Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ்ப்பாணத்தின் மூத்த ஓவியர் இராசையா மறைந்தார்.!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் மூத்த ஓவியர் இராசையா மறைந்தார்.!

rasaiya.jpg

யாழ்ப்பாணத்தின் மூத்த பிரபல்யமான ஓவியர் ஆ.இராசையா இன்று காலமாகியுள்ளார்.

புற்று நோய்த் தாக்கத்துக்கு உட்பட்டிருந்த அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்திருப்பதாக தெரியவருகிறது..

"ஓவியர் பற்றிய இந்த வரலாறு - 2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது"

16.08.1946 இல் அச்சுவேலியில் ஆசை – செல்லம்மா தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்த ஓவியர் இராசையா தற்போது இல 36, பண்டாரிக்குளம் வீதி, நல்லூரைத் தனது வாழ்பதியாகக் கொண்டுள்ளார். இலங்கையின் மிகப்பிரபல ஓவியர்கள் வரிசையில் வைத்து எண்ணப்படும் இவர் பிறப்பு முதல் 1965 வரை அச்சுவேலியில் வாழ்ந்தவர். அச்சுவேலி மத்திய கல்லூரியின் பழைய மாணவர். ஓவியத்தின்பால் கொண்டிருந்த ஆர்வத்தினால் பாடசாலைக் காலத்தில் ஓவிய பாடத்திற்கே அதிக மதிப்பெண்களைக் பெற்றதாகக் கூறும் இவர் பாடசாலைக் காலத்தில் தனக்குச் சித்திர பாடத்துறையில் போதிய வழிகாட்டல் கிடைக்கவில்லை எனவும் அங்கலாய்க்கிறார். ஓவிய பாடத்தில் மேற்படிப்பைத் தொடர்வதென்பதில் சமூகம் அக்கறை காட்டாத காலகட்டத்தில் வீட்டாருடைய எதிர்பையும் மீறி கொழும்பு நுண்கலைக்கல்லூரியில் (College of Art and Craft) அனுமதி பெற்று 1966 தொடக்கம் 1969 வரையான காலப்பகுதியில் ஓவிய நுட்பங்களைப் பயின்றார்.

ஸ்கெச் (Sketch) பண்ணுதல், பிரதிமை (Portrait) பண்ணுதல் என எதிலும் தேர்ந்தவராக விளங்குகின்றார். தைல வர்ணம், நீர் வர்ணம், பஸ்டல் என ஓவியக் கலைக்குரிய எவ்வூடகத்தையும் நேர்த்தியாகக் கையாளும் ஆளுமை இவருக்கு உண்டு. நிலக்காட்சி ஓவியங்களை வரைவதில் தனித்துவம் பெற்று விளங்குகின்றார். அச்சுவேலிப் பிரதேசத்தின் இயற்கை அழகு, வல்லைப் பிரதேசக் நீரோடைக் காட்சிகள், பனைகளும் தாளம் பற்றைகளும் நிரம்பிய காட்சிகள் என இளமையில் தான் தரிசித்த ஊரின் அழகை நிலக்காட்சி ஓவியங்களாக வரைந்து பெருமை பெற்றுள்ளார். இந்த ஓவியங்கள் பல இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுதல் பொருத்தம்.

இவர் வரைந்த பிரதிமை (Portrait) ஓவியங்களும் பிரபலமானவை. யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் மகேஸ்வரன் ஆகியோரின் மெய்யுருக்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உள்ள பசுபதிச் செட்டியார், நாகலிங்கச் செட்டியார் மற்றும் இந்துவின் அதிபர்களது மெய்யுருக்களும் இவரது கைவண்ணத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

1971 இல் வேலணை மத்திய கல்லூரியில் சித்திரபாட ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் பலாலி ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்று 1975 தொடக்கம் 1983 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் பணியாற்றினார். இனக்கலவரத்தின் பாதிப்புக்கள் இவரையும் விட்டுவைக்கவில்லை. இதனால் தமிழ் மண்ணிலேயே வாழ்வது என்ற முடிவுடன் உறுதி பூண்டு வாழ்ந்து வருகின்றார்.

இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஓவியர் இராசையா இடம்பெற்றமை அச்சுவேலிக்குப் பெருமை தரக் கூடிய அம்சமாகும். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார். சேர். பொன். இராமநாதன், சேர். பொன். அருணாசலம், சேர். வைத்திலிங்கம் துரைசுவாமி, சேர்.ஜோன் கொத்தலாவல, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா, ஈ.பி. மல்லசேகரா ஆகியோரது மெய்யுருக்களும் ‘தவலம்’ என்ற மலையகப் போக்குவரத்து மார்க்கம், இலங்கையின் முதற் புகைவண்டி ஓவியம் என்பனவுமே அவையாகும்.

ஓவியர் ஆசை இராசையாவின் படைப்புக்களில் வெளிக்காட்டப்படும் உருவங்கள் யாழ். மண் சார்ந்ததாகவே இருக்கின்றன. இவரது முதலாவது தனிநபர் ஓவியக் கண்காட்சி 1985 இல் அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

ஓவியத்துறை சார்ந்து பல பட்டங்களையும் விருதுகளையும் ஆசை இராசையா பெற்றுள்ளார். நல்லூர் பிரதேச செயலகம் வழங்கிய கலைஞானச் சுடர் (2009), வடமாகாண ஆளுநர் விருது (2009), கலாபூஷணம் விருது (2010), கொழும்புத் தமிழ்ச் சங்க விருது (2012), ஞானம் சஞ்சிகை விருது (2012), எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் ‘தமிழியல் விருது’ (2013), திருமறைக் கலாமன்றம் வழங்கிய கலைஞானபூரணன் விருது (2014) என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.

யாழ். பல்கலைக்கழகச் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகத் தற்போது பணியாற்றி வருகின்றார். ஆசை என ஆன்றோரால் ஆசையாக அழைக்கப்படும் இக்கலைஞர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும் அட்டைப்பட ஓவியராகவும் நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் இன்றும் தனது கலைச்சேவையைத் தொடர்ந்தார் ஓவியர் இராசையா.

நன்றி – தகவல் தொகுப்பு – அளவையூர் கவிக்குமரன் கலைஞானமணி லம்போ

http://aruvi.com/article/tam/2020/08/29/16104/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......!

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பொலிஸ், சிவில் அதிகாரங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்.!   இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் ஒன்றாகிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் குறித்த நியமனம் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் அதிகாரம் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரம் என்பன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்ப அமைச்சுக்கள் சில நாட்களுக்கு முன்னர் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தும் தமிழ் எம்பிக்களின் உறுப்புரிமைகளைப் பறிக்கவேண்டும் என்று சபையில் வீரசேகர நேற்று உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2020/11/26/19669/ டிஸ்கி :     சாதாரணமாவே ஆளின்ர ரவுசு தாங்காது , இனி சார் முறுக்கு கூட கரண்டிலதான் சாப்பிடுவாரு ..👍
  • பெருமாவீரன் பிரபாகரன் பிறந்த தினத்தில் அவருடைய மான்பை போன்றும் காணொளி பதிவு இது. அந்த மாபெரும் தலைவனுக்கு மண்ணின் பிள்ளையாய் பிறந்தநாள் வாழ்த்துக்கள்   யாரோடு யாரை ஒப்பிடுவது ? | பெருமாவீரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் | அகவை 66  
  • மக்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்த அரசு தடையாக இருக்கிறது . கலையரசன் November 25, 202011:23 a ஏரூர் தில்லை விடுதலைக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூரும் இந்த மாதத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை தடுக்கும் வகையில் அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.  இன்று பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார்.  மேலும் தெரிவிக்கையில்… அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி மற்றும் மாவீரர் கல்லறைகளை உடைத்து வருவதோடு பொது மக்கள் குறித்த பகுதிக்குள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் இருப்பது மீளவும் எம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.  மரணித்தவர்களை நினைவு கூர முடியாமல் தடுக்கின்ற விடயம் என்பது மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாகவே பார்க்கின்றேன். அஞ்சலி செலுத்த முடியாமல் தடுக்கின்ற செயற்பாடுகள் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை எவ்வாறு கையாளுகின்றது என்பதை உணர்த்துகிறது. மக்கள் உள்ளங்களில் இருக்கின்ற தியாகங்களை உள்ள குமுறல்களை வெளிப்படுத்த முடியாத வகையில் இந்த அரசு தடையாக இருக்கின்றது.இந்த அரசு பதவியேற்ற கையோடு இறுக்கமான கெடுபிடிகளை கையாள்வது இந்த நாட்டில் ஜனநாயகம் தமிழ் மக்களுக்கான தீர்வு ,தமிழ் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் எதிர்காலத்தில் உருவாக போகின்றது என்பதற்கான அடி அத்தியாயமாகத்தான் இந்த விடையம் விளங்குகின்றது.  எனது வீட்டை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல எமது மக்களை அச்சப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆலயங்களில் பூஜை செய்யக்கூடாது என ஆலய குருமார் ,நிருவாகத்தினரை அச்சுறுத்தி வருகின்றனர்.  ஜே.வி.பி கட்சியின் மறைந்த தலைவர் ரோஹண விஜேயவீர போன்றோரை அனுஷ்டிக்க முடியும் என்றால் ஏன் தமிழ் மக்கள் அனுஷ்டிக்க முடியாது . அம்பாறை மக்களுக்கு விடிவை பெற்று தர போகின்றேன் என்ற கருணா முடிந்தால் அனுஷ்டிக்க அனுமதியை பெற்றுத்தர முடியுமா?இதனை விடுத்து பொத்துவில் கனகர் கிராம மக்களை குடியேற்றம் விடையத்தில் அரச அதிபருடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அந்த மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது இதனை குழப்பும் வகையில் கருணா அந்த இடத்திற்கு சென்றுள்ளார். எமது மக்களை குழப்ப வேண்டிய தேவை கருணாவிற்கு இல்லை.  மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை விடையம் மிகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது . அந்த மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அராஜக செயற்பாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தீர்வை பெற்றுதர முடியாதவர் அம்பாறை மக்களுக்கு எதனை சாதிக்க போகின்றார் என கேள்வியெழுப்பினார்.     https://www.meenagam.com/மக்கள்-உள்ளக்குமுறல்களை/
  • கஞ்சிகுடியாறு குளத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும்திட்டம் SAVITHNovember 26, 2020   (காரைதீவு நிருபர் சகா) திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட பாரிய நீர்ப்பாசனக்குளமான கஞ்சிகுடியாறு குளத்தில் ஒரு லட்சத்து50ஆயிரம் திலாப்பியா (செல்வன்) மீன்குஞ்சுகளை விடும் திட்டம் நேற்று(24) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதனூடாக அப்பிரதேசத்திலிருக்கக்கூடிய பின்தங்கிய கிராமங்களின் மீனவர் சமுதாயத்திற்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.ஜக்கிய அமெரிக்காவின் "அன்புநெறி" அமைப்பின் அனுசரணையுடன் IMHO அமைப்பின் பரிந்துரைக்கமைவாக் அசிசிஸ்ற் ஆர்ஆர்(Assist RR) அமைப்பு இவ்வேலைத்திட்டத்தை அமுல்படுத்துகிறது. இதற்கு கிழக்குமாகாண மீன்பிடித்துறை பணிப்பாளர் சிவ.சுதாகரனின் உதவியும் பெறப்பட்டுள்ளது.முதற்கட்டமாக நேற்று 50ஆயிரம் திலாப்பியா மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டன. அடுத்த 6மாதங்களில் அடுத்தகட்ட 50ஆயிரம் மீன்குஞ்சுகளும் அடுத்த 6மாதங்களில் இறுதி 50ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்படவிருக்கின்றன.இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேறறு திருக்கோயில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் சிறபபாக நடைபெற்றது. நிகழ்வில் அசிஸ்ற் ஆர்ஆர்(Assist RR) அமைப்பின் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றிஅமல்ராஜ் பிரதான அதிதியாகக்கலந்துகொணடார்.மேலும் உதவி பிரதேசசெயலாளர் க.சதிசேகரன் கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் கிராமங்களின் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு மாகாண மற்றும் தேசிய உத்தியோகத்தர்கள். தாண்டியடி மக்கள் சேவைகள் ஒன்றியம் இளைஞர்கள்இ கஞ்சி குடியாறு மீனவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.IMHO அமைப்பின் தலைவர் வைத்தியகலாநிதி டாக்டர் (திருமதி) ராஜம் இத்திட்டத்தை மேலும் விஸ்தரிக்க உத்தேசித்துள்ள விடயமும் இங்கு தலைவர் ஹென்றியினால் கூறப்பட்டது.125,000.00 ரூபா பெறுமதியான இந்த மீன்குஞ்சுகள் மட்டக்களப்பு மீனவர் கூட்டுறவு திணைக்களத்தின் Nursary யில் 80 நாட்கள் வளர்க்கப்பட்டு சுமார் 2 தொடக்கம் 3 சென்டிமீட்டர் அளவு வளர்ச்சி அடைந்த நிலையில் இக்குளத்தில் விடப்பட்டுள்ளது. இந்த மீன் குஞ்சுகள் மூன்று மாதத்தின் பின்பு அறுவடை செய்யக் கூடிய அளவு வளர்ந்திருக்கும்.இத்திட்டத்தின் ஊடாக கஞ்சிகுடிச்சாறு மீனவர் சங்கத்தின் 84 உறுப்பினர்களும் 5 மீன் வியாபாரிகளும் நேரடியாக பயனடைவர்.மறைமுகமாக 350 குடும்பங்களும் 5 மீன் வியாபாரிகளும் சுமார் 500 வாடிக்கையாளர்களும் பயனடைகின்றனர்.மீனன்குஞ்சுகள் விடப்பட்டதன் பின்னர் கஞ்சிகுடியாறு மீனவர் சங்கக்கட்டடத்தல் பிரதேச செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் நன்னீர் மீன் வளர்ப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.1. ரூபஷ் சாகாமம் விழாவட்டவான் போன்ற குளங்களுக்கும் மீன்குஞ்சு வழங்குகின்ற திட்டத்தை விரிவுபடுத்துதல்.2. மீன் குஞ்சு வழங்குகின்ற திட்டத்துடன் இதனை நிறைவு செய்யாமல் தொடர்ந்து இந்த மீனவர் சங்கங்களை வலுவூட்டுதல் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துதல்.3. சிறிய நீர் தடாகங்களை உருவாக்கிய அவற்றில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு மானிய அடிப்படையில் உதவி செய்தல். இதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் மீனவர் கூட்டுறவு திணைக்களம் மூலமாக வழங்கப்படும்.4. தற்போது குளங்களில் இருந்து அறுவடை செய்யப்படுகின்ற மீன்கள் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது ஊடாக வியாபாரிகள் அதிக லாபம் அடைகிறார்கள் எனவே நேரடியாக மீன் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கு அதிக லாபத்தைப் பெற்றுக் கொள்கின்ற வகையில் மீன்களுக்கான பெருமதி சேர் திட்டத்தை உருவாக்குதல்.5. புகை கருவாடு க்கு அதிக கேள்வி நிலவுவதால் மீனை பதப்படுத்தி கருவாடு உற்பத்தியை மேற்கொள்வதற்கு விசேட கவனம் செலுத்துதல்.6. ஒரே நாளில் மீனை கருவாடாக பதப்படுத்துவதற்காக சாகாமம் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட மீன் காயவைக்கும் இயந்திரத்தை உடனடியாக பாவனைக்கு கொண்டு வருகின்ற வகையில் ஒரு நிதியை கண்டுபிடித்து மீனவர்களுக்கு அதிக லாபத்தை பெற்றுக்கொடுத்தல்.7. சாகாமம் மீனவர் சங்கத்தால் மீன் காய வைக்கும் இயந்திரம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்ற போது அதனை கஞ்சிகுடியாறு மீனவர் சங்கத்துக்கு வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகளை பிரதேச செயலாளர் துரித நடவடிக்கை மேற்கொள்வார்.8. வியாபாரிகளுக்கு மீன்களை வழங்குவதற்கு பதிலாக மீனவர் சங்கம் நேரடியாக மீன்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்கின்ற திட்டத்தை உருவாக்குவதற்கு தேவையான நடைமுறைகளை மேற்கொள்தல்.9. குளங்களில் அதிக முதலைகள் இருப்பதால் அடிக்கடி மீன் வலைகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் மீனவர்கள் உடனடியாக தங்களுக்கு தேவையான வலைகளை கொள்முதல் செய்து தொழிலை மேற்கொள்வற்கான அவசர கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.(மீனவ சங்கத்திற்குள் அதிக நிதியை கையாளுகின்ற வகையில் சிறந்த பொறிமுறை ஒன்றை உருவாக்குதல்)10. நன்னீர் மீன்பிடி ஊடாக கிராமத்திற்குள் இருக்கின்ற ஏனைய நபர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல்.11. நீண்டகாலமாக குறிப்பிட்ட சிலர் மாத்திரமே மீன்பிடியில் ஈடுபடுகின்ற அதேவேளை கிராமத்துக்குள் நீண்ட காலமாக இருக்கின்ற வர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதியை வழங்குகின்ற வகையில் புதிய அணுகுமுறை ஒன்றை உருவாக்குதல்.12. மீனவ சங்கத்தால் சேமிக்கப்படுகின்றன நிதியிலிருந்து ஏனைய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குதல்.13. மீன்பிடியும் விவசாயமும் ஒன்றாக மேற்கொள்ளுகின்ற இப்பிரதேசத்தில் விவசாயத்துக்கும் கூடுதல் முக்கியத்துவம் வழங்குதல்.14. தற்போது யானை வேலி அமைக்கப்பட்டு கொண்டிருப்பதால் மகா மற்றும் யல ஆகிய இரண்டு போகங்களும் மேட்டுநில பயிர்ச்செய்கை மேற்கொள்ளுகின்ற வகையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய பயிர் (peanuts, watermelon, sweet corn) செய்கை திட்டங்களை மேற்கொள்தல்15. திருக்கோயில் பிரதேசத்திலே விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய பகை பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு சோலை விவசாய அமைப்பு எமது பிரதேசத்திற்குள் பணியாற்றுவதற்கு அழைத்தல்.இன்று கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை வருகின்ற வாரங்களில் பிரதேச செயலாளர் தலைமையிலே கலந்துரையாடி தீர்க்கமான சில முடிவுகளை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.                         http://www.battinews.com/2020/11/1-50.html
  • 🙏  🙏  🙏  தங்கத் தலைவனுக்கு.... இனிய, பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙏 🙏 🙏  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.