Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்நாடு: 100 ஏக்கர் நிலம்; 25 ஆண்டுகள் உழைப்பு - தனி மனிதரின் முயற்சியால் உருவான செழிப்பான காடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு: 100 ஏக்கர் நிலம்; 25 ஆண்டுகள் உழைப்பு - தனி மனிதரின் முயற்சியால் உருவான செழிப்பான காடு

28 ஆகஸ்ட் 2020, 01:16 GMT
 

சரவணன்
விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தில் தனி ஒருவர் உருவாக்கிய உலர் வெப்பமண்டல காடு. மரங்கள், செடிக் கொடிகள் நிறைந்த இந்த காட்டில் பறவைகள், பாம்புகள், சிறிய விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும் அமையப்பெற்ற இந்த பகுதி, ஆரண்யா காடு மற்றும் சரணாலயம் என்று அழைக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு மரங்கள் வளர்ப்பது, காடுகளைப் பராமரிப்பது என இயற்கை மீது கொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், தொடர்ந்து சமூகப் பணிகளைச் செய்து வந்தார். 

இயற்கையைப் பராமரிப்பதில் சரவணனின் அளவு கடந்த பற்றை உணர்ந்த ஆரோவில் நிர்வாகத்தினர், புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் கட்டாந்தரையாக மரங்களற்று இருந்த 100 ஏக்கர் நிலத்தைக் காடுகளாக உருவாக்க சரவணனிடம் ஒப்படைத்தனர். பிறகு அந்த இடத்தில் உலர் வெப்ப மண்டல காடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் சரவணன்.

நிலத்தில் மண் வளத்தைப் பெருக்க, மழைநீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு சம உயர வரப்புகள் அமைத்து மழைநீர் வெளியேறாமல், பூமிக்கடியில் செல்லும்படி செய்தார். இதனால் அந்த பகுதியில் நீர் வளமும், மண்ணின் வளமும் பெருகியது. 

இதனையடுத்து அப்பகுதி கிராம இளைஞர்கள் உதவியுடன் 100 ஏக்கர் நிலத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டார். இதனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இவரின் கடின முயற்சியால், தற்போது மரம், செடி, கொடிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்ந்து, ஆரண்யா வனம் பசுமையாகக் காணப்படுகிறது.

spacer.png

சரவணன் உருவாக்கிய இந்த ஆரண்யா வனத்தில், சேராங்கொட்டை, சப்போட்டாவில் தாய் மரமான கணுபலா, பெருங்காட்டுக்கொடி, மலைப்பூவரசு, செம்மரம், தேக்கு, கருங்காலி, வேங்கை, துரிஞ்சை உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட மர வகைகள் இங்கே இருக்கின்றன. 

மேலும் மாங்குயில், மயில், பச்சைப்புறா, கொண்டலாத்தி, அமட்ட கத்தி உள்ளிட்ட 240 பறவை வகைகளும் காணப்படுகின்றன. 

இதையடுத்து முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, மரநாய், நரி, தேவாங்கு, உடும்பு, எறும்புத்தின்னி, புனுகு பூனை, நட்சத்திர ஆமை உள்ளிட்ட பல வன விலங்குகள் மற்றும் 20 வகையான பாம்பு இனங்களும் ஆரண்யா வனத்தில் வசித்து வருகின்றன.

 

குறிப்பாக ஆரம்பக் காலத்திலிருந்து தன்னந்தனியாக ஆரண்யா காட்டை உருவாக்கிய சரவணன், தனது குடும்பத்துடன் இந்த காட்டிலேயே வசித்து வருகிறார்.

இந்த பூமி யாருடையது? என்ற கேள்வியை ஆரண்யா வனத்திற்குச் செல்லும் ஒவ்வொருவரிடம் கேட்கிறார் சரவணன். ஆனால், அனைவரும் இந்த பூமி மனிதர்களுக்கானது, ஜீவ ராசிகளுக்கானது என்று பதிலளிப்பதாகக் கூறுகிறார்.

"இந்த பூமி வருங்கால சந்ததியருக்கானது, வெறும் கல்வி மற்றும் செல்வத்தால் நம்முடைய பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் வாழ வைத்திட முடியாது, அது உண்மையும் இல்லை. இனி வரும் காலத்திற்கு இந்த பூமியை அவர்களிடத்தில் இயற்கை வளங்களுடன் அழகாகக் கொடுக்க வேண்டும். அதைநோக்கியே நம்முடைய பயணம் இருக்க வேண்டும்," என்றார் அவர்.

சிறிய வயதிலிருந்தே இந்த பூமியைக் காப்பாற்றிக் கொடுக்கவேண்டும் என்ற வெறி இருந்ததாகக் கூறும் சரவணன். அதன் தாக்கமே இந்த ஆரண்யா காட்டை உருவாக்க உதவியது என்கிறார்.

"முதல் முதலில் நான் வந்து பார்க்கும் பொது பொட்டல்காடாக எதுவுமே இல்லாத கட்டாந்தரையாக இருந்தது. இதைக் காடாக மாற்ற நிலத்தின் தன்மையை ஆய்வு செய்தேன். இதற்கு முன்பு இங்கே எந்த வகையான தாவரங்கள் இருந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த விதைகள் எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்து இங்கே கொண்டுவந்தேன்.

புதுச்சேரியில் மனிதரால் உருவாக்கப்பட்ட காடு எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த ஆரண்யா வனம் அடையாளமாகத் திகழ்கிறது. மேற்கொண்டு இதனை ஆய்வு செய்யப் பெருமளவில் மாணவர்கள் இங்கே வந்து படித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது 25 ஆண்டுகளைக் கடந்து, அற்புதமான காடாக உருவாகியிருக்கிறது. இதற்கான 25வது ஆண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது," என சரவணன் தெரிவித்தார்.

spacer.png

 

 

 

சம உயர வரப்புகள், நீர்த் தேக்கங்கள் இங்கே ஏற்படுத்தியுள்ளோம். இதிலிருந்து மீறி வரும் நீரை பூமிக்கடியில் சேமிக்க, நிறையக் கசிவு நீர் குட்டைகள் அமைத்துள்ளோம். இத்தனை சூழலும் அமையப்பெற்ற காரணத்தினாலேயே ஆரண்யாவின் சுற்றுச்சூழல் மேலோங்கி இருக்கிறது. பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறோம்," என்கிறார் அவர்.

யாராலும் செய்யமுடியாத வேலையைக் காடு மட்டுமே செய்யும், உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் காடு நிழற்குடை என்று கூறும் சரவணன். இந்த பூமிக்கு நாம் பருகக் கூடிய நீரை இந்த காடு மட்டுமே கொடுக்கிறது என்று கூறுகிறார்.

 

"உலகில் எந்தவொரு ஓடையாக இருந்தாலும், ஆறாக இருந்தாலும் அதற்கு நீர் பிடிப்பு பகுதி என்று இருக்கும். வடிநில பகுதி என்று அழைக்கப்படும் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நீரை அப்படியே பூமிக்கடியில் சேகரித்துக் கொள்ளும். 

இன்று நீர்ப்பிடிப்பு பகுதியில் இருக்கக் கூடிய இயற்கை வளங்களை அழித்ததின் விளைவாக நமக்குக் குடிநீர் பிரச்சினை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் மற்றும் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம்," என்கிறார்.

இயற்கை சீற்றம் எப்போதுமே வருவது தான் அதனால் மனிதர்களுக்குப் பெரிய தீங்கு இருக்காது. ஆனால், இன்று நாம் தீங்கைச் சந்திப்பதில் விளைவு இயற்கைக்கு எதிராக மனிதனுடைய செயல் மேலோங்கி இருப்பதே காரணம் என்று கூறுகிறார் சரவணன். 

மிக முக்கியமாக, இந்தியாவின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் 30 விழுக்காடு காடுகள் உருவாக்க நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும் என பொது மக்களுக்கும், இந்திய அரசிற்கும் வேண்டுகோள் வைக்கும் சரவணன், அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

 

spacer.png

 

 

 
Edited by கிருபன்
  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காடு ஒன்றே பூமியின் நிழற்குடை ஆகும்......அதை அழிக்காமல்  வளர்த்து காப்பாற்றி அடுத்த சந்ததிக்கு தர வேண்டியது மனிதகுலத்தின் கடமையாகும்..... பகிர்வுக்கு நன்றி கிருபன்.......!  😁

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அருமை.இப்படியபன மனிதர்களால்தான் பூமி சுற்றுது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி தோழர்..👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட மனிதர்கள் தான் கடவுள், கையெடுத்து கும்பிடனும், நீண்ட காலத்திற்கு வாழ பிரார்த்திக்கின்றேன்

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால், முதலில் இயற்கையைக்கு தான் முன்னுரிமை

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஊர் சென்று வரும் வாய்ப்பு இருந்தால் மண்டான் .வரணி .வல்லை  வெளிகளில் பாரிய மணல் அணைகளை அமைத்து(கடல் நீர் உள்ளே வராமல் இருக்க ) இப்படியான காடுகளை கூட்டு  முயற்சியாக உருவாக்குதல் யாழின் நிலக்கீழ் தண்ணீர் சேமிப்பை அதிகப்படுத்தும் வாய்ப்புக்களை  அதிகப்படுத்தும் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2020 at 23:44, கிருபன் said:

விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தில் தனி ஒருவர் உருவாக்கிய உலர் வெப்பமண்டல காடு. மரங்கள், செடிக் கொடிகள் நிறைந்த இந்த காட்டில் பறவைகள், பாம்புகள், சிறிய விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும் அமையப்பெற்ற இந்த பகுதி, ஆரண்யா காடு மற்றும் சரணாலயம் என்று அழைக்கப்படுகின்றன.

இணைப்புக்கு நன்றி கிருபன்.
பெருமைப்பட வைக்கும் செயல்.
ஐயா பாராட்டுக்கள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நினைவு கூருவதற்கான தமிழரின் உரிமை மதிக்கப்பட வேண்டும் -PEARL அமைப்பு வலியுறுத்தல்    42 Views வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பல மாவட்டங்களில், தமிழ்த் தேசிய நினைவு நாளான மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிப்பதாயுள்ளது என  PEARL (PEOPLE FOR EQUALITY AND RELIEF IN LANKA) அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “தமிழர் நினைவுகூரல் மீதான தொடரும் அரச அடக்குமுறையின் நீட்சியே இத்தடைகளாகும். நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், இலங்கை அதிகாரிகளாற் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதைப் பேர்ள் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், சட்டச் செயன்முறைகளையும், கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் தவறாகப் பயன்படுத்தி, நினைவுகூர்வதைத் தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இப்புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்து நிற்பவர்களுடன் பேர்ள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த விழைகிறது. இலங்கையின் இராணுவத் தளபதியும், போர்க்குற்றவாளியெனக் குற்றஞ் சுமத்தப் பட்டுள்ளவருமான சவேந்திர சில்வா, கோவிட்-19 கட்டுப்பாடுகளை மேற்கோள்காட்டி, மாவீரர் நாள் நினைவேந்தல்கள் தடைசெய்யப்படும் எனக் கடந்த வாரம் தெரிவித்திருந்ததோடு, இவ்வுத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து, நினைவேந்தல் நிகழ்வுகளுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் துயிலும் இல்லங்களைச் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு துப்புரவு செய்ய முயற்சித்தவர்கள் பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர். வடக்கு மற்றும் கிழக்கில் துயிலும் இல்லங்களுக்கு அருகிற் பாதுகாப்புப் படையினர் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். துயிலும் இல்லங்கள் யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டன. இது அரசின் மேலாதிக்க உணர்வும், பழியுணர்வும் வெளிப்படும் விவரணங்களைப் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடுமையான செயலாகும். மேலும், உள்ளூர் நீதிமன்றங்கள் பொது நிகழ்வுகளுக்குக் குறிப்பாகத் தடைவிதித்துள்ளதோடு, பல தனிநபர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியற் கட்சிகளுக்கும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும், அவற்றிற் கலந்துகொள்வதற்கும் தடையுத்தரவு பிறப்பித்துள்ளன. கோவிட்-19 கட்டுப்பாடுகள் இத்தடைகளை நியாயப் படுத்துவதற்கான சாக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், சிவப்பு-மஞ்சட் கொடிகள் மற்றும் பதாகைகளைப் பயன்படுத்துவது போன்ற தீங்கற்ற நினைவுகூரற் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படுவது, தமிழர் நினைவேந்தற் செயற்பாடுகளை, அவை பெரும்பான்மையினரின் விவரணங்களுக்குக் கீட்படியாத நினைவு மற்றும் எதிர்ப்புச் செயற்பாடுகளாக இருப்பதால் ஒடுக்குவது என்ற அரசின் நோக்கத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. நாம் குறிப்பாகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நினைவேந்தற் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், இலக்கு வைக்கப்படுவது குறித்துக் கவலையுற்றுள்ளோம். நீண்ட காலமாக இடம்பெற்று வரும் இப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தனிநபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள, அவர்களை மாவீரர் நாள் நினைவேந்தல்களிற் கலந்துகொள்வதிலிருந்து தடை செய்யும் நீதிமன்ற ஆவணங்களை நாம் கண்டுள்ளோம். இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை குறித்துக் கவனத்தை ஈர்ப்பதும், அதிகாரிகளுக்கு எரிச்சலூட்டுவதுமாகவுள்ள இப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீது பரவலாக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களின் இன்னொரு வடிவமே இது. ‘இவ்வாறு சட்டச் செயன்முறையை முறைகேடாகப் பயன்படுத்துவது, நவம்பர் 27 ஆம் திகதி நினைவுகூரப்படும் மாவீரர் நாள் மற்றும் மே 18 ஆம் திகதி நினைவுகூரப்படும் தமிழின அழிப்பு நினைவு நாள் போன்ற நினைவேந்தல் நாட்கள் தொடர்பில் மேலதிக தடைகளுக்கும், கைதுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் தளமமைத்துக் கொடுக்கும்,’ எனச் செப்தெம்பர் மாதத்தில் பேர்ள் எச்சரித்திருந்தது. தடைகளேதுமற்ற நினைவுகூரலானது, வடுக்கள் ஆற்றப்படுவதற்கும், போரில் இழக்கப்பட்டவர்களைக் கௌரவப்படுத்துவதற்கும் இன்றியமையாததொன்றாக, அவற்றுடன் பிரிக்கமுடியாதவாறு இணைந்துள்ளதுடன், 2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. எனவே, மாவீரர் நாள் நினைவேந்தல்களைத் தடைசெய்வது, நினைவுகூர்வதற்கான தமிழர்களின் உரிமையின் ஏற்றுக்கொள்ளமுடியாத மீறலாகும் எனும் சந்தேகத்திற்கிடமில்லாச் செய்தியை இலங்கைக்கு அனுப்புமாறு பேர்ள் சர்வதேசச் சமூகத்தை வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://www.ilakku.org/நினைவு-கூர்வதற்கான-தமிழர/
    • பின்தங்கிய கிராமங்களுக்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் முன்னெடுப்பு    51 Views கஞ்சிகுடியாறு குளத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டதன் ஊடாக பின்தங்கிய கிராமங்களுக்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் ஒன்று ஆரப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், அன்புநெறி (USA) நிதி உதவியுடனும் Assist RR(SL) அனுசரனையுடனும் IMHO USA and Pladge to Restore என்ற அமைப்பின் ஒருங்கிணைப்புடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் பிரதேச செயலாளர், கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் கிராமங்களின் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு மாகாண மற்றும் தேசிய உத்தியோகத்தர்கள், தாண்டியடி மக்கள் சேவைகள் ஒன்றியம் இளைஞர்கள், கஞ்சி குடியாறு மீனவர் சங்க உறுப்பினர்கள் இவர்களுடன் Assist RR இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். 24 11 2020 இன்று மதியம் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டமான திலாப்பியா மீன் குஞ்சுகள் 50000 பிரதேச செயலாளர் திரு கஜேந்திரன் தலைமையில் கஞ்சிகுடியாறு குளத்தில் விடப்பட்டது. ரூபாய் 125,000.00 பெறுமதியான இந்த மீன்குஞ்சுகள் மட்டக்களப்பு மீனவர் கூட்டுறவு திணைக்களத்தின் Nursary யில் 80 நாட்கள் வளர்க்கப்பட்டு சுமார் 2 தொடக்கம் 3 சென்டிமீட்டர் அளவு வளர்ச்சி அடைந்த நிலையில் இன்று இக்குளத்தில் விடப்பட்டுள்ளது. இந்த மீன் குஞ்சுகள் மூன்று மாதத்தின் பின்பு அறுவடை செய்யக் கூடிய அளவு வளர்ந்திருக்கும். இத்திட்டத்தின் ஊடாக கஞ்சிகுடிச்சாறு மீனவர் சங்கத்தின் 84  உறுப்பினர்களும் 5 மீன் வியாபாரிகளும் நேரடியாக பயனடைவர். மறைமுகமாக 350 குடும்பங்களும் , 5 மீன் வியாபாரிகளும், சுமார் 500 வாடிக்கையாளர்களும் பயனடைகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் நன்னீர் மீன் வளர்ப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. *ரூபேஷ், சாகாமம், விழாவட்டவான் போன்ற குளங்களுக்கும் மீன்குஞ்சு வழங்குகின்ற திட்டத்தை விரிவுபடுத்துதல். *மீன் குஞ்சு வழங்குகின்ற திட்டத்துடன் இதனை நிறைவு செய்யாமல் தொடர்ந்து இந்த மீனவர் சங்கங்களை வலுவூட்டுதல் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துதல். *சிறிய நீர் தடாகங்களை உருவாக்கிய அவற்றில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு மானிய அடிப்படையில் உதவி செய்தல். இதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் மீனவர் கூட்டுறவு திணைக்களம் மூலமாக வழங்கப்படும். *தற்போது குளங்களில் இருந்து அறுவடை செய்யப்படுகின்ற மீன்கள் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது ஊடாக வியாபாரிகள் அதிக லாபம் அடைகிறார்கள் எனவே நேரடியாக மீன் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கு அதிக லாபத்தைப் பெற்றுக் கொள்கின்ற வகையில் மீன்களுக்கான பெருமதி சேர் திட்டத்தை உருவாக்குதல். *புகை கருவாடு க்கு அதிக கேள்வி நிலவுவதால் மீனை பதப்படுத்தி கருவாடு உற்பத்தியை மேற்கொள்வதற்கு விசேட கவனம் செலுத்துதல். *ஒரே நாளில் மீனை கருவாடாக பதப்படுத்துவதற்காக சாகாமம் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட மீன் காயவைக்கும் இயந்திரத்தை உடனடியாக பாவனைக்கு கொண்டு வருகின்ற வகையில் ஒரு நிதியை கண்டுபிடித்து மீனவர்களுக்கு அதிக லாபத்தை பெற்றுக்கொடுத்தல். *சாகாமம் மீனவர் சங்கத்தால் மீன் காய வைக்கும் இயந்திரம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்ற போது அதனை கஞ்சிகுடியாறு மீனவர் சங்கத்துக்கு வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகளை பிரதேச செயலாளர் துரித நடவடிக்கை மேற்கொள்வார். *வியாபாரிகளுக்கு மீன்களை வழங்குவதற்கு பதிலாக மீனவர் சங்கம் நேரடியாக மீன்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்கின்ற திட்டத்தை உருவாக்குவதற்கு தேவையான நடைமுறைகளை மேற்கொள்தல். *குளங்களில் அதிக முதலைகள் இருப்பதால் அடிக்கடி மீன் வலைகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் மீனவர்கள் உடனடியாக தங்களுக்கு தேவையான வலைகளை கொள்முதல் செய்து தொழிலை மேற்கொள்வற்கான அவசர கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துதல். (மீனவ சங்கத்திற்குள் அதிக நிதியை கையாளுகின்ற வகையில் சிறந்த பொறிமுறை ஒன்றை உருவாக்குதல்) *நன்னீர் மீன்பிடி ஊடாக கிராமத்திற்குள் இருக்கின்ற ஏனைய நபர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல். *நீண்டகாலமாக குறிப்பிட்ட சிலர் மாத்திரமே மீன்பிடியில் ஈடுபடுகின்ற அதேவேளை கிராமத்துக்குள் நீண்ட காலமாக இருக்கின்ற வர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதியை வழங்குகின்ற வகையில் புதிய அணுகுமுறை ஒன்றை உருவாக்குதல். *மீனவ சங்கத்தால் சேமிக்கப்படுகின்றன நிதியிலிருந்து ஏனைய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குதல். *மீன்பிடியும் விவசாயமும் ஒன்றாக மேற்கொள்ளுகின்ற இப்பிரதேசத்தில் விவசாயத்துக்கும் கூடுதல் முக்கியத்துவம் வழங்குதல். *தற்போது யானை வேலி அமைக்கப்பட்டு கொண்டிருப்பதால் மகா மற்றும் யல ஆகிய இரண்டு போகங்களும் மேட்டுநில பயிர்ச்செய்கை மேற்கொள்ளுகின்ற வகையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய பயிர் (peanuts, watermelon, sweet corn) செய்கை திட்டங்களை மேற்கொள்தல் *திருக்கோயில் பிரதேசத்திலே விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய பகை பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு சோலை விவசாய அமைப்பு எமது பிரதேசத்திற்குள் பணியாற்றுவதற்கு அழைத்தல். இன்று கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை வருகின்ற வாரங்களில் பிரதேச செயலாளர் தலைமையிலே கலந்துரையாடி தீர்க்கமான சில முடிவுகளை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. https://www.ilakku.org/பின்தங்கிய-கிராமங்களுக்/  
    • எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போவதில்லை… நவம்பர் 24, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து/0 கருத்து எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போவதில்லை… அன்றைய தமிழர் இராட்சியம் விழ்ச்சியடைந்து, பல நூறு ஆண்டுகள் அந்நியரும், அயலவருக்கும், அடிமைப்பட்டு வாழ்ந்த தமிழீழ தேசம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இன்று எமது தாயகத்தின் பெருநிலப் பரப்பில் எமது தன்னாட்சி நடைபெறுகிறது. ஒரு நீண்ட, துயரமான, கொடூரமான வரலாற்று இடைவெளியின் பின்பு, மீண்டும் தமிழினத்தின் வீர எழுச்சிச் சின்னமாக, தமிழர் மண்ணிற் புலிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது. இந்த மாபெரும் வரலாறுத் திருபத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் பெருமிதத்துடன் இன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன். எமது தேசிய விடுதலைப் போராட்டம் என்றுமில்லாதவாறு இன்று உலகமயமாகியுள்ளது. பல தசாப்தங்களாகப் பாராமுகம் காட்டி வந்த உலமா இன்று தனது முழுக் கவனத்தையும் எமது போராட்டத்தின் மீது திருப்பியுள்ளது. ஒரு பலம் வாய்ந்த விடுதலைப் போராட்ட சக்தியாக இன்று உலகரங்கில் நாம் முன்னணி வகித்து நிற்கின்றோம். தர்மத்தின் வழி தழுவி, ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை ஒப்பற்றது. உலக விடுதலை வரலாற்றில் நிகரற்றது. இந்த அளப்பரிய ஈகத்தின் ஆன்மீக சக்தி இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒழித்துக் கொண்டிருக்கிறது. சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடுகளுக்கப்பால், ஒரு விடுதலை இயக்கத்தின் கீழ், ஒரு விடுதலை இலட்சியத்தின் கீழ். ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கின்றார்கள். வீரம் சேர்ந்த எமது விடுதலைப் போராட்டமும் அந்த விடுதலைப் போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய அபாரமான சாதனைகளும் அவ அர்கள் புரிந்த அற்புதமான தியாகங்களுமே எமது மக்களை எழுச்சியூட்டி, உணர்வூட்டி ஒரே அணியில், ஒரே இனமாக, ஒரே தேசமாக ஒன்றுதிரள வைத்திருக்கின்றன. எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புக்களுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதாரசக்தியாக விளங்குகின்றன. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.   https://thesakkatru.com/our-maaveerarkal-thirst-for-freedom-will-not-be-quenched-with-death/
    • முருகனே   ஜக மாயை - திருப்புகழ் முருகன் சுப்ரபாதம் லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு லக்ஷ்மி வாராய் என் இல்லமே ஓம் நமோ நாராயண சிறந்த திருப்பதி பெருமாள்   
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.