Jump to content

மேஜர் செல்வராசா மாஸ்டர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் செல்வராசா மாஸ்டர்

Commander-Mejor-Selvarasa-Master.jpg

 

மேஜர் செல்வராசா மாஸ்டர் / அன்பு

செல்வராசா மாஸ்டர்…

எமதியக்கத்திலுள்ள கூடுதலான போராளிகளுக்குப் பரிச்சயமான ஒருவர்.

காரணம் பல்லாயிரக்கணக்கான போராளிகள் அவராலேயே உருவாக்கப்பட்டனர்.

அவரிடம் நான் பயிற்சி பெறவில்லையே என்தொரு ஏக்கம் அவரிடம் பயிற்சி பெறாதோருக்கு இருந்ததுண்டு. அவரிடம் பயிற்சி பெறாது விட்டாலும் பரவாயில்லை. சில மாதங்கள் அவருடன் கூட இருந்தாலே போதும் என்று கருதும் போராளிகளும் உண்டு. அவர்களில் நானும் ஒருவன்.

1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்தியப் படைகளுடன் சண்டை ஆரம்பமாகி சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் வன்னியிலுள்ள விசுவமடுக் காட்டுக்குள் இருந்த முகாம் ஒன்றுக்குள் அவருடன் இருந்தேன்.

1987ம் ஆண்டுக்கு முன்னர் சிறீலங்கா இராணுவத்துடனான சண்டைகளிலோ அல்லது முகாம் தாக்குதல்களிலோ அதிகளவில் தான் கலந்துகொள்ளவில்லை என்று செல்வராசா மாஸ்ரர் சிறிது கவலையுடன் கூறுவார். அதற்குக் காரணம் போராளிகளை உருவாக்கும் பயிற்சியாளனாக செல்வராசா மாஸ்ரர் தலைவரால் நியமிக்கப்பட்டதுதான்.

ஆனால், இந்திய இராணுவததுடனான சண்டைகளில் வட்டியும் முதலுமாக சேர்த்து மாஸ்ரர் பல சண்டைகளில் கலந்துகொண்டருந்தார். அதில் யாழ்ப்பாணத்தில் உள்ள குளப்பிட்டிச் சந்தியில் இந்தியப் படைகளுடன் நடந்த சண்டையொன்றும் இணுவில் நடந்த சண்டையான்றும்

மாஸ்ரரின் திறமையைப் பறைசாற்றிய தாக்கதல் சம்பவங்களாகும்.

குளப்பிட்டிச்சண்டை நடைபெற்ற நேரம் இரண்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் யாழ்ப்பாணத்திலேயே நின்றிருந்தனர் ஒருவர் இந்தியாடுடே நிருபர், மற்றவர் பிரான்ஸ் பத்திரிகையொன்றின் நிருபர். இவர்களிருவரும் தாக்குதல் நடந்த இடத்திற்கு எமது போராளிகளால் கூட்டிச் சென்று காட்டப்பட்டனர். கொல்லப்பட்ட இராணுவத்தினரது உடல்களும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் அவர்களுக்குக் காட்டப்பட்டது.

இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் எவ்விதம் சண்டைகள் நடைபெறுகின்றன என்பதை உலகம் முதலில் அறிந்தது இந்தச் சம்பவத்தின் மூலம் தான். இதை ஆதாரங்களுடன், படங்களுடன் வெளிநாட்டு நிருபர்களே கொடுத்தபோது உலகம் மூக்கில் விரலை வைத்தது. இந்தத் தாக்குதலை எவ்விதம் தான் எதிரியுடன் சண்டை செய்ய வேண்டும் என்று எமக்குக் கற்பிப்பார். இதில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். எமது தரப்பில் எவருமெ இறக்கவில்லை.

அடுத்ததாக இணுவிலில் நடந்த ஒரு சண்டை அதில் இந்திய அரசால் “வீரசர்க்கார்” என்ற உயர்ந்த இராணுவ விருது கொடுத்துக் கௌரவிக்கப்பட்ட இந்திய அதிகாரியான மேஜர் பரமேஸ்வரன் கொல்லப்பட்ட சம்பவமாகும்.

இந்தச் சண்டையைப் பற்றி மாஸ்டர் சொல்லும்போது கூறுவார்; இணுவிலில் ஒரு இடத்தால் இராணுவ அணியொன்று முன்னேறிக்கொண்டிருந்தது. சுமார் 50 பேர்வரை அந்த அணியில் இருந்தனர்.

இவர்கள் ஒரு பனங்கூடலுக்கால் வரும்போது எமது போராளிகள் தாக்கதலைத் தொடங்கினர். சண்டை நீண்ட நேரம் வரும்போது எமது போராளிகள் தாக்குதலைத் தொடங்கினார். சண்டை நீண்ட நேரம் நடந்தது, எமது பக்கத்தில் சண்டை செய்ய தகுந்த காப்பிடங்கள் இருக்கவில்லை. அப்படியிருந்தும் மாஸ்டரின் தலைமையில் தந்திரோபாயமும், துணிச்சலும் மிக்கவர்கள் மூலம் எதிரிகள் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இறுதியில் 18 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அதில் பரமேஸ்வரனும் ஒருவர். எமது பக்கத்தில் ஒரு போராளி வீரமரணமடைந்தார்.

இத்தகைய வெற்றிகரமான சண்டைகளில் ஈடுபட்டபின்னர் வன்னிக் காட்டுக்குள் முகாம் அமைத்துத் தங்கினார். காட்டுக்குள் இருக்கும்போது மாஸ்டர் சும்மா இருக்கமாட்டார். எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டிருப்பார். அப்படியான நேரங்களில் மாஸ்டர் சொன்னார்…

“இயக்கத்திலுள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டிருக்க வேண்டும். அது இயக்கத்திற்குப் பயன் உள்ளதாக இருக்கவேண்டும்”.

உடற்பயிற்சிப் போட்டியொன்று வைத்தால் இயக்கத்தில் மாஸ்டருக்குதான் முதலிடம் கிடைக்குமென்று எமது போராளிகள் சொல்வார்கள். காட்டுமுகாமில் இருக்கும்போது அடிக்கடி எமக்கெல்லாம் அறிவுரைகள் கூறுவார்.

பொன்னம்மான், ராதா அண்ணையைப் பற்றி அடிக்கடி கூறுவார். குழப்படி செய்யும் போராளிகளைத் திருத்துவதில் மாஸ்டர் தனக்கே உரிய பாணிகளை வைத்திருக்கின்றார்.

ஒருமுறை இரண்டு போராளிகள் தங்களுக்குள் சண்டைபிடித்துக் கொண்டு கதைக்காது இருந்தனர். அவர்கள் இருவரையும் அழைத்து ஒரு கோப்பையில் சாப்பாட்டை எடுத்தவந்து ஒருவர் மாறி ஒருவருக்கு ஊட்டுவித்தார். “நாங்கள் எல்லோரும் சகோதரங்கள் போல இருக்கவேண்டும். ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது” என்று கூறி அனுப்பினார்.

காட்டுக்குள் இருந்த காலகட்டத்தில் உணவுகளுக்கப் பெருத்த தட்டுப்பாடு இருந்தது. அதுவும் இராணுவம் காடுகளுக்குள் இறங்கிய நேரங்களில் பட்டணியுடன் கிடந்திருக்கின்றோம்.

இந்த நிலையில் எந்த ஒரு உணவையும் உண்ணாது வீசுவதை மாஸ்டர் அங்கீகரிக்கமாட்டார். சிலவேளைகளில் இரவு உணவு அடுத்த நாள் காலையில் மிஞ்சியிருக்கும். அத்துடன் சேர்த்து ஏதோ ஒரு காலை உணவும் சிறிது சமைக்கப்படும்.

அந்தப் புது உணவுக்காக எமது மனங்கள் ஏங்கும். ஆனால், அது எல்லோருக்கும் போதாது என்பதால் பழைய உணவையும், புதிய உணவையும் கலந்துவிட்டு “சரி இனிச் சாப்பிடுவம்” என்பார்.

இரண்டையும் கலந்தபின் அது இரவு சமைத்த உணவுவகையாகவும் இராது, காலை சமைத்த உணவுவகையாகவும் இராது. ஏதோவொரு புதியவொரு உணாவகவும் புதியதொரு சுவையாகவும் இருக்கும். பெருமூச்சு விட்டபடி அதை உண்போம்.

ஒருமுறை “ஒப்பறேசன் திரிசூலம்” என்ற பெயரில் நாம் இருந்த காட்டுப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் தேடுதலை நடாத்தினார்கள்.

அப்போது நடந்த சண்டையில் எமது இருப்பிடம் இராணுவத்துக்குத் தெரியவர புதிய இருப்பிடத்தைத் தேடினோம்.

அந்தச் சமயங்களில் எம்மிடம் உண்பதற்கு எதுவுமே இருக்கவில்லை: குடிக்க நீரும் இருக்கவில்லை.

அப்போது எமது ஒருநேர சாப்பாடு மூன்று ‘கிறீம் கிறேக்கர்’ பிஸ்கற்றும், அரைக்குவளை (கப்) தண்ணீரும் தான் அதுவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவை தான் உண்போம்.

அந்த நேரத்தில் எமது உடல் சோர்வடையும், ஆனால் உள்ளத்தில் சோர்வு ஏற்படாதவாறு மாஸ்டர் ஒவ்வொரு போராளிகளையும் ஊக்குவித்தார்.

மாஸ்ரரின் வீரமரணத்துக்கு நான்கு வாரத்துக்கு முன்னர்தான் ஒரு பயிற்சி முகாமை நடாத்தி முடித்திருந்தார்.

அப்போது மாஸ்டர் சொன்னார்..

“நான் பலாலிப்பக்கம் போகிறேன். இனி நான் இறந்தாலும் பறவாயில்லை. ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை நான் உருவாக்கிவிட்டேன். இதற்கெல்லாம் காரணம் பொன்னம்மான்தான் அவர்தான் என்னை உருவாக்கினார்.”

மாஸ்டர் வீரமரணமடைந்த அன்று கூட திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து வந்த எமது போராளியின் குடும்பத்தவர்களில் ஒருவர் “செல்வராசா மாஸ்டர் இப்போது எங்கே நிற்கின்றார்? எனக்க அவரை நன்றாகத் தெரியும்” என்றார்.

இப்படி போராளிகளுக்கு மட்டுமன்றி மக்களுக்கும் மாஸ்டரை நன்கு தெரியும்.

அந்த செல்வராசா மாஸ்டர் இன்று எம்மோடு இல்லை.

நினைவுப்பகிர்வு: ஆனந்.

Mejor-Selvarasa-Master-Anbu-scaled.jpg

செல்வராசா மாஸ்டர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சொந்த இடம் காங்கேசன்துறை, தந்தையின் பெயர் சின்னத்துரை. அவருக்கு இரண்டு கண்களும் தெரியாது. அந்த நிலையில் தான் மாஸ்டர் தன்னை போராட்டத்துக்கு அர்பணித்ததார்.

இவரது இயற்பெயர் செல்வராசா, இயக்கம் இவருக்கு இட்டபெயர் அன்பு. மாஸ்டருடன் சேர்ந்து இயக்கத்திற்கு வந்த அவரது ஊர் நண்பர்களால் செல்வராசா அண்ணை என அழைக்கப்ட்டவர். காலகதியில் பயிற்சி முகாமின் பயிற்சி ஆசிரியனாக வந்த பின்னர் அவரது மாணவர்கள் இட்ட பெயர் தான் செல்வராசா மாஸ்டர் என்பதாகும்.

1983ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மாஸ்டர் எமது இயக்கத்தில் 3வது பயிற்சி முகாமில் பயிற்சியைப் பெற்றிருந்தார். இவரது பயிற்சி முகாமினது பொறுப்பாளராக லெப். கேணல் பொன்னம்மான் இருக்க பயிற்சியாளாராக லெப். கேணல் புலேந்தி அம்மான் இருந்தார்.

பயிற்சி காலகட்டத்தில் போதே செல்வராசா மாஸ்டர் திறமைபெற்று சக தோழர்கள் மத்தியில் முதன்மையான இடத்தை பெற்றிருந்தார்.

பயிற்சி நேரத்தின்போதே இவரது திறமையை, முயற்சியை, கட்டுப்பாடுகளுக்கு உட்படும் தன்மையை அவதானித்த புலேந்தி அம்மான் 3வது பயிற்சி முகாமின் மாணவனாக இருந்த செல்வராசா மாஸ்டரை அதே பயிற்சி முகாமின் பகுதி நேரப் பயிற்சியாளனாக மாற்றிவைத்திருந்தார். அந்த அளவுக்கு மாஸ்டர் உடற்பயிற்சியில் ஒரு புலியாக இருந்தார்.

பின்னர் நான்காவது பயிற்சி முகாமின் இறுதி காலகட்டத்தில் செல்வராசா மாஸ்டரே பயிற்சியாளனாக இருந்தார்.

எமது இயக்கத்தில் பொன்னம்மானுக்கு அடுத்தபடியாக ஏராளமான போராளிகளை உருவாக்கியது செல்வராசா மாஸ்டர்தான்.

பலாலியில்… அன்று செல்வராசா மாஸ்டர் வீரமரணமடைந்துவிட்டார். செம்மண்ணான கட்டுவன் பகுதி மாஸ்டரின் குருதிபட்டு மேலும் செம்மையடைந்து விட்டது.

செல்வராசா மாஸ்டரின் கரத்தால் இனித்துப்பாக்கியை இயக்கமுடியாதுதான்.

ஆனால், மாஸ்டர் உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் போராளிகளின் கரத்திலிருந்து துப்பாக்கிகள் ஆக்கிரமிப்பாளனின் அரண்களை நோக்கி முழங்கிக்கொண்டேயிருக்கும். அந்த்த துப்பாக்கி வெடிச்சத்தங்கள் தான் மாஸ்டருக்கு கிடைக்கும் அஞ்சலிக்கீதமாம்.

நினைவுப்பகிர்வு: தினேஸ்.

Selvarasa-Master.jpg

செல்வராசா மாஸ்டரின் பயிற்சி மாணவர்கள் சொல்கிறார்கள்:

பயிற்சிக் காலகட்டத்தின் போது கட்டுப்பாடுகளைக் கருத்திலெடுக்காது குழப்படிகள் செய்து சிறுபிள்ளைத்தனமாகத் திரிபவர்களைப் பார்த்து அடிக்கடி மாஸ்டர் சொல்லவார்: “முதலில் உன்னை மனிதனாக்குகிறேன், பிறகு போராளியாக்குகிறேன்…”

நாம் காட்டு வாழ்க்கையைச் சந்திக்கப் போகின்றோம். காட்டின் சூழலுக்கு ஏற்ற விதத்தில் நாம் வாழவேண்டும். பசி எடுக்கும், பட்டினி கிடக்க நேரிடும், களைப்பு எடுக்கும் , தண்ணீர் கிடைக்காது, இவற்றுக்கு மத்தியில் எதிரி வருவான். நாம் உற்சாகத்துடனும் உறுதியுடனும் சண்டையிட வேண்டும்.

நாம் சமையலுக்கு என்று வைத்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் சாக்கினால் சுற்றி வைக்கப்பட்டிருக்கும், அல்லது உருமறைப்பு வர்ணம் தீட்டப்பட்டிருக்கும்.

இருமல், தும்மல், பலமாக சிரித்தல், சத்தம் போட்டுக் கதைத்தல் தவிர்க்கப்படும். அல்லது அந்த இடத்துக்கு மாஸ்டர் வந்துவிடுவார்.

பானையும், கரண்டியும் மிக அவதானமாக கையாளப்பட வேண்டும். ஒரு சத்தமும் எழக்கூடாது. சத்தத்தையும், மணத்தையும் எழுப்பகூடிய வறுவல், துவையல் இருக்காது.

குளிக்கத் தண்ணீர் இல்லை. குடிப்பதற்கே ஒரு கோப்பைதான் தண்ணீர். ஆனால் துப்பாக்கிகள் எந்தநேரமும் துப்பரவாக இருக்கவேண்டும்.

காட்டுக்குள் மாஸ்டர் அடிக்கடி கூறுவார்: “சத்தமும், வெளிச்சமும், மணமும் இங்கே எமது எதிரி”

பல சந்தர்ப்பங்களில் நாம் நோயால் அவதியுற்றோம். காய்ச்சல் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், மருத்து வசதி இருக்காது. வேதனை அதிகமாக இருக்கும் . அந்த வேளைகளில் மாஸ்டர் அவர்களுக்க அருகில் சென்றுவிடுவார். மனதுக்கு உற்சாகமூட்டும் கதைகளைக் கூறுவார். தாக்குதல் சம்பவங்களைக் கூறுவார். உடல்வேதனைக்கு இதமாக சதைகளைப் பிடித்தவிடுவார். இவ்விதமாக யாரும் படுக்கையில் சத்தமிட்டு முனகாதவாறு செய்துவிடுவார்.

நன்றிகள்:
விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி – புரட்டாதி, 1990),
தாய்நிலத்து வீரர் – மாவீரர் நினைவுகள் 02 நூல்.

https://thesakkatru.com/commander-mejor-selvarasa-master/

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அருமையான போராளி 

வீர வணக்கம் மாஸ்ரர் !

 

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
    • இதனை வேற சொல்லித்தான் தெரியனுமா ......பங்காளி மாட்டிட்டாரு ....தமிழிலில் ஒரு பழமொழி "ஆழம் தெரியாமல் காலை விடாதே " சும்மாவா சொன்னார் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.