Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

 

 
எலு மொழி (Eḷu / Helu)
——————————
எலு மொழி என்பது சிங்களத்தின் மூல மொழியாகக் கொள்ளப்படுகின்றது. கி.மு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மொழியாகும். சிலர் இது பிராகிரத மொழியின் ஒரு வடிவமாகும் என்கின்றனர். வேறு சிலர் இது ஒரு தமிழினை மூலமாக்கொண்ட ஒரு மொழி என்கின்றார்கள்.
கி.பி 6ம் நூற்றாண்டிற்கு முன்னர் சிங்களம் என்றொரு மொழி இருந்ததற்கான சான்றுகளே எதுவுமில்லை. அவ்வாறாயின் அவர்கள் முன்னர் எந்த மொழியினைப் பேசினார்கள்? என்றொரு கேள்வி எழும். ஒரு வகையான தமிழ்மொழியினையே (semi Tamil) பேசினார்கள். பின்னர் பௌத்த மத வருகையுடன் பாளி மொழியும், பின்னர் மகாஞான பௌத்தத்தினூடாக சமறயஸ்கிரதமும் அவர்களது மொழியில் செல்வாக்குச் செலுத்தின.
இதனை எலு என்கின்றனர். சிலர் முதலில் பேசப்பட்ட அரைத் தமிழினையே எலு என்கின்றனர். பப்புவா நியூக்கினி என்ற நாட்டிலுள்ள ஒரு மொழியின் பெயரும் எலுவே , அது வேறு - இது வேறு. பாளி மொழியின் தாக்கத்தினால் முதலிலும், சமஸ்கிரதத்தினால் பின்னரும் அவர்களின் மொழி, தமிழிலிருந்து தூர விலகிப்போனது. தமிழிலிருந்து சமஸ்கிரதக் கலப்பினால் மலையாளம் எவ்வாறு பிரிந்ததோ அவ்வாறே சிங்களமும் சில நூற்றாண்டுகளிற்கு முன்னரே பிரிந்துபோயிற்று.
மொழியிலாளர்களின் கருத்துப்படி இன்றும் ஏறக்குறைய 4000 தமிழ்ச்சொற்கள் சிங்கள மொழியில் உள்ளதாகவும், அவற்றை நீக்கினால் சிங்களத்தால் தனித்து இயங்கமுடியாது என்கின்றார்கள்.
இப்போது உங்களுக்கு இவ்வாறு தமிழும் சிங்களமும் இணைந்திருந்தால், பின்பு ஏன் இவ்வளவு மோதல்கள் என ஒரு கேள்வி எழலாம். உண்மையில் முன்பு கி.பி 10 வரை எந்தவித இன மோதல்களும் இல்லை.
எல்லாளன்-துட்டகைமுனு மோதலே இரு அரசர்களிற்கிடையேயான நாடு பிடிச்சண்டையே. ஒரளவிற்கு மதமும் காரணம். துட்டகைமுனு பக்கத்தில் பல தமிழர்கள் தளபதிகளாகப் பணியாற்ற, எல்லாளன் பக்கத்தில் பல சிங்களவர்களும் இருந்திருந்தனர். பிற்காலத்திலேயே எல்லாளன்-கைமுனு மோதல் இனமோதலாக உருவகப்படுத்தப்பட்டது. கட்டுக்கதைகளும் சேர்ந்துகொண்டன.
இராசேந்திர சோழன் முதலான பிற்காலச் சோழர்களின் படையெடுப்புக்களிற்குப் பின்னரே இன-மத மோதல்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கின்றன. உண்மையில் பவுத்தமதம் தமிழர்களிடமும் பரவலடைந்திருந்தமைக்கான தொல்பொருட் சான்றுகள், (மணிமேகலை போன்ற) இலக்கியச்சான்றுகள் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. அனுராதபுரம் என்ற ஒரு நகரிலேயே அபயகிரி விகாரையில் தமிழ் பௌத்தமும், மகா விகாரையில் பாளி மொழியிலான பௌத்தமும் ஒரே காலப்பகுதியில் காணப்பட்டமைக்கான கல்வெட்டுச் சான்றுகள் உண்டு . இந்த வரலாற்று உண்மைகளை ஏற்றுக்கொள்ள பௌத்த சிங்கள வாதமும், சைவ மதவாதமும் தயாராக இல்லை.
இப்போது கடுமையாகச் சிங்கள இன வாதம் பேசும் சிலரினைத் தனிப்பட்ட முறையில் பார்ப்போம். தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்த பண்டாரநாயக்காவினை (S.W.R.D. Bandaranaike) எடுத்துக்கொண்டால், அவரின் முன்னோரான பெருமாள், தமிழ்நாட்டிலுள்ள செட்டியார் எனும் பிரிவினைச் சேர்ந்தவர். `பண்டார` என்று சிங்களவர்களிடையே காணப்படும் பொதுப்பெயரானாது, தமிழிலுள்ள `பண்டாரம்` எனும் பிரிவின் வழிவந்தவர்கள். Gananath Obeyesekere என்ற சிங்கள அறிஞர் 12ம், 13ம் நூற்றாண்டளவில் இந்தியாவிலிருந்து வந்த பண்டாரங்களே `பண்டா` என்ற சிங்களப் பிரிவினர் என்கின்றார். தமிழ்நாட்டில் பார்ப்பன வருகையினால், பூசகர் பதவியினை இழந்த பண்டாரங்களில் சிலர் இவ்வாறு இலங்கை வந்து சிங்களவருடன் கலந்து `பண்டா` என மாறியிருக்கலாம். J.R. Jayewardene இன் கொள்ளுத் தாத்தாவான தம்பிமுதலியார் கூட தமிழகத் தொடர்புடையவரே. மகிந்தவின் உடன்பிறப்புக்கூட தமிழக மணத்தொடர்புடையவரே. இவ்வாறானவர்கள் இன-மத வாதம் பேசுவதெல்லாம் தமது சொந்தக் குறுகிய அரசியல் ஆதாயங்களிற்கேயன்றி, வேறு ஒன்றுமில்லை.
சிங்களவரின் மரபணுச் சோதனைகள் முன்னர் தமிழகத் தமிழருடன் பெருமளவான தொடர்பினைக் காட்டியபோதும், பிந்திய சோதனைகள் வங்களாத்துடன் பெருமளவிற்கும், தமிழர்களுடன் குறிப்பிடத்தக்களவு தொடர்பினையும் காட்டுகின்றது. (இந்த வங்காள மக்களும் திராவிட இனப்பிரிவினரே- (Bengalis were Mongoloid Dravidians). எனவே சிங்களவர்கள் ஆரியர்கள் என்பது வெறும் கற்பனையே.
சிங்களம்-தமிழ் ஆகிய இரண்டும் இன-மொழிரீதியாக அண்மைக் காலம்வரை பல்வேறு வழிகளில் தொடர்புற்று, இன்று வேறுபட்டு நிற்பவையே. சிங்களத்தின் வேர்கள், சிங்கத்துடனல்லாமல், தமிழுடனேயே தொடர்புற்றுள்ளன.
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.