்தான் கூற வேண்டும். ஆனால் பிள்ளையானின் எழுச்சியை கிழக்கின் எழுச்சியாக வர்ணித்து அதை யாழ் மேலாதிக்க வாதத்துக்கு எதிராகத் திருப்புவதை எப்படி விளங்கிக் கொள்வது?

கிழக்கில் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் கருணாவுக்கும் இயக்கத் தலைமைக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்ட பொழுது அது தொடர்பான விசாரணைகளுக்கு என்று ஒரு மூத்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கிழக்கிற்கு அனுப்பப்பட்டார். இவர் கிழக்கில் ஏற்கெனவே பொறுப்புகளை வகித்தவர். தனது விஜயத்தின் முடிவில் இவர் தன்னோடு பேசிய ஒரு ஊடகவியலாளரிடம் பின்வருமாறு சொன்னார் “ஒரு கருணா இல்லை 100 கருணாக்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் சமாதான காலத்தில் நாங்கள் கிழக்கை போதிய அளவுக்கு அபிவிருத்தி செய்யவில்லை. வடக்கில் சேரன் சோழன் பாண்டியன் என்று கடைகளை போட்ட அளவிற்கு கிழக்கை நாங்கள் கவனிக்கவில்லை. கிழக்கில் போதிய அளவுக்கு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவில்லை” என்று. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு 11 ஆண்டுகளின் பின்னரும்  கிழக்கில் நிலைமை அப்படித்தான் இருக்கிறதா?

அவ்வாறு கிழக்கு அபிவிருத்தி செய்யப்படாத ஒரு பின்னணியில் அபிவிருத்தியை தமது அரசியல் இலக்காகக் கொண்டு களத்தில் இறங்கும் கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றனவா? நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அதைத்தான் நிரூபிக்கின்றனவா?

கிழக்கின் மீது வடக்கின் மேலாதிக்கத்தை அது எந்த வடிவத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் இக்கட்டுரை எதிர்க்கின்றது. ஆனால் தமிழ் தேசியம் எனப்படுவது ஒரு வடக்கு மைய சிந்தனை என்பதனையும் அது வடக்கு மையத்திலிருந்து தான் கிழக்கைப் பார்க்கிறது என்பதையும் இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை.

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை திரள் ஆக்குவது. பொதுவாக ஒரு மக்கள் கூட்டத்தை பின்வரும் அம்சங்கள் திரள் ஆக்குவதுண்டு. இனம், மொழி, நிலம், பொதுப் பண்பாடு, பொதுப் பொருளாதாரம் இவைதவிர அடக்குமுறை போன்றனவும் ஒரு மக்கள் கூட்டத்தை திரள் ஆக்கும்.

இந்த அடிப்படையில் பார்த்தால் நிலம் அதாவது தாயகம் இது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரள் ஆக்கும் அடிப்படை அம்சங்களில் ஒன்று. தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தாயகம் எனப்படுவது வடக்கு கிழக்கு இணைந்த வரலாற்று தொடர்ச்சி மிக்க ஒரு நிலப்பரப்பு. எனவே ஈழத்தமிழர்கள் தாயகம் என்று கூறும்பொழுது அது பிரயோகத்தில் வடக்கு கிழக்கு இணைப்பையே குறிக்கிறது.

கடந்த பதினோரு ஆண்டுகளாக கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழான தமிழ் மிதவாத அரசியலானது கிழக்கில் அபிவிருத்தி அரசியலையும் உரிமை சார் அரசியலையும் சமாந்தரமாக வெற்றிகரமாக முன்னெடுக்க தவறிவிட்டதாக கிழக்கை சேர்ந்த ஒரு பகுதி ஊடகவியலாளர்களும் புத்திஜீவிகளும் குற்றம்சாட்டுகிறார்கள். பிபிசி தமிழோசையில் வேலை பார்த்த மட்டக்களப்பைச் சேர்ந்த சீவகன் அண்மைக் காலங்களாக தனது முகநூல் பக்கத்தில் எழுதி வரும் குறிப்புகளைத் தொகுத்து பார்த்தால் அது தெரிய வரும்.

கிழக்கில் மட்டுமல்ல வடக்கில் குறிப்பாக போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியிலும் போதிய அளவிற்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் ஒப்பீட்டு ரீதியாகப் பார்த்தால் கிழக்கின் நிலைமை கொடுமையாக உள்ளது என்பதே உண்மை. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்துடனும் அவர்களுடைய பட்டினங்களின் செழிப்போடும் ஒப்பிடுகையில் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமை பயங்கரமானது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அபிவிருத்தி மைய அரசியலை நோக்கிப் போக வேண்டும் என்ற கோரிக்கைகள் கிழக்கில் வலிமையடைந்து வருகின்றன. இது முதலாவது.

இரண்டாவது வடக்கில் இல்லாத மற்றொரு அம்சம். கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவை பொறுத்தவரை பரஸ்பரம் சந்தேகங்களும் பயங்களும் உண்டு. இந்த அச்சங்களைப் போக்கும் விதத்தில் தமிழ் அரசியல்வாதிகளிடமோ அல்லது சிவில் சமூகங்களிடமோ அல்லது ஊடகவியலார்களிடமோ பொருத்தமான தரிசனங்களோ திட்டங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறானதொரு பின்னணிக்குள் தனக்கு எதிராக போராடும் பெரிய சிறுபான்மைக்கு எதிராக சிறிய சிறுபான்மையின் ஒரு பகுதியினரை திருப்பி விடுவதில் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசாங்கங்கள் வெற்றியைப் பெற்று விட்டன. கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு மிக்க அபிவிருத்தியை ஊக்குவிப்பதன் மூலம் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் அங்கே இன முரண்பாடுகளை வெற்றிகரமாகக் கையாண்டு வந்துள்ளன.

இதில் ஆகப் பிந்திய உதாரணம்தான் கல்முனை வடக்கு பிரதேச செயலர் விவகாரம். இதுபோன்ற பல விடயங்களிலும் கூட்டமைப்பு கிழக்கு மக்களின் உணர்வுகளை அவற்றுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுத்து கவனத்தில் எடுக்க தவறிவிட்டது. கடந்த தேர்தலில் கிழக்கில் கூட்டமைப்புக்கு கிடைத்த தோல்வி என்பது அதன் விளைவா?

குறிப்பாக கடந்த கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு முஸ்லீம் தரப்புக்கு அதிகமாக விட்டுக் கொடுத்தது. மாகாண சபையை ஆளத் தேவையான பெரும்பான்மை இருக்கத்தக்கதாக ஆட்சிப் பொறுப்பை முஸ்லிம்களுக்கு வழங்கியது. அதுமட்டுமல்ல வடமாகாண சபையில் ஒரே நியமன ஆசனத்தையும் ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கியது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் கூட்டமைப்பு முஸ்லிம் மக்களின் பயங்களையும் சந்தேகங்களையும் நீக்கலாம் என்று முயற்சித்தது. எப்படி கூட்டமைப்பு கடந்த ஆட்சியின் போது சிங்கள மக்களின் பயங்களையும் சந்தேகங்களையும் நீக்கப் போவதாக நினைத்துக் கொண்டு அளவுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்ததோ அதைத்தான் கிழக்கில் முஸ்லிம்களின் விடயத்திலும் நடைமுறைப்படுத்தியது.

இப்படிப் பார்த்தால் கடந்த சில தசாப்தங்களில் முஸ்லிம் மக்களுக்கு அதிகமாக விட்டுக்கொடுத்த ஒரு  காலகட்டமாக கடந்த கிழக்கு மாகாணசபைக் காலகட்டத்தைக் கூறலாம். அதைப்போலவே முஸ்லிம் தலைவர்களுக்கு அதிகம் விட்டுக்கொடுத்த ஒரு தலைவராகவும் சம்பந்தரைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் இந்த விட்டுக் கொடுப்புக்கள் யாவும் அவரை அவருடைய சொந்தப் பிராந்தியத்திலேயே தோல்வியின் விளிம்புக்குக் கிட்டவாக கொண்டுவந்து நிறுத்தி இருக்கின்றனவா?

அண்மையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்  மட்டக்களப்பில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதிநிதிகள் வடக்கு மைய நோக்கு நிலையிலிருந்து கிழக்கை அணுக முடியாது என்று கூறியிருந்தார்கள். ஆனால் கிழக்கை கிழக்கின் நிலைமைகளுக்கு ஊடாக அணுகுவதாகக் கருதித்தான் சம்பந்தர் அந்தளவுக்கு விட்டுக் கொடுத்தார். அது இப்பொழுது தோல்வியாகத் திரும்பி இருக்கிறதா?

அப்படி என்றால் இப்பொழுது சீவகன் போன்றவர்கள் எழுதுவதைப் போல கிழக்கில் அபிவிருத்தி மைய அரசியலைத்தான் முன்னெடுக்க வேண்டுமா? அபிவிருத்தி மைய அரசியல் வேறு உரிமை மைய அரசியல் வேறா?

இல்லை.அபிவிருத்தி எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உரிமைகளில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு அம்சம். இன்னும் ஆழமாகச் சொன்னால் அபிவிருத்தி எனப்படுவது ஒரு கூட்டு உரிமைதான்.எதை அபிவிருத்தி செய்வது ?எப்படிச் செய்வது? எங்கே செய்வது? யாரை வைத்துச் செய்வது? போன்ற எல்லாவற்றையும் முடிவெடுப்பதற்கு அந்த மக்கள் கூட்டத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும்.அவாறான அதிகாரம் இல்லாத சில அமைச்சர்கள் மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி என்பது சரணாகதி அரசியல்தான்.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் தமிழ் அரசியல் கட்சிகள் அபிவிருத்தி மைய அரசியலையும் உரிமை மைய அரசியலையும் சமாந்தரமாக முன்னெடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல் விளங்கும். இன்னும் தெளிவாகச் சொன்னால் தங்களோடு சரணாகதி அரசியலை நடத்தத் தயாராக இருக்கும் தமது  முகவர்களை வைத்துதான் அரசாங்கங்கள் அபிவிருத்தியை முன்னெடுக்கும். அதாவது முகவர் மூலம் அபிவிருத்தி.

மாறாக எதிர்ப்பு அரசியலை நடத்தும் பிரதிநிதிகளோடு சேர்ந்து அபிவிருத்தியை முன்னெடுக்க மாட்டார்கள். இது மிக எளிமையான உண்மை. இந்த உண்மையின் விளக்கத்தில் வைத்துப் பார்த்தால் பிள்ளையான் எங்கே நிற்கிறார் வியாழேந்திரன் எங்கே நிற்கிறார் டக்ளஸ் தேவானந்தா எங்கே நிற்கிறார் அங்கஜன் எங்கே நிற்கிறார் போன்றவை தெளிவாகத் பெரியவரும்.

அப்படி என்றால் உரிமைக் கோஷங்களை எழுப்பி கொண்டு வறுமையில் உழல்வதா? உரிமைக் கோஷங்களை முன்வைக்கும் அரசியல்வாதிகள் உல்லாசமாக பிரபல்யமாக வாழ்க்கையின் சகல வளங்களையும் அனுபவிக்கும்போது வாக்களித்த மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுவதா? என்ற கேள்வி வரும். அது நியாயமானதே. அதற்குரிய பதில் என்ன?

ஒரே ஒரு பதில் தான். மாகாணசபை, உள்ளுராட்சி சபை போன்றவற்றை அபிவிருத்தி மைய நோக்கு நிலையிலிருந்து நிர்வகிக்கலாம். ஆனால் நாடாளுமன்ற அரசியலையும் தேர்தல் மைய அரசியலுக்கு வெளியிலான வெகுசன அரசியலையும் உரிமை மைய நோக்கு நிலையிலிருந்து கட்டமைக்கலாம். இது தொடர்பில் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள அறிஞர்களும் கருத்துருவாக்கிகளும் நிபுணர்களும் திட்ட வல்லுனர்களும் அரசியல்வாதிகளும் சிவில் சமூக பிரதிநிதிகளும் ஒன்றுகூடி சிந்தித்து ஒரு பொருத்தமான பொறிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

கடந்த 11 ஆண்டுகளில் அதை எப்பொழுதோ கண்டுபிடித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி கண்டுபிடிக்கப்படாத வெற்றிடத்திலும் கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவு தொடர்பான கிழக்கு மைய உணர்வுகளைக் கவனத்தில் எடுக்கத் தவறிய வெற்றிடத்திலும்தான் பிள்ளையானுக்கும் வியாளேந்திரனுக்கும் வெற்றிகள் கிடைத்தனவா? அதனால் தான் அம்பாறை மாவட்டத்தின் ஆசனம் கூட்டமைப்புக்கு கிடைப்பதை கருணா தடுத்தாரா?

எனவே அபிவிருத்தி மைய அரசியலை உரிமை மைய அரசியலின் ஒரு பகுதியாகவும் அதாவது கோட்பாட்டு ரீதியாகவும் அதேசமயம் நடைமுறை நிலைமைகளுக்கு ஏற்ப ஓர் உத்தியாகவும் அணுக வேண்டும்.கிழக்கை கிழக்கு மையத்திலிருந்துதான் அணுக வேண்டும் வடக்கு மையத்திலிருந்து அல்ல. ஆனால் கிழக்கு மையத்திலிருந்து சிந்திப்பது என்பது தாயகத்துக்கு எதிரானதும் அல்ல; தமிழ் மக்களின் திரட்சியைச் சிதைப்பதும் அல்ல; ராஜபக்சக்களுக்கு சேவகம் செய்வதுமல்ல.
 
http://thinakkural.lk/article/63976

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

அபிவிருத்தி எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உரிமைகளில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு அம்சம். இன்னும் ஆழமாகச் சொன்னால் அபிவிருத்தி எனப்படுவது ஒரு கூட்டு உரிமைதான்.எதை அபிவிருத்தி செய்வது ?எப்படிச் செய்வது? எங்கே செய்வது? யாரை வைத்துச் செய்வது? போன்ற எல்லாவற்றையும் முடிவெடுப்பதற்கு அந்த மக்கள் கூட்டத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும்.அவாறான அதிகாரம் இல்லாத சில அமைச்சர்கள் மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி என்பது சரணாகதி அரசியல்தான்.

தற்போது அபிவிருத்தி அரசியல் செய்ய சிங்கள அரசின் காலடியில் விழுந்து சரணாகதி அரசியல் செய்பவர்கள் வெறும் முகவர்கள்தான். தமிழர் பிரதேசத்தில் எப்படியான அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டும் என்பது சிங்கள நலன்சார்ந்துதான் தீர்மானிக்கப்படும்.

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின் அரசியல் ஆலோசகர் முகப்புத்தகத்தில் எழுதிய குறிப்பு. 

தேசியம், யாழ் மையவாதம் எல்லாம் அக்குவேறு, ஆணிவேறாக அலசப்படுகின்றது.

தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும்  கவிஞரும் எழுத்தாளருமாகிய நிலாந்தன் அவர்கள் கடந்த (23/08/2020) ஞாயிறு அன்று தினக்குரலில் எழுதிய கட்டுரையொன்றில் எம்மை நோக்கி
 'யாழ் மேலாதிக்கம்  என்றுரைப்பது எதனை?'  என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.   அதனை கருத்தில் கொண்டு 'யாழ் மேலாதிக்கம்' தொடர்பாக மேலும் சில புரிதல்களை பலரது வாசிப்புக்குமாக கீழ் வரும் கட்டுரையூடாக முன்வைக்க விரும்புகின்றேன்.

 யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற இனமேலாதிக்க கருத்தியலை குறிக்கின்றதோ அதேபோலத்தான் இக்கருத்தியலை நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது    சிங்கள மக்களை  குறிக்கவில்லை. சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானதும்  இல்லை.  அதேபோலத்தான் யாழ் மேலாதிக்கம்  என்பதையும்  அதற்கெதிரான கருத்துப்பரிமாறல்கள்  என்பதையும்  யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானதாக   கொச்சையாக புரிந்துகொள்ளக்கூடாது.  

ஆனால் துரதிஸ்ட  வசமாக இந்த புரிதலில் சிலருக்கு சிக்கல் இருக்கின்றது மேலும் சிலர் புரிந்து கொள்ளாதவாறு  திரித்து கிழக்கில் இருந்து யாழ்-மேலாதிக்கம் குறித்து கருத்திடுவோர் மீது   பிரதேசவாத துரோக முத்திரை குத்த முனைகின்ற போக்கும் அதிகரித்து வருகின்றது.

 தமிழ் தேசியமென்பது பரந்துபட்ட தமிழ் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளில் இருந்து உருவாகிய கருத்துருவமா?  அன்றில் தமிழ் சமூகத்தில்   ஆதிக்க சக்திகளாக  அகல கால்பதித்து நின்ற யாழ்-மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்தே அச்சிந்தனையுருவாக்கம் நிகழ்ந்ததா?  இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் மேலோட்டமாக பார்ப்போம். அதனுடாகவே  தமிழ் தேசியம் என்பதையும்  யாழ் மேலாதிக்கம் என்பதையும்  விளங்கிக்கொள்ளலாம்.

ஒரு சமூகமோ அல்லது ஒரு இனமோ அதன் அசைவியக்கம் சார்ந்து தனக்கான ஒரு கருத்தியலுடனேயே  பயணிப்பது வழமையாகும். அந்த கருத்தியலின்  உருவாக்கத்தில்  அச்சமூகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டம்சங்களே நிச்சயம் தாக்கம் செலுத்தும். எனவே அந்த சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரின் செல்வாக்கானது அச்சமூகத்தினது  கருத்தியல் உருவாக்கத்தில் பிரதான பங்கெடுக்கும்.

அந்த வகையில் தமிழ் தேசியத்தின்  வேர்களாகவும் பிதாமகர்களாகவும்  யார் யாரெல்லாம்  இருந்தார்கள் என்பதையிட்டு ஆராய்வோமானால் பொன்.இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், சுந்தரலிங்கம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம்,அமிர்தலிங்கம் போன்றோரை தவிக்கமுடியாது. இவர்களெல்லாம் தனவந்தர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், ஏழைகளை சுரண்டி பிழைப்போராகவும், ஆதிக்கசாதி வெறியர்களாகவும், ஆணாதிக்க மற்றும்  பிரதேசவாதிகளாகவும், ஏகாதிபத்தியத்தின் முகவர்களாகவும்  இருந்தார்கள் என்பது  நமக்கேயுரித்தான வேதனையான வரலாறு ஆகும். இந்த பின்னணியில் இருந்துதான் தமிழ் தேசியமென்பதன்  சிந்தனை மற்றும் கருத்தியல் உருவாக்கத்தில் தாக்கம்  செலுத்திய வர்க்கத்தினரையும் இத்தமிழ் தேசியமென்பதன்  ரிஷிமூலம் என்ன என்பதையும்  நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். 

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும்  சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர்  பொன்.இராமநாதன் ஆகும். 

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது 'வேளாளருக்கும் தனவந்தருக்கும்' மட்டுமே வாக்குரிமை  வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று  சாட்சியம்  சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான். 

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது    
ஜி.ஜி பொன்னம்பலம்  சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர்   சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள். 

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும  மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து 'சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்' என்று அரச கரும  மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று   காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள்  ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற  தலைமைகளேயாகும்.  

1947ல்  பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான். 

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி  என்றும் 'அடங்கா தமிழன்' என்கின்ற 'பெருமைமிகு' அடைமொழியாலும்   போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த  மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.  

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது 'கண்ட கண்டவர்களுக்கு' கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது  சொந்த நலன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும்  அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது. 

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களையும் மசோதாக்களையும் எதிர்த்தவர்கள்,  பிரித்தானிய-சிங்கள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து கொண்டு ஏழை மக்களை  ஒடுக்கி பிரபுத்துவ அரசியல் செய்தவர்கள் யாரோ அவர்களே  துரதிஸ்ட வசமாக   எமக்கு தேசியத்தை போதித்தனர்.   

1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது 'அங்கே ஜின்னா பாகிஸ்தானை பிரித்தார். இங்கே பொன்னா தமிழீழத்தை பிரித்து எடுப்பேன்' என்று பேசித்திரிந்தார் பொன்னம்பலம். பாராளுமன்ற முறைமை அறிமுகமானபோது தேர்தல் அரசியலுக்கான இனவாத அணிதிரட்டல் ஒன்றை நோக்கியே அவரது இந்த பேச்சுக்கள் இருந்தன. 

1956ல் அரச கருமமொழிச்சட்டம்  வந்தபோது பிரித்தானியரின் அருவருடிகளாக ஆங்கிலம் கற்று  அரச நிர்வாக அதிகாரிகளாக இலங்கையெங்கும் பரவியிருந்த யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கம் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டது. 

1971ல் கல்வி தரப்படுத்தல் வந்தபோதும்  இந்த அதிகார வர்க்கத்தின் வாரிசுகளே பாதிப்படைந்தனர்.  இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவே 'தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது ஒட்டுமொத்த தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்' என்று ஒப்பாரிவைத்தனர் இந்த யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தினர்.  

ஆனால் அதற்கு மாறாக கல்வித்தரப்படுத்தல் என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில்  யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்ட மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்திருந்தன. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய   இட  ஒதுக்கீட்டுக்கு சமனான அந்த சட்டத்தை தமிழரசு கட்சியினர் யாழ் மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்து எதிர்த்தனர்.

 மூதூர் பிரதிநிதியான தங்கதுரையும் மட்டக்களப்பு பிரதிநிதியான இராஜதுரையும் கல்வி தரப்படுத்தலால் பரந்து பட்ட தமிழர்களுக்கு வரலாற்றில் முதற்தடவையாக  பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கும் என்கின்ற மாற்று கருத்துக்களை தமிழரசு கட்சியில் முன்வைத்தபோது அவை  புறந்தள்ளப்பட்டன. கல்வி தரப்படுத்தல் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும்  எதிரான இனவாத செயற்பாடு என்றே  தமிழரசு கட்சி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது. 

பிரிவினை கோரிக்கை  எமது மக்களையை அழித்தொழிக்கும் என்று வட்டுக்கோட்டை   மாநாட்டிலேயே வந்து சொன்னார்கள்  கனவான் தேவநாயகமும்  தொண்டமானும். ஆனால்   கிழக்கினதும் மலையகத்தினதும் அதிருப்திகளை  அமிர்தலிங்கம் போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை.

யாழ்-மேட்டுக்குடிகள்  யாழ்ப்பாணத்துக்கு உள்ளே ஒடுக்கப்பட்ட  மக்களினதும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் ஏனைய பிரதேச  மக்களினதும்  சமூக பொருளாதார வாழ்வியல் பிரச்சனைகளை  பின்தள்ளி    தாமும் தமது வாரிசுகளும் எதிர்கொண்ட உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள்  மட்டுமே அனைத்து தமிழருக்கும் உரியதான பிரச்சனைகளாக  அரசியல் மயப்படுத்தினர். தமது நலன்களை அடிப்படையாக கொண்டே ஆயுத போராட்டத்தை முன்மொழிந்தனர்.  அதையே தமிழ் தேசியமென்றனர்.   தமிழீழ கோரிக்கையை பிறப்பித்தனர். 

இதுதான் யாழ் மையவாத சிந்தனை ஆகும். ஒரு சமூகத்தில் மேலாட்சி  செலுத்துபவர்கள்   தமது நலன்களில் மட்டுமே மையம்கொள்ளும் சிந்தனையின்  வழியிலேயே அனைவரையும் பயணிக்க கோருவதும் அதுவே தமிழ் தேசியம் என்று முழங்குவதும் மேலாதிக்கமாகும்.   

அதனால்தான்  1960-1970 காலப்பகுதியில் வடமாகாணத்தில் வெளிக்கிளம்பிய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தலைமையேற்று நடத்த அன்றைய  காலத்தில் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்த தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும் முன்வரவில்லை. அது முழுக்க முழுக்க வர்க்க அரசியல் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளாலேயே வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி அந்த சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார் தளபதி அமிர்தலிங்கம். தமிழ் தேசியத்தின் தந்தை என்று விளிக்கப்படுகின்ற  செல்வநாயகமோ 'நான் கிறிஸ்தவன் இது இந்துக்களின் பிரச்சனை' என்று ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால் தேசியமென்பது  சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க  வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல.   மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை   ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக  மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல.  மாறாக பரந்துபட்டு  பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத  குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும்   வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும். 

ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம்   செலுத்தும் வர்க்கத்தின்  பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால்  தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை. 

ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி நிலம் பண்பாடு பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது. வடக்குக்கும் கிழக்குக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான  (மடுவென்பது கிடங்கெனக்கொள்க)  அரசியல்,பொருளாதார,பண்பாட்டு வித்தியாசங்கள் குவிந்து கிடக்கின்றன. வரலாற்று ரீதியாக ஒருபோதும்  வடக்குக்கும்  கிழக்குக்குமான  ஒரே அரசியல் தலைமை இருந்ததுமில்லை.

அதையும் தாண்டி வடக்கில் எங்கே பொதுப்பண்பாடு காணப்படுகின்றது.  யாழ்ப்பாண சமூகம்  என்பது சாதிகளால் கட்டமைக்கப்பட்ட அதிகார படிநிலை  சமூகமாகும்.  சாதிக்கொரு சவக்காலையும் சாதிக்கொரு வீதியும் சாதிக்கொரு கோவிலும் வைத்துக்கொண்டு தமிழினத்துக்கான பொதுப்பண்பாட்டை எப்படி உருவாக்க முடியும்? எல்லோருக்குமான சமூகநீதியை எங்கே தேடுவது? நாமெல்லோரும் ஓரினம் என்னும் கூட்டுணர்வு எப்படி சாத்தியமாகும்? இன்றுவரை அகமண முறையை கைவிட தயாரில்லாது  சாதிகளின் பொருட்காட்சி சாலையாக தோற்றமளிக்கும் யாழ்ப்பாணத்தில் வாழுவது ஓரினமா? அன்றி ஒரே மொழி பேசும் பல பழங்குடியினங்களா  என்று கேட்க தோன்றுகின்றது. 

யாழ்ப்பாணத்தில்  இன்றுவரை பல கோவில்கள் தலித் மக்களுக்காக பூட்டிக்கிடக்கின்றன. 'ஊர்கூடி தேரிழுப்பதென்பது' முதுமொழி. ஆனால் ஊரிலுள்ள ஆதிக்க சாதிகள் புலம்பெயர்ந்து போனபின்பு தேரிழுக்க உயர்குடிகள் இல்லை என்பதால் ஜெஸிபி மெசினை கொண்டு தேரிழுக்கின்றோம் எதற்காக?  தலித் மக்களை தேரில் கை  வைக்க விடக்கூடாதென்பதற்காகத்தானே, தேர் தீட்டு பட்டுவிடும் என்பதற்காகத்தானே. இந்த நிலையில் தமிழருக்கான பொது பண்பாடு எங்கேஇருக்கின்றது? இருப்பதெல்லாம் வெறும் சாதிய பண்பாடு மாத்திரமேயாகும். அவற்றை கட்டிக்காப்பதுவும்  யாழ்ப்பாண- மேலாதிக்கம்தான் நாம் குரல் கொடுப்பது யாழ்பாணத்து மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் ஏழைகள் மற்றும் சாதியரீதியில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காகவும்தான்.  

 இந்த லட்ஷணத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற  கட்சிகளின் தலைவர்களில், பாராளுமன்ற  உறுப்பினர்களில், மாகாண சபை உறுப்பினர்களில்  யாதொருவராயினும்  தாழ்த்தப்பட்ட குலத்தவர் உண்டோ என்கின்ற கேள்வியெழுப்புதல் அவசியமற்றது ஆகும். அப்படி எதுமே இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலன்சார்ந்து ஒரு சிறு துரும்பையேனும் நகர்த்திய வரலாற்றை கொண்டிராத கறுவாக்காட்டு பரம்பரைகளான சுமந்திரனும்,விக்கினேஸ்வரனும்,கஜேந்திரகுமாரும் மக்களின் தலைவர்களாக வலம் வர முடிகின்றது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள்  செயலாற்றுகின்றன? எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால்  என்ன பதில்? வெறுமனே  வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்த தமிழ் தேசியவாத பிதற்றல்களை யாழ்ப்பாண கட்சிகள்  காவித்திரிகின்றன என்பதே உண்மையாகும். அதனாற்தான்  இந்த யாழ் மேட்டுக்குடிகள் பேசுகின்ற தேசியம் என்பது போலியானது. மக்களை ஏமாற்றி மேட்டுக்குடிகளின் நலன்களை மட்டுமே பூர்த்திசெய்கின்ற கபட நோக்கம் கொண்டது என்று சொல்லுகின்றோம்.

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல.  பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில்  சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ   தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது. 

தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன்  லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக்  ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.

'துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே' என்கின்றது  புறநானுற்று அறம்.  'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பான்  கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பார் திருவள்ளுவர்.

 இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம்  தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும்.  இத்தகைய  அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும்   உருவாகின்ற  தமிழுணர்வுதான்  தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும். 
தேசியவாதமென்பது  இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம்   போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ  சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே  தேசியவாதமாகும். 

ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான்   என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது. பன்மைத்துவ  தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது. 

நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும்  பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும்  உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே   அதன் தாற்பரியமாகும். அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும்   மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.  

செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியை தொடங்கி  கிழக்கு மாகாணத்துக்கு வந்து  தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாகி அணிதிரளுங்கள் சமஷ்டியை பெற்றுத்தருகின்றேன் என்று  அறைகூவல் விடுத்தார். அப்போது சமஸ்டி சாத்தியமில்லாதது,கிழக்கு மூவினங்களும் வாழும் இடம் இங்கே  இனவாத அரசியல் வேண்டாம், இரத்த  ஆறு  ஓட வழிவகுக்க வேண்டாம் என்று  செல்வநாயகத்தை எச்சரித்தார் மட்டக்களப்பின்  நல்லையா மாஸ்டர் என்னும் பெருந்தகை. பதிலுக்கு கிழக்குமாகாணத்தின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார,  மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டு சாதனை புரிந்த அந்த மகானை அரச கைக்கூலி என்று பிரச்சாரம் செய்து தோற்கடித்தது 
தமிழரசு கட்சி.

மறுபுறம் செல்வநாயகத்தின் அறைகூவலின் பின்னால்  ஒன்றுபடுவோம் என்று சொல்லி  தமிழரசு கட்சியை கிழக்கு மாகாணத்தின் மூலை முடுக்குகளெல்லாம் கொண்டு சென்று வளர்த்து  1977ல் தமிழர் தலைவராக மட்டக்களப்பிலிருந்து மேலெழுந்து வந்த  இராஜதுரைக்கு என்ன நடந்தது? அவரை வஞ்சித்து, ஒதுக்கி, துரோகியாக்கி வெளியேற்றியது தமிழரசுகட்சி. சொல்லப்பட்ட காரணம் என்னதெரியுமா? 1978ஆம் ஆண்டு சூறாவளியால் அழிந்து கிடந்த மட்டக்களப்பை பார்வையிட வந்த பிரதமர் 'பிரேமதாசாவை வரவேற்கச்சென்றது குற்றம்' என்றது அமிர்தலிங்கத்தின் குற்றப்பத்திரிகை. அத்தனைக்கு பின்னரும் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரலில்  செல்வநாயகத்தின் 35 வது நினைவு கூட்டமொன்றுக்காக யாழ்ப்பாணம் சென்ற ராஜதுரையை 'மட்டக்களப்பு சக்கிலியா' 'துரோகி' என்று துரத்தினார் சிவாஜிலிங்கம் என்கின்ற தமிழ் தேசிய பித்தர். 

* யாழ் மேயரான  செல்லன் கந்தயன் யாழ்- நூலகத்தை  திறந்துவைத்தல் கூடாது என்கின்ற மேட்டுக்குடிகளுக்கு ஒத்தாசை வழங்கி திறப்புவிழாவை தடுத்து நிறுத்தினர் தமிழீழவிடுதலைப்புலிகள்.  

*தமிழ் பேசும் இஸ்லாமியரை தமிழ் தேசியத்துக்கு வெளியே துரத்தியடித்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.

 *2004 ல்  தமிழீழத்தின் நிழல் நிர்வாக கட்டமைப்புக்கு 32 துறை செயலாளர்களை தமிழீழ விடுதலை புலிகள் நியமித்தபோது 31 செயலர்களை வடமாகாணத்துக்குள் சுருட்டிக்கொள்ளுதல் தகுமோ?  என்று கேட்ட கருணாம்மானை துரோகி என்று அறிவித்து வெருகல் படுகொலைக்கு  ஆணையிட்ட அன்றே அறுந்து போனது வடக்கு கிழக்கு தாயக உறவு. 

பிரபாகரனது முப்பத்துவருட ஆயுதப்போராட்டம் தமிழ் பேசும் மக்களின் (சாதி,மத, பிரதேச,) பன்மைத்துவத்துவ குரல்களை அங்கீகரிக்க மறுத்து  வீணாகி மண்ணோடு மண்ணாகிப்போனது..

இப்போது  கிறிஸ்தவரையும் கழித்துவிட்டு இந்து கட்சிகளின் உருவாக்கத்துக்கு  அத்திவாரம் இட்டுக்கொண்டிருக்கின்றது. யாழ்-மையவாத சிந்தனை முகாம். அதனை   மூத்த  தமிழீழவாதிகளில் ஒருவரான மறவன் புலவு சச்சுதானந்தம் கச்சிதமாகவே  செய்து வருகின்றார். 

அண்மைக்காலமாக பெண்களின் குரலை உதாசீனம் செய்துவருகின்றது தமிழரசுக்கட்சி. கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மங்களேஸ்வரி சங்கருக்கு வேட்பாளர் வாய்ப்பு  மறுக்கப்பட்டமைக்கு சுமந்திரன் சொன்ன காரணம். 'அவர் துரோகம் செய்ய கூடியவர்' என்று முன்னரே உணர்ந்தாராம் சுமந்திரன்.  இப்படி அவரே  முடிவெடுப்பதென்றால் கட்சியின் செயலாளர் பதவியை துரைராசசிங்கத்துக்கு கறிவேப்பிலைக்கா கொடுத்து வைத்திருக்கின்றது தமிழரசு கட்சி?  இதைத்தான் யாழ் மேலாதிக்கம் என்கின்றோம். ஒரு கணவனை இழந்த பெண் என்னும் வகையில் சசிகலா ரவிராஜை வைத்து வாக்குசேகரிக்க முயன்றது தமிழரசு கட்சி. அதன்பின்னர் அவருக்கு   நடந்த அநியாயத்துக்கு விளக்கம் தேவையில்லை. 

தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம்  செலுத்துகின்ற இந்த யாழ்ப்பாண மேட்டிமை சக்திகளிடத்தில்  உண்மையான தமிழ் தேசிய சிந்தனை இல்லை. இருப்பதெல்லாம் ஆதிக்க சிந்தனை மட்டுமேயாகும். அதில் சிங்களவர்களிடமிருந்து அதிகாரத்தை கைமாறி  புதிய எஜமானர்களாக தங்களுக்கு முடி சூட்டி கொள்ளுகின்ற கபட நோக்கம் மட்டுமே மறைந்திருக்கின்றது. அதுவே வடமாகாண சபை முதலமைச்சர் விடயத்திலும்  நடந்தேறியது. 

நம்மை நாமே ஆளுதல் என்கின்ற அற்புதமான சிந்தனை   ஆட்சியாளர்களை அடையாளமிட்டு மலினப்படுத்தப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு பதிலாக தமிழ் எம்பிக்களும் அமைச்சர்களும் முதலமைச்சரும்  வந்துவிட்டால் தமிழ் தேசியம் தழைத்தோங்கும் என்று அப்பாவித்தனமாக நம்பவைக்கப்பட்டுள்ளனர் எமது மக்கள். வெறும் இனவாத வெறியை விதைத்து   ஆளுவதற்கான  உரிமைக்காக  மட்டுமே போராட்டம் என்கின்ற எளிமைப்படுத்தப்பட்ட  கருத்துருவமே சாமானிய மக்களின் மனநிலையில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது..

இதுவரைகாலமும் தமிழ் தேசியத்தை தலைமையேற்று வழிநடத்தியவர்களில் அநேகமானோர்  யாழ்- மேட்டுக்குடி நலன்களில்   மையம்கொண்டுள்ள ஆதிக்க சிந்தனைக்கு   மாற்றானவர்களாய் இருக்கவில்லை.  அப்படியிருக்க முனைந்த ஒரு சிலரும்  மைய நீரோட்ட  அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். ஒதுக்கப்பட்டனர். அல்லது துரோகிகள் என்று கொன்றொழிக்கப்பட்டனர்.  இத்தகைய கேடுகெட்ட யாழ்-மேட்டுக்குடி தலைமைகளுடைய  ஆதிக்க சிந்தனையின் அம்மணத்தை  மறைக்க தேசியம் என்றும் தாயகமென்றும் விடுதலையுணர்வு என்றும் வேசம்கட்டுவதற்கு பெயர்தான் யாழ்- மேலாதிக்கம் என்பதாகும். 

அதனால்தான் சொல்கின்றோம். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழீழம் என்பது யாழ்-மேலாதிக்க தமிழீழம்தான் .  இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் தேசியம் என்பது  யாழ்  மேலாதிக்க தமிழ் தேசியம்தான். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற  தமிழ் நோக்கு  என்பதும்  யாழ் மேலாதிக்க தமிழ் நோக்குத்தான். என்றொருநாள் தமிழ் பேசும் மக்களின் தலைமையானது  யாழ்-மேட்டுக்குடிகளிடமிருந்து  கைமாறுகின்றதோ  அன்றுதான் தமிழர்களின்  நன்னாள் தொடங்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2020 at 06:03, கிருபன் said:

சிங்களவனுக்குச் செம்புதுக்குவதற்காக தமிழினத்தையே வசைபாடும் சந்தர்ப்பவாதத் துரோகிகள் நீங்கள். ஒருநாள் வரும், அப்போது உங்களுக்காக பேச ஒருவனும் இருக்கப்போவதில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

சிங்களவனுக்குச் செம்புதுக்குவதற்காக தமிழினத்தையே வசைபாடும் சந்தர்ப்பவாதத் துரோகிகள் நீங்கள். ஒருநாள் வரும், அப்போது உங்களுக்காக பேச ஒருவனும் இருக்கப்போவதில்லை.

நீங்கள் சொன்னதை அவர்கள் செய்து, இருப்பையும், நிலத்தையும் காத்து, அங்குள்ள மக்களின் சராசரி பொருளாதார நிலையையும் உயர்த்தினால்,  யாழ்ப்பணிகள் அல்லது வடக்கர்கள்   (அவர்களின் மொழியில்), அவர்களின் பார்வையில் கிழக்குக்கு உபத்திரபாவமாக இருந்தன் மூலம் அங்குள்ள மக்களுக்கு தற்போதைய நிலையில்  செய்யும்   உண்மையில் செய்யும் சேவை ஆகும். இதை  யாழ்ப்பணிகள் அல்லது வடக்கர்கள்   (அவர்களின் மொழியில்) வரம் கேட்டாலும் கிடைக்காது.

இவர்கள் இதை செய்வது, அங்குள்ள பூர்விக நிலங்களை மகா மா  மா வேலையாக கூட்டிக் கொடுத்து பங்கு கேட்பதற்கும், தமது தனிப்பட்ட பொருளாதார விருத்திக்கும், அதை பின்பு அபிவிருத்தி என்று காட்டுவதற்கும்.

இல்லையேல், சிங்களம் சொன்ன திட்டத்திற்கு, ஓர் சிறு முணுமுணுப்பில்லாமல் கருணதுரோ, பிள்ளை துரோ  வும் இருக்கிறார்கள்.   அதை கேள்விக்கு உள்ளாக  கூடிய அங்குலர்வர்களை (அவர்களிடம் துறை சார் நிபுணத்துவம் இல்லை என்றாலும்) அமத்தி  வைத்து இருக்கிறார்கள்.

இதுவே 13க் கும், ஒரு சிறு எதிர்ப்பு கூட இல்லை. 13 இந்த தொல்லியல் என்ற போர்வையில் காணிகள் அபகரிப்புக்கு, சட்டத் தடையாக இருக்கும் (இதை நான் இங்கு வெகு திரியில் சொல்லி உள்ளேன். சிராணி உடன் பக்ஸக்கள் முறுக்குப்பட்டதன் காரணம்).   

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இவர் சொன்னதில் பிழை இருப்பதாக தெரியவில்லை 
ஜெ சி  பி விட்டு தேர் இழுத்தபோதே எமது சிந்தனையின் தெளிவு மற்றவர்களுக்கு தெரிந்திருக்கும், 
ஒருவேளை இதனால் தான் இறுதியுத்தம் என்று *** ***
   
Edited by நியானி
சாதிய சுட்டுதல் நீக்கப்பட்டுள்ளது
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

எனக்கென்னவோ இவர் சொன்னதில் பிழை இருப்பதாக தெரியவில்லை 
ஜெ சி  பி விட்டு தேர் இழுத்தபோதே எமது சிந்தனையின் தெளிவு மற்றவர்களுக்கு தெரிந்திருக்கும், 
ஒருவேளை இதனால் தான் இறுதியுத்தம் என்று *** ***

இந்திய சாதி நாற்றம் மெதுவாக ஊற்றெடுக்கிறமாதிரி இருக்கிறது 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாதியில்லாத சமூகம் ஒன்றினை ஒருவன் அமைக்கப் போரிட்டான், இறுதிவரை அதைச் செய்தும் காட்டினான். ஆனால், அவனைக் காட்டிக்கொடுத்து அழித்துவிட்டே இப்போது அதே சாதி பற்றிப் பேசுகிறோம். அழிக்கப்பட்ட வன்னித் தியாகிகளில் சாதி இருக்கவில்லை. ஆனால், அவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி சாதிகளாகப் பிரித்து மகிழ்வோம், அவர்கள் அழிந்தது சரியென்று நியாயப்படுத்துவோம், ஏனென்றால், அவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள். அவர்கள் இந்துக்கள், இந்தியாவின் கைக்கூலிகள், சாதிவெறிபிடித்தவர்கள், பிரபாகரன் எனும் மனிதனுக்குப் பின்னால் இறுதிவரை நின்றவர்கள், ஆகவே அவர்கள் அழிக்கப்படுதல் சரியானதே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்திய சாதி நாற்றம் மெதுவாக ஊற்றெடுக்கிறமாதிரி இருக்கிறது 

கருணா மீதிருக்கும் கறல் நியாயமானது ,மாற்றுக்கருத்தில்லை 
ஆனால் கருணா செய்ததை விட கற்பனை செய்யமுடியாத சேதம் செய்தது கே.பி 
புலிகளின் அகில உலக ஆயுதக்கட்டமைப்பு வலைப்பின்னல்களையே  சிதைத்து போலி நம்பிக்கைகளை கொடுத்து அவர்களை மந்தப்படுத்தி போராட முடியாத கையாலாகாதவர்களாக்கியது மட்டுமல்லாது 
புலிகளின் அத்தனை உலகாலவிய சொத்துக்களையும் ராஜபக்ச கம்பெனியின் பாத காணிக்கையாக்கியவர் 
கருணாவை கழுவியூற்றுவதில் ஒரு 5  வீதத்திற்காவது இவரை கழுவியூற்றக்காணோமே ...****  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மைய அரசியல் எனப்படுவது தெற்கை நோக்கிப் போவதா ? பகுதி -2 – நிலாந்தன்

Sep 13, 2020
 • நிலாந்தன்

கிழக்கு மைய அரசியல் எனப்படுவது தெற்கை நோக்கிப் போவதா ? என்ற தலைப்பில் தினக்குரல் இணையத்தளத்தில் நான் எழுதிய கட்டுரையில்  எழுப்பியிருந்த ஒரு கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் ஆலோசகர் என்று கருதப்படும் ஸ்டாலின் ஞானம் முகநூலில்  பதிலளித்திருந்தார்

யாழ் மேலாதிக்க வாதம் என்று ஸ்டாலின் கருதுவது எதனை என்ற எனது கேள்விக்கான அப் பதிலில் என்னைப் பற்றிய அறிமுகக் குறிப்பில் தவறு உண்டு. இதுபோன்ற தவறுகள் அந்த நீண்ட பதிலில் உள்ள வேறு தகவல்களிலும் இருக்கக்கூடும். ஆனால் அந்த நீண்ட பதிலின் மூலம் அவர் கூற வரும் விடயம்  தொடர்பில் எனக்குப் பெரிய முரண்பாடு கிடையாது.

அது என்னவெனில் யாழ் மேலாதிக்க வாதம் தொடர்பான அவருடைய குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை.  யாழ் மையத்திலிருந்து கிழக்கைப் பார்ப்பவர்கள் அதற்குப் பதில் கூறவேண்டும் .

ஏற்கனவே எனது முதல் கட்டுரையில் அது கூறப்பட்டிருக்கிறது. மேலாதிக்கம்  எந்த திசையில் இருந்து வந்தாலும் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

இரண்டாவதாக தேசியவாதம் தொடர்பில் எனது கருத்துக்கள் மிகவும் தெளிவானவை. வெளிப்படையானவை. எனது இணையத் தளத்திலும் ஏனைய ஊடகங்களிலும் அடிக்கடி அதை நான் எழுதி வருகிறேன். குறிப்பாக தேசியமும் சாதியும் ;(தேசியமும் சமயமும் (http://www.nillanthan.com/2899/ ,  http://www.nillanthan.com/3502/http://www.nillanthan.com/3649/ , http://www.nillanthan.com/4057/); தேசியமும் பால் அசமத்துவமும்; தேசியமும் பிரதேச முரண்பாடுகளும்; தேசியமும் ஜனநாயகமும் (http://www.nillanthan.com/180/) தொடர்பில் எனது கட்டுரைகளை எனது இணையதளத்தில் பார்க்கலாம்.

நான் தேசியம் என்று கருதுவது ஒரு பெரிய மக்கள் திரட்சியை. அந்த திரட்சியை சாதியின்  மீதோ  சமயத்தின் மீதோ பிரதேசவாதத்தின்  மீதோ  அல்லது வேறு எந்த அசமத்துவத்தின் மீதோ கட்டி எழுப்ப முடியாது. மாறாக ஜனநாயகம் என்ற அடிச்  சட்டத்தின் மீது ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடிப்படையில் தான் தேசியத் திரட்சியைக்  கட்டி எழுப்ப வேண்டும். அது சர்வதேசியமாக விரியக்கூடியது. உட்சுருங்காது வெளி விரியும்.

ஸ்டாலினும் ஓரளவுக்கு இதையொத்த கருத்தைத்தான் தனது பதிலில் தெரிவித்திருக்கிறார். எனவே இது பற்றி மேலதிகமாக விவாதிக்க தேவையில்லை. மேற்கண்ட தேசியவாதம் தொடர்பான அளவுகோல்களின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் ஸ்டாலின் சுட்டிக்காட்டும் வடக்கு மைய தலைவர்கள் பலரையும் தேசியத் தலைவர்களாக  ஏற்றுக்கொள்ள முடியாது. சிலரிடம் தேசிய பண்புகள் இருந்தன. அல்லது தேசியவாதத்தின் கருக்கள் இருந்தன. ஆனால் தேசியம் என்று மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் தமிழ் தலைவர்களில் பலரை தேசியத்திற்கு எதிரானவர்களாகவே வகைப்படுத்த வேண்டியிருக்கும். எனவே இது விடயத்தில் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்களோடு பெரியளவில் முரண்பட இடமில்லை.

ஆனால்  தேசியப்  பண்பு குறைந்த அந்தத் தலைவர்களை முன் வைத்து யாழ் மேலாதிக்க வாதத்தையே தமிழ் தேசியமாக உருவகிப்பது சரியா? மேலும் தமிழ்த் தேசியம் எனப்படுவது யாழ்பாணத்து மேலாதிக்கத்தின் உருவகம் என்பது சரியா? அது இன  ஒடுக்குமுறையின் விளைவு இல்லையா? இன ஒடுக்கு முறை என்பது வடக்குக்கு வேறு கிழக்குக்கு வேறா?

ஆனால் எனது கட்டுரையில் நான் கேட்டது என்னவென்றால் இவ்வளவு பலமான யாழ் மேலாதிக் கட்சியாகிய கூட்டமைப்பு கடந்த 11 ஆண்டுகளாக கிழக்கு மைய தலைவர் ஆகிய சம்பந்தரை எப்படி  தலைவராக ஏற்றுக் கொண்டது என்பதுதான். இத்தனைக்கும் சம்பந்தர் ஒரு தலையாட்டி பொம்மை அல்ல. ஆளுமை மிக்கவர். அப்படிப்பட்ட ஒருவரை எப்படி யாழ் மேலாதிக்கம் தனது தலைவராக ஏற்றுக் கொண்டது? அண்மையில் மாவை சேனாதிராசாவை  அகற்றுவதற்கு கலையரசனை  நியமித்தது கூட பிரதேச உணர்வுகளை தமது தலைமைப்  போட்டிக்கு சாதகமாகப்  பயன்படுத்திய மிகப் பிந்திய ஒரு உதாரணம் தான். ஆனால் அதற்கு சம்பந்தரும் உடந்தை தான்.

எனவே இப்பொழுது உள்ள கேள்வி சம்பந்தர் ஒரு கிழக்கு தலைவர் இல்லையா? அல்லது திருகோணமலை கிழக்கின் எழுச்சிக்குள் அடங்கவில்லையா? இன்னும் ஒன்றை கேட்கலாம். முஸ்லிம்கள் கிழக்கின் எழுச்சிக்குள் அடங்குகிறார்களா இல்லையா? அண்மைய தேர்தல் முடிவுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் உணர்வுகளும் செல்வாக்குச் செலுத்தின என்பதனை திட்டவட்டமாக மறக்கமுடியுமா ?

சரி இனி அடுத்த விடயப் பரப்புக்கு போகலாம்.

மிதவாதத் தலைவர்கள் மட்டுமல்ல ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களும் குறிப்பாக புலிகள் இயக்கமும் யாழ் மேலாதிக்க சிந்தனையின் தொடர்ச்சியே என்ற தொனிப்படப்  பதில் கூறப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் அந்த இயக்கத்தின் புலிகள் என்ற பெயரை ஏன் பிள்ளையான் தனது கட்சிக்கு வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? வெருகல் ஆற்றின்  இரு தீரங்களிலும் ரத்தம் சிந்திய பின்னும் அந்தப் பெயரை  என் தேர்தெடுத்தார்கள்? வாக்கு வேட்டைத் தேவைகளுக்காக அந்த பெயர் எடுத்துக் கொள்ளப்பட்டதா?  அல்லது எதன் தொடர்ச்சியாக காட்ட அந்தப் பெயரை தமது கட்சிக்கு வைத்தார்கள்?

அடுத்த கேள்வி அதிகம் கோட்பாட்டு  ரீதியிலானது. தமிழ் தேசியவாதத்தை யாழ் மேலாதிக்கத்தின் சித்தாந்தமாக ஸ்டாலின் ஞானம் கருதின் அவர் தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கருதவில்லையா? அப்படியென்றால் தமிழ் மக்கள் யார்? இனப்பிரச்சினைக்கு எந்த அடிப்படையில் தீர்வைத் தேட வேண்டும்?

ஆனால் அவருடைய பதிலில் தேசியவாதம் பற்றிய அவருடைய விளக்கத்தின்படி அவர் தேசியவாதத்தை தவறு என்று கூறுவதாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனினும் தேசியவாதம் சரியா பிழையா என்ற முடிவுக்கு முதலில் வரவேண்டும். தேசியவாதம் பிழை என்றால் இங்கே ஒரு முக்கிய கேள்வி எழுகிறது.

ஒடுக்கப்படும் ஓர் இனத்தின் தேசியவாதத்தில்  இருக்கக்கூடிய உள்ளொடுக்குமுறைகளுக்காக  ஒடுக்கும் பெரிய ஓர்  இனத்தின் பெருந் தேசிய வாதத்தோடு  கூட்டுச் சேர்வதை எப்படி நியாயப் படுத்தலாம்?

ஒரு பிராந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக ஒரு பேரினவாதத்தின்  ஒடுக்கும் இயந்திரத்தோடு  கூட்டுச் சேர்வதை எப்படி நியாயப் படுத்துவது? அதுவும் தனிச் சிங்கள வாக்குகளால் நாடாளுமன்றத்தில்  மூன்றில் இரண்டு  பெரும்பான்மையைக் கட்டியெழுப்பத்  துடிக்கும் ஒருபெருந் தேசியவாதத்தோடு?

அபிவிருத்தி அரசியல் என்றழைக்கப்படுவது அவ்வாறு கூட்டுச் சேர்வதன்  மூலமே சாத்தியமாகக்கூடிய ஓர் அரசியல் பொருளாதார கள யதார்த்தம் ஒன்று நாட்டில் உள்ளது. அதைத்தான் வியாழேந்திரன் கூறுகிறார். இது விடயத்தில் வியாழேந்திரனுக்கும் பிள்ளையானின் கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன? கருணாவுக்கும் பிள்ளையானின் கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?

சரி தேசியவாதத்தை பிழை என்று கூறவில்லை. யாழ் மேலாதிக்க வாதத்தின் முகமூடியாக காணப்படும் தேசியவாதம் தான் பிழை என்று வைத்துக் கொண்டால் கிழக்கு மையத்திலிருந்து தேசியத் திரட்சியைக்  கட்டி எழுப்பலாம். யாழ் மேலாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு தரப்பு தேசியவாதத்தை கட்டியெழுப்பும் பொழுது ஸ்டாலின் ஞானம் வைக்கும் விமர்சனங்கள் வராது. அவரே கூறுகிறார் பேரினவாதம் எனப்படுவது முழுச் சிங்கள மக்களையும் பிரதிபலிக்கவில்லை. அதைப்போலவே யாழ் மேலாதிக்க வாதம் என்பதும் முழு யாழ்ப்பாணத்தையும் பிரதிபலிக்கவில்லை என்று. அப்படி என்றால் கிழக்கு மைய தேசிய வாதம் வடக்கில் இருக்கக்கூடிய மேலாதிக்க சிந்தனையற்ற யாழ்ப்பாணத்தவர்களையும் ஒடுக்கப்படும் மக்களையும் இணைத்துக்கொண்டு ஒரு தேசியத் திரட்சிக்கு போக வேண்டுமா ? அல்லது தென்னிலங்கைமைய ஒடுக்கும் பேரினவாத கட்சிகளோடு கூட்டுச்  சேர வேண்டுமா ? இதில் எது சரி?

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக ஸ்டாலின் ஞானம் முகநூலில் ஒரு குறிப்பை எழுதி இருந்தார். பிள்ளையானை சிறையில் சென்று சந்தித்ததாகவும் அம்பாறையில் ஏன் போட்டியிடக் கூடாது என்பதற்கு பிள்ளையான் சொன்ன காரணத்தையும் அவர் அதில் எழுதியிருந்தார். அதாவது அம்பாறை மாவட்டத்தின் வாக்குகளை நாங்களும் போட்டியிட்டு சிதறடிக்க கூடாது என்ற பொருள்பட.

உண்மைதான் அம்பாறையில் மட்டுமல்ல திருகோணமலையில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல ஒட்டு    மொத்த தமிழ் இன  வாக்குகளும்  சிதறக் கூடாது என்று சிந்தித்தால் அதை வடக்குக்  கிழக்கை  இணைப்பதால் ஏற்படுத்த முடியுமா ? அல்லது பிரிப்பதால் ஏற்படுத்த முடியுமா ? வடக்கு-கிழக்கைப் பிரித்தாள  முயலும்  தெற்கை  நோக்கிக்  கிழக்கைத் திருப்பவதால் ஏற்படுத்த முடியுமா?
 
http://thinakkural.lk/article/68111

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவிவிருத்தியும் அரசியல் அதிகாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல இரண்டும் முக்கியமானவை.பிரதேச வாதம் பேசுவோர் மீண்டும் மீண்டும் உங்கள் தனி நலன் சார்ந்து பிரதேச வாதம் பேசி வட கிழக்கை பிரிக்காதீர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2020 at 10:21, அக்னியஷ்த்ரா said:

கருணாவை கழுவியூற்றுவதில் ஒரு 5  வீதத்திற்காவது இவரை கழுவியூற்றக்காணோமே ...****

கே.பி. தானாக  சிங்களத்துக்குள் வந்தார் என்று எந்த சிங்கள துறையாவது அல்லது தனி நபர்  சொல்லட்டும்.

கே.பி. தானாக  சிங்களத்துக்குள் வந்ததை, சிங்களம் மறைத்து இருந்தாலும், இதுவரையில்  வேறு வழியாக வந்து இருக்கவேண்டும். 

சிங்களம் எத்தனையோ பேட்டி கொடுக்கிறது, வர்கள் எல்லோரும் திட்டமிட்டுமறைக்க வேண்டும்  (சாத்தியமா?)  அல்லது கே.பி. பிடிக்கப்பட்டார் அல்லது காட்டிக்கொடுக்கப்பட்டார்.

இணைப்பில் உள்ளதை வாசித்து விட்டு, ஓர் மதிப்பீடு எடுக்கலாம்.

https://www.linkedin.com/pulse/combating-terrorism-sri-lankan-experience-kagusthan-ariaratnam/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருணா பிடிபட்டு கருணை செய்ததை எல்லாம் செய்து இருந்து, சும்மா சிவனே என்று இருந்தால் ( கே.பி. இருப்பது போல),  கருணா பொதுவாக கருத்தில் எடுக்கப்படமாட்டார். 

மாறாக, கே.பி தன்னிடம் உள்ளதை, தெரிந்ததை  இழந்தார். தனிப்பட்ட முறையில் கருணா 1.7 பில்லியன் டாலர் செல்வந்தர் ஆனார்.  
 
இங்கே கே.பி செய்ததை நியப்படுத்தவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் தான் தப்புவதற்கு (பிடிபட்டவுடன்) வழி எது என்பதே தேடல்.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2020 at 14:51, அக்னியஷ்த்ரா said:

கருணா மீதிருக்கும் கறல் நியாயமானது ,மாற்றுக்கருத்தில்லை 
ஆனால் கருணா செய்ததை விட கற்பனை செய்யமுடியாத சேதம் செய்தது கே.பி 
புலிகளின் அகில உலக ஆயுதக்கட்டமைப்பு வலைப்பின்னல்களையே  சிதைத்து போலி நம்பிக்கைகளை கொடுத்து அவர்களை மந்தப்படுத்தி போராட முடியாத கையாலாகாதவர்களாக்கியது மட்டுமல்லாது 
புலிகளின் அத்தனை உலகாலவிய சொத்துக்களையும் ராஜபக்ச கம்பெனியின் பாத காணிக்கையாக்கியவர் 
கருணாவை கழுவியூற்றுவதில் ஒரு 5  வீதத்திற்காவது இவரை கழுவியூற்றக்காணோமே ...****  

கே.பி துரோகி இல்லை என்று சொல்லி போவோம் 😊😊😇

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • குடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன? ஷிரோமா சில்வா, தாலியா பிராங்கோ 20 அக்டோபர் 2020   இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் போன்ற பல்வேறு உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலானதில் இருந்து, குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இதுபோன்ற நிகழ்வுகளில் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், இருப்பிடத்தை கண்காணிக்கும் செயலிகள், ஒருவரது கணினி சார்ந்த செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்கும் கீ-லாகிங் மென்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்துவதுடன் அவர்களை நோட்டமிடவும் விஷமிகள் பயன்படுத்தி வருகின்றனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக புகாரளிப்பவர்களில் 70 சதவீதம் பேர், தொழில்நுட்ப சாதனங்களை மையமாக கொண்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக "ரெபியூஜி" எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது. இந்த நிலையில், கொரோனா பொது முடக்க காலத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளான இருவர், தங்களது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். இருவரது வேண்டுகோளின்படி, அவர்களது பெயர்கள் இந்த கட்டுரையில் மாற்றப்பட்டுள்ளன. "அவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோதுதான், அவர் என்னை கண்காணிக்க ரிங் டோர் பெல் கேமராவைப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறிந்தேன்," என்று கேட் கூறுகிறார்.  அமேசானின் இணையத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு சாதனத்தை அவர் குறிப்பிடுகிறார். இது ஒரு வீட்டின் முன்னால் ஏதாவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் அளிப்பதுடன், அதன் நேரலை அல்லது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை, உலகின் எந்த மூலையில் இருந்தும் காண்பதற்கு வழிவகை செய்கிறது."   "நான் அந்த பாதுகாப்பு சாதனத்தை செயலிழக்க செய்ய முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், 'நீ குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறாய்' என்று அவர் கூறுவார். "இது இப்படியே சென்றால், ஒரு கட்டத்தில் நான் மோசமான தாய் என்று அவர் காவல்துறையில் முறையீடு செய்துவிடுவாரோ என்று நான் அச்சமடைந்தேன்," என்கிறார் கேட். இன்னொரு பெண்ணான சூ, தனது கணவர் அமேசான் வர்ச்சுவல் அசிஸ்டன்ட் கருவியை பயன்படுத்தி எங்கிருந்தோ இருந்தபடி, தனது உரையாடல்களை கண்காணித்து வந்ததாக கூறுகிறார். "அமேசானின் பல்வேறுபட்ட அலெக்சா கருவிகள் எங்களது வீடு முழுவதும் இருந்தன. எனது கணவர் அவையனைத்தையும் இணைத்து ஒரே கணக்கிலிருந்து கண்காணிப்பார். மேலும், அவரால் இவற்றை பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும்." இது ஒருபுறமிருக்க, கொரோனா பொது முடக்க காலத்தில் ஆண்களும் இதுபோன்ற பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.   குறிப்பாக, பிரிட்டனில் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஐந்தாயிரம் கூடுதல் அழைப்புகளை ஆண்களிடமிருந்து பெற்றதாக அந்த நாட்டை சேர்ந்த ஆலோசனை அமைப்பு கூறுகிறது. ஆனாலும், இன்னமும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படுகின்றனர். பிரிட்டனில் சென்ற ஆண்டு பதிவான 75 சதவீத குடும்ப வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை, இந்த ஆண்டின் மார்ச் மாதம் 23ஆம் முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தால் பெறப்பட்ட குடும்ப வன்முறை சார்ந்த புகார்களின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 'மேலாண்மை செய்யும் ஆண்கள்' "இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக இருக்கும் ஆண்களே வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை வாங்குபவராகவும் அதை நிர்வகிப்பவராகவும் இருக்கின்றனர்" என்று லண்டனை சேர்ந்த பேராசிரியர் லியோனி டான்செர் கூறுகிறார்.  "இதன் காரணமாக அவர்கள், தங்களது சுற்றுப்புறம் மட்டுமின்றி தொழில்நுட்ப சாதனங்களின் மேலாண்மையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்" என்கிறார் அவர். பேராசிரியர் லியோனியின் கருத்தை கேட் மற்றும் சூ ஆகிய இருவரும் ஏற்றுக்கொள்கின்றனர். "நான் வீட்டை விட்டு ஓரடி வெளியே சென்றாலும், அவரால் எனது ஸ்மார்ட் வாட்ச் அல்லது திறன்பேசி அல்லது ஐபாட் அல்லது வேறெதாவது தொழில்நுட்ப சாதனத்தை கொண்டு எனது இருப்பிடத்தை அறிய முடியும். எனது வாழ்க்கையிலும் குழந்தைகளின் வாழ்க்கையிலும் எனக்கு குறைவான கட்டுப்பாடு இருப்பதையும், அவர் ஆதிக்கம் செலுத்துவதையும் பார்க்கும்போது, இதிலிருந்து மீண்டுவர வேண்டுமென்று தோன்றுகிறது" என்று சூ கூறுகிறார்.   "தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் எப்படி, எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்" என்று அவர் மேலும் கூறுகிறார். வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் தொழில்நுட்பத்தின் பிடி இருப்பதால், அதை கொண்டே குடும்ப வன்முறை உள்ளிட்ட சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் பெற முடியும். ஆனால், இதுபோன்ற சேவைகளினால் குறிப்பிட்ட நபர் மென்மேலும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளதாக ரெபியூஜி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது. "குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காகவும், உதவுவதற்காகவும் திறன்பேசி செயலிகளை உருவாக்கும் பல்வேறு நிறுவனங்களை நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால், அவை எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிராக, அதாவது பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடம் உள்ளிட்டவற்றை சமரசம் செய்து அவர்களுக்கு மென்மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் உண்டு." முன்னெப்போதுமில்லாத வகையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக பலரும் அதிக நேரத்தை வீடுகளில் செலவிடுகின்றனர். இதனால், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் அவற்றிலுள்ள மென்பொருட்கள், சேவைகளை பலரும் பயன்படுத்தும் சூழ்நிலை நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உறவுகளில் பிளவு ஏற்பட்டால் என்னவாகும் என்று செயலிகளை உருவாக்குபவர்கள் நினைத்து பார்க்க வேண்டுமென்று கேட் கூறுகிறார். "பொதுவாக தொழில்நுட்ப கருவிகளில் ஒரேயொரு மின்னஞ்சல் கணக்கை கொண்டே சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், உறவில் பிரச்சனை ஏற்பட்டு பிளவு ஏற்படும்போது, இன்னொரு நபர் தனது கணக்கையோ அல்லது சேவைகளையோ பயன்படுத்துவதில் சிக்கல் நேரிடும்" என்று அவர் கூறுகிறார். பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்படும் சுமை  பட மூலாதாரம், GETTY IMAGES   குடும்ப வன்முறைகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைப்பதற்கான பணியில், ஐபிஎம் நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர்கள் ஈடுபட்டனர். தங்களது ஆய்வின் மூலம் தெரியவந்த விடயங்களை கொண்டு, மற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களுக்கான வடிவமைப்பு கொள்கைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பின் விளைவுகளை குறித்து சிந்திக்க வேண்டும் என்பதைவிட அவற்றால் இலக்கு வைக்கப்படுபவர்கள் அதன் இயக்கம் குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டியது அவசியமென்று அடிக்கடி வலியுறுத்தப்படுவதாக அது கூறுகிறது. இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய ஐபிஎம்மின் லெஸ்லி நுட்டால், "தொழில்நுட்ப கருவிகள் அல்லது சேவைகளின் பாதுகாப்பில் உள்ள சுமை அதன் பயன்பாட்டாளரின் தோள்களில் இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வடிவமைப்புக்கும்போதே சில பொறுப்புகளையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறுகிறார். வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை தொலைதூரத்திலிருந்து இயக்கும்போது அதுகுறித்த எச்சரிக்கை ஒலி அந்த சாதனத்திலிருந்து எழுப்பப்பட வேண்டுமென்றும், மேலும் அதன் செயல்பாட்டை நிறுத்துவதற்கான வசதியும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறுகிறார். "வீட்டிலுள்ள அனைத்து நபர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் நிறைய தொழில்நுட்ப சாதனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சியான சூழ்நிலை குடும்ப வாழ்க்கையில் பல வேறுபாடுகள் இருப்பதை அங்கீகரிக்கவில்லை" என்று அவர் கூறுகிறார். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பெற்றோர்கள் பலர் ஒருங்கிணைந்த செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற செயலிகள் எண்ணற்ற தகவல்களை பகிர்வதால் சில வேளைகளில் அவை தவறாக பயன்படுத்தப்பட்டு உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. "இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் தங்களது தொழில்நுட்ப சாதனங்களில் பல சிறுசிறு தகவல்களை ஒருவருக்கொருவர் அணுக முடிவது பிரச்சனைகளுக்கும் வித்திடுகிறது. ஒருவேளை இது மற்றவர்களை துன்புறுத்தும் ஒருவரிடம் கிடைத்தால், திறன்பேசியில் பேட்டரி இல்லை என்று எளிதில் பொய் சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிவிட முடியாது" என லெஸ்லி கூறுகிறார்.   https://www.bbc.com/tamil/science-54599833  
  • தொடல் கலைப் பண்பாட்டு மையம் அடவு கலைக் குழு 12-01-2019 அன்று  நிகழ்த்திய ஒயிலாட்டம்...  
  • கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஆய்வு மாநாடு DicksithOctober 20, 2020   (எம்.ஜி.ஏ நாஸர்)கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் இவ்வருடத்திற்கான ஆய்வு மாநாடு இன்று பல்கலைக்கழக மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தில் நடைபெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் எம்ஜிஏ நாஸர் அறிவித்துள்ளார்.நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களினால் பிரதேச அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாடு எனும் கருப்பொருளில் எழுதப்பட்ட 32 கட்டுரைகள் இம்மாநாட்டில் ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.பீடாதிபதி கலாநிதி ஜே. கென்னடி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் துணைவேந்தர் பேராசிரியர் எப்.சி. ராகல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.அமெரிக்க மிஷன் இணைப்பாளர் கலாநிதி தர்சன் அம்பலவாணர் இங்கு திறப்புரையாற்றினார்.கலை, கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த கட்டுரைகள் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக மாநாட்டின் செயலாளர் முதுநிலை விரிவுரையாளர் எஸ். சந்திரகுமார் தெரிவித்தார்.           http://www.battinews.com/2020/10/blog-post_691.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.