Jump to content

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் விவகாரம் -வெளிச்சத்திற்கு வந்தது இரகசியம்


Recommended Posts

தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.என்.ஏ) தனது தேசிய பட்டியல் பதவிக்கு இரண்டு பேரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட தவராசா கலையரசன் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்ற வதந்திகள் குறித்து அந்த ஆங்கில ஊடகம் பேச்சாளரை கேட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் மேற்படி விடயத்தை தெரிவித்தார்.

அம்பாறையைச் சேர்ந்த கலையரசனின் நியமனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்தித்ததோடு, அந்தப் பதவிக்கு இருவரை நியமிக்கும் முடிவும் அங்கு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

முதல் இரண்டரை ஆண்டுகளாக கலையரசன் பதவியை வகிப்பார், அதன்பின்னர் மாவை சேனாதிராஜா அந்தப்பதவியை வகிப்பார். எனினும் வடக்கு மாகாண சபை தேர்தலில் மாவை போட்டியிட்டு முதலமைச்சர் பதவியைப் பெற்றால் இந்த ஏற்பாடு மாறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.ibctamil.com/srilanka/80/149465?ref=home-imp-parsely

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Iraivan said:

எனினும் வடக்கு மாகாண சபை தேர்தலில் மாவை போட்டியிட்டு முதலமைச்சர் பதவியைப் பெற்றால் இந்த ஏற்பாடு மாறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

hqdefault.jpg

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற ..இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற..👌

என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே .. நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே..👍

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.