Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது; தனது கருத்து தொடர்பில் ஆணைக்குழு அமைத்து உண்மையை கண்டறிய விக்கி சவால்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது; தனது கருத்து தொடர்பில் ஆணைக்குழு அமைத்து உண்மையை கண்டறிய விக்கி சவால்

1-a-vicky-300x173.pngபாராளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில் உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என்றும் முதல் குடிமக்கள் தமிழ் மக்களே என்றும் பேசியமைக்கு இனவாத ரீதியாக எதிர்ப்புத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காரசாரமான பதில் அளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தனது கருது தொடர்பில் வீணாக குழப்பம் அடையாமல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை அமைத்து உண்மையை கண்டறியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலக் கணக்கறிக்கை பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

குழப்பம் அடைந்து என்னைத் தூற்றி பொது விவாதத்துக்கு என்னை அழைப்பதன் மூலம் ஒரு உண்மை பொய்யாகவோ அல்லது ஒரு பொய் உண்மையாகவோ ஆகிவிடாது. தேவை ஏற்பட்டால், எமது வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவை தொடர்பில் அறிவுகொண்ட சிறந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் சர்வதேச ரீதியான வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை நாம் அமைக்கலாம். இதுவரை காலமும் எமது சிங்கள சகோதரர்களுக்கு பிழையான தகவல்களை வழங்கிவந்த போலி வரலாற்று ஆய்வாளர்களை விடுத்து சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களாக இந்த வரலாற்று ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். என்று விக்னேஸ்வரன் கூறினார்.

தனது கருத்துக்களுக்கு ஆதாரமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற சரித்திரப் பேராசிரியர் மற்றும் யாழ் பல்கலைக்கழக வேந்தர் பத்மநாதன் தயாரித்த ஒரு குறிப்பினை பாராளுமன்றத்தின் ஹன்சாட்டில் உள்ளடக்குமாறு சமர்ப்பித்துள்ளார். இது தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிமுக குறிப்பாக உள்ளடக்கப்பட்டுள்ளது. ;வடகிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் வாழ்ந்து வந்த இலங்கையின் தமிழ் சமூகமானது இடைக்கற்காலம், பெருங்கற்கால மக்களின் ஒன்று கலப்பில் இருந்து தோன்றியவர்கள். இடைக்கற்கால கலாசாரமானது கிறிஸ்துவுக்கு முன் 28000 வருடகால நீண்ட இருப்பைக் கொண்டது என்று இந்த குறிப்பு ஆரம்பிக்கின்றது.

பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் விக்னேஸ்வரனுக்கு எதிராக சரத் வீரசேகர உட்பட பலர் கடுமையான கருத்துக்களை முன்வைத்து அவரை பாராளுமனத்தில் இருந்து வெளியேற்றவேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்கள் முன்வைத்த சில கருத்துக்களுக்கு பதில் அளிப்பதற்கு தனக்கு கூடுதல் நேரம் தேவை என்று கோரிக்கைவிடுத்து நேரடியாக ஒவ்வொன்றாக பதில் அளித்தார்:

ஓரிரு நாட்களுக்கு முன்னர் நான் ஒரு மூத்த, மதிப்புக்குரிய சிங்கள அரசியல்வாதியை சந்தித்தேன். அவர் எனது உரைகள் குறித்த முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டார். எனது உரைகள் வசைபாடுவதாகவோ அல்லது புண்படுத்தும் வகையிலோ அமையவில்லை என்று கூறினார். ‘பேசும் போது புறநிலை ஸ்தானத்தில் இருந்து கடமையாற்றுவதற்கான அவசியத்தை ஒருபோதும் மறந்துவிடாதே என்று அவர் கூறினார். அவரது ஆலோசனையை நான் மதிக்கின்றேன்.

நான் எவரையும் வெறுப்பதில்லை. ஆனால் நான் உண்மையை விரும்புகின்றேன். சில வரலாற்று உண்மைகளை படித்தபின்னர் எமது கடந்தகாலம் குறித்து சில முடிவுகளுக்கு நான் வந்துள்ளேன். எனது முடிவுகளில் தவறு இருந்தால் மற்றவர்கள் சுட்டிக்காட்டலாம். மாறாக, குழப்பம் அடைந்து என்னைத் தூற்றி பொது விவாதத்துக்கு என்னை அழைப்பதன் மூலம் ஒரு உண்மை பொய்யாகவோ அல்லது ஒரு பொய் உண்மையாகவோ ஆகிவிடாது. தேவை ஏற்பட்டால், எமது வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவை தொடர்பில் அறிவுகொண்ட சிறந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் சர்வதேச ரீதியான வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை நாம் அமைக்கலாம். இதுவரை காலமும் எமது சிங்கள சகோதரர்களுக்கு பிழையான தகவல்களை வழங்கிவந்த போலி வரலாற்று ஆய்வாளர்களை விடுத்து சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களாக இந்த வரலாற்று ஆய்வாளர்கள் இருக்க வேண்டும்.

கொழும்பை சேர்ந்த கௌரவ உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் எனது பெயரைக் குறிப்பிட்டு எனக்கு எதிராக சில விடயங்களைக் குறிப்பிட்டார். அதனால் அவருக்கு பதில் அளிப்பதற்காக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குக் கூடுதலாக மேலும் சில நிமிடங்கள் வழங்கவேண்டும் என்று கோருகின்றேன்.

நான் முதலமைச்சராக இருந்தபோது சிங்களவர்களும் முஸ்லிம்களும் வடக்கில் வடக்கிற்குள் நுழைவதற்கு நான் தடை விதித்ததாகக் கூறினார். எனது இரண்டு பிள்ளைகளும் சிங்களவர்களை திருமணம் முடித்திருக்கும் நிலையில் நான் அப்படிக் கூறியிருந்தால் உண்மையில் நான் ஒரு பிசாசாக இருக்கவேண்டும். இத்தகைய வெறுப்பூட்டும், இனவாத செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. நான் அப்படிக் கோரிய ஏதாவது காணொளி அல்லது ஒலிப்பதிவு இருந்தால் அதனைப் பார்க்க விரும்புகின்றேன். ஆனால், உள்ளூர் மக்களுக்கான முன்னுரிமையை வலியுறுத்தும் சர்வதேச சட்டத்துக்கு முரணாக மகாவலி குடியேற்றங்களில் வெளியிட மக்களைக் கொண்டுவந்து குடியமர்த்துவது தவறு என்று நிச்சயமாக நான் கூறியிருப்பேன்.

நான் நோயாளிகளுக்கு இரத்த தானம் செய்திருந்தேனா என்றும் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மட்டுமே இரத்த வங்கிகளுக்கு இரத்தம் வழங்குவதாகவும் கௌரவ உறுப்பினர் கூறியிருந்தார். ஏனைய சாதியினரிடம் இருந்து வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரத்தம் பெற்றுக்கொள்வார்களா என்றும் கௌரவ உறுப்பினர் கேட்டிருந்தார். ஆனால், இராணுவம் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் வட மாகாண மக்கள் இரத்த வங்கிகளுக்கு இரத்த தானம் செய்துள்ளனர் என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். எல்லா இரத்தமும் நான்கு வகைகளுக்கு மட்டும் உரியவை என்பதை எம் மக்கள் அறிவார்கள். சிலர் நீல இரத்தத்துடன் பிறக்கின்றார்கள் (உயர் சாதிக்காரர்!) என்று சிலர் நினைப்பதுபோல எமது மக்கள் நினைப்பதில்லை.

மக்களின் நன்மை சார்ந்த சில செயற்திட்டங்களை செய்விப்பதன் மூலம் இராணுவத்தினரின் மனோபாவத்தை மாற்றப்போவதாக மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க என்னை முதலில் சந்தித்தபோது கூறியதை நினைவுறுத்துகின்றேன். இராணுவத்தினர் இரத்தம் கொடுப்பது அநேகமாக அவரின் சிபார்சாகத் தான் இருந்திருக்க வேண்டும். கௌரவ உறுப்பினர் வீரசேகர அவர்கள், படையினரின் மனிதாபிமான செயல்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது.

வடக்கு கிழக்குக்கு சமஷ்டி கொடுக்கப்பட்டால், ஏனைய பகுதிகளில் வாழும் நாட்டின் 60 சத வீதத்தை கொண்ட தமிழர்களின் நிலை என்ன? என்று கௌரவ உறுப்பினர் வெகுளித்தனமாக கேட்டார். நாம் பிரிவினையை கோரவில்லை என்பதை கௌரவ உறுப்பினர் புரிந்துகொள்ளவேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே சமஷ்டி. கௌரவ உறுப்பினர் தனது குண்டர்களை ஏவி எந்தத் தவறும் இழைக்காத எம் மக்களைத் தாக்கினால் அன்றி அவர்களுக்கு எதுவும் நடக்காது.

மேலும் பல விடயங்களை அவர் கூறினார். ஆனால் நான் மறந்துவிட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது நான் அவற்றை கூறுவேன். பக்குவமற்ற இனவாத ரீதியாக வசைபாடுகின்ற ஒரு நிலையை ஏற்படுத்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சிகளுக்குள் இழுபடாமல் ஜனநாயகம் மற்றும் நீதி ஆகியவற்றுக்காக உறுதுணையாகச் செயற்பட்ட கௌரவ சபாநாயகர் மற்றும் இந்த சபையின் ஆண், பெண் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது பயிற்சி பட்டறையின் போதும் மேற்கொண்ட ஆரவாரங்களை மிகவும் திறமையாகவும் நேர்த்தியாகவும் கையாண்ட எமது பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு நான் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

https://www.kuriyeedu.com/?p=275418

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முழுவதும் விகாரைகளை கட்டிக்கொண்டு தமக்கு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பில்லை என்று ஊளையிடும் பிக்குகள் வாழும் நாட்டில் வேறு எதை எதிர் பார்க்க முடியும்? தாம் செய்யும் தவறுகளை மற்றவர் மேல் சுமத்தி, தான் தப்பிக்க முயலும்போதே தான் செய்வது மகா தப்பு எனப் புரிகிறது. அவர் வாய்திறக்க முதலேஊளையிடுவதன் நோக்கம் அதுவே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது; தனது கருத்து தொடர்பில் ஆணைக்குழு அமைத்து உண்மையை கண்டறிய விக்கி சவால்

 15 0

large.91897137-7AF5-4033-AAF4-47EE713350E7.jpeg.dc70e798e9b6e4c57d39ac83899b9780.jpeg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

large.91897137-7AF5-4033-AAF4-47EE713350E7.jpeg.dc70e798e9b6e4c57d39ac83899b9780.jpeg

Screenshot-2020-08-29-11-20-58-667-org-m தோழர் .. மீம்ஸ் நல்உலகிற்கு காலடி எடுத்து வைத்ததில் மிக்க மகிழ்ச்சி ..👍 இன்னும் நிறைய எதிர்பார்க்கிறம் ..👌

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2020-08-29-11-20-58-667-org-m தோழர் .. மீம்ஸ் நல்உலகிற்கு காலடி எடுத்து வைத்ததில் மிக்க மகிழ்ச்சி ..👍 இன்னும் நிறைய எதிர்பார்க்கிறம் ..👌

நன்றி தோழர்.

இந்த மீம்ஸ் ஏகலைவனின் துரோணர் நீங்க😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான பதிலும் வேண்டுதலும் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்னைத் தூற்றி பொது விவாதத்துக்கு என்னை அழைப்பதன் மூலம் ஒரு உண்மை பொய்யாகாது

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

என்னைத் தூற்றி பொது விவாதத்துக்கு என்னை அழைப்பதன் மூலம் ஒரு உண்மை பொய்யாகாது

 

திரும்பி பார்கிறேன்

2013 -முதல்வர்  வேட்பாளராக சிவி அறிவிக்கபட்டதை தொடர்ந்தே நான் யாழில் பல வருட வாசகன் என்ற நிலை கடந்து எழுத ஆரம்பித்தேன்.

காரிருளில் ஒரு நம்பிக்கை கீற்றாக தெரிந்தார் சீவி.

இங்கே பலர் அவரை சுமந்திரனின் இன்னொரு இறக்குமதி என்றார்கள். இன்னொரு பியசேன என்றார்கள். சிங்கள சம்பந்தி என்றார்கள். கொழும்பு மேட்டுகுடி என்றார்கள்.

அவரை நல்ல தெரிவு என எழுதியமைக்காக என்னையும் இங்கே மிக மோசமாக சாடினார்கள்.

முதலமைச்சர் காலத்தின் செயலின்மை, கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றம் -இப்படி பல ஏமாற்றங்கள் இருந்தாலும் - சீவியின் ஊழல் இன்மை மீதும், தேசியத்தின் மீதான பிடிப்பு மீதும் நம்பிக்கை மீதம் இருந்தது.

தனது பாராளுமன்ற நடவடிக்கைகள் மூலம் - இந்த நம்பிக்கை பொய் இல்லை என்பதை நிறுவியுள்ளார் சீவி.

அவரை கூட்டமைப்பு  பிழையாக முதல்வர் பதவியில் அமர்தியது, உண்மையில் அவர் எம்பி பதவிக்கே பொருத்தமானவர் என்றே இப்போ நினைக்கத்தோன்றுகிறது.

எது எப்படியோ - 2009 க்கு பின்னான சூழலில் இவரின் வருகை தமிழ் தேசியத்தை வலுவாக்கும் என்ற என் கணிப்பு பிழைக்கவில்லை என்பதில் ஒரு ஆத்மதிருப்தி.

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – பிரித்தானியாவில் நூல் வெளியீட்டு September 21, 2021   நிலாதமிழ் அவர்களின் படைப்பான மாவீரர் வரலாற்றுப் பதிவாக நினைவழியா நினைவுகள்-என் நினைவில் மாவீரர்கள்-நூல் வெளியீடு விழா 19.09.21 அன்று மாலை லண்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலண்டனின் பல முக்கிய தமிழமைப்புகளின் பிரதிநிதிகளும் போராளி மாவீரர் உறவுகளும் நண்பர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். தமிழ் அமைப்புக்கள் சார் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருமதி.சந்திரிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரரின் சகோதரர் திரு. ரேணுதாஸ் இராமநாதன் அவர்கள் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து பிரித்தானியத் தேசியக்கொடியினை திரு சுடர் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியினை திரு.மலரவன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகச்சுடரினை மாவீரரின் சகோதரர் திரு.ஐங்கரன் அவர்கள் ஏற்றியதைத் தொடர்ந்து மாவீரர் திருவுருவப் படத்திற்கான மலர்மாலையை நிதித்துறைப் பொறுப்பாளர்  பாலதாஸ் அவர்களின் சகோதரி அணிவித்தார். அகவணக்கத்தினைத் தொடர்ந்து   வரவேற்புரையினை திருமதி.பவானி அவர்களும் நூல்அறிமுகத்தினை மாவீரரின் சகோதரியான திருமதி.ரேணுகா உதயகுமார் அவர்களும் ஆற்றினர். தொடர்ந்து நூலை திரு.சுரேஷ் அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் பிரதியினை நிதித்துறைப் பொறுப்பாளர் பாலதாஸ் அவர்களின் துணைவியார் பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை நூலாசிரியரின் சகோதரி திருமதி. சித்திரா இராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். திரு சுரேஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தியினைத்  தொடர்ந்து ஆசியுரையினை போரியல், அரசியல் ஆய்வாளரான திரு.ரவி பிரபாகரன்(ஆரூஸ்) அவர்கள் வழங்கினார். மதிப்பீட்டுரையினை திரு.வாணன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்புரையை திரு.வாமன் அவர்கள் வழங்கியதைத் தொடர்ந்து, ஏற்புரையை திருமதி. நிருபா அவர்களும் நன்றியுரையினை திருமதி. ஆரபி அவர்களும் நிகழ்த்தியிருந்தனர். இந்நூல் வெளியீட்டுவிழா நிகழ்வின் இறுதிப்பகுதியாக தேசியக் கொடியேற்பு நிகழ்வுடன், “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும் “என்ற எழுச்சிப்பாடல் ஒலிக்க உணர்ச்சிப் பெருக்குடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது. https://www.ilakku.org/book-on-tamil-martyrs-released-in-the-uk/      
  • விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ? நா.க.அரசாங்கத்தை விட வெளிநாடுகளில் முகவரி அற்ற அறிவிப்புகள் விடாத வேறெந்த அமைப்புகள் உள்ளன ? 
  • இப்ப பேச்சு வார்த்தை நடத்தும் குறுப்பை எந்த குழுவில் சேர்ப்பார்கள்.🙄🙄
  • கண்ணதாசன் & நாகேஷ் ......!  😂
  • ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி கேட்டு தலிபான் கடிதம் September 22, 2021   ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள், ஐநா சபையில் தமக்கும் பேச அனுமதி அளிக்குமாறு, ஐநாவிடம் முறையாக அனுமதி கேட்டு  கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். இது தொடர்பாக தலிபான் குழுவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை,குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், முத்தாகியின் கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கடிதத்தை ஐநாவின் குழு ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த குழுவில்  அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என ஐநா சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இக்குழு, வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 27) ஐநா சபை கூட்டங்கள் நிறைவடையும் வரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில்,  ஆப்கனில்  அமைத்துள்ள தலிபான் அரசை ஏற்பது குறித்து ஐ.நா இன்னமும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/taliban-ask-to-speak-at-un-general-assembly-in-new-york/    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.