Jump to content

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்பி தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி அடிப்போம்”

இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும்,

“இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேபோல முதல் மதம் பௌத்தம். மற்று இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவை சார்ந்தவையாகும். இதை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையும் மீறி அவர் நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம்; ஓட ஓட விரட்டி அடிப்போம்.

தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் ஊளையிடலாம். ஆனால் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் பயணம் அவர்களுக்கு கிடைக்காது.

முதலமைச்சராக பதவி வகித்து வடக்கு மாகாணத்தை நாசமாக்கிய விக்னேஸ்வரன் இனவாதத்தையும் மொழிவாதத்தையும் மதவாதத்தையும் வைத்து அரசியல் நடத்தலாம் என்ற நோக்குடன் தற்போது நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவரின் இலக்குகள் எதுவும் எம்மை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேறாது” – என்றார்.https://newuthayan.com/வாயை-அடக்காவிடில்-ஓட-ஓட-வ/

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பிழம்பு said:

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்பி தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி அடிப்போம்”

சொல்லாதீங்க சார் முடிந்தா
போட்டு அனுப்பி பாருங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் கொள்கையை பின்பற்றும் விக்னேஸ்வரன்: சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றியே 19 நீக்கப்படும்.!

S_B_Dissanayake.jpg

பிரபாகரனின் கொள்கைகளை பின்பற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்களின் செயற்பாடு பாதகமாகவே முடியும் என்று கூறிய அதேவேளை சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றியே 19வது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொத்மலையில் இன்று (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 19 ஆம் திருத்தத்தின் ஊடாக நாட்டை எவ்வாறு பிரச்சினைக்குள்ளாக்கினார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன அவை வெறுமனே அரசியல் ரீதியான ஆணைக்குழுக்கள் மாத்திரமே ஆகும்.

அப்போது பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டமையும் அரசியல் நோக்கம் கருதியது. இவ்வாறான சிக்கல் நிறைந்த 19 ஐ நீக்கி 20 கொண்டுவரப்படும். உண்மையாகவே 19 ஆம் திருத்தத்தின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரத்தை குறைத்து ரணிலின் அதிகாரம் கூட்டப்பட்டது. 19 ஐ கொண்டுவர தனிப்பட்ட நோக்கமே காரணம். ராஜபக்ஸாக்களுக்கு எதிராகவே 19 இன் மூலம் இரட்டை குடியுரிமையாளர்கள் அரசியலில் ஈடுபட முடியாது என கூறப்பட்டது.

அது கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியை இலக்கு வைத்து செய்யப்பட்டது. அதாவது ராஜபக்ஸாக்களுக்கு எதிராக செயற்படவும், மைத்திரியின் அதிகாரத்தை குறைத்து ரணில் பலம்பொறுந்தியவராக மாறவே 19 ஆது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது. எனவே அதனை ஒழித்து 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்படும்.

அதற்காகவே மக்கள் பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள். அதே போல் புதிய தேர்தல் முறையொன்றை மக்கள் கோரியுள்ளனர். ஆகவே ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பர்.

இதற்கு சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பை தெரிவிக்கலாம். சிறுபான்மை கட்சிகளே கடந்த மகாண சபை தேர்தல் முறையையும் பிரச்சினையாக்கியுள்ளனர் ஆனப்படியால் சிறுபான்மை கட்சிகள் அதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தும் கூச்சலிட்டும் தங்கள்  எதிர்ப்பை தெரிவிக்கலாம். ஆனால் நாம் அதை பற்றி கவலைப்படாமல் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

விக்னேஸ்வரன் இந்து மற்றும் தமிழை உடுத்தி கொண்டுள்ள மனிதன். பிரபாகரனின் கொள்கைகளை பின்பற்றும் அவ்வாறானவர்களின் செயற்பாடு அவர்களுக்கு பாதகமாகவே முடியும். பாராளுமன்றத்தில் பிரிவினைவாதம் என்ற விசத்தை பரப்பி மீண்டும் தனிநாடு கோரிக்கையை வலுப்படுத்த அவர் முனைகிறார். அவர் மீண்டும் ஒரு யுத்தத்திற்கே வழி ஏற்படுத்துகின்றார்.  சிங்கள அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு இந்த பிழையை அவர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்´ என்றார்.

http://aruvi.com/article/tam/2020/08/29/16094/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவு புளிப்பது அப்பத்துக்கு நல்லது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விக்னேஸ்வரன் இந்து மற்றும் தமிழை உடுத்தி கொண்டுள்ள மனிதன்.

அது என்ன நிஞாயம்? நீங்கள்  சிங்களத்தையும், பவுத்தத்தையும் உடுத்தலாம். அவர் என்னஉடுத்தவேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவது?

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றியே 19 நீக்கப்படும்.!

இதுதான்  யதார்த்தம். ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.   தமிழருக்கு பிரச்சனை இல்லை, என்று மட்டும் சொல்லி  முழுப்பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைக்கப் பார்க்காதீர்கள்.

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ராஜபக்ஸாக்களுக்கு எதிராகவே 19 இன் மூலம் இரட்டை குடியுரிமையாளர்கள் அரசியலில் ஈடுபட முடியாது என கூறப்பட்டது.

இரட்டைகுடியுரிமை உள்ளவன் நாட்டின் சட்டங்களை இயற்றலாம், தீர்மானிக்கலாம். ஆனால் இலங்கையின்  குடிமகன் சிங்கள, தமிழ் உறவுள்ளவன் இரு பக்க நிஞாய அநிஞாயங்களை உணர்ந்தவர் தனது கருத்தை சொல்லமுடியாது. இப்போ யார் மேற்கு பக்க ஆசைகளை நிறைவேற்றுகிறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பிரபாகரனின் கொள்கையை பின்பற்றும் விக்னேஸ்வரன்: சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றியே 19 நீக்கப்படும்.!

http://aruvi.com/article/tam/2020/08/29/16094/

நாம் எந்தளவுஆர்வத்துடன்  தமிழக அரசியலை கவனிக்கிறோமோ, அதே அளவு ஆர்வத்துடன் நம்மூர் அரசியலை கவனிப்பவர் நம்ம புரட்சி. நன்றி தோழர்.  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்பி தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி அடிப்போம்”

என்ர தங்கக் கம்பி! அதைச் செய்யுங்கோ முதலில். தமிழ் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை? ஏன் அவர்களை உங்கள் முகவர்களைக் கொண்டு  விலைகொடுத்து வாங்கினீர்கள்? தமிழர் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? நம்மாளுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? என்கிற கேள்விக்கான பதிலை  எல்லாம் பிட்டு   பிட்டு வைச்சிட்டீங்களே! இருந்தால் எங்களுக்கும் பேசுவதற்கு, தட்டிகேட்பதற்கு, எமது மக்களுக்கு எது நிஞாயமோ அதைப்பேசி பெறுவதற்கு பாராளுமன்றம் வருகிறார்கள். அப்படி இல்லாமல் கூத்து கொட்டகைக்கு  பார்வையாளராக வந்து குந்தியிருந்துவிட்டு கைதட்டி, கூச்சல் போட்டுவிட்டு   போவதற்கு ஒரு பாராளுமன்றம் தேவையா? எங்களையும் சமமாக ஏற்றுக்கொள், இல்லையேல் விரட்டு நாங்கள் போகிறோம். நாங்களும் அதையே விரும்புகிறோம், நீதான் இழுத்து வைத்திருக்கிறாய்.  அபிவிருத்தி என்ற கனவில் மிதப்போருக்கு உனது  இந்தப் பேச்சு சமர்ப்பணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

நாம் எந்தளவுஆர்வத்துடன்  தமிழக அரசியலை கவனிக்கிறோமோ, அதே அளவு ஆர்வத்துடன் நம்மூர் அரசியலை கவனிப்பவர் நம்ம புரட்சி. நன்றி தோழர்.  🙏

இரு பக்க ஒற்றுமை, வேற்றுமைகளை அலசி, ஆராய்ந்து  ஒரு நல்ல அரசியல் வாதியாக வர வாய்ப்பிருக்கு. சே..ச்..சே. நல்ல அரசியல் வாதியா? இதுகளைப்பாத்தா? நாறிப்போன அரசியல் வா..தி.....யா. நான் சொல்ல மாட்டேன் உங்க எதிர்காலம் எப்படி இருக்குமுன்னு. ஏன்னா, அது எனக்குத் தெரியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நாம் எந்தளவுஆர்வத்துடன்  தமிழக அரசியலை கவனிக்கிறோமோ, அதே அளவு ஆர்வத்துடன் நம்மூர் அரசியலை கவனிப்பவர் நம்ம புரட்சி. நன்றி தோழர்.  🙏

எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

நாம் எந்தளவுஆர்வத்துடன்  தமிழக அரசியலை கவனிக்கிறோமோ, அதே அளவு ஆர்வத்துடன் நம்மூர் அரசியலை கவனிப்பவர் நம்ம புரட்சி. நன்றி தோழர்.  🙏

4 hours ago, Kapithan said:

எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது 😀

2009க்கு முன் பல தமிழகத்தவரும் புழங்கிய களம்தான் யாழ்க்களம்.. அதற்குப்பின் திராவிடத்திற்கு எதிராக திரும்ப.. பலர் பார்வையாளராக ஒதுங்கி கொண்டார்கள் தோழர்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

2009க்கு முன் பல தமிழகத்தவரும் புழங்கிய களம்தான் யாழ்க்களம்.. அதற்குப்பின் திராவிடத்திற்கு எதிராக திரும்ப.. பலர் பார்வையாளராக ஒதுங்கி கொண்டார்கள் தோழர்..👌

100% உண்மை.

திராவிட இயக்கத்தின் பல தத்துவார்த்த தலைகள் கூட அண்ணனாய்-“தம்பியாய்” பழகிய தளம் இது.

இப்போதான் அவர்கள் நமக்கு தெலுங்கு வந்தேறிகள் ஆச்சே. ஹைதரபாத்.கொம் அல்லது சித்தூர்.கொம்மில் எழுதுவார்கள் போலும்.

இன்னும் பார்வையாளராக இருப்போர்கு - யாழில் உங்களுக்கு எப்போதும் “தம்பிகள் உண்டு” என்பதை மறக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

2009க்கு முன் பல தமிழகத்தவரும் புழங்கிய களம்தான் யாழ்க்களம்.. அதற்குப்பின் திராவிடத்திற்கு எதிராக திரும்ப.. பலர் பார்வையாளராக ஒதுங்கி கொண்டார்கள் தோழர்..👌

யாழ் களம் திராவிடத்துக்கு எதிராக திரும்பியதாக எண்ணுவதால் பார்வையாளர்களாக ஒதுங்கி கொண்டார்களா அல்லது அவர்கள் திராவிடத்துக்கு எதிராக திரும்பியதால் தாம் யாழ் களத்தை விட்டு ஒதுங்கினார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

யாழ் களம் திராவிடத்துக்கு எதிராக திரும்பியதாக எண்ணுவதால் பார்வையாளர்களாக ஒதுங்கி கொண்டார்களா அல்லது அவர்கள் திராவிடத்துக்கு எதிராக திரும்பியதால் தாம் யாழ் களத்தை விட்டு ஒதுங்கினார்களா?

ஒம் தோழர் மன்னிக்கவும் .. 2009 ஆம் ஆண்டு திராவிடத்தின் பேரால் ஆட்சி செய்தவர்களுக்கு எதிராக என்டு வந்திருக்கணும் .. 

கண்ணுக்கு தெரிந்தே லக்கிலுக் , தம்பியுடையான் மேலும் பலரை காணோம் .. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக்கும், தம்பிஉடையானும் அப்படி நிலைமாறியதாக தெரியவில்லையே?

நானும் யாழ்களம் திராவிடத்துக்கு எதிராக திரும்பியதாக எண்ணவில்லை.

அதிஸ்டவசமாக, கொள்கைக்கும் கொள்கையை வைத்து கொள்ளை அடிப்பவர்களுக்கும் இடையான வித்தியாசத்தை புரிபவர்கள் இன்னும் மிச்சம் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு vocal minority (உரக்க கத்தும் சிறுபான்மை) இந்த தோற்றபாட்டை உருவாக்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

"லக்கிலுக்கும், தம்பிஉடையானும் அப்படி நிலைமாறியதாக தெரியவில்லையே?

நானும் யாழ்களம் திராவிடத்துக்கு எதிராக திரும்பியதாக எண்ணவில்லை.

அதிஸ்டவசமாக, கொள்கைக்கும் கொள்கையை வைத்து கொள்ளை அடிப்பவர்களுக்கும் இடையான வித்தியாசத்தை புரிபவர்கள் இன்னும் மிச்சம் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு vocal minority (உரக்க கத்தும் சிறுபான்மை) இந்த தோற்றபாட்டை உருவாக்குகிறது."

ஒம் தோழர் .. தொடர்ந்து ஒரு "கொள்கையை" சொல்லிய ஆட்சிக்கு வந்து கொள்ளையடித்து  கொண்டிருந்தால் முன்னர் கூறிய கொள்கையை மறந்து இதுதான் இவர்கள் கொள்கை என்டு பெரும்பான்மை மக்கள் எண்ண தொடங்கிவிடுவினம் அல்லவா..? ☺️..😊

Link to comment
Share on other sites

பௌத்த மதத்திற்கு முன்னர் இலங்கையில் இந்து மதம் இருந்தது- நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாயை அடக்க வேண்டும் விக்கினேஸ்வரன் -தவறின் ஓட ஓட விரட்டியடிப்போம் - விமல் வீரவன்ச எச்சரிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

யாழ் களம் திராவிடத்துக்கு எதிராக திரும்பியதாக எண்ணுவதால் பார்வையாளர்களாக ஒதுங்கி கொண்டார்களா அல்லது அவர்கள் திராவிடத்துக்கு எதிராக திரும்பியதால் தாம் யாழ் களத்தை விட்டு ஒதுங்கினார்களா?

சில வருடங்களாக கோரா தமிழில் வாசித்து வருகிறேன். கடந்த 10 - 12 மாதங்களாக திராவிட ஆதரவாளர்களுக்கும், தமிழ்த்தேசிய ஆதரவாளர்களுக்குமிடையே கடுமையான கருத்துமோதல் ஒன்று அங்கு இடம்பெற்றுவருகிறது. குறிப்பாக சு ப வீ, கொளத்தூர் மணி உள்ளிட்ட திராவிட கட்சி தலைவர்களின் ஆதரவாளர்களும் தமிழ்த் தேசியத்தினை ஆதரிக்கும் சீமான் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களின் ஆதரவாளர்களுக்குமிடையிலான கருத்து மோதலே முக்கியமானது.

ஈழத்தில் இடம்பெற்ற கொலைகளைப்பற்றி இனிப்பேசுவதில் பயனில்லை என்கிற திராவிடக் கட்சியினரின் நிலைப்பாடு தமிழ்த்தேசியவாதிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறது. சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் தொடர்ச்சியாக விமர்சித்துவரும் திராவிடக் கட்சியினர், தமது கவனத்தை ஈழத்தமிழர்கள் மேலும் அவ்வப்போது திருப்புகின்றனர். இலங்கைக்குப் பிழைப்புப்பிற்காகப் போன இடத்தில் நாடு கேட்டால் சும்மா விடுவார்களா என்கிற மிகத்தெளிவான கேள்வியுடன் ஆரம்பிக்கும் இவர்களது விமர்சனம், தமிழீழ விடுதலைப் போராட்டம் தவறானது, புலிகள் பயங்கரவாதிகள் என்று வசைபாடும்வரை நீள்கிறது.  

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், தமிழ்த்தேசியத்திற்கெதிரான திராவிடக் கட்சிகளின் வெறுப்பென்பது இப்போது ஈழத்தமிழருக்கெதிரான காழ்ப்புணர்வாகவும் மாற்றம்பெற்று வருகிறது. ஆகவே, திராவிடக் கட்சிகளின் ஆதரவாளர்களான தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பேசுபவர்கள், யாழ் இணையத்திலிருந்து தாமே விலகிக்கொள்வதில் ஆச்சரியமிருப்பதாக நினைக்கவில்லை. இது யாழ் இணையம் மாறிவிட்டது என்பதற்காக அல்லாமல், தமிழ்த் தேசியத்தினையும், அதனோடு இணைந்த ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் வெளிப்படையாக விமர்சிப்பதென்று இவர்கள் முடிவெடுத்துவிட்டபின்னர், தொடர்ந்தும் ஈழத்தமிழருக்கு ஆதரவான போக்கினைக் கொண்டிருக்கும் யாழ் இணையத்தில் கருத்தாடுவது அவர்களுக்கு  கடிணமாக இருக்கிறதென்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியின் கருத்து குறித்து சஜித் அணியின் நிலைப்பாடு என்ன? விரைவில் அறிவிப்பு என்கிறார் திஸ்ஸ

thissa-attanayake-500250.png

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்காரவே முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ,அது எமது கட்சியின் நிலைப்பாடு கிடையாது. அது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

இருப்பினும், தொடர்ந்தும் நாங்கள் விக்னேஸ்வரனின் கருத்தை பற்றியே கொண்டிருக்க விரும்பவில்லை. ஆயினும் இது தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் நாட்டுக்கு தெரியப்படுத்துவோம்.

ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கே அதிகளவான ஆதரவைக் கொடுத்திருந்தனர். பொதுத் தேர்தலின் முடிவுகளின் போதும் கணிசமான தமிழ் மக்கள் எமது கட்சிக்கு ஆதரவைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் எமது கட்சியின் உறுப்பினர்கள் சிலர் விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் விமர்சனங்களை மேற்கொண்டுள்ளதால், எமது கட்சிக்கு தமிழ் மக்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று நான் எண்ணவில்லை.

இந்த விமர்சனங்கள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகளாகும் , அது எங்கள் கட்சியின் நிலைப்பாடு கிடையாது. ஜனநாயகக் கொள்கைக்கமைய செயற்படும் நாட்டுக்குள் யாரும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பான எமது நிலைப்பாட்டை நாங்கள் நாட்டுக்கு விரைவில் தெரியப்படுத்துவோம்” என்றார்.

http://www.ilakku.org/விக்கியின்-கருத்து-குறித/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

சில வருடங்களாக கோரா தமிழில் வாசித்து வருகிறேன். கடந்த 10 - 12 மாதங்களாக திராவிட ஆதரவாளர்களுக்கும், தமிழ்த்தேசிய ஆதரவாளர்களுக்குமிடையே கடுமையான கருத்துமோதல் ஒன்று அங்கு இடம்பெற்றுவருகிறது. குறிப்பாக சு ப வீ, கொளத்தூர் மணி உள்ளிட்ட திராவிட கட்சி தலைவர்களின் ஆதரவாளர்களும் தமிழ்த் தேசியத்தினை ஆதரிக்கும் சீமான் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களின் ஆதரவாளர்களுக்குமிடையிலான கருத்து மோதலே முக்கியமானது.

ஈழத்தில் இடம்பெற்ற கொலைகளைப்பற்றி இனிப்பேசுவதில் பயனில்லை என்கிற திராவிடக் கட்சியினரின் நிலைப்பாடு தமிழ்த்தேசியவாதிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறது. சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் தொடர்ச்சியாக விமர்சித்துவரும் திராவிடக் கட்சியினர், தமது கவனத்தை ஈழத்தமிழர்கள் மேலும் அவ்வப்போது திருப்புகின்றனர். இலங்கைக்குப் பிழைப்புப்பிற்காகப் போன இடத்தில் நாடு கேட்டால் சும்மா விடுவார்களா என்கிற மிகத்தெளிவான கேள்வியுடன் ஆரம்பிக்கும் இவர்களது விமர்சனம், தமிழீழ விடுதலைப் போராட்டம் தவறானது, புலிகள் பயங்கரவாதிகள் என்று வசைபாடும்வரை நீள்கிறது.  

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், தமிழ்த்தேசியத்திற்கெதிரான திராவிடக் கட்சிகளின் வெறுப்பென்பது இப்போது ஈழத்தமிழருக்கெதிரான காழ்ப்புணர்வாகவும் மாற்றம்பெற்று வருகிறது. ஆகவே, திராவிடக் கட்சிகளின் ஆதரவாளர்களான தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பேசுபவர்கள், யாழ் இணையத்திலிருந்து தாமே விலகிக்கொள்வதில் ஆச்சரியமிருப்பதாக நினைக்கவில்லை. இது யாழ் இணையம் மாறிவிட்டது என்பதற்காக அல்லாமல், தமிழ்த் தேசியத்தினையும், அதனோடு இணைந்த ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் வெளிப்படையாக விமர்சிப்பதென்று இவர்கள் முடிவெடுத்துவிட்டபின்னர், தொடர்ந்தும் ஈழத்தமிழருக்கு ஆதரவான போக்கினைக் கொண்டிருக்கும் யாழ் இணையத்தில் கருத்தாடுவது அவர்களுக்கு  கடிணமாக இருக்கிறதென்பதே உண்மை.

அதே. (பச்சை கையிருப்பில் இல்லை) 

நன்றி ரகு.

Link to comment
Share on other sites

12 hours ago, ரஞ்சித் said:

உங்கட காலை காட்டுங்கோ விழுந்து கும்பிட வேணும்; அதே போல நீங்கள் குறிப்பிட்டதை விட மிக கேவலமான விமர்சனத்தை எல்லாம் கேட்டிருக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

ஈழத்தில் இடம்பெற்ற கொலைகளைப்பற்றி இனிப்பேசுவதில் பயனில்லை என்கிற திராவிடக் கட்சியினரின் நிலைப்பாடு தமிழ்த்தேசியவாதிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறது. சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் தொடர்ச்சியாக விமர்சித்துவரும் திராவிடக் கட்சியினர், தமது கவனத்தை ஈழத்தமிழர்கள் மேலும் அவ்வப்போது திருப்புகின்றனர். இலங்கைக்குப் பிழைப்புப்பிற்காகப் போன இடத்தில் நாடு கேட்டால் சும்மா விடுவார்களா என்கிற மிகத்தெளிவான கேள்வியுடன் ஆரம்பிக்கும் இவர்களது விமர்சனம், தமிழீழ விடுதலைப் போராட்டம் தவறானது, புலிகள் பயங்கரவாதிகள் என்று வசைபாடும்வரை நீள்கிறது.  

விவாதத்தில் வெல்வது நோக்கமாக கொண்டபின், புரியாதமாதிரி கருத்தினை எழுதுவதும் ஒரு விவாத வித்தை தான்.

Link to comment
Share on other sites

6 minutes ago, Nathamuni said:

விவாதத்தில் வெல்வது நோக்கமாக கொண்டபின், புரியாதமாதிரி கருத்தினை எழுதுவதும் ஒரு விவாத வித்தை தான்.

அப்படியில்லை  நாதம் பல தமிழ் நாட்டு தமிழருக்கு இலங்கை தமிழரின் பூர்வீகம் விளங்குவதில்லை. அவர்களின் மனதில் தமிழ் தேசிய சிந்தனைகள் மழுங்கடிக்க இப்படியான பொய்களை அவர்கள் கூறுவதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Dash said:

அப்படியில்லை  நாதம் பல தமிழ் நாட்டு தமிழருக்கு இலங்கை தமிழரின் பூர்வீகம் விளங்குவதில்லை. அவர்களின் மனதில் தமிழ் தேசிய சிந்தனைகள் மழுங்கடிக்க இப்படியான பொய்களை அவர்கள் கூறுவதுண்டு.

இல்லை, அப்படி ஒரு நிலைமை 20, 25 வருடங்களுக்கு முன்னர் இருந்தது. 2009க்கு பின்னர் சகலருக்கும் தெரியும்.

இப்போது தெளிவாகி விட்டனர். மேலும் முக்கியமாக இந்த கருத்து வெளியிட்டவர்கள் முன்னைநாள் தீவிர ஆதரவாளர்கள்.

ஆகவே வரலாறு தெரியாமல் ஆதரித்து இருக்க முடியாது.அதேபோல, விவாதத்தில் வெல்ல, தெரியாத மாதிரி நடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.