Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசியப் பட்டியல் தெரிவு குறித்து தயாசிறி ஜெயசேகரவின் விசனம் தேவையற்றது- சுரேன் ராகவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Suren-Ragavan.jpg

தேசியப் பட்டியல் தெரிவு குறித்து தயாசிறி ஜெயசேகரவின் விசனம் தேவையற்றது- சுரேன் ராகவன்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியலில் தான் நியமிக்கப்பட்டமை குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர விசனமடைவது தேவையற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய்பபட்டியலில் தெரிவுசெய்யுமாறு தான் யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட குழுவே தன்னை தேசியக் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் பரிந்துரையில் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் பெயரைப் புறக்கணித்து சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டமை கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவே தேசிய பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவுசெய்தது.

இதன்போது, 29 தேசியப் பட்டியல் ஆசனங்களில் சுதந்திரக் கட்சியில் இருந்து மூவரின் பெயர்கள் பொதுஜன பெரமுனவிடம் வழங்கப்பட்டிருந்தன. அதில் ஆரம்பத்திலிலேயே ஒருவரது பெயர் பொதுஜன பெரமுனவால் நீக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் பொதுஜன பெரமுனவிற்கு 17 தேசியப் பட்டியல் ஆனங்களே கிடைத்தன. அதற்கமைய அந்தக்கட்சி சுதந்திரக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவரை மாத்திரமே தெரிவு செய்தது.

அந்த ஒரு தெரிவாக நான் தெரிவு செய்யப்பட்டேன். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச சில சந்தர்ப்பங்களில் இது குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த 20ஆம் திகதி முதலாவது நாடாளுமன்ற அமர்வு நிறைவடைந்தவுடன் அன்றைய தினம் மாலை சுதந்திரக் கட்சியின் செயற்குழு, மத்தியகுழு மற்றும் அரசியல் குழு என்பன கூடியபோது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தேசியப் பட்டியல் ஆசனத்தில் சுரேன் ராகவன் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து அநாவசியமான கருத்துக்களை வெளியிடுவது பிரயோசனமற்றது எனக் கூறியிருந்தார். இவ்வாறு மைத்திரிபால சிறிசேன கூறிய விடயமே எனது நிலைப்பாடாக இருக்கின்றது.

உண்மையில் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் கட்சியின் செயலாளருக்கே காணப்படுகிறது. என்றாலும் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் சுதந்திரக் கட்சியும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதால் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அந்தக் கட்சியின் உயர்மட்டக் குழுவிற்கே காணப்பட்டது. அதற்கமைய அவர்கள் என்னைத் தெரிவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில், உத்தியோகபூர்வமாக நடந்து முடிந்த ஒரு விடயம் பற்றி தனிப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்துவருவதால் எவ்வித பிரயோசனமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

http://athavannews.com/தேசியப்-பட்டியல்-தெரிவு/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலை இருந்து போட்டியள்..நல்ல ஈரப்பலாக்கை சாப்பாடுகள் கிடைக்கும்..சாப்பிட்டவைக்கு துரோகம் செய்யாமல்..இனத்துக்கு துரோகம் பண்ணுங்கோ..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

கனடாவிலை இருந்து போட்டியள்..நல்ல ஈரப்பலாக்கை சாப்பாடுகள் கிடைக்கும்..சாப்பிட்டவைக்கு துரோகம் செய்யாமல்..இனத்துக்கு துரோகம் பண்ணுங்கோ..

அவர் எப்போது தன்னை தமிழனாக அடையாளம் காட்டினார். பெயரைவைத்து நீங்களாகவே எல்லாவற்றையும் கற்பனை செய்தால் அதற்கு அவர் எப்படிப் பொறுப்புக் கூற முடியும். 😂

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அவர் எப்போது தன்னை தமிழனாக அடையாளம் காட்டினார். பெயரைவைத்து நீங்களாகவே எல்லாவற்றையும் கற்பனை செய்தால் அதற்கு அவர் எப்படிப் பொறுப்புக் கூற முடியும். 😂

ஓ ..அதுவே..விசயம்...நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை..

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் எழரிசி ஓவியமே  
    • 53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர் - ந.லோகதயாளன். October 25, 2020 வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை சேகரிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வித்தியாசமான சித்தனையில் வித்தியாசமான பொருள் ஒன்றைச் சேகரித்து யுத்தகாலம் முதல் இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார். தனது தொழில் நிமித்தம் பல நாடுகளின் பணியாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியதனால் அத்தனை நாடுகளினதும் ஓர் பொருளை சேகரிக்க எண்ணி இன்று 35 ஆண்டுகளிற்கு முன்பிருந்து ஓர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அத்தனை நாட்டுப் பணியாளர்களிடமிருந்தும் அந்த நாடுகளில் பாவனையில் இருக்கும் தீப்பெட்டிகளை கோரிப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவிலை வசிப்பிடமாக கொண்டபோதும் அநுராதபுரம் மிகிந்தலையை சொந்த இடமாக கொண்டவர். என்பதனால் 1977 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களிற்கு வழிகாட்டியாக தொழில் புரிந்துள்ளார். இவ்வாறு தொழில் புரியும் காலத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடத்தில் இருந்து அவர்களது நாட்டின் தீப்பெட்டி ஒன்றை நினைவாக பெற்றுக்கொண்டு அதனை சேகரித்துள்ளார். இந்த நிலையில் இலங்கையில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் உச்சம் பெற்றதோடு முழுமையாக யாழ்ப்பாணம் கோண்டாவிலிலேயே வாழ்கின்றார். இவ்வாறு கோண்டாவிலிற்கு கொண்டுவந்த சகல நாட்டின் தீப்பெட்டிகளையும் பேணிப் பாதுகாக்கும் அதேநேரம் 1995 ஆம் ஆண்டு யாழில் இருந்து இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்று வன்னியிலும் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த சமயம் வன்னியில் 1997 ஆம் 98 ஆம் ஆண்டு காலத்தில் சாதாரணமாக தீப்பெட்டி 2 ரூபாவாக இருந்தபோதும் தடையின் காரணமாக 15 ரூபா முதல் 20 ரூபா வரை சென்றபோதும் இந்த தீப்பெட்டிகளை பாவனைக்கு எடுக்கவே இல்லை என தனது பழைய நினைவுகளை மீட்டுகின்றார். இவ்வாறு 1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டுவரையில் நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்தபோதும் பல இடப்பெயர்வுகள் , மழை , தண்ணியென அனைத்திலும் அகப்படாது பாதுகாத்த நிலையில் இன்றும் 53 நாடுகளின் தீப்பெட்டிகளை முழுமையாகவும் மேலும் சில தீப்பெட்டிகள் சேதமடைந்த நிலையிலும் பராமரிக்கின்றார். இவ்வாறு பேணிவரும் தீப்பெட்டிகளை ஏதொ ஒரு வகையில் பேணி பராமரிப்பது மட்டுமன்றி இதனை தொடர என்ன செய்யலாம் என்ற கேள்வியை எழுப்புவதோடு இவற்றினை நீண்டகாலமாக பாதுகாத்து வரும் விடயம் அறிந்த சிலர் ஆச்சரியமாக பார்த்தாலும் மேலும் சிலர் எள்ளி நகையாடியவர்களும் உண்டு என்கின்றார். இவ்வாறு ஓர் வித்தியாசமான சிந்தனையுடன் இருப்பவரிடம் பெயர் , முகவரி , வயதினைக் கேட்டபோது எனது முயற்சி எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று விரும்புகின்றேனே அன்றி இதனால் நான் பெயர் எடுக்க விரும்பவில்லை எனது வாழ் நாளில் இழந்தவை அதிகம் இதன் மூலம் எதனையும் பெற விரும்பவில்லை எனத் தெரிவித்ததோடு தீப்பெட்டிகளை நேர்த்தியாக படமாக்குங்கள் ஆனால் என்னை விட்டுவிடுங்கள் எனத் தெரிவித்ததோடு இது அடுத்த தலைமுறை மாணவர்களிற்கு ஏதோ ஒரு வழியில் பயன்படுமாக இருந்தால் நான் இவ்வளவு காலமும் பாதுகாத்த ஒன்றிற்கு பெறுமதி கிடைத்ததாக கருதுவேன். எனக்கு பிற்காலத்தில் என்னால் சேகரிக்கப்பட்ட இப் பொருட்களை உள்ளூரில் உள்ள ஓர் பொது அருங்காட்சியங்கள் ஒன்றில் அல்லது பொதுவான இடத்தில் பார்வைக்கு உகந்த்தாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை அதற்கும் முயற்சிப்பேன் . என்றார்.   https://globaltamilnews.net/2020/152332/
    • மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!  3 Views மட்டக்களப்பில் மேலும் 16பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியில் மேலும் 16பேர்  கொரோனா தாக்கத்திற்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அ.லதாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்ததாக தெரிவிக்கப்படும் 65பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதனடிப்படையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 11பேர் இனங்காணப்பட்டதுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனை மூலம் 16பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. அனைவரையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அநாவசியமாக வெளியில் செல்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது   https://www.ilakku.org/மட்டக்களப்பில்-அதிகரிக்/
    • தமிழர் தாயகம் ‘தமிழீழம்’ -அன்பன் October 26, 2020     Share      36 Views ஈழத்தமிழினத்தின் தாயகம், ‘தமிழீழம்.’ இது இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் புத்தளம், சிலாபம் மாவட்டக் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய 20,000 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்டது. இந்த தமிழர் தாயக நிலப்பரப்பிற்கும் சிங்களவர் வாழும் நிலப்பரப்புக்கும் இடையே பெரும் காட்டுப் பிரதேசம் எல்லையாக இருந்தது. கி.பி. 1500ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழர் தாயகப் பகுதிகள் ஈழத்தமிழர்களால் ஆளுகை செய்யப்பட்டது. சிங்களவர் பகுதிகள் சிங்களவர்களால் ஆளுகை செய்யப்பட்டது. கி.பி.1796ஆம் ஆண்டில் இலங்கைத் தீவை ஆக்கிரமித்த பிரித்தானியர்கள், தமது ஆளுகை வசதிக்காக 1832ஆம் ஆண்டு தமிழர் தாயகப் பகுதிகளையும் சிங்களவர் தாயகப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒற்றையாட்சி முறைக்கு கீழ் கொண்டு வந்து ஆளுகை செய்தனர். இந்த நிலை 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது வரை தொடர்ந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த போது, தமிழர் தாயகப் பகுதிகள் சிங்கள அரசின் ஆளுகைக்கு கீழ் கொண்டுவரப்பட்டது. 1948ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, இலங்கையை ஆண்ட சிங்கள பௌத்த இனவாத அரசுகள், தமிழர் தாயகத்தைச் சிங்களமயப்படுத்தி தமிழர் தாயக எணணக்கருவைச் சிதைக்கும் சிங்களக் குடியேற்றத் திட்டங்களைப் பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் தமிழ் மொழியை அழித்து, தமிழர் வரலாற்றைத் திரித்து கலை பண்பாட்டைச் சீரழித்து, தமிழர் தாயக பூமியை சிங்கள பூமியாக மாற்றி, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் இறையாண்மையையும் மறுக்கும் நிலையை உருவாக்கச் சிங்கள அரசுகள் முற்பட்டுள்ளன. இதை அடைவதற்கு சிங்கள அரசுகள் பல்வேறுபட்ட சூழ்ச்சிச் செயற்றிட்டங்களை  நிறைவேற்றி வந்துள்ளன. அத்துடன் நிறைவேற்றியும் வருகின்றன. இந்த வழியில் ஈழத்தமிழினத்தின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீர்குலைத்து அரசியல் உரிமையைக் கேள்விக்குறியாக்கிப் பலவீனப்படுத்தச் சிங்கள அரசுகள் திட்டமிட்டுள்ளன. தமிழர் தாயக எல்லைகளை கைப்பற்றும் திட்டங்கள் தமிழர் தாயகப் பகுதிகளைத் துண்டாடும் திட்டங்கள் தமிழர் தாயத்தின் கரையோரப் பகுதிகளைச் சிங்களமயப்படுத்தும் திட்டங்கள் ஈழத்தமிழர் வரலாற்றைத் திரிவுபடுத்தும் திட்டங்கள் தமிழர் தேசியத்தைச் சிதைத்து, அரசியல் உரிமையை மறுக்கும் திட்டங்கள் எனப் பல்வேறு செயற்றிட்டங்களைச் சிங்கள அரசுகள் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டங்களைச் சுலபமாக நிறைவேற்றும் வகையில் வாய்ப்பான சூழ்நிலைகளும் உருவாக்கப்பட்டன. *தமிழர் தாயகத்தை இராணுவமயப்படுத்தல் *தமிழர் தாயக மாவட்டத்தின் பொறுப்பாக சிங்கள அரச அதிகாரிகளையும் இராணுவ அதிகாரிகளையும் நியமித்தல் *தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள பௌத்த விகாரைகளை உருவாக்குதல் *தமிழர் தாயகப் பகுதிகளுடன் சிங்களப் பகுதிகளை இணைத்தல் *தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து சிங்களவர் பாராளுமன்றப் பிரதிநிதிகளாகச் செல்லும் நிலையை ஏற்படுத்துதல் என்ற அடிப்படையில் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துதல் *இந்த நிலைமைகள் யாவும் ஈழத்தமிழினத்தின் வாழ்வு நிலைகளையும் வாழ்வு இயக்கங்களையும் மாற்றியமைத்தன. ஈழத்தமிழினத்தின் எழுச்சியையும் அரசியல் உரிமையையும் பலவீனப்படுத்தியுள்ளது. அத்துடன் பல்வேறு மாற்றங்களைத் தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தியுள்ளன. *ஈழத்தமிழர்கள் இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. *தமிழர் தாயகத்தில் ஈழத்தமிழரின் இனவிகிதாசாரம் குறைந்து சிங்களவரின் இனவிகிதாசாரம் அதிகரித்துள்ளது. *தமிழர் தாயகப் பகுதிகளில் விகிதாசாரத் தேர்தல் முறைகள் மூலம் தமிழர் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைந்து, சிங்களவர் பிரதிநிதித்துவமும் சிங்களக் கட்சிகளின் பிரதிநிதித்துவமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. *தமிழர் தாயகத்தின் வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. *ஈழத்தமிழினத்தின் பொருளாதார வாழ்வு தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. *தமிழர் தாயகத்தின் பகுதிகளில் தமிழ்ப்பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. *தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள மாவட்டங்களும் சிங்களப் பிரதேசச் செயற்பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. *தமிழர் தாயகத்தின் மொத்த நிலப்பரப்பில் 40 வீதத்துக்கு மேற்பட்ட நிலப்பரப்பு முற்றுமுழுதாகச் சிங்களமயப்படுத்தப்பட்டுள்ளது. *ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கோட்பாடு மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இன்று ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவின் உள்ளகத்தினுள்ளும்  புலம்பெயர்ந்து வெளியகத்தில் சர்வதேசத்திலும் வாழ்ந்து வந்தாலும், ஒரே சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையே கொண்டுள்ளனர். இந்தச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை சிறீலங்கா அரசு அழிக்க நினைக்கிறது. ஈழத்தமிழினம் ஒன்றிணைந்து, தனது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைப் பலப்படுத்த வேண்டும். இதற்கான செயற்பாடுகளை ஈழத்தமிழினம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இதற்காக *ஈழத்தமிழினம் ஒன்றிணைந்து தம்மைப் பலப்படுத்த வேண்டும் *ஈழத்தமிழர்கள் தமது சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டும் *தமிழர் தாயகப் பகுதிகளையும் எல்லைகளையும் காக்கும் செற்றிட்ட வடிவங்களை உருவாக்கி அவற்றை மேற்கொள்ள வேண்டும் *ஈழத்தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தி, எதிர்காலச் சந்ததியினர் அவற்றை அறியும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். *இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களைப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். *ஈழத்தமிழர்கள் தமது செயற்பாடுகளை நிறுவனமயப்படுத்தி தமிழர் தாயகத்தின் கிராமங்களில் அமைப்புக்களைக் கட்டமைத்துப் பலப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். *ஈழத்தமிழர்களின் அரசியல் அமைப்புகள் யாவும் ஒன்றிணைந்து செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும். *கடந்த காலங்களில் ஈழத்தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட சிங்கள இனவாதத்தின் அடக்குமுறைகளையும், தமிழினத்தின் அவலங்களையும் தமிழர் தொன்மை, உரிமை என்பவை பற்றி பன்னாட்டு அரங்கில் தொடர்ச்சியான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்.. *தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் நிறுவனமயப்படுத்தலுக்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். *சர்வதேச ரீதியாக ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை எடுத்துரைத்து, தமிழர்களின் அரசியல் உரிமையையும், இறையாண்மையையும் நிலைநாட்டிடவேண்டும்.   https://www.ilakku.org/தமிழர்-தாயகம்-தமிழீழம்/
    • 'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி  (நேர்காணல்:- ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்து விலகியுள்ள சுமந்திரனுடன் கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா போன்றவர்கள் எவ்வாறு கூட்டிணைந்து செயற்பட போகின்றார்கள். தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானவராக இருக்கும் சுமந்திரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றுபடும் அரசியல் தரப்புக்களின் கலந்துரையாடல்களில் பங்கேற்பது தமிழினத்தின் சாபக்கேடாகும் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தன் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.  அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,  கேள்வி:- பொதுத்தேர்தலுக்கு பின்னரான சூழலில் தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைவதற்கான நடவடிக்கைகள் வெற்றிகண்டமை மற்றும் தங்களின் பங்கேற்பு தொடர்பில் கூறுங்கள்? பதில்:- தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது ராஜபக்‌ஷவினரின் அரசாங்கம் அதனை முழுமையாக தடுத்து நிறுத்துவதற்காக செயற்பட்டது. நீதிமன்றங்கள் ஊடாக விசேட கட்டளைகள் பெறப்பட்டு ஒன்றுகூடுவது தடுக்கப்பட்டது.  இனவிடுதலைக்காக அஹிம்சை முறையில் போரில் உயிர் துறந்த அந்த தியாகச் செம்மலை நினைவு கூருவதற்கான எமது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதோடு அதற்கு எதிரானவர்களின் குரல்வளையை நசுக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.  இந்தப்பின்னணியில் தான் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நினைவேந்தல் தடைக்கு எதிராக அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தினை முன்னெடுத்தன. அத்துடன் ராஜபக்ஷவினரின் அடக்குமுறைக்கு எதிராக ஹர்த்தாலும் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட்டமையால் இந்த முன்னெடுப்புக்கள் வெற்றியளித்திருந்தன.  இந்த அடிப்படையில், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளுக்கு அப்பால், பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள் உள்ளிட்ட விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான பூர்வாங்க கலந்துரையாடல்கள் இடம்பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த விடயங்களில் எமது கட்சி இதயசுத்தியுடன் செயற்பட்டு வருகின்றது. கேள்வி:- ஆனால் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான முக்கிய கட்டத்தினை எட்டும் பேச்சுவார்த்தையொன்று கடந்த 17ஆம் திகதி இடம்பெற ஆரம்பித்த தருணத்தில் நீங்கள் திடீரென வெளியேறியமைக்கான காரணம் என்ன? பதில்:- இந்தக் கூட்டத்திற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். அப்படியிருக்க, திடீரென பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதிரடிப்படைகளுடன் கூட்டம் நடைபெறும் மண்டபத்தினுள் பிரவேசித்தார். அவரும் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே வந்திருந்தார் என்பதை உணர்ந்து கொண்டேன். அதன் காரணத்தினால் தான் வெளியேறினேன். கேள்வி:- நீங்கள் ஒரு கட்சியியை பிரதிநிதித்துவப்படுத்துவராக இருக்கையில் சுமந்திரனின் வருகையால் வெளியேற வேண்டிய அவசியமில்லையே? பதில்:- கடந்த பொதுத்தேர்தலில் யாழ்.மத்திய கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்றபோது சுமந்திரனின் இதே விசேட அதிரடிப்படைகள் தான் மாவை.சேனாதிராஜாவின் புதல்வரை தாக்கியது. எமது கட்சியின் கலைகலாசார பிரிவு பொறுப்பாளரை தாக்கியது. இன்னும் பல இளைஞர் யுவதிகள் தாக்கப்பட்டார்கள். விசேட அதிரடிப்படைகள் சுமந்திரனுக்கு பாதுகாப்பு அளிப்பைவையாக இருக்கலாம் ஆனால் அவை எமக்கு எதிராக துப்பாக்கியை நீட்டுபவையே. அத்தகைய படைகளின் பாதுகாப்புக்கு மத்தியில் தான் தமிழர்களுக்கான கூட்டுச் செயற்பாடு பற்றி பேச வேண்டும் என்பது துர்ப்பாக்கிய நிலை தான். என்னைப் பொறுத்தவரையில், முள்ளிவாய்கால் அவலத்திற்கு காரணமான படைகளின் மத்தியில் நின்று பேச்சுவார்த்தைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதனாலேயே வெளியேறினேன். கேள்வி:- தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் கூட்டிணைவு செயற்பாட்டிற்காக நீங்கள் நெகிழ்வுப் போக்கினை கடைப்பிடித்திருக்கலாம் அல்லவா? பதில்:- எனக்கு அரசியல் அனுபவம் குறைவுதான். ஆனால் அரசியலில் ஆகக்குறைந்த நேர்மைத்தன்மையாவது இருக்க வேண்டும் என்பதில் திடமாகவே உள்ளேன். ஏற்கனவே எமது ஒன்றிணைந்த செயற்பாட்டு முயற்சிகளுக்கு தோல்வி அடைந்தவர்கள் தம்மை நிலைப்படுத்திக்கொள்வதற்காக கூட்டிணைய முயற்றி செய்கின்றார்கள் என்ற பார்வையொன்று காணப்படுகின்றது. அவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே கூட்டிணைந்து செயற்படுவதற்கு வந்திருந்த அனைத்து தரப்புக்களும் சுமந்திரன் என்ற தனிநபரை கடந்த காலங்களில் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளன. அவராலேயே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியும் உள்ளன. அதேபோன்று தமிழரசுக்கட்சியின் கொள்கை தவறிய ஏதேச்சதிகார போக்கு வலுவாகுவதற்கும் சுமந்திரனே காரணமாகவும் இருந்தார்.  இதனைவிடவும், கடந்த ஆட்சியாளர்களுடன் மிக நெருங்கிச் செயற்பட்டதோடு வாக்களித்த மக்களின் ஆணையை விடவும், ஆட்சியாளர்களுக்கே விசுவாசமாக இருந்துள்ளார். தற்போதும் கூட திரைமறைவில் ராஜபக்ஷ தரப்பினருடன் தொடர்புகளைப் பேணி வருகின்றார்.  இதனைவிடவும், சர்வதேசத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற முத்திரையுடன் சென்ற சுமந்திரன் மைத்திரி-ரணில் கூட்டரசிடம்  பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட அனைத்து விடங்களையும் நீர்த்துப்போகச் செய்து அந்த அரசாங்கத்தினையும் ரணிலையும் முழுமையாக காப்பாற்றினார்.  அதுமட்டுமன்றி ஐ.நா.வில் பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்திய “சர்வதேச விசாரணைக்” கோரிக்கையை பொருட்டாக கொள்ளாத சுமந்திரன் சர்வதேச விசாரணை நிறைவடைந்து விட்டது என்றும் அறிவித்தார்.  ஜனாதிபதி தேர்தலின்போது பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் ஏகோபித்த இணைவில் 13அம்சக் கோரிக்கைகளை முன்வைக்கும் செயற்பாட்டில் பங்கேற்று இறுதிவரையில் அமைதியாக இருந்து தோல்வி அடையச் செய்திருந்தார்.  அவ்வளவு ஏன், ஒக்டோபர் புரட்சியின்போது ரணிலுக்காக நீதிமன்றம் சென்ற சுமந்திரன் திலீபனின் நினைவேந்தலுக்காக நீதிமன்றம் தடைகளை விதித்தபோதும் அந்த விடயம் சம்பந்தமாக எந்தவொரு கரிசனையும் கொள்ளாதவராகவே இருந்தார். திலீபனின் நினைவேந்தலுக்கான முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரப் போராட்டத்தில் கூட அவர் பங்கேற்றிருக்கவில்லை. அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கொள்கையைக்  கொண்டிருப்பதாக தற்போதும் கூறிவருகின்றார்.  இவ்வாறு தமிழின விடுதலை, நீதிக்கோரிக்கை போன்ற விடயங்களில் எதிர்மறையான நிலைப்பாட்டினை கொண்ட ஒருவர் பொதுமக்களை அடிப்படையாக் கொண்ட கொள்கைசார் இணக்கத்துடன் பயணிக்க தயாராகும் கட்டமைப்பில் பங்கேற்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.  கேள்வி:- இந்த கூட்டிணைவுச் செயற்பாடுகளில் சுமந்திரன் தொடர்ச்சியாக பங்கேற்பாராயின் நீங்கள் பங்கேற்க மாட்டீர்களா? பதில்:- இந்த விடயத்தில் எனது நிலைப்பாடு பற்றி, மாவை.சேனாதிராஜா மற்றும் சி.வி.கே.சிவஞானத்திடம் கலந்துரையாட எதிர்பார்த்திருக்கின்றேன். மேலும், சுமந்திரன் தமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்து விலகிச் செல்கின்றார் என்று கடுமையாக விமர்சித்த கஜேந்திரகுமார், சுரே~; பிரேமச்சந்திரன், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றவர்கள் எவ்வாறு சுமந்திரனின் பங்கேற்புடன் கூட்டிணைந்து செயற்பட போகின்றார்கள். சுமந்திரன் இந்த கூட்டிணைவு முயற்சிகளில் தொடர்ந்தும் பங்கேற்பாராயின், அவருக்குள்ள நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இந்தக் கூட்டிணைவு செயற்பாடு கூட இறுதிக்கட்டத்தில் சிதைந்து போகும் நிலைமையே ஏற்படும். தற்போது வரையில் அரசியல் தீர்வாக இருக்கட்டும், பொறுப்புக்கூறலாக இருக்கட்டும் மக்களினதும், தமிழ் அரசியல் தலைமைகளினதும் நிலைப்பாடுகளுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டினையே சுமந்திரன் கொண்டிருக்கின்றார்.  இவ்வாறான ஒருவரின் பங்கேற்புடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைவதென்பது கானல் நீரான விடயமாகும் என்றே கருதுகின்றேன். தமிழ்த் தேசிய நீக்க, தரப்பினர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றுகூடும் கலந்துரையாடல்களில் பங்கேற்பது என்பது தமிழினத்தின் சாபக்கேடாகும். இதனை நீண்ட இனவிடுதலைப் விடுதலைப் போராட்ட அனுபவத்தினைக் கொண்டிருக்கும் மாவை சேனாதிராஜா புரிந்து கொள்ள வேண்டும்.   https://www.virakesari.lk/article/92960
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.