Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இந்தக் கட்டுரையையும் படித்தால் சிறப்பு. எழுதியவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் நூலகராக இருக்கின்றார் (புத்தகம் அடுக்குபவர் என்று நினைக்காவிட்டால் சரி!)

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 269
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

வணக்கம், தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள். ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்த

Justin

இங்கே எனக்கு மிக அதிசயமான ஒன்று இது தான்:  பல தடவைகள் சிங்களவர் தெலுங்கர் என்ற வாதத்தை நிரூபிக்க வைக்கப் பட்ட ஆதாரங்கள் நேரெதிர் வாதமான இலங்கையில் வாழும் தமிழரும் சிங்களவரும் தெலுங்கரோடு/ஏனைய இந்தியரோ

கிருபன்

இதுதான் நடக்கின்றது. தூய தமிழினம் என்று பிளவுகளை உண்டாக்கி உட்சுருங்கி அழிக்கத்தான் பலர் தம்மையும் அறியாமல் செயற்படுகின்றனர். மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த எமது முன்னோர்களின்

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

யாராவது இதை வாசித்து என்ன நடக்குது என்று சுருக்கமாய் சொல்லுங்கோ ...பள்ளியில் படிக்கும் போதே வரலாற்றை கண்ணில காட்டேலாது 🤔
 
எப்பவோ படித்த ஒரு கதையை தழுவி.ஒரு சினிமா பைத்தியங்களான இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை நித்திரையாக்க கதை ஒன்று சொல்ல வெளிக்கிட அந்தக் கதைக்கு யார் நாயகன் நாயகி இசை என்று நேரம் போவது தெரியாமல் விவாதித்து பின் தன் நினைவுக்கு வந்து பிள்ளையை பார்த்தால் பிள்ளையை கானவில்லை.இப்படித்தான் நாங்களும் ஒரு காலத்தில் யதார்த்தற்க்கு வரும் போது ஊரில் தமிழும் இருக்காது தமிழர்களும் இருக்கமாட்டினம்.இப்ப விளங்கியிருக்கும் தானே ரதி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

கவலைப்படாதீர்கள்.

இவ்வளவு காலம் வாழ்ந்த தமிழ், இன்னும் வாழும்.

1981ம் ஆண்டு நூலகம் எரித்த போது, இலங்கையின் ஏனைய பகுதிக்கே தெரியாமல் பத்திரிகைகளை கட்டுப்படுத்தியது சிங்களம். தமிழகத்துக்கு தெரியவே பல மாதங்கள் ஆகியது.

இன்று, காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் அடுத்த கணமே உலகெங்கும் பரவுகிறது. தமிழ் நாட்டில் இருந்து கூட ஆதரவு குரல் கேட்க்கிறது.

ஈழப்போராட்டம், உலகளாவிய தமிழர்களை, ஏதோ வகையில் ஒன்றிணைத்துள்ளது. ஒன்றரைக்கோடி சிங்களவன், 10 கோடி தமிழரை கிள்ளுக் கீரையாக நினைக்கிறார்களே என்ற தமிழ் தேசிய உணர்வு வந்துள்ளது. மலேசிய தமிழன் நினைப்பதையே தமிழகத்தமிழனும், லண்டனில் உள்ள ஈழத்தமிழனும் நினைக்கிறான்.

புலிகளுக்கு எதிராக உலகம் திரண்டபோது, "பயங்கரவாதிகளான" புலிகள், தமிழர்களின் ஒரு அனுகூலமில்லாத சுமையாக இருந்தார்கள். 

இன்று "போர் குற்றவாளிகள்" இலங்கை அரசினை அமைக்க சிங்களம் மிகப் பலமான ஆதரவை தந்துள்ள போது, இதுவே சிங்களவர்களின் ஒரு அனுகூலமில்லாத சுமையாக இருக்கப்போகின்றது.

நாம் பிரிட்டிஷ் பாராளுமன்றின் முன்னாள் கூடியழுத போது, அது புலிகளை காக்க என்று சிங்களம் சொன்னது.

இன்று அப்படி கூடி போராடினால், யுத்த குற்றமிழைத்தவர்களின் அரசு, கட்டாயமாக திண்டாடும். 

எங்களுக்கு இருந்த அனுகூலமில்லாத சுமையினை சிங்களம் அறுவடை செய்தது போலவே, அவர்களது அனுகூல இல்லாத சுமையினை அறுவடை செய்ய நாம் தயாராக வேண்டும். 

ஒரு அறிவார்ந்த, தூர நோக்கு கொண்ட, பார்வை, சிந்தனை வேண்டும்.

இந்த திரி, எதுவித அறிவார்ந்த, தூர நோக்கு கொண்ட, பார்வை, சிந்தனை இல்லாமல், குறுகிய நோக்கமும், அபத்தமான அலம்பறைகள் கொண்டது. ஒரு சோறு பானைக்கு, ஒரு சோறு பதம் என்பது போல, சில கருத்துகளிலேயே அதனை உணரக்கூடியதாக இருந்தது.

ஆகவே, நம்பிக்கையுடன் இருங்கள். தமிழ் தலைக்கும்.
 
Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அப்படியே இந்தக் கட்டுரையையும் படித்தால் சிறப்பு. எழுதியவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் நூலகராக இருக்கின்றார் (புத்தகம் அடுக்குபவர் என்று நினைக்காவிட்டால் சரி!)

பகிர்வுக்கு நன்றி கிருபன்.

உங்கள் வாசிப்பின் ஆழமும், அகலமும் பிரமிக்க வைக்கிறது.

1 hour ago, சுவைப்பிரியன் said:

எப்பவோ படித்த ஒரு கதையை தழுவி.ஒரு சினிமா பைத்தியங்களான இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை நித்திரையாக்க கதை ஒன்று சொல்ல வெளிக்கிட அந்தக் கதைக்கு யார் நாயகன் நாயகி இசை என்று நேரம் போவது தெரியாமல் விவாதித்து பின் தன் நினைவுக்கு வந்து பிள்ளையை பார்த்தால் பிள்ளையை கானவில்லை.இப்படித்தான் நாங்களும் ஒரு காலத்தில் யதார்த்தற்க்கு வரும் போது ஊரில் தமிழும் இருக்காது தமிழர்களும் இருக்கமாட்டினம்.இப்ப விளங்கியிருக்கும் தானே ரதி.

உங்கள் ஆதங்கம் புரிகிறது சுவை.

முன்னரும் ஒருதரம் பாலத்தை கட்டுங்கள் என எழுதி இருந்தீர்கள்.

புரிகிறது, ஆனால்-

ஒரு நிறுவன மயப்பட்ட தலைமை இப்போ நம்மிடம் இல்லை. 

ஆகவே எப்படி அன்றாட தேவைகளை தனிமனிதர்களாக அல்லது சிறு அமைபுக்களாக முன் நகர்துகிறோமோ அப்படியே எமது கொள்கை சம்பந்தபட்ட விடயங்களையும் நகர்த வேண்டிய தேவை இருப்பதாகவே நான் நம்புகிறேன்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மண்டையில் ஏறாத மமதை, இந்த முறையாவது ஏறுமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

வாசிப்பின் ஆழமும், அகலமும் பிரமிக்க வைக்கிறது

வாசிப்பில் ஆழம் இல்லை. ஆனால் அகலமாக வாசிப்பேன்😀

ஆனால், செய்யும் வேலைக்கு தேவையானதை நுணுக்கமாக வாசிப்ப்பேன்😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வாசிப்பில் ஆழம் இல்லை. ஆனால் அகலமாக வாசிப்பேன்😀

ஆனால், செய்யும் வேலைக்கு தேவையானதை நுணுக்கமாக வாசிப்ப்பேன்😁

அகல, ஆழ வாசிப்பதல்ல விசயம்.

வாசிப்பதனை அடுத்தவர்களுக்கு, இரத்தின சுருக்கமா புரிய வைப்பதே, வாசித்தவர் வெற்றி, பெருமை.

இல்லாவிடில், ராமாயணம் ஏது, மகாபாரதம் தான் ஏது?

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில், தமிழ், தெலுங்கு, சிங்கள தொடர்பாகவும், ஓர் புறம் தமிழர்கள் தெலுங்கு வந்தேறிகள் என்றும், மறுபுறம் அதை வன்மையாக எதிர்த்து, இல்லை ஈழத்தமிழர்களில் அப்படி ஓர் கலப்பு இல்லை என்றும் (அதாவது வரலாற்றில் அன்றைய நிலையில் மன்னார்  ஆட்சில் நடந்த குடு வரவுகளை தவிர) வாதிடப்பட்டது.

இப்போது இங்கு நான் கேட்பது, உங்களுடைய உசாத்துணை ஆய்வுகளில், தெலுங்கு அடி புத்த மதம்   
, அமராவதி, மிக முக்கியமாக வாக (VAHA) என்ற பெயர்  கொண்ட அரசனை எங்காவது கண்டீர்களா?

கேள்வியின் அக்கறை, இந்த விடயதுடன் சம்பந்தப்பட்டது.

https://en.wikipedia.org/wiki/Vallipuram

சிங்கள தொல்லியல் பேராசிரியர் (அவரை தொல்லை இயல் பேராசிரியர் என்றாலும் மிகையாகாது) பவித்திரான, அந்த தங்கத் தகடு எழுத்து, சிங்கள பிராமி (sinhala archaeology jokes ???) என்றும், அரசனின் பெயர் வசபா என்றும் சிங்களத்துக்கு ஏற்றபடி சொல்லி வைத்துள்ளார்.

தங்கத் தகட்டில் இருப்பது, பிரகிருதி மயப்படுத்தப்பட்ட தமிழ். அரசனின் பெயர், வாக  (Vaha). 

இந்த விடயம்:

https://tamilnation.org/heritage/eelam/vallipuram_buddha_image.htm

3 minutes ago, Kadancha said:

தங்கத் தகட்டில் இருப்பது, பிரகிருதி மயப்படுத்தப்பட்ட தமிழ். அரசனின் பெயர், வாக  (Vaha). 

இந்த விடயம்:

https://tamilnation.org/heritage/eelam/vallipuram_buddha_image.htm

இதை அறியாமல், சிங்களம் திருடி, தனது என்று கொண்டாடி வருகிறது.

 • Like 1
Link to comment
Share on other sites

3 hours ago, Kadancha said:

இங்கு எழுத்தும் பலருக்கு விஜயநகர பேரரசு பற்றிய தெளிவே இல்லை 
தமிழ் நாட்டு விடயங்களை அவ்வாறே உள்வாங்கி கொள்கிறார்கள் 
விஜபேரசு என்பது கர்நாடக ஹம்பியை தலைமையாக கொண்டது அவர்கள் கைப்பற்றி 
சூடிய பெயர்தான் விஜயநகர என்பதிலேயே தெளிவில்லாமல் இருக்கிறார்கள் 

தமிழ்நாட்டை நாயக்கர்கள் கொண்டது என்பது 
சோழ அரசின் ஊடக பழுவேடடையர்கள் இலங்கை மீது படை எடுத்து போல 
உண்மையான சோழ மன்னனின் இலங்கை மீதான படை எடுப்பு என்பது 
முதன் முதலில் அருண்மொழி சோழனால் எடுக்கப்பட்டதுதான் 
அதன் பின்புதான் சோழ அரசு இலங்கையில் நிறுவபட்டது. 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

எனது பதிவு பிந்தியதாயினும், இதை இங்கே சொல்வது முக்கியமானது.

போத்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஏன் பிரித்தானியரும் 1910 வரை வடகிழக்கில் உள்ளவர்களை மலபார்கல் என்றே அழைத்தனர்.

இதன் காரணம் உண்மையில் இப்போதைய கேரளத்தில் தொடங்குகிறது.

முதலில் சிறு வரலாறு.

1498 இல் வாஸ்கொட காம வந்தால் இருந்து ஐரோப்பிய தலையீடு  அந்த பிராந்தியத்தில் தொடங்குகிறத.

முதலில்  போத்துக்கேயர், தொடர்ந்து ஒல்லாந்தர், அதன் பின் 1684 இல் இருந்து பிரித்தானிய கிழக்கிந்திய கொம்பனி வர்த்தகம் என்று தொடங்கி, இராச்சியத்தை கைப்பற்றும் வரை தொடர்ந்தது.

போத்துக்கேயர் முதலில் வந்த இடம் இப்போதையா கேரளா. அங்கு அவரகள் கண்டா கலாசாரமும் (சமயம், உணவுகள்), மற்றும் மொழியும், சிறு பயண தூரத்தில் உள்ள இலங்கை தீவின் வடகிழக்கிலும் பெரிய வேறுபாடு இல்லாமல் இருந்ததால், போத்துக்கேயர் ஈழத்தமிழரை மலபார்கள் என்று அடையாளப்படுத்தினர். அப்படியே ஒல்லாந்தரும், பிரித்தானியரும் அடையாளப்படுத்தினர்.

இப்படியே, கோரோமண்டல் கரையோரம் வழியே உள்ளவர்களையும் (அதாவது இப்போஇதைய தமிழ் நாடு) , போத்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டானியரும் மலபார்கள் என்றே  அடையாளப்படுத்தினர்.

அனால், 1875 இல், ஜேர்மன் பாதிரியார் E. R. Baierlein இற்கு தெரிந்திருந்தது இப்போதைய தமிழ்நாடு, மற்றும் ஈழத்தமிழரை தமிழர்கள் என்று. இது அவர் 1875 இல் எழுதிய THE LAND OF THE TAMULIANS எனும் நூலில் இருக்கிறது. 
   
அதில் இருந்து சில வரிகள்,

I have not been able to omit the primitive Church of Southern India, although its present place of residence is beyond the present boundaries of the land of the Tamulians. For the separation of Malabar from the Tamil country, is of recent date; even our first missionaries call Tamil land Malabar and the language – even not very much different – Malabarish.

Google இல் இணைப்பு: 

https://books.google.co.uk/books?id=lFoqn9NvLRAC&pg=PA105&lpg=PA105&dq=“I+have+not+been+able+to+omit+the+primitive+Church+of+Southern+India,+although+its+present+place+of+residence+is+beyond+the+present+boundaries+of+the+land+of+the+Tamulians.+For+the+seperation+of+Malabar+from+the+Tamil+country,+is+of+recent+date;+even+our+first+missionaries+call+Tamil+land+Malabar+and+the+language+–+even+not+very+much+different+–+Malabar+Ish.”&source=bl&ots=EjCHBaBGhG&sig=ACfU3U3uxrzm9v-xQDyP0OD_OWXeNrpVWw&hl=en&sa=X&ved=2ahUKEwicyf_XmsfsAhW9SRUIHRIRBDgQ6AEwAHoECAEQAg#v=onepage&q=“I have not been able to omit the primitive Church of Southern India%2C although its present place of residence is beyond the present boundaries of the land of the Tamulians. For the seperation of Malabar from the Tamil country%2C is of recent date%3B even our first missionaries call Tamil land Malabar and the language – even not very much different – Malabar Ish.”&f=false     

அப்படியானால், ஏன் போத்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் தமிழரை மலபாரிகள்  என்று அளிக்க தலைப்பட்டனர்? 

இதில்  பிரித்தானியராலும், கேரளா நம்பூதிரி, கிந்திய மற்றும் நாயர்களாலும், ,  மறைக்கப்பட்ட ஓர் வரலாறு இருக்கிறது.

போத்துக்கேயரும், ஒல்லாந்தரும் இப்போதைய கேரளாவுக்கு வந்த போது, அங்கு இருந்த பேச்சு வழக்கு மொழியின் பெயர் மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ். 

அந்த மொழி போத்துக்கேயரால் Lingua Malabar Tamul என்று அழைக்கப்பட்டது.

இந்த மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ் எனும் மொழியே, 1820 வரை இப்போதைய கேரளத்தில் வழங்கி வந்தது.
  
இந்த மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழுக்கும், முறையான தமிழ் மொழிக்கும் மிகச் சிறிய வேறுபாடுகளே இருந்தது.

இதுவே முதலும், முக்கியமான காரணம், போத்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் இப்போதைய தமிழ் நாடு, மற்றும் ஈழத்தமிழரை மலபாரிகள் என்று அடையாளப்படுத்தியற்கு.

இப்பொது கேரளத்தில் இருக்கும் மலையாளம் என்பது, இந்த மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ் எனும் மொழியை சம்ஸ்கிருத மயப்படுத்தி, துளு அடிப்படையில் எழுத்து வடிவத்தை, அப்போது (அதாவது 1820) கொண்டிருந்தவர்கள் இந்த நம்பூதிரிகளும், ஓர் சிறு பகுதி (அப்போதைய) உயர் சாதி நாயர்களும்.  

இந்த நம்பூதிரிகளும், நாயர்களும் பிரித்தானியர் இடத்தில மிகவும் செல்வாக்கு கொண்டவர்களாகவும், கூட்டாளிகளாகவும்  இருந்தனர் (அதாவது சிங்களம் போல பிரித்தானியருக்கு).

இந்த நம்பூதிரிகளும், நாயர்களும் பிரித்தானியரை தூண்டி, தொன்று தொட்டு வழங்கி வந்த மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ் மொழியை தடை செய்து, அதில் இருந்த அனைத்து எழுத்து பிரசுரிப்புகளையும் எரித்து இந்த மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ் மொழியை உத்தியோக புழக்கத்தில் இருந்து அகற்றினர்.

நம்பூதிரிகள் மற்றும் நாயகளின்   சம்ஸ்கிருத மயப்படுத்திய, துளு எழுத்து வடிவம் கொடுத்த மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ் மொழியை பிரித்தானியர் உத்தியோக மொழியாக  அறிமுகப்படுத்தினர். 

இந்த நம்பூதிரிகள் மற்றும் நாயகளின், சம்ஸ்கிருத மயப்படுத்திய, துளு எழுத்து வடிவம் கொடுத்த மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ்  எனும் மொழி என்பது கிரந்தம் என்று முதலில் அழைக்கப்பட்டது.

பேச்சு வழக்கு மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ்  என்பது மலையாளம் என்றும் (மாற்றத்தின் பின்) அழைக்கப்பட்டது.

அனால் இந்த நம்பூதிரிகளும், நாயர்களும், சாதாரண மக்களின் கோபத்தில் இருந்து தப்புவதற்கு  தந்திரமாக, கிரந்தத்தில் பல தமிழ்,   மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ் இருந்த சொற்களை புகுத்தி  என்று பிரித்தானியரை கொண்டு உத்தியோக பூர்வமாக கிரந்தம் எனும் பெயரை அகற்றி மலையாளம் என்று கொண்டு வந்தனர்.     

ஆயினும் , பேச்சு வழக்கமாக இருந்த மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ் என்பதை மாற்ற முடியவில்லை. 

இந்த கிரந்தத்தில் இருந்து மலையாளமாக மாறிய மொழியும், மற்றும் பேச்சு வழக்கு மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ் என்ற இரண்டும் கலந்ததே இப்போதாதைய பேசி வழக்கு மலையாளம். 

இதுவே, இப்போதும் மலையாளம் பேச்சு மொழி, தமிழர்களுக்கு அதிக சிரமம் இல்லாமல் புரிவதத்திற்கு. ஆனால், மலையாள எழுத்து மொழி புரியத்தின் காரணம், துளு அடிப்படை எழுதும், சம்ஸ்கிருத மயப்படுத்தியதாலும்.  

இதன் ஓர் சான்று,  மலபார்  -- ஆங்கில அகராதி என்று 1779 இல் பிரசுரிக்கப்பட்டது, உண்மையில் தமிழ் - ஆங்கில அகராதி.

https://archive.org/details/MalabarEnglishDictionary

ஆசியாவில் முதலில் அச்சிடப்பட்ட நூல், தமிழில்,  போத்துக்கேயரால், இப்போதைய கேரளத்தில் அச்சிடப்பட்டது.

அந்த நூலின் பெயர் தம்பிரான் வணக்கம், கிறீஸ்தவ கோட்பாடு பற்றியது.

இது தமிழ் மொழியிலேயே (அதாவது அன்றைய கேரளத்தின் எழுத்து மொழி) உள்ளது. ஏனெனில் அந்த கிரந்தம் என்பதில் பெயர் மாற்றப்பட்ட மலையாளம் என்பது அப்போது நூல் எழுதுவதற்ககாண மொழி வன்மை இல்லை, கூர்ப்படையும், ஒரு சிறுபகுதி அப்போதைய கேரளா மக்களிடமே புழக்கநிலையிலேயே இருந்தது.

அரசவை மற்றும் நிர்வாகத்தில் தமிழ் எழுத்து மொழியாகவும், மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ் பேச்சு மொழியாகவும் இருந்தது.

 தொன்மை வாய்ந்த மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ்  மொழியை பிரித்தானியரின் வரலாற்று துரோகத்தால் அழிக்கப்பட்டது, எல்லா பக்கத்தாலும் (கிந்திய, அம்பொதிரிகள், நாயர்கள்) இப்பொது மறைக்கப்பட்டு விட்டது.

இப்பொது புரிகிறதா, ஏன் இந்த கேரளா மாவியா,ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்வதில் மும்மரமாக செயற்பட்டது என்று.       
 
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • 7 months later...
On 28/8/2020 at 06:51, goshan_che said:

ஆகவே சீமானை பிஜேபியிம் B டீம் என நான் என்றோ கூறியது இன்று உண்மையாகிறது.

எப்படி?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

எப்படி?

நீங்கள் quote பண்ணிய அதே பதிவில் மேலே எழுதியுள்ளதில் உங்கள் கேள்விக்காக விடை உள்ளது.

Link to comment
Share on other sites

On 16/6/2021 at 08:22, goshan_che said:

நீங்கள் quote பண்ணிய அதே பதிவில் மேலே எழுதியுள்ளதில் உங்கள் கேள்விக்காக விடை உள்ளது.

விரைவில் சீமான் RSS என சொல்வீர்களா அல்லது ஏற்கனவே  அவர் Rss தானா??🙃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

விரைவில் சீமான் RSS என சொல்வீர்களா அல்லது ஏற்கனவே  அவர் Rss தானா??🙃

பிஜேபி க்கும் ஆர் எஸ் எஸ் சுக்குமான தொடர்பு என்ன என்று தெரிந்தால் இந்த கேள்வியே எழாது.

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

பிஜேபி க்கும் ஆர் எஸ் எஸ் சுக்குமான தொடர்பு என்ன என்று தெரிந்தால் இந்த கேள்வியே எழாது.

தொடர்பு தெரியும். உங்களால் திருவாய் மலர்ந்தருள வேண்டும். எதிர்காலத்தில் உதவும் என்பதற்காக கேட்கப்பட்டது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தொடர்பு தெரியும். உங்களால் திருவாய் மலர்ந்தருள வேண்டும். எதிர்காலத்தில் உதவும் என்பதற்காக கேட்கப்பட்டது.

நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்.🤣

# காத்திரு பகையே. யாழ்கள வெர்சன் 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்.🤣

# காத்திரு பகையே. யாழ்கள வெர்சன் 🤣

பகை அல்ல சவால். காகத்துக்கு கனவிலையும்............................ வெர்சன் 🤣

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

பகை அல்ல சவால். காகத்துக்கு கனவிலையும்............................ வெர்சன் 🤣

இப்படி ஆகாதவரைக்கும் ஓகே🤣

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

இப்படி ஆகாதவரைக்கும் ஓகே🤣

சைக்கிள் தோற்கும் என்ற ஆட்களுக்கேல்லோ உது பொருந்தும். பிறகு நானில்லை என்று சொல்ல கூடாது.😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

சைக்கிள் தோற்கும் என்ற ஆட்களுக்கேல்லோ உது பொருந்தும். பிறகு நானில்லை என்று சொல்ல கூடாது.😀

சைக்கிள் தோற்கும் என்று நான் கூறிய தேர்தல்களில் சைக்கிள் தோற்கத்தான் செய்தது.

கடந்த தேர்தலில் சைக்கிள் 1 சீட் எடுக்கும் என்றேன். 50 வோட் வித்தியாசத்தில் இன்னுமொரு தேசியபட்டியல் சீட் கிடைத்தது.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.