Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

 

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை நாடாளுமன்ற
உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விக்னேஸ்வரன் மனதில் கொள்ளவேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அந்த கதியேற்பட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.


விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் விக்னேஸ்வரனுக்கு அதற்கான வயதுமில்லை காலமும் இல்லை என தெரிவித்துள்ளார்.


உங்களிடம் உள்ளது குறித்து மகிழ்ச்சி அடையுங்கள்,இந்த நாட்டில் சிங்களவர்களின் நிலையை குறைத்து மதிப்பிடவேண்டாம் அவ்வாறு குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள்,மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

https://www.madawalaenews.com/2020/08/blog-post_516.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் அதுக்கான வயதும் இல்லை, காலமும் இல்லை.

பிரபாகரன் துவக்கு தூக்கினார். விக்கினேஸ்வரன் வார்த்தைகளை தூக்கி உள்ளார்.

இவர்களுக்கு வரப்போகும் சிக்கல், விக்கியினை வெளியே அனுப்பினால் தெரியும். 

என்ன விஷயம் என்றால், விக்கி, கஜன் அடுத்த தேர்தலுக்கான அடித்தளம் போட்டு விடுவார்கள். சுமந்திரனுக்கு கலக்கம் வரும்.... என்னப்பா இந்தாள் இந்த போடு போடுது... நாமளும் வாயை திறக்க வேண்டும் என்று யோசிப்பார்.
 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றம் சிங்களவருக்கானது என்பதை மிகத்தெளிவாக ஐக்கிய மக்கள் ச(த்)க்தி  சொல்லுது . இதிலை என்னவென்றால் கூடிக்குலாவிக் கும்மாளமடிச்ச குழுக்களையோ குழுக்களின் குரலாளர்களையோ காணேல்லை. வயசான நேரத்திலை தனிய நின்று  கருத்தாடுறார் விக்கி ஐயா.  மொட்டும் ஐக்கிய மக்கள் ச(த்)க்தியும் ஏதோ ஒரு புரிந்துணர்வோடு நாடகம் நடத்துகிறார்கள். அதாவது மொட்டுத் தரப்பினுடைய   பாதுகாப்பு வளையமாக தமிழரை எதிர்த்தாடும் தரப்பாக உள்ளனர்.  இந்த இடத்திலே இவர்களை ஐநாவரை தடுத்தாடியவை வந்து பதில் குடுத்தாநல்லது.  அது சிங்கள நாடாளுமன்ற வரைவேட்டிலாவது பதிவாகும்.  

ஒருவேளை விக்கி ஐயாவை கலைக்கட்டுமென்று நரிகள் படுத்திருக்கலாம்.  ஆனால் நரிகளை யானை காப்பற்றலாம் . மானுக்கெறிந்த  தடி காகத்தால் காப்பற்றப்பட்ட மானுக்குப்படவில்லை. மானை மாட்டிவிட்டோமென்று மகிழ்வில் மானிறைச்சியைச் சுவைக்கக் காந்திருந்த நரிக்கு நடந்ததே  நினைவுக்கு வந்து தொலைகிறது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யார் அதீத இனவாதி என்று மக்களுக்குக் காட்டுவதில் போட்டி ☹️

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆட்சி கட்டிலுல்கான வழி என்ன என்பதை சஜித்துக்கும் ஆரோ சொல்லிபோட்டாங்கள் 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இலங்கையில் ஆட்சி கட்டிலுல்கான வழி என்ன என்பதை சஜித்துக்கும் ஆரோ சொல்லிபோட்டாங்கள் 🤣

வெள்ளிக் கிழமை ....ம்ம்

சஜித் இல்ல சரத்...

ஆனைக்கும் அடி சறுக்குமுங்கோ ... 😂

இந்த நேரத்திலாவது எமதாட்கள் தமது ஒற்றுமை(யீனத்தை)யை வெளிக்காட்டினால்தானுண்டு. செய்வார்களா அல்லது வளமை போலவா 🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Prison Uprising: The Subaltern Wakeup Call - Sri Lanka Guardian   sarath-fonseka-in-jail-colombo-telegraph - Today Jaffna News - Jaffna Breaking News 24x7 

சிறையில்... இப்படி,  இருந்த... சரத்பொன்சேகாவா.... இவர் ❓

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

வெள்ளிக் கிழமை ....ம்ம்

சஜித் இல்ல சரத்...

ஆனைக்கும் அடி சறுக்குமுங்கோ ... 😂

இந்த நேரத்திலாவது எமதாட்கள் தமது ஒற்றுமை(யீனத்தை)யை வெளிக்காட்டினால்தானுண்டு. செய்வார்களா அல்லது வளமை போலவா 🤔

தம்பி ராசா, 

வெள்ளியோ வியாழனோ நான் எப்பவும் பிளேண்டி, அதுவும் சீனி போடாமல்🤣

சரத் மட்டுமில்ல, நேற்று மனுஷ்யவும் கத்தினவரல்லே.

எல்லாரும் டெலிபோன் கட்சிதானே? டெலிபோனின் தலைவர் சஜித்தானே?

உது கட்சி மட்டத்தில் பேசி எடுத்த முடிவு. சஜித் பின்னால நிக்கிறார்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு இனப்படுகொலையாளியின் பகிரங்க கொலைமிரட்டல். இது குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்து விளக்க வேண்டும். இப்படியான இனப்படுகொலையாளிகள் தண்டனையில் இருந்தும் சர்வதேசத்தால் தப்பிக்க விடப்படுவது.. சனநாயகத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே ஆபத்தானது.. என்பதை விளக்க வேண்டும்.

இவர் செம்மணிப் படுகொலைகளில் இருந்து.. முள்ளிவாய்க்கால் வரை இனப்படுகொலைகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர் மட்டுமன்றி..தமிழ் பொதுமக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் பின்னால் இருந்த சூத்திரதாரியும் ஆவார். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கையில் ஆட்சி கட்டிலுல்கான வழி என்ன என்பதை சஜித்துக்கும் ஆரோ சொல்லிபோட்டாங்கள் 🤣

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் யாழ்பாணத்தில் எவ்வளவு தீவிரமாக தமிழர்கள் ஆதரித்தனர் 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் யாழ்பாணத்தில் எவ்வளவு தீவிரமாக தமிழர்கள் ஆதரித்தனர் 😂

வேற வழி இல்லாமல்தான்.

இதெல்லாம் ஒரு அரசியல் வியாபார யுக்திதான்.

2015 இல பாதி சிங்கள வாக்கையும், முழு சிறுபான்மை வாக்கையும், நல்லாட்ட்சி கோசத்தையும் சேத்து பெளத்த-சிங்கள வாக்கு வங்கிய மேவலாம் எண்டு ரணில் காட்டினார்.

அதனால அதே டிரிக்கை நேற்றுவரை டிரை பண்ணினார் சஜித்.

ஈஸ்டர் அட்டாக், சிறிசேனா கோமாளிதனம், முஸ்லிம் எதிர்ப்பை கையில் எடுத்து மறுபடியும் பேரினவாத வாக்கு வங்கிதான் வெல்லும் வழி என்று காட்டிவிட்டது மொட்டு.

யு என்பி பெளத்த சிங்கள விரோத கட்சி என்று பதிவாகிவிட்டதால் - சஜித் இப்ப free யா தந்தாலும் வேண்டாம் என்றார்.

சஜித் இதுவரை செய்த அரசியல் வென்று அவர் இப்ப ஜனாதிபதி என்றால் - அவர் இப்பவும் சிறுபான்மை இன நண்பன் வேடம்தான். இந்த கூச்சலை கமன்பில போட்டிருப்பார்.

சஜித் இப்ப வெல்ல வேண்டும் என்று இனவாதத்தை கையில் எடுக்கிறார்.

முந்திய சமசமாஜ கட்சிக்கு நடந்த அதே கதைதான்.

உது- வோட் போட்ட தமிழ் சனத்துக்கும் தெரியும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தம்பி ராசா, 

வெள்ளியோ வியாழனோ நான் எப்பவும் பிளேண்டி, அதுவும் சீனி போடாமல்🤣

சரத் மட்டுமில்ல, நேற்று மனுஷ்யவும் கத்தினவரல்லே.

எல்லாரும் டெலிபோன் கட்சிதானே? டெலிபோனின் தலைவர் சஜித்தானே?

உது கட்சி மட்டத்தில் பேசி எடுத்த முடிவு. சஜித் பின்னால நிக்கிறார்.

விழுந்தாலும் மீசயில  மண் ஒட்டயில்ல 😜😜 சாமியோவ்.. 😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

இது ஒரு இனப்படுகொலையாளியின் பகிரங்க கொலைமிரட்டல். இது குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்து விளக்க வேண்டும். இப்படியான இனப்படுகொலையாளிகள் தண்டனையில் இருந்தும் சர்வதேசத்தால் தப்பிக்க விடப்படுவது.. சனநாயகத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே ஆபத்தானது.. என்பதை விளக்க வேண்டும்.

இவர் செம்மணிப் படுகொலைகளில் இருந்து.. முள்ளிவாய்க்கால் வரை இனப்படுகொலைகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர் மட்டுமன்றி..தமிழ் பொதுமக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் பின்னால் இருந்த சூத்திரதாரியும் ஆவார். 

அது தான் அமெரிக்கா பெரியம்மா 
பாட்டாவை திருகோணமலையில் போய் சந்தித்தவ.
அடுத்த தீபாவளிக்கிடையில விளையாட்டிருக்கு.
வேணமெண்டா இருந்து பாருங்கோ.

29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் யாழ்பாணத்தில் எவ்வளவு தீவிரமாக தமிழர்கள் ஆதரித்தனர் 😂

ஏன் பொன்சேகாவையும் ஆதரித்தவை தானே?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் பொன்சேகாவையும் ஆதரித்தவை தானே?

மக்களை வாக்குக்காக செம்மறிக்கூட்டங்களாக வழிநடத்தி காட்டு விலங்குகளுக்கு இரையாக்கியவர்களே இதற்கு பதில் கூற கடமைப் பட்டவர்கள்.

 

4 hours ago, Nathamuni said:

சுமந்திரனுக்கு கலக்கம் வரும்....

 விறைச்ச மண்டைக்கு கலக்கமாவது, அடுத்த தேர்தலில் சிங்களக் கட்சியில் பாரிய பதவி ஒன்றை நோக்கி நிதானமாக காயை நகர்த்துவார். அதாவது இருக்கிற கொட்டிலும் பத்தி எரிந்து சாம்பலாக்கிப்போட்டு வெற்றியோடு எங்கிருந்து வந்தாரோ, யாரால் அனுப்பப்பட்டாரோ அங்கே கலந்துவிடுவார். ஸ்ரீதரன் சாமரம் வீசுவார். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அது தான் அமெரிக்கா பெரியம்மா 
பாட்டாவை திருகோணமலையில் போய் சந்தித்தவ.
அடுத்த தீபாவளிக்கிடையில விளையாட்டிருக்கு.
வேணமெண்டா இருந்து பாருங்கோ.

உங்கண்ட ஊர்ல வாற ஆளை பொறுத்தது.

ஜோ வந்தால் எப்படி இருக்கும்?

நம்மூரிலே போரிஸ் சப்போர்ட் தான்... ஆனால் பாவம், மனிசன் வந்ததில் இருந்து அந்தாளுக்கு ஒரே பிரச்னை தான். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இது ஒரு இனப்படுகொலையாளியின் பகிரங்க கொலைமிரட்டல். இது குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு எடுத்து விளக்க வேண்டும். இப்படியான இனப்படுகொலையாளிகள் தண்டனையில் இருந்தும் சர்வதேசத்தால் தப்பிக்க விடப்படுவது.. சனநாயகத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே ஆபத்தானது.. என்பதை விளக்க வேண்டும்.

யாரப்பா இந்த சர்வதேசம்? இவர் ஏதாவது செய்யக்கூடிய ஆளோ?

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

யாரப்பா இந்த சர்வதேசம்? இவர் ஏதாவது செய்யக்கூடிய ஆளோ?

large.9B6F0314-9C05-40AD-8C63-D8D377C657D6.jpeg.65348a099d220e1edba69b5352864b07.jpeg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் போர்வெற்றி, மறுபக்கம் மழுப்பல். தமிழருக்கு  பிரச்சனை இல்லை, தமிழர் வந்தேறு குடிகள், நாம் கொடுப்பதை வாங்கிக்கொண்டு இருக்கவேண்டும். உரிமை பற்றி எல்லாம் கதைக்க கூடாது என்கிற சட்டம்.  களி திண்டும் திமிர் அடங்கேல்லை இந்தாளுக்கு. தட்டிப்பறித்ததை சொந்தமாக்கிக் கொள்வதில் எப்படி ஒத்துழைக்கிறானுகள். நாமே சிங்களம் படித்தால் பிரச்சனை இல்லை என்று சொல்லும்போது, அவனுக்கும் அனுகூலந்தானே. சிங்களக் கல்விமூலம் பிரச்சனை தீர்ந்ததாக மூடப் பார்க்கிறான் அவன். தமிழரின் சுதந்திரத்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறான் என்கிற உண்மை நமக்கு புரிய மாட்டேன்  என்கிறது. நாங்கள் நம் பாட்டில் எதுவும் கேட்க்காமல் நமது தொழில், கல்வி, முன்னேற்றம் என்றுதானே இருந்தோம். வேற்றுமையையும், பிரிவினையையும், கலவரங்களையும் யார், ஏன் ஏற்படுத்தினார்கள்? இனியும் ஏற்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தமிழருக்கு பிரச்சனை இல்லை என்று மூடி மறைப்பதில் இருந்தே இந்தப்பிரச்சனை தீராது, தீர்க்கப்படாது நாம் எல்லாவற்றையும் விட்டு அடிமைகளாக வாழ அவர்களால் நிர்பந்திங்கப்படுகிறோம் , நம்மை நாமே விட்டுக்கொடுக்கிறோம் என்பது புரியாமலேயே நம்புகிறோம் அவர்கள் சொல்வதை எல்லாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கடுமையான வார்த்தைகள் வருவது யாரிடமிருந்து? – சரத்தை பதிலாள் தாக்கிய கஜேந்திரகுமார்

Kajenthirakumar-Ponnambalam-Sarath-Fonseka.jpg?189db0&189db0

 

பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம். இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே கடுமையான வார்த்தைகள் வெளி வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்பிக்கு பதிலளித்துள்ளார்.

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என சரத்பொன்சேகா நாடாளுமன்றில் இன்று (28) உரையாற்றியமை குறித்தே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும்,

“சபை அமர்வில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனது பெயரைக் குறிப்பிட்டமை தொடர்பாக கருத்துக்கூற விரும்புகிறேன். அவர், நான் பேசிய விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எனக்கு சில அறிவுரைகளை வழங்கியதுடன், அதனூடாகவே இன நல்லிணக்கம் பேணப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நான் பேசிய விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறேன் என்பதை அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் குறிப்பிட்ட விடயங்களின் அளவீடுகள் தொடர்பாக நான் பிரக்ஞையுடன் இருக்கிறேன். குறிப்பாக இவர் என்னை காரணப்படுத்துவதை நான் விசேடமாக அவதானித்தேன்.

ஏனெனில், இவர் இராணுவத் தளபதியாக செயற்பட்ட காலங்களில் இலங்கை சிங்கள மரம் என்றும் ஏனையவர்கள் அனைவரும் அந்த சிங்கள மரத்தின் மீதான கொடிகள் மற்றும் சிறிய உயிரினங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான கடுமையான வார்த்தைகள், பொதுவுடைமையாளராக இல்லாத அல்லது இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே வெளிவருகிறது. ஒருவேளை அவர் தனது பதவியை இழந்த பின்னர் அல்லது சிறையில் இருந்த பின்னர் மாறியிருக்கலாம். ஆனால், அவர் எனக்கு இந்த அறிவுரையினை வழங்கியமையை மிகமுக்கியமாகப் பார்க்கிறேன்.

வடக்கு கிழக்கு பகுதிகள் இலங்கையில் யுத்தத்தினை எதிர்கொண்ட, பாரிய அளவில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகள். 32 வருடங்களாக நாம் போரை எதிர்கொண்டோம்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாகவும் ஜெனரல் பொன்சேகாவாகவும் இருந்த அக்காலப்பகுதியில், வடக்கு கிழக்கு முழு பொருளாதார தடையின் கீழ் இருந்தது. அக்காலப்பகுதியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. வடக்கு கிழக்குப் பகுதிகள் எதிர்கொண்ட நிலை இதுவே.

32 வருடங்கள் முழுமையான அழிவுக்குப் பிறகு அந்தப் பகுதிகளை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றது. 32 வருடங்களுக்கு மேலாக பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட மக்களை, இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் சம அளவாக போட்டியிட எதிர்பார்ப்பது சாத்தியமற்றது” – என்றார்.

https://newuthayan.com/கடுமையான-வார்த்தைகள்-வரு/

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவையள் தமிழர்களுடன் இனவாத விளையாட்டு விளையாடி தங்களுடைய பல தலைவர்களை  இழக்க நேரிட்டதையும் ,அந்த நாட்டை பிராந்திய வல்லரசுகளுக்கு அடகு வைக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிய தமிழ் தளபதியை மறந்து விட்டர்....அந்த தளபதியை உலகம் பூராவும் பிச்சைவாங்கி அழித்தமையை மறந்துவிட்டார்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்

கடந்த காலத்தில் தமிழரை குறைத்து மதிப்பிட்ட சிங்களவர்களும் ஆயிரக்கணக்கில்  தமிழர்களால் சுட்டு கொல்லப்பட்டனர் என்பதையும் ஐயா நினைவில் கொள்ளணும்.

 

ஆனால் ஒன்று...

மஹிந்தவுக்கு மைத்திரிய பிடிக்காது..

மைத்திரிய கோத்தாவுக்கு பிடிக்காது..

ஆளும் கட்சிய சஜித்துக்கு பிடிக்காது

இவர்கள் பலரை விமல் வீர சிங்கவுக்கு பிடிக்காது

தன்னை சிறையில் தள்ளியதால் பொன்சேகாவுக்கு மஹிந்த குரூப்பை பிடிக்காது,

அந்த குரூப்பை சந்திரிக்காவுக்கும் பிடிக்காது,

ஆனால் இவர்கள் எவருக்குமே தமிழரை பிடிக்காது,

தமிழர் என்று வந்துவிட்டால் இவர்கள் அனைவருக்குமே ஒருவரை ஒருவர் ரொம்ப பிடித்து ஒற்றுமை ஆகி விடுவார்கள்.

 

மறு பக்கம் ...

கருணா டக்ளஸ் புளொட் ரெலோ பிள்ளையான் தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஆனந்த சங்கரி...

இவர்களுக்கெல்லாம் புலிகளையும்  பிடிக்காது..

இவர்களுக்கு இடையே உள்ள போட்டி  கட்சிகளையும் பிடிக்காது..

ஆனால் ஒட்டு மொத்த தமிழரையும் வெறுக்கும் சிங்கள தலைமைகளை இவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

சிங்களவனை நேசிக்கும் தற்போதைய  தமிழர்கள் தலைமைகளிடமிருந்தும்,

சிங்களவனுடன் மறைமுக நேரடி  தொடர்புகளை இறுதி யுத்தம் முடிந்து ஓரிரு மாதங்களிலே ஏற்படுத்திவிட்ட புலம்பெயர் தேசத்து தேசியவாதிகளையும் நம்பி 

தமிழ் தேசியம் வளர்க்கலாம் என்று எனக்கொருவர் இங்கே  கிளாஸ் எடுத்தாரு.

இனிமேல் கொஞ்சமாவது எங்காவது மறைந்திருக்கும்  தமிழ் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்றால் கண்டிப்பாக  தமிழர்களால் அவமான படுத்த  படுவார்கள்,

சிங்களவனுக்கு தற்கால தமிழர் தலைமைகளால்  காட்டி கொடுக்கப்பட்டு தலையிலயே சுட்டு கொல்லபடுவார்கள்.

சிங்களவர்களுக்கும் எமக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ,

அவர்கள்  தமக்கிடையே எத்தனை தகராறுகள் வந்தாலும் , தமது தாயகம் என்று வந்துவிட்டால்  முதலில் பொது எதிரி யார் என்றுதான் பார்க்கிறார்கள்.

நாம்? நாம் எப்படி இருக்கிறோம் என்று நமக்கே தெரியாதா என்ன?

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

'இனிமேல் கொஞ்சமாவது எங்காவது மறைந்திருக்கும்  தமிழ் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்றால் கண்டிப்பாக  தமிழர்களால் அவமான படுத்த  படுவார்கள்'

மற்றவனின் அதுவும் இவ்வளவும் அனுபவித்தவன் அவமானப்படுத்துவான் என்று நாங்கள் மாற வேண்டாமே . எனக்கும் உங்களுக்கும்(?) வந்த பாதைகள் மறக்கலாமோ

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Hana said:

'இனிமேல் கொஞ்சமாவது எங்காவது மறைந்திருக்கும்  தமிழ் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்றால் கண்டிப்பாக  தமிழர்களால் அவமான படுத்த  படுவார்கள்'

மற்றவனின் அதுவும் இவ்வளவும் அனுபவித்தவன் அவமானப்படுத்துவான் என்று நாங்கள் மாற வேண்டாமே . எனக்கும் உங்களுக்கும்(?) வந்த பாதைகள் மறக்கலாமோ

நாம் மறக்கவில்லை, பலர் மறந்துவிட்டு சிங்களத்துடன் சேர்ந்து எள்ளி நகையாடுகின்றார்கள், அவர்களை என்ன செய்ய,

இந்த கூத்தமைப்பு முதுகெலும்புள்ளதா இருந்திருந்தால் 2009 க்கு பின், இந்த நிலை வந்திருக்காது, ஒரு மாபெரும் பேரம் பேசும் சக்தியாக விளங்கியிருக்கலாம். 

தங்களின் நலனை பேணியதை தவிர என்ன செய்தார்கள்,

ஒன்று மட்டும் செய்தார்கள் - எமது தேசியத்தை சிதைத்தார்கள்

 • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

நாம் மறக்கவில்லை, பலர் மறந்துவிட்டு சிங்களத்துடன் சேர்ந்து எள்ளி நகையாடுகின்றார்கள், அவர்களை என்ன செய்ய,

இந்த கூத்தமைப்பு முதுகெலும்புள்ளதா இருந்திருந்தால் 2009 க்கு பின், இந்த நிலை வந்திருக்காது, ஒரு மாபெரும் பேரம் பேசும் சக்தியாக விளங்கியிருக்கலாம். 

தங்களின் நலனை பேணியதை தவிர என்ன செய்தார்கள்,

ஒன்று மட்டும் செய்தார்கள் - எமது தேசியத்தை சிதைத்தார்கள்

அவர்கள் எள்ளி  நகையாடட்டும். கூட்டமைப்பை விடுங்கள்.அதனப் பற்றி சிந்தித்து எங்களின் நேரத்தை வீணாக்க முடியாது. யாரும் ஆக்கபூர்வமாக அதற்கு புரிய வைப்பார்கள் என்றால் வேறு. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்போம். எங்கள் மக்கள் முன்னால்  உள்ள தேவைகள் நிறைவேறும்  போது அவர்களுக்கு தேசியத்தின் தேவை புரியும். இப்போதும் புரியும் பலருக்கு ஆனால் வேறு தேவைகள் முன் நிற்கும். பதவி கிடைத்தவருக்கும் தங்களின் எல்லை எதுவரை என்று விளங்கும். செய்வதுகளை  பரப்புரை இன்றி செயலில் காட்டிட வேண்டும். எங்களின்  போரினால் பாதிக்கப்பட்ட /படாத இளைய சமுதாயம் தன்னம்பிக்கையுடன் வளர பாதை (வழிகாட்டல்) அமைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அட்வைஸ் எல்லாம் இல்லை,

ஒரு introspection.

இதே யாழ் களத்தில் யாழில் மதப்போதகர் விரட்டல், மன்னார் வளைவு உடைப்பு என்ற திரிகளை மீண்டும் ஒருக்கால் வாசித்து பாருங்கோ.

இங்கே இரெண்டு அணியாய் பிரிந்து நிற்பவர்கள், அவற்றில் வேறு இரு அணிகளாய் பிரிந்து நின்று சக தகமிழனையே திட்டி தீர்த்தது விளங்கும்.

இதுதான் நாங்கள். இப்படி பிரச்ச்னை ஒவ்வொரு தனி மனிதனிடம் இருந்தால் அது எம் தலைமைகளில் வெளிப்படுவது இயற்கையே.

30 வருடம் ஒரு தனிமனிதன் இந்த அடைசல்களை எல்லாம் மேவி, பூசி மெழுகி வைத்திருந்தான் - அவ்வளவுதான்.

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வெளிப்படுத்தச் செய்யும் பொது முயற்சி ஆரம்பம் வடக்கு-கிழக்கைப் பிரதேசவாரியாகவும் தேசியப்பட்டியலூடாகவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இது தொடர்பில், கடந்த வருட இறுதியிலும் இவ்வருட ஆரம்பத்திலும் ஒன்றிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்ளச் செய்யும் சந்திப்புகளை நடாத்துவதில், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் முயற்சியோடு மதத்தலைவர்களும் இணைந்து ஊக்குவித்தோம். சில கூட்டங்களைத் தலைமையேற்றும் நடாத்தியிருந்தோம். சமீபத்தைய நாட்களில் மீண்டும் இதைப் போன்ற ஒரு வரலாற்றுத் தேவை எழுந்திருப்பதாகச் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் எம்மைத் தொடர்புகொண்டு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் சிக்கல்கள் எழும்போது, அவற்றைத் தீர்த்துவைக்கவென மீண்டும் மீண்டும் புதிதாக முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, ஒரு பொதுவான மாற்றீட்டு அணுகுமுறையை வகுத்துக்கொள்வதை ஆராய்ந்து செயற்படுத்துவதே பொருத்தமாகத் தெரிகிறது. இவ்வாறான ஒரு முயற்சியை முன்னெடுப்பதில் முதற்கட்டமாகச் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் கருத்துகளைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து, அடுத்;தகட்டமாகப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் கலந்துரையாடி, தக்க வழி ஒன்றை வகுக்க ஆவன செய்வதற்காகப் பூர்வாங்கச் செயற்குழு ஒன்றை எமது மேற்பார்வையில் உருவாக்கிவருகிறோம். வடக்கு-கிழக்கு இணைந்து மேற்கொள்ளும் இம்முயற்சியில் சட்டத்துறை சார்ந்த இளந்தலைமுறையோடு, சிவில் சமூக மற்றும் மரபுரிமைச் செயற்பாடுகளில் இயங்கிய அனுபவம் கொண்டவர்களும், ஊடக அமையங்களை ஸ்தாபித்துச் செயற்பட்ட அனுபவம் வாய்ந்தவர்களுமாக, எந்தவித அரசியற் கட்சிப் பின்னணியும் இல்லாத ஐவர் இணைக்கப்பட்டுள்ளார்கள். முதற்கட்டமாக, இவர்கள் கல்வி மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களோடு கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பூர்வாங்கக் குழுவின் பொதுத் தொடர்பை சட்டத்துறை சார்ந்த மூவர் கையாள்வது பொருத்தம் என்ற அடிப்படையிலும், இளைய தலைமுறையின் பங்கேற்பு இவ்வாறான முயற்சிகளுக்கு அவசியம் என்ற நோக்கோடும், மேலும் இரண்டு சட்டத்தரணிகள், இயன்றவரை பால், மத, மற்றும் பிரதேச சமத்துவத்துடன் இணைக்கப்பட்டு பொதுத்தொடர்பைக் கையாளவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். செயற்குழு மற்றும் பொதுத்தொடர்பில் பங்கேற்பவர்களின் விபரங்களை, ஆரம்பக் கலந்துரையாடல்கள் முடிவடைந்ததும் வெளிப்படைத்தன்மையோடு அறியத்தரும் பணியை மன்னாரைச் சேர்ந்த அ. அன்ரனி றொமோள்சன் எனும் சட்டத்தரணியிடம் கையளித்திருக்கிறோம். இந்தக் குழுவில் இணைந்து கொள்ளவும், ஆலோசனைகளை வழங்கவும், இம் முயற்சியை ஊக்குவித்துச் செயற்படவும் விரும்புவோர் participate@tamildemocracy.org என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தமது தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். கல்வித்துறை, சட்டத்துறை, மனித உரிமை, ஊடகத்துறை மற்றும் இதர சமூகப் பரப்புகளில் இருந்து கருத்துக்களை உள்வாங்கி, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரோடும் கலந்தாலோசித்து, உகந்த ஒரு பொறிமுறையை வகுக்கும் பணியை முன்னெடுக்கவேண்டும் என்ற நல்லாசியுடன் இம் முயற்சியை ஆரம்பித்து வைப்பதில் மனநிறைவடைகிறோம். அனைவரின் ஆதரவும் இம்முயற்சிக்குக் கிட்ட இறையருளை வேண்டிநிற்கிறோம். அதி. வண. கலாநிதி கி. நோயெல் இம்மானுவேல் ஆயர், திருகோணமலை மறை மாவட்டம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கயிலை ஆதீனம் http://www.samakalam.com/தமிழ்ப்-பாராளுமன்ற-உறுப்/  
  • பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் ஆத்திரமூட்டும் செயல்கள் அரசியல் சுயநிர்ணயத்திற்காக போராடுவதற்கு மக்களை மேலும் உறுதியளிக்கும் – நீதியரசர் விக்னேஸ்வரன் இறந்தவர்கள் எந்த அளவுக்கு அதிகாரங்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறார்கள் என்பதையே தற்போதைய பொலிஸாரின் செயல் காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்கள், மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் நினைத்தால் அவர்களே ஏமாற்றப்படுவார்கள்.அதாவது இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டில் அரசியல் சுயநிர்ணயத்திற்காக போராடுவதற்கு மக்களை மேலும் உறுதியளிக்கும் என மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இறந்த வீரர்களை நினைவுகூறுவதற்கு மக்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கும் முன் நீதிமன்றங்கள் மிகவும் கவனத்துடன் இருக்கும் என்று நம்புகிறேன்.கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.செல்வராசா கஜேந்திரனை, பொலிஸார் இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லும் காணொளி காட்சியை நானும் பார்த்தேன். இறந்தவர்களை நினைவுகூரும் விழாவில் அவர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பொதுவான குற்றவாளியைப் போல பொலிஸாரினால் இழுத்துச் செல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மேலும், எனக்குத் தெரிந்தவரை நாம் இறந்தவர்களை நினைவில் கொள்ள முடியாது என்று எந்த சட்டமும் இல்லை.இதேவேளை பொலிஸாரின் இந்தச் செயல், இறந்தவர்கள் எந்த அளவுக்கு அதிகாரங்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இறந்த ஆவிகளால் தொந்தரவு இல்லாமல் அமைதியாக தூங்குவது அவர்களுக்கு கடினமாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக திலீபன் அமைதியான சத்தியாகிரியாக இருந்தார். அவர் உன்னத காரணங்களுக்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். உன்னத காரணங்களுக்காக இறந்த ஒரு அமைதியான எதிர்ப்பாளரை மக்கள் நினைவு கூர்வது பற்றி அரசாங்கம் ஏன் கலங்குகிறது? என அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.(15)   http://www.samakalam.com/பொலிஸாரினால்-மேற்கொள்ளப/
  • ‘தாய்நிலம்’ ஆவண பட நிகழ்வில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு: சம்பந்தன்- விக்னேஸ்வரன் கூட்டாக ஆரம்பித்து வைப்பர். September 25, 202 தமிழ் மக்களின் தாயகமான வடக்கு-கிழக்கில் காலம் காலமாக அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று ( ThaaiNilam: Land Grabbing – The Real Pandemic for the Tamils in Sri Lanka) என்ற ஆவணப் படம் எதிர்வரும் சனிக்கிழமை மாலை இலங்கை நேரப்படி 5.30 மணிக்கு ( லண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணி, டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம் காலை 8 மணி) திரையிடப்படவுள்ளது. இந்த ஆவணப்படத்தை சோமீதரன் இயக்கியுள்ளார். இந்த ஆவண பட திரையிடல் நிகழ்வை தொடர்ந்து ‘இலங்கையின் இனஞ் சார்ந்த நில ஆக்கிரமிப்பு: முறைகள், விளைவுகள் மற்றும் தமிழ் நில பாதுகாப்பு’ ( Sri Lanka’s Ethnocratic Land Grabs: Methods, Consequences, and Tamil Land Defence ) என்ற இணையவழி கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் இந்தியாவில் 30 வருடங்களுக்கு மேலாக மக்களின் நில உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளரான கலாநிதி மேதா பட்கார் அம்மையார், சென்னை பல்கலைக்கழ பேராசிரியர் ராமு மணிவண்ணன், அமெரிக்காவின் ஓக்லாந்து நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்வில் இஸ்ரேல் நாட்டில் இருந்து பேராசிரியர் ஓரன் யிப்டசெல் அவர்கள் முதன்மை உரை ஆற்றுவார். இந்த குழு விவாதத்தை தொடர்ந்து ஈழத்தை பூர்வீகமாக கொண்ட கனடாவின் புகழ்பெற்ற இசை கலைஞரான ஷான் வின்சென்ட் டி போலின் இசை நிகழ்வு ஒன்று 20 நிமிடங்களுக்கு இடம்பெறும். ஆவண படம் திரையிட்ட பின்னர், அந்த படம் தொடர்பிலான ஆய்வு ரீதியான கலந்துரையாடல் ஒன்றில் இளையோர்கள் கலந்துகொள்வார்கள். இந்த கலந்துரையாடலில் பிரித்தானியா, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து இளையோர்கள் கலந்துகொள்வர். இந்த நிகழ்வினை பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுடன் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் அவர்கள் கூட்டாக ஆரம்பித்துவைப்பார். தாய்நிலம் என்ற இந்த ஆவண படத்தை தமிழ் மக்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும் என்றும் அதன்பின்னர் நடைபெறும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் இந்த நிகழ்வையும் ஆவண பட வெளியீடையும் ஏற்பாடு செய்துள்ள நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். “எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 5. 30 மணிமுதல் சில மணி நேரங்களுக்கு உங்கள் நேரத்தை தயவுசெய்து ஒதுக்கிவைத்து இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று நீதியரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Zoom Link: https://bit.ly/LandGrab2021 Webinar ID: 841 5154 5684 Passcode: TH2021 ஊடகப் பிரிவு – தமிழ் மக்கள் கூட்டணி https://globaltamilnews.net/2021/166437  
  • கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் இலங்கை திறக்கப்படுகிறது! September 25, 2021 ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டதைப் போல் இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஒக்டோபர் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் நாடு திறக்கப்படக்கூடுமென தகவல்கள் வெளியாககியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, நியூயோர்க் சென்றுள்ளார். அதனால், கொவிட்-19 தொற்றொழிப்பின் ஜனாதிபதி செயலணியின் நேற்றைய (24.09.21) கூட்டம் நடைபெறவில்லை. எனினும், ஒக்டோபர் முதலாம் திகதிக்குப் பின்னர் நாட்டை திறப்பதற்கு தேவையான கட்டுப் பாடுகளை ஆராய்ந்து அறிக்கையிடுமாறு கடந்த கூட்டத்தின் போது, விடயதானத்துக்குப் பொறுப்பானவர்களிடம் ஜனாதிபதி பணித்திருந்தார். கொவிட்-19 தொற்றொழிப்பின் ஜனாதிபதி செயலணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடி ஆராய்ந்து முடிவெடிக்கும். எனினும், ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர், ஒக்டோபர் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர், பிறிதொருநாளில் அச்செயலணி கூடி முடிவெடுக்கக் கூடும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நாடு, தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்ததன் ஊடாக நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்த ராகம வைத்திய பீடத்தில் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா, கடுமையாக கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணியாளர்களை அழைப்பது 25 சதவீதத்தில் மட்டுப்படுத்தவேண்டும். பொது போக்குவரத்தில் பயணிகளை ஏற்றிச்செல்வது 50 சதவீதமாக இருக்கவேண்டும் என்றும் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார். திருமண வைபவங்கள் உள்ளிட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூடும் நிகழ்வுகளை முழுமையாக தடைசெய்யமுடியும் எனத் தெரிவித்துள்ள அவர், நாட்டை முழுமையாக திறக்கவேண்டுமாயின் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் செயற்றிட்டம் 70-80 சதவீதங்களுக்கு அண்மித்திருக்க வேண்டும். நாட்டை முடக்கியிருந்த இந்தக்காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை திருப்தியடையும் வகையில் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/2021/166432
  • Lesson 63 | உடல் நலம் 02 | la santé 02| French with Pirakalathan | ASCES.....! 62 வைத்து பாடத்தின் தொடர்ச்சி. மருத்துவ உதவிகள் சம்பந்தமான பகுதி.....பூரிக்கட்டையால தாக்கப்பட்டு காயமடைந்தவர்கள் கண்டிப்பாக நோய் தந்தவர்களிடமே வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்..........!  👍
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.