Jump to content

சம்நவுன்- சுவிற்சர்லாந்து - விடுமுறையின் சொர்க்கம்.

Recommended Posts

large.IMG_5077.jpeg.8f86763254101dd5c768f8592f61d110.jpeglarge.IMG_5063.jpeg.aff5793704d864eae7c04131df16946f.jpeglarge.IMG_5077.jpeg.8f86763254101dd5c768f8592f61d110.jpeglarge.IMG_5081.jpeg.11770fe53f4bb92cd1569384581e9d2a.jpeglarge.IMG_5065.jpeg.849a8cacc8a8e60d99d990874e521edf.jpeglarge.IMG_5063.jpeg.aff5793704d864eae7c04131df16946f.jpegசுவிற்சர்லாந்து, ஒஸ்ரியா, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் இடத்தில் பரவலான உள்ள மலைத்தொடர்களுக்கு இடையில் உள்ள பள்ளத்தாக்கில் உள்ள மிக அழகான கிராமமே சம்நவுன் என்ற விடுமுறைக்கால சொர்க்கம் ஆகும்.  ஒரு காலத்தில் கடத்தல்காரரின் சொர்க்கம் என்று அழைக்கபட்ட பிரதேசம் இன்று சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது.

சம்நவுன் கிராமத்தின் அமைவிடமான என்கடீன் பிரதேசம் (Endgadin Gebiet). குளிர்காலத்தில் குளிர்கால விளையாட்டுகளுக்கு பிரபல்யம் மிகுந்த பிரதேசமான இந்த மலைப்பிரதேசம் கோடை காலத்தில்  மலைப்பள்ளதாக்குகளூடான இனிமையான மலை நடைப்பயணம், மலைச் சரிவுகளுடனான ஏற்ற இறக்க  நடைப்பயணம், மலையேற்ற மிதிவண்டிச்சவாரி (Mountainbike ride) ஆகிய விடுமுறைப் பொழுது போக்கு ஆர்வலர்களுக்கும் மலைச்சிகரங்களின் அழகான காட்சிகளை ரசிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளை  பரவசமடைய வைக்கும் பிரதேசம் ஆகும்.

கோடை காலத்தில் இங்கு விடுதிகளில் தங்குபவர்களுக்கு ஹோட்டேலினால் வழங்கபடும் Guestcard உபயோகித்து இந்த மலைபிரதேசங்களுக்கு செல்லும் அத்தனை கேபிள் காரையும் இலவசமாக உபயோகிக்க முடியும். ஒவ்வொரு தரிப்பிடத்தில் இருந்தும் மலை நடைப்பயணத்திற்கான பாதையும் Mountainbike ride  மூலம் போவற்கான பாதையும் உண்டு. விரும்பியவர்கள் விரும்பிய வழியை தெரிவு செய்து கொள்ளலாம்.

கடல்மட்டத்தில் இருந்து 1800 மீற்றர் உயரத்தில் இருக்கும் சம்நவுன் கிராமத்தில் இருந்து 2723 மீற்றர் உயரத்தில் இருக்கும் Viderjoch  ஊடாக Ischgl என்னும் ஒஸ்ரிய கிராமம் வரை மலைநடைபயணம் ( Hiking)  Mountinbike ride, அல்லது கேபிள் மூலமாகவோ அல்லது மாறி மாறியோ சென்று வரமுடியும்.

900 இற்கு மேற்பட்ட வகையான மலர்கள் அதிலும் பிரத்தியேகமாக  சிலவகை பூக்கள் சம்நவுன் பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்களில் மட்டும் செழித்து வளர்கின்றன.

அத்துடன் சுவிற்சர்லாந்தில்  வரி விலக்கு பெற்ற கிராமமாக திகழ்வதால் குறைந்த விலையில் பொருட்களை வாங்கும் வரிவிலக்கு கடைகள் (Duty free shops) கிராமம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. வரிவிலக்கு இருப்பதால் எரிபொருள் விலை இங்கு மிகவும் மலிவு.

இம்முறை விடுமுறைக்கு வெளி நாட்டு பயணம் தடைப்பட்டதால் எனது விடுமுறை சுவிற்சர்லாந்திலேயே கழிந்த‍து இந்த பயணத்தின் போது எடுக்கபட்ட சில படங்களை யாழ் கள உறவுகளாக தருகிறேன்

large.IMG_5373.jpeg.660c0a8c6801b7214ba7ea9cdc33395c.jpeglarge.IMG_5451.JPG.0542f6f962368c654309c640956ecfb9.JPGlarge.IMG_5441.jpeg.fb3d45f957840f6c69361a6574b8fbef.jpeglarge.IMG_5175.jpeg.1e483bf959aee80acf43fda84e9e7066.jpeglarge.IMG_5199.jpeg.3b214fc21c5caf50d6344b673a6ac8c2.jpeglarge.IMG_5144.jpeg.2ef8087017e8e29ed98cc28d74da935a.jpeglarge.IMG_5171.jpeg.545c4521673b989b19e905c431ce67dd.jpeglarge.IMG_5117.jpeg.1e90d539462499a8bb6380c49ca10be2.jpeglarge.IMG_5107.jpeg.ebcf594319fca656bb40c08b68435092.jpeglarge.IMG_5111.jpeg.9cd24f34f8c711b57119bac487978532.jpeglarge.IMG_5088.jpeg.18c106873f3cd19015611259f3d8bb95.jpeglarge.IMG_5101.jpeg.ea5e4dccb4bd4ae14218f7f0558f7f2f.jpeg

Link to comment
Share on other sites

மேலதிக படங்கள் மத்திய சுவிற்சர்லாந்தில் உள்ள Rigi  மலை  சரிவில் இருந்து எடுத்த படங்கள். அங்கிருந்து பார்க்கும் போது Lake of Lucerne  என்னும் Vierwaldstättersee யின் மிக அழகான காட்சியை பார்க்க முடியும்.  Lake of Lucerne ஐ சுற்றிவர இருக்கும் எல்லா இடங்களும் இயற்கை அழகு நிறைந்தவை. உலகின் மிக தூய்மையான ஏரிகளில் இந்த ஏரியும் ஒன்று. large.IMG_5545.jpeg.5d41ccebc449c091ec1121458f8736c9.jpeglarge.IMG_5546.jpeg.36d9d3a0340f855fd20f0ecad5613cfd.jpeglarge.IMG_5547.jpeg.64bbf09abe063aaae3b8b67c3906774b.jpeglarge.IMG_5556.jpeg.01d44bb15cb84226d8ff32695dbd33df.jpeglarge.IMG_5557.jpeg.799eb47d38f520fa23353c2bc733008d.jpeglarge.IMG_5558.jpeg.e6efd7d719c8053b7bce20abcc9434dd.jpeglarge.IMG_5559.jpeg.2f044bde44d18da03da4f4ebb6a680e2.jpeglarge.IMG_5565.jpeg.173ab94f7bec7e7c2029a8bd3bd4866e.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் மிக அருமை துல்பன்.
கேபிளில் போகிறபடியால் துல்லியமான படங்கள் எடுக்கக் கூடியதாக இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகான மலைப்பிரதேசம்........படங்களும் ரசிக்கக் கூடியதாய் இருக்கு.......பசுக்களும்  குண்டான் மண்டானாக இல்லாமல் நம்மூர் பசுக்கள் போல அளவாக அழகாக இருக்கின்றன.....பகிர்வுக்கு நன்றி துல்பன்....!  👍 

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கு நன்றி ஈழப்பிரியன், சுவி. சுவிற்சர்லாந்து வந்தால் சம்நவுனை தவறவிடாதீர்கள். மிக அழகான மலைப்பிரதேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் துல்ஸ்.

சுவிற்சலாந்தின் ரயில் பயணங்கள் அலாதியானவை.

என்ன ஒரு மெக்டொனால்ட் பேர்கர் மீல்ஸ் £12 என்று விலைவாசி 😂. அதனால் அடிக்கடி போக முடியாது.

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

அற்புதம் துல்ஸ்.

சுவிற்சலாந்தின் ரயில் பயணங்கள் அலாதியானவை.

என்ன ஒரு மெக்டொனால்ட் பேர்கர் மீல்ஸ் £12 என்று விலைவாசி 😂. அதனால் அடிக்கடி போக முடியாது.

உண்மை தான் கோஷன். விலைவாசி இங்கு அதிகம் தான். 

Link to comment
Share on other sites

2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மிகவும் அழகான படங்கள் 👍

நன்றி விளங்க நினைப்பவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

என்ன ஒரு மெக்டொனால்ட் பேர்கர் மீல்ஸ் £12 என்று விலைவாசி 😂. அதனால் அடிக்கடி போக முடியாது.

10 minutes ago, tulpen said:

உண்மை தான் கோஷன். விலைவாசி இங்கு அதிகம் தான். 

ஆளுக்கு இரண்டிரண்டு புழிச்சாதம் கொண்டு போகலாமே.

நான் இப்படியான பயணங்கள் என்றால் ரூணா செய்து வட்ட வடிவமான பாண் வாங்கி மணி பேர்ஸ் மாதிரி சிறிய வாய் வெட்டி உள்ளுக்குள்ளதை சிறிது சுரண்டி எடுத்து ரூணாவை போட்டு மூடினா வாழைப்பழத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். என்ன கொஞ்சம் தனிய போய் நின்று சாப்பிட்டால் நல்லது.

Link to comment
Share on other sites

12 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆளுக்கு இரண்டிரண்டு புழிச்சாதம் கொண்டு போகலாமே.

நான் இப்படியான பயணங்கள் என்றால் ரூணா செய்து வட்ட வடிவமான பாண் வாங்கி மணி பேர்ஸ் மாதிரி சிறிய வாய் வெட்டி உள்ளுக்குள்ளதை சிறிது சுரண்டி எடுத்து ரூணாவை போட்டு மூடினா வாழைப்பழத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். என்ன கொஞ்சம் தனிய போய் நின்று சாப்பிட்டால் நல்லது.

உண்மை தான் ஈழப்பிரியன். ஆனால் எப்போதும் அப்படி செய்ய முடியாது.  இடைக்கிடை ரெஸ்ரோராண்டில் இதமான காற்றில்  ஆற அமர அமர்ந்து உணவுண்ணுவதும் ஒரு சுகம் தான்.  வசதிக்கேற்ப திட்டமிட்டு கொள்ளலாம்.  அதுவும் சம்நவுன் போனால் அங்கு ஹொட்டேல் களில் தான் தங்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகு.
இந்த படங்களை பார்க்கும் போது கூகிளில் இருந்து வெட்டி ஒட்டிய படங்கள் மாதிரி இருக்கின்றது. ஏனெனில் நீங்கள் இணைத்த அனைத்து படங்கள் மாதிரியே கூகிளிலும் இருக்கின்றது.
உள்ளதை சொல்லுங்கள் துல்பன் இந்த இடங்களுக்கு போனீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களும் காடசிகளும் அழகாய் இருக்கிறன  பகிர்வுக்கு நன் றி 

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

படங்கள் அழகு.
இந்த படங்களை பார்க்கும் போது கூகிளில் இருந்து வெட்டி ஒட்டிய படங்கள் மாதிரி இருக்கின்றது. ஏனெனில் நீங்கள் இணைத்த அனைத்து படங்கள் மாதிரியே கூகிளிலும் இருக்கின்றது.
உள்ளதை சொல்லுங்கள் துல்பன் இந்த இடங்களுக்கு போனீர்களா?

மண்டபத்திலை யாரோ எழுதிக்கொடுத்த பாட்டை என் பாட்டு என்று சொல்ல நான் தருமி அல்ல நவீன நக்கீரரே. இன்றய தொழில் நுட்ப வளர்சசியல் ஒரு போட்டோவை எடுத்த தொலைபேசி மொடல் கூட இங்கு விம்பபகத்தில் பதிவாகிவிடும்.  அப்படி எல்லாம் கூகிள படத்தை போட்டு ஏமாற்றுவது சாத்தியமே இல்லை நக்கீரரே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய இடங்கள், அதை படங்களால் பகிர்ந்த துல்பனுக்கு நன்றி,

மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை  அழகு

4 minutes ago, tulpen said:

மண்டபத்திலை யாரோ எழுதிக்கொடுத்த பாட்டை என் பாட்டு என்று சொல்ல நான் தருமி அல்ல நவீன நக்கீரரே. இன்றய தொழில் நுட்ப வளர்சசியல் ஒரு போட்டோவை எடுத்த தொலைபேசி மொடல் கூட இங்கு விம்பபகத்தில் பதிவாகிவிடும்.  அப்படி எல்லாம் கூகிள படத்தை போட்டு ஏமாற்றுவது சாத்தியமே இல்லை நக்கீரரே. 

நானும் நம்ப மாட்டேன் நீங்களும் நின்று எடுத்த படம் போடும் வரை 😂

Link to comment
Share on other sites

6 minutes ago, உடையார் said:

அழகிய இடங்கள், அதை படங்களால் பகிர்ந்த துல்பனுக்கு நன்றி,

மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை  அழகு

நானும் நம்ப மாட்டேன் நீங்களும் நின்று எடுத்த படம் போடும் வரை 😂

அந்த அழகான இயற்கை காட்சிக்கு  ஏற்ற காதல் ஜோடியாக நாம் இருந்திருந்தால் நிச்சயம் எமது  போட்டிருப்பேன் உடையாரே😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

அந்த அழகான இயற்கை காட்சிக்கு  ஏற்ற காதல் ஜோடியாக நாம் இருந்திருந்தால் நிச்சயம் எமது  போட்டிருப்பேன் உடையாரே😂 

உங்கட வீட்டு நம்பர தாங்கோ, அக்காவோட கதைக்கனும் 😁

Link to comment
Share on other sites

8 minutes ago, உடையார் said:

உங்கட வீட்டு நம்பர தாங்கோ, அக்காவோட கதைக்கனும் 😁

இந்த விஷயங்களிலை நாங்க ரொம்ப ஸமார்ட் உடையார். 😂😂😂

11 hours ago, நிலாமதி said:

படங்களும் காடசிகளும் அழகாய் இருக்கிறன  பகிர்வுக்கு நன் றி 

கருத்துக்கு நன்றி நிலாமதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற இடங்களில் தான் எனது ஆவணி மாத விடுமுறையை ஆனந்தமாக்குவது வழமை. அதன்படி இந்த முறை haute Savoie வந்திருந்தோம்.  

அழகான அமைதியான சூழல் மாசற்ற காற்றுக் கிடைக்கும் இடங்கள். 

நன்றி பதிவுக்கும் படங்களுக்கும். 

Link to comment
Share on other sites

3 minutes ago, விசுகு said:

இது போன்ற இடங்களில் தான் எனது ஆவணி மாத விடுமுறையை ஆனந்தமாக்குவது வழமை. அதன்படி இந்த முறை haute Savoie வந்திருந்தோம்.  

அழகான அமைதியான சூழல் மாசற்ற காற்றுக் கிடைக்கும் இடங்கள். 

நன்றி பதிவுக்கும் படங்களுக்கும். 

நன்றி விசுகு. அந்த இடத்தைப்பற்றியும் அதன் படங்களையும்  இணைக்கலாமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, tulpen said:

நன்றி விசுகு. அந்த இடத்தைப்பற்றியும் அதன் படங்களையும்  இணைக்கலாமே. 

கைத்தொலைபேசியிலிருந்து இணைக்க முடியவில்லை. பிரான்ஸ் வந்ததும் நிச்சயம் இணைக்கின்றேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான இடங்கள்...அந்த ஏரி எவ்வளவு அழகாக உள்ளது!!!

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.. 

எனக்கு இந்த மலைப்பாதை கார் drive, bushwalking, எல்லாமே பிடிக்கும்.. இங்கே அனேகமாக நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் car drive போவது வழமை.. மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் இந்த இயற்கையோடான பயணங்கள் தரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2020 at 14:30, goshan_che said:

அற்புதம் துல்ஸ்.

சுவிற்சலாந்தின் ரயில் பயணங்கள் அலாதியானவை.

என்ன ஒரு மெக்டொனால்ட் பேர்கர் மீல்ஸ் £12 என்று விலைவாசி 😂. அதனால் அடிக்கடி போக முடியாது.

சூரிச் ஏர்போட்டில் தண்ணீர்போத்தல் $9 என்றாள் 
அடிப்பாவி ... நான் பிளேனுக்குள்ளேயே போய் குடிக்கிறேன் 
என்றுவிட்டு வந்து விட்டேன். 

என்ன விலை என்றாலும் ஒரு சாண்ட்விச் வாங்கி சாப்பிடுவேன் 
அவ்வளவு ருசி ... சுவிஸ் பாணும் சீஸும் போல நான் இன்னமும் 
வேறு ஒருஇடமும் சாப்பிடவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/8/2020 at 11:23, tulpen said:

மண்டபத்திலை யாரோ எழுதிக்கொடுத்த பாட்டை என் பாட்டு என்று சொல்ல நான் தருமி அல்ல நவீன நக்கீரரே. இன்றய தொழில் நுட்ப வளர்சசியல் ஒரு போட்டோவை எடுத்த தொலைபேசி மொடல் கூட இங்கு விம்பபகத்தில் பதிவாகிவிடும்.  அப்படி எல்லாம் கூகிள படத்தை போட்டு ஏமாற்றுவது சாத்தியமே இல்லை நக்கீரரே. 

தாங்கள் கருத்து எழுதுவதற்கும் சமய வரலாறுகள் கதைகள் உதவுகின்றன. 😀

Link to comment
Share on other sites

8 minutes ago, குமாரசாமி said:

தாங்கள் கருத்து எழுதுவதற்கும் சமய வரலாறுகள் கதைகள் உதவுகின்றன. 😀

சமய பத்தாம் பசலிப் புராணங்கள் என்று கூறுங்கள். வரலாறு என்று வரலாற்றை அவமதிக்காதீர்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.