Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2 ஆண்டுகளுக்குள்ளே வைரஸை முடிவுக்கு கொண்டுவர முடியும் – உலக சுகாதார அமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Tedros-Adhanom-Ghebreyesus.jpg

2 ஆண்டுகளுக்குள்ளே வைரஸை முடிவுக்கு கொண்டுவர முடியும் – உலக சுகாதார அமைப்பு

தற்போது இருக்கும் தொழில்நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவற்றால் 2 ஆண்டுகளுக்குள்ளே வைரஸை முடிவுக்கு கொண்டுவர முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனம் கெப்ரியாசிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1918 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல் போன்று கொரோனா வைரஸ் நீடிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் என்பது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைவரும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினை என தெரிவித்த அவர் கடந்த 1918 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல் பரவிய வேகத்தைவிட, இந்த கொரோனா தொற்றை வேகமாக பரவுவதற்கு உலகமயமாக்கல், நெருங்கிய தொடர்பு, போக்குவரத்து ஆகியவை அனுமதித்துவிட்டன என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆனால், ஸ்பானிஷ் ப்ளூ பரவியபோது குறைந்த அளவு தொழில்நுட்பம், மருத்துவக் கண்டுபிடிப்புகள் மட்டுமே இருந்ததால், அதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் முடியவில்லை.

ஆனால், கொரோனாவை நவீன தொழில்நுட்பம், மருத்துவக்கண்டு பிடிப்புகளால், 2 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சி இருந்தால் நிச்சயம் இந்த விடயம் சாத்தியமாகும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1918-ம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல் காரணமாக உலகம் முழுவதும் 50 கோடி பேர் அதாவது, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருபகுதியினர் பாதிக்கப்பட்டனர்.

அதேபோன்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரோன வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 2 இலட்சம் கோடியே 33 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8 இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/2-ஆண்டுகளுக்குள்ளே-வைரஸை/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.