Jump to content

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

அப்ப மிச்சத்தையும் வேக வைச்சுட்டு வெந்த பின் வந்து வாசித்தால்   எல்லாம் புரியும். 

நீங்கள் எந்த மரத்தில இருந்து இறங்கி ஓடி  டபக்கெண்டு வாரியள்?

உங்களோட கதைக்கவில்லையே...

ஆனால், தலயிலும் பார்க்க குறைவு, நிச்சயமா உங்களிலும் பார்க்க கூட... அதால..... 

Link to comment
Share on other sites

  • Replies 269
  • Created
  • Last Reply
3 minutes ago, Nathamuni said:

நீங்கள் எந்த மரத்தில இருந்து இறங்கி ஓடி  டபக்கெண்டு வாரியள்?

உங்களோட கதைக்கவில்லையே...

கோஷானின் பதிவை வாசித்த ரென்சனில் நீங்கள் தாவி விழுந்து எழும்பி ஓடிய அதே மரத்தின் மீது தான் நான் நின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஒருத்தருக்கும் உந்த விளக்கம் தேவையில்லையே எண்டது தானே நான் சொல்வது.... 

எனக்கு ஆங்கிலம் தான் தேவை. அது சுட்டாத, சுடாததா, பழுத்ததா, வெந்ததா, அவிச்சதா... இறங்கினதா.... எனக்கென கோதாரிக்கு... அந்த விளக்கம்....

நான் சொல்லுறது பிழையே? 

BTW: சரி, இங்கே இந்த அரபிக், சைனீஸ் தெரிஞ்சவயல் தாரு?

பிழைதான் நாதத்தார் ஆனா இதுக்கு மேல எப்படி விளங்கபடுத்துரெண்டுதான் எனக்கு தெரியேல்ல. சரி விடுங்கோ.

ஒருத்தருக்கே எல்லா மொழியும் தெரியும் என்பதல்ல. அரபிக் இல் North African, Somalian, Middle Eastern dialects உண்டு - ஆகவே நான் சொல்வது அரபிக் தெரிஞ்ச, மத்திய கிழக்கில் வேலை செய்தவர்களுக்கு புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

கோஷானின் பதிவை வாசித்த ரென்சனில் நீங்கள் தாவி விழுந்து எழும்பி ஓடிய அதே மரத்தின் மீது தான் நான் நின்றேன். 

தேவை இல்லாமல் எதுக்கையா, இந்த வேலை?

நான் கோசனுடன் பேசுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

போய் மரத்தில் மீண்டும் ஏறிக் கொள்ளுங்கோ. நான் தவிர்க்க விரும்பும் சிலரில் நீங்கள் முக்கியமானவர். ஆகவே உங்கள் கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டு அரசியல் மாறி விட்டது. இதனை அறிந்துதான் வைகோ எம்பி பதவிக்கு போட்டியிட்டு டெல்லி போய்விட்டார். இன்னமும் இதில நிண்டு மினக்கட வேண்டாம். 😃 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இசைக்கலைஞன் said:

தமிழ்நாட்டு அரசியல் மாறி விட்டது. இதனை அறிந்துதான் வைகோ எம்பி பதவிக்கு போட்டியிட்டு டெல்லி போய்விட்டார். இன்னமும் இதில நிண்டு மினக்கட வேண்டாம். 😃 

வைகோ தனியா நிண்டு ஒரு போதும் ஜெயிக்கல்ல 🤣 ஆக அதை வைத்து மட்டும் மாற்றத்தை கணிக்க முடியாது. அப்படி என்றால் மாற்றம் 1993 லேயே தொடங்கி விட்டது.

ஆனால் மாற்றம் நடக்கிறது என்பது உண்மை. 

உதாரணதுக்கு ஹரி நாடார் இன் பனங்காட்டு படையின் எழுச்சி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஒருத்தருக்கே எல்லா மொழியும் தெரியும் என்பதல்ல. அரபிக் இல் North African, Somalian, Middle Eastern dialects உண்டு - ஆகவே நான் சொல்வது அரபிக் தெரிஞ்ச, மத்திய கிழக்கில் வேலை செய்தவர்களுக்கு புரியும்.

அப்படி போடு (ங்க) தல... 😁

சாப்பிடப்போறன்... பிறகு சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அப்படி போடு (ங்க) தல... 😁

சாப்பிடப்போறன்... பிறகு சந்திப்போம்.

சந்திப்பம். அரட்டைய திண்ணைக்கு மாத்துவம். நிர்வாகம் கடுப்பாக போகுது.🙏🏾

Link to comment
Share on other sites

9 minutes ago, இசைக்கலைஞன் said:

தமிழ்நாட்டு அரசியல் மாறி விட்டது. இதனை அறிந்துதான் வைகோ எம்பி பதவிக்கு போட்டியிட்டு டெல்லி போய்விட்டார். இன்னமும் இதில நிண்டு மினக்கட வேண்டாம். 😃 

வைகோ டெல்லி போனது  இப்போது அல்ல. 1987 ல் தலைவர் பிரபாகரனை சந்தித்து அவருக்கு சகல உதவிகளையும் செய்யும் போதே அவர் டெல்லியில் ராஜ்யசபை உறுப்பினராகத்தான் இருந்தார். 

Link to comment
Share on other sites

27 minutes ago, Nathamuni said:

தேவை இல்லாமல் எதுக்கையா, இந்த வேலை?

நான் கோசனுடன் பேசுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

போய் மரத்தில் மீண்டும் ஏறிக் கொள்ளுங்கோ. நான் தவிர்க்க விரும்பும் சிலரில் நீங்கள் முக்கியமானவர். ஆகவே உங்கள் கருத்துக்கு நன்றி.

நான் கோஷானை ப்பபாவல் ஏற்றுகிறேன் என்று நக்கல. பண்ணும் போது இந்த “தவிர்கக விரும்பும்” என்ற வார்ததை நினைவுக்கு வரவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

நான் கோஷானை ப்பபாவல் ஏற்றுகிறேன் என்று நக்கல. பண்ணும் போது இந்த “தவிர்கக விரும்பும்” என்ற வார்ததை நினைவுக்கு வரவில்லையா? 

உங்கள் பெயரை பாவிக்கவிலையே, எதுக்கு தொப்பியை உங்கள் தலையில் போடுகிறீர்கள். இதுதான் தவிர்ப்புக்கு காரணம். புரிதல் இல்லாமல் பொங்கி எழுவது..

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

பதிலுக்கு நன்றி.

என்னை பொறுத்தவரை இது முற்றிலும் தவறான புரிதல்.

1. திராவிட அரசியல் தெலுங்கு சாதிகளை முன் தள்ளி தமிழ் சாதிகளை ஒடுக்கியது என்பது தவறான பார்வை. திராவிட ஆட்சியில் பிராமணருக்கு அடுத்த நிலையில் இருந்த சாதிகள் முந்தள்ள பட்டன என்பதே உண்மை. இதில் இயற்கையாகவே ஒரு காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த நாயக்க சாதி முன் தள்ளபட்டது. ஆனால் அதே போல் முக்குலத்தோரும், கொங்கு வேளாளரும் இதர போர்வோர்ட் பிளாக் சாதிகளும் முன் தள்ளபட்டனர் என்பதும் உண்மையே. அதே போல் இட ஒதுக்கீடும் கருணாநிதி தான் நினைத்த விதத்தில் செய்யவும் இல்லை. அப்படி செய்யவும் முடியாது. தகுந்த ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு அமையவே இட ஒதுக்கீடு இடம்பெற்றது. ஒரு இம்மியளவு பிசகினாலும் உச்சநீதிமன்றம் தலையிடும். 

Quote

உண்மையில் சீமான் ஒரு தமிழ் தேசியவாதியாக இருந்தால் இதைதான் தெலுங்கு சாதிகளிடம் செய்ய வேண்டும். எவ்வாறு கதிர்காம வேலனை சுவீகரித்து ஸ்கந்த தெய்யோ ஆக்கினார்களோ அப்படி கட்டபொம்மனை முற்றாக சுவீகரியுங்கள். 

நீங்கள் தமிழ் நாயக்கர் என்று இன்னொரு social construct ஐ நிறுவுங்கள். ஆனால் இதை மேடை போட்டு செய்யாதீர்கள். அவர்களை உங்கள் பங்குதாரர் ஆக்கி, அவர்களை 600 வருடங்களின் பின்னாவது உங்கள் மண்ணின் மைந்தர்கள் ஆக்குங்கள். முடியுமா? நிச்சயம் முடியும்.

இதை ஏன் சீமான் செய்யவேணும் ? அவர்கள் தங்களை தமிழர்கள் என்றுதானே அடயாளப்படுத்தி   அரசியல் அதிகாரங்கள்  இட ஒதுக்கீடு  நிலங்கள் சிறுவணிகம் பெரு வணிகம் என அனைத்தையும்  கைப்பற்றுகின்றார்கள். அதுதானே அடிப்படை பிரச்சனை.  ஆந்திரா கர்நாடகா மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தமிழர்கள் வாழ்வதுபோல் அவர்கள் தங்களை தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் என்று கூறியிருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லையே!!  நாயுடு நாயக்கர் ரெட்டிகள் அனைவரையும் மட்டுமல்ல கட்டபொம்முலுவை கூட வீரபாண்டிய கட்ட பொம்மன் என்று தமிழர்கள் உள்வாங்கி சுவீகரித்து ரொம்பகாலமாகிவிட்டது. இவ்வாறு சுவீகரித்ததின் விழைவில் இருந்துதான் " வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆழும் உரிமை தமிழருக்கே " என்ற நிலை உருவாகின்றது. நீங்கள் சொல்வதுபோல் புதிதாக அவர்களை தமிழ்த்தேசீயத்துள் இணைப்பதற்கு என்ன இருக்கின்றது?  இதுவரை காலமும் தமிழக அரசியல் அதிகாரம் அவர்கள் கைகளில்தான் இருக்கின்றது.திராவிடம் என்ற போர்வையில் இருக்கின்றது. நீங்கள் சுருக்கமாக சொல்ல வருவது இந்த நிலையை அப்படியே விட்டுவிடுவது. சீமானின் தமிழ்த்தேசீய எழுச்சி தேவையற்றது என்பதைத்தான். 

Quote

அதே போல் இட ஒதுக்கீடும் கருணாநிதி தான் நினைத்த விதத்தில் செய்யவும் இல்லை. அப்படி செய்யவும் முடியாது. தகுந்த ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு அமையவே இட ஒதுக்கீடு இடம்பெற்றது. ஒரு இம்மியளவு பிசகினாலும் உச்சநீதிமன்றம் தலையிடும்.

இந்திய நீதிமன்றங்கள் நீங்கள் நினைப்பதுபோல் என்றைக்கும் நடப்பதில்லை. நீதித்துறையே  பிரமணர்கள் கைகளில்தான் இருக்கின்றது. இம்மியளவு பிசகினாலும்  நீதிமன்றம் தலையிடும் என்றால் இட ஒதுக்கீட்டு போராட்டங்களில் மக்கள் இறந்திருக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது  பெரும்பான்மை அதிகாரம் சார்ந்த அரசு பணிகள் தெலுங்கு சாதிகளுக்கு எப்படி சாத்தியமானது போன்ற  பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். உச்ச நீதிமனறங்களோ சட்டங்களோ சற்று சரியாக நடந்திருந்தால் கூட  கருணாநிதி வகையறாக்கள் தனிப்பட்ட ரீதியில் கூட இவ்ளவு சொத்தை குவித்திருக்க முடியாது. 

-----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சண்டமாருதன் said:

இதை ஏன் சீமான் செய்யவேணும் ? அவர்கள் தங்களை தமிழர்கள் என்றுதானே அடயாளப்படுத்தி   அரசியல் அதிகாரங்கள்  இட ஒதுக்கீடு  நிலங்கள் சிறுவணிகம் பெரு வணிகம் என அனைத்தையும்  கைப்பற்றுகின்றார்கள். அதுதானே அடிப்படை பிரச்சனை.  ஆந்திரா கர்நாடகா மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தமிழர்கள் வாழ்வதுபோல் அவர்கள் தங்களை தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் என்று கூறியிருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லையே!!  நாயுடு நாயக்கர் ரெட்டிகள் அனைவரையும் மட்டுமல்ல கட்டபொம்முலுவை கூட வீரபாண்டிய கட்ட பொம்மன் என்று தமிழர்கள் உள்வாங்கி சுவீகரித்து ரொம்பகாலமாகிவிட்டது. இவ்வாறு சுவீகரித்ததின் விழைவில் இருந்துதான் " வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆழும் உரிமை தமிழருக்கே " என்ற நிலை உருவாகின்றது. நீங்கள் சொல்வதுபோல் புதிதாக அவர்களை தமிழ்த்தேசீயத்துள் இணைப்பதற்கு என்ன இருக்கின்றது?  இதுவரை காலமும் தமிழக அரசியல் அதிகாரம் அவர்கள் கைகளில்தான் இருக்கின்றது.திராவிடம் என்ற போர்வையில் இருக்கின்றது. நீங்கள் சுருக்கமாக சொல்ல வருவது இந்த நிலையை அப்படியே விட்டுவிடுவது. சீமானின் தமிழ்த்தேசீய எழுச்சி தேவையற்றது என்பதைத்தான். 

இந்திய நீதிமன்றங்கள் நீங்கள் நினைப்பதுபோல் என்றைக்கும் நடப்பதில்லை. நீதித்துறையே  பிரமணர்கள் கைகளில்தான் இருக்கின்றது. இம்மியளவு பிசகினாலும்  நீதிமன்றம் தலையிடும் என்றால் இட ஒதுக்கீட்டு போராட்டங்களில் மக்கள் இறந்திருக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது  பெரும்பான்மை அதிகாரம் சார்ந்த அரசு பணிகள் தெலுங்கு சாதிகளுக்கு எப்படி சாத்தியமானது போன்ற  பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். உச்ச நீதிமனறங்களோ சட்டங்களோ சற்று சரியாக நடந்திருந்தால் கூட  கருணாநிதி வகையறாக்கள் தனிப்பட்ட ரீதியில் கூட இவ்ளவு சொத்தை குவித்திருக்க முடியாது. 

-----

சண்டமாருதன்,

நம் இருவரது சம்பாசணைகளையும் அடுத்தடுத்து வாசிக்கும் போது - ஒரே விடயத்தை நாம் இருவரும் பார்க்கும் கோணங்கள் வேறு என்பது தெளிவாகிறது.

நீங்கள் இப்போ சொன்னவைக்கான பதில் என்னிடம் இருப்பினும் - அது என் பார்வையினாலான பதிலாகவே இருக்கும். அதற்கான உங்கள் பதிலும் உங்கள் பார்வையினாலே இருக்கும்.

இதில் நம்மிருவரும் அவரவர் பார்வையே சரி என்று நினைக்கும் வரை நமது வாதி பிரதிவாதங்கள் முடியப்போவதில்லை.

தவிரவும் இந்த திரி - ஒரு குறித்த வரலாற்று எடுகோளை மையப்படுத்தியது - நமது விவாதம் இதன் பின்புலத்தை அலசுகிறதே ஒழிய - விவாதப் பொருளை அல்ல.

இந்த காரணங்களுக்க்கா - இந்த சம்பாசணையை இத்துடன் முடிக்கிறேன்.

உங்கள் நேரத்துக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறை நினைக்க கூடாது, கோசன்... ஒரு கேள்வி...

நீங்கள் தமிழ் அறிந்த தெலுங்கரா, சிங்களவரா அல்லது தமிழரா? 

Get Cool with both Custom and Default WordPress Smilies and Emoticons

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எனக்கு மிக அதிசயமான ஒன்று இது தான்:  பல தடவைகள் சிங்களவர் தெலுங்கர் என்ற வாதத்தை நிரூபிக்க வைக்கப் பட்ட ஆதாரங்கள் நேரெதிர் வாதமான இலங்கையில் வாழும் தமிழரும் சிங்களவரும் தெலுங்கரோடு/ஏனைய இந்தியரோடு தொடர்புடையோர் என்ற வாதத்திற்குத் தான் வலுச் சேர்த்திருக்கிறது. இதற்குப் பிறகும் இங்கே போலி ஆதாரங்களைக் கேள்வி கேட்பவன் ஏதோ தமிழ் தேசியத்தை நலிவடையச் செய்ய முயல்வோராக சிலர் கோபம் கொள்கின்றனர்.  

உண்மையில்,  ஒரு சிங்கள இனவாத வரலாற்றாய்வாளர் யாழ் களத்திற்குள் வந்து இந்த திரியைப் பார்த்தால், அவர் மிக்க மகிழ்ச்சி கொள்வார்! ஏன்? போலித் தரவுகளாலும், இணையக் குப்பையில் கிடைக்கும் காணொளிகளாலும் நாம் எங்கள் இன அடையாளத்திற்கு முட்டுக் கொடுப்பதால் அதன் நொய்மை அவருக்கு விளங்கும்! அவரும் சேர்ந்தே இந்த மோட்டு வாதத்திற்கு விசிலடித்து உருவேற்றுவார்!

இங்கே யார் ஐயா தமிழ் தேசியத்தை வேரறுப்பது? நிறுவக்கூடிய விடயங்களில் அறிவுபூர்வமாக கவனம் செலுத்துங்கள் என்போரா அல்லது இணையத்தில் குப்பனும் சுப்பனும் சொல்வதை வைத்தாவது தமிழ் தேசியத்தை முன்னிலைப் படுத்துங்கள் என்போரா? 

 தமிழ் தேசிய அடையாளத்தின் தூண்கள் எவை? இதை நான் ஏற்கனவே என் பின்லாந்துக் கதைக் கட்டுரையில் கேட்டிருக்கிறேன்! உலகின் ஏழாயிரம் மொழிகளில் ஏழே மொழிகள் தான் தொன்மையும் சிறப்பும் நிரூபணமான மொழிகள்! அந்த ஏழில் தமிழ் ஒன்று. இந்த தமிழ் தான்  எங்கள் தமிழ் தேசியத்தின் ஒரு தூண்! 

தமிழ் தேசியத்தின் இன்னொரு தூண் என்று நான் கருதுவது தமிழர்களின் அறிவுடைமை! அது புராதன காவியங்களாக இருந்தாலும் சரி முறைசார் கல்வியிலும் நுண்ணறிவிலும் அண்மைய நூற்றாண்டுகளில் நாம் காட்டிய மேன்மையாக இருந்தாலும் சரி, அது அறிவுடைமை தான்! 

இந்த பொய் ஆய்வுகளால் தமிழ் தேசியத்திற்கு நீர் வார்க்கிறேன் என்று கிளம்பியிருப்பேர் செய்வதெல்லாம் அந்த அறிவுடைமையை தங்கள் quackery ஆல் நீர்த்துப் போகச் செய்வது மட்டும் தான்! இது எப்போது உங்களுக்கெல்லாம் விளங்கப் போகுது? 

Link to comment
Share on other sites

6 minutes ago, Justin said:

தமிழ் தேசியத்தை, தமிழ் மக்களின் அறிவுடைமை பற்றி இங்கு எவருக்கும் அக்கறை இல்லை. தமிழ் அறிவியல் மொழியாக வேண்டும் என்றும் அடுத்த கட்டத்திற்கு தயாராக வேண்டும் என்றும் பழமைவாத பக்தி இலக்கியங்களுடன் மட்டும் தமிழ் தங்கி விடக்கூடாது என்று எடுத்துக்  கூறி இன்று நாம் பாவிக்கும் தமிழ் எழுத்துருவில் உள்ள சீர்திருத்த வடிவை 1934 ம் ஆண்டே தனது பத்திரிகையில் பாவித்து அதை ஊக்குவித்த பெரியாரையே தமிழின் எதிரி என்று நாகூசாமல் இனவெறுப்பு   பொய்கதைகளை கூறிய கூட்டம் தானே இது. 

ஈழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் திரு மு. திருநாவுக்கரசு சொன்னது போல் தமிழ் தேசியம் என்ற எண்ணக்கருவை  ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் அறிவுடைமை என்ற ஊடகத்தின் மூலம் கொண்டு செல்லாமல் முட்டாள் தனமாக சந்திகளின் நின்று கத்தும் அரசியல்வாதிகள் கையில்  எடுத்து ஒட்டு மொத்த தமிழ் மக்களையும்  படிப்பறிவற்ற முட்டாள்களாக நடுதெருவுக்கு கொண்டு வரும் அரசியலே நடக்கிறது. ஈழத்தில்  அது தான் நடந்த‍து.  தமிழக மக்களையும் துரத்துகிறது அந்த பிசாசு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

குறை நினைக்க கூடாது, கோசன்... ஒரு கேள்வி...

நீங்கள் தமிழ் அறிந்த தெலுங்கரா, சிங்களவரா அல்லது தமிழரா? 

Get Cool with both Custom and Default WordPress Smilies and Emoticons

இது நாள் வரை தமிழன் என்றே நினைத்திருந்தேன். 

பண்டாரவன்னியன் நாடகம் எழுதி வீரவசனம் எல்லாம் போட்டு தோள் நிமிர்த்தி நின்றேன்.

பேசப்படும் மொழிகளில் என் மூத்த மொழி என இறுமாந்திருந்தேன்.

கீழடி என் மரபுரிமை என மார்தட்டினேன்.

ஏழரைக்கோடி (அதில எத்தனை கோடி நாய்க்கரோ 🤣) என “எண்ணி” இருந்தேன்.

5 மொழிகளின் தாய் என் மொழி என்றேன்.

இலங்கை தீவின் முதல் மொழி என் மொழி என்றேன்.

நித்திரை விட்டு முழிச்சிப்பார்த்தா ...

என்னை சுற்றி என் உறவுகள் நிற்கிறார்கள்..

செல்வநாயகம், ராஜநாயகம், கனகநாயகம், வேதநாயகம், வேல்நாயகம், பேரின்பநாயகம்...........

உங்கள் பண்டார”நாயக்க” தியரி நினைவுக்கு வந்து தொலைத்தது...

கூடவே ஒரு Encyclopedia Brittanica printout யாழ்பாண அரசு விஜய நகரத்துக்கு திறை செலுத்தியது ......

குழம்பி நிற்கிறேன் நான் தமிழனா, தெலுங்கனா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சட்டுபுட்டெண்டு ஒரு முடிவுக்கு வாருங்கோ...

இனொரு விசயம் சொல்லவேணும்...  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

இங்கே எனக்கு மிக அதிசயமான ஒன்று இது தான்:  பல தடவைகள் சிங்களவர் தெலுங்கர் என்ற வாதத்தை நிரூபிக்க வைக்கப் பட்ட ஆதாரங்கள் நேரெதிர் வாதமான இலங்கையில் வாழும் தமிழரும் சிங்களவரும் தெலுங்கரோடு/ஏனைய இந்தியரோடு தொடர்புடையோர் என்ற வாதத்திற்குத் தான் வலுச் சேர்த்திருக்கிறது. இதற்குப் பிறகும் இங்கே போலி ஆதாரங்களைக் கேள்வி கேட்பவன் ஏதோ தமிழ் தேசியத்தை நலிவடையச் செய்ய முயல்வோராக சிலர் கோபம் கொள்கின்றனர்.  

உண்மையில்,  ஒரு சிங்கள இனவாத வரலாற்றாய்வாளர் யாழ் களத்திற்குள் வந்து இந்த திரியைப் பார்த்தால், அவர் மிக்க மகிழ்ச்சி கொள்வார்! ஏன்? போலித் தரவுகளாலும், இணையக் குப்பையில் கிடைக்கும் காணொளிகளாலும் நாம் எங்கள் இன அடையாளத்திற்கு முட்டுக் கொடுப்பதால் அதன் நொய்மை அவருக்கு விளங்கும்! அவரும் சேர்ந்தே இந்த மோட்டு வாதத்திற்கு விசிலடித்து உருவேற்றுவார்!

இங்கே யார் ஐயா தமிழ் தேசியத்தை வேரறுப்பது? நிறுவக்கூடிய விடயங்களில் அறிவுபூர்வமாக கவனம் செலுத்துங்கள் என்போரா அல்லது இணையத்தில் குப்பனும் சுப்பனும் சொல்வதை வைத்தாவது தமிழ் தேசியத்தை முன்னிலைப் படுத்துங்கள் என்போரா? 

 தமிழ் தேசிய அடையாளத்தின் தூண்கள் எவை? இதை நான் ஏற்கனவே என் பின்லாந்துக் கதைக் கட்டுரையில் கேட்டிருக்கிறேன்! உலகின் ஏழாயிரம் மொழிகளில் ஏழே மொழிகள் தான் தொன்மையும் சிறப்பும் நிரூபணமான மொழிகள்! அந்த ஏழில் தமிழ் ஒன்று. இந்த தமிழ் தான்  எங்கள் தமிழ் தேசியத்தின் ஒரு தூண்! 

தமிழ் தேசியத்தின் இன்னொரு தூண் என்று நான் கருதுவது தமிழர்களின் அறிவுடைமை! அது புராதன காவியங்களாக இருந்தாலும் சரி முறைசார் கல்வியிலும் நுண்ணறிவிலும் அண்மைய நூற்றாண்டுகளில் நாம் காட்டிய மேன்மையாக இருந்தாலும் சரி, அது அறிவுடைமை தான்! 

இந்த பொய் ஆய்வுகளால் தமிழ் தேசியத்திற்கு நீர் வார்க்கிறேன் என்று கிளம்பியிருப்பேர் செய்வதெல்லாம் அந்த அறிவுடைமையை தங்கள் quackery ஆல் நீர்த்துப் போகச் செய்வது மட்டும் தான்! இது எப்போது உங்களுக்கெல்லாம் விளங்கப் போகுது? 

11 minutes ago, tulpen said:

தமிழ் தேசியத்தை, தமிழ் மக்களின் அறிவுடைமை பற்றி இங்கு எவருக்கும் அக்கறை இல்லை. தமிழ் அறிவியல் மொழியாக வேண்டும் என்றும் அடுத்த கட்டத்திற்கு தயாராக வேண்டும் என்றும் பழமைவாத பக்தி இலக்கியங்களுடன் மட்டும் தமிழ் தங்கி விடக்கூடாது என்று எடுத்துக்  கூறி இன்று நாம் பாவிக்கும் தமிழ் எழுத்துருவில் உள்ள சீர்திருத்த வடிவை 1934 ம் ஆண்டே தனது பத்திரிகையில் பாவித்து அதை ஊக்குவித்த பெரியாரையே தமிழின் எதிரி என்று நாகூசாமல் இனவெறுப்பு   பொய்கதைகளை கூறிய கூட்டம் தானே இது. 

ஈழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் திரு மு. திருநாவுக்கரசு சொன்னது போல் தமிழ் தேசியம் என்ற எண்ணக்கருவை  ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் அறிவுடைமை என்ற ஊடகத்தின் மூலம் கொண்டு செல்லாமல் முட்டாள் தனமாக சந்திகளின் நின்று கத்தும் அரசியல்வாதிகள் கையில்  எடுத்து ஒட்டு மொத்த தமிழ் மக்களையும்  படிப்பறிவற்ற முட்டாள்களாக நடுதெருவுக்கு கொண்டு வரும் அரசியலே நடக்கிறது. ஈழத்தில்  அது தான் நடந்த‍து.  தமிழக மக்களையும் துரத்துகிறது அந்த பிசாசு. 

ஜஸ்டின் அண்ணா, துல்பென்,

கருத்துகளுக்கு நன்றி. இந்த தமிழ் தேசியத்தின் தூண்கள் (Pillars of Tamil Nationalism) என்ற பதம் என்னை மிகவும் ஈர்கிறது.

இஸ்லாத்தில் இப்படி 5 தூண்கள் உண்டு. இன்றளவும் இஸ்லாம் முகமது சொன்னதை விட்டு விலகாமல் இருக்க இவை பெரிதும் உதவுகிறன.

இப்படி தூண்களை தமிழ் தேசியத்துக்கும் அமைத்து, எது தமிழ் தேசியம் என்பதை கொள்கை அளவிலாவது வரையறுத்தால் - தமிழ் தேசியத்தை corrupt பண்ணுவது கடினமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் ஊரில இரன்டு பாலத்தை கட்டுங்கோ புண்ணியமாய் போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இது நாள் வரை தமிழன் என்றே நினைத்திருந்தேன். 

பண்டாரவன்னியன் நாடகம் எழுதி வீரவசனம் எல்லாம் போட்டு தோள் நிமிர்த்தி நின்றேன்.

பேசப்படும் மொழிகளில் என் மூத்த மொழி என இறுமாந்திருந்தேன்.

கீழடி என் மரபுரிமை என மார்தட்டினேன்.

ஏழரைக்கோடி (அதில எத்தனை கோடி நாய்க்கரோ 🤣) என “எண்ணி” இருந்தேன்.

5 மொழிகளின் தாய் என் மொழி என்றேன்.

இலங்கை தீவின் முதல் மொழி என் மொழி என்றேன்.

நித்திரை விட்டு முழிச்சிப்பார்த்தா ...

என்னை சுற்றி என் உறவுகள் நிற்கிறார்கள்..

செல்வநாயகம், ராஜநாயகம், கனகநாயகம், வேதநாயகம், வேல்நாயகம், பேரின்பநாயகம்...........

உங்கள் பண்டார”நாயக்க” தியரி நினைவுக்கு வந்து தொலைத்தது...

கூடவே ஒரு Encyclopedia Brittanica printout யாழ்பாண அரசு விஜய நகரத்துக்கு திறை செலுத்தியது ......

குழம்பி நிற்கிறேன் நான் தமிழனா, தெலுங்கனா....

இவ்வளவும் வந்து தொலைக்கும் போது முள்ளிவாய்க்கால் நினைவுக்கு வராதது வேதனையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவும் வந்து தொலைக்கும் போது முள்ளிவாய்க்கால் நினைவுக்கு வராதது வேதனையாக உள்ளது.

சில ரணங்கள் மறக்கவே முடியாதவை ஆகவே நினைவுக்கு வர தேவையும் இல்லாதவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

பெருமாள், ஐரோப்பிய வரலாறு போல்  அல்லாது எமது இலங்கை இந்திய வரலாறுகள் தெளிவானவை அல்ல. வரலாற்றை பேணி பாதுகாக்கும் தன்மை அற்ற முன்னோர்கள் வரலாற்று சரியாக குறித்து வைக்காத‍தால்  எமது வரலாறுகளில் புனைவுகள் இருப்பது உண்மையே. அதனால் தான் சிலர் தமது அரசியல் என்ற திரைப்படத்திற்கு வில்லன் தேவை என்பதால் புதிய புதிய வில்லன்களை தயார் செய்ய கட்டுகதைகளை உருவாக்கி புதிய வில்லன்களை உருவாக்கி அதை  வரலாறு என்று நடுச்சந்தியில் நின்று உளர அதை பிடித்துகொண்டு சில விசிலடிச்சான் குஞ்சுகள் சமூக வலை தளங்களில் பரப்ப வரலாறு எது புனைவு எது என்று வித்தியாசம் தெரியாத நிலை எமக்கு.  ஆனால் கோஷான் பலவற்றை வாசித்து சரியான தகவல்களை தர முயற்சிக்கிறார் என்றே எனக்கு படுகிறது. 

tulpen நான் கேட்பது இவரின் ஆய்வுக்கு எடுத்த மூல  புத்தகங்கள் எவை அவை யாரால் எழுதப்பட்டது ?

போன்ற விபரங்களை தான்  பலவற்றை வாசித்து இருக்கலாம் ஆனால் அவை திரிபுகளாகவோ புனைக்கதைகளாகவோ அதுவும் இந்த புளுகு முகநூல் காலத்தில் ஒரு சில நிமிடங்களில் உலகம் முழுக்க பரவி விடும் ஆபத்து உள்ளது .

உலகில் நீதி  நியாயம் தர்மம் உண்மை விசுவாசம் நன்றிக்கடன்  என்பதெல்லாம் நாடுகளுக்கு கிடையாது அவற்றை அடிப்படையாக கொண்டு நாடுகள் இயங்குகின்றன என்று எண்ணுவது கூட அபத்தமானது. ஐரோப்பிய வரலாறுகள் பலவற்றில் மிகைபடுத்தப்பட்ட புனைவுகள் உண்டு நீங்கள்  இங்கு இணைக்கும் உலகயுத்தம் சம்பந்தப்பட்ட திரி ஒன்றில் உண்மைக்கு மாறான திப்பிலியாட்டம் உண்டு அவை போரில் வென்றவர்கள் சொல்லிய கதைகளையே சொல்லும் உண்மைகளை கொஞ்சமே தான் தொட்டு செல்வார்கள் உலகில் போரில் தோற்பவர்களுக்கு  என்ற கதைகள் உண்டு  அவை இதுவரை மாற்றமில்லாத ஒன்று அது நாங்கள் தோற்கும் போது  மட்டும் அப்படி நடக்காது என்று எண்ணுவது சுத்த முட்டாள்தனமானது. விழுவது மனிதனுக்கு ஒன்றும் புதுசு அல்ல 2009 மே 18ல் விழுந்தவர்கள்  இன்னும் எழும்பவில்லை அன்கொன்றும் இன்கொன்றுமாய் எழும்பி எமக்காக சத்தமிடுபவர்களையும் திரும்பவும் விழுந்து போ என்று சபிக்கிறோம் தூற்றுகிறோம் இதே வேலையைத்தான் பிரபாகரனுக்கும் ஓட்டுக்குழு  எனும் பெயரில் செய்தார்கள் சீமான் தமிழுக்காகத்தானே கத்துகிறான்  உங்க வீட்டில் அல்லது எங்கவீட்டிலோ சீமான் உண்டியலுடன் வந்து நிக்கவில்லை  விட்டு விடுங்கள் தமிழதேசிய முன்னனி  இல்லை சைக்கிள்.

சீமான் பிழைவிட்டால் அவர் இடத்தில் மற்ற ஒருவர் காலம் வேகமானது முதலில் எழுந்துகொள்வம் .

Link to comment
Share on other sites

25 minutes ago, பெருமாள் said:

பெருமாள் எவரது சாபத்தாலும் ஈழத்தில் தமிழ் தேசியம் தோற்கவில்லை.  அதை நடத்தியவர்களின் சுயநலம், ஒற்றுமையின்மை, ஜதாரத்த‍த்திற்கு மாறான சிந்தனை போன்ற இன்னாரென்ன தவறகளாலேயே வீழ்ந்தோம். (நான் புலிகளை மட்டும் குறிப்பிடவில்லை அதற்கு முன்பும் பின்பும் அரசியல் செய்பவர்களையும் சேர்த்து தான் கூறுகிறேன்) மீண்டும் அதே தவறை செய்து சுயநலவாதிகளை நம்ப வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்ற தாயக மக்களின் சிந்தனை  மாற்றமே  கடந்த தேர்தலில் காட்டியது. 

நடந்த தவறுகளை களைந்து புதிய தலைமுறை தமது அறிவாற்றலால் தமிழ் தேசியத்தை ஈழத்தில் ஒளிரவைக்க முயலவேண்டுமே தவிர முட்டாள்தனமாக  எமது இழப்பை காட்டி  அங்கும் இனவெறுப்பை விதைத்து இலாபமடைய நினைக்கும் மாய மான் களை நம்பி ஏமாற வேண்டிய எந்த அவசியமும் ஈழத்தமிழ் மக்களுக்கு கிடையாது.  அதில் தாயக மக்கள் உறுதியாகவே உள்ளனர்.

அந்த மாயமான்களை தமிழக மக்கள் கணக்கெடுக்கவே மாட்டார்கள் என்பது நிம்மதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

துல்பென்,

பெருமாளின் பிரச்சனை வேற. நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.

இங்கே உண்மையாக என்னிடம் உரையாடியவர்களுக்கு நான் என் நேரத்தை செலவழித்து முடிந்தளவு விளக்கம் கொடுத்துள்ளேன். ஆனா இது போன்றவ “என்ன கைய பிடிச்சி இழுத்தியா” கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை.

ஆகவே பெருமாளிடம் “டீல்” பண்ணுவதை உங்களிடமே விட்டு விடுகிறேன். 

பெஸ்ட் ஓவ் லக் 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.