Jump to content

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!

Recommended Posts

2 minutes ago, Nathamuni said:

இல்லை, அப்படி ஒரு நிலைமை 20, 25 வருடங்களுக்கு முன்னர் இருந்தது. 2009க்கு பின்னர் சகலருக்கும் தெரியும்.

இப்போது தெளிவாகி விட்டனர். மேலும் முக்கியமாக இந்த கருத்து வெளியிட்டவர்கள் முன்னைநாள் தீவிர ஆதரவாளர்கள்.

ஆகவே வரலாறு தெரியாமல் ஆதரித்து இருக்க முடியாது.அதேபோல, விவாதத்தில் வெல்ல, தெரியாத மாதிரி நடிப்பார்கள்.

இதை விட இப்ப இன்னுமொரு வகையான வசை பாடல்; அதாவது ஈழ தமிழர்கள் எல்லாம் இங்கிலாந்தில் படிப்பறிவு இல்லாமல் கூலி தொழில் செய்கிறானாம் ஆனால் தமிழ் நாட்டுக்காரனோ கலைஞர் உதவியில் படித்து நல்ல தொழில்களில் உள்ளதால் ஈழ தமிழனுக்கு திராவிடம் மீது பொறாமையாம்.

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Dash said:

இதை விட இப்ப இன்னுமொரு வகையான வசை பாடல்; அதாவது ஈழ தமிழர்கள் எல்லாம் இங்கிலாந்தில் படிப்பறிவு இல்லாமல் கூலி தொழில் செய்கிறானாம் ஆனால் தமிழ் நாட்டுக்காரனோ கலைஞர் உதவியில் படித்து நல்ல தொழில்களில் உள்ளதால் ஈழ தமிழனுக்கு திராவிடம் மீது பொறாமையாம்.

அதெல்லாம் கண்டுக்க கூடாது....

அகதிங்க என்னு கூட சொல்லுவாங்க.

ஆனால், அகதி சுபாஷ்கரனின் (Lyca) வாழ்க்கையினை படமாக்க எத்தனை பேர் போட்டி போட்டு இருக்கிறாங்க என்னும் போது விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரஞ்சித் said:

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், தமிழ்த்தேசியத்திற்கெதிரான திராவிடக் கட்சிகளின் வெறுப்பென்பது இப்போது ஈழத்தமிழருக்கெதிரான காழ்ப்புணர்வாகவும் மாற்றம்பெற்று வருகிறது. ஆகவே, திராவிடக் கட்சிகளின் ஆதரவாளர்களான தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பேசுபவர்கள், யாழ் இணையத்திலிருந்து தாமே விலகிக்கொள்வதில் ஆச்சரியமிருப்பதாக நினைக்கவில்லை. இது யாழ் இணையம் மாறிவிட்டது என்பதற்காக அல்லாமல், தமிழ்த் தேசியத்தினையும், அதனோடு இணைந்த ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் வெளிப்படையாக விமர்சிப்பதென்று இவர்கள் முடிவெடுத்துவிட்டபின்னர், தொடர்ந்தும் ஈழத்தமிழருக்கு ஆதரவான போக்கினைக் கொண்டிருக்கும் யாழ் இணையத்தில் கருத்தாடுவது அவர்களுக்கு  கடிணமாக இருக்கிறதென்பதே உண்மை.

தமிழ்த் தேசியத்தை கட்சி அரசியலாக்கியதால் கட்சி ஆதரவாளர்கள் தங்கள் விசுவாசத்திற்காக உணர்வுகளைக்கொட்டி திட்டித் தீர்க்கின்றார்கள். அதற்காக திராவிடக் கட்சிகளின் ஆதரவாளர்கள் எல்லாம் தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று குறுக்குவது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையானவர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதாக உள்ளது.

ஈழத் தமிழர்கள் தமிழகக் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவை அவர்களின் கட்சி அரசியலைத் தாண்டி நாடாவிட்டால், தமிழக அரசியல்வாதிகளில் சில உதிரிகளைத் தவிர ஒருவரும் ஈழத்தமிழரை  ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள். 

பலமான திராவிடக் கட்சிகளின் மீதான காழ்ப்புணர்வையும், சேறப்படியையும் தேவைக்கும் அதிகமாகவே செய்துகொண்டு அதே கட்சிகளிடம் ஆதரவையும் எதிர்பார்ப்பது முரண்நகையானது.

திராவிடக் கட்சிகளை, குறிப்பாக 2009 இல் கருணாநிதியின் செயலின்மை மீதான கோபத்தின் காரணமாக, வெறுத்தால், சங்கிகளின் ஆதரவை நாடினால்தான் மீட்சி உண்டு. ஏனெனில் அவர்கள்தான் தமிழகத்தில் காலூன்ற விளைகின்றார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

1) தமிழ்த் தேசியத்தை கட்சி அரசியலாக்கியதால் கட்சி ஆதரவாளர்கள் தங்கள் விசுவாசத்திற்காக உணர்வுகளைக்கொட்டி திட்டித் தீர்க்கின்றார்கள். அதற்காக திராவிடக் கட்சிகளின் ஆதரவாளர்கள் எல்லாம் தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று குறுக்குவது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையானவர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதாக உள்ளது.

2) ஈழத் தமிழர்கள் தமிழகக் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவை அவர்களின் கட்சி அரசியலைத் தாண்டி நாடாவிட்டால், தமிழக அரசியல்வாதிகளில் சில உதிரிகளைத் தவிர ஒருவரும் ஈழத்தமிழரை  ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள். 

3) பலமான திராவிடக் கட்சிகளின் மீதான காழ்ப்புணர்வையும், சேறப்படியையும் தேவைக்கும் அதிகமாகவே செய்துகொண்டு அதே கட்சிகளிடம் ஆதரவையும் எதிர்பார்ப்பது முரண்நகையானது.

4) திராவிடக் கட்சிகளை, குறிப்பாக 2009 இல் கருணாநிதியின் செயலின்மை மீதான கோபத்தின் காரணமாக, வெறுத்தால், சங்கிகளின் ஆதரவை நாடினால்தான் மீட்சி உண்டு. ஏனெனில் அவர்கள்தான் தமிழகத்தில் காலூன்ற விளைகின்றார்கள்.  

1) மிகச் சரி

2) இதுவும் சரி.

3)இது எல்லாவற்ரையும் விட சரியானது - சாதாரண நோக் நிலையில்.

4) உண்மைதான். கடைசிப் புகலிடம் அவர்கள்தான் என்று நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் பிச்சையெடுப்பவன் எல்லோரிடமும் பாத்திரத்தை நீட்டுவான். யார் பிச்சையிடுகிறார்களோ அவன்தான் பிச்சைக்காறனுக்கு சாமி. 

எங்கள் கைகளில் திருவோடு மட்டும்தான் மீதமாயுள்ளது என்பது எல்லோருக்குமே தெரியும். ☹️

ஆனால் 

எனக்குள்ள கேள்வி என்னவென்றால் ...

கிருபன் நீங்கள் இன்னும் இந்தியாவாகினும் சரி தமிழ்நாடாகினும் சரி எங்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறீர்களா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மொழிபெயர்ப்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

அரைகுறை சிங்களமும் ஓகே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியத்தை கட்சி அரசியலாக்கியதால் கட்சி ஆதரவாளர்கள் தங்கள் விசுவாசத்திற்காக உணர்வுகளைக்கொட்டி திட்டித் தீர்க்கின்றார்கள். அதற்காக திராவிடக் கட்சிகளின் ஆதரவாளர்கள் எல்லாம் தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று குறுக்குவது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையானவர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதாக உள்ளது.

ஈழத் தமிழர்கள் தமிழகக் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவை அவர்களின் கட்சி அரசியலைத் தாண்டி நாடாவிட்டால், தமிழக அரசியல்வாதிகளில் சில உதிரிகளைத் தவிர ஒருவரும் ஈழத்தமிழரை  ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள். 

பலமான திராவிடக் கட்சிகளின் மீதான காழ்ப்புணர்வையும், சேறப்படியையும் தேவைக்கும் அதிகமாகவே செய்துகொண்டு அதே கட்சிகளிடம் ஆதரவையும் எதிர்பார்ப்பது முரண்நகையானது.

திராவிடக் கட்சிகளை, குறிப்பாக 2009 இல் கருணாநிதியின் செயலின்மை மீதான கோபத்தின் காரணமாக, வெறுத்தால், சங்கிகளின் ஆதரவை நாடினால்தான் மீட்சி உண்டு. ஏனெனில் அவர்கள்தான் தமிழகத்தில் காலூன்ற விளைகின்றார்கள்.  

வேறு திரியில் கருத்தாடலில் எனது பதிவு:

.....அதுபோல, தமிழகத்தின் சகலரது ஆதரவும் எமக்கும் தேவை என்று சொல்வதையும் நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

பசிக்கும் போது (2009ல்) பாண் துண்டு எறியாதவன், நாளை புரியாணி தருவான் என்று நம்ப நான் தயாரில்லை.

சிலர் அப்படி கருத்துக் கொண்டுள்ளனர்.

இந்தியாவினால் அழிவினை தவிர வேறு எதுவுமே எமக்கு கிடைக்கவில்லை. மீண்டும் அவர்கள் வருவர்களாயின் தமது நலன்களை கருத்தில் கொண்டே வருவார்கள். ஆகவே வரவே தேவையில்லை என்கிறேன்.

அதிலும் பார்க்க சிங்களவனுடன் காலில் விழுந்தாவது சமாதானமாக போகலாம்.

எமக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் அழிவு தான் கிடைத்தது.

இறந்த ராணுவத்தினரும் ஒரு தாய் பெத்த பிள்ளை தான்.

இந்த உணர்வு சிங்களத்துக்கும் வருகிறது. நாம் எதுவுமே கொடுக்காவிடில், சர்வதேசத்திடம் சிக்கிக் கொள்வோம் என்று மகிந்தா நினைக்கிறார் என்று சிங்கள அறிவு ஜீவிகள் சொல்கின்றனர்.

*****

இதுதான் கிருபனுக்கும் எனக்கும் உள்ள பார்வை வித்தியாசம் என்று நினைக்கிறேன்.

அவர் சீமானின் நிலைப்பாடு, முக்கிய கட்சிகளின்  தேவையான ஆதரவினை இல்லாமல் செய்யும் என்பதால், சீமான் அரசியலை விரும்புவதில்லை.

நான், இந்திய உதவியே தேவையில்லை, பிச்சையே வேணாம், நாயை பிடி,  என்று நினைப்பதால், சீமான் அரசியலை பார்வையாளனாக கவனிக்கிறேன் அல்லது ரசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியத்தை கட்சி அரசியலாக்கியதால் கட்சி ஆதரவாளர்கள் தங்கள் விசுவாசத்திற்காக உணர்வுகளைக்கொட்டி திட்டித் தீர்க்கின்றார்கள். அதற்காக திராவிடக் கட்சிகளின் ஆதரவாளர்கள் எல்லாம் தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று குறுக்குவது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையானவர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதாக உள்ளது.

ஈழத் தமிழர்கள் தமிழகக் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவை அவர்களின் கட்சி அரசியலைத் தாண்டி நாடாவிட்டால், தமிழக அரசியல்வாதிகளில் சில உதிரிகளைத் தவிர ஒருவரும் ஈழத்தமிழரை  ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள். 

பலமான திராவிடக் கட்சிகளின் மீதான காழ்ப்புணர்வையும், சேறப்படியையும் தேவைக்கும் அதிகமாகவே செய்துகொண்டு அதே கட்சிகளிடம் ஆதரவையும் எதிர்பார்ப்பது முரண்நகையானது.

திராவிடக் கட்சிகளை, குறிப்பாக 2009 இல் கருணாநிதியின் செயலின்மை மீதான கோபத்தின் காரணமாக, வெறுத்தால், சங்கிகளின் ஆதரவை நாடினால்தான் மீட்சி உண்டு. ஏனெனில் அவர்கள்தான் தமிழகத்தில் காலூன்ற விளைகின்றார்கள்.  

கிருபன், நாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தமிழகத்தில் தமிழ்பேசும் மக்களுக்கிடையே மிகத் தெளிவான அரசியல்ப் பிளவொன்று ஏற்பட்டு வருகிறது. தமிழ்த் தேசிய சக்திகள், திராவிட இயக்கங்கள்,  வளர்ந்துவரும் இந்துமதவாதிகள் என்று மூன்று பிளவுகள் தெரிகின்றன. மொத்தத் தமிழகமும் இவர்களுள் ஏதாவதொரு பிரிவிற்குள்ளேயே தம்மை அடையாளப்படுத்திக்கொள்கின்றது. 

தமிழ்த்தேசியத்திற்கும், ஈழத்தமிழருக்கும் ஆதரவானவர்கள் என்று தேடும்பொழுது, சீமான் போன்றவர்கள் உட்பட தமிழ்த் தேசியத்தினை ஏற்றுக்கொண்ட அமைப்புக்கள் மட்டுமே தெளிவாக முன் தெரிகிறார்கள்.

 2009 இல் திராவிட முன்னேற்றக்கழகமும் அதனோடிணைந்த ஏனைய திராவிட இயக்ககங்களும் ஈழத்தமிழர் பிரச்சினையில் தாம் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டின்மூலம் தாமே தம்மை எம்மிலிருந்து அந்நியப்படுத்திவிட்டனர். அவர்கள் இனிமேல் ஒருபோதுமே எமக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்கப்போவதில்லை. ஈழத்தமிழருக்கு ஆதரவு என்னும் அவர்களது முதலைக் கண்ணீர் கோஷங்கள் இனிமேல் எடுபடப்போவதில்லை. ஆகவே, அவர்கள் தெளிவாக கோட்டின் அந்தப் பக்கத்திற்குத் தம்மை நகர்த்திவிட்டிருக்கிறார்கள். ஆகவே இவர்களின் ஆதரவுபற்றி நாம் கவலைப்பட்டாலும்கூட, அவர்கள் அதைத் தரப்போவதில்லை. 

இறுதியாக இந்துமதவாதிகள். இவர்களுக்கென்று ஈழத்தமிழர் தொடர்பாக இதுவரை தெளிவான கொள்கையில்லை. ஆனால், தமிழ்த்தேசியத்தினை கடுமையாக எதிர்ப்பதென்பது இவர்கள் இன்று செய்துவரும் முக்கிய செயற்பாடுகளில் ஒன்று. அடுத்ததாக, மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களால் தமிழகத்தில் பலவந்தமாக உள்நுழைக்கப்படும் இவர்கள் நிச்சயமாக ஈழத்தமிழருக்குச் சார்பானவர்களாக இருக்கப்போவதில்லை, அல்லது அப்படியொரு சமிக்ஞையும் அவர்களால் இதுவரையில் கொடுக்கப்படவில்லை. ஆகவே, இவர்களின் ஆதரவென்பதும் கேள்விக்குறியானது.

ஆகவே, எமக்குத் தெரிந்த, தெளிவான  தமிழ்த் தேசிய சக்திகளிடமிருந்தே எமக்கான ஆதரவு இனிமேல் கிடைக்கப்போகிறது, இது உங்களைப்பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என்றாலும் கூட, அதுதான் உண்மை.

இறுதியாக, தமிழகத்தில் தெலுங்கு வம்சாவளியினரின் எண்ணிக்கை 40%. தமிழகத்தில் இவர்களின் வாக்குகள் பெரும்பாலும் திராவிட முன்னேற்றகழகத்திற்கோ அல்லது அ தி மு க விற்கோதான் கிடைத்துவருகின்றன. இவர்கள் ஈழத்தமிழருக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுப்பார்கள் என்று நம்புவது கடிணமானது.

மொத்தத் தமிழகத்தினதும் ஆதரவு கிடைத்தால்த்தான் எமக்கு விடிவென்றால், அது ஒருபோதுமே நடக்கப்போவதில்லை. ஏனென்றால், அது சரித்திரத்தில் நடந்ததும் இல்லை, மிகத் தெளிவான , ஆழமான பிளவுகள் தமிழகத்தில் இன்று தோன்றியிருக்கும் நிலையில் அது இனிமேல் நடக்கும் என்று சொல்வதற்கும் சாத்தியமில்லை. 

ஆகவே, எம் கண்முன்னே எமக்குத் தெரியும் ஆதரவுக்கரங்களைப் பற்றி, பலப்படுத்துவதன் மூலமே எமக்கான பலத்தினை நாம் பெருக்கிட முடியும். இந்திரா காந்தி காலத்து "மொத்த தமிழக ஆதரவு" எல்லாம் மலையேறிவிட்டது.

Link to comment
Share on other sites

2 minutes ago, ரஞ்சித் said:

இறுதியாக, தமிழகத்தில் தெலுங்கு வம்சாவளியினரின் எண்ணிக்கை 40%. தமிழகத்தில் இவர்களின் வாக்குகள் பெரும்பாலும் திராவிட முன்னேற்றகழகத்திற்கோ அல்லது அ தி மு க விற்கோதான் கிடைத்துவருகின்றன. இவர்கள் ஈழத்தமிழருக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுப்பார்கள் என்று நம்புவது கடிணமானது.

அப்படி பார்த்தால் தமிழரின் தொகை 5 கோடி கூட இல்லையே. இந்த 40% கதை கூட இந்த திராவிட இயக்கங்கள் அவிழ்த்து விட்ட புருடா..... இவர்களது தொகை 5% தாண்டுவது கடினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆயுதம் ஏந்த இலங்கையின் ஆட்சியாளர்களே காரணம்; சிங்கள ஊடகத்துக்கு விக்கி பேட்டி

cv-696x391.jpg

விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிட தூண்டப்பட்டதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்களே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள விக்னேஸ்வரன், இதற்கு விடுதலைப் புலிகளை குறை சொல்வதில் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தான் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மக்கள் என்றும் கூறிய சி.வி.விக்னேஸ்வரன், அவர்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை என்றும், இராணுவமே அவர்களை கொலை செய்தது எனவும், கூறியுள்ளார்.

அதேவேளை, இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு தன்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன என்றும், சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/புலிகள்-ஆயுதம்-ஏந்த-இலங்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Dash said:

அப்படி பார்த்தால் தமிழரின் தொகை 5 கோடி கூட இல்லையே. இந்த 40% கதை கூட இந்த திராவிட இயக்கங்கள் அவிழ்த்து விட்ட புருடா..... இவர்களது தொகை 5% தாண்டுவது கடினம்

இந்தக் கருத்தை சில இடங்களில் சீமான் கூடச் சொன்னதாக எனக்கு நினைவு. அல்லது அப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கலாம். தெலுங்கர்களுக்கென்று அரசியல் கட்சிகளும் ( தி மு க, ம. தி மு க, விஜயகாந்த் கட்சி), தெலுங்கு இன - மொழி அமைப்புக்கள், நலன்புரிச் சங்கங்கள் என்று மிகப்பலமான கட்டமைப்புக்கள் தமிழகத்தில் இயங்குகின்றன. கடந்த 50 வருடங்களாக இருந்துவரும்  திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பெருமளவு தெலுங்கர்கள் தமிழகத்திற்குக் குடிபெயர்ந்திருக்கின்றனர். 5% என்று நீங்கள் குறிப்பிடுவது சற்றுக் குறைவானதாகவே தெரிகிறது.

நீங்கள் குறிப்பிடும் 5% என்பது (2001 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 5.65%) தெலுங்கை இன்றும் வீட்டில் பேசும் மக்களின் எண்ணிக்கை. ஆனால், சுதந்திரத்திற்கு முன்னதாக, 150- 200 வருடங்களாக அங்கு வாழ்ந்துவரும் ரெட்டியார்கள், நாயக்கர்களின் எண்ணிக்கை இதில் அடக்கப்படவில்லை. இவர்கள் இன்று தமிழ் பேசினாலும்கூட, இவர்களது பூர்வீகம் ஆந்திராதான். 40% என்பது சிலவேளை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால், 5% என்பதும் மிகக் குறைவான மதிப்பீடென்பதே எனது தாழ்மையான கருத்து. 

நாம் தமிழர் கட்சியின் சில காணொளிகளில் இதுபற்றித் தெளிவாகப் பேசியிருக்கிறார்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால், அவற்றைத்தேடி இங்கே இணைத்துவிடுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, உடையார் said:

புலிகள் ஆயுதம் ஏந்த இலங்கையின் ஆட்சியாளர்களே காரணம்; சிங்கள ஊடகத்துக்கு விக்கி பேட்டி

cv-696x391.jpg

விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிட தூண்டப்பட்டதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்களே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள விக்னேஸ்வரன், இதற்கு விடுதலைப் புலிகளை குறை சொல்வதில் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தான் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மக்கள் என்றும் கூறிய சி.வி.விக்னேஸ்வரன், அவர்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை என்றும், இராணுவமே அவர்களை கொலை செய்தது எனவும், கூறியுள்ளார்.

அதேவேளை, இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு தன்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன என்றும், சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/புலிகள்-ஆயுதம்-ஏந்த-இலங்/

இவருக்கு இது தேவையில்லாத வேலை.

சிங்களவனை உசுப்பேற்றி, அவனை ஆத்திரப்படுத்தி, எமது அபிவிருத்திகளைத் தடுத்து நிறுத்தி, இன்னும் இன்னும் தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்தாளும் இவரது தந்திரோபாயம் கடந்த 70 வருடகால தமிழ்த்தேசியத்தின் தந்திரோபாயத்தை ஒத்தது. ஆகவே, முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டியது.

இதுவரை எவருமே சொல்லவில்லையென்பதால், நானே சொல்லிவிட்டேன். அவர்களுக்கு ஏன் வீண் சிரமம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

இவருக்கு இது தேவையில்லாத வேலை.

சிங்களவனை உசுப்பேற்றி, அவனை ஆத்திரப்படுத்தி, எமது அபிவிருத்திகளைத் தடுத்து நிறுத்தி, இன்னும் இன்னும் தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்தாளும் இவரது தந்திரோபாயம் கடந்த 70 வருடகால தமிழ்த்தேசியத்தின் தந்திரோபாயத்தை ஒத்தது. ஆகவே, முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டியது.

தேர்தல் அடியோடு கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் பொறுங்கோ, இப்போ யார் பக்கம் கதைப்பது? எந்தப்பக்கம் கதைத்தாலும் நஷ்டம் கதைப்பவருக்கே. மௌனம் சாதிப்பது  தான் இப்போதைக்கு சாதகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு கோர யாருக்கும் உரிமை இல்லை: வாசுதேவ

vasu-500.png

“தமிழ் மக்கள் தேசியக் கூட்ட ணியின் தலைவர் விக்னேஸ்வரனின் கருத்துக்களை நாடாளுமன்ற ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதற்காக அவரது நிலைப்பாட்டுக்கு இணங்க வேண்டிய தேவையும் இல்லை” என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீகம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. அதனைத் தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கின்றது. அதனை நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்த யாருக்கும் முடியாது. சபாநாயகரும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் நாடாளுமன்ற ஹன்சாட்டில் பதிவாகிஇருக்கின்றது. அதனை அதிலிருந்து நீங்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களது நிலைப்பாட்டை நாராளுமன்றத்தில் தெரிவிக்கும் உரிமை இருக்கின்றது. அதனடிப்படையிலே சபாநாயகர் அவர் தெரிவித்த கருத்துக்களை மறுக்கவில்லை. அத்துடன் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு அனைவரும் இணங்க வேண்டும் என்றில்லை” என்றார்.

http://www.ilakku.org/விக்கியின்-உரையை-ஹன்சார்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

மச்சான்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் மீதான விமர்சனம் இனவெறியை காட்டியுள்ளது – ஸ்ரீகாந்தா!

Srikantha-C.V.Vigneshwaran.jpg?189db0&189db0

அண்மைக்காலமாக விக்னேஸ்வரன் எம்பி மீதான விமர்சனங்கள் இனவெறிச் சிந்தனையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஶ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடக இன்று (01) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும்,

“தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணப் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்கினேஸ்வரன் நிகழ்த்திய நாடாளுமன்ற உரைகள் கடந்த சில நாட்களாக பாரிய சர்ச்சையின் மையப்பொருளாக சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் உருமாற்றப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரனுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்குள்ளே, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என்ற நிலையான வேறுபாடுகளைக் கடந்து உக்கிரத்தோடு தொடுக்கப்பட்டிருக்கும் கண்டனக் கணைகள் அனைத்தும், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கும் அடிப்படை மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகவும் இனவெறிச் சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றன.

இத்தனைக்கும் விக்னேஸ்வரன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு உறுப்பினர் மாத்திரமின்றி, அவர் தெரிவித்த கருத்துக்கள் எதிலும் இனத்துவேசம் என்பது துளியளவுகூட இருந்திருக்கவில்லை.

மாறாக, தன்னைத் தெரிவுசெய்த மக்கள் சார்ந்த இனத்தின் வரலாற்றுத் தொன்மையையும், அதன் தாய் மொழியின் பெருமையையும் நாகரீகத்தோடு கூடிய வார்த்தைகளில் அவர் நாசூக்காக வெளிப்படுத்தியிருந்தார். அது அவரது உரிமையும் கடமையுமாகும்.

இருந்தும், ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற வேறுபாடு இன்றி மிரட்டலும் சண்டித்தனமும் நிறைந்த தொனியில், இந்த இரண்டு தரப்பிலிருந்தும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன என்றால், இவையனைத்தும் தமிழ் மக்களுக்கும் அவர்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பிரதிநிதிகளுக்கும் ஒரு அரசியல் செய்தியை திட்டவட்டமாக சொல்லிவைக்க முயன்றிருக்கின்றன என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது.

தமிழர் தரப்பிலிருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எவராவது, வரலாற்றைச் சுட்டிக்காட்டி சுய நிர்ணய உரிமை பற்றியெல்லாம் பேச முயன்றால், அவற்றை சகித்துக்கொள்ள இயலாது எனவும் அப்படிப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கமுடியாது என்பதுடன் அவர்களின் நடவடிக்கைகளுக்கு அவர்களைத் தெரிவுசெய்த மக்களும் விலைகொடுக்க வேண்டியிருக்கும் என்ற தோரணையில் ஓர் அரசியல் அராஜகமே அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், தனியொரு உறுப்பினராக இருந்தாலும் கட்சியொன்றின் தலைவர் என்ற முறையில், நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு இசைவாக, விக்னேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முன்வரிசை ஆசனத்தைக்கூட பறித்தெடுத்து, அவரை இரண்டாம் வரிசைக்குத் தள்ளிவிடுவதற்கான முஸ்தீபுகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.

இந்த நாடாளுமன்றக் களேபரத்தில் முன்னணியில் நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சரத் வீரசேகரவின் நடத்தை ஆச்சரியத்திற்கு உரியதல்ல. அவரைப் போன்ற சிங்கள தேசபக்தரிடமிருந்து வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது.

அதேநேரத்தில் 2010 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தான் யார் என்பதை தமிழ் மக்களுக்கு தெட்டத்தெளிவாக ஞாபகப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில், வாய் திறந்து பேசாமலே செயற்பட்டுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான சூத்திரதாரி எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சரத் பொன்சேகாவைப் போலவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தவர். 2010, 2019 தேர்தல்களில் இந்த இருவருக்கும் தமிழ் மக்கள் கொடுத்த பேராதரவு வெறும் செல்லாக் காசு என இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை எதிர்த்து தமிழ் மக்கள் அளித்த எதிர்மறையான வாக்குகள் தான் சரத்பொன்சேகாவுக்கும் சஜித் பிரேமதாசாவுக்கும் கிடைத்த தோல்விகளில் கூட, ளுர் மரியாதையை இணைத்திருந்தன என்பதை நினைத்துப் பார்க்கக்கூட இந்த இருவரும் இப்பொழுது தயாராக இல்லை.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள தமிழ் தோழர்களைச் சமாளிப்பதற்காக சால்ஜாப்பு அறிக்கை ஒன்று நாளையே வெளிவரலாம். ஆனால் உண்மை உறங்கி விடாது. இந்த நாட்டில் நாம் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கலாம். ஆயினும், நாங்கள் அரசியல் அநாதைகள் அல்ல”. – என்றுள்ளார்.

https://newuthayan.com/விக்னேஸ்வரன்-மீதான-விமர்/

1 hour ago, Nathamuni said:

மச்சான்டா!!

😆👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

கிருபன் நீங்கள் இன்னும் இந்தியாவாகினும் சரி தமிழ்நாடாகினும் சரி எங்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறீர்களா 🤔

இந்தியாவை சுழிச்சுப்போட்டு எதையும் தமிழர்களால் செய்யமுடியாது. 

எந்த உருப்படியான தீர்வும் சிங்களவரிடம் இருந்து வராது என்பதால் வெளியாரின் தலையீடு தேவை. அந்த வெளியாரில் இந்தியா எப்போதும் அடக்கம் ஏனெனில் இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் ஆதிக்கம் உள்ளது. 

தமிழருக்கு உதவுமா இல்லையா என்பதை தமிழர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். எவ்வளவு தூரம் சுழிக்க முயல்கின்றோமோ அந்தளவுக்கு ஆப்பு இறங்கும் (முள்ளிவாய்க்காலில் இறங்கிய மாதிரி).  மேலும் இத்தனை வருடப் போராட்டத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தமும் 13வது திருத்தச் சட்டமூலத்தால் கிடைத்த மாகாணசபையும்தான் சிங்களவர் விருப்பமில்லாமல் தந்தது. அதுவும் தமிழர்களுக்கு திருப்தியில்லாத ஒன்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

இறுதியாக, தமிழகத்தில் தெலுங்கு வம்சாவளியினரின் எண்ணிக்கை 40%. தமிழகத்தில் இவர்களின் வாக்குகள் பெரும்பாலும் திராவிட முன்னேற்றகழகத்திற்கோ அல்லது அ தி மு க விற்கோதான் கிடைத்துவருகின்றன. இவர்கள் ஈழத்தமிழருக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுப்பார்கள் என்று நம்புவது கடிணமானது.

இந்த 40% வீதத்தில் 35 % திமுக ஆதரவான தமிழர்களும் (தங்களை தமிழராக நினைக்கும் தமிழரும்) 5% தெலுங்கில் வீட்டில் பேசும் தமிழகத்தவர்களும் அடங்குகின்றார்கள் என்று நினைக்கின்றேன். தமிழர்களாக உணர்பவர்களையே தெலுங்கர்கள் என்று சொல்லி வெறுப்பரசியல் செய்பவர்களால்தான் இப்படி 2/5 தமிழகத்தவரை தெலுங்கு வம்சாவளி என்று சொல்லி அவர்களின் தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்கச் செய்யமுடியும்.

Link to comment
Share on other sites

18 hours ago, ரஞ்சித் said:

இந்தக் கருத்தை சில இடங்களில் சீமான் கூடச் சொன்னதாக எனக்கு நினைவு. அல்லது அப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கலாம். தெலுங்கர்களுக்கென்று அரசியல் கட்சிகளும் ( தி மு க, ம. தி மு க, விஜயகாந்த் கட்சி), தெலுங்கு இன - மொழி அமைப்புக்கள், நலன்புரிச் சங்கங்கள் என்று மிகப்பலமான கட்டமைப்புக்கள் தமிழகத்தில் இயங்குகின்றன. கடந்த 50 வருடங்களாக இருந்துவரும்  திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பெருமளவு தெலுங்கர்கள் தமிழகத்திற்குக் குடிபெயர்ந்திருக்கின்றனர். 5% என்று நீங்கள் குறிப்பிடுவது சற்றுக் குறைவானதாகவே தெரிகிறது.

நீங்கள் குறிப்பிடும் 5% என்பது (2001 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 5.65%) தெலுங்கை இன்றும் வீட்டில் பேசும் மக்களின் எண்ணிக்கை. ஆனால், சுதந்திரத்திற்கு முன்னதாக, 150- 200 வருடங்களாக அங்கு வாழ்ந்துவரும் ரெட்டியார்கள், நாயக்கர்களின் எண்ணிக்கை இதில் அடக்கப்படவில்லை. இவர்கள் இன்று தமிழ் பேசினாலும்கூட, இவர்களது பூர்வீகம் ஆந்திராதான். 40% என்பது சிலவேளை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால், 5% என்பதும் மிகக் குறைவான மதிப்பீடென்பதே எனது தாழ்மையான கருத்து. 

நாம் தமிழர் கட்சியின் சில காணொளிகளில் இதுபற்றித் தெளிவாகப் பேசியிருக்கிறார்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால், அவற்றைத்தேடி இங்கே இணைத்துவிடுகிறேன். 

ரஞ்சித், தமிழக பிரஜை அல்லாத வேறு நாட்டு பிரஜையான நீங்கள், தமிழகத்தில் பல தலைமுறையாக வாழ்ந்து தமிழ் மொழியை பேசி வாழும் தமிழக பிரஜைகள் மீது இவ்வளவு இனதுவேஷம் காட்டுகின்றீர்கள். இது கோட்டபாயவை விட  பல மடங்கு  இனவாதம், இனவெறுப்பு என்று உங்களுக்கு தெரியவில்லையா? பல தலைமுறையாக அவ்கு வாழும் மக்கள் மீது இனவெறி எழுத்தை எழுதும் உரிமையை அந்த மண்ணுடன் தொடர் பற்ற உங்களுக்கு ஊட்டியது யார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

அய்யா... உங்களது கேள்வி நியாயமானது தானா இல்லையா என்று சொல்வதை ரஞ்சித்திடம் விடுவோம்.

ஆனாலும், இந்த திரி தலைப்புக்கு அமைய, இதே கேள்வியை விமல் வீரவன்சவிடமும் கேட்டிருந்தால் நியாயமாகவும் இருந்திருக்குமே.

ஈழத்தில் பல தலைமுறையாக வாழ்ந்து தமிழ் மொழியை பேசி வாழும் ஈழ பிரஜைகள் மீது இவ்வளவு இனதுவேஷம் காட்டுகின்றீர்கள். இது கோட்டபாயவை ஹிட்லரை விட  பல மடங்கு  இனவாதம், இனவெறுப்பு என்று உங்களுக்கு தெரியவில்லையா? பல தலைமுறையாக அவ்கு வாழும் மக்கள் மீது இனவெறி காட்டும் உரிமையை அந்த மண்ணுடன் தொடர் பற்ற சிங்களவரான உங்களுக்கு ஊட்டியது யார்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

மண்ணுடன் தொடர்பற்ற சிங்களவரா? நீங்கள் இன்னும் வாசிக்க ஆரம்பிக்கவில்லைப் போலிருக்கே?

விமல் சொல்வது இனவாதம், சந்தேகமில்லை! ஆனால் இன்னும் இந்த இலங்கையில் தமிழருக்கும் சிங்களவருக்கும் உள்ள தொடர்பு பற்றி நாம் பொய்ப்புரளி கிளப்பக் கூடாதல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

மண்ணுடன் தொடர்பற்ற சிங்களவரா? நீங்கள் இன்னும் வாசிக்க ஆரம்பிக்கவில்லைப் போலிருக்கே?

விமல் சொல்வது இனவாதம், சந்தேகமில்லை! ஆனால் இன்னும் இந்த இலங்கையில் தமிழருக்கும் சிங்களவருக்கும் உள்ள தொடர்பு பற்றி நாம் பொய்ப்புரளி கிளப்பக் கூடாதல்லவா?

சிங்களவருக்கும், ஈழமண்ணுக்கும் தொடர்பு எப்போது அய்யா இருந்தது?

1948 க்கு பின்னர் தானே, அதுவும் நியாயம் இல்லாமல் தானே வந்தது?

ஒரு ஜின்னா இருந்திருந்தால் அதுவும் இருந்திருக்காதே?

திரிபுராகாரருக்கும், கன்னியகுமாரிகாரனுக்கும் தொடர்பு ஈஸ்ட் இந்தியா கம்பெனி தானே உண்டாக்கியது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தியாவை சுழிச்சுப்போட்டு எதையும் தமிழர்களால் செய்யமுடியாது. 

எந்த உருப்படியான தீர்வும் சிங்களவரிடம் இருந்து வராது என்பதால் வெளியாரின் தலையீடு தேவை. அந்த வெளியாரில் இந்தியா எப்போதும் அடக்கம் ஏனெனில் இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் ஆதிக்கம் உள்ளது. 

தமிழருக்கு உதவுமா இல்லையா என்பதை தமிழர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். எவ்வளவு தூரம் சுழிக்க முயல்கின்றோமோ அந்தளவுக்கு ஆப்பு இறங்கும் (முள்ளிவாய்க்காலில் இறங்கிய மாதிரி).  மேலும் இத்தனை வருடப் போராட்டத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தமும் 13வது திருத்தச் சட்டமூலத்தால் கிடைத்த மாகாணசபையும்தான் சிங்களவர் விருப்பமில்லாமல் தந்தது. அதுவும் தமிழர்களுக்கு திருப்தியில்லாத ஒன்று!

தனது தேவைக்கு ஏற்ப இந்தியா எங்களைப் பலி கொடுக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். 👍

எங்களிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது ? எல்லாமே காற்றோடு போயாயிற்று ☹️

பழிதீர்க்கும் வன்மம் மட்டுமே எஞ்சியுள்ளது 😡

ஆனால் இந்தியாவுக்கு இழப்பதற்கு எல்லாமே இருக்கிறதல்லவா 😂

இப்போது எங்கள் தெரிவு என்ன ? 🤔

இலங்கைத் தமிழர் சிங்களவருடன் சேர்ந்து சீனாவின் பக்கம் சாய்ந்தால் என்ன நடக்கும் ? 🤔

மேற்கும் இந்தியாவும் என்ன செய்யும் 🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இந்தியாவை சுழிச்சுப்போட்டு எதையும் தமிழர்களால் செய்யமுடியாது. 

எந்த உருப்படியான தீர்வும் சிங்களவரிடம் இருந்து வராது என்பதால் வெளியாரின் தலையீடு தேவை. அந்த வெளியாரில் இந்தியா எப்போதும் அடக்கம் ஏனெனில் இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் ஆதிக்கம் உள்ளது. 

தமிழருக்கு உதவுமா இல்லையா என்பதை தமிழர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். எவ்வளவு தூரம் சுழிக்க முயல்கின்றோமோ அந்தளவுக்கு ஆப்பு இறங்கும் (முள்ளிவாய்க்காலில் இறங்கிய மாதிரி).  மேலும் இத்தனை வருடப் போராட்டத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தமும் 13வது திருத்தச் சட்டமூலத்தால் கிடைத்த மாகாணசபையும்தான் சிங்களவர் விருப்பமில்லாமல் தந்தது. அதுவும் தமிழர்களுக்கு திருப்தியில்லாத ஒன்று!

இந்தியாவை சுழிச்சு தான் இப்ப அம்பந்தோட்டை, காலிமுகத்திடல் நகரம் சீனாவுக்கு கொடுத்திருக்கு.

கிழக்கு கொள்கலன் முனையம் தர ஏலாது எண்டிருக்கிறம்.

மத்தளவும் தரேலாது எண்டாச்சு...

திருகோணமலை எண்ணெய் குதம் திருப்பி வேணும் எண்டாச்சு... வேற? 

தமிழருக்கு ஒரு உதவியும் தேவையில்லை. உங்கட உதவியும் வேணாம், உபத்திரமும் வேணாம்.

13வது திருத்தச் சட்டமூலத்தால் கிடைத்த மாகாணசபை இருந்தும் ஒண்டு தான், இல்லாமலிருந்தால் ஒண்டு தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

ரஞ்சித், தமிழக பிரஜை அல்லாத வேறு நாட்டு பிரஜையான நீங்கள், தமிழகத்தில் பல தலைமுறையாக வாழ்ந்து தமிழ் மொழியை பேசி வாழும் தமிழக பிரஜைகள் மீது இவ்வளவு இனதுவேஷம் காட்டுகின்றீர்கள். இது கோட்டபாயவை விட  பல மடங்கு  இனவாதம், இனவெறுப்பு என்று உங்களுக்கு தெரியவில்லையா? பல தலைமுறையாக அவ்கு வாழும் மக்கள் மீது இனவெறி எழுத்தை எழுதும் உரிமையை அந்த மண்ணுடன் தொடர் பற்ற உங்களுக்கு ஊட்டியது யார்? 

அவர்களே தங்களை தமிழ் பேசும் தெலுங்கர்கள் என்று சொல்லி மார்தட்டிக்கொண்டிருக்க நீங்கள் ஏன் தேவையில்லாமல் ஒரே கருத்தை எல்லா திரியிலும்  cut & paste பண்ணிக்கொண்டு திரிகிறீர்கள். தமிழகத்தில் தமிழ் தேசியத்தை வளர்க்க சீமான் என்ன கதைத்தால் உங்களுக்கென்ன? அதை விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று நாமும் கேட்கலாமல்லவா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சிங்களவருக்கும், ஈழமண்ணுக்கும் தொடர்பு எப்போது அய்யா இருந்தது?

1948 க்கு பின்னர் தானே, அதுவும் நியாயம் இல்லாமல் தானே வந்தது?

ஒரு ஜின்னா இருந்திருந்தால் அதுவும் இருந்திருக்காதே?

திரிபுராகாரருக்கும், கன்னியகுமாரிகாரனுக்கும் தொடர்பு ஈஸ்ட் இந்தியா கம்பெனி தானே உண்டாக்கியது.  

 சிறிய வசனம்.👍🏽

ஆனால்  அப்படியொன்று நடந்திருந்தால்......கற்பனை பண்ணும் போதே இவ்வளவு சந்தோசமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.