Jump to content

காணாமல்போன புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு இழப்பீடே தீர்வு .. அதுவும் கட்டாயமில்லை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போன புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு இழப்பீடே தீர்வு .. அதுவும் கட்டாயமில்லை.!

kekaliya_rambukvela.jpg

காணாமல்போன புலி உறுப்பினர்களை தேடவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் வேண்டுமென்றால் இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம் என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

"இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளனர். இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது செல்லுபடியான விடயம். தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் காணாமல்போயிருந்தால் அவை செல்லுபடியற்றதாகும். அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. ஆனால், மனிதாபிமான ரீதியில் காணாமல்போன புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சிந்திக்கலாம். ஆனால், அது அவர்களது உரிமை ஆகாது."

- இவ்வாறு ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"காணாமல்போனோர் குறித்து தேட அரசு தயார். ஆனால், அவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களாக இருப்பின் அவர்களுக்கான இழப்பீடு தொடர்பில் இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டி வரும். சிவில் மக்களாக இருப்பின் இழப்பீடு வழங்கலாம். காணாமல்போனோரில் அதிகமானவர்கள் சிவிலியன்களாக அவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம். அதுபோன்றே காணாமல்போன இராணுவத்தினர்களுக்காகவும் இழப்பீடு வழங்கப்படும்.

காணாமல்போனதாகக் கூறப்படுவோர் இறந்திருக்கலாம் என்று நாங்கள் எண்ணுகின்றோம். அவர்கள் உயிருடன் இல்லை என்றே கருதுகின்றோம். ஆனால், அதனை உறுதியாகக் கூற முன்னர் கணக்கெடுப்பு ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதையும் இங்கு கூறி வைக்கின்றேன்.

சில காணாமல்போனோர் எனக் கூறப்படுவோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். எனவே, இது தொடர்பில் பரந்துபட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். போர் நிறைவுக்கு வந்து தற்போது 11 வருடங்கள் கடந்துவிட்டன. 7 வருடங்களின் பின்னர் சான்றிதழ் வழங்கலாம்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/08/23/15873/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அவர் தன்னுடைய அறிவுக்குத்தகுந்த விதத்தில் பேசுகிறார். இதை பெரிதுபடுத்தாமல் அவரைத் தாண்டிச் செல்வதுதான் முறை 😂

(அவரின் அறிவுக்குத் தகுந்த அமைச்சு கிடைத்திருக்கிறது 😏)

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By புரட்சிகர தமிழ்தேசியன்
      அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டனர் தமிழர்.?!

      வடக்கு, கிழக்கில் தமிழர்கள் 'உரிமைகள் வேண்டும்' என்ற கோஷத்துடன் கடந்த காலங்களிலும், தற்காலத்திலும் அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டார்கள்.? ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம், ஒரு நாள் ஹர்த்தால் போராட்டமும்தான் அவர்களின் தற்போதைய அறவழிப் போராட்டங்களா?"
      - இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல.
      "தமிழர்கள் அறவழியில் போராடியோ அல்லது மீண்டும் ஆயுதம் தூக்கிப் போராடியோ அரசை ஒரு போதும் மிரட்ட முடியாது. அரசு நடு நிலையுடன் செயற்படுகின்றது. இதைத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கூறி வைக்க விரும்புகின்றோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
      'வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும் இங்கு நடைபெற்ற அரசுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களின் வெற்றிச் செய்திகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.
      அவர் மேலும் தெரிவித்ததாவது:-
      "சிங்களவர்களைப் போல் தமிழர்களும் சகல உரிமைகளையும் இந்த நாட்டில் அனுபவிக்கின்றார்கள். அவர்கள் தற்போது பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூரவே அனுமதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தையும், ஹர்த்தால் போராட்டத்தையும் நடத்தியுள்ளார்கள். தமிழ்க் கட்சிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே தமிழர்கள் இந்த ஒரு நாள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இதனால எந்தப் பயனையும் தமிழர்களும், தமிழ்க் கட்சியினரும் ஒருபோதும் பெற மாட்டார்கள்.
      இந்த ஏமாற்றுப் வழி போராட்டங்கள் வெற்றியடைந்துள்ளன என்று தமிழ்த் தலைவர்கள் பகல் கனவு காண்கின்றார்கள். இவ்வாறு ஒரு நாள் போராட்டங்கள் வெற்றியடைந்தன எனில் , சுமார் 70 வருடங்களாக தமிழர்கள் ஏன் அறவழியிலும், ஆயுதம் தூக்கியும் போராடினார்கள்.?
      தமிழ்த் தலைவர்களின் இந்த ஏமாற்று வேலைகளுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இனியும் துணைபோகக்கூடாது" - என்றார்.
      http://aruvi.com/article/tam/2020/10/01/17392/
    • By புரட்சிகர தமிழ்தேசியன்
      சர்வதேசம் ஒருபோதும் தீர்வு வழங்காது என சம்பந்தனுக்கு அரசாங்கம் அறிவுரை.!

      "சர்வதேசம் ஒருபோதும் இலங்கைத் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கமாட்டாது. சர்வதேசத்தை நம்பி ஏமாந்துபோக வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்." - இவ்வாறு ராஜபக்ச அரசின் பேச்சாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
      'தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்படவில்லை. அவர்களின் பின்னால் சர்வதேசம் நிற்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
      அவர் மேலும் தெரிவித்ததாவது:-
      "சமஷ்டி முறைமையிலான தீர்வை ஒருபோதும் தமிழர்களுக்கு அரசு வழங்காது. புதிய நாடாளுமன்றத்தில் மூவின மக்களுக்கும் உரித்தான பொதுவான தீர்வையே அரசு வழங்கும். இந்த நிலைப்பாட்டிலிருந்து நாம் சற்றேனும் பின் நகரமாட்டோம்.
      தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விடயங்களையே வலியுறுத்தியுள்ளது. அதனாலேயே அந்த விஞ்ஞாபனத்தை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.
      சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் தத்தமது நலனில் அக்கறைகொண்டுதான் செயற்படுகின்றன. எனவே, சர்வதேசம் ஒருபோதும் இலங்கைத் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கமாட்டாது. சர்வதேசத்தை நம்பி ஏமாந்துபோக வேண்டாம் என்று சம்பந்தனிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
      அதேவேளை, சம்பந்தன் இலங்கையில் இருந்துகொண்டுதான் வீரவசனம் பேசுகின்றார். அவர் சர்வதேசத்தில் இருந்துகொண்டு வீரவசனம் பேசவில்லை என்பதை அவரே கவனத்தில்கொள்ள வேண்டும்.
      தேர்தல் காலம் என்றபடியால் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
      நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் அநாதைகள் என்று கூறவும் மாட்டோம்; அப்படி நினைக்கவும் மாட்டோம். தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இலங்கைத் தாயின் பிள்ளைகள் என்றே அரசு நினைத்துச் செயற்படுகின்றது. ஆனால், தமிழர்களின் அரசியல் தலைமைகள்தான் அவர்களைத் தனி வழியில் செல்லத் தூண்டுகின்றன. இதைத் தமிழ் மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்" - என்றார்.
      http://aruvi.com/article/tam/2020/07/23/14782/
    • By புரட்சிகர தமிழ்தேசியன்
      புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

      “பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.”
      – இப்படிக் கூறியுள்ளார் மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.
      ‘கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றாத காரணத்தாலேயே நாட்டு மக்கள் அந்த  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
      அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
      “கொரோனா வைரஸ் பரவுவதற்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நோய் நாட்டைப் பார்த்தோ அல்லது இனத்தைப் பார்த்தோ அல்லது மொழியைப் பார்த்தோ அல்லது அரசைப் பார்த்தோ வருவதில்லை.
      இந்த வைரஸ் நோய் உலகெங்கும் பரவி வருகின்றது. இலங்கைப் பிரஜை ஒருவர் மட்டுமே இங்கு கொரோனா நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏனையவர்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு தலைமையிலான சுகாதாரக் குழுவினர் எடுத்துள்ளனர்.
      உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றிய காரணத்தால்தான் கொரோனா வைரஸ் இங்கு ஆட்கொள்ளவில்லை. தற்போது இங்கு ஒருவர் மட்டுமே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
      அவர் விரைவில் சுகமடைவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சீனப் பெண்ணைக் குணமாக்கி அவரை நாம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
      எனவே, இந்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை” – என்று கூறியுள்ளார்.
      http://www.vanakkamlondon.com/hehaliya-12-03-2020/
      டிஸ்கி

  • Topics

  • Posts

    • கிருபன் நீங்கள் வெளியிட்ட நீண்ட கட்டுரை படித்து பலதும் தெரிந்து கொண்டேன் நன்றி. இந்தியாவிலிருந்து பிரிந்த பாக்கிஸ்தானும் பாக்கிஸ்தானிலிருந்து பிரிந்த பங்களாதேசும் தமிழீழத்தை விட மிக பெரிய நாடுகள் அல்லவா🤔
    • யாழில் Bond கல்வி நிலையத்துக்கு அருகாமையில் றீகல் திரையரங்கு இருந்ததாக ஞாபகம். 
    • அவரை  கடைசி காலங்களில் சந்தித்து இருக்கிறேன் .
    • ரதி, எனக்கும் இதே உணர்வு வருவதுண்டு, குறிப்பாக நம்மோடு படித்தோர்க்கு வளர்ந்த பிள்ளைகள் இருப்பதைப் பார்க்கும்போது.  எனினும் பலரும் சொல்வதுபோல 'வயது சும்மா ஒரு எண்ணிக்கை மட்டுமே' என்று நினைத்து அமைதிகொள்வேன். ஒரே வயதில் இருக்கும் இருவர் வெவ்வேறு விதமாக முதுமையடையலாம்; ஒருவருக்கு 50 வயதிலேயே தலைநரைத்து, தளர்ச்சியடைந்து, நோயாளியாகலாம்; மற்றவர் அதே வயதில் இன்னும் இளைஞனாக இருக்கலாம், உடலளவிலும், மனதளவிலும்.  இன்னொரு விதமாகப்பார்த்தால், ஒரு 70 வயதுடையவரையும், இன்னொரு 95 வயதுடையவரையும் நாம் வயோதிகர் என்றே சொல்கிறோம். ஆனால் இவர்களுக்கிடையில் ஒரு தலைமுறை இடைவெளியே இருக்கு; 25 வருஷ வித்தியாசம். இங்கும் கூட 95 வயதானவர் நோய்கள் எதுவும் அற்றவராகவும் (உடல் தளர்ச்சி இருக்கலாம்), மனவுறுதியுடையவராகவும் இருக்கும் அதேவேளை 70 வயதுடையவர் உடலாலும் மனதாலும் நலம் குன்றி இருக்கலாம் - ஒரே ஊரிலே ஏன் ஒரே குடும்பத்திலேயே இப்படியான இருவரைப் பார்த்திருப்போம்.  இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது அவ்வளவு பெரிய ரகசியமல்ல; நேர்மறை எண்ணங்களுடன் நம் physical, mental, emotional and spiritual ஆரோக்கியங்களுக்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை இயன்ற வரை செய்து, அவசியமில்லாமல் மற்றோருடன் நம்மை ஒப்பிடாது நமக்குப் பிடித்த, முக்கியமான விடயங்களில் மட்டும் நம் முழுக்கவனத்தையும் செலுத்தி நாம் வாழ்ந்தால் 'age is just a number' தான்! இது நம் வாழ்க்கை முறைத் தெரிவும் கூட - lifestyle choice.  ஜப்பானியரில் நூறு வயதும் கடந்து வாழும் பலர் ஆரோக்கியமாக இருப்பதை நாம் அறிந்திருப்போம். சுருங்கச் சொன்னால் அவர்களது வாழ்க்கை முறையும் அதற்கு முக்கியமான ஒரு காரணம். (இணையத்திலும், YouTubeஇலும் இது பற்றிய நம்பகரமான தகவல்கள் இருக்கும். நேரமிருந்தால் பாருங்கள்).  இதை எழுதும்போது எனக்கும் ஒருவித விழிப்புணர்வு ஏற்படுகிறது. எனவே இதை எழுதத்தூண்டிய உங்கள் கருத்துக்கு நன்றி ரதி. 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.