Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வட்டி மாபியாக்களினால் பறிபோன வர்த்தகரின் உயிர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வட்டி மாபியாக்களினால் பறிபோன வர்த்தகரின் உயிர்

sakthi-696x522.jpg

 

மட்டக்களப்பு செங்கலடி நகரில் உள்ள பிரபல வர்த்தகரான ராஜன் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செங்கலடி சக்தி ஸ்டோர்ஸ் முதலாலியான இவர் கடந்த 1990 ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்திற்கு வருகை தந்து பல சிறிய சில்லறை கடை வர்த்தகர்களை உருவாக்கி உதவி செய்தவரின் தற்கொலை செங்கலடி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகுந்த கடன் காரணமாக தன்னிடம் இருந்த மூன்று கடைகள் மற்றும் வீடு என்பவற்றை விற்பனை செய்த அவர் தான் விற்பனை செய்த வீட்டில் இருந்து இரவு முழுவதும் பொருட்களை ஏற்றியவர் இரவு வீடு செல்லாது இருந்துள்ளார்.

இன்நிலையில் காலை வீட்டின் பின்புறம் வேலைக்கு சென்றவர்கள் கதவை திறந்த போது கடையின் பின்புற அரையிறுதியில் தூக்கில் தொங்கி நிலையில் அவரது சடலத்தை கண்டு ஏறாவூர் பொலீசாருக்கு அறிவித்துள்ளனர்.

வட்டி மாபியாக்களினால் கடனுக்கு மேல் கடன் சுமையில் வீழ்த்தப்பட்ட இவருக்கு சுமார் ஐந்து கோடிக்கு மேல் இருந்த கடனை அடைப்பதற்காக தான் 30 வருடங்களாக சேர்ந்த சொத்து கடைகள் வீடு என்பவற்றை விற்பனை செய்துள்ளார்.

இதன் தாக்கமே அவரை தற்கொலைக்கு தூண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

செங்கலடி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் காணப்படும் வட்டிக்கு பணம் வேண்டுதல் அதனை அடைப்பதற்கு  வங்கியில் சொத்துக்களை வைத்து கடன் பெறுதல் என கடனுக்கு கடன் வாங்கியே பல வர்த்தகர்கள் செங்கலடி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

வட்டி மாபியாக்கள் மிகவும் திட்டமிட்டு வட்டிக்கு பணம் கொடுத்து இவ்வாறு பல வர்த்தகர்களை இல்லாமல் செய்துள்ளனர்.

வட்டிக்கு பணம் வாங்கிய பல வர்த்தகர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பல வர்த்தகர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டனர். எனவே வர்த்தகர்கள் இனியாவது இந்த வட்டி மாபியாக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

செங்கலடி சக்தி ஸ்டோர் முதலாளி  மரணம் நடந்து என்ன?

rajan.jpgவங்கிகளில் வட்டிக்குப் பெறப்பட்ட பணத்தை விட பலமடங்கு வட்டியுடன் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட, தனது குடியிருந்த வீட்டையும், கடைத்தொகுதியையும் விற்று தனியார் வங்கியொன்றுக்கு பணத்தை செலுத்தியிருக்கிறார்.

75 லட்சம் ரூபா வங்கியிலிருந்து பெறப்பட்ட பணத்துக்கு, 03 கோடியே 20 லெட்சம் ரூபா தனது சொத்துக்களை விற்று செலுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் மற்றுமொரு நிறுவனத்தில் வட்டிக்கு பெறப்பட்ட 75 லட்சத்துக்கும் மாதாந்தம் கட்டி வந்த தொகையைவிட இருமடங்கு கட்டிவரவேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தியதால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில், ஏற்கனவே விற்கப்பட்ட கடைத்தொகுதியின் பின்புறமாகவுள்ள ஸ்டோர் அறையின் வளையில் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி (27/08) மரணித்துள்ளார்..

விற்கப்பட்ட கடையை, வாங்கிய முதலாளி ஓடாவி மேசன்மார்களை வைத்து திருத்த வேலைகளை செய்துவருவதால், இன்று காலை திருத்த வேலைகளுக்காக வந்த ஒடாவி ஒருத்தரே ஸ்டோர் அறைக்கு சென்றபோது, .இவர் தூக்கிட்டிருப்பதை அடையாளம்கண்டு, அவரது மனைவிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.

பின்னர் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, கௌரவ நீதிபதியின் உத்தரவுக்கமைய, பிரதேச மரண விசாரனை அதிகாரி MSM நஸீர், தடயவியல் பொலிசாரின் வருகையோடு சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

http://www.ilakku.org/வட்டி-மாபியாக்களினால்-பற/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

75 லட்சம் ரூபா வங்கியிலிருந்து பெறப்பட்ட பணத்துக்கு, 03 கோடியே 20 லெட்சம் ரூபா தனது சொத்துக்களை விற்று செலுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் மற்றுமொரு நிறுவனத்தில் வட்டிக்கு பெறப்பட்ட 75 லட்சத்துக்கும் மாதாந்தம் கட்டி வந்த தொகையைவிட இருமடங்கு கட்டிவரவேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தியதால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில், ஏற்கனவே விற்கப்பட்ட கடைத்தொகுதியின் பின்புறமாகவுள்ள ஸ்டோர் அறையின் வளையில் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி (27/08) மரணித்துள்ளார்..

வங்கிகள் என்பது சட்ட நியாயாதிகமும், வலுவும் அளிக்கப்பட்ட பண்பான கொள்ளைக்காரர்கள்.    

ஆனால், வங்கியில் மில்லியன் இல் கடன் வாங்கினால், அது வங்கியின் பிரச்சனை, கடன் வாங்கியவரின் பிரச்னை இல்லை பொறுப்பு கடன் வாங்கியவராயினும்.

வங்கிகள் செய்தது, psychological அழுத்தம். அநேகமாக, சட்ட விரோதமாகவே இருக்கும். 

இவர் உயிர் வாழ்வதே வங்கிகளுக்கு பிடி என்பது இவருக்கு தெரியவில்லை. ஆனால், அதற்கு சட்ட அறிவு தேவை.  

மற்றது, வணிக கடன் வாங்கும் போது, இப்படியனவர்கள் சட்டம் , மற்றும் நிதி  ஆலோசனை  இல்லாமல் எடுப்பதே  இயல்பு. இது இங்கு மேலை நாடுகளிலும் இயல்பாக நடக்கிறது.
 
இப்படி வசதி உள்ளவருக்கே கடன் பிரச்சனை என்றால், இது ஓர் வியாபார சேவை மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

அதாவது, debt counselling என்ற சேவையை ஆரம்பிப்பது.

வியாபார மற்றும் நுகர்வு  கடன் சட்ட அறிவும் மற்றும் இருக்கும் ஏனைய பொது சட்டங்களை கொண்டு எவ்வாறு கடன் சுமையை குறைப்பது, பிற்போடுவது, இருப்பதை இழக்கும்  நிலையலானும் அடிப்படை தேவைகளை (வீடு, மற்றும் தொழில்  போன்றவைகள்), உரிமத்தை கொடுத்துவிட்டு,  அவர் வாழும் வரைக்கும் வைத்திருக்கும்  (வாடகை அடைப்படையில் அல்லது amortization அடிப்படையில்) வகை செய்வது போன்றவைகள்.

இதற்கு, debt counselling,  இன்னும் சட்டங்களும் தேவை, அவற்றை கொண்டு வருவதற்கு lobby மற்றும் pressure groups, சட்ட ஆலோசனையுடன் அமைத்து அழுத்தம் வழங்குதல்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

வட்டிக்கு பணம் வாங்கிய பல வர்த்தகர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 1. முஸ்லிம் வங்கிகள் வட்டி வாங்காமல் கடன் கொடுக்கின்றன.
 2. வட்டிக்கு கடன் வாங்காமல் தவிர்க்க வணிகர்கள் பங்குதாரர்களை சேர்க்கின்றனர். இலாபமானாலும் நட்டமானாலும் எல்லோருக்கும் அதில் பங்கு. ஆனால் வணிகத்தை மனம் போனபடி ஒருவரே செய்து கொள்ள முடியாது. பங்குதாரர்களின் ஆலோசனையை புறக்கணித்து வணிகம் இந்த முதலாளியினது போல நட்டத்தில் ஓட முதலே பங்குதாரர்கள் முதலாளியை மாற்றிவிடுவர். 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கற்பகதரு said:

முஸ்லிம் வங்கிகள் வட்டி வாங்காமல் கடன் கொடுக்கின்றன.

இது முஸ்லிமாக இருக்க வேண்டும் வட்டி இல்லாமல் கடன் பெறுவதற்கு. அது ஷரியா சட்டப்படி வட்டி வாங்குவது மதத்துக்கு விரோதம் எனும் நம்பிக்கை அடிப்படையில். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கற்பகதரு said:
 1. முஸ்லிம் வங்கிகள் வட்டி வாங்காமல் கடன் கொடுக்கின்றன.
 2. வட்டிக்கு கடன் வாங்காமல் தவிர்க்க வணிகர்கள் பங்குதாரர்களை சேர்க்கின்றனர். இலாபமானாலும் நட்டமானாலும் எல்லோருக்கும் அதில் பங்கு. ஆனால் வணிகத்தை மனம் போனபடி ஒருவரே செய்து கொள்ள முடியாது. பங்குதாரர்களின் ஆலோசனையை புறக்கணித்து வணிகம் இந்த முதலாளியினது போல நட்டத்தில் ஓட முதலே பங்குதாரர்கள் முதலாளியை மாற்றிவிடுவர். 

ஐயா கற்பகம், மட்டக்களப்பில் முசுலிம் வங்கியில் கணக்கு திறக்கவே முசுலிம் ஆக இருக்க வேண்டும்...

இந்த வட்டி மாபியாக்களின் பின்னணி யார்??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:
 1. முஸ்லிம் வங்கிகள் வட்டி வாங்காமல் கடன் கொடுக்கின்றன.
 2. வட்டிக்கு கடன் வாங்காமல் தவிர்க்க வணிகர்கள் பங்குதாரர்களை சேர்க்கின்றனர். இலாபமானாலும் நட்டமானாலும் எல்லோருக்கும் அதில் பங்கு. ஆனால் வணிகத்தை மனம் போனபடி ஒருவரே செய்து கொள்ள முடியாது. பங்குதாரர்களின் ஆலோசனையை புறக்கணித்து வணிகம் இந்த முதலாளியினது போல நட்டத்தில் ஓட முதலே பங்குதாரர்கள் முதலாளியை மாற்றிவிடுவர். 

 

5 hours ago, Kadancha said:

இது முஸ்லிமாக இருக்க வேண்டும் வட்டி இல்லாமல் கடன் பெறுவதற்கு. அது ஷரியா சட்டப்படி வட்டி வாங்குவது மதத்துக்கு விரோதம் எனும் நம்பிக்கை அடிப்படையில். 

தமிழர் வட்டி வாங்காமல் கடன் கொடுக்க மாட்டார்களா? 

4 hours ago, MEERA said:

ஐயா கற்பகம், மட்டக்களப்பில் முசுலிம் வங்கியில் கணக்கு திறக்கவே முசுலிம் ஆக இருக்க வேண்டும்...

இப்படியான வட்டி  வாங்காத தமிழ் வங்கிகளை ஏன் தமிழர் வைத்திருக்கவில்லை?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அல்லஹாக்கு குல்லா போடுற கதை தெரியுமோ?

வெளியாலதான் வட்டி இல்லா இஸ்லாமிய வங்கி என்று கதை- உள்ள போனால், மாதாந்த சேவை கட்டணம், லாபத்தில் பங்கு அல்லது இது போன்ற பெயரில் வட்டிக்கு நிகரான பணத்தை கறந்துவிட்டுத்தான் விடுவார்கள்.

வட்டி இல்லாமல் வங்கி நடத்தேலுமே.

Edited by goshan_che
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அல்லஹாக்கு குல்லா போடுற கதை தெரியுமோ?

வெளியாலதான் வட்டி இல்லா இஸ்லாமிய வங்கி என்று கதை- உள்ள போனால், மாதாந்த சேவை கட்டணம், லாபத்தில் பங்கு அல்லது இது போன்ற பெயரில் வட்டிக்கு நிகரான பணத்தை கறந்துவிட்டுத்தான் விடுவார்கள்.

வட்டி இல்லாமல் வங்கி நடத்தேலுமே.

அதான் 😊😊. இந்த வட்டி இல்லா கதையெல்லாம் யதார்த்தம் மீறியது. வட்டி இல்லாமல் வங்கி நடத்துவதானால் பணம் எனற விடயத்தை பயன் படுத்தாமல் பண்டமாற்று முறைக்கு தான் போக வேண்டும்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வங்கியில் கடன் எடுத்து இவ்வாறு கடனில் மூழ்கினார் என்பதை நம்பமுடியவில்லை. வங்கியில் கடன் கிடைக்காமல் வறுமையில் வாழும் அல்லது அதனால் தற்கொலை செய்த குடும்பங்கள் எத்தனையோ. இவர் அளவுக்கு மீறி பல இடங்களிலும் காலை அகல விரித்து வைத்து அகப்பட்டு இருக்கிறார். அனுதாபப்படுவதை விட மற்றவர்களுக்கு பாடமாக தான் பார்க்கணும். 

Edited by விசுகு
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இன்று மனோ தனது கையெழுத்தை நீக்கிக் கொள்வதாக அறிவித்ததுள்ளார்.
  • இங்கே ஓர் நகைசுவையான சம்பவம், ஆனால், அதை தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் தனனை மாணவன் எள்ளி நகையாடிதாக கோபித்த சம்பவம். எனது மகன் தமிழ் பாடசாலையில் படிக்கிறார். எத்தனையாம் வகுப்பு என்று மறந்துவிட்டது, ஆசிரியர் பட்சியை கொண்டும், பற்றியும்,  தமிழ் பாடம் எடுத்து கொண்டு இருந்தார். ஏதோ ஓர் சிந்தனை உதித்து,எனது மகன் ஆசிரியரிடம் பட்சிக்கு பற்கள் இருக்கிறதா என்று கேட்டார்.     ஆசிரியர் அப்போது என்னசொனரோ தெரியவில்லை, ஆனால் அதை அவர் முறைப்பாடாக,  குறைபாடாக எங்களிடம் சொன்னார், தன்னை உங்களின் மகன் எள்ளி நகையாடுகிறார் என்று.  இவையெல்லாம் ஆசிரியர் முறைப்பாடாக எம்மிடம் தெரிவித்ததை. மகனிடம் கேட்டால், அவர்   சொன்னார், தனக்கு தற்செயலாக மனதில் உதித்த கேள்வி என்று. அதே கேள்வியை, பாடசாலை முடிந்த கையுடன் மகன் என்னிடமும் கேட்டார். எனது  பதில், இதுவரைக்கும் பற்கள் உள்ள பட்சிகளை  நான் காணவில்லை, cassowary எனும் மூர்க்கமான பறவையை கூட இயலுமானவரை கிட்ட இருந்து பார்த்தும் நான் பற்களை காணவில்லை.  ஆனால், சிறிய மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் பட்சிகளின்  அலகை விரல்களால் திறந்து, அலகின் மருங்குகளை தடவிப் பார்த்த அனுபவத்தில், இப்போதும் பட்சிகளின் அலகின் மருங்கில் மிகவும் குணுகிய,  பற்கள் போன்ற அமைப்பு, கூர் மழுங்கி  இருக்கிறது. அதனால், இப்போதைய பட்சிகளாக கூர்படைந்துள்ள, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இராட்சத பட்சி போன்ற தோற்றமுள்ள உயிரிரனத்தின் அலகில்  பற்கள் இருந்து இருக்கலாம். இதை இங்கு சொல்வதன் காரணம், தமிழ் பாடசாலைகளில், ஏன் பல தமிழ் இன ஆசிரியர்களுக்கு (எந்த பாடமாயினும்) பிடிப்பிபதில் மாணவர்களை அழைத்து செல்லமுடியாதரவர்களாக உள்ளனர். இப்படி, எனது மகன் அவரின் வழமையான (ஆங்கில) பாடசாலையில், டெசி மீட்டர் பற்றிஎனது மகன் தான் அறிந்ததை சொல்ல, அவர்கள் அதை தேடிப்பார்த்து பின்பு வகுப்புக்கே படிப்பித்தார்கள்.  அதை ஓர் குறைபட்டு கொள்ளவில்லை.  
  • பதடி என்றால் வீண்பேச்சுப்பேசுபவர்கள் தடி ஆயுதம் படி   நிறையின் அளவு கருவி
  • மனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு முயற்சித்தார் – எம்.ஏ.சுமந்திரன்    மனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு, அரசியல் கைதிகளின் விடுதலையை, துமிந்த சில்வாவின் விடுதலையுடன் ஒப்பிட்டது  தவறான ஒரு செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஓரிரு தினங்களுக்கு, துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சில  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட மனுவில் தானும் கைச்சாத்திட்டதாகவும், அது மூன்று வாரங்களின் முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், அது தற்போது நான் எதிர்பாராத விதமாக வெளிவந்துவிட்டது என்றும் மனோகணேசன் தொலைபேசியில் தெரிவித்தார். அந்த விடயம் வெளிவந்ததனால், சில சங்கடங்களும், சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அதை சமாளிப்பதற்கு, தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பான ஒரு மனுவை நாங்கள் சேர்ந்து கொடுத்தால் என்ன என என்னிடம் மனோகணேசன் கேட்டார். துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் கைச்சாத்திட்டத்திற்கான உண்மையான காரணத்தையும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். தனிப்பட்ட உரையாடலின் போது, அவர் அந்தகாரணத்தை என்னிடம் சொன்னதனால், அதை பகிரங்கமாக சொல்ல விரும்பவில்லை. அரசியல் நாகரிகத்தை அவர் பேணாவிட்டாலும், அந்த நாகரீகத்தை பேண நான் விரும்புகின்றேன். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர் சொன்னது, துமிந்த சில்வாவின் மனுவில் கையொப்பமிட்டதில் இருந்து தப்புவதற்கு, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான மனுவை முன்வைத்தால் என்ன என்று கேட்டார். அதற்கு நான் மறுத்துவிட்டேன்.  மறுப்புத் தெரிவித்தமைக்கான காரணத்தையும் நான் சொல்லியிருந்தேன். அவர் சொல்வதைப் போன்று, இந்த நேரத்தில் அது தேவையில்லை என நான் சொல்லவில்லை. அது தவறானது. தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை செய்யப்படுவது சரியான விடயம். அது செய்யப்பட வேண்டிய விடயம். துமிந்தசில்வாவை விடுதலை செய்வது தவறான விடயம். ஆகையினால், செய்யப்படகூடாத விடயத்தையும், கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயத்தையும், ஒன்றாக காட்டுவது, மிக மிகத் தவறான செயற்பாடு. சுனில் ரத்னாயக்காவிற்கு மன்னிப்பு கொடுக்கப்பட்ட போது கூட,  தமிழ் அரசியல்கைதிகளையும் விடுதலை செய்யலாம் தானே என்றதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன். இந்த இரண்டு விடயங்களையும் சேர்க்ககூடாது. சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டது தவறான செயல். தவறான செயலை வைத்து, சரியான செயலை  செய்வதற்கு, தவறான செயலையும், சரியானதென சொல்வதாக ஆகிவிடும். எனவே, சுனில் ரத்னாயக்காவின் விடுதலை தொடர்பாக, நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றோம். தமிழ் அரசியல்கைதிகளின் விடயத்தை, இந்த தவறான செயலுடன் சேர்க்க கூடாது. அவர்கள் கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள். அது வேறு விடயம். மனோகணேசன், ஞானசார தேரர் சிறையில் இருந்த போது, அவரை சிறையில் சென்று பார்வையிட்டு, அதன்பின்னர், அவர் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தவர். பிள்ளையானை சிறையில் கண்டு வந்தவர். ஞானசார தேரர், பிள்ளையான், சுனில் ரத்னாயக்க, துமிந்தசில்வா, ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. தமிழ் அரசியல் கைதிகள் என நாங்கள் அடையாளப்படுத்துபவர்கள், கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள். ஆகவே, தவறான ஒரு விடயத்தையும், சரியான ஒரு விடயத்தையும், முடிச்சுப் போட வேண்டாம் என நான் அவரிடம் சொல்லியிருந்தேன். அவ்வாறான ஒரு செயற்பாட்டிற்கு இணங்க முடியாதென்று நான் அவருக்கு தெளிவாக சொல்லியிருந்தேன். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை, தவறான செயலை செய்ததில் இருந்து தான் தப்புவிக்க வேண்டும் என்று, அதனை ஒரு கருவியாக பயன்படுத்த நினைப்பது ஒரு தவறான செயற்பாடு. அதற்கு இணங்கிப் போகக்கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு. நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் யோசித்துவிட்டுச் சொல்வதாக, தன்னிடம் கூறியதாக, மனோகணேசன் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். ஆனால், அடைக்கலநாதன், தான் அவ்வாறு சொல்லவில்லை. இரண்டு விடயங்களையும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என தெளிவாக சொன்னதாக, ஊடகங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் இன்று  காலை தெரிவித்தார். மனோகணேசன், துரதிஸ்டவசமாக, தான் அகப்பட்ட அரசியல் சிக்கலில் இருந்து விடுபடுவதற்காக, இவ்வாறு பேசுவது பிழையான ஒரு விடயம். அவர் என்னிடம் தனிப்பட்ட விடயமாக பேசியதனால், சில விடயங்களை வெளிப்படுத்தவில்லை. நாங்கள் தெரிவித்ததாக மனோகணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமையினால், நானும், அடைக்கலநாதனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக, தெளிவான நிலைப்பாட்டை சொல்லியிருக்கின்றோம். அந்த தேவை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது” என்றார்.    by : Vithushagan http://athavannews.com/மனோகணேசன்-தனது-தவறை-மூடி/
  • 1234 நீ வேணா சொன்னா  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.