Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாகாண சபைத் தேர்தலில் வடக்கு - கிழக்கிலும் களமிறங்குகிறது மனோ கணேசன் கட்சி.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபைத் தேர்தலில் வடக்கு - கிழக்கிலும் களமிறங்குகிறது மனோ கணேசன் கட்சி.!

1598172437_m2.jpg

"எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடும்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தென்னிலங்கைக்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுமாறு பல அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன.

அந்த அழைப்புக்களைப் பரிசீலனை செய்து வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய நேசக் கட் சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் திகதி குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி சம்பந்தமான முடிவுகளை உரிய நேரத்தில் எடுப்போம்.

நாம் வடக்கு, கிழக்கில் போட்டியிடும்போது தமிழ் முற்போக்குக் கூட்டணியாக மாத்திரமே போட்டியிடுவோம். ஐக்கிய மக்கள் சக்தியாக ஒருபோதும் வடக்கு, கிழக்கில் போட்டியிட மாட்டோம். வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொலைபேசி சின்னம் வராது" - என்றார்.

'வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரோடு இணைந்து போட்டியிடுவீர்களா?' என மனோ கணேசனிடம் வினவியபோது, "தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எங்களுடைய நேசக் கட்சிதான். அது போல் பலநேசக் கட்சிகள் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன. அவர்களோடு கலந்தாலோசித்து பயணிப்போம்" – என்று பதிலளித்தார்.

http://aruvi.com/article/tam/2020/08/23/15870/

டிஸ்கி :

ஒரு குடல் விடாம எல்லாம் வெளிய வந்துடிச்சே அழகேசா..☺️..😊

hqdefault.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒரு ஆசைதான்... கட்சி.. தொடங்கி கிளை விடுங்கோ...

Edited by alvayan
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சரியான முடிவு மனோ.

இலங்கையில் இப்போ அரசியல் செய்பவர்களில் “அரசியல் தலைவர்” என்ற பதம் இவர் ஒருவருக்கு மட்டும்தான் பொருந்தும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

மிகச் சரியான முடிவு மனோ.

இலங்கையில் இப்போ அரசியல் செய்பவர்களில் “அரசியல் தலைவர்” என்ற பதம் இவர் ஒருவருக்கு மட்டும்தான் பொருந்தும்.

உண்மை கோசான். தனது கருத்துக்களை... எந்த இடத்திலும், 
வெளிப்படையாக தெரிவிக்கும் ஒருவர் தான்... மனோ கணேசன் 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.