Jump to content

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

இதை வேறும்  அகந்தையாகவே நான் பார்க்கிறேன் 
நீஙகள் விஜயநகர பேரரசின் ஆடசியே இலங்கையில் இல்லை என்று 
ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துத்கொண்டு 
நாயக்கர்கள் நாயக்கர்கள் இல்லை என்பது ஒரு தர்க்கம் இல்லை.

சிங்களம் தமிழ் இரண்டிலுமே நாயக்கர்கள் வருகையும் 
ஆடசியும் தெளிவாக இருக்கிறது. 

காய் என்று முடிவதால் பூசணிக்காயும் தேசிக்காயையும் ஒன்று என்ற 
உங்கள் கான்ஸ்பிரசிக்குள் நான் வரவில்லை என்றே எழுதினேன்  

மன்னிகவும் இரு நாடுகளின் வரலாறில் இல்லாத ஒன்றை, ஒரு ஆதாரமும் இல்லாமல், விஜயநகரம் இலங்கையை ஆண்டது என்பதை ஏற்காமல் விடுவது அகந்தை என்றால் -அப்படியே இருக்கட்டும்.

தகுந்த ஆதரங்களை ஒரு தனி திரியில் வைத்து - என் அகந்தையை தவிடுபொடி ஆக்குமாறும் வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 269
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மன்னிகவும் இரு நாடுகளின் வரலாறில் இல்லாத ஒன்றை, ஒரு ஆதாரமும் இல்லாமல், விஜயநகரம் இலங்கையை ஆண்டது என்பதை ஏற்காமல் விடுவது அகந்தை என்றால் -அப்படியே இருக்கட்டும்.

தகுந்த ஆதரங்களை ஒரு தனி திரியில் வைத்து - என் அகந்தையை தவிடுபொடி ஆக்குமாறும் வேண்டுகிறேன்.

, BA Bachelor of Arts Degrees in History, Indira Gandhi National Open University

Everyone knows Vijayanagara only because of Hampi . But it was one of the most famous empire in india that ruled almost all part of south india for morethan 200 years !

Vijayanagara empire ( karnata empire) was established in 1336 by Harihara 1 and his brother Bukka Raya 1 ( Hakka Bukka Brothers ).This empire emerged as a resistance to Delhi sultanate .Before Vijayanagara came into existance , Yadava empire of Devagiri , Kakatiya Dynasty of Warangal , Pandyan empire of Madurai were constantly under the attack of Muslims powers from the north.

In 1294 Hoysala commander Singeya Nayaka -lll established a short lived kingdom Kampili which lasted only till 1328 .

Vijayanagara emerged from this declined kingdom under Harihara-1 . Some scholars argues that Harihara and Bukka are telugu people from Kakatiya kingdom but most believable opinion is they are commanders in Hoysala Army .

It was Bukka Raya 1 gained control over northen karanatka and he defeated Sultanate of Madurai .Harihara ll son if Bukka Raya further expanded the kingdom and brought whole south india

It was Deva Raya ll (1425–1446) who conquered calicut by defeating Zamorin ( samuthiri) and Quilon( kollam ) He even captured LANKA ! He didnt stop with that he became overlod of Burma and Pegu ( myanmar)

The famous empire started to decline after 1485 due to military coups . However They have never ruled kerala effectively .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

அண்ணா பிளீஸ், 

இதை இணைப்பது உங்களுக்குத்தான் இழுக்கு. தயவு செய்து ஒரு தரமான ஆதாரத்தை இணையுங்கள். யாரோ ஒரு open university graduate எங்கோ எழுதியதை இணைக்காமல் -

இலங்கையை எப்போ எந்த விஜயநகர மன்னன் கைபற்றி நேரடியாக ஆண்டான். எந்த போரில்? எந்த இலங்கை அரசனை வென்றான்? 

விஜய நகர மன்னர் கால இடிபாடுகள் இலங்கையில் எங்கே?

இலங்கையை வென்ற மெய்கீர்தி பாடும் கல்வெட்டுகள் எங்கே?

நான் சொன்னதை போல இதை முழுவதும் ஆராய்ந்து ஒரு தனி திரியில் போடுங்கள் வந்து முதல் ஆளாய் விவாதிக்கிறேன்.

இப்படியே  போனால் - கருத்து மோதல் - நான் உங்கள் தரவுகளை கேள்வி கேட்பதாகி ஈற்றில் வீண் சச்சரவில் முடியப்போகிறது. உங்களோடு இவ்வாறு முரண்பட எனக்கு மனமில்லை.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் பிரச்சினையே! தேடற் சொற்களைத் தேடும் இயந்திரத்தில் போட்டுத் தேடினால் இப்படி யார் எதற்கு எழுதினார் என்று தகவலின்றி எல்லாம் வரும். இதையெல்லாம் வைத்தா வரலாறு? இப்படியே போனால், இன்று சிரிக்க சிறக்க வில் இருக்கும் பலவும் நாளை தமிழர் வரலாறாக நம் சந்ததிகளால் படிக்கப் படும்?

ஏனய்யா இப்படி இருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

அண்ணா பிளீஸ், 

இதை இணைப்பது உங்களுக்குத்தான் இழுக்கு. தயவு செய்து ஒரு தரமான ஆதாரத்தை இணையுங்கள். யாரோ ஒரு open university graduate எங்கோ எழுதியதை இணைக்காமல் -

இலங்கையை எப்போ எந்த விஜயநகர மன்னன் கைபற்றி நேரடியாக ஆண்டான். எந்த போரில்? எந்த இலங்கை அரசனை வென்றான்? 

விஜய நகர மன்னர் கால இடிபாடுகள் இலங்கையில் எங்கே?

இலங்கையை வென்ற மெய்கீர்தி பாடும் கல்வெட்டுகள் எங்கே?

நான் சொன்னதை போல இதை முழுவதும் ஆராய்ந்து ஒரு தனி திரியில் போடுங்கள் வந்து முதல் ஆளாய் விவாதிக்கிறேன்.

இப்படியே  போனால் - கருத்து மோதல் - நான் உங்கள் தரவுகளை கேள்வி கேட்பதாகி ஈற்றில் வீண் சச்சரவில் முடியப்போகிறது. உங்களோடு இவ்வாறு முரண்பட எனக்கு மனமில்லை.

நன்றி.

அதை நான் வேண்டுமென்றுதான் இணைத்தேன் 
விக்கிபீடியா அல்லது குவாராவில் இருந்து இணைக்க ஆசைபட்டேன் 
அவை கொஞ்சம் தெளிவாக இருப்பதால் அதை இணைத்தேன் 
நீங்கள் இன்னும் கொஞ்சம் என்னை போட்டு தாக்க  வேண்டும் என்று எதிர்பார்த்தேன் 

இலங்கையில் பகோடா என்ற பண புழக்கத்தை கொண்டுவந்தது யார்?

பகோடா என்ற பணம் யாருடையது?

இன்னொருவர் கேட்டிருந்தால் நேரம் செலவழிக்க முடியும் 
இவளவு எழுதும் நீங்கள் இரண்டாம் குலோத்துங்கனை அப்பிடியே 
மறந்திருப்பீர்கள் என்று நான் எண்ணவில்லை 

தமிழில் இன்னொரு தமிழனுக்கு சிங்களவர்கள் எங்களை அடித்தார்கள் 
கருணா துரோகம் செய்தார் போன்று எழுத எனக்கு உண்மையிலேயே இஷடம் இல்லை 
இவை வீண் வாதங்கள் என்றுதான் எண்ணுகிறேன்.ஆதலால்தான் பல த்ரிகளில் இப்போ எழுதுவதில்லை 

ஒரு திரியே நாயக்கர்கள் பற்றியும் நாயுடுக்கல பற்றியும் பேசிவிட்டு 
இலங்கையில் நாயக்கர்கள் ஆடசி செய்ததுக்கு ஆதாரம் இணையுங்கள் என்றால் 
இவ்வளவு நேரமும் நாம் என்ன பேசினோம் என்றுதான் எண்ணுகிறேன் 

இலங்கையின் சிங்களவர்கள் வரலாறு மேலோட்டிடடமானது 

நிசாந்தகமல மரணம் அடைந்த பின்பு பெருப்மபான்மை இலங்கை மாறி மாறி 
பாண்டிய சோழர்களால்தான் ஆளப்பட்ட்து அரசு இழந்த சிங்களவர்கள் பயத்தால் பாதுகாப்பு 
வேண்டி செல்வ செழிப்பான இடங்களை விட்டு காடுகள் கரையோரமே வாழ்ந்தார்கள்
நுளம்பு பரவலால் மலேரியா நோய் தோற்று கூடி ஆற்றம்கரை குளக்கரைகளையும் விட்டு இடபெயர வேண்டி வந்தது. 

தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளலாம் 
தமிழ் சிங்களவரல்லாத இலங்கை மீது படையெடுத்தவர்கள் 
13ஆம் நூற்றாண்டில் சந்திரபானு என்ற புத்த அரசன் இப்போதைய மலேசிய பகுதியில் இருந்து 
படையெடுத்து வந்தான். இவன் இரண்டு முறை படையெடுத்து வந்ததாக வரலாற்றுப்பதிவுகள் உண்டு 
இவனுடைய இலக்கு புத்தரின் பல்லை கைப்பற்றி செல்வதாகவே இருந்ததாகவும் ... அது தோல்வி கண்டதாகவும் சொல்கிறார்கள்.

14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீன மிங் ராஜ்யஜியதில் இருந்து ஒரு படையெடுப்பு வந்தாகவும் உண்டு 
இது பற்றி சிங்கள வரலாறில் இரு வேறு  கதைகள் உண்டு. 14 ஆம் நூற்றாண்டில் பலவீனமாக இருந்த சிங்களவரக்ளின் நிலையை சாதமாக்கி விஜயநகர பேர் அரசு மத்திய இலங்கையில் பரவி கிடந்தது 
இவர்களை விரட்டி மீண்டும் சிங்கள அரசை நிறுவியவன் ஆறாம் பராக்கிரமபாகு. விஜயநகர ஆட்ச்சியை முடிவுக்கு கொண்டுவரவே  இவன் சீன மிங் ராஜித்துடன் உறவை பேணி தனக்கு துணையாக அவர்களி கொண்டுவந்தான் என்றும் இருக்கிறது. இலங்கையின் பெரும்பகுதியை ஆண்ட இறுதி சிங்கள மன்னன் ஆறாம் பராக்கிரமபாகு. (1412- 1467) 

இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது 
வேண்டியவர்கள் எங்கு உண்மையான ஆதாரம் இருக்கும் என்று நம்புகிறீர்களோ 
அந்த அந்த இடங்களில் சென்று தெரிந்து கொள்ளலலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

மன்னிகவும். 

உங்கள் கற்பனைக்கு ஏற்ப இந்திய, இலங்கை வரலாற்றை அம்புலிமாமா பாலமித்திரா கதைகள் போல எழுதிவிட்டு அதற்கு ஆதாரம் கேட்டால் யாரோ திறந்த வெளி பல்கலையில் தபால் மூலம் இளமானி படித்தவரின் ஒன்லைன் இணைப்பை தந்து அதுதான் ஆதாரம் என்பதை ஏற்கமுடியாது.

ஆதாரம் இருக்கும் இடத்தில் இருக்குதென்றால் எடுத்து போடுங்கள் ஏனென்றால் நீங்கள்தான் இலங்கை விஜயநகர நேரடி ஆட்சியில் இருந்ததாக கூறுகிறீகள். இதை எந்த வரலாற்று ஆசிரியர் வேண்டாம், மாணவரிடம் சொன்னாலே சிரிக்க கூடாத பக்கத்தால் சிரிப்பார்கள்.

சோழருக்கு பின் எந்த தென்னிந்திய நேரடி ஆட்சியும் இலங்கையில் இல்லை. 

நான் முன்பே விபரித்தபடி கண்டி எனும் சிங்கள ராச்சியத்தின் கடைசி 75 ஆண்டுகள், நாயக்க மன்னர்கள் தென்னிந்தியாவில் இருந்து வருவிக்கபட்டு, சிங்கள பிரதானிகளால் வழிநடத்தபட்டு நடந்தது.

இதுதான் ஏற்றுகொள்ளபட்ட இலக்கிய, ஆவண, கல்வெட்டு, அகழ்வாராய்சி முடிவில் அமைந்த இலங்கை, இந்திய வரலாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜயநகர அரசன் இரண்டாம் ஹரிகார வின் சகோதரன் யுவராஜ விருப்பண்ணா 
என்பவன் 13ஆம் நூற்றாண்டு மத்தியில் (1385) படையெடுத்தது வந்து விஜயபாகுவை கொன்று 
விஜயநகர ஆட்ச்சியை இலங்கையில் நிறுவினான். அப்போது கர்நாடர்களின் வருகை இலங்கை பூராகவும் 
குறிப்பாக யாழ்ப்பகுதியில் அதிகம் இருந்ததகவும் சொல்லப்படுகிறது அந்த கால பகுதியில் 
நிறைய கர்நாடர்கள் யாழ் பகுதியில் வந்து குடியேறி இருக்கிறார்கள் 

பின்பு பாண்டிய அரசு மீண்டும் தென்காசியில் இருந்து வீறுகொண்டு எழுந்தது 
அவர்கள் மீண்டும் இலங்கையின் பல பகுதிகளை கைப்பற்றினார்கள் 

அதன்பின்பு விஜயநகர பேரரசின் இரண்டாம்  (கிருஷ்ண) தேவராஜ. 1460இல் மீண்டும் படையெடுத்து 
வந்து குறிப்பாக மத்திய இலங்கையை கைப்பற்றினான். அப்போதைய சிங்கள அரசரின் மகளான சிம்ஹலாதேவியை அவன் மணம் முடித்தான் அதன் பின்பு விஜயநகர பேரசுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே சில ஒப்பந்த அடிப்படைகளை செய்துகொண்டார்கள். அதன் பிரகாரம் விஜயநகர இளவரசரான வித்தல சிங்கள அரசின்  விசொரியாக நியமனம் பெற்றார். அதன் பின்பு பல வணிகம் விஜயநகர ஆளுமையின்கீழ்தான் இருந்தது இவர்களுடைய பகோடா எனும் பொற்காசுகள் புழக்கத்தில் வந்தன.
இவர்களுடைய சிற்ப கலைகள் ஓவிய கலைகள் இப்போதும் மத்திய இலங்கை பூராகவும்  உண்டு. இந்த  பகோடா  என்ற பொற்காசு பல இடங்களில் உண்டு. 

பின்பு போர்த்துக்கீசரின் வருகையுடன் 
விஜயநகரப்பேரசுக்கும் இலங்கைக்குமான தொடர்பு துண்டித்து கொண்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகோடா பொற்காசுகள் 
முதன்முதலில் இருபக்க காசுகளை புழக்கத்தில் கொண்டுவந்து 
விஜயநகர பேரரசுதான் 

INDIA, VIJAYANAGAR: Achyutaraya (1530-42) Gold pagoda, Gandabherunda type.  SCARCE!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சொல்லி விளங்கவில்லையா அல்லது சும்மா என்னை வீம்புக்கு இழுக்கிறீர்களா என்பது விளங்கவில்லை.

உங்களுக்கு கொடுக்க வேண்டிய விளக்கம் எல்லாம் கொடுதாயிற்று. தொடர்ந்தும் நீங்களாகவே தட்டச்சு செய்த அம்புலிமாமா கதைகளை பக்கோடா, முத்திரி அல்வா என்றெ ரேஞ்சில் இணைப்பது உங்கள் இஸ்டம். இனி இது சம்பந்தமாக என்னிடம் இருந்து பதில்வராது

தக்க வரலாற்று ஆதாரம் தரும் வரை

நன்றி வணக்கம்.

டொட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தலை வலிக்கிறது, ஏன்? குணசிங்கத்தின் "300 கி.மு- 2000 கி.பி இலங்கைத் தமிழர் வரலாறு "புத்தகத்தில் விஜய நகர பேரரசு பற்றி என்ன இருக்கிறது என்று தேடித் தலை வலிக்கிறது! அவர்கள் சோழர்களின் வீழ்ச்சிக்கு பிறகு தென்னிந்தியாவில் வந்தார்கள் என்பதைத் தவிர வேறெதுவும் மேலே சொல்லப் படுவதைப் போல இல்லை!

எனவே மேலே இருப்பது குவோரா போல அனாதைத் தளங்களில் இருந்து வந்த கட்டுக் கதை என்ற முடிவுக்கே நான் வருகிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

வாற த்துக்கு என்ன இருக்கு?
ஒரு நாட்டின் 200 வருட வரலாறை அப்படியே இரட்டடிப்பு  செய்யலாம் 
என்று எண்ணினால் முடியுமா? 

நான் வீடியோ ஆதாரம் போட்டால் கூட 
4k  இல் முடிந்தால் போடுங்கள் என்றுதான் கூற முடியும்.

இதுக்கு ஏன் நான் ஆதாரம் போடவேண்டும் என்பதே எனக்கு புரியவில்லை 
விக்கிறபமபாகுவை கொன்று வீழ்த்தியதில் இருந்து 
பகோடா பண்புளக்கம் என்பதெல்லாம்  இலங்கையின் வரலாறு 

இது தெரியாமல் இருந்தால் நீங்கள்தான் சென்று படிக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

விக்கிறபமபாகுவை கொன்று வீழ்த்தியதில் இருந்து 
பகோடா பண்புளக்கம் என்பதெல்லாம்  இலங்கையின் வரலாறு 

என்று மருதங்கேணி எழுதினார்.

5 minutes ago, Justin said:

எனக்குத் தலை வலிக்கிறது, ஏன்? குணசிங்கத்தின் "300 கி.மு- 2000 கி.பி இலங்கைத் தமிழர் வரலாறு "புத்தகத்தில் விஜய நகர பேரரசு பற்றி என்ன இருக்கிறது என்று தேடித் தலை வலிக்கிறது! அவர்கள் சோழர்களின் வீழ்ச்சிக்கு பிறகு தென்னிந்தியாவில் வந்தார்கள் என்பதைத் தவிர வேறெதுவும் மேலே சொல்லப் படுவதைப் போல இல்லை!

எனவே மேலே இருப்பது குவோரா போல அனாதைத் தளங்களில் இருந்து வந்த கட்டுக் கதை என்ற முடிவுக்கே நான் வருகிறேன்! 

அங்கே தேடியது உங்கள் பிழை 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

என்று மருதங்கேணி எழுதினார்.

1350 இல் இல் இருந்து 
1550 வரை இலங்கை வரலாறை நீங்கள் எழுதுங்கள் 
நாங்கள் வாசிக்கிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

வாற த்துக்கு என்ன இருக்கு?
ஒரு நாட்டின் 200 வருட வரலாறை அப்படியே இரட்டடிப்பு  செய்யலாம் 
என்று எண்ணினால் முடியுமா? 

நான் வீடியோ ஆதாரம் போட்டால் கூட 
4k  இல் முடிந்தால் போடுங்கள் என்றுதான் கூற முடியும்.

இதுக்கு ஏன் நான் ஆதாரம் போடவேண்டும் என்பதே எனக்கு புரியவில்லை 
விக்கிறபமபாகுவை கொன்று வீழ்த்தியதில் இருந்து 
பகோடா பண்புளக்கம் என்பதெல்லாம்  இலங்கையின் வரலாறு 

இது தெரியாமல் இருந்தால் நீங்கள்தான் சென்று படிக்க வேண்டும் 

மருதர், எங்கே இருக்கிறது? ஏதாவது பொதுப் புழக்கத்தில் இல்லாத ஓலைச்சுவடியேதும் வைச்சிருக்கிறீர்களா? 

எங்க இருக்கிறது இந்த வரலாற்றுப் பதிவு!🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

மருதர், எங்கே இருக்கிறது? ஏதாவது பொதுப் புழக்கத்தில் இல்லாத ஓலைச்சுவடியேதும் வைச்சிருக்கிறீர்களா? 

எங்க இருக்கிறது இந்த வரலாற்றுப் பதிவு!🤔

1350 இல் இல் இருந்து 
1550 வரை இலங்கை வரலாறை நீங்கள் எழுதுங்கள் 
நாங்கள் வாசிக்கிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

1350 இல் இல் இருந்து 
1550 வரை இலங்கை வரலாறை நீங்கள் எழுதுங்கள் 
நாங்கள் வாசிக்கிறோம் 

பார்ப்போம், 

நேரம் கிடைக்கும் போது செய்கிறேன். 

ஆனால் அது பெரியவேலை. ஆய்வு கட்டுரைகள், புத்தகங்கள், நேரடி field research இல் செய்த தரவுகள், archeological சிதைவுகள் இவற்றை எல்லாம் கோர்ர்து எழுத வேண்டும். சும்மா search engine இல் வந்ததை மொழி பெயர்த்து எழுத மாட்டேன். ஆனால் இந்த காலம் பற்றி ஏறகனவே பல வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய peer reviewed ஏற்றுகொள்ள பட்ட புத்தகங்கள் உள்ளதால் - தொகுப்பது இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரியின் கருத்தை நினைவூட்டும் கருத்துச்சித்திரம்.

சிரியுங்கள், சிந்தியுங்கள்.large.0D353D38-3422-4D53-828A-AA785F69F290.jpeg.edb119a3dae0b8b71c213de5d3626371.jpeg

Link to comment
Share on other sites

கோசன்.. நீங்கள் தமிழகத்தில் யாரை அவர்களும் தமிழர்கள்தான் என்கிறீர்களோ, அவர்கள் தங்கள் வீடுகளில் தெலுங்கில்தான் கதைக்கினம். யாழில் யாரை இப்போது தெலுங்கர்கள் 😁 என்கிறீர்களோ, அவர்கள். தமிழில்தான் கதைக்கினம். ஏன் இந்த குழப்பம். 🤩

நீங்கள் காலம் பிந்தி இந்த கட்டுரையை எழுதிப் போட்டீங்கள். என்னையும் தமிழனாக ஏற்றுக்கொள் எனும் வாதம் இப்போது தமிழகத்தில் முடிந்தே போய்விட்டது. அவர்கள் தங்களை இப்போது தமிழ் பேசும் தெலுங்கர்கள் என குறிப்பிட ஆரம்பித்து விட்டார்கள். பலர் திராவிட கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு போக ஆரம்பித்துள்ளார்கள். அதிகாரம் அங்கே கிடைக்கும் எனும் நம்பிக்கையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இசைக்கலைஞன் said:

வணக்கம் இசை,

இறைவனுக்கும், பிரபாவுக்கும் அடுத்து இருக்கிறாரா, இல்லையா என சந்தேகம் வருவிப்பவர் நீங்கள்தான் 🤣 கண்டது சந்தோசம்.

இந்த திரியை நான் அரசியலுக்காக எழுதவில்லை. ஆனால் நீங்கள் சொன்னதால் பதில் சொல்கிறேன்- பலர் திராவிட கட்சிகளில் இருந்து பஜக வுக்கு போகிறார்கள் - இதுதான் ஐயா நான் படித்து படித்து சொன்ன “பெரியாரை நீக்கி அந்த இடத்தை சவர்காரால் பிரதியீடு செய்யும் சங்கி அரசியல்”. 

வரலாற்றில் சிங்களவர் வெல்வதற்கும் தமிழர் தோற்பதற்கும் இந்த ஒரு உதாரணம் போதும்.

 1. இலங்கையில் புத்தளம், நீர்கொழும்பு மாவட்ட கரையோர மக்கள் எல்லாரும் 2,3 தலைமுறைக்கு முன்னர் தமிழர்கள். நீர் கொழும்பை மீ கமூவ என்கிறார்கள். அது உண்மையில் மீன்காமம். இலங்கையின் வடமேற்கு கரையில் 1910 வரைபடத்தை எடுத்து பார்த்தால் ஒவ்வொரு கிராமமும் தூய தமிழ் பெயரிலே இருக்கும். ஆனால் இப்போ? இந்த பகுதி மக்கள்தான், தமிழர்களை மிக மோசமாக துவேசிக்கும் சிங்களவர்கள். இதுதான் சிங்கள பெளத்தத்தின் தூர நோக்கு.  தேவநம்பிய தீசன் காலத்தில், மொழியும் இல்லை, இனமும் இல்லை - இன்று , நாகம், யக்கன், தமிழன், தெலுங்கன், மலையாளி, கன்னடன், காப்பிலி என இலங்கைக்குள் வந்த சகலரையும் சிங்களம் என்ற அடையாளத்துள் விழுங்கி -ஒரு பேரினமாக எழுந்து நிற்கிறான்.

2. தமிழ்நாட்டில் - இதுவரை நாம் பல நூறு வருடங்களுக்கு முன் ஆந்திராவில் இருந்து வந்து, தமிழராகிவிட்ட நாயக்க சாதியினர் என்று 2010 வரை தம்மை தமிழர், ஆனால் ஆந்திர மரபுரிமையுள்ளா நாயக்கர் சாதியினர் என அடையாளம் கொண்டு, தமிழ் தேசிய அரசியலுக்கும் ஆதரவாய் பேசிய ஒரு கூட்டத்தை, 10 வருடத்தில், நீ தமிழன் இல்லை வந்தேறி என்று பிஜேபி பக்கம் தள்ளிவிட்டோம்.  நாயக்கர் மட்டும் அல்ல, முதலியார், கோனார், இப்படி கிட்டதட்ட தற்போதைய தமிழகத்தின் ஆளுமை மிக்க 20% மக்களை overnight இல் தமிழர் இல்லை என்றாக்கிவிட்டோம். அவர்கள் எங்கே போவார்கள்? 600 வருடம் வாழ்ந்த ஊரை விட்டா போக முடியும்? இல்லை தக்கண பிழைத்தே ஆக வேண்டும் -எனவே பிஜேபிக்கு போகிறார்கள்.  

80% ஐ ஆவது தக்க வைப்போமா? அதுவும் இல்லை. இங்கேதான் தமிழருக்கு இடையான  சாதிய மோதல் வருகிறது, நாயக்கரை அனுப்பிவிட்டோம் சரி அப்போ யார் தலைமை? தேவரா? தலித்துகளா? நாடாரா?வன்னியரா?

இந்த பிளவுகளை தனது கட்சி மட்டத்தில் சீமான் சரி செய்தாலும் வெளியே இதை அவரால் சரிசெய்யமுடியாது (அவர் செய்ய விரும்பவில்லை என்பது வேறு). அதனால்தான் அவரது சொந்த நாடார் சாதி மக்கள் கூட, நாத கட்சியை விட ஹரி நாடாருக்கு அதிக வாக்கை போட்டார்கள்.

ஆகவே தமிழ் நாட்டில் இதுவரை தமிழ் மொழி பேசுவோர் என்ற ஒரு மேம்போக்கான அடையாளத்தில் திராவிட கட்சிகளில் இருந்த கூட்டத்தை, இனதூய அரசியலால் சிறுக, சிறுக உடைத்து பிஜேபி, மற்றும் சாதி கட்சிகள் பக்கம் திருப்புவதே நடக்கிறது. இதில் உடையும் சில பகுதிகள் நாம் தமிழருக்கும் வருவது மறுக்கவியலாதது. ஆனால் இதில் பெரும் ஆதாயம் பிஜெபிக்கே.

சுருங்க கூறின் - வருபவர்கள் எல்லாரையும் இணைத்து பலமாகுவது சிங்கள அணுகுமுறை.

இருப்பதையும், இனதூய்மை, சாதி, பிரதேசம், ஊர், மதம், இயக்கம், சித்தாந்தம் என பிரிந்து பலவீனமாகுவது தமிழ் அணுகுமுறை. மூவேந்தர் காலம் முதல் இதுதான் வரலாறு.

ஆகவே சீமானை பிஜேபியிம் B டீம் என நான் என்றோ கூறியது இன்று உண்மையாகிறது.

இதில் நான் லேட்டா இல்லையா என்பது பொருட்டே அல்ல. நான் யாழில் எழுதுவதால் பல பெரும் முதலாளிகள் ஆதரவுடன், சீமான் பிஜேபிக்காக செய்யும் மறைமுக அரசியலை தடுத்து நிறுத்திவிட முடியும் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை.

ஆனால் இதை சொல்லாமலும் இருக்க முடியவில்லை.

இதில் இருக்கும் எதிர்கால ஆபத்தை புரிந்து கொண்டதால் -I told you so - என்று குதூகலிக்கவும் முடியாது.

என்னுடைய மோசமான எதிர்வுகூறல்கள் உண்மையாகிறன என்ற கசப்பான உண்மையை தரிசிக்க மட்டுமே முடியும்

****

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, இசைக்கலைஞன் said:

இசை,

1. இந்த திரி ஒரு குறிப்பிட்டவாதத்தை நிறுவ அல்லது எதிர்க்க முன்வைக்கபட்ட திரி. அது சம்பந்தமான உரையாடல்களை பதிந்தால் நல்லம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். 

2. விடுதலை புலிகளாலே ஒழிக்கமுடியாத விடயத்தை இந்த திராவிட பிஸ்கோத்துகள் மட்டும் அல்ல, யாருமே ஒழிக்கமுடியாது என்பது என் கருத்து.

3. நீங்கள் இணைத்த லிங் வேலை செய்யவில்லை🤣. ( கல்யாணசுந்தரம் ஆதரவாளன் போட்ட லிங்கோ🤣). நான் முதலிலே பார்த்த வீடியோதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனத்தூய்மை வாதம் நல்ல விடயமெனக் கூறுவோர் அதை ஏதாவதொரு தளத்தில் நிறுவ முயல வேண்டும்:

1. அங்கத வழியிலும் முடியவில்லை!
2. பிறப்புரிமையியல் அடிப்படையில், முடியவில்லை!
3. அரசியல், பொருளாதார வழியிலும் முடியவில்லை! 

கடைசியில் எஞ்சி நிற்பது, ஆதாரம் கேட்பவனை தலைக்கனம் கொணடவனாகக் காட்டி தங்களை victim ஆக சித்திரிக்கும் பரிதாப மனநிலை மட்டும் தான்!    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

36 minutes ago, Justin said:

ஆதாரம் தேவையென்றா தேடி பிடிக்கவேணும். சும்மா இருந்து கொண்டு கொண்டு வா ஆதாரத்தினை எண்டால், அடுத்தவனுக்கு வேலை இல்லையா?

ஆதாரத்தினை கொண்டு வந்தால், அதை பார்க்கிறதை விட்டு போட்டு, அது எவ்விடத்திலை இருக்குது எண்டு ஆராய்ந்தால், யார் தான் பதில் போடுவான். குளறிப்போட்டு போகட்டும் எண்டு தானே இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஆதாரம் தேவையென்றா தேடி பிடிக்கவேணும். சும்மா இருந்து கொண்டு கொண்டு வா ஆதாரத்தினை எண்டால், அடுத்தவனுக்கு வேலை இல்லையா?

ஆதாரத்தினை கொண்டு வந்தால், அதை பார்க்கிறதை விட்டு போட்டு, அது எவ்விடத்திலை இருக்குது எண்டு ஆராய்ந்தால், யார் தான் பதில் போடுவான். குளறிப்போட்டு போகட்டும் எண்டு தானே இருப்பார்கள். 

 #ஹப்லோரைப் R1a யா? அதைத் தான் நேற்றே உங்கள் திரியில் ஒட்டை என்று காட்டியாயிற்றே? இன்னும் "பிரியவில்லையா"?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.