Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மெத்தப்படித்த வரலாற்று ஆய்வாளர்கள்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மெத்தப்படித்த வரலாற்று ஆய்வாளர்கள்

மெத்தப்படித்த வரலாற்று ஆய்வாளர்கள் திடீரென வந்து தெலுங்கு பாசத்துடன் ஏதேதோ எழுதுகிறார்கள். தமது கருத்தினை பவ்யமாக வைக்காமல், தமக்கே உரிய மமதையில், தாம் சொல்வது தான் சரி, அடுத்தவர்கள் அரைவேக்காடுகள் என்று சொல்லி கருத்துக்கள் வைக்கும் மமதையினை யார் அவர்களுக்கு கொடுத்தார்கள் என்று நிர்வாகம் தான் விளக்க வேண்டும்.

தாம் தான் பெரிய அறிவாளி, அடுத்தவன் எல்லாம் வடிகட்டிய முட்டாள்கள், தப்பு தப்பாக கருத்துக்கள் வைக்கும் மடையர்கள் என்று எழுதும், அறிவாளிகளை என்னென்பது.

பெரோஸ் காந்தி என்று இந்தியா அறிந்த பெயரை, சீக்கியர்கள் கோபத்துடன் வேண்டுமென்றே போட்டு  வைத்த அபத்த விக்கிப்பீடியாவினை பார்த்து, பெரோஸ் கான் என்று கருத்து சொல்லும் மேதைகள், அடுத்தவர்களை விக்கிப்பீடியா அரை புல் மேய்ப்பவர்களாம். இப்படி பட்ட அறிவு கொண்டவர்களுடன் என்ன தர்க்கிப்பது என்று கடந்து செல்ல, இன்னுமொரு அபத்ததுடன் வருகிறார்கள். 

வரலாற்று சான்றுகள் இல்லாமல், பெயரை மட்டும் வைத்துக்கொண்டு செல்வநாயகம், தெலுங்கரா  என்றால்??? 

தெலுங்கராக அவரது மூதாதையினர்  இருந்திருக்கலாம். வரலாறு ஆம் என்று சொல்கிறது.

தெலுங்கர்கள் குறித்து தமிழர்கள் நாம்  சொன்னால், கோபம் பொத்துக்கொண்டு வரும் காரணம் என்ன?

1529ம் ஆண்டில் விஜய நகரப்பேரரசு தமிழகத்தில் ஆட்சியை பிடித்தபோது, இலங்கையில் போர்த்துகேயர்கள் ஆட்சியினை பிடித்தார்கள். 

கொச்சினில் இருந்த போர்த்துகேயர்கள், மேலே சமூரியர்களுடனும், கிழக்கே பலம் பொருந்திய விஜய நகர பேரரசுடனும் மோதி, தாம் வந்த வியாபார நோக்கத்தினை கெடுக்காமல், அங்கிருந்து வெளியேறி, இலங்கை செல்கின்றனர். விஜய நகர பேரசுடன் இணக்கமாக போய் மிளகு, வாசனை திரவிய வணிகம் செய்கின்றனர்.

இவ்வகையில், இலங்கையில் புகுந்த அவர்கள் 130 வகையான புதிய பயிர்களை, தாவரங்களை அறிமுகப்படுத்துகின்றனர். மிளகாய், புகையிலை, உருளைக்கிழங்கு, தக்காளி  உட்பட பல பயிர்களை செய்கின்றனர்.

வடக்கே, யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்த தீவுக் கூட்டங்களை முதலில் பிடித்தனர்.

இங்கே பயிர் செய்ய, மலபார்களையும், விஜய நகர் பேரரசின் ஆட்சியில் இருந்த தமிழகத்தில் இருந்து பலரையும் இங்கே குடி அமர்த்துகிறார்கள். 1957ம் ஆண்டு வரை யாழ்ப்பாண- மலையாள புகையிலை விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பின் அலுவலகம் சாவகச்சேரியில் இருந்தது.

கொழும்பு பத்திரகாளி காளி அம்மன் வரலாற்றினை சொல்லும்போது, அந்த கோவில், பயிர்செய்கைக்கு வந்த. கொழும்பில் குடியேறிய மலையாளிகள், தெலுங்கர்கள் உருவாக்கியது என்கிறார்கள்.

MGR என்கிற மலையாளி பிறந்தது கண்டியில்.

இவ்வாறு வந்த பலர், மலையாளிகளாகவும், தமிழராகவும், தெலுங்கராகவும் இருந்தார்கள். பிரபாகரன் முன்னோர் கூட மலையாள தொடர்பு உள்ளதாக கதை  இருந்தது. அதுபோல சரத் பொன்சேகா. நல்லூர் அரசு அதன் மூன்றாவது அரசன் வரை போர்த்துக்கேயருடன் இணக்கமாக இருந்தது. மன்னாரில் 3,000 பேரினை  கிறித்தவர்களாக மதம் மாத்திய விடயத்தில், சங்கிலி மன்னன் கொதிக்க, போர்த்துகேயர்கள் அவனுடன் போர் தொடுத்து, வீழ்த்தி, யாழ்ப்பாணத்தினை கையகப்படுத்தினர். அதன் பின்னர் தீவுகளில் இருந்த மலப்பார்கள் , தெலுங்கர்கள், தமிழக தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறினர்.

அனுராதபுர தமிழர்கள், சிங்களவர்களானது போல, இப்படி வந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் , தமிழை பேசி தமிழராகி விட்டனர். 

விஜய நகர பேரரசின் அரச குடும்பத்தில் இருந்து பெண், அல்லது ஆண் எடுப்பது, கொடுப்பது, இலங்கையின் நான்கு ராசதானிகளுக்கும் பொதுவாக இருந்தது. அவ்வகையிலும் தெலுங்கர்கள் வந்தனர். இந்த வகையில் பிரிட்டிஷ்காரர்கள் வரும் வரை நடந்து கொண்டது, வன்னியும், கண்டியும்.

கண்டியின் கடைசி மன்னன், தெலுங்கு இளவரசன் விக்கிரம ராஜசிங்கன், திருப்பி, வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

இவர்களுடன் வந்தவர்வர்களே, நாயக்கர்கள்... அரச குடும்பத்துடன் வந்ததால், உயர் பதிவிகளில் இருந்ததுடன், பெரும் குடிகளாக இருந்தார்கள். நாளடைவில் சிங்கள பகுதி மலையாளிகளும், தெலுங்கர்களும் சிங்களவர்களாகவும், தமிழ் பகுதி மலையாளிகளும், தெலுங்கர்களும் தமிழர்களாகவும் தீவில், வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள்.

இது வரலாறு. விக்கிப்பீடியா கதை இல்லை. அடுத்தவர்களின் கருத்தினை மதிக்க தெரிந்தால் பதில் கவுரவமாக போடுங்கள், கருத்தாடலாம். ஆனால் அடுத்தவர் அரைவேக்காடுகள். நான் தான் பெரும் அறிவுச்செம்மல் என்றால், அப்படி மண்டைக்கனம் இருந்தால். உங்கள் திரிகளுடனேயே நின்று பதிவி  செய்யுங்கள். ஏனெனில், தம்மை பெரும் அறிவாளிகள் என்று பீத்திக்  கொள்பவர்களுடன் கருத்தாடுவதில்லை என்பது முடிவு செய்தாகி விட்டது.

Edited by Nathamuni
 • Like 4
 • Thanks 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • Replies 63
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மெத்தப்படித்த வரலாற்று ஆய்வாளர்கள் மெத்தப்படித்த வரலாற்று ஆய்வாளர்கள் திடீரென வந்து தெலுங்கு பாசத்துடன் ஏதேதோ எழுதுகிறார்கள். தமது கருத்தினை பவ்யமாக வைக்காமல், தமக்கே உரிய மமதையில், தாம் சொல்வது

ஒரு கருத்தை மையமாக வைத்து கருத்தாடுபவர்கள் பலப்பரீட்சையில் ஈடுபடும்போது இப் பிரச்சனை வருகின்றது. தமிழினத்தின் வீழ்சியில் இந்த மரபுவளி பழக்கவழக்கம் மிகப்பெரிய பங்குவகிக்கின்றது. ஒரு கருத்தை வைத்து வாதா

சொந்த நாட்டு வரலாறு தெரியாது  இதில் எதோ மொத்த பூமியின் இன்ஸகொலோபீடிய தாம் என்ற ரங்கில்தான் கதை  வரலாறு எழுதினால் இதெல்லாம் எங்க தனியாய் ஒரு ஓலையிலோ இருக்காம்?  இலங்கையின் ஆளுமை மிக்க மன்னர்கள

 • கருத்துக்கள உறவுகள்

ஏனண்ணே அந்த வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய திரியில் எழுதாமல் தனிய ஆவர்த்தனம் வாசிக்கிறீங்கள். இது யூடியூப் இல்லைத்தானே வாசிச்ச ஆட்களின் எண்ணிக்கையை வைச்சு காசு பார்க்க. 😂😂😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

ஏனண்ணே அந்த வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய திரியில் எழுதாமல் தனிய ஆவர்த்தனம் வாசிக்கிறீங்கள். இது யூடியூப் இல்லைத்தானே வாசிச்ச ஆட்களின் எண்ணிக்கையை வைச்சு காசு பார்க்க. 😂😂😂

அங்க, அறிவாளியின், பிரசங்கமேடை.

நம்ம மாதிரி அரைவேக்காடு ஆட்களுக்கு இடமில்லை பாருங்கோ.

ஏழறிவுக்காரர், பழைய திரி ஒன்றை கிளறி,அலம்பறை பண்ணவதில் விசயம் இருப்பதாக தெரியாததால், தனி ஆவர்தனம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சரி! அப்படியானால் தமிழில் "நாயகம்" என்று முடிகிற ஆட்கள் நாயக்கர் இல்லையோ? பண்டாரநாயக்க என்றிருப்போர் மட்டும் தான் நாயக்கரோ? 

பகிடி என்று நினைக்காதீர்கள், இதைப் பற்றி எனக்கு அக்கறை இருந்ததில்லை! ஆனால், இப்போது அறிந்து கொள்ளக் கேட்கிறேன்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

மெத்தப்படித்த வரலாற்று ஆய்வாளர்கள்

மெத்தப்படித்த வரலாற்று ஆய்வாளர்கள் திடீரென வந்து தெலுங்கு பாசத்துடன் ஏதேதோ எழுதுகிறார்கள். தமது கருத்தினை பவ்யமாக வைக்காமல், தமக்கே உரிய மமதையில், தாம் சொல்வது தான் சரி, அடுத்தவர்கள் அரைவேக்காடுகள் என்று சொல்லி கருத்துக்கள் வைக்கும் மமதையினை யார் அவர்களுக்கு கொடுத்தார்கள் என்று நிர்வாகம் தான் விளக்க வேண்டும்.

தாம் தான் பெரிய அறிவாளி, அடுத்தவன் எல்லாம் வடிகட்டிய முட்டாள்கள், தப்பு தப்பாக கருத்துக்கள் வைக்கும் மடையர்கள் என்று எழுதும், அறிவாளிகளை என்னென்பது.

பெரோஸ் காந்தி என்று இந்தியா அறிந்த பெயரை, சீக்கியர்கள் கோபத்துடன் வேண்டுமென்றே போட்டு  வைத்த அபத்த விக்கிப்பீடியாவினை பார்த்து, பெரோஸ் கான் என்று கருத்து சொல்லும் மேதைகள், அடுத்தவர்களை விக்கிப்பீடியா அரை புல் மேய்ப்பவர்களாம். இப்படி பட்ட அறிவு கொண்டவர்களுடன் என்ன தர்க்கிப்பது என்று கடந்து செல்ல, இன்னுமொரு அபத்ததுடன் வருகிறார்கள். 

வரலாற்று சான்றுகள் இல்லாமல், பெயரை மட்டும் வைத்துக்கொண்டு செல்வநாயகம், தெலுங்கரா  என்றால்??? 

தெலுங்கராக அவரது மூதாதையினர்  இருந்திருக்கலாம். வரலாறு ஆம் என்று சொல்கிறது.

தெலுங்கர்கள் குறித்து தமிழர்கள் நாம்  சொன்னால், கோபம் பொத்துக்கொண்டு வரும் காரணம் என்ன?

1529ம் ஆண்டில் விஜய நகரப்பேரரசு தமிழகத்தில் ஆட்சியை பிடித்தபோது, இலங்கையில் போர்த்துகேயர்கள் ஆட்சியினை பிடித்தார்கள். 

கொச்சினில் இருந்த போர்த்துகேயர்கள், மேலே சமூரியர்களுடனும், கிழக்கே பலம் பொருந்திய விஜய நகர பேரரசுடனும் மோதி, தாம் வந்த வியாபார நோக்கத்தினை கெடுக்காமல், அங்கிருந்து வெளியேறி, இலங்கை செல்கின்றனர். விஜய நகர பேரசுடன் இணக்கமாக போய் மிளகு, வாசனை திரவிய வணிகம் செய்கின்றனர்.

இவ்வகையில், இலங்கையில் புகுந்த அவர்கள் 130 வகையான புதிய பயிர்களை, தாவரங்களை அறிமுகப்படுத்துகின்றனர். மிளகாய், புகையிலை, உருளைக்கிழங்கு, தக்காளி  உட்பட பல பயிர்களை செய்கின்றனர்.

வடக்கே, யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்த தீவுக் கூட்டங்களை முதலில் பிடித்தனர்.

இங்கே பயிர் செய்ய, மலபார்களையும், விஜய நகர் பேரரசின் ஆட்சியில் இருந்த தமிழகத்தில் இருந்து பலரையும் இங்கே குடி அமர்த்துகிறார்கள். 1957ம் ஆண்டு வரை யாழ்ப்பாண- மலையாள புகையிலை விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பின் அலுவலகம் சாவகச்சேரியில் இருந்தது.

கொழும்பு பத்திரகாளி காளி அம்மன் வரலாற்றினை சொல்லும்போது, அந்த கோவில், பயிர்செய்கைக்கு வந்த. கொழும்பில் குடியேறிய மலையாளிகள், தெலுங்கர்கள் உருவாக்கியது என்கிறார்கள்.

MGR என்கிற மலையாளி பிறந்தது கண்டியில்.

இவ்வாறு வந்த பலர், மலையாளிகளாகவும், தமிழராகவும், தெலுங்கராகவும் இருந்தார்கள். பிரபாகரன் முன்னோர் கூட மலையாள தொடர்பு உள்ளதாக கதை  இருந்தது. அதுபோல சரத் பொன்சேகா. நல்லூர் அரசு அதன் மூன்றாவது அரசன் வரை போர்த்துக்கேயருடன் இணக்கமாக இருந்தது. மன்னாரில் 3,000 பேரினை  கிறித்தவர்களாக மதம் மாத்திய விடயத்தில், சங்கிலி மன்னன் கொதிக்க, போர்த்துகேயர்கள் அவனுடன் போர் தொடுத்து, வீழ்த்தி, யாழ்ப்பாணத்தினை கையகப்படுத்தினர். அதன் பின்னர் தீவுகளில் இருந்த மலப்பார்கள் , தெலுங்கர்கள், தமிழக தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறினர்.

அனுராதபுர தமிழர்கள், சிங்களவர்களானது போல, இப்படி வந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் , தமிழை பேசி தமிழராகி விட்டனர். 

விஜய நகர பேரரசின் அரச குடும்பத்தில் இருந்து பெண், அல்லது ஆண் எடுப்பது, கொடுப்பது, இலங்கையின் நான்கு ராசதானிகளுக்கும் பொதுவாக இருந்தது. அவ்வகையிலும் தெலுங்கர்கள் வந்தனர். இந்த வகையில் பிரிட்டிஷ்காரர்கள் வரும் வரை நடந்து கொண்டது, வன்னியும், கண்டியும்.

கண்டியின் கடைசி மன்னன், தெலுங்கு இளவரசன் விக்கிரம ராஜசிங்கன், திருப்பி, வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

இவர்களுடன் வந்தவர்வர்களே, நாயக்கர்கள்... அரச குடும்பத்துடன் வந்ததால், உயர் பதிவிகளில் இருந்ததுடன், பெரும் குடிகளாக இருந்தார்கள். நாளடைவில் சிங்கள பகுதி மலையாளிகளும், தெலுங்கர்களும் சிங்களவர்களாகவும், தமிழ் பகுதி மலையாளிகளும், தெலுங்கர்களும் தமிழர்களாகவும் தீவில், வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள்.

இது வரலாறு. விக்கிப்பீடியா கதை இல்லை. அடுத்தவர்களின் கருத்தினை மதிக்க தெரிந்தால் பதில் கவுரவமாக போடுங்கள், கருத்தாடலாம். ஆனால் அடுத்தவர் அரைவேக்காடுகள். நான் தான் பெரும் அறிவுச்செம்மல் என்றால், அப்படி மண்டைக்கனம் இருந்தால். உங்கள் திரிகளுடனேயே நின்று பதிவி  செய்யுங்கள். ஏனெனில், தம்மை பெரும் அறிவாளிகள் என்று பீத்திக்  கொள்பவர்களுடன் கருத்தாடுவதில்லை என்பது முடிவு செய்தாகி விட்டது.

இவர்கள் சந்தேகம் இன்றி விஜயபேரசின் தொடர்ச்சிதான் 
ஆனால் தெலுங்கர்கள் என்பதுதான்? நிறுவுவது கடினமானது 
இவர்கள் தெலுங்கு பேசியதாகவோ .. தெலுங்கு மொழிக்கு எங்கேனும் 
முக்கியம் கொடுத்தகாதகவோ இல்லையே?

இவர்கள் காலத்தில் தமிழகத்திலோ அல்லது இலங்கையிலோ 
எழுந்திருக்கும் இந்தத் கோவிலும்  விஜயநகர கட்டிட கலையுடன் 
கொஞ்சமும் தொடர்பு இன்றி இருக்கிறது 

மகாபலிபுரம் பல்லவர்களின் கோட்டை என்பதுக்கு அவர்களின் கட்டிடம் 
சில ஆயிரம் வருடம் சென்றும் சாட்ச்சியாக இருக்கிறது 
அதுபோல கர்நாடகா எங்கும் இவர்கள் அமைத்த கோவில்கள் 1300 -1400 வருடம் தாண்டியும் 
அப்படியே அசையாது இருக்கிறது. 

விஜயநகர அரசின் எழுச்சி என்பது  கஜனி முகமது போன்றவர்களின் படையெடுப்பு போல 
வந்து சென்றதாகவே இருக்கிறது ... எனக்கு என்னமோ பின்னாளில் தமிழர்கள்தான் 
அந்த பெயர்களை தத்தெடுத்தது பரப்பியிருப்பார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது.  

விக்கிரம பாகு 
பராக்கிரம பாகு 
இவர்கள் பாண்டிய காலத்தவர்கள் 

இந்த "விக்கிர"  பெயரை அப்போதே உள்வாங்கி இருக்கிறார்களே? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் கல்லை மண்ணை பெயரை.. மண்ணாங்கட்டியை ஆராய வேண்டியதில்லை.

கொவிட் 19 க்கு எல்லாம் மரபணுச் சோதனை செய்யுறவை..

தங்கட மகா வம்சத்துக்கு ஒரு வலுவான அறிவியல் சான்று கொடுக்க ஏன் டி என் ஏ ரெஸ்ட் எடுக்க மாட்டம் என்று நிக்கீனம்..??!

பிரபாகரனின் மரணித்திற்கும் மரபணுச் சோதனை இல்லை.. சிங்களவனின் மகாவம்ச அரைவாசி சிங்க கதையளப்புக்கும் மரபணுச் சோதனை இல்லை..??!

அங்கால கீழடியில் தமிழன் மரபணுச் சோதனைக்கு கேட்டால்.. ஹிந்திக்காரன் பைல மூடு என்கிறான்.. இங்கால சிங்களவனைக் கேட்டால்.. அவன் ஆளை விடு என்று ஓடிறான்.. ஏனெனில்.. அறிவியலின் முன்னாள் இவங்களின் கட்டுக்கதைகளின் உண்மை நிராகரிப்படும் வெகு இலகுவாக.

என்ன இப்ப அறிவியல் அறிக்கைகளையும் காசு கொடுத்து வாங்கிறாங்கள் என்பதால்.. நடுநிலையான ஆய்வுகூடங்களில் மட்டும் ஆராய்ச்சிகள் செய்யப்படனும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இவர்கள் சந்தேகம் இன்றி விஜயபேரசின் தொடர்ச்சிதான் 
ஆனால் தெலுங்கர்கள் என்பதுதான்? நிறுவுவது கடினமானது 
இவர்கள் தெலுங்கு பேசியதாகவோ .. தெலுங்கு மொழிக்கு எங்கேனும் 
முக்கியம் கொடுத்தகாதகவோ இல்லையே?

இவர்கள் காலத்தில் தமிழகத்திலோ அல்லது இலங்கையிலோ 
எழுந்திருக்கும் இந்தத் கோவிலும்  விஜயநகர கட்டிட கலையுடன் 
கொஞ்சமும் தொடர்பு இன்றி இருக்கிறது 

மகாபலிபுரம் பல்லவர்களின் கோட்டை என்பதுக்கு அவர்களின் கட்டிடம் 
சில ஆயிரம் வருடம் சென்றும் சாட்ச்சியாக இருக்கிறது 
அதுபோல கர்நாடகா எங்கும் இவர்கள் அமைத்த கோவில்கள் 1300 -1400 வருடம் தாண்டியும் 
அப்படியே அசையாது இருக்கிறது. 

விஜயநகர அரசின் எழுச்சி என்பது  கஜனி முகமது போன்றவர்களின் படையெடுப்பு போல 
வந்து சென்றதாகவே இருக்கிறது ... எனக்கு என்னமோ பின்னாளில் தமிழர்கள்தான் 
அந்த பெயர்களை தத்தெடுத்தது பரப்பியிருப்பார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது.  

விக்கிரம பாகு 
பராக்கிரம பாகு 
இவர்கள் பாண்டிய காலத்தவர்கள் 

இந்த "விக்கிர"  பெயரை அப்போதே உள்வாங்கி இருக்கிறார்களே? 

மருதர், நாளை விரிவாக கருத்தாடுவோம்.

உங்கள், கேள்வியில் உள்ள கண்ணியத்துக்கும் , மேற்படியான் விச(ம)த்துக்கும் உள்ள வித்தியாசத்தை கவனிக்கிறேன்.

பல நாளுக்குப் பிறகு வந்து குதித்தது, தமிழ் தேசியத்துக்கு எதிராக எழுதுகிறார்கள் என்ற திரியில்.

செய்வது என்ன? தமிழ் தேசியத்துக்கு நேர் எதிராக வரலாற்றினை கையில் எடுக்கும் போர்வையில், சிங்கள தேசியம் பேசுவது.

பழைய திரியை கிண்டி பண்டாரநாயக்காவை எப்படி தெலுங்கர் என்பாய்? அப்ப செல்வநாயகம் யார்? என்று கேலித்தனமாக சீண்டுவது.

இதே கேள்வி; நீஙகள் வைக்கும் போதுள்ள கண்ணியம், அங்கே திட்டமிட்டே மிஸ்ஸிங்.

தமிழ் தேசியம் பேசுபவர்களை மடையர்களாக்கி, தனித்தனியாக கோணர் பண்ணி, ஓவ் ஆக்கும் பயிற்றப்பட்ட நுட்பம்.

ஆங்கில பழமொழி; முயல்களுடன் ஓடிக் கொண்டே, சமயம் பார்த்து கழுத்தை கவ்வும் ஓநாய் வேலை.

கவனித்துப்பாருங்கள்... தப்புத்தப்பா பதிவிடுகிறார், மொக்குத்தனமா கருத்துப் போடுறார் என்று தாக்குவது. கருத்துகளில் நையாண்டித்தனம்... சிரிப்பும், கேலிகளும்...அரை வேக்காடு என்பது.

இதனையே அச்சு பிசகாமல் மீண்டும், மீண்டும் செய்வது.

இங்கே கருத்தாடுபவர்களும், தளமும், அதை நடாத்துபவர்களும், நிரவாகிகளும் முட்டாள்கள் என்பதாக நிணைத்துக் கொள்வது.

பாரம்பரியம் மிக்க குடும்பம், அலகாபாத் பிராமணர்கள். அதில் வந்த பெண்மணி இந்திரா காந்தி, மொய்னா பேகம், கணவர் பெரோஸ் கான் என்று திரியை பதிந்து, அது உண்மையா என்று, கேட்ட போது அது உண்மைதான்  என்று சொன்ன போதே, அந்த பதிவின் நோக்கத்தின் தீர்க்கமான நுட்பம் புரிந்தது.

இலங்கை தேர்தல் முடிந்துவிட்டது. இனி தமிழ் தேசியத்துக்கு எதிரான பல சம்மட்டிகளை பல வித கோலங்களில் பார்க்கத்தானே போகிறோம்.

அதே வேளை கிருபன் போன்ற நேர்மையான ஆனால் அப்பாவியான கருத்தாளர்களையும் பார்க்கிறோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, Nathamuni said:

நாதமுனி...  நியாயமான, ஆதங்கமான கருத்து.
சிலர்.. கடந்த இரு நாட்களாக செய்த, 
கோணங்கித்தனமான... செயல்களைப் பார்க்க..
வெறுப்பாகவும், வேதனையாகவும்  இருந்தது.  😡

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2020 at 21:18, Nathamuni said:

இது வரலாறு. விக்கிப்பீடியா கதை இல்லை. அடுத்தவர்களின் கருத்தினை மதிக்க தெரிந்தால் பதில் கவுரவமாக போடுங்கள், கருத்தாடலாம். ஆனால் அடுத்தவர் அரைவேக்காடுகள். நான் தான் பெரும் அறிவுச்செம்மல் என்றால், அப்படி மண்டைக்கனம் இருந்தால். உங்கள் திரிகளுடனேயே நின்று பதிவி  செய்யுங்கள். ஏனெனில், தம்மை பெரும் அறிவாளிகள் என்று பீத்திக்  கொள்பவர்களுடன் கருத்தாடுவதில்லை என்பது முடிவு செய்தாகி விட்டது.

ஒரு கருத்தை மையமாக வைத்து கருத்தாடுபவர்கள் பலப்பரீட்சையில் ஈடுபடும்போது இப் பிரச்சனை வருகின்றது. தமிழினத்தின் வீழ்சியில் இந்த மரபுவளி பழக்கவழக்கம் மிகப்பெரிய பங்குவகிக்கின்றது. ஒரு கருத்தை வைத்து வாதாட்டத்தில் ஈடுபடுவதில் எமக்கு முடிவே இல்லை.  இதனால் கருத்து அடையவேண்டிய இலக்கை கடந்து நாம் சென்றுகொண்டே இருப்போம். ஒரு இலக்கை வைத்து கருத்துக்களை நகர்த்துவது அல்லது ஒரு குறிக்கோளை வைத்து கருத்துக்களை நகர்த்துவது என்பதற்கு பதிலாக கருத்துக்களை வைத்து எம்மை நகர்த்த முற்படுகின்றோம். இந்த தன்மை தனியே வாதாட்டத்தோடு நின்றுவிடுவதில்லை , சிந்தனையிலும் செயலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 

உலகெங்கும் வரலாறுகள் மதங்கள் ஆன்மீக நம்பிக்கைகள் ஊடகங்கள் அறிவியல் என அனைத்தும் பல்வேறுபட்ட தரப்புகளால் பல்வேறுபடட நோக்கத்துடனேயே பயன்படுத்தப்படுகின்றது. அவை அதிகாரங்களை கைப்பற்றவோ இல்லை வியாபார லாபங்களுக்காகவோ இல்லை வாழ்வுக்காக, பிழைப்புக்காகவே நன்மைக்காக தீமைக்காக எதுவாகவும் இருக்கலாம். சிங்கள பெருந்தேசீய இனம் கட்டமைக்கப்பட்டதின் பின்னால் உள்ள வரலாற்று போதனையில் ஏராளமான கற்பனைகள் உண்மைக்கு புறம்பான விசயங்கள் உள்ளது. இந்தியாவில் ஆரியர்கள் மேலாண்மையடைய உருவாக்கப்பட்ட கதைகள் மூட நம்பிக்கைகள் கொஞ்சநஞ்சமில்லை. இதைபோல் ஏராளமான நாடுகளில் ஏராளமான விசயங்கள். 

கருத்தாடுதலில் வெல்வது தோற்பது போட்டிபோடுவது என்பதைக் கடந்து அடையவேண்டிய இடத்தை இலக்கை அடையவேணும். பிரச்சனைகளுக்கு தீர்வாக எமது கருத்துக்கள் அமையவேணும் சில இடங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தவேணும். பொய்யால் நன்மையெனில் பொய்யுரைக்கவேணும் , மூடி மறைக்கவேண்டிய இடத்தில் மூடிமறைக்கவேணும் , உண்மையை வெளிப்டுத்தவேண்டி இடத்தில் அதை செய்யவேணும். குறிப்பாக எத்தோடு நிறுத்தவேணுமோ அத்தோடு கருத்தை நிறுத்துவது. நாம் பயணிக்கும் பாதையில் உள்ள சிக்கல்களே மேற்கண்டவற்றை தீர்மானிக்கும். பயணம் அறம் சார்நததாக இருக்கும் போது பாதைகள் எப்படி இருக்குமோ அப்படியே கருத்துக்கள். இங்கு நடப்பது அவரவர் பாதைபோடும் நிகழ்வு. அவரவரே பாதை போட்டு அவரவரே பயணிப்பது. 

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சண்டமாருதன் said:

இராமாயணம் நம்பும் படியாக இல்லை 
ஆனால் போர்த்துக்கீசர் இலங்கை வந்த பின்பு செய்த 
பல அகழ்வாய்வுக்களில் இராவணன் பற்றிய பல ஆவணங்கள் இருக்கிறது 
பல தமிழ் எழுத்துக்கள் அந்த காலத்திலேயே திட்டம் இட்டு அழிக்கப்பட்டு 
சிங்களம் புதிதாக எழுதப்பட்டு இருக்கிறது 

இப்போது அந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் சிங்களவரகளே 
பல சிங்கள எழுத்துக்கள் கல்வெட்டின் உண்மையான எழுத்துக்கள் அல்ல 
என்று சொல்கிறார்கள் 
இவளவு காலமும் இராவணனுக்கு 6 மகன்கள் இருந்ததாகவே படித்துவருகிறோம் 
சிங்களவர்களிடம் இருக்கும் கல்வெட்டுகளில் சோகிலி என்று ஒரு மகள் இருந்ததாகவும் 
அவளுக்கு என்றே ஒரு ஊரும் இருந்து இருக்கிறது. சோகிலிகுகை என்று இப்போதும் 
அது இருக்கிறது அந்த இடங்களில் இப்போதும் பல கல்வெட்டுக்கள் தமிழில் இருக்கிறது 

இராமாயணத்தில் வரும் இராவணன் வெறும் மிகைப்படுத்தல் 
நம்பும் படியாக இல்லை 

பல கல்வெட்டுக்கள் பிராமி எழுத்தில் இருக்கிறதாம் 

"இராவணனின் பெயர் பொறிக்கப்பட்ட இந்த  பிராமிக் கல்வெட்டு பம்பரகஸ்தலாவை என்னுமிடத்தில் உள்ள மலைக்குகையில்  காணப்படுகிறது. பம்பரகஸ்தலாவ நாகமலை, நாகபர்வத மலை எனும் பெயர்களில் அழைக்கப் படுகிறது. குமண பறவைகள் சரணாலயத்தின் வடகிழக்கு பகுதியில் காட்டின் மத்தியில் நாகமலை அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் இங்கு நாகவழிபாடு நிலவியமையால் இப்பெயர் உண்டானது எனக் கூறப்படுகிறது. எனினும் இம்மலை ஓர் இராட்சத நாகம் படமெடுத்தபடி இருப்பது போன்ற அமைப்பை உடையதால் நாகமலை எனப் பெயர்பெற்றது எனவும் கூறப்படுகிறது.
 
பண்டைய காலத்தில்  தென்கிழக்கில் இருந்த இராவணனின் முக்கிய உப நகரங்களில் ஒன்றாக நாகமலை விளங்கியிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. இங்கிருந்தே இராவணன் உகந்தை மலை சிவாலயத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளான் எனத் தெரிகிறது. அம்பாறை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள உகந்தைமலை முருகன் கோயிலின் தென்மேற்கில் சுமார் 13 கி.மீ. தொலைவில் பம்பரகஸ்தலாவை எனும் நாகபர்வத மலை உள்ளது.

இங்கு செல்வதற்கு உகந்தைமலையில் இருந்து கூமுனைக்குச் செல்லும் வழியில் 5 கி.மீ பயணம் செய்து அங்கிருந்து தென்மேற்குப் பக்கமாகப் பிரிந்து செல்லும் வண்டிப் பாதையில் 8 கி.மீ காட்டுக்குள் சென்றால் நாகபர்வத மலையை அடையலாம். கதிர்காமத்திற்குப் பாதயாத்திரை செல்லும் போது இம்மலைக்குச் செல்ல முயற்சி செய்தேன். இங்கு செல்வதானால் வன இலாகாவின் அனுமதியுடன், அவர்களின் வாகனத்தில், வழிகாட்டியுடன் செல்ல வேண்டுமாம். எனவே வேறொரு நாளில் செல்வதே சிறந்தது என நினைத்தேன்.
 
இங்கு கண்டு பிடிக்கப்பட்ட  38 பிராமிக் கல்வெட்டுக்களில் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் ஒன்றாகும். இக்கல்வெட்டில் பருமக ராவண ஜிதி ஷோகிலி லேன சகஸ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இது பெருமகன் இராவணனின் மகள் ஷோகிலியின் குகை எனப்பொருள் படுகிறது." 
இக்கல்வெட்டு ஆங்கிலேய ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டு பிற்காலத்தில் பேராசிரியர் பரணவிதாணவினால் ஆய்வு செய்யப்பட்டு ஆங்கிலமொழியில் 1970 ம் ஆண்டு “Inscription of Ceylon Volume-1” எனும் நூலில் 515 வது கல்வெட்டாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதில் பருமக வணிஜ திசஹ லேன சகஸ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் “The Cave of the chief Tissa the merchant is given to the sangha” என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள இராவணன் மற்றும் ஷோகிலி ஆகிய பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. ராவண என்பதற்குப் பதிலாக திஸ்ஸ என எழுதப்பட்டுள்ளது. எனவே இதில் இராவணன் எனும் பெயர் வெளிப்பட்டு விடக் கூடாது என நினைத்தே இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கலாம்

"Veddas come from Yakkad race through Kuveni, They esist along with Nagar and Yaakar Ugndamalai Murugan temple is owned by Veddas So is aKthirgmmama Hence the only possibility is the Veddas in 600 BC wanted to say in the Stone inscription they come from Ravana (Yakkra) race. Tamil Brhimi inscrioptionsare found in Srilanka are maximm 800 BC.There isTamil inscriotion in TGissmahrgama."

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனி...  நியாயமான, ஆதங்கமான கருத்து.
சிலர்.. கடந்த இரு நாட்களாக செய்த, 
கோணங்கித்தனமான... செயல்களைப் பார்க்க..
வெறுப்பாகவும், வேதனையாகவும்  இருந்தது.  😡

கோணங்கித்தனம் இல்லை.

பின்னாலே பக்கா திட்டமிடல். அந்த திரியை பாருங்கள்.  இருநாட்களில் தயாரானதா? இல்லையே..... பலநாள் வேலை.... ஒட்டப்பட்டுள்ளது.

நான் முன்னர் பதிந்து இருந்தேன். இவ்வாண்டு மே மாதம் யுத்தவெற்றி கொண்டாடிக் கொண்டிருந்தது சிங்களம்.

திரிகளிலேயே பெருமிதத்தில் கருத்துக்கள் போட்டு கொண்டிருந்தார்கள். புலிகளை வென்ற மாவீரர்கள் குறித்து.

அங்கே போய் முழு சிங்கள பெயரில், இந்த சந்தர்பத்தில், நமது நாட்டின் சுதந்திரத்தை, பறிக்க வந்த, இந்திய ராணுவத்தை விரட்டி அடித்து சுதந்திரத்தை காத்து தந்த, மிகத் தைரியமான இலங்கையர்கள் என்று, மாண்புமிகு ஜனாதிபதி பிரேமதாசவினால் புகழப்பட்ட பிரபாகரனையும் புலி வீரர்களையும் நிணைவு கொள்ளவும் வேண்டும் என்று பதிவிட்டேன்.

ஜெர்க் ஆகினாலும் ஒருவர் கூட மறுக்க முடியாத அல்வா. யாருமே எதிர்கருத்து சொல்லவில்லை.

எனக்கே இங்கே அல்வா தீத்த முயல்கிறார்.... மேற்படியார்.

கருத்துக்காக அல்ல, கருத்தாளருக்கு எதிராக மேற்படியான் தனித்திரி தொடங்கி கூத்தாட்டம் போடுகிறார். நிரவாகம் கவனித்துக் கொண்டு தான் இருக்கும் என நம்புகிறேன்.

பார்ப்போம்.... தமிழ் தேசியம் அப்படி மலிவாகி விட்டதா என்று.

சீமானை எதிர்பவர்கள் இருவகை.... புலிகளை, பிரபாகரனை கொண்டு செல்வதை விரும்பாதவர்கள்....

அடுத்தது சிங்களத்துக்காக எதிர்பவர்கள். கடந்த தேர்தலில் சீமான் படம் போட்டு வாக்குகள் கேட்டதும்.... சீமானின் அறிக்கை... நிலைப்பாட்டால் .... கொழும்பில் கணிசமான ஆர்வம் உண்டாகி உள்ளது. சீமான் அரசியல் குறித்த கரிசனை சிங்கள திரிகளிலேயே எழுகிறது. சீமானால் குறிக்கப்பட்ட, விக்கியர், கஜேன் மற்றும் கஜேந்திரன் பாராளுமன்றம் வந்தது சிங்களத்தை உறுத்துகிறது.

இந்த இரு வகை பிரிவினர் குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

Edited by Nathamuni
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 hours ago, Maruthankerny said:

இவர்கள் சந்தேகம் இன்றி விஜயபேரசின் தொடர்ச்சிதான் 
ஆனால் தெலுங்கர்கள் என்பதுதான்? நிறுவுவது கடினமானது 
இவர்கள் தெலுங்கு பேசியதாகவோ .. தெலுங்கு மொழிக்கு எங்கேனும் 
முக்கியம் கொடுத்தகாதகவோ இல்லையே?

இவர்கள் காலத்தில் தமிழகத்திலோ அல்லது இலங்கையிலோ 
எழுந்திருக்கும் இந்தத் கோவிலும்  விஜயநகர கட்டிட கலையுடன் 
கொஞ்சமும் தொடர்பு இன்றி இருக்கிறது 

மகாபலிபுரம் பல்லவர்களின் கோட்டை என்பதுக்கு அவர்களின் கட்டிடம் 
சில ஆயிரம் வருடம் சென்றும் சாட்ச்சியாக இருக்கிறது 
அதுபோல கர்நாடகா எங்கும் இவர்கள் அமைத்த கோவில்கள் 1300 -1400 வருடம் தாண்டியும் 
அப்படியே அசையாது இருக்கிறது. 

விஜயநகர அரசின் எழுச்சி என்பது  கஜனி முகமது போன்றவர்களின் படையெடுப்பு போல 
வந்து சென்றதாகவே இருக்கிறது ... எனக்கு என்னமோ பின்னாளில் தமிழர்கள்தான் 
அந்த பெயர்களை தத்தெடுத்தது பரப்பியிருப்பார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது.  

விக்கிரம பாகு 
பராக்கிரம பாகு 
இவர்கள் பாண்டிய காலத்தவர்கள் 

இந்த "விக்கிர"  பெயரை அப்போதே உள்வாங்கி இருக்கிறார்களே? 

வரலாறு என்பது தெளிவில்லாதது... அங்கங்கே உள்ள சிறு சிறு விபரங்களை இணைப்பது தான் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வது. இது 'ஆரோக்கியமான' விவாதத்துக்கு உள்ளாகி அனைவராலும்  ஏற்றுக் கொள்ளப்பட்ட  ஒரு நிலைமைக்கு வரும்.

உதாரணமாக, குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பார்கள். ஆதிகால குரங்கின் எச்சங்கள் கிடைத்துள்ளன. ஆதிகால மனிதனின் எச்சங்கள் கிடைத்துள்ளன. ஆனாலும், குரங்கிலிருந்து, மனிதன் ஆகும் போது இடையேயான ஒரு குரங்கும் இல்லாத மனிதனும் இல்லாத விலங்கு இருந்திருக்க வேண்டுமே.. அந்த எச்சம் இன்னும் கிடைக்காத படியால், இதனை விஞஞானம் இன்னும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், ஒரு கருத்தாகவே (தியறியாகவே) உள்ளது.

பாண்டியர்கள், சேரர்கள் ஆண்டார்கள்.... ஒரு வரலாற்று சான்றுகள் இல்லை. சிலப்பதிகாரம் சொல்வதை வைத்தே மதுரையில் பாண்டியன் ஆண்டான் என்கிறோம். அதேவேளை சோழர்கள், ஆட்சிக்கு ஆதாரம், தஞ்சை பெரிய கோவில், பொலநறுவை சிவன் கோவில் போன்றவை.

இன்னோரு முக்கியமான விடயம். இலங்கையில் போர்த்துக்கேய மொழியோ, ஒல்லாந்து மொழியோ இன்று இல்லை. போர்த்துக்கேய கோட்டைகளை ஒல்லாந்தர் பெரிதாக்கி, விஸ்தீரணம் ஆக்கியதால் அவை ஒல்லாந்தர் கோட்டைகளாக, அவர்கள் ஆடசிக்கு சான்றாக இருக்கின்றன... ஆகவே போர்த்துக்கேயர் ஆண்டத்துக்கு வேறு சான்றுகள் இல்லை. அண்மையாக இருந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு சான்றாக.... பல இருந்தாலும், முக்கியமானது அவர்களது மொழி இன்னும் இருப்பது. 

இதை நான் சொல்வதன் முக்கிய காரணம், கீழே கண்டி நாயகர்கள் குறித்து சொல்லும் போது.... அவர்களது தெலுங்கு மொழி... மேலே நான் சொன்ன போர்த்துக்கேய, ட்ச்சு மொழிகள் போலவே இல்லாமல் போய் வழக்கொழிந்து போய் விட்டன என்பதனை காட்டிட.

அதே போல இலங்கையில் தெலுங்கர்கள் குறித்து பார்க்கலாம்.

https://www.thehindu.com/news/cities/Vijayawada/in-sri-lanka-this-tribe-speaks-telugu/article22810325.ece#:~:text=The Telugu diaspora is a,But they are migrants.&text=They are not migrants from,the Tamils%2C” he said.

ஆந்திராவின் படைப்பாற்றல் மற்றும் கலாச்சார ஆணையத்தின் (ஏபிசிசிசி) தலைமை நிர்வாக அதிகாரி விசாய் பாஸ்கர் தமது ஆய்வின் படி, இலங்கையில் பூர்விகமாக தெலுங்கர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்கிறார். ஆரம்பத்தில் பாம்பாட்டிகள் ஆகவே இவர்கள் இருந்திருக்கிறார்கள் என்கிறார்.

இலங்கையின் கடைசி மன்னன் தெலுங்கர் என்கிறார் அவர்.

https://en.wikipedia.org/wiki/Indians_in_Sri_Lanka

இலங்கை ஜிப்சி மக்கள்

Snake charmer(js).jpg

இலங்கை ஜிப்சி மக்கள் இந்தியாவில் தங்கள் பூர்விகத்தினை கொண்டுள்ள ஒரு இனக்குழு. அவர்கள் ஒரு நாடோடி மக்கள், பெரும்பாலும் தெலுங்கில் பேசுகிறார்கள், இது இலங்கை ஜிப்சி தெலுங்கு என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆந்திராவில் பூர்வீகமாக பேசப்படும் ஒரு திராவிட மொழி. அவர்கள் அதிர்ஷ்டம் சொல்வது, பாம்பு வசீகரம் மற்றும் விலங்குகளை நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.

மீள்குடியேற்ற கிராமங்களில் குடியேறியவர்கள் வாழ்வாதார விவசாயிகள் மற்றும் பிற விவசாயிகளுக்கு பண்ணை கைகள். அவர்கள் குடியேறிய பகுதியின் அடிப்படையில் சிங்கள அல்லது தமிழையும் பேசுகிறார்கள். பெரும்பாலானவை கிழக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேறியதாகத் தெரிகிறது.

முக்கியமான ஒரு விசயம்:  இந்தியா என்பது கிழக்கிந்திய கொம்பனி உருவாக்கிய நாடு. ஆகவே மக்கள் துணைக்கண்ட மன்னர் ஆட்சியில், தீண்டாமை காரணமாக, அங்கிருந்து வெளியேறி இருக்கலாம்.

Quora.com  எனும் தளத்தில், சிங்களவர்களுக்கு, தெலுங்கு-வம்சாவளி தொடர்பு இருக்கிறதா என்கிற கேள்விக்கு இருவர் அளித்த பதில் இதோ, ஒருவர் ஆந்திர பிரதேச தெலுங்கர் அடுத்தவர் இலங்கை அரசில் வேலை செய்யும் சிங்களவர். 

சத்திய நாராயண சாஸ்திரி பின்வருமாறு சொல்கிறார்: ஆம், இது கடலோர வர்த்தகம் மற்றும்  புத்த மதத்துடன் நிறைய தொடர்புடையது. இன்னும் பொதுவாக, அவர்கள் தெலுங்கு , ஒடியாஸ் மற்றும் பெங்காலியர்களிடமிருந்து வம்சாவளியைக் கொண்டுள்ளனர். இரு பக்கத்திலும் இருந்த ஆளும் வர்க்கத்தினர் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்டதால், இலங்கையின் இருந்த கண்டி நாயக்கர்கள், தெலுங்கு ஆட்சியாளர்களாக இருந்தார்கள், என்கிறார்.

தெலுங்கு , ஒடியாஸ் மற்றும் வங்காளிகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்ததை மேலும் உறுதிப்படுத்தும் மரபணு ஆய்வுகள் தவிர, புராணக்கதைகள், இலங்கை நாளேடுகள், கடலோர வர்த்தக இடம்பெயர்வு மற்றும் பின்னர் ஆந்திராவிலிருந்து வந்த பௌத்த குடியேற்றங்கள் அனைத்தும் சிங்கள மக்களுக்கு  சில தெலுங்கு வம்சாவளியைக் கொண்டுள்ளன என்பதைக் குறிக்கிறது. சில ஒடியா வம்சாவளி மற்றும் சில பெங்காலி வம்சாவளியுடன். நான் கவனித்த, மரபணு ஆதாரங்களின் ஒரு விடயம் என்னவென்றால், தெலுங்கு-உயர் சாதி குழுக்கள் மற்றும் வட இந்திய உயர் சாதி குழுக்களில் அதிக அதிர்வெண்களில் காணப்படும்  Y-DNA Haplogroup R2 (a sister of R1a) சுமார் 25% சிங்களவர்களிடையே காணப்படுகிறது 

அடுத்தவர் ரோஹன் சில்வா பின்வருமாறு சொல்கிறார்:

கண்டியின் மதுரை நாயக்கர்கள் என்பது சிங்கள அரசர்களுக்கும், மதுரை நாயக்க இளவரசிக்கும் நடந்த திருமண தொடர்பினால் உருவானது.

கடைசி சிங்கள மன்னனான ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்க 1739ல் வாரிசு இல்லாமல் போகவே, இறக்க முன்னர் தனது மனைவியான மதுரை நாயக்க இளவரசியின் தம்பியினை அடுத்த அரசராக அறிவித்து விடுகிறார். ஸ்ரீ விஜய ராஜ சிங்க என்னும் பெயரில் அவர் அரசராகிறார்.

மதுரை நாயக்கர்கள், (விஜய நகர பேரரசின்) தெலுங்கு வம்சத்தினர்.

இவ்வகையில் கண்டிய நாயக்கர்கள் என்னும் தனி வம்சம் தொடர்ந்து ஆளத்தொடங்கியது.

ஸ்ரீ விஜய ராஜசிங்க
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க
ஸ்ரீ ராஜாதி ராஜசிங்க
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க 

ஆகிய தெலுங்கு - மதுரை நாயக்க வழித்தோன்றல்கள்,  மன்னர்கள் ஆக ஆண்டார்கள். 

இந்த தென் இந்திய தொடர்புகொண்ட அரசர்கள் அனைவரும் பௌத்தர்களாகவும், மக்களின் ஆதரவு கொண்டவர்களாவும் இருந்தார்கள்.

இவர்கள் காலத்தில் பல நாயகர்கள் கண்டிக்கு குடி பெயர்ந்தார்கள். அவர்கள் பின்னர் சிங்கள இனமாக நாளடைவில் மாறி விட்டார்கள்.

சிங்களவரிடையே உள்ள புகழ் மிக்க குடும்ப பெயர் நாணயக்கார. அதேபோல பண்டாரநாயக்க.

https://www.quora.com/Do-Sinhalese-have-any-Telugu-ancestry

அதுபோல நாயக்கர் என்று பெயர் வைத்திராவிடில் நாயக்கர் இல்லை என்றோ, வைத்திருப்பதால் நாயக்கர் தான் என்று அறுதியாக சொல்லவும் முடியாது என்கிறார்.

உதாரணமாக சேனநாயக்க. நாயக்கர் ஆகவும் இருக்கலாம். படைத்தளபதி என்பதை குறிப்பதாகவும் இருக்கலாம்.

மைத்திரிபால, பிரேமதாச சிங்கள இனத்தவர்கள். அதேபோல மகிந்தா ராஜபக்சே, மலே இனக்கலப்பு உள்ளவர், தாயார் தண்டினா திசாநாயக்க. அவர் மனைவியோ மலே இனத்தவர். (இது நாமலில் தெரிகிறது)

விக்கிரமசிங்க பெரும்பாலும் வங்க பெயர்.

எனவே பெயரை வைத்து ஒரு இனத்தின் வரலாற்றினை சொல்ல முடியாது. சிறுபிள்ளைத்தனமானது. சுமேந்திரனின் முதல் பெயர் ஆபிரகாம்.... அவர் என்ன ஐரோப்பியரா?

பீட்டர் கெனமென் என்று ஒரு அமைச்சர் ஸ்ரீமா காலத்தில் இருந்தார். அவர் பர்கர் என்று சொல்வார்கள்.  இலங்கையில் யூத இனத்தினை சேர்ந்த இருவர் பிரதம நீதி அரசராக இருந்திருக்கின்றனர். 

மத்திய கிழக்கில், பித்தளை காலத்தில் ஆபரண தொழில் ஆரம்பித்திருந்தது. இந்த தொழிலில் நிபுணர்களான யூதர்கள் பலர், வாசனை திரவிய வருமானத்தில் பெரும் செல்வ வளம் நிறைந்த தமிழரிடையே இந்த தொழில் செய்ய வந்து சேர்ந்தனர். பாவை விளக்கு, அகல் தீபங்கள் போன்றவை அவர்கள் செய்த்து.

இவ்வகையில் தமிழர் இடையே தட்டர்கள் என்று ஒரு நகை தொழில் செய்யும் இனம் இருந்தது. அவர்கள் யூதர்கள் எனவும், நாளடைவில் ஏனைய மக்களுடன் கலந்து போனாலும் அந்த இன பெயர் கொண்டவர்கள் யாழ்ப்பாணத்தில் கூட தொழில் செய்கிறார்கள்.

தட்டி, தட்டி நகைகள் செய்வதனால் அந்த காரண பெயர் வந்திருக்கலாம். இன்றும்  தட்டார் தெரு, கொழும்பு, யாழ்ப்பாணம், தமிழகத்தில் பல இடங்களில் காணலாம்.

சொல்ல வருவது என்னவென்றால், அவர்கள் வாழ்ந்த இடங்களில், அங்குள்ள மொழிகளை பேசி வாழ்ந்தார்களே அன்றி, தமது வம்ச மொழிகளை தொடரவில்லை. உதாரணமாக கயானா, மேற்கிந்திய தமிழர்கள். தமிழே தெரியாமல் அங்குள்ள மொழிகளுடன் வாழ்கின்றனர். எனவே தெலுங்கு மொழி இல்லாததால் நாயக்கர்  இலங்கையில் வாழவில்லையே என்று சொல்ல முடியாது. 

இன்னும் பல சான்றுகள் தர முடியும். போரடித்து விடும் என்பதால் நிறுத்துகிறேன்.

இப்படி ஆதாரங்களுடன் மோதாமல், பெயர்களை வைத்து, சிலம்பாட்டம் ஆடி சில்லறைத்தனம் பண்ணும் மேல்படியார் செயல் வருத்தமளிக்கின்றது.

Edited by Nathamuni
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

உதாரணமாக, குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பார்கள். ஆதிகால குரங்கின் எச்சங்கள் கிடைத்துள்ளன. ஆதிகால மனிதனின் எச்சங்கள் கிடைத்துள்ளன. ஆனாலும், குரங்கிலிருந்து, மனிதன் ஆகும் போது இடையேயான ஒரு குரங்கும் இல்லாத மனிதனும் இல்லாத விலங்கு இருந்திருக்க வேண்டுமே.. அந்த எச்சம் இன்னும் கிடைக்காத படியால், இதனை விஞஞானம் இன்னும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், ஒரு கருத்தாகவே (தியறியாகவே) உள்ளது.

https://www.quora.com/Do-Sinhalese-have-any-Telugu-ancestry

நாதம், வேறு விடயங்கள் பற்றி எதுவும் சொல்ல வரவில்லை, ஆனால் இது தவறான தகவல்!  ஹோமோ சேபியன்சிற்கு முந்தைய நியண்டதால் என்ற மனிதனும் அதற்கு முந்திய வடிவங்களும் மனிதக் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையேயான படிமுறை மாற்றத்தை எடுத்துக் காட்டுவதால் கூர்ப்பு என்பது இப்போதைக்கு பெருவாரியான விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்ட consensus தியரி! ஏற்றுக் கொள்ளாமல் இருப்போருக்கு படைப்புக் கொள்கை, கடவுள் நம்பிக்கை என்று வேறு காரணங்கள் உண்டு, வலுவான விஞ்ஞானக் காரணங்கள் இல்லை! 

இதை ஒரு எழுதுகிற வாக்கில் நீங்கள் சொல்லியிருக்கலாம், ஆனால் இது தவறான தகவல்! 

இன்னொரு அபிப்பிராயம், நீங்கள் ஆதாரமாகக் காட்டும் quora.com என்பது நம்பிக்கையற்ற மூலம். இதன் நம்பகத் தன்மை விக்கிப்பீடியாவை விட மிகக் குறைவு என்பது சில விடயங்களைத் தேடிய போது எனக்கு விளங்கிய மட்டில் நான் சொல்ல முடியும்! 

நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, Justin said:

உங்கள் கருத்துக்கு நன்றி.

நீங்கள் சொல்வது கூர்ப்புக் கொள்கை ஜஸ்டின், அதில் தவறில்லை. நான் சொல்வது அந்த இடைக்கால விலங்கினத்தின் எச்சம் கிடைக்கவில்லை.

அதற்கு முன்னும், பின்னும் உள்ளன கிடைத்துள்ளன. ஆகவே இரண்டும் தனித்தனியாகவே அபிவிருத்தி அடைந்து வந்துள்ளன என்ற கருத்து வலுப்படுகின்றது.

குரங்கிலிருந்து மனிதன் வந்திருந்து, கூர்ப்பு கொள்கையும் சரியாக இருந்தால், குரங்கினம் இருக்க முடியாதல்லவா

அடுத்தது, சொல்லும் இடம் quora அதன் பிரபலத்தன்மையினை ஆய்வு செய்வது ஏன்?. சொன்னவர்கள் யார். ஆங்கிலத்தில் அவர்கள் சொன்னது என்ன, சரியாக பொருந்தாவிடில் எதிர்வாதம் என்ன என்று பார்க்க அல்லவா வேண்டும்.

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அடுத்தது, சொல்லும் இடம் quora அதன் பிரபலத்தன்மையினை ஆய்வு செய்வது ஏன். சொன்னவர்கள் யார். ஆங்கிலத்தில் அவர்கள் சொன்னது என்ன, சரியாக பொருந்தாவிடில் எதிர்வாதம் என்ன என்று பார்க்க அல்லவா வேண்டும்.

இது கூர்ப்பு பற்றிய மிகவும் தவறான புரிதல்: கூர்ப்பு என்பதில் இனங்கள் புதிதாக உருவாகும் (speciation).  முன்னர் இருந்த இனம் வாழ்த்தகுதியற்றதானால் மட்டுமே அது இல்லாமல் போகும்! காட்டுச் சூழலில் வாழும் தகுநிலை இருப்பதால் மனிதக் குரங்கு, அதற்கு முன்னர் வந்த மகாக், அதற்கும் முந்திய மாமசெற் என பல குரங்கினங்கள் இன்னும் தமக்குள் இனப்பெருக்கம் செய்து வாழுகின்றன. நியண்டதால் என்ற மனித இனமும், அதற்கு முந்தைய மனித இனங்களும் கொஞ்ச காலம் overlap ஆக அடுத்த மனித வடிவத்தோடு வாழ்ந்தே மறைந்தன. எனவே ஒரினம் மறைந்து மற்றதாக வரும் என்ற நியதி அல்ல கூர்ப்பு!

quora என்பது கேள்வி பதில் தளம். சில பதில்களைப் பதிவோர் தங்கள் அரசியல் நிலைப்பாட்டினால் உந்தப் பட்டுப் பதிகின்றனர். உதாரணமாக குமரிக்கண்டம் பற்றிய குவோரா பதிவுகள் இப்படியானவை!ஆனால் குவோராவை அல்லது விக்கிபீடியாவை சரியாக பயன்படுத்த வேண்டுமானால் அந்த செய்திகள் உண்மையா என்று உரிய முலங்களுக்குச் சென்று தேட வேண்டும். உங்கள் பதிவில் இருக்கும்  Haplogroup R2 ஐ NCBI -Pubmed இல் தேடினேன், எதுவும் வரவில்லை! எனவே இது peer review செய்யப்பட்ட ஆய்வு அல்ல என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை peer review இல் வரவில்லையெனில், அது விஞ்ஞான ரீதியான தகவல் இல்லை! இது தான் குவோராவை நான் நம்பாமல் இருக்க காரணம்! உங்களுக்கு இந்த Haplogroup R2 பற்றிய பேப்பர் கிடைத்தால் இணைத்து விடுங்கள்!  

 திரியை திசை திருப்ப விரும்பவில்லை!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, Justin said:

இது கூர்ப்பு பற்றிய மிகவும் தவறான புரிதல்: கூர்ப்பு என்பதில் இனங்கள் புதிதாக உருவாகும் (speciation). 

Evolution is defined as the process of growth and development or the theory that organisms have grown and developed from past organisms.

கூர்ப்பு: எனது விளக்கம் வேறு மாதிரி உள்ளதே. வேறு கள  உறவுகளிடம் விடுவோம்... பார்க்கலாம்.

எனது விளக்கம்: புதிய வகை உயிரினம் இல்லை. இருக்கும் அதே உயிரினம் தேவைக்காக புதிய ஒரு ஆற்றலுடன் பரிணாம வளர்ச்சி  அடைவது.

உதாரணமாக மனிதனின் கூர்ப்பியலில் முக்கியமானது, பெருவிரல், ஏனைய நான்கு விரல்களை தொடக்கூடியமை.

இதன் முலமே மனித இனம் வேறு எந்த விலங்கினத்திலும் பார்க்க மேன்மை அடைந்தது. காரணம் பொருட்களை, (முக்கியமாக குழந்தைகளை) தூக்கி கையாளும் திறன். 

அடுத்து, நீங்கள் தேடியது... பல விபரங்கள் உள்ளதே.
https://en.wikipedia.org/wiki/Haplogroup_R1a

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, Nathamuni said:

விளக்கம் சரியாகத் தானே இருக்கிறது? ஏற்கனவே இருக்கும் உயிரினங்களில் இருந்து வேறு வடிவங்கள் உருவாவது. மனிதனை மனிதன் என்றும் அழைக்கலாம், குரங்கில் இருந்து வந்ததால் primate என்றும் அழைக்கலாம்! எப்படி அழைத்தாலும், விஞ்ஞான ரீதியாக : மனிதன் மனிதக் குரங்குடன் புணர்ந்து ஒரு வழித்தோன்றலை உருவாக்க இயலாது, அப்படி உருவாக்கினாலும் அந்த வழித் தோன்றலால் வம்ச விருத்தி செய்ய இயலாது (கழுதை-குதிரை, கோவேறு கழுதை ஒரு உதாரணம்!) இதனால் தான் மனிதன் ஒரு புது இனம், மனிதக் குரங்கு வேறு இனம்! இதில் குழப்பம் எதுவும் இல்லை என நினைக்கிறேன்!

நன்றி: http://evolutsioon.ut.ee/publications/Kivisild2003a.pdf 
விக்கிபீடியாவின் 84 வது உசாத்துணையில் இருக்கிறது. விக்கிபீடியா சிங்களவர்கள் என்கிறது, ஆனால் வந்த இணைப்பில் சிறிலங்கா என்று தான் இருக்கிறது. எதற்கும் நேரம் கிடைக்கும் போது வாசித்துக் கருத்தைச் சொல்கிறேன்!

ஆம்: 23% R1a இருப்பது சிறிலங்காவில் என்று தான் இருக்கிறது. சிங்களவரைப் பற்றி எதுவும் சொல்லப் படவில்லை! எனவே குவோராவில் திரித்திருக்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன்!

Edited by Justin
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உங்கள் கருத்துக்கு நன்றி.

நீங்கள் சொல்வது கூர்ப்புக் கொள்கை ஜஸ்டின், அதில் தவறில்லை. நான் சொல்வது அந்த இடைக்கால விலங்கினத்தின் எச்சம் கிடைக்கவில்லை.

அதற்கு முன்னும், பின்னும் உள்ளன கிடைத்துள்ளன. ஆகவே இரண்டும் தனித்தனியாகவே அபிவிருத்தி அடைந்து வந்துள்ளன என்ற கருத்து வலுப்படுகின்றது.

குரங்கிலிருந்து மனிதன் வந்திருந்து, கூர்ப்பு கொள்கையும் சரியாக இருந்தால், குரங்கினம் இருக்க முடியாதல்லவா

அடுத்தது, சொல்லும் இடம் quora அதன் பிரபலத்தன்மையினை ஆய்வு செய்வது ஏன்?. சொன்னவர்கள் யார். ஆங்கிலத்தில் அவர்கள் சொன்னது என்ன, சரியாக பொருந்தாவிடில் எதிர்வாதம் என்ன என்று பார்க்க அல்லவா வேண்டும்.

1 hour ago, Justin said:

நாதம், வேறு விடயங்கள் பற்றி எதுவும் சொல்ல வரவில்லை, ஆனால் இது தவறான தகவல்!  ஹோமோ சேபியன்சிற்கு முந்தைய நியண்டதால் என்ற மனிதனும் அதற்கு முந்திய வடிவங்களும் மனிதக் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையேயான படிமுறை மாற்றத்தை எடுத்துக் காட்டுவதால் கூர்ப்பு என்பது இப்போதைக்கு பெருவாரியான விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்ட consensus தியரி! ஏற்றுக் கொள்ளாமல் இருப்போருக்கு படைப்புக் கொள்கை, கடவுள் நம்பிக்கை என்று வேறு காரணங்கள் உண்டு, வலுவான விஞ்ஞானக் காரணங்கள் இல்லை! 

இதை ஒரு எழுதுகிற வாக்கில் நீங்கள் சொல்லியிருக்கலாம், ஆனால் இது தவறான தகவல்! 

இன்னொரு அபிப்பிராயம், நீங்கள் ஆதாரமாகக் காட்டும் quora.com என்பது நம்பிக்கையற்ற மூலம். இதன் நம்பகத் தன்மை விக்கிப்பீடியாவை விட மிகக் குறைவு என்பது சில விடயங்களைத் தேடிய போது எனக்கு விளங்கிய மட்டில் நான் சொல்ல முடியும்! 

நன்றி.

இப்போது உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கும் உயிரினங்களில் 
மீன்கள்தான் ஒரு அசுத்தமான சூழலுக்கு தம்மை அடோப் செய்ய கூடியவை 
என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதாவது பெருத்த இராசாயன கலப்பு 
காற்று நீர் எங்கும் பரவி வரும்போது .. ஒரு இக்கடடான சூழலுக்கு ஏற்றால்போல் மீன்கள் 
தம்மை மாற்றிக்கொள்ளலாம் என்று நம்புகிறார்கள்

உதாரணத்துக்கு அவாறான ஒரு சூழலுக்கு தற்போதைய மீன்கள் தங்களை 
மாற்றம் செய்யும்போது தற்போதைய வடிவம் அழிந்துபோகும் மீன்கள் இன்னொரு 
உடல் அமைப்பை பெற்றுக்குள்ளும் இந்த இடைப்பட்ட வடிவ மாற்றமும் இருக்கும் 
அதை யார் பதிவு செய்கிறார்கள் எவ்வளவு தகவல் இருக்கிறது என்பதை பொருந்தது.

ஜஸ்ட்டின் கூறுவதுபோல நாம் குரங்கில் இருந்து பாயவில்லை 
பல ஆயிரம் ஆண்டுகளாக கோமோசேபியன்ஸ் நியாண்டதால் ஆக இருந்து இருக்கிறோம் 
எங்கள் கண்ணுக்கு முன்னமே மனித உடலில் பல மாற்றங்களை காண்கிறோம் 
எமது தாத்தா பூட்டன் காலத்து மக்கள் மெல்லிய தோற்றம் உடையவர்கள் உடலில் ஆண்களும் பெண்களும் 
நிறைய உரோமம் இருக்கும் ......... இப்போது எமக்கு அடுத்த தலைமுறையை நாம் பார்க்கும்போது 
நிறைய வித்தியாசம் எம் கண் முன்னமே இருக்கிறது உரோமங்கள் குறைவாக இருக்கிறது. இது இரசாயன கலப்பு  உணவு முறை சௌகாரியங்கள் போன்றவற்றின் விளைவால் வருகிறது 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, Justin said:

quora என்பது கேள்வி பதில் தளம். சில பதில்களைப் பதிவோர் தங்கள் அரசியல் நிலைப்பாட்டினால் உந்தப் பட்டுப் பதிகின்றனர்.

ஜஸ்டின், உங்கள் பார்வை புரியவில்லையே... ஆனால் நான் தந்த விடயம் குறித்து ஆழமாக பார்க்க விரும்பாமல்  குவோரா தளத்தின் நம்பகத்தன்மை குறித்து கவலைப்படுகின்றீர்கள். முதலில் மாற்று கருத்தினை வையுங்கள். அது குறித்து பேசுவோம். அதனை விடுத்து, குவோரா தளம் குறித்து அல்லவா பேசுகிறீர்கள். இதே விபரங்கள் வேறு நம்பிக்கையான தளத்தில் இருக்கின்றன. இணைத்தால் உங்கள் கருத்து என்னாகும்?

உங்கள் கூர்ப்பு குறித்த விபரமே சரியானதல்ல என்பது எனது கருத்து மட்டுமல்ல. மருதரும் அவ்வாறே சொல்கிறார்.

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

"ஆம்: 23% R1a இருப்பது சிறிலங்காவில் என்று தான் இருக்கிறது. சிங்களவரைப் பற்றி எதுவும் சொல்லப் படவில்லை! எனவே குவோராவில் திரித்திருக்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன்!"

நான் மேலே எழுதியிருக்கிறேன் தெளிவாக: நீங்கள் குவோராவில் சுட்டிக் காடியவர், சிறிலங்கா என்பதை சிங்களவர் என்று திரித்து விட்டார். பி.டி.எf இணைப்பில் போய் அட்டவணையைப் பாருங்கள்! எனவே உங்கள் சிங்களவர் தெலுங்கர் வாதம் இந்த திரிப்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது என நான் கருதுகிறேன்!

கூர்ப்பு குறித்து மருதர் சொன்னது சரியா நான் சொன்னது சரியா என்று அறிய நீங்கள் கூர்ப்பு பற்றிய நூலொன்றைப் படிக்க வேண்டும்! நான் எனக்கு உயிரியலில் இருக்கும் ஆய்வனுபவத்தையும் துறைசார் அறிவையும் வைத்துக் கொண்டு சொல்கிறேன்! மருதர் சொல்வது கூர்ப்பு அல்ல என்று என்னால் சொல்ல முடியும்! ஆனால், என்னை நம்பாதீர்கள், கூர்ப்பு பற்றிய புத்தகமொன்றை வாசித்து நீங்களே முடிவெடுங்கள்.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 minutes ago, Justin said:

https://www.thehindu.com/society/the-last-king-of-kandy/article17675774.ece

இதை வாங்கி வாசியுங்கள்

https://books.google.co.uk/books?id=Xyjom9BySO8C&pg=PR3&source=gbs_selected_pages&cad=3#v=onepage&q&f=false

உங்களுக்கு அந்த தளத்தில் நம்பிக்கை இல்லை என்றால்... இணையத்தில் தேடி பாருங்கள்... கிடைக்கும். மேலும் பல ஆங்கில, சிங்கள, தமிழ் புத்தகங்கள், கண்டி நாயக்கர்கள் குறித்தும், சிங்கள இனம் குறித்தும் அமேசானில் உள்ளன. 

வாசித்து, எதிர் சான்றுடன் வாருங்கள். விவாதிப்போம். நன்றி.

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

நாதம் , இதைத் தான் தரவுகளை குழப்பி மற்றவனை மடையனாகுவது என்பது! கண்டியின் நாயக்க மன்னன் பற்றியா நான் உங்களிடம் சந்தேகம் கேட்டேன்? 

சிங்களவரில் 25% வட இந்திய உயர்சாதியில்  பிறப்புரிமை ரீதியாக பிணைந்திருப்பதாக ஆதாரம் காடியிருந்தீர்கள்! ஆதாரம் திரிபு என்கிறேன்! நாயக்க மன்னர் பற்றி நீங்கள் இந்துவிலா வாசிப்பீர்கள்? டாக்டர் குணசிங்கத்தின் தமிழ் வரலாறு நூல் உட்பட பல இருக்கிறதே ஆதாரமாக? அதை யார் மறுத்தது இங்கே?

ஒரு தவறை ஏற்றுக் கொள்ள முடியாமல் சும்மா நேரத்தை விரயம் செய்கிறீர்கள்!   

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, Justin said:

முதலில் காணவில்லை, விபரம் தாருங்கள் என்று சொன்னீர்கள். தாராளமாக இருக்கிறதே என்று லிங்க் தந்தவுடன், அது பொய் என்று வருகிறீர்கள்.

அது பொய் என்றால், சான்றுடன் வாருங்கள் என்கிறேன்.  உங்களுக்கு சான்று கிடைக்காவிடில் அது பொய் என்று அர்த்தம் சொல்வதா?

இந்த திரியில் கருத்தாட வந்தது நீங்கள். நேரத்தை நான் விரயமாக்குகிறேன் என்கிறீர்கள்.

இப்போது உங்கள் வழக்கமான விவாத மன நிலைக்கு வந்து விவாதிக்கிறீர்கள். 

வேறு திரிகளில் உங்கள் கருத்துக்களையும் பார்க்கிறேன். ஆகவே நிறுத்திக் கொள்வோம். நன்றி.

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Nathamuni said:

முதலில் காணவில்லை, விபரம் தாருங்கள் என்று சொன்னீர்கள். தாராளமாக இருக்கிறதே என்று லிங்க் தந்தவுடன், அது பொய் என்று வருகிறீர்கள்.

அது பொய் என்றால், சான்றுடன் வாருங்கள் என்கிறேன்.  உங்களுக்கு சான்று கிடைக்காவிடில் அது பொய் என்று அர்த்தம் சொல்வதா?

இந்த திரியில் கருத்தாட வந்தது நீங்கள். நேரத்தை நான் விரயமாக்குகிறேன் என்கிறீர்கள்.

இப்போது உங்கள் வழக்கமான விவாத மன நிலைக்கு வந்து விவாதிக்கிறீர்கள். 

வேறு திரிகளில் உங்கள் கருத்துக்களையும் பார்க்கிறேன். ஆகவே நிறுத்திக் கொள்வோம். நன்றி.

நாதமுனி, உங்கள் பிரச்சினையே இது தான்: நீங்கள் பின் தொடரும் , சுட்டிக் காட்டும் இணைப்புகளை நீங்களே வாசித்து விளங்கிக் கொள்வதில்லை! சிறிலங்கா என்பதை சிங்களவர் என்று சாஸ்திரி மாற்றி விட்டார் என்று பி.டி.எf இணைப்பில் இருக்கிற பேப்பரை பார்த்து அறிய எனக்கு 2 நிமிடம் பிடித்தது! அதை நான் தமிழில் எழுதியும் விளங்கிக் கொள்ள உங்களுக்கு 1 மணி நேரமாக முடியவில்லை! ஏன் இந்த சப்பைக் கட்டு? 

உங்களால், நீங்களே இணைத்த விக்கிபீடியா இணைப்பின் 84 வது இலக்க உசாத்துணையை வாசிக்க முடியுமா அல்லது முடியாதா? 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.